Followers

Friday, October 15, 2010

ரஜனி VS கே.ஆர்.பி செந்தில்

Dear Senthil !

 நண்பர்களின் இடுகைக்கு பின்னூட்டமிடும் போது மனதின் ஓட்டத்தில் தட்டச்சுவதால் கூகிளண்ண்ன் நீ வரம்பு மீறுகிறாய் என்று பல சமயம் எச்சரிப்பதால் பின்னூட்டமாய் போட வேண்டியதை இடுகையாக்குகிறேன்.

செந்தில்!நாம் பொது நலன்களை ஒரே பார்வையில் பார்ப்பதால் எனது பின்னூட்ட இடுகையான இந்த பதிவுக்கு உங்களின் தலைப்பே முக்கியம் என்பதால் முதலில் பின்னூட்ட இடுகையிட்டு விட்டு அப்புறம்  உங்களின் இடுகையை காணப் போகிறேன்.

கடந்த சில தினங்களுக்கு எனது இடுகைக்கு பிறகு தமிழகத்தில் எழும் குரல்களை  கூர்மையாக கவனித்து வருகிறேன்.முதலாவதாக எழுந்த குரல் வை.கோ.அடுத்து திருமா வளவன்.அடுத்து நெடுமாறன் அவர்கள்.இவர்களின் பொதுவான எதிர்ப்புக் குரல் ஒன்றாக இருந்தாலும் ஒவ்வொரு திசையிலிருந்தும் குரல் எழுப்புவதால் அதன் தாக்கம் மக்களைப் போய்ச் சேர்வதிலலையென நினைக்கிறேன்.அதன் பலன் தி.மு.க VS அ.தி.மு.க என்ற பழைய வட்டத்துக்குள்ளெயே  தமிழகம் வலம் வருவது தவிர்க்க இயலாததாகிறது.

எம்.ஜி.ஆர் காலம் தொட்டு சினிமாவின் ஆதிக்கம் அரசியலில் நுழைவது நல்லதல்ல என்றே நினைத்து வந்திருக்கிறேன்.ஆனால் நினைப்புக்கும் அப்பால் ரசிகர்கள் என்ற வட்டமும் அதனையொட்டிய யதார்த்தம் என்ற நிலையையும் யோசனை செய்தால்  எம்.ஜி.ஆரின் அரசியல் பிரவேசமும் அதனைத் தொடர்ந்த அரசியல் நிலைகளும் யோசிக்க வைக்கிறது.எனவே இப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பதை விட இப்படியும் நிகழும் யதார்த்தங்களை சிந்திக்கும் போது மாற்று அரசியலுக்கு ரஜனி என்ற காந்தம் மக்களுக்கு நிச்சயமாகத் தேவைப்படுகிறது.அதற்கான சூழல்கள் முன்பொரு காலத்தில் மூப்பனார் காலத்தில் இருந்தது.ஆனால் அதனை ரஜனிகாந்த் தவற விட்டு விட்டார் எனலாம்.இருந்தாலும் ரஜனி எனும் காந்தம் இன்னும் மக்களை வசீகரிக்கிறது.இவரால் தமிழகத்துக்கு மாற்றம் வராதா என்று பலரும் நம்பும் தருணம் இருக்கிறது அரசியல் நுழைவின் விளைவுகள் எப்படியிருந்த போதிலும். 

எனக்கு முன்பு மக்கள் கலை இலக்கிய கழகமான வினவு தள குழு பற்றி எதுவும் தெரியாது.சமூக உணர்வுள்ள புதிய இயக்கங்கள் சமூகத்தில் வலம் வருவதை வரவேற்கிறேன்.ஆனால் இவர்களின் முரண்நகை நீங்க ஆட்டத்தில் சீக்கிரம் வெளியேறுகிறீர்கள் என்றே உங்களின் பின்னூட்ட்ங்களும் ஏனைய நண்பர்களின் பதில்களும் பறைசாற்றுகின்றன.

முன்பு வானம்பாடிகள் பாலாவின் பின்னூட்டமொன்றிற்கு(இடுகை நினைவில் இல்லை) சொன்ன பின்னூட்ட விடையை இப்பொழுது அவிழ்க்கப் போகிறேன்.ரஜனிக்கு கருணாநிதியென்ற மரியாதை நிமித்தமோ அல்லது அவரது ஆட்சி காலத்தில் அரசியலுக்குள் நுழையக்கூடாது என்ற செண்டிமெண்ட் காரணம் கூட  இருக்ககூடும்.அதே நேரத்தில் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் அதற்கும் மேல் மெட்டீரியலிசத்துக்கும் அப்பால் ஆன்மீக வாழ்க்கை. பிடித்ததாகக் கூட இருக்க கூடும்.இப்படியொரு குழப்பமான மனநிலை காரணமாக எப்ப வருவேன் என எனக்கே தெரியாது என்ற  திரைப்பட வசனங்களும் கூட குழப்பமான சூழலை உருவாக்குகிறது.எது எப்படியிருந்த போதிலும் தமிழகத்தின் மாற்று அரசியலுக்கு சரியோ தவறோ ரஜனியை விட்டால் வேறு வழியில்லையெனக் கருதுகிறேன்.

விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் காலம் அதன் கடமையை செய்யவே செய்யும்.அதற்கு பின்னாலான அரசியல் மாற்றங்களுக்கு ஈடு கொடுக்க ஒரு வலிவான மனிதனும் அதன் பின் ஒரு அமைப்பும் தேவை.அதற்கான வல்லமை ரஜனிக்கு இருக்கிறது.தேர்ந்தெடுப்பதும் ஆன்மீகம் மட்டுமே என்ற சுய அனுபவங்களைப் பெறுவதும் ரஜனியின் கரங்களில்!


டிஸ்கி! இது இடுகையல்ல!பின்னூட்டம்.இவ்ளோ பெரிய பின்னூட்டத்தை கூகிளண்ணன் அனுமதிப்பார் என நீங்கள் நினைக்கிறீங்களா:)

19 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

உங்கள் கருத்து ஏற்றுகொள்ளக்கூடியதுதான் என்றாலும் இன்றைய தேதிக்கு ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்துக்கான அறிகுறி எங்குமே தென்படவில்லை. இந்தியாவின் பிரதான எதிர்கட்சியாக வந்திருக்க வேண்டிய பா.ஜ.க இப்போது மெல்ல காணமல் போய்கொண்டிருக்கிறது. ஆனால் எம்.ஜி. ஆரின் மறைவுக்குப்பின் அ.தி.மு.க வில் பெரிய குழப்பம் ஏற்பட்டு கட்சி யாருமே எதிர்பார்க்காதவாறு ஜெ யிடம் போனது . கிட்டத்தட்ட அதைப்போலவே வரும் தேர்தலுக்குப்பிறகு கலைஞர் எடுக்கும் முடிவோ. அல்லது கலைஞர் அவர்களுக்கு பின்னான தி.மு.க வின் நிலை நிச்சயம் எதிர்பாராவண்ணம் ரஜினியை அரசியலுக்கு கொண்டு வரும் சாத்தியம் இருக்கிறது. அரசியல் சதுரங்கத்தில் தங்கள் இருப்பை தக்கவைத்துகொள்ளும் அடிப்படையில் அவருக்கு பக்கபலமாக மாறன் சகோதரர்கள் நிச்சயம் இருப்பார்கள் என்பதே என் யூகமும்..

இதற்க்கு மேல் பின்னூட்டினால் நானும் இன்னொரு தனிப்பதிவு போடவேண்டி வரலாம் என்பதால் நன்றி ராஜா நடராஜன் சார் ..

பழமைபேசி said...
This comment has been removed by the author.
Thekkikattan|தெகா said...

வெளங்கிருவோம் - ஒரு நாடா... அப்படியே ஒவ்வொரு தெருமுனையிலும் நாட்டுச் சரக்கை குழாய்யடி மூலமா பிடிச்சிக்கிற மாதிரியும் செஞ்சிட்டா எம்பூட்டு வசதி :)

ராஜ நட, எப்படிங்க இப்பூடீஈ ...எந்திரன் ரசிகர்களின் பக்தியை பார்த்திட்டு இவிங்களுக்கு இம்பூட்டு போதுமிடான்னு இப்படி சபிக்கிறீங்களோ ;)

பழமைபேசி said...

சித்தாந்தம்
கொள்கை
குறிக்கோள்
கோட்பாடுகள்

முதலானவற்றை மையமாக வைத்து அரசியல் இல்லை என்றாகிவிட்டது. இன்றைய அரசியல், பொருளாதாரம்... அதாவது... தேர்தலுக்கு யாரால் அதிகம் செலவழிக்க முடியும் என்பதைப் பொறுத்தே அமைந்துள்ளது.

ஆகவே, ரஜினிக்கு வாய்ப்பே இல்லை. முகமதிப்பு இருந்தாலும், செலவு செய்ய, அல்லது அரசியலில் முதலீடு செய்ய அனுமதிப்பார்களா??

மன்னிக்கணும்... இடையில் உள் புகுவதற்கு!!!

ராஜ நடராஜன் said...

//உங்கள் கருத்து ஏற்றுகொள்ளக்கூடியதுதான் என்றாலும் இன்றைய தேதிக்கு ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்துக்கான அறிகுறி எங்குமே தென்படவில்லை. இந்தியாவின் பிரதான எதிர்கட்சியாக வந்திருக்க வேண்டிய பா.ஜ.க இப்போது மெல்ல காணமல் போய்கொண்டிருக்கிறது. ஆனால் எம்.ஜி. ஆரின் மறைவுக்குப்பின் அ.தி.மு.க வில் பெரிய குழப்பம் ஏற்பட்டு கட்சி யாருமே எதிர்பார்க்காதவாறு ஜெ யிடம் போனது . கிட்டத்தட்ட அதைப்போலவே வரும் தேர்தலுக்குப்பிறகு கலைஞர் எடுக்கும் முடிவோ. அல்லது கலைஞர் அவர்களுக்கு பின்னான தி.மு.க வின் நிலை நிச்சயம் எதிர்பாராவண்ணம் ரஜினியை அரசியலுக்கு கொண்டு வரும் சாத்தியம் இருக்கிறது. அரசியல் சதுரங்கத்தில் தங்கள் இருப்பை தக்கவைத்துகொள்ளும் அடிப்படையில் அவருக்கு பக்கபலமாக மாறன் சகோதரர்கள் நிச்சயம் இருப்பார்கள் என்பதே என் யூகமும்.. //

நீங்க சொல்கிற மாதிரி அரசியல் மாற்றத்திற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லையென்பதே உண்மை.தனிபலம் என்பது எந்தக் கட்சிக்குமே கிடையாது தி.மு.க உள்பட.எல்லாமே கூட்டணி கணக்கில் எவ்வளவு மார்க் என்பதுதான் தற்போதைய நிலை.நான் சொல்ல வருவது எதிர்கால தி.மு.க வில் வரும் மாற்றங்களின் காலங்களின் போது என்ன நிகழும் என்பதையும் ரஜனியால் எப்படி அந்த கால அரசியல் சூழலில் மாற்றங்கள் ஏற்படும் கிரியா ஊக்கியாக இருக்க இயலும் என்பதே.எனவே நமது மன அலைகள் ஒரே பாதையில் பயணிக்கிறதென்றே கருதுகிறேன்.நன்றி இடுகைப் பின்னூட்டத்திற்கு:)

ராஜ நடராஜன் said...

//வெளங்கிருவோம் - ஒரு நாடா... அப்படியே ஒவ்வொரு தெருமுனையிலும் நாட்டுச் சரக்கை குழாய்யடி மூலமா பிடிச்சிக்கிற மாதிரியும் செஞ்சிட்டா எம்பூட்டு வசதி :)

ராஜ நட, எப்படிங்க இப்பூடீஈ ...எந்திரன் ரசிகர்களின் பக்தியை பார்த்திட்டு இவிங்களுக்கு இம்பூட்டு போதுமிடான்னு இப்படி சபிக்கிறீங்களோ ;)//

தெகா!இப்ப மட்டும் நாட்டுச்சரக்கு தமிழகத்தில் எப்படியிருக்குதாம்?

நான் எந்திர பக்தியைப் பார்த்து விட்டு சொல்லவில்லை.யதார்த்தம் என்று ஒன்று இருக்கிறதல்லவா?முன்பு எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா,ஜானகி என எந்த சினிமா அரசியலும் பிடிக்கவில்லை.நடந்தது என்ன?

புரியாத வயசில் கருணாநிதி VS நெடுஞ்செழியன் எனக்கூட போட்டி இருந்த மாதிரி நினைவு.படிப்பையெல்லாம் கணக்கில் எடுத்திருந்தா நெடுஞ்செழியன் அல்லவா தி.மு.க வை வழி நடத்தியிருக்கனும்.நெடுஞ்செழியன் 2ம் எண்ணிலே காலம் தள்ளவில்லையா?இப்போதைக்கு பார்த்தாலும் க.அன்பழகன் முதல் இடத்துக்கு தகுதியுடையவராக இருக்கிறாரா?

எனவே நாம் விரும்பும்படி நிகழ வாய்ப்பில்லையென்றாலும் எப்படி நிகழ்வதற்கு வாய்ப்புக்கள் இருக்கிறதென்றே சொல்லியிருக்கிறேன்.ஒரு வேளை ரஜனி அரசியலுக்குள் நுழையாமல் வேடிக்கை மட்டும் பார்க்கிறார் என வைத்துக் கொள்வோம்.கருணாநிதி என்ற தனி ஆளுமைக்கு பின்னான chaos பற்றி கொஞசம் நினைத்துப் பாருங்கள்.கருணாநிதியைப் பிடிக்கிறதோ இல்லையோ ஆனால் அந்த தனிமனித ஆளுமை எவரிடமும் இல்லையென்பது நிதர்சனமல்லவா?அதனால் நாம் வாழ்த்துவதாலோ,சபிப்பதலோ எதுவும் நிகழ்ந்து விடப் போவதில்லை.எனது தற்போதைய மனநிலைக்கு வை.கோவுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் நல்லதென நினைக்கிறேன்.

புதியதாக யாராவது நல்லது செய்யலாமென்று அரசியலுக்குள் நுழையலாமென்று மனசுக்குள்ள நினைத்தாலும் கூட பதிவுலக புள்ளகளுக்கு எப்படி தெரியுதுன்னே தெரியல.ஆட்டோ ரெடின்னு பின்னுறாங்க பின்னூட்டத்துல:)

ராஜ நடராஜன் said...

தெகா!உங்களுக்குப் போட்ட முந்தைய நீண்ட பின்னூட்டம் கூகிள்கிட்டருந்து தப்பிச்சுகிச்சு.இல்லைன்னா வார்த்தைகளை திரும்ப கோர்ப்பது கடினம்.முன்பு உங்களுக்குப் போட்ட ஒரு பின்னூட்டம் கூட இப்படி நீண்ட வளவளப்பில் திரும்ப சொல்ல இயலாமல் போய் விட்டது:(

ராஜ நடராஜன் said...

//சித்தாந்தம்
கொள்கை
குறிக்கோள்
கோட்பாடுகள்

முதலானவற்றை மையமாக வைத்து அரசியல் இல்லை என்றாகிவிட்டது. இன்றைய அரசியல், பொருளாதாரம்... அதாவது... தேர்தலுக்கு யாரால் அதிகம் செலவழிக்க முடியும் என்பதைப் பொறுத்தே அமைந்துள்ளது.

ஆகவே, ரஜினிக்கு வாய்ப்பே இல்லை. முகமதிப்பு இருந்தாலும், செலவு செய்ய, அல்லது அரசியலில் முதலீடு செய்ய அனுமதிப்பார்களா??

மன்னிக்கணும்... இடையில் உள் புகுவதற்கு!!!//

நீங்க கூடவா அரசியல் பின்னூட்டம்:)

சித்தாந்தம்
கொள்கை
குறிக்கோள்
கோட்பாடுகள்

மனம் விட்டு சொல்லணுமின்னா எனக்கு கூட உங்க மாதிரி தமிழ் ஆவல் இடுகைகள் வேண்டுமென நினைக்கிறேன்.ஆனால் நிகழ்வது என்ன?நீங்க தனி ஆவர்த்தனம் போடுவதில்லையா பதிவுலகில்:)அப்படித்தான் அரசியலிலும்

சித்தாந்தம்
கொள்கை
குறிக்கோள்
கோட்பாடுகள்

பருப்புகள் வேகாதபடி மாற்ற இயலாதபடியான மிக கடினமான கரடு முரடான பாதையாகவே அரசியலை மாற்றி வைத்திருக்கிறார்கள்.

இயக்குநர் மணிரத்னம் எளிதாக மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டுமென்று யதார்த்தமாகவும்,நுணுக்கமாகவும் சொன்னார்.அடுத்த தேர்தல் வருவதற்குள் படம் பழசாகி விட்டது:(

இலவசங்களும்,பிரியாணி பொட்டலங்களும் இதுதான் உண்மை என முகத்தில் அடித்த மாதிரி சொல்கிறது.

ராஜ நடராஜன் said...

//ஆகவே, ரஜினிக்கு வாய்ப்பே இல்லை. முகமதிப்பு இருந்தாலும், செலவு செய்ய, அல்லது அரசியலில் முதலீடு செய்ய அனுமதிப்பார்களா??
//

ரஜனியை விட்டு விட்டேனா!செலவு செய்யவா?இறங்க மட்டும் சொல்லுங்கள்.செலவுகளை அவரோட ரசிகர்கள் பார்த்துக்கொள்வார்கள்.

வானம்பாடிகள் said...

//ரஜனியை விட்டு விட்டேனா!செலவு செய்யவா?இறங்க மட்டும் சொல்லுங்கள்.செலவுகளை அவரோட ரசிகர்கள் பார்த்துக்கொள்வார்கள்.//

பாலபிஷேக,பீரபிஷேக செலவு வேற. ஓட்டு செலவு வேறண்ணா. எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்துக்கும் ரஜனி ரசிகர் மன்றத்துக்கும் நிறைய வேறுபாடு உண்டு. :)

ராஜ நடராஜன் said...

////ரஜனியை விட்டு விட்டேனா!செலவு செய்யவா?இறங்க மட்டும் சொல்லுங்கள்.செலவுகளை அவரோட ரசிகர்கள் பார்த்துக்கொள்வார்கள்.//

பாலபிஷேக,பீரபிஷேக செலவு வேற. ஓட்டு செலவு வேறண்ணா. எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்துக்கும் ரஜனி ரசிகர் மன்றத்துக்கும் நிறைய வேறுபாடு உண்டு. :)//

வாக்காளர் விண்ணப்பத்துக்கு ஒரு தொகை,நீங்க சொல்கிற மாதிரி பாலாபிசேக,பீரபிஷேக செலவுகள் அந்த அந்த பகுதி வாக்காளர்களுக்கு.தாய்க்குலத்துக்கு மட்டும் ஏதாவது ஒரு நல்ல வாக்குறுதி.

வேற என்ன செலவுகளை சொல்றீங்க?
ஓ!பணம்,பிரியாணிப் பொட்டலமா?அந்த கலாச்சாரம் மாறனும்ங்கிறதுக்குத்தானே ரஜனிக்கு சிபாரிசு.இல்லைன்னா குண்டுச்சட்டிக்குள்ளே குதிரையாகவே இருப்போம்ன்னு சொல்ல மாட்டேனா:)

சரி!அதை விடுங்க!நச் என்னாச்சு?

V.Radhakrishnan said...

நாம் எதற்கு ஒரு கட்சி ஆரம்பிக்க கூடாது என ஏன் ஒரு மனிதரும் சிந்திப்பதில்லை. ;)

ராஜ நடராஜன் said...

நாம் எதற்கு ஒரு கட்சி ஆரம்பிக்க கூடாது என ஏன் ஒரு மனிதரும் சிந்திப்பதில்லை. ;)//

சிந்தனையைத் தூண்டும் ஒரு கேள்வி தாமதமாக வந்ததால் பலரின் கண்களுக்கும் போய் சேரும் வாய்ப்பில்லை என நினைக்கிறேன்.

இயல்பான வாழ்க்கையில் சமூக ஆர்வம் உள்ளவர்களுக்கு தனிக்கட்சி என்பதும்,நூல்கண்டு சிக்கல்களும் எட்டாக்கனி போலவே இருக்கிறதென நினைக்கிறேன்.

ஒரு வேளை இப்போதைய இணைய மாற்றங்களில் யாராவது ஒருவர் விதை விதைத்தால் மரமாக வளரும் சாத்தியம் எதிர்காலத்தில் உண்டு.

மெதுவான வாசிப்புக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி.

ஜோதிஜி said...

நீங்களும் மணிரத்னம் ஷங்கர் தங்கள் படங்களில் சொல்லும் துக்குனுண்டு கருத்து போலவே சொல்லியிருக்கீங்க என்றே நினைக்கின்றேன்.

மக்கள் சக்தி இயக்கம் உதயமூர்த்தி என்று ஒருத்தர் இருந்தாரே? எவருக்காவது இன்று நினைவில் இருக்குமா?

அரசியல் வியாதிகளுக்கு முன்பே நதிகள் தேசிய மயமாக்கலின் அவஸ்யத்தை ஒன்று திரட்டி ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமன் கையில் கொண்டு போய் கொடுத்த போது அவர் சொன்ன வாசகம்.

ஏன் அமெரிக்கா வேலையை விட்டு விட்டு இங்கே வந்து உங்களை கெடுத்துக்குறீங்க.

நீங்கள் ரஜினி குறித்து சொன்னது உண்மை தான்.

ஜோதிஜி said...

கலைஞர் அரசியலை நீங்க சாதாரணமா எடுத்துக்காதீங்க. அரசியல் களம் ஒன்றுமே பிரச்சனையில்லாமல் போய்க்கொண்டுருக்கும். ஒரே ஒருஅறிக்கை கலைஞரிடம் இருந்து வரும். மொத்தமும் மாறி விடும். உங்களை அந்த நிமிசமே மக்கள் மறந்து விட்டு அதைப் பற்றி பேச ஆரம்பித்து விடுவார்கள்.

சொன்னது ஆர்எம் வீரப்பன்.
அமைதியாக கேட்டுக் கொண்டது ரசினி அய்யா.

இன்னும் நிறைய எழுதலாம்.......

ஜோதிஜி said...

தலைவன், கட்சி என்ற யோசனை இல்லாமல் தனி மனிதன் குறித்து, அவனின் தகுதி குறித்து, தங்கள் தொகுதிக்கு இவன் நல்லது செய்வான் என்று என்ற கருத்து ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வரும் போது தான் இந்தியாவில் மாற்றம் வரும். அப்படி தனி மனிதனை வைத்து தேர்ந்தெடுக்கும் போது தலைவனாக இருப்பவன் மாறுவான். அல்லது தன் கட்சிக்கு வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருப்பான். இவ்வாறு நடக்காத பட்சத்தில் அரசியலில் உண்மையான அந்த மாற்றத்தை எவரும் விரும்பவில்லை என்று அர்த்தம்.

ராஜ நடராஜன் said...

//நீங்களும் மணிரத்னம் ஷங்கர் தங்கள் படங்களில் சொல்லும் துக்குனுண்டு கருத்து போலவே சொல்லியிருக்கீங்க என்றே நினைக்கின்றேன்.

மக்கள் சக்தி இயக்கம் உதயமூர்த்தி என்று ஒருத்தர் இருந்தாரே? எவருக்காவது இன்று நினைவில் இருக்குமா?

அரசியல் வியாதிகளுக்கு முன்பே நதிகள் தேசிய மயமாக்கலின் அவஸ்யத்தை ஒன்று திரட்டி ஜனாதிபதியாக இருந்த வெங்கட்ராமன் கையில் கொண்டு போய் கொடுத்த போது அவர் சொன்ன வாசகம்.

ஏன் அமெரிக்கா வேலையை விட்டு விட்டு இங்கே வந்து உங்களை கெடுத்துக்குறீங்க.

நீங்கள் ரஜினி குறித்து சொன்னது உண்மை தான்.//

ஜோதிஜி!என்னோட நிலமைய பார்த்தீங்களா?உங்க பின்னூட்டத்துக்கு இரண்டு நாட்கள் கழித்து பதில் சொல்கிறேன்.

மக்கள் சக்தி இயக்கம் உதயமூர்த்தி ஒரு பெரும் சக்தியாக தமிழகத்தில் வந்து மாற்றங்களை ஏற்படுத்தியிருக்க வேண்டியவர்.ஆனால் தமிழக அரசியலா?அல்லது இவர் குழுவின் முன்னெடுப்பின் குறையா? அல்லது இரண்டுமே மாற்றங்களுக்கான வழியில்லாமல் போய்விட்டதே:(

ராஜ நடராஜன் said...

//கலைஞர் அரசியலை நீங்க சாதாரணமா எடுத்துக்காதீங்க. அரசியல் களம் ஒன்றுமே பிரச்சனையில்லாமல் போய்க்கொண்டுருக்கும். ஒரே ஒருஅறிக்கை கலைஞரிடம் இருந்து வரும். மொத்தமும் மாறி விடும். உங்களை அந்த நிமிசமே மக்கள் மறந்து விட்டு அதைப் பற்றி பேச ஆரம்பித்து விடுவார்கள்.

சொன்னது ஆர்எம் வீரப்பன்.
அமைதியாக கேட்டுக் கொண்டது ரசினி அய்யா.

இன்னும் நிறைய எழுதலாம்.......//

சூரியனும் அஸ்தமனமாகும்.வீரப்பன் கருத்து எனக்கு புதிது.

ராஜ நடராஜன் said...

//தலைவன், கட்சி என்ற யோசனை இல்லாமல் தனி மனிதன் குறித்து, அவனின் தகுதி குறித்து, தங்கள் தொகுதிக்கு இவன் நல்லது செய்வான் என்று என்ற கருத்து ஒவ்வொரு தனி மனிதனுக்கும் வரும் போது தான் இந்தியாவில் மாற்றம் வரும். அப்படி தனி மனிதனை வைத்து தேர்ந்தெடுக்கும் போது தலைவனாக இருப்பவன் மாறுவான். அல்லது தன் கட்சிக்கு வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருப்பான். இவ்வாறு நடக்காத பட்சத்தில் அரசியலில் உண்மையான அந்த மாற்றத்தை எவரும் விரும்பவில்லை என்று அர்த்தம்.//

பணம் என்ற ஆயுதம் கட்சி என்ற அரக்கனோடு சேர்ந்து யுத்தம் செய்வதால் தனி மனித தகுதிகளின் ஆளுமைகள் வெல்வதில்லை.