Followers

Monday, October 4, 2010

CWG விளையாட்டும் கல்மாடியும் டெல்லி அரசியலும்

காமன்வெல்த் போட்டிகளின் மொத்த குழறுபடிகளுக்கு இரண்டு முக்கிய காரணங்கள்.ஒன்று கல்மாடியின் ஊழல் நிர்வாகம்.இரண்டு டெல்லியின் முதலமைச்சர் ஷீலா தீக்சித்க்கு மாநிலப் பங்கீடின்மை. எனவே குழறுபடிகளின் நிலைகளில் இருவரும் வேறுபடுகிறார்கள்.எப்படியென்றால் கல்மாடியின் நிர்வாகத் திறமையின்மைக்குப் பின் ஊழல் விரிச்சாடுவது இடிந்த பாலம்,நடைபாதைப் பாலம்,புதிதாகக் கட்டிய பாத்ரூம்களின் வெத்திலைப் புகையிலை (புகையில என்று நினச்சிருப்பாரோ கல்மாடி)எச்சில் துப்பல்கள் என்ற இந்திய சுகாதாரம் போன்றவை அப்பட்டமாகக் காட்டுகின்றன.

2003 ம் ஆண்டிலிருந்து 7 வருடங்கள் எனும் போது இரண்டாவது முறை வருவதற்கு வாய்ப்பில்லை!சுருட்டுவதற்கு இதை விட்டால் வாய்ப்பில்லை என்று முதல் இன்னிங்ஸில் கணக்குப் போட்டிருப்பாரோ? நேற்று காமன்வெல்த் துவக்கவிழாவில் கல்மாடி பேசும் போது ஆடிட்டோரியம் முழுக்க பூ....பூ என்ற மக்களின் எதிர்ப்புச் சத்தத்தை மக்களின் மகிழ்ச்சி ஆரவாரக் குரல் என்று நினைத்திருப்பாரோ கல்மாடி? ஒரு சிறந்த பொருளாத நிபுணராக, ஆனால் முதுகெலும்பில்லாத பிரதமராக மக்களின் கல்மாடி எரிச்சல் குரல்  சத்தங்கள் என்பது  தெரிந்தோ அல்லது தெரியாமலே கல்மாடிப் பேச்சுக்கு கைதட்டுகிறார் மன்மோகன்சிங். பார்க்க சகிக்கவில்லை பிரதமரே!

விளையாட்டுக்கள் முடிந்த பின்னாவது கல்மாடிக்கு ஆப்பு காத்திருக்கிறதா என்று தெரியவில்லை.எப்படியோ மணி சங்கருக்கு அவல் மெல்ல சந்தர்ப்பம் கிடைச்சாச்சு கல்மாடி.இவரு கல்மாடியில்ல களவாடியின்னு அறிக்கை விடப்போறாரு பாருங்க.அதுவும் பத்தாம ஆப்புன்னா நாற்காலியும் புடுங்கப் போறாரு.இது என்னோட கணிப்பு.பார்க்கலாம் என்ன ஆகிறதென்று. இது  நடக்கலின்னா இதெல்லாம் அரசியலில் சகஜமப்பான்னு தோளில் துண்டைப் போட்டு போய்க்கிட்டே இருக்கவேண்டியதுதான்.

அடுத்து ஷீலா தீக்சித்! டெல்லியின் முதலமைச்சர் என்ற காரணம் கொண்டே இவரால் சுயமாக செயல்பட இயலாத நிலை.மத்திய அரசும்,மாநில அரசும் ஒரே இடத்தில் இருந்தும் நிர்வாகப் பங்கீடுகளுக்கான stream lining இல்லை.விளையாட்டுத்துறையோ கல்மாடியிடம்.டெல்லிக்கு வரும் அவப்பெயரோ முதல் அமைச்சருக்கு.மத்திய,மாநில அதிகாரப் பங்கீடு அரசியல் பனிப்போர்கள் கூட உலக அரங்கில் இந்தியா அவமானப்பட்டதற்கு காரணம் எனலாம்.இறுதி மூன்று தினங்களில் முதலமைச்சர் ஷீலா தீக்சித் பொறுப்பேற்றுக்கொண்டு ஓரளவுக்கு நிவர்த்தி செய்து விளையாட்டுப் போட்டிகளை துவங்கியிருக்கிறார்கள்.Let the game begin என்று சார்லஸ் சொல்வதற்கு பதில் இந்திய ஜனாதிபதி முந்திக்கொண்டார் என்ற கிசுகிசு வேறு கேள்விப்பட்டேன்.

எவ்வளவு ஓட்டம் ஓடியிருப்பேன்!தங்கமெல்லாம் கொண்டு வந்து இந்தியாவைப் பெருமைப்படுத்தினேன்.எனக்கு வெத்தலை பாக்கு வைக்கலியேன்னு பி.டி.உஷா அக்கா ஒரு பக்கம் புலம்பல்.உஷா அக்கா! டெல்லி முழுதும் சேட்டன்,சேச்சிகள் பீரோகிரசியில் இருந்தும் எப்படி கோட்டை விட்டாங்கன்னு தெரியலையே!எப்படியோ நீங்க புலம்பறது நியாயம்தான்.ஆனால் விளையாட்டில் சாதனை என்பதெல்லாம் இந்தியாவில் கடுகு மாதிரி கண்ணுக்குத் தெரியாது.விளையாட்டு முடிந்து மூணாவது நாள் துவங்கி மறுபடியும் மக்களின் கவனம் கிரிக்கெட்ல போயிடுமில்ல.

நான் என்னமோ எங்க பதிவு மக்கள்தான் என் பதிவை சுட்டுட்டாங்க,என் இடுகையை என்னைக் கேட்காமலேயே பத்திரிகைல போட்டுகிட்டாங்கன்னு இதுவரைக்கும் கேள்விப்பட்டிருக்கிறேன்.இப்ப bjc.com ன்னு கூகிள் அண்ணன்கிட்ட கேட்டா அவர் நேரா மன்மோகன்,சோனியா,ராகுல் காந்தி மூன்று பேர் படத்தைக் காண்பிச்சு அது இவங்க கடைதான்ன்னு சொல்றார்.பிஜேபிக்காரங்க கோவிச்சுகிட்டு காங்கிரஸ் மேல் கேஸ் போட்டிருக்காங்க.யோவ் உன்னோட கடைப்பேரு bjb.org ன்னு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அங்கே போய் பாருன்னு விரட்டுகிறார்.இவங்களே சைபர் கிரைம் செய்யறாங்க.இதுல பதிவுலக புள்ளப்பூச்சிகளையெல்லாம் சைபர் கிரைம்ல சேர்க்கனும்ன்னு பின்னூட்டம் போடறது நல்லதில்லை:)

இந்திய மக்களுக்கு சினிமா குஜாலாவுக்கும்,அரசியல் அடாவடிகளுக்கும் பஞ்சமேயில்லை போங்க!
 

8 comments:

ராஜ நடராஜன் said...

சொல்ல மறந்திட்டேன்!நம்பினால் நம்புங்க இல்லாட்டி போங்க!

காமன் வெல்த் விளையாட்டு முடியறவரைக்குக்கும் புதுடெல்லிக்குள்ள பிச்சைக்காரர்களைப் பார்க்கவே முடியாது.சந்தேகமிருக்கிறவங்க டெல்லிக்கு ஒரு பொடி நடை போட்டுட்டு வாங்க.

ஜோதிஜி said...

நான் உறவும் இல்ல நட்பும் இல்ல.

வேறென்ன ஆச்சரியப்படுத்தும் பங்காளி.

எப்டிங்றீங்களா?

இந்த கட்டுரை முழுக்க சின்னச் சின்ன கவிதை போல துக்ளக் சத்யா கட்டுரை போல

நக்கல் நையாண்டி எதார்த்தம், ஆச்சரியம்.

அதெல்லாம் விட டெல்லியில் இருந்து எழுதுபவர்களைப் போல நேரிடையான வர்ணிப்பு.

ம்ம்ம்..... தட்டெச்சும் விரலுக்கு தமிழ் தான் அழகு. ஆனால் எழுதுபதென்னவோ மிகக்குறைவு.

என்ன செய்வது முதுகெலும்பில்லாதவர் பிரதமர்.

இது போல எழுதத் தெரியாதவர்கள் ?

என்ன செய்வது சற்று பெறாமைப்பட்டுக் கொண்டு விடை பெறுகின்றேன்.

ராஜ நடராஜன் said...

பங்காளி ஜோதிஜி:)

நீண்ட பின்னூட்டம்!கூடவே என்னமோ குறுகுறுப்பு போங்க.

துக்ளக்ல எழுதறது சோ இல்லியா?சத்யா என்ற பெயர் எனக்கு புதுப்பரிச்சயம்.

இடுகையில சொல்ல மறந்து பின்னூட்டத்தில் சொன்ன புது டெல்லியில் பிச்சைக்காரர்கள் இல்லை என்பது உண்மையாகி அவர்களுக்கு மறு இல்லம் அமைத்து(இப்ப இருக்குது!ஆனா இல்ல)தந்தால் நல்லதாக இருக்கும்.இதுவே இந்த இடுகை எழுதியதற்கான மகிழ்ச்சியாக இருக்கும்.

ஒரு வார நட்சத்திர மகிழ்ச்சிக்கு மீண்டும் வாழ்த்துக்கள்.

வானம்பாடிகள் said...

hi hi.கல்லுமாடி கதை வேறண்ணோவ். அப்புறம் அந்த பி.டி.உஷா மேட்டர். சாரி. அந்தம்மிணி சரியான அல்பை. எப்பவும் தன்னை ஏதோ வாராது வந்த மாமணின்னு நினைக்கணும்னு ஒரு எதிர்பார்ப்பு.எங்காளுவள சொல்லணும். தூக்கி தலமேல வெச்சி ஆடிட்டானுவ. அந்தம்மிணி ஏதோ ஒரு அஃபிஷியல் பொறுப்பில இருக்குல்ல. அப்புறமென்ன தனியா ஒரு இன்வி.

நசரேயன் said...

//விளையாட்டு முடிந்து மூணாவது நாள் துவங்கி மறுபடியும் மக்களின் கவனம் கிரிக்கெட்ல போயிடுமில்ல.
//

ம்ம்ம்

ராஜ நடராஜன் said...

//பி.டி.உஷா மேட்டர். சாரி. அந்தம்மிணி சரியான அல்பை. எப்பவும் தன்னை ஏதோ வாராது வந்த மாமணின்னு நினைக்கணும்னு ஒரு எதிர்பார்ப்பு.எங்காளுவள சொல்லணும். தூக்கி தலமேல வெச்சி ஆடிட்டானுவ. //

அந்தக்கா ஓடுன காலத்துல ஓட்டப்பந்தய இன்ஸ்பிரேஷனாக்கும்.சானியா மிர்சா கூடத்தான் தலமேல,கண் மேலே தூக்கி வச்சி கொண்டாடுனாங்க.அந்தந்த காலகட்டத்துக்கு பெண்களுக்கு முன்னோடியிங்கிறதனால இவர்களைப் பாராட்டனும்.

ராஜ நடராஜன் said...

//ம்ம்ம்//

நசரு!ம்ம்ம் பாட்டை நிறைய கடைல நீங்க பாடுறதைக் கேட்கிறேன்.

முனி பாரதி said...

எங்கு நோக்கினும் ஊழல். இது தான் இந்தியா என்ற நிலை வராமல் இருக்க ஊழல் செய்பவர் யாராக இருந்தாலும் பாரபட்சம் காட்டக் கூடாது என்கிற மனமாற்றம் அனைவரிடத்திலும் வர வேண்டும்.

நன்றி. தாங்கள் அனுப்பிய விமர்சனத்தை பார்த்தேன் பள்ளியில் புதிதாக நுழைந்தவன் ஒரு நண்பனை பெற்ற மகிழ்ச்சி எனக்கு.

முனி பாரதி