Followers

Saturday, August 20, 2011

ரோடியோ குதிரையும் ப.சிதம்பரமும்!

தமிழ்நாட்டுல இருந்து ஒருத்தன் பிரதமராகும் தகுதியுண்டு என்ற முந்தைய காலத்து எண்ணத்தில் மண்ணை அள்ளிப் போட்டதுமல்லாமல் நிஜ வில்லனாகவே ப.சிதம்பரம் மாறிப்போனது காலத்தின் கோலம்.இந்த லட்சணத்துல முன்பொரு முறை ஜோதிஜி ப.சிதம்பரம் படைசூழ பந்தாவெல்லாம் காட்ட மாட்டாரே என்ற சந்தேக தொனியை வேறு ஒரு பின்னூட்டத்தில் காண்பித்திருந்தார்.அவர் விரும்பாவிட்டாலும் அவரோட பதவிக்கு படைசூழ பாதுகாப்பு அவசியம்.சரி அதை விடுங்க!

நேற்றைய பாராளுமன்ற விவாதத்தில் அன்னாஹசரே எங்களுடன் பேசமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்.எது ஜனநாயக கட்டமைப்பு என்று அன்னா ஹசாரே நினைக்கிறார்?இந்த கட்டிடமா!இந்த மேசையா!இந்த இருக்கையா! ஜனநாயக தேர்தல் முறைப்படி தேர்ந்தெடுத்து வந்த நாங்கள் அல்லவா ஜனநாயகத் தூண்கள் என்ற பொருள்படும்படியான விவாதத்தை முன் வைத்து தாங்களே பாராளுமன்ற பிரபுக்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.அஃறிணைப் பொருட்கள் அசையாமல் நின்றாலும் அவை எப்பொழுதுமே பாராளுமன்ற பாரம்பரியத்துக்கு சொந்தமானவை. எத்தனை தில்லாலங்கடிகளை நீங்கள் உட்பட கண்கூடப் பார்த்திருக்கும் இவைகள்! அசைபவர்களாய் இருந்த நீங்கள் அசையாத ஒரு கிழவனிடம் தோற்றுப் போனீர்களே!துவக்கம் முதல் காங்கிரஸ் செய்தியாளர் மனிஷ் திவாரியின் குரலும்,பேச்சுத்தோரணையுமே காங்கிரஸ்க்கு முதல் ஆப்பு.அதற்குப் பின் கபில் சிபல் என்ற கிரிமினல்(மூளை)லாயர்!கூடவே நம்ம அண்ணாத்தே ப.சிதம்பரம் நாந்தான் ஜெயிப்பேனாக்கும் கோதாவில்.

Entertainment City என்ற ராட்சத ரங்கராட்டினம் போன்ற பொழுதுபோக்கு பூங்கா ஒன்றுக்கு குடும்பதோடு சென்றிருந்தோம்.அங்கே ஒரு மரத்தாலான மின்சாரத்தால் இயங்கும் குதிரை ஒன்று உள்ளது.அமெரிக்காவின் டெக்ஸாஸ் போன்ற இடங்களில் நிகழும் ரோடியோ(Rodeo) குதிரை விளையாட்டு என்ற குதிரை மாடல் அது.மரக்குதிரையை இயக்குபவர் ஒரு பெங்களாதேசி.அது ஒன்றும் பெரிய விசயமில்லை.மெதுவான வேகம்,மிதமான வேகம்,தள்ளி விடும் வேகம் என்ற மூன்று பட்டன்கள் உள்ளன.டிக்கட் எடுத்து ரோடியோ மரக்குதிரையில் அமரந்தால் முதலில் மெதுவான வேக பட்டனையே பெங்களாதேசி தொடுவார்.ஒரு நிமிடம்தான்.மறுநிமிடம் மிதவேக பட்டனை தொடுவார்.தாக்குப்பிடிக்க இயலாதவர்கள் மித வேகத்திலேயே பாதுகாப்பான பிளாஸ்டிக் தரையில் விழுந்து விடுவார்.இதற்கும் மசியாத விடாக்கண்டன்கள் சிலர் இருக்க கூடும்.குதிரையின் கழுத்தைப் பிடித்தால் ரோடியோ குதிரை எந்த குதி குதித்தாலும் கீழே விழாமல் இருக்க முயல்வார்கள்.
கபில் சிபல் ஓட சிதம்பரம்  குதிரையிலிருந்து விழும் கணங்கள்.
நீங்கள் சில ஆங்கிலப்படங்களிலோ ரோடியோ ரைடர்ஸ்களைப் பார்த்திருக்கலாம்.குதிரை குதிக்கிற வேகத்தில் கும்மியடிக்கப்போனவன் கீழே விழுந்தே போவான்.இப்படித்தான் கபில்சிபலும், ப.சிதம்பரமும் அன்னாஹசாரே என்ற சண்டிக்குதிரையை அடக்குவது நீயா?நானா என்ற போட்டியில் குதிரையிலிருந்து குப்புற விழுந்ததுமல்லாமல் குதிரை இருவரையும் குழி தோண்டிப் புதைச்சு விட்டு எங்கய்யா ரோடியோ ஓனர் மன்மோகன் சிங்ன்னு கனைச்சுகிட்டு நிக்குது:) அவரோ ஆளை விட்டா போதும்ன்னு அரக்க பரக்க மைதானத்தை விட்டே ஓடுகிட்டிருக்கார்.இந்தக் குதிரை எப்படியும் உங்களை உதைக்கும்ன்னு தெரிஞ்சும் அதற்கு கடிவாளம் போடப் போக எதிர்பார்க்காமல் எட்டியே உதைத்து விட்டது.சுத்தட்டும் இரண்டு ரவுண்டு ஜெ.பி மைதானத்துலன்னு விட்டிருக்கலமோன்னு இப்ப கவலைப்பட்டு என்ன பலன்?குதிரை காட்டுன வேகத்துல  குதிரைக்கு நிறையவே ரசிகர்கள் கூடிவிட்டார்கள். இனி நீங்களாச்சு!குதிரையாச்சு.

5 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஹசாரே சரியான பாதையில் தான் போகிறார்.
கனவான்கள் தான் போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறார்கள்.

ராஜ நடராஜன் said...

//Blogger நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ஹசாரே சரியான பாதையில் தான் போகிறார்.
கனவான்கள் தான் போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறார்கள்.//

சரியாக சொன்னீங்க!ஆட்சி பீடத்தில் இருப்பவர்களும்,இனிமேல் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையுள்ள கட்சிக்காரர்களுமே நியாயமான போராட்டத்துக்கு தடையாக இருக்கிறார்கள்.

R.Elan. said...

என்னென்ன இடஞ்சல்களை அன்னா ஹஜாரே சந்திக்க வேண்டியுள்ளது, நல்லது செய்யாவிட்டாலும், அது சொத்தை இது சொத்தை என வியாக்யானம் செய்ய பதிவுலகம் வரை ஆட்கள் இருக்கிறார்கள் என்பது வெட்கம்.

ராஜ நடராஜன் said...

//R.Elan. said...

என்னென்ன இடஞ்சல்களை அன்னா ஹஜாரே சந்திக்க வேண்டியுள்ளது, நல்லது செய்யாவிட்டாலும், அது சொத்தை இது சொத்தை என வியாக்யானம் செய்ய பதிவுலகம் வரை ஆட்கள் இருக்கிறார்கள் என்பது வெட்கம்.//

தாமதமாகப் பின்னூட்டத்தைக் கண்டேன்.நீங்கள் சொல்வது சரிதான்.அன்னா ஹசாரே குழுவுக்கு குடைச்சல் தருவதில் மத்திய அரசு ஆர்வம் காட்டுகிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.கருத்து சுதந்திரம் இருப்பதும் மாற்றுக்கருத்துக்கள் இருப்பதும் நியாயம்தான்.ஆனால் பலன்கள்,விளைவுகள் பற்றிய மதிப்பீடு இல்லாமல் பதிவுலக எதிர் விமர்சனமும் என்ற நிலையில் பதிவுகளும் தோற்றுப்போய் விடுகின்றன.ஒருவேளை அன்னா ஹசாரே குழு ஜன்லோக்பால் சட்டத்தை பிரச்சினையை முன் நிறுத்தாமல் இருந்திருந்தால் கூட அரசு தரப்பிலான எதிர் விமர்சனங்களை மட்டுமே முன்வைக்கும்.

தானும் செய்வதில்லை.செய்பவனையும் குறை சொல்வது என்ற நோய்க்கு உதாரணமாக சீமான் மீதான விமர்சனங்களைக் கூறலாம்.

! சிவகுமார் ! said...

ஒவ்வொரு முறையும் சுப்ரீம் கோர்ட் மன்மோகன் தலையில் நங்கென்று குட்டினால்தான் தூக்கம் கலைந்தே எழுகிறார். ஜன் லோக்பால் வந்தால் ஊழல் உடனே ஒழிந்து விடுமா எனக்கேட்பது எந்த வகை நியாயம் என்று தெரியவில்லை. இவ்வளவு மட்டமாக முக்கிய பிரச்சினைகளை கையாண்டு அனைவரிடமும் கேலிக்கு உள்ளாகிறோம் என்று தெரிந்தும் தொடர்ந்து அச்செயலை செய்யும் இவ்வரசை என்ன சொல்ல?