Followers

Monday, August 15, 2011

சுதந்திர இந்தியா!

உலக அதிசயங்களில் ஒன்று பல்வேறு மொழிகள்,கலாச்சார விழுதுகள் கொண்ட மக்களின் ஒன்றிணைந்த மாநிலங்களாக இந்தியா என்ற நாடு.தனித் தனி தீவுகளாய் இருந்த மன்னராட்சி முறையை ஒன்றிணைத்த தொலை நோக்குப் பார்வையே இந்திய நாடும் அரசியல் சட்ட வரைவும்.

போராடும் குணமுள்ள மனிதர்களால்  இந்திய மாநிலங்கள் சிறப்படைகிறதா என்ற புது ஞானத்தை தருகிறது இந்திய சுதந்திர தினம்.காலிஸ்தான்,தனி தமிழ்நாடு போன்ற குரல்களுக்குப் பின்பே பஞ்சாப்பும்,தமிழகமும் வளர்ச்சியுற்ற மாநிலங்களாக உள்ளன.வாய் மூடிக்கிடந்த அஸ்ஸாம்,நாகலாந்து,பீகார் போன்ற மாநிலங்கள் வளர்ச்சியில் பின் தங்கிப் போய் விட்டன.மனித உரிமை மீறல்கள்,வன்முறை,காவல் துறை அடக்குமுறை,ஊழல்,அரசியல் சுயநலம்,சுகாதாரப் பின் தங்கல் என்ற பல காரணங்கள் உலக தரத்தில் இன்னும் வளர்ச்சியற்ற இந்தியாவை படம் பிடித்துக் காட்டுகின்றன.

இவைகளையெல்லாம் மீறி தனிமனித நற்குணங்களும், கலாச்சார, பண்பாடு விழுமியங்களும் கலாச்சார பூமியென்ற இந்தியாவை இறுக கட்டிப் போட்டிருக்கின்றன.மத குரோதங்களும், மத தீவிரவாத விரோதங்களும் தனி மனித வெறுப்புக்களை வளர்க்கின்றன.அதனையும் மீறி மாற்று மதத்தை மதிக்கும் மனித நேயமே எஞ்சி நிற்பதால் உலக வரைபடத்தில் இன்னும் இந்தியா ஒரு ஆச்சரியமான பூமியே.ஒரே மொழியின் கீழ் பல்வேறு கலாச்சாரங்களை உள்வாங்கிக் கொள்ளும் மேற்கத்திய நாடுகளை விட பல கலாச்சார,பன்மொழி மக்களை ஒன்றிணைப்பது சவலான ஒன்று.சவாலை 64 ஆண்டுகளாக இந்தியா சாதனையாக மாற்றி உலக அரங்கில் வலம் வருகிறது.21ம் நூற்றாண்டும்,இணைய தகவல் பரிமாற்றங்களும், விஞ்ஞானமும்,குறைகள் களைந்து இந்தியாவை இன்னும் முன்னேற்றப் பாதையில் நிச்சயம் கொண்டு செல்லும்.

வேற்றுமையில் ஒற்றுமையென்ற இந்திய பாடத்தை இலங்கையும் கற்றிருந்தால் ஒன்றிணைந்த இலங்கையென்பதே சரியாக இருந்திருக்கும்.நிகழ்ந்தவையோ இந்திய ஜாலியன்வாலாபாக்கையும் மிஞ்சிய மனிதப் படுகொலைகள்.தீர்ப்புக்கள் எதுவென்று ஈழ மக்கள் தீர்மானிக்கட்டும்.

தீவிரவாதிகளாய் ஆங்கிலேயர்களால் முத்திரையிடப்பட்ட அனைத்து சுதந்திர தேசபக்தர்களுக்கும் இந்த பதிவு காணிக்கை.

13 comments:

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
உங்களுக்கும், உங்கள் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் என் உளம் கனிந்த இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,

சரியாகத் தான் சொல்லியிருக்கிறீங்க.
வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் எனும் பண்பினை எம் நாட்டுத் தலைவர்களும் கற்றிருந்தால் இன்றைக்கு இந் நிலமை வராதாம்.

ராஜ நடராஜன் said...

//நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
உங்களுக்கும், உங்கள் உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் என் உளம் கனிந்த இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,

சரியாகத் தான் சொல்லியிருக்கிறீங்க.
வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் எனும் பண்பினை எம் நாட்டுத் தலைவர்களும் கற்றிருந்தால் இன்றைக்கு இந் நிலமை வராதாம்.//

வணக்கம் சகோ!எங்கள் சம உரிமைகள் உங்களுக்கும் கிட்டுமா என்ற கேள்வியே இப்போதைக்கு.

காலம் ஒரு நாள் மாறும்.நம் கவலைகள் யாவும் தீவும் என்ற கண்ணதாசன் பாடல் காதில் ஒலிக்கிறது.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

ராஜ நடராஜன் said...

//நண்டு @நொரண்டு -ஈரோடு said...

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்//

சுதந்திர இந்தியா
சுதந்திர தமீழழம்
தமிழர்களின் நிலைப்பாடு.

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

Bibiliobibuli said...

//இந்திய ஜாலியன்வாலாபாக்கையும் மிஞ்சிய மனிதப் படுகொலைகள்.தீர்ப்புக்கள் எதுவென்று ஈழ மக்கள் தீர்மானிக்கட்டும்.//

எங்களுக்குரிய தீர்ப்புகள் எதுவென்று நாங்களே தீர்மானிக்கிறோம் ஒரு வாக்கெடுப்பு வைங்கன்னா என்னாத்த கேக்குறாங்க.

//சுதந்திர இந்தியா
சுதந்திர தமீழழம்
தமிழர்களின் நிலைப்பாடு.//

ஆஹா, ராஜ நட ஹைக்கூ கவித(!!!) சொல்லிட்டாரு. அல்லாரும் ஓடிவாங்கோ :))))

இந்த ஜாலியன்வாலாவில் படுகொலை குறித்த ஓர் ஞாபகம் கொளத்தூர் மணி சொன்னது. இப்போ வேண்டாம் பிறகு எழுதிக்றேன்.

Bibiliobibuli said...

இந்த அமெரிக்காவுக்கு சொன்ன புத்தியை ஏன் இலங்கைக்கும், அதன் ஆட்சியாளர்களுக்கும் சொல்லுங்கண்ணா இந்தியா அந்தர் பல்டி அடிக்குது.

நிகழ்வுகள் said...

சுதந்திர தின வாழ்த்துக்கள் பாஸ் ...

http://thavaru.blogspot.com/ said...

ராஜநட நீங்க சொன்னதெல்லாம் வச்சு ஒருபக்கம் பெருமைபட்டாலும் இந்த அரசியல்வியாதி ரொம்பவும் ஓவருங்க...இவர்களாலயே இந்திய சுதந்திரத்தை சரியா ருசிக்கமுடியல...

ராஜ நடராஜன் said...

////சுதந்திர இந்தியா
சுதந்திர தமீழழம்
தமிழர்களின் நிலைப்பாடு.//

ஆஹா, ராஜ நட ஹைக்கூ கவித(!!!) சொல்லிட்டாரு. அல்லாரும் ஓடிவாங்கோ :)))) //

ரதி!கவிதை சொல்வது ஹேமாவின் வேலையாச்சே!

இதுதான் கவிதைன்னா அடுத்து ஒரு உரைநடைக் கவிதை போட்டு விட வேண்டியதுதான்:)

ராஜ நடராஜன் said...

////இந்திய ஜாலியன்வாலாபாக்கையும் மிஞ்சிய மனிதப் படுகொலைகள்.தீர்ப்புக்கள் எதுவென்று ஈழ மக்கள் தீர்மானிக்கட்டும்.//

எங்களுக்குரிய தீர்ப்புகள் எதுவென்று நாங்களே தீர்மானிக்கிறோம் ஒரு வாக்கெடுப்பு வைங்கன்னா என்னாத்த கேக்குறாங்க. //

கடந்த இரண்டு வருடங்களில் உயிர்ப்பித்து வைத்திருக்கும் விவாதங்கள்,தமிழர்களின் உணர்வு,உரிமைகான குரல்,பொது ஊடகங்களின் செய்தி,மேலை நாடுகளின் ஆதரவு,ஐ.நாவுக்குள் ஈழப்பிரச்சினைக்கான பொதுவாக்கெடுப்புக்கு கொண்டு செல்லும் யுக்திகள் ஈழமக்களின் தீர்ப்புக்கள் குறித்த திசை நோக்கி நகரும் என நம்புவோம்.

ராஜ நடராஜன் said...

//இந்த ஜாலியன்வாலாவில் படுகொலை குறித்த ஓர் ஞாபகம் கொளத்தூர் மணி சொன்னது. இப்போ வேண்டாம் பிறகு எழுதிக்றேன்.//

குளத்தூர் மணி,பெரியார் திராவிட இயக்க உணர்வாளர்களின் குரல்கள் ஏன் பின் தள்ளப் பட்டு வருகின்றன என்ற கேள்வியை எனக்கு நானே கேட்டுக்கொள்வதுண்டு.

போலிஸ் கெடுபிடிகள் போன்றவைகள் இவர்கள் மீது அதிகமாகவே திணிக்கப்பட்டு விட்டது என நினைக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//நிகழ்வுகள் said...

சுதந்திர தின வாழ்த்துக்கள் பாஸ் //

நான் அன்னா ஹசாரே குறித்தும் ஏனைய விவாத பின்னூட்டங்களிலும் கவனமாக இருந்து விட்டேன்.

சுதந்திர தினத்தையும்,இந்திய கருத்துரிமை சுதந்திரதையும் வரவேற்போம். வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

//தவறு said...

ராஜநட நீங்க சொன்னதெல்லாம் வச்சு ஒருபக்கம் பெருமைபட்டாலும் இந்த அரசியல்வியாதி ரொம்பவும் ஓவருங்க...இவர்களாலயே இந்திய சுதந்திரத்தை சரியா ருசிக்கமுடியல...//

தவறு!இப்பத்தான் பதிவர் நிகழ்வுகள் பின்னூட்டத்துக்கு அன்னா ஹசாரே பற்றி சொன்னேன்.அன்னா ஹசாரேவை கைது செய்து விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கும் காங்கிரஸ் நிலை பரிதாபமாக இருக்கிறது.

அரசியலவாதிகள் இந்திய தேசத்தின் வளர்ச்சிக்கு கேடு விளைவிக்கிறார்கள் என்பதில் எனக்கும் உடன்பாடே.