Followers

Saturday, August 13, 2011

தமிழக சட்டசபையா?ஓமந்தூரார் கட்டிடமா?


இந்த பதிவை சென்ற பதிவிற்கு முன்பே இட வேண்டியது.சென்ற பதிவில் புதிய சட்டசபை கட்டிட திட்டத்திற்கு பாராட்டுக்கள் சொல்லிகருணாநிதிக்கும் பாராட்டுக்கள் தெரிவித்திருந்தேன்.ஆனால் ஜெயலலிதாவிற்கு கொடுத்த மதிப்பெண்கள் அதிகமென்றும் ஜெயலலிதாவின் ஈழ நிலைப்பாடு அரசியல் நோக்கங்கள் கொண்டது என கோத்தபய ராஜபக்சே போலவே பின்னூட்ட நண்பர்களும் சொல்லியிருந்தார்கள்.ஜெயலலிதாவின் செயல்பாடுகள் குறித்து மேலும் கணிக்க நாலே முக்கால் ஆண்டுகள் உள்ளன.

இப்போதைக்கு ஜெயலலிதாவின் சமச்சீர் கல்வி செயல்பாட்டுக்கு அடுத்து கேள்விக்குறியாக இருப்பது புதிய சட்டசபை கட்டிடம்.கருணாநிதி அவர்கள் புதிய சட்டசபைக் கட்டிடத்தை திறந்த காலத்தில் கட்டிடம் குறித்த வியப்பே அதிகமாய் இருந்தது.ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின் புதிய சட்டசபையில் காலடி எடுத்து வைக்க மாட்டேன் என்று சொல்லி ஜார்ஜ் கோட்டையில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டதும்,கட்டிட ஊழல் என்ற அவரது குற்றச்சாட்டும்,கட்டிடம் அழகாயில்லை எண்ணைச் சட்டி மாதிரி இருக்கிறதென்ற பதிவுலக விமர்சனங்களும் என மாற்றுப் பார்வைகளையும் முன் வைத்துள்ள நிலையில் கட்டிட ஊழல் பற்றி இன்னும் சரியான உண்மைகள் வெளிப்படாத போது காலத்துக்கும்,பொருளாதார வளர்ச்சிக்கும், வசதிக்கும்  ஏற்றார் போல் புதிய சட்டசபை உருவாக்கியது கருணாநிதியின் ஆட்சியின் சிறந்த முடிவே எனலாம்.ஆனால் முடிவுக்குப் பின்னால் உள்ள சுயநலங்களாய் ஊழல் என்று இருந்தாலும் இந்தக் கட்டிடத்தை கிடப்பில் போட்டு விடுவது சிறந்த முடிவாக இருக்குமா என்றால் இல்லையென்றே கூறலாம்.

                                  தி.மு.க அரசு கண்ட கனவு
   http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2331534.ece

பாபர் மசூதி இடிக்கப் பட்டபின் புதியதாக இந்தக் கட்டிடத்தை எப்படி உபயோகிக்கலாம் என இந்தியா டுடே பத்திரிகை வாசகர்களுக்கு கருத்துக் கேட்டமாதிரி புதிய சட்டசபைக் கட்டிடத்தை என்ன செய்யலாம் என ஹிந்து பத்திரிகை இப்பொழுது வாசகர் கருத்து கேட்கிறது.புதிய சட்டசபை ஒன்றும் வில்லங்க நிலமல்ல.இதில் விவகாரமே ஊழல் என்ற ஒன்றைத் தவிர ஜெயலலிதாவின் பிடிவாதமும்,தமிழர்களுக்கு இயற்கையாகவே உள்ள வாஸ்து என்ற வஸ்து மூட நம்பிக்கையும் கூட.பதிவர் பழமைபேசிக்கு காளமேகப் புலவர் கனவில் வந்து போகிற மாதிரி பெரியார் நினைவில் வந்து போகிறார்.

  ஜெர்மன் கட்டிடக் கலை நிறுவனம் பிலிம் காட்டியது
    http://www.gmp-architekten.de/en/projects.html


புதிய சட்டசபையின் பின்புலம் என்ன?.ஓமந்தூரார் எஸ்டேட் நிலத்தில் கட்டப்பட்ட புதிய சட்டசபை 9.3 லட்ச சதுர அடி கொண்ட ஏழு அடுக்கு மாடி கொண்ட நான்கு வட்ட வடிவம் கொண்டது.சுருக்கமாக சொன்னால் 4 பெரிய எண்ணைச் சட்டிகளின் வடிவம்:)இவை 600 சதுர அடிமுதல் 2000 சதுர அடிவரையிலான 700 அறைகள் கொண்டவை.முந்தைய ஆட்சியில் அனைத்து அரசு துறைகளும் செயல்பட்ட போதும் சட்டசபை செயலகம் மட்டும் பழைய ஜார்ஜ் கோட்டையிலேயே செயல்பட்டது.
                                       சட்டசபை வளாகத்தின் வரைபடம்
 http://www.thehindu.com/news/states/tamil-nadu/article2331513.ece
 
500 கோடிக்கு திட்டமிடப்பட்ட புதிய சட்டசபை கட்டிடம் தற்போது 1,092 கோடிகளைத் தாண்டுமென கணிக்கப்படுகிறது என ஹிந்து பத்திரிகை சொல்கிறது.விலை, சந்தைப் பொருளாதாரத்தின் அடிப்படையில் விலையேற்றம் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றா?.இதனை நாம் ஒரு வீடு கட்ட துவங்கும் காலத்திற்கு திட்டமிடும் பட்ஜெட்டுக்கும்,நமது பொருளாதார சிக்கலால் ஒரு வருடம் இரண்டு வருடமென தள்ளிப் போய் விட்டால் நாம் எதிர்பார்த்த செலவுக்கும் அதிகமாகவே போய் விடும்.சந்தைப் பொருளாதாரத்தோடு கிடைத்த வரை லாபம் பார்க்கும் சுபாவம்,பதுக்கல்  எதிர் பொருளாதார காரணிகளும் சேர்த்தியே.

மத்திய கிழக்கு நாடுகளில் தனியார் துறை கட்டிடங்களோ,அரசு துறை டெண்டர்களோ குறிப்பிட்ட கால வரையறை செய்து கொண்டு,குறிப்பிட்ட முன் பட்ஜெட்டில் கட்டிடங்களை செய்து முடித்து விடுகிறார்கள்.திட்டம் உறுதியானவுடன் அஸ்திவார மண்ணைத் தோண்டிய கணத்திலிருந்து மின்சார விளக்குகள் கண்ணை பளபளக்க குளிர்சாதன வசதிகளுடன் கட்டிடத்திற்குள் நுழைவது வரையிலான திட்டங்களை நினைத்தால் பெருமூச்சே வருகிறது.இதற்கான முக்கிய காரணம் ஊழல்,அரசியல் தலையீடு,தனி மனித விரோதம் என எந்த எதிர் நிலைகளும் இல்லாததே.திருட்டுப் பணத்தை துபாயில் பதுக்கும் அரசியல்வாதிகள் துபாயின் புர்ஜ் கலிபா உயர்ந்த கட்டிடம் மாதிரியான தகுதிகளைநாமும் வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று நினைப்பதேயில்லை.நம்மைப் பொறுத்த வரையில் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் எல்.ஐ.சி கட்டிடமே போதும் என்ற தேக்கமும்,,பூதம் காத்த பணமாக ஸ்விஸ் வங்கி கள்ளப்பணமே கனவு.
                                 துபாய் பூர்ஜ் கலிபா கட்டிடம்
கூகிள் தேடலில் பதிவர் ராஜராஜேஸ்வரி தளத்த்தில் சுட்டது.

புதிய சட்டசபை தேவையென்ற எண்ணமே ஜெயலலிதாவினால் முந்தைய அவரது ஆட்சியில் முன் வைக்கப்பட்டதும்,கருணாநிதியின் தூண்டுதலால் அப்போது சுற்றுப்புற சூழல் மந்திரியாக இருந்த டி.ஆர். பாலு அனுமதி மறுத்து விட்டார் என்று ஜெயலலிதா குற்றம் சுமத்துகிறார்.
 
இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி சாத்தான் வேதம் ஓதுவதா? ஜெயலலிதா அரசு சட்டமன்ற தீர்மானம் பற்றி கலைஞர் விளக்கம் என நக்கீரன் செய்திக்கு ”ஐயா! பைபிள் கூறுகிறது,பாவியான ஒரு மனுஷன் எல்லாவித நன்மைகளையும் கெடுப்பான் என்று|” ஞானசேகரன் என்பவர் பின்னூட்டம் இட்டிருந்தார்.இந்தப் பின்னூட்டம் கருணாநிதி,ஜெயலலிதா இருவருக்குமே பொருந்தும் என்ற போதிலும் பட்டம்,கோப்பை என வாங்குவதில் கருணாநிதியே சிறந்தவர் எனபதை பதிவுலகம் இன்னும் பறைசாற்றி சொல்லிக்கொண்டிருக்கிறது.
 
தூரப்பார்வையில் இன்னும் வளரும் ஜனத்தொகையின் அடிப்படையிலும், நிர்வாகத் தேவை கருதியும்  ஜார்ஜ் கோட்டையும்,புதிய சட்டசபையும் தமிழக சட்டசபைகளாகவே இயங்க வேண்டுமென்பதே எதிர்காலத்திற்கு கருணாநிதி,ஜெயலலிதா விட்டுச் செல்லும் நினைவுச் சின்னங்களாகும். அவைகள் நிகழாத வரை கருணாநிதி,ஜெயலலிதா போன்றவர்களை பொதுநலம் கருதி விமர்சிப்பது வயது,தகுதிகளுக்கு அப்பாலான பதிவுலகத்தின் கடமையாகும்.  

6 comments:

யூர்கன் க்ருகியர் said...

சமச்சீர் கல்வி நீங்கலாக மற்ற விடயங்களில் ஜெயலலிதா சரியான பாதையில் செல்வதாகவே தொடருகிறது.

இன்னும் நான்கே முக்கால் ஆண்டுகள் உள்ள நிலையில் தமிழர்களுக்கு துரோகம் செய்த தி மு க வினை (அல்லது குடும்ப அரசியலை ) இல்லாமல் செய்தும் பக்சே முதலான கொடுங்கோலர்களை கதம செய்வதையும் முக்கிய குறிக்கோளாக கொண்டு ஜெயலலிதா இயங்குவதையே நான் விரும்புகிறேன்.

தவறு said...

புதிய தமிழகசட்டசபையை வேறு ஏதாவது உபயோகபடுத்தி கொள்ளவேண்டியது தான் ராஜநட...அம்மா கண்ணதொறக்கணுங்கோ...

ராஜ நடராஜன் said...

//யூர்கன் க்ருகியர் said...

சமச்சீர் கல்வி நீங்கலாக மற்ற விடயங்களில் ஜெயலலிதா சரியான பாதையில் செல்வதாகவே தொடருகிறது.

இன்னும் நான்கே முக்கால் ஆண்டுகள் உள்ள நிலையில் தமிழர்களுக்கு துரோகம் செய்த தி மு க வினை (அல்லது குடும்ப அரசியலை ) இல்லாமல் செய்தும் பக்சே முதலான கொடுங்கோலர்களை கதம செய்வதையும் முக்கிய குறிக்கோளாக கொண்டு ஜெயலலிதா இயங்குவதையே நான் விரும்புகிறேன்.//

வாங்க யூர்கன் க்ருகியர்!சமச்சீர் கல்வி தவிர மற்ற விசயங்களில் ஜெயலலிதா சரியாகவே செயல்படுகிறார்.ஆனால் புதிய சட்டமன்றத்தை கிடப்பில் போடுவது நல்லதல்ல.மாற்று தேவையாக உபயோகிக்க இயலுமென்ற போதிலும் எதிர் காலத்தில் புதிய சட்டமன்ற தேவை இருக்கிறதென்பதால் புதிய கட்டிடத்தைப் பயன்படுத்துவதே நல்லது.

வீராணம் நீர் திட்டமும் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டு,ஊழல் காரணமாக நடைமுறைப் படுத்தாமல் கிடப்பில் போடப்பட்டது.கருணாநிதியிடம் திட்டங்கள் இருக்கிறது.ஆனால் திட்டங்களின் பக்க விளைவுகளும் உள்ளன.

தமிழீழ மக்களின் பொது வாக்கெடுப்பில் தனி நாடா அல்லது ஒன்று பட்ட இலங்கையில் சம உரிமை வாழ்வா என்பதை தீர்மானிக்கும் அழுத்தத்தை கொடுக்கும் அரசு அதிகார வலுவுடன் ஜெயலலிதா உள்ளார்.வரலாற்றில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள காலம் தந்த அருமையான சந்தர்ப்பம்.எப்படி உபயோகப் படுத்திகொள்கிறார் என பார்க்கலாம்.

கருணாநிதிக்கும் இதுமாதிரியான வரலாற்று சந்தர்ப்பத்தை காலம் வழங்கியது.தனது கோழைத்தனத்தாலும்,குடும்ப அரசியலாலும் தீராப் பழியை சுமந்து கொண்டுள்ளார்.

ராஜ நடராஜன் said...

//தவறு said...

புதிய தமிழகசட்டசபையை வேறு ஏதாவது உபயோகபடுத்தி கொள்ளவேண்டியது தான் ராஜநட...அம்மா கண்ணதொறக்கணுங்கோ...//

வேறு உபயோகத்துக்கு என்பதற்கு ஆயிரம் ஆலோசனைகளை ஹிந்து பத்திரிகை வாசகர்கள் தருகிறார்கள்.பொதுவில் தமிழகத்தில் வைத்தால் இன்னும் லட்சக்கணக்கில் ஆலோசனைகள் குவியும்.ஓமந்தூரார் எஸ்டேட் ஹாட்கேக் மாதிரியான நிலம்.நல்ல லாபத்துடன் வியாபார நோக்கில் மக்கள் பணத்தை திரும்ப பெற்று விட முடியும்.

ஆனால் தமிழகத்தின் எதிர்காலத்துக்கு புதிய சட்டசபை தேவையென்பதோடு,ஜெயலலிதாவின் தனக்குத் தானே எதிரி கொள்கையில் ஒரு வேளை நாளை தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புதிய சட்டசபையை மீண்டும் புதுப்பிக்க நினைத்து பணம் செலவு செய்யும் சாத்தியமும் ஏற்படும்.அப்போதைய கால கட்டத்தில் தற்போது 1092 கோடி செலவு என்று கணிப்பிடும் செலவுகள் இன்னும் இரட்டிப்பாகவே செய்யும்.எனவே புதிய சட்டமன்றத்தை சட்டமன்றமாகவே செய்ல்படுத்துவதே நலல்து.

அரசியலில் நிரந்தர நணப்னும்,எதிரியும் கிடையாது எனப்து போல் நிரந்தர பதவியும் கிடையாது.

jmbatcha said...

//கூகிள் தேடலில் பதிவர் ராஜராஜேஸ்வரி தளத்த்தில் சுட்டது.//
அது புருஜ் கலிஃபா அல்ல இது துபாயின் வேறு ஒரு கட்டிடத் திட்டம்

கட்டூரை அருமை

ராஜ நடராஜன் said...

//jmbatcha said...

//கூகிள் தேடலில் பதிவர் ராஜராஜேஸ்வரி தளத்த்தில் சுட்டது.//
அது புருஜ் கலிஃபா அல்ல இது துபாயின் வேறு ஒரு கட்டிடத் திட்டம்

கட்டூரை அருமை
//

தாமத மறுமொழிக்கு மன்னிக்கவும்.நானே இப்பொழுதுதான் செங்குத்தா நிற்கும் கட்டிட வடிவத்தைக் கவனித்தேன்.சரிபடுத்தியமைக்கு நன்றி.