Followers

Wednesday, August 17, 2011

பதிவுலக ரயில் பயணம்.

ரயில் பெட்டி எண்ணை தேடும் பரபரப்பு
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இருக்கை.
அடுத்த இடு(க்)கையில் யார் என்ற தேடல்.


இல்லாதவர்கள் நின்று பயணிக்கும் பின்னூட்டங்கள்

சக பயணிகளோடு பயணிக்கும் அனுபவம்
பெரும்பாலும் பயண அனுபவ புது நண்பர்கள்.


சாயா,முறுக்கு,கடலை விற்பனைகள்
சிலர் நண்பர்களாய் கலாய்த்துக் கொள்ளும் சப்தங்கள்.
குடும்பமாய் உணவைப் பரிமாறிக்கொள்ளும் உபசரித்தல்.


என்றைக்காவது பயணிகள்
வார விடுமுறைப் பயணிகள்
அலுவலும் அலுவலகமே பயணிகள்.

கழிவறையின் மூத்திர நெடிகள்
பரிதாபத்துக்குரிய ஊனங்கள்
ஓட்டு பிச்சைப் பாத்திரங்கள்.


முகமூடி போடுவதே குளிருக்கு எனும் நல்ல அண்ணா னிகள்
முகமூடி போடுவதே திட்டி வைக்க எனும் அனானிகள்
முகமூடி போடாதவன் யோக்கியமா கேள்வி கணையாளிகள்.

தெரியாமல் கால் பட்டும் தெரிந்தே கால் மிதிக்கும் குற்றங்கள்
பொதுப்பயணத்தில்  கெட்ட வார்த்தை மது நெடி மூக்கு சுழிப்புகள்
இரு பெட்டிகள் ஆட்டமாய் எது சரியென்று விவாத குழப்பங்கள்.


எல்லைகளை இன்றோ நாளையோ மறுதினமோ எட்டும் இலக்குகள்
மரங்கள் மாதிரி இருப்புக்கள் கடக்கும் மனிதர்கள்,நிகழ்வுகள்
விபத்தான ஈழப் படுகொலைகளை உரக்க சொல்லும் செய்தியாளர்கள்.

கூ...கி...ள் என்று சத்தம் போடும்  நீண்ட பெட்டிகள்
ஆயுத சாலை  தயாரிப்பு மென்பொருள் வல்லுநர்கள்
இத்தனை பாரங்களையும் சுமக்கும் மகத்தான இயக்குநர்கள்.


ஸ்டேசன் வந்துடுச்சு  போயிட்டு வாரேன் மன தேம்பல்கள்
அப்பாடி!போய் சேர்ந்தா சரியென கையசைப்புகள்:)
 
போன பின் திரும்பாத வாழ்க்கை பயணங்கள்!  

நெஞ்சம் தட தடக்க வைக்கும் வாசிப்பின் ஆச்சரியக் குறிகள்
தனிமையில் புத்தக வாசிப்பான ஏகாந்த நிலை
கும்மியில் விசிலடிக்கும் சிரிப்பான நயனம்.

பதிவுலகம் தட தட  சத்தங்களின் நீண்ட ரயில் பயணம்...

23 comments:

Thekkikattan|தெகா said...

:)) கலக்கல்ஸ் ராஜ நட. ஹே! யாருப்பா அங்கே இவருக்கு கவிஜா வராதுன்னு சொன்னது ;)

Rathi said...

தெகா, ராஜ நடவின் கவிதை திறமையை முதன்முதல் கண்டுபிடித்த பெருமை என்னை சேரட்டும் :) இதுக்கு முந்திய பதிவில் ஒரு ஹைக்கூ கவனிக்கலையா?

ராஜ நட தொடரலாமே.... ஹேமா தப்பாவே நினைக்கமாட்டார் :)

Rathnavel said...

வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

வாழ்த்துக்கள்.

Amudhavan said...

ரொம்பத்தான் பாதித்திருக்கிறது பதிவுலகம் உங்களை. அதன் மொத்த வடிவத்தையும் ரயில் பயணத்துடன் உருவகித்து அழகான கற்பனையை யாத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Super:-) Kalakkal

R.Elan. said...

பதிவுலக ரயில் பயணத்தின் கவிதை படப்பிடிப்பு அருமை.

நிரூபன் said...

வணக்கம் பாஸ், தமிழ் மணத்தில் ஒரு ஓட்டுப் போடுவோம் என்றால் தமிழ் மணத்தைக் காணலையே.

ராஜ நடராஜன் said...

//Thekkikattan|தெகா said...

:)) கலக்கல்ஸ் ராஜ நட. ஹே! யாருப்பா அங்கே இவருக்கு கவிஜா வராதுன்னு சொன்னது ;)//

கவிஜ அண்ணாச்சிகளால் திண்ணை காலியானதால வான் கோழியாக நானும் கூவுகிறேன்:)

ராஜ நடராஜன் said...

//Rathi said...

தெகா, ராஜ நடவின் கவிதை திறமையை முதன்முதல் கண்டுபிடித்த பெருமை என்னை சேரட்டும் :) இதுக்கு முந்திய பதிவில் ஒரு ஹைக்கூ கவனிக்கலையா?

ராஜ நட தொடரலாமே.... ஹேமா தப்பாவே நினைக்கமாட்டார் :)//

அப்படியா சொல்றீங்க!ஹேமாவுக்கு எதிர் கவிஜ போட்டுற வேண்டியதுதான்:)

தயாரிச்சுட்டு வாரேன்!

ராஜ நடராஜன் said...

//Rathnavel said...

வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_16.html//

உங்கள் தொடர் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி.தொடுப்பு கொடுத்திட்டீங்கதானே!வந்துடறேன்.

ராஜ நடராஜன் said...

//நண்டு @நொரண்டு -ஈரோடு said...

வாழ்த்துக்கள்.//

ஈரோட்டுலருந்து கதிரும்,மெட்ராஸ் குயிலு வானம்பாடிகளும் இல்லாத குறைய தீர்க்க ஏதோ நம்மாலானது:)

ராஜ நடராஜன் said...

//Amudhavan said...

ரொம்பத்தான் பாதித்திருக்கிறது பதிவுலகம் உங்களை. அதன் மொத்த வடிவத்தையும் ரயில் பயணத்துடன் உருவகித்து அழகான கற்பனையை யாத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.//

சார்!கணினி முன்னாடியே குந்திகிட்டிருந்தா வேற என்ன நினைப்பு வரும்:)

யாத்திருக்கிறீர்கள் சொல் நினைவுபடுத்தலுக்கு நன்றி.புழங்க புழங்கத்தான் தமிழ் வரும்.

ராஜ நடராஜன் said...

//"என் ராஜபாட்டை"- ராஜா said...

Super:-) Kalakkal//

Thanks.

ராஜ நடராஜன் said...

//R.Elan. said...

பதிவுலக ரயில் பயணத்தின் கவிதை படப்பிடிப்பு அருமை.//

இன்னும் பயணிப்போம்!ஊக்குவித்தலுக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

//நிரூபன் said...

வணக்கம் பாஸ், தமிழ் மணத்தில் ஒரு ஓட்டுப் போடுவோம் என்றால் தமிழ் மணத்தைக் காணலையே.//

ச்கோ!நல்லவேளை வந்தீங்க.முன் அனுமதியே இனி தேவையில்லை.அடுத்த கவிஜ உங்களுக்கு சமர்ப்பணம்.

நிரூபன் said...

பதிவுலகினை சூப்பராகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறீங்க.

நிரூபன் said...

ராஜ நடராஜன் said...
//நிரூபன் said...

வணக்கம் பாஸ், தமிழ் மணத்தில் ஒரு ஓட்டுப் போடுவோம் என்றால் தமிழ் மணத்தைக் காணலையே.//

ச்கோ!நல்லவேளை வந்தீங்க.முன் அனுமதியே இனி தேவையில்லை.அடுத்த கவிஜ உங்களுக்கு சமர்ப்பணம்.///

அவ்..................

ஏன் பாஸ்...நான் அப்படி என்ன தப்பு உங்களுக்குப் பண்ணினேன்.

ராஜ நடராஜன் said...

//அவ்..................

ஏன் பாஸ்...நான் அப்படி என்ன தப்பு உங்களுக்குப் பண்ணினேன்.//

சகோ பாஸ்:) உங்களுக்கு பதிவு தயார்!உங்க ஐ.டி தேடினேன்.கிடைக்கல.நீங்க எதுக்கும் என்னோட இமெயில் rajanatcbe@gmail.com ஐ.டிக்கு ஒரு தனி மடல் அனுப்புங்க.

Rathi said...

//அப்படியா சொல்றீங்க!ஹேமாவுக்கு எதிர் கவிஜ போட்டுற வேண்டியதுதான்:)//

ஆஹா!! கவுஜ எழுதுங்கன்னா ஹேமாவுக்கு 'எதிர்' கவுஜ என்கிறீர்களே.

நான் இந்த விளையாட்டுக்கு வரல :))

ராஜ நடராஜன் said...

//Rathi said...

//அப்படியா சொல்றீங்க!ஹேமாவுக்கு எதிர் கவிஜ போட்டுற வேண்டியதுதான்:)//

ஆஹா!! கவுஜ எழுதுங்கன்னா ஹேமாவுக்கு 'எதிர்' கவுஜ என்கிறீர்களே.

நான் இந்த விளையாட்டுக்கு வரல :))//

ரதி!ஹேமாவுக்குத்தானே வேண்டாம்!உங்களுக்கு ரெடியாகிட்டிருக்கு.நிருபன் ஒப்புதல் சொல்லிட்டாருன்னா ரிலிஸ் செய்துடறேன்:)

Rathi said...

//ரதி!ஹேமாவுக்குத்தானே வேண்டாம்!உங்களுக்கு ரெடியாகிட்டிருக்கு.நிருபன் ஒப்புதல் சொல்லிட்டாருன்னா ரிலிஸ் செய்துடறேன்:)//

அப்போ உங்க தலைமையில் எனக்கு ஒரு குரூப்பா ஏதோ சூனியம் வைக்கிறீங்க போல :))

ராஜ நடராஜன் said...

//Rathi said...

//ரதி!ஹேமாவுக்குத்தானே வேண்டாம்!உங்களுக்கு ரெடியாகிட்டிருக்கு.நிருபன் ஒப்புதல் சொல்லிட்டாருன்னா ரிலிஸ் செய்துடறேன்:)//

அப்போ உங்க தலைமையில் எனக்கு ஒரு குரூப்பா ஏதோ சூனியம் வைக்கிறீங்க போல :))//

ரதி!படம் ரிலிசாகறதுக்குள்ளேயே அவசரப்படுறீங்களே:)