Followers

Tuesday, August 2, 2011

இந்திய ஜனநாயகத்தின் தரம்

உடல் சைஸ் பெருசாக இருப்பது மட்டுமே மதிப்புன்னா ராஜபக்சே கூட உலகத்தின் தலைசிறந்த ஜனாதிபதிதான்:)இந்திய ஜனநாயகம் கூட அப்படித்தான். ஒரு மூட்டை பொரி கடலைக்கும் ஒரு சவரன் தங்கத்துக்குமிடையே இருக்கும் அளவு,விலைக்குமிடையே இருக்கும் வித்தியாசம்தான் இந்திய ஜனநாயகத்துக்கும் உண்மையான உலக ஜனநாயகத்துக்குமிடையே உள்ள வித்தியாசங்கள்.உலகத்திலேயே பெரிய ஜனநாயக நாடு என்று மார் தட்டிக்கொள்ளும் இந்தியா கொள்ளவில் பொரிகடலை மாதிரி அதிகமாக இருந்தாலும்  தரம் எடையில் ஏனைய உலக ஜனநாயகத்தின் தரத்தை விட குறைவாகவே இருக்கிறது.

ஒரே ஆறுதல் தங்கமில்லாமல் இருந்து விடலாம்.பொரிகடலை சாப்பிட்டாவது உயிர்வாழ்ந்து விடலாம்ங்கிற மாதிரி இந்தியாவின் பல்வேறு பட்ட மக்களின் இணைப்பால்தான் இந்திய ஜனநாயகம் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது.ஆனால் அதற்கெல்லாம் வேட்டு வைக்கும் விதமாகவே காங்கிரஸ் ஆட்சியில் இந்திய ஜனநாயகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.ஆட்டைக் கடிச்சு,மாட்டைக் கடிச்சு கடைசில மனுசனக் கடிக்கிற பழமொழி மாதிரி கோவையில் இராணுவ வண்டியை மறித்து எதிர்ப்புக் காட்டியும்,ராணுவ பயிற்சி கொடுத்து,கோயில் சுற்ற வைத்து,விளையாட்டைக் கண்டு களிக்க வைத்து,சிவப்புக் கம்பளம் கொண்டு நடக்க வைத்து கடைசியாக பாராளுமன்றத்திலே இலங்கைக்காரனை பார்வையாளனாக வைத்து தமிழர்களின் உணர்வுகளுக்குப் புறம்பான, ஜனநாயகத்திற்கு புறம்பான போர்க்குற்றத்துக்கு துணைபுரியும் காங்கிரஸின் ஜனநாயக முகமூடி செயல்களுக்கு பஞ்சாப்,வங்காளம் போன்று இன்னுமொரு மாநிலமாக இருந்தால் நிச்சயம் வன்முறைக் கலாச்சாரத்தின் விதைகள் விதைக்கப்பட்டே இருக்கும்.அந்த விதத்தில் தமிழனின் இதுவரையிலான பொறுமைக்கு வந்தனம் செய்யலாம். கூடவே தமிழகத்தில் போராட வேண்டியவன் நில அபகரிப்புக்களை செய்பவனாய்,சுயம் விரும்பியாய் தன் தேவைக்கே கொடியேந்துபவனாய் இருந்து விட்டதும் கூட மத்திய அரசின் மொத்த சீண்டலுக்குமான காரணமெனலாம்.தமிழகம் இன்னும் ஆபத்துக்கான பாதையிலே பயணிக்கும் வருத்தம் மட்டுமே மிஞ்சுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் பி.ஜே.பி என்ற மதவாதியை விட செக்குலர் முகமூடி போட்டுக்கொண்ட தமிழர்களின் உணர்வுக்குப் புறம்பான காங்கிரஸ்காரன் ஆபத்தானவன்.ராசா ஊதும் மன்மோகன்,சிதம்பரம் ஊழல் சங்கு அடுத்த தேர்தலுக்கு காங்கிரஸ்க்கு சங்கு ஊதும் என்பது நிச்சயம் என்பது மட்டுமே தற்போதைக்கான ஆறுதல்.

10 comments:

சார்வாகன் said...

/தமிழகத்தைப் பொறுத்தவரையில் பி.ஜே.பி என்ற மதவாதியை விட செக்குலர் முகமூடி போட்டுக்கொண்ட தமிழர்களின் உணர்வுக்குப் புறம்பான காங்கிரஸ்காரன் ஆபத்தானவன்.ராசா ஊதும் மன்மோகன்,சிதம்பரம் ஊழல் சங்கு அடுத்த தேர்தலுக்கு காங்கிரஸ்க்கு சங்கு ஊதும் என்பது நிச்சயம் என்பது மட்டுமே தற்போதைக்கான ஆறுதல்./
வணக்கம் சகோ,
சரியான வார்த்தைகள்.வருகிற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி மாற்றப் பட்டே ஆகவேண்டும்.பா.ஜ.க மட்டும் மதவாத கட்சி அல்ல.பா.ஜ.க‌ தமிழகத்தில் வலிமை இல்லாத்தால் மத்தியில் கூட்டாட்சியில் தமிழகத்தில் வெற்றி பெறும் கட்சி ஆட்சியில் பங்கு பெரும்.பா.ஜ.க தனி பெரும்பானமை பெரும் வாய்ப்பும் குறைவு.ஆகவே அவர்களும் தங்கள் தனிப்ப்ட்ட மதம் சார்ந்த கொள்கைகளை விட்டுவிட்டு மக்கள் பணி ஆற்றினால், இப்போதைய அரசை விடவே வெளிப்படையாக ,நன்றாக இருக்கும்.இப்படி நடப்பது இந்தியாவிற்கு,குறிப்பாக தமிழர்களுக்கு நல்லது.நன்றி

Thekkikattan|தெகா said...

ராஜ நட,

எதுக்காக இப்படியெல்லாம் வெறுப்பேத்தி பார்க்கிறாய்ங்கன்னு ஒரு பயலுக்கும் வெளங்கல. என்னதான் வேணுமாம்? இதெல்லாம் மா’பெரும் ஜனநாயகத்தை கட்டிக் காக்கும் முறையா... மூட்டுக் கழண்டவிங்க :((

இதையும் வாசிங்க...

http://maniblogcom.blogspot.com/2011/08/blog-post_01.html

Chitra said...

உலகத்திலேயே பெரிய ஜனநாயக நாடு என்று மார் தட்டிக்கொள்ளும் இந்தியா கொள்ளவில் பொரிகடலை மாதிரி அதிகமாக இருந்தாலும் தரம் எடையில் ஏனைய உலக ஜனநாயகத்தின் தரத்தை விட குறைவாகவே இருக்கிறது.


..... கசப்பான reality

செங்கோவி said...

எப்படி தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம் தேவைப்பட்டதோ, அதே நிலையே மத்திய அரசுக்கும்!

இல்லையென்றால் அவர்களின் ஆட்டம் கட்டுக்கடங்காமல் போகவே வாய்ப்பு அதிகம்!

தவறு said...

ராஜ நட தமிழகத்து மக்கள் தி.மு.க. கொடுத்த அடிப்போன்று காங்கிரஸ்க்கு அடி கொடுத்தால் நல்லது தான்...

இந்திய ஜனநாயகம் தரம் பணநாயக தரமாய் மாறியுள்ளது.

ராஜ நடராஜன் said...

சகோ!சார்வகன்!என்ன புதிய படம் ரிலிஸ் செய்திருக்கீங்க:)உங்கள் பின்னூட்டம் கொண்டே ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் படம் நினைவுக்கு வருகிறது.

மூன்றாம் முறை காங்கிரஸின் ஆட்சி இந்திய ஜன்நாயகத்துக்கு நல்லதே அல்ல,முக்கியமாக தமிழகத்துக்கும் தமிழீழ மக்களின் வாழ்க்கை சீரமையவும் காங்கிரஸை ஆட்சி பீடத்திலிருந்து அப்புறப்படுத்தவது அவசியம்.அதற்கான வழிகளை அணில் மாதிரி பதிவு என்ற சிறு கல் தூக்குவது அவசியம்.

ப.ஜ.க சார்ந்தும் எதிர்த்தும் கருத்தை இங்கே முன் வைப்பதற்கு பதிலாக பின்பு ஒரு பதிவாகவே இடுவது சிந்திக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கும் புரிதலை தருமென்பதாலும்,அவர்களது உபவாச கால நேரத்தை மதிக்கும் பொருட்டு மதம் சார்ந்த கருத்துக்களை தவிர்க்கிறேன்.ப.ஜ.க ஆட்சி பீடத்தை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.வாய்ப்பை எப்படி பயன்படுத்தப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.இப்போதைக்கான ஆர்.கே.சதிஷ்குமார் ஸ்டைல் ஜோசியமாக தமிழகத்தில் ப.ஜ.க+அ.தி.மு.க கூட்டணி:)

ராஜ நடராஜன் said...

தெகா!எப்படியிருக்கீங்க?காங்கிரஸ்காரன் தமிழர்களை வெறுப்பேத்துவது பற்றி நாம் ஏற்கனவே காஷ்மீர் மாதிரியான ஒரு சூழலை தென்னகத்திலும் வேண்டுமென்றே திணிக்கிறார்களா என்பது மாதிரி நாம் கருத்து பகிர்வு செய்துள்ளோம்.சீனாக்காரனுக்கு பயந்து இலங்கையை தாஜா செய்வது மட்டும் காரணமாகத் தெரியவில்லை.காரணம் இப்போதைய ராஜபக்சே குழு போர்க்குற்ற அறிக்கை மாதிரியான சந்தர்ப்பத்திலேயே இலங்கைக்கு செக் வைக்கும் சாத்தியம் இந்தியாவுக்கு இருக்கிறது.ஒரு வேளை ராஜபக்சே குழு சொல்வது மாதிரி போரை இந்தியாவே நிழலாக செய்தது என்ற கூட்டுக்களவாணித்தனத்துக்கும் அப்பால் "ரா"ப்பிச்சைகள் தமிழகத்துக்கு எதிரான நிலையை,காங்கிரஸின் Hidden agenta உடன் உலக கடல்வழிப்பாதை பொருளாதாரம் என்ற போர்வையில் செய்வதாகவே தெரிகிறது.

மூட்டுக் கழண்டவிங்க சொல் நயத்துக்கு நன்றி:)

நீங்கள் கொடுத்த தொடுப்பை பின்னூட்டமிட்டு விட்டுப் பார்க்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//Blogger Chitra said...

உலகத்திலேயே பெரிய ஜனநாயக நாடு என்று மார் தட்டிக்கொள்ளும் இந்தியா கொள்ளவில் பொரிகடலை மாதிரி அதிகமாக இருந்தாலும் தரம் எடையில் ஏனைய உலக ஜனநாயகத்தின் தரத்தை விட குறைவாகவே இருக்கிறது.


..... கசப்பான reality//

That's lovely to see your comment again.Thanks.

ராஜ நடராஜன் said...

//செங்கோவி said...

எப்படி தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம் தேவைப்பட்டதோ, அதே நிலையே மத்திய அரசுக்கும்!

இல்லையென்றால் அவர்களின் ஆட்டம் கட்டுக்கடங்காமல் போகவே வாய்ப்பு அதிகம்!//

பாஸ்!நேற்று சீமானுக்குப் பின்னூட்ட மறுமொழி சொல்லி களைச்சுப் போயிட்டீங்களோ:)

வழக்கமாக எதிர்க்கட்சிக்காரன் தான் குழி பறிப்பான்.காங்கிரஸ்காரன் அவனுக்கு அவனே குழிபறித்துக்கொண்டான்.இன்னுமொரு 8 வருடத்துக்காவது மத்தியிலும் வாரிசு அரசியல் இல்லாமல் போக கடவது.அதற்குள்ளாக புதுசா அனுப்பிய சாட்டிலைட்டுகளை இன்னும் தொலைக்காட்சிகளாகப் பரவச்செய்து வாரிசு அரசியல் இந்திய ஜனநாயகத்துக்கு ஏன் கேடு என்பதை மக்களுக்கு புரிய வைத்து விடலாம்.

ராஜ நடராஜன் said...

//தவறு said...

ராஜ நட தமிழகத்து மக்கள் தி.மு.க. கொடுத்த அடிப்போன்று காங்கிரஸ்க்கு அடி கொடுத்தால் நல்லது தான்...

இந்திய ஜனநாயகம் தரம் பணநாயக தரமாய் மாறியுள்ளது.//

நீங்க கவலையே படவேண்டாம்.காங்கிரஸ் தனக்குத்தானே குழி தோண்டிகிச்சு.இனி படுத்து ச்மாதியாவதுதான் பாக்கி.அதனை இன்னும் மூன்று வருடங்களில் செய்து விடலாம்...முக்கியமாக தமிழகத்தில் அதனை நிறைவேற்றுவோம்.