Followers

Friday, August 26, 2011

கொத்துமல்லி சட்னி

சி.பி.செந்தில்குமார் ஒரு பத்து வகையான சட்னிப் படங்கள் போட்டு குத்துமதிப்பா போன மாசமோ அதுக்கும் முந்தின மாசமோ ஒரு பதிவு போட்டிருந்தார்.கவுஜக்கு எதிர்க் கவுஜ மாதிரி பத்து சட்னி வகைக்குப் பதிலா ஒரே சட்டினியில் பத்துவகை உணவு எப்படி செய்வது என்ற எதிர்ப் பதிவு இது:)

இட்லிக்கு கொத்துமல்லிச் சட்னி வீட்டிலோ அல்லது சரவணபவன் போன்ற ஓட்டல்களில் சாப்பிட்டுருப்போம்.இட்லிக்கு மட்டுமில்லாமல் கொத்துமல்லி சட்னியை மாற்று உணவுகளுக்கும் உபயோகப்படுத்துவது எப்படியென்பதை தயாரிப்பு முறையையும் பார்க்கப் போகிறோம்.இதைப் படிச்சோமா அடுத்த பதிவுக்கு தாண்டினோமான்னு இல்லாமல் நடைமுறையா அன்றாட வாழ்க்கையில் தினமும் அல்லது வாரம் இரண்டு மூன்று முறை உபயோகப்படுத்தப் போறீங்க.காரணம் என்னன்னா கொத்துமல்லி சட்னி இட்லிக்கு மட்டுமில்லாமல் எப்படியெல்லாம் மாற்று உணவுக்கும் உபயோகப்படுத்துகிறோம் என்பது மட்டுமல்லாமல் இது உங்கள் உடல் நலன் சார்ந்த இலவசம்..

இந்தியாவில் ஹெர்பல் எனும் தாவிரம் சார்ந்த மருந்துகளாய் அன்றாடம் காய்கறி,கீரை,கொத்துமல்லி,புதினா,வெங்காயம்,தக்காளி என உபயோகப்படுத்துகிறோம்.இதில் வெங்காய சட்னி,தக்காளி சட்னி, கொத்துமல்லி சட்னி என்பவைகள் போக பெரும்பாலும் வேகவைத்த பொருளாகவே உண்பதால் காய்கறிகள் விட்டமின் குறைபாடுகள் கொண்டு விடுகிறதென நினைக்கிறேன்.உதாரணத்துக்கு முட்டைக்கோசை KFCக்காரன் பண்ணுக்கு அரிந்தோ அல்லது மயனேஸ் சாலடுக்கோ உபயோகப்படுத்துவதை நாம் பொரியல் என்ற பெயரில் நன்றாக வதக்கி விடுகிறோம்.முழுவதும் வதக்குவதை விட பாதி வதக்கிய பதத்தில் உண்பது வித்தியாசமான ருசியாகவும்,நேரம் குறைவு,சத்து என்ற அடிப்படை விசயங்களும் அடங்கி இருக்கின்றன.கொத்துமல்லி சட்னிக்கும் இதே பார்முலாதான்.

அம்மாக்கள் அம்மி அரைச்சே அலுத்து விட்டார்கள்.இப்பத்தான் மிக்சி இருக்குதே!10 நிமிசத்துல அரைச்சு விடலாமே!ஏன் சொல்ல மாட்டாய்.24 மணி ஏர்கண்டிசன்ல உட்கார்ந்துகிட்டு வக்கணையா பதிவு போடற.மின்சார வெட்டுல லோல் படும் எங்களுக்கல்லவா மின்சார சிரமங்கள் தெரியும்ன்னு யாரோ மனசுக்குள் நினைப்பாங்கன்னு தெரிந்தும் உங்களுக்கு தெரிந்த கொத்துமல்லி சட்னியை சிபாரிசு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.காரணம் உங்கள் உடல்நலம் சார்ந்த சுகாதாரம் விசயம் என்பதோடு நேரம் மேலாண்மை (Time management),ஒரு பொருளின் பல உபயோகம் போன்ற நுணுக்கங்கள் இதில் அடங்கியிருக்கின்றன.மேலும் கமலஹாசன் இரண்டு மொக்கைப்படம் நடிச்சிட்டு ஒரு சீரியஸான படம் நடிக்கிறமாதிரி சீரியஸான பதிவிலிருந்து விலகி கொஞ்சம் மொக்கையும்,அதே நேரத்தில் உபயோகமான விசயங்களையும் சொல்லலாமே என்ற மாறுதலுக்காகவும் கூட.

வந்தோமா!ரெசிபி சொன்னோமோ,செய்முறை சொன்னோமான்னு போய்கிட்டே இல்லாமல் இது என்ன வந்து லொட லொடன்னு மிக்சி அரைக்கிறன்னு மனதுக்குள் திட்டுபவர்களுக்கு அதே! சட்னி மிக்சி சம்பந்தப்பட்டதென்பதோடு இந்த பதிவு உங்கள் உடல்,மன அழுத்தம் இன்னும் பல விசயங்கள் அடங்கியது.எனவே மோடி மஸ்தான் பாம்பை கீரியிடம் சண்டையிட விடுவது மாதிரி இன்னும் பல சொல்லி விட்டே கொத்துமல்லி சட்னி செய்முறை சொல்லப் போகிறேன்.

காலையில் அலுவலகம் போகும் அவசரத்துக்கு இட்லி சுட நேரமில்லையென்றோ தினமும் இட்லியா என்ற அலுப்புக்கும் கொத்துமல்லி சட்னி துணை நிற்கும்.


                                                        இந்தப் படம் சுட்ட இடம்


ஒண்டிக்கட்டை ஓட்டல் கனவான்கள் இதெல்லாம் பிரச்சினையான விசயமென்று ஓடி விட்டாலும் ரொட்டி ஜாம்ன்னு அலுத்துப் போன சாண்ட்விச்க்கு மாற்றாகவும் கொத்து மல்லி சட்னி இரண்டு சாண்ட்விச் போதுமா இன்னும் ஒன்னு வேணுமான்னு கேட்க வைக்கும்.ரொட்டி,பட்டர் ஜாம்க்கு பயந்து ஓடும் குழந்தைகளை வழிக்கு கொண்டு வர ரொட்டியோடவே சாப்பிடுவேனாக்கும் என்பதற்கும் கொத்துமல்லி சட்னி.சமையல் பிரியர்கள் நீலகிரி குருமான்னு ஒரு ரெசிபி கேள்விப்பட்டும், சமைத்தும் இருப்பீர்கள்.என் வழி குறுக்கு வழின்னு பதிவர் ராஜா நெத்தியில பொட்டு வச்சிக்கிற மாதிரி நீலகிரி குருமாவுக்கு குறுக்கு வழி கொத்து மல்லி சட்னி.மேலும் பிஷ் கல்தீரா (Fish Kaldera) என்று கோவா ரெசிபி ஒன்று உண்டு. பாம்ப்ரெட் மீன்(Pompret இது நம்மூர்ல என்ன பேரு?)வயிற்று நடுமுள்ளை அகற்றி அதற்குள் சட்னியை வச்சு திணிச்சு முழு மீனையும் பொரிச்சா பிஷ் கல்தீரா தயார்.

கோழி சாப்பிடனுமின்னா வழக்கமாய் "தகதகக் கதிரவனாக" சுட்ட கோழியோ, தந்தூரியோ அல்லது வழக்கமான மசாலாக்கலர் கோழிக்கு ருசி கூட்டவும் தேவை கொத்துமல்லி சட்னி.கண்ணுக்கு குளிர்ச்சி வேணுமா,மொட்டைத் தலையில் முடி வளருனுமா சாப்பிடுங்க சார் கொத்துமல்லி சட்னி (எப்படின்னு கேட்கிறவங்க இதுக்கு தனியா காசு கொடுத்து தாயத்து வாங்கி கட்டிக்கிடனும்:)

அடப் போங்க!தமிழகத்து ஆளுகளை மனசுல வச்சிகிட்டே நீ கலாய்க்கிற!நான் இருப்பதோ லண்டனில்,அமெரிக்காவில்ன்னு நினப்பவர்களுக்கு இந்த பதிவே உங்களுக்குத்தானுங்க!காரணம் நம்ம ஊர்ல பள்ளிக் குழந்தைகளுக்குத்தான் பட்டர் சாண்ட்விச்.உங்களுக்கோ காலை உணவே Butter,Toast,Fried egg and coffee.நாக்கே செத்துப்போச்சுன்னு புலம்புவீங்க!நீங்கதான் நமக்கு வருட சந்தாதாரரே.ஏனென்றால் காலையில சாப்பிட கொலாஸ்ட்ரல குறைக்க முட்டைய தூக்கி விட்டு டோஸ்ட்ல கொத்துமல்லி சட்னியை தடவி விடுகிறோம்.வார இறுதிப் பார்ட்டின்னா கெனாபில கூட சட்னியை தடவி விடலாம்.நண்டுப்பிரியர் குடுகுடுப்பை ஒருவேளை இந்தப்பக்கம் வந்தார்ன்னா அவருக்கும் தேவை கொத்துமல்லி சட்னி.

வேற யாரு கஸ்டமர்?சாம்பாருக்கு ருசி,ரசத்துக்கு மணம்,கஞ்சிக்கு தொட்டுக்க துவையல்ன்னு எல்லாவற்றுக்கும் ஒரே மருந்து கொத்துமல்லி சட்னி.இந்த மருந்து ரகசியத்தை எல்லோருக்கும் சொல்லித் தருவதில்லை.இங்கே கூடியிருக்கும் கூட்டத்துக்கு மட்டும் சொல்லித் தாரேன்.வீட்ல போய் செஞ்சு சாப்பிட்டுங்கின்னா அக்கா!போன அழகு திரும்பி வந்துடும்.அண்ணே!சம்சாரம் கோவிச்சுகிட்டு சமைக்காம குப்புறடிச்சுப் படுத்துகிட்டாலும் பிரிட்ஜை திறந்தோமா கொத்துமல்லி சட்னியை எடுத்தோமா நமக்கு பிடிச்சபடி அவசரத்துக்கு ரொட்டி அல்லது பழைய சோற்றுல பிசைஞ்சோமா,குழம்புல கலக்குனோமா கோவிச்சுகிட்ட மனைவியை சமாதானப் படுத்தி சாப்பிடக் கூப்பிட்டோமான்னு எல்லாவற்றுக்கும் உள்ள ஒரே லேகியம் கொத்துமல்லி சட்டினி.

வாங்கோ!வாங்கோ!சமையல் நுணுக்கத்தை பாருங்கோ!

தேவையான பொருட்கள்.

மிக்ஸி(ஆகா!இலவசத்துல ஏன் சேர்த்தின்னு இப்பத்தானே புரியுது)
மின்சாரம் ( இது இல்லைன்னா அம்மிக்கல்லு)
சம்சாரம் (இதுவும் இல்லைன்னா மச்சினி,அக்கா தங்கை,நண்பன் என யாராவது உதவிக்கு கூப்பிடவும்.இதுவும் இல்லைன்னா நளனாக்கும் நான் என்று கோதாவில் இறங்கிட வேண்டியதுதான்)
கொத்துமல்லி நாலைந்து பெரிய கட்டு (நாம் கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு வருகிற மாதிரி செய்து வச்சிக்கப் போகிறோம்)
புதினா (கொத்துமல்லி அளவுக்கு பாதியளவு)
கருவேப்பிலை( புதினாவில் பாதியளவு)

புளி ஒரு கைப்புடி உருண்டை (உணவு உற்பத்தியாளர்கள் நமக்குப் புரியாத பெயரில் நீண்ட நாட்களுக்கு உணவுப் பொருட்கள் கெடாமல் சேர்க்கும் தடுப்பான் நமக்கு இயற்கையாகவே புளியமரமா வந்து வாய்த்திருக்குது!பச்சை மிளகாய் இரண்டு (டாஸ்மாக் பார்ட்டிகள் ஊறுகாய் தொட்டுக்குவதில் பதில் இன்னும் கொஞ்சம் மிளகாய் காரம் சேர்த்து தொட்டுக்கவோ சைடு டிஸ்க்கு அல்லக்கையாக கூட  சட்னியை வைத்துக்கொள்ளலாம்.

நாடு சுத்துறவங்களுக்கு சூப்பர் மார்க்கெட் இருக்குது.தமிழகத்தில் வீட்டுக்குப் பக்கத்தில காய்கறி மார்க்கெட் இருக்குது.கிராமப்புறங்களுக்கு பசுமையா கொத்துமல்லி, கறிவேப்பிலை, புதினா, புளின்னு எல்லாம் கிடைக்கிற பொருட்கள்தான். ஒரு விழுது புளியை கொஞ்சம் தண்ணீரில் உறவிட்டு பாகு பதத்தில் எடுத்து வைக்க வேண்டும்.கொத்துமல்லி, கருவேப்பிலை, புதினா, இரண்டு பச்சை மிளகாய் நன்றாக கழுவி தண்டிலிருந்து அரிஞ்சு வைச்சுகிட்டா இனி அரைக்க வேண்டியது மட்டுமே வேலை.இலைகளை அரைக்க தனியாக நீர் சேர்க்காமல் புளிக்கரைச்சலையே உபயோகப் படுத்திக்கொள்ளலாம்.

இலவச மிக்சியோ காசு போட்டு வாங்கின மிக்சியோ வேகத்துக்கு தகுந்த மாதிரி 5 முதல் 10 நிமிடம் வரை அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமா அரைச்சு புளிக்கரைச்சல் மிச்சம் ஏதாவது இருந்தால் அதனையும் சேர்த்து ஒரு கலக்கு மிக்சியிலிட்டு எடுத்து வைத்துக்கொண்டால்

சாண்ட்விச்
தந்தூரிக்கு கம்பேனியன்(Accomplishment)
நீலகிரி குருமா
பிஷ் கல்தீரா
டாஸ்மாக் ஊறுகாய்
சாம்பார்
ரசம்
மோர்
டீ,சுக்கு காப்பில சேர்க்க முடியுமான்னு ஆராய்ச்சி செய்துட்டு சொல்றேன்.
இட்லி தோசைக்கு சட்னி
என அனைத்து கலவைக்கும் கொத்துமல்லி சட்னி தயார்.

பசங்க சும்மா இருந்தாலும்,அடுப்பங்கரையிலிருந்து சம்சாரத்தின் மின்சாரக் குரல்.பதிவை இணைச்சுடறேன்.

33 comments:

MANO நாஞ்சில் மனோ said...

வடை......

MANO நாஞ்சில் மனோ said...

பஜ்ஜி

MANO நாஞ்சில் மனோ said...

போண்டா

MANO நாஞ்சில் மனோ said...

தக்காளி

MANO நாஞ்சில் மனோ said...

தோசை

MANO நாஞ்சில் மனோ said...

மசாலா தோசை

MANO நாஞ்சில் மனோ said...

சாதா தோசை

MANO நாஞ்சில் மனோ said...

வெங்காய பஜ்ஜி

MANO நாஞ்சில் மனோ said...

தக்காளி சாதம்

MANO நாஞ்சில் மனோ said...

தயிர் சாதம்

MANO நாஞ்சில் மனோ said...

சிபி மாட்னான் ஹி ஹி.....

"என் ராஜபாட்டை"- ராஜா said...

சபாஷ் சட்னி சாரி சரியான போட்டி

"என் ராஜபாட்டை"- ராஜா said...

மனோ என்ன சர்வர்ராக மாறிட்டார்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில் ..

பல்சுவை வலைதளம் விருது

Chitra said...

டீ,சுக்கு காப்பில சேர்க்க முடியுமான்னு ஆராய்ச்சி செய்துட்டு சொல்றேன்.


..... ஆஹா... நல்ல ஆராய்ச்சி. முடிவு என்ன ஆனாலும், பதிவுல சொல்ல மறக்காதீங்க.... ஹா,ஹா,ஹா,ஹா....

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இந்த சட்னி இருந்தா கவலையே இல்ல.. ரொம்ப நல்லதுங்கரப்ப..வாங்கின கட்டை பசுமையா இருக்கப்பவே அரைச்சு டப்பால போட்டு அடைச்சிடலாம்.. இட்லிக்கும் தயிர்சாதத்துக்கும் இது சரியான ஜோடி ஆச்சே. எவ்ளோ பெரிய லெக்சர் குடுத்துட்டு இத்துனூண்டு ரெசிப்பி..:)

புளியமரமாவே கிடைச்சிருக்கு:)))

ராஜ நடராஜன் said...

மனோ!நம்ம கடைக்கு கூட 16 பேர் பின்னூட்டம் போடுறாங்களான்னு நினைச்சுகிட்டு வந்தா இட்லி,வடை,தோசை,சட்னி சூனியம் எனக்கும் வச்சிட்டீங்களே:)

ராஜ நடராஜன் said...

மனோ!சி.பி ஆனந்த விகடன் பவன்லருந்து வாங்கி சாப்பிடறார்.நம்மோடது அக்மார்க் வீட்டு சட்னியாக்கும்:)

ராஜ நடராஜன் said...

//Chitra said...

டீ,சுக்கு காப்பில சேர்க்க முடியுமான்னு ஆராய்ச்சி செய்துட்டு சொல்றேன்.


..... ஆஹா... நல்ல ஆராய்ச்சி. முடிவு என்ன ஆனாலும், பதிவுல சொல்ல மறக்காதீங்க.... ஹா,ஹா,ஹா,ஹா....//

ஹாய்!எப்படியிருக்கீங்க?நான் இப்பவே காபிக்கு பதிலா நண்பன் ஒருவரோட தொந்தரவுல DXN என்ற நிறுவனத்து காளான் காப்பியைத்தான் குடிச்சிகிட்டிருக்கேன்.சுக்கு,சட்னி காப்பி சாப்பிட்டு விட்டு முடிந்தால் DXN பதிவு போடும்போது சொல்லி விடறேன்.

ராஜ நடராஜன் said...

//முத்துலெட்சுமி/muthuletchumi said...

இந்த சட்னி இருந்தா கவலையே இல்ல.. ரொம்ப நல்லதுங்கரப்ப..வாங்கின கட்டை பசுமையா இருக்கப்பவே அரைச்சு டப்பால போட்டு அடைச்சிடலாம்.. இட்லிக்கும் தயிர்சாதத்துக்கும் இது சரியான ஜோடி ஆச்சே. எவ்ளோ பெரிய லெக்சர் குடுத்துட்டு இத்துனூண்டு ரெசிப்பி..:)

புளியமரமாவே
கிடைச்சிருக்கு:)))//

எனது பிளாக்குவதன் மகத்துவம் பதிவில் புற்றுநோய் போராளி பதிவர் அனுராதா பற்றி சொல்லியது நினைவில் வந்தது.

பதிவர் சித்ராவுக்கு சொன்ன மறுமொழியான DXN பதிவு எழுதும்போது இதுபற்றி குறிப்பிட விரும்புகிறேன்.

நாலே நாலு பொருட்களை வைத்து மிக்சில அரைக்கறத்துக்கு எவ்வளவு பெரிய ரெசிபி சொல்ல முடியும்!

நானாவது பரவாயில்லை படத்துல இணைத்திருக்கும் கமலா அவர்களின் தளத்தைப் பாருங்க,கொத்துமல்லி,புளி மட்டும் போதுமிங்கிறாங்க:)

ராஜ நடராஜன் said...

//"என் ராஜபாட்டை"- ராஜா said...

மனோ என்ன சர்வர்ராக மாறிட்டார்//

மனோ!பார் மேன் ராஜா!நீங்கதான் அவர்கிட்ட போகனும்.அவர் உங்ககிட்ட வரமாட்டார்:)

ராஜ நடராஜன் said...

//"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில் ..

பல்சுவை வலைதளம் விருது//

மனோவுக்கான பல்சுவை விருது அவருக்கு தகுதியானதே!எல்லா களங்களிலும் அடித்து ஆடுகிறார்.

Rathi said...

Enjoyed reading it.

அதுவும் சி.பி. செந்தில்குமாருக்கு எதிர்பதிவு என்றதும் ரொம்ப ஆர்வமா படிச்சேன் :)

செந்தில்குமார் கவனிக்கவும்

ராஜ நடராஜன் said...

//Rathi said...

Enjoyed reading it.

அதுவும் சி.பி. செந்தில்குமாருக்கு எதிர்பதிவு என்றதும் ரொம்ப ஆர்வமா படிச்சேன் :)

செந்தில்குமார் கவனிக்கவும்//

ரதி!சமையல் என்னமோ கொத்துமல்லி சட்னிதான்!ஆனால் இந்த பதிவுக்கு மோட்டிவ் அவரோட ஆனந்த விகடன் பவன் சமையல் பதிவுதான்:)

பாரத்... பாரதி... said...

ஆஹா.. உங்கள் எழுத்து நடையில் இன்றைக்கு புதிய சுவை...
ரசித்தேன்.. இது தொடருமா...

விக்கியுலகம் said...

மாப்ள பகிர்வுக்கு ஹிஹி நன்றி!

தவறு said...

ராஜ நட உங்க கொத்துமல்லி பதிவ எங்கவீட்டுக்கு தூக்கிட்டு போறேன்.

ராஜ நடராஜன் said...

//பாரத்... பாரதி... said...

ஆஹா.. உங்கள் எழுத்து நடையில் இன்றைக்கு புதிய சுவை...
ரசித்தேன்.. இது தொடருமா...//

சமையல்கட்டுலேயே உட்கார்ந்துக்க சொல்லாம சொல்றீங்க:)நம்ம ஊர் அரசியல்,காங்கிரஸ் கட்சியின் அன்னா ஹசாரே நிலையெல்லாம் பற்றிப் பேசும் போது கொத்துமல்லி சட்னி சாப்பிட்டும் ரத்தம் எகிறுதே!அதுக்கு என்ன செய்யறதாம்:)

ராஜ நடராஜன் said...

//விக்கியுலகம் said...

மாப்ள பகிர்வுக்கு ஹிஹி நன்றி!//

இது எப்ப இருந்து மச்சி:)

ராஜ நடராஜன் said...

//Blogger தவறு said...

ராஜ நட உங்க கொத்துமல்லி பதிவ எங்கவீட்டுக்கு தூக்கிட்டு போறேன்.//

தூக்கிட்டுப் போறது மட்டுமில்லை.சமையலில் அடிக்கடி சட்னி பார்முலாவை உபயோகியுங்க.சமையல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில கூட கொத்துமல்லி சட்னி பார்முலா மாதிரியே அடிப்படை மசாலா கலவை ஒன்றை செய்து வைத்துக்கொள்வதாகவும்,வாடிக்கையாளரிடமிருந்து மெனு தேவை வரும்போது சிக்கன் மசாலாவோ,மட்டன் கறியோ,வெஜிடபிள் கறியோ மசாலா பார்முலாவுடன் கொஞ்சம் மாற்றம் செய்து விடுவதாக சொன்னார்கள்.அவர்கள் பார்முலா வியாபார தொடர்புடையது.நம்ம பார்முலா உடல்நலம் சார்ந்தது:)

சார்வாகன் said...

வணக்கம் சகோ,
அருமையான் மணம் ருசி,சகோ சட்னி.
தொடருட்டும் இப்பணி
நன்றி

அம்பலத்தார் said...

சட்னியை நினைத்தாலே வாயூறுது.

ராஜன் said...

nalla pathivu.