Followers

Wednesday, August 24, 2011

கொனாசியர்

சாரு நிவேதிதா தேகம் புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் மதன் பாபுவின் குடும்பத்தின் மகிழ்ச்சியின் ரசனை பற்றிக் குறிப்பிடும் போது கொனாசியர் என்று மதன் பாபுவைப் பற்றிக் குறிப்பிட்டார்.கொனாசியர்(Connasseur)என்ற பதத்தை தமிழில் வேறு யாராவது உபயோகிப்படுத்தியுள்ளார்களா என்று தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. இந்த சொல் பிரெஞ்சிலிருந்து வருவதால் எனது eur உச்சரிப்பு தவறானதாகக் கூட இருக்கலாம்.பிரெஞ்சு தெரிந்தவர்கள் யாராவது சொன்னால் நல்லது.இல்லைன்னா யாருக்கும் தெரியவில்லையென கொனாசியர் சொற் பதத்திற்கு நானே உரிமை கொண்டாடுவேன்:)

 கொனாசியர் என்பது பெரும்பாலும் உணவு,டீ,பீர்,வைன்,கலை போன்ற ரசனைகளை குறிப்பிடப்படும் சொல்.இதனை தமிழில் உணவு ரசனையாளனை சாப்பாட்டு ராமன் என்றும் மது குடிப்பவனுக்கும்,எப்படி மது அருந்துவது என்று குடியை ரசிப்பவனுக்கும் வித்தியாசம் தெரியாமல் குடிகாரன் என சொல்லிக் கொச்சைப்படுத்தி விடுகிறோம்.(I advocate for a total prohibition in Tamilnadu or occassional drink if possible)பல உணவுகளை ரசித்தும் ருசித்தும் சாப்பிடுவது ஒரு கலை.ஆனால் டீ,பீர்,வைன் ருசிப்பவர்களுக்கு இந்த இலக்கணம் பொருந்தாது. காரணம் இவற்றை வாயில் கொப்பளித்து உமிழ்ந்த பின் நாசியில் உணரும் மணம்(aroma),நாக்கில் உணரும் உவர்ப்பு போன்ற ருசிகளை வைத்து தேயிலை, பீர்,வைன்களின் தரத்தைக் கண்டு பிடிப்பவர்களுக்கு கொனாசியர் என்று பெயர்.இன்னும் வேறு எந்த துறையில் இந்த சொற்பதம் உபயோகிக்கப் படுகிறதென்று கூகிளை கேட்டால் இந்தப் பெயரிலேயே பலான படம் இருப்பதாக தகவல் சொல்கிறார்.
 
டீயின் கசப்பை சுவைத்து டீயின் மதிப்பீடு செய்பவர்களை டீ டெஸ்டர் என்று தனியாக ஒதுக்கி விடுகிறார்கள்.எனக்கு ரெட் லேபிள்,லிப்டன் இரண்டு வகையான டீ கிடைக்கிறது.கட்டஞ்சாயா குடித்தாலும் சரி,அஸ்கா பால் சாயா குடிச்சாலும் சரி,லிப்டனின் ருசி நாக்கில் நிற்கும்.நெஸ்கபே மட்டுமே மார்க்கெட்டில் பரவலாகக் காணக் கிடைக்கிறது.துருக்கிய காபி அரேபியர்களுக்குப் பிடித்தமான காபி.பிரேசில்,கொலம்பியா போன்ற காபிகள் சூப்பர் மார்க்கெட்டில் கிடைத்தாலும் தேடிக்கண்டு பிடிக்க வேண்டும்.நம்ம சேட்டன் கடையில் 150Fil(ரூ.25) குடிக்கும் நெஸ்காபியை கொஞ்சம் கெபசினோ, கிரிம், சாக்லெட் கலந்து ஸ்டார்பக்ஸ் காரன் 1.500 தினாருக்கு(சுமார் IRS.250) விற்று விடுகிறான்.எனவே 10 காபி குடிக்கலாமே என்ற எண்ணத்தில் குறிப்பிட்ட பேர்களே  ஸ்டார்பக்ஸ் அருந்துகிறார்கள்.

எனது நண்பன் ஒருவர் நீண்ட நாட்களாக மது அருந்துபவர்.பாட்டிலை திறந்ததும் வரும் நெடி அல்லது கிளாசில் ஊற்றியதும் வரும் வாசத்தை நுகர்ந்தே சரக்கு எப்படியென்று சொல்லி விடும் வல்லமை உடையவர்.உணவுப் பிரியர்.சமீபத்தில்  நடிகர் மோகன்லால் தனது விருப்பங்களில் ஒன்றாய் ஓவியங்களை சேர்ப்பது பற்றிக் கூறியிருந்தார்.அவரது கலைப்பொருட்கள் (Antiques) தேடலும் கூட கொனாசியர்தனமே.முன்பு காபி வித் அனு பதிவில் Koffe with karen என்ற இந்தி நடிகர்களின் கலந்துரையாடல் பற்றி சொல்லியிருந்தேன்.ராஜ் கபூரின் மகன்களான ரந்தீர் கபூர்,ரிஷி கபூர்,ராஜிவ் கபூர் மூவருடன் ரிஷி கபூரின் மனைவி நீட்டு சிங் உரையாடிய நிகழ்வைக் காண நேர்ந்தது.காலை உணவு(நாஸ்டா) நேரத்திலெயே மதியம் என்ன சாப்பிடலாம் என்று திட்டமிடுவதாகவும்,மதிய உணவு வேளையில் இரவு உணவுக்கு மெனு தயாரித்து விடுவதாகவும்,நீண்ட கூட்டுக் குடும்பமாகவும் வாழ்வதால் தங்களுக்குள்ளேயே கும்மியடித்து மகிழ்வதாகவும்,ராஜ் கபூரின் மனைவி கிருஷ்ணாவுக்கு நகைச்சுவை ரசனை அதிகம் என்றும் குறிப்பிட்டார்கள்.அனைவரின் உப்பிப் போன உடம்பும் உணவு பற்றிய சிந்தனையும் கூட கபூர்களை கொனாசியர் பேர்வழிகள் என்றழைக்கலாம். பல்லு இருக்குறவன் பக்கோடா திங்கிறான் பதிவுலகப் பழமொழிக்கு அர்த்தம் இப்பொழுதுதான் புரிகிறது:)

சமையல் ரெசிபிக்கும் அடுப்பாங்கரை அனுபவங்களுக்கு மிடையான பல நுணுக்கங்கள் ஆராயப்படுவதில்லை யென்றாலும் அசராமல் சமையல் பதிவுகள் போடுபவர்களும் கூட கொனாசியர் ரசனையாளர்களே.வீட்டில் மனைவியின் சமையலைப் புகழ்ந்து என்னமா சமைக்கிறேன்னு புகழ்ந்தோ வஞ்சப் புகழ்ச்சியாக கூட புகழ்ந்து ருசித்து சாப்பிடுவர்களும் கொனாசியர்களே:)சில சமயம் சமையல் நல்லாயில்லையென்று சொல்லி என்னை மாதிரி வாங்கிக் கட்டிக் கொள்பவர்களை கோணாசியர்கள் என்று  வேண்டுமானால் இனிமேல் அழைக்கலாம். வாங்கி கட்டி இப்ப பாடம் கற்றுக்கொண்டு விட்டதால் நானெல்லாம் அடுத்த வகுப்புக்கு புரமோசனாகி விட்டேனென்ற குறும் தகவலையும் சொல்லி வைக்கிறேன்:) தொலைக்காட்சியில் பாட்டுப்போட்டிக்கு சரிகமபதநி யெல்லாம் கரைச்சுக்குடிச்சு தயாரா வந்து எல்லோரையும் அசத்தும் புதுப்பாடகர்களை நொள்ளை சொல்லும் அனுபவ இசை மேஸ்திரிகளான நீதிபதிகள் மாதிரியானவர்கள் கொனாசியர்களா கோணாசியர்களா என்று பட்டிமன்றம் வைக்கலாம்!முன்பு ஒரு முறை இப்போது களத்தில் காணாத பதிவர் குடுகுடுப்பை அமெரிக்க நண்டு சமையல் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.நண்டு சாப்பிட்டாலும் நடுத்துண்டு நமக்குன்னு ருசிக்கும் ரசனையும் கொனாசியர் இலக்கணத்துக்குள் வந்து விடும்.எழுத்தின் மீதான காதலும்,ரசனையாளர்கள் கூட கொனாசியர்களே.நடிப்பு மீதான காதல் கொண்ட சிவாஜி,கமல் போன்றவர்கள் கொனாசியர் பட்டியலில் சேர்க்கப் படவேண்டியவர்கள். வாழ்க்கையை ரசிப்பவர்கள்,ருசிப்பவர்கள் மகத்தான கொனாசியர்கள். சுப்ரமணி பாரதி தாத்தா நினைவில் வந்து போகிறார். 

டிஸ்கி:கொனாசியரும் கொத்துமல்லி சட்னியும் என்று ரிதமாக தலைப்பு வைக்கலாம் என்று நினைத்தேன்.தலைப்பு கூகிளிக்குள் இடம் பிடிக்க வேண்டுமென்பதால் சுருக்கி விட்டேன்.அடுத்து கொத்து மல்லி சட்னி பற்றி பார்க்கலாம்.சமையல் பதிவர்கள் எங்க ஏரியாவுல வந்து இப்படி மொக்கை போடுறீயேன்னு கோபித்துக்கொள்ள வேண்டாம்:)பதிவுகளில் சமையல் பகுதி ஏன் பின்கட்டைப் பிடித்துக்கொள்கிறது?வெறுமனே ரெசிபி மட்டும் சொல்வதனாலா என்ற மரபை முறிக்கும் முயற்சியாகக் கூட மொக்கைகள் கலந்த சமையல் பதிவுகளை சொல்ல விரும்புகிறேன். 

பட உதவி:
http://en.wikipedia.org/wiki/File:Mona_Lisa,_by_Leonardo_da_Vinci,_from_C2RMF_retouched.jpg 


http://en.wikipedia.org/wiki/File:Produits_r%C3%A9gionaux_-_photo_CPPR.jpg

10 comments:

Philosophy Prabhakaran said...

ன்னள்ளதொரு சொல்லாராய்ச்சி...

ராஜ நடராஜன் said...

//Blogger Philosophy Prabhakaran said...

ன்னள்ளதொரு சொல்லாராய்ச்சி...//

அவசரமா டைப்பிட்டு தூங்கப் போகப்போறீங்க போல இருக்குதே:)

பட்டாபட்டி.... said...

சமையல் பதிவர்கள் எங்க ஏரியாவுல வந்து இப்படி மொக்கை போடுறீயேன்னு கோபித்துக்கொள்ள வேண்டாம்:)
//

அடுத்து வத்தக்குழம்பாண்ணே?..!!
ஹி..ஹி

JOTHIG ஜோதிஜி said...

இணைப்பு கொடுக்கும் போது அதை லிங்க் என்ற பட்டனுடன் சேர்த்து இணைத்து விட்டால் குறிப்பிட்ட பகுதிக்கு அழைத்துச் செல்லும்.

இன்னும் கூட பத்தி பிரித்து போடலாம்.

மற்றபடி இந்த பேரே சற்று கவர்ச்சியாக இருப்பது போல இருக்கிறது.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

சொற்த்தேடல்.வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

//பட்டாபட்டி.... said...

சமையல் பதிவர்கள் எங்க ஏரியாவுல வந்து இப்படி மொக்கை போடுறீயேன்னு கோபித்துக்கொள்ள வேண்டாம்:)
//

அடுத்து வத்தக்குழம்பாண்ணே?..!!
ஹி..ஹி//

பட்டு!எப்படியிருக்கீங்க!சிக்ஸர் அடிக்க திரும்ப வந்துட்டீங்க போல இருக்குதே!ஆனால் கலைஞர் மாதிரி பந்து போடறதுக்கு இப்ப ஆட்கள் இல்லையே!என்ன செய்யப் போறீங்க:)

அடுத்து கொத்துமல்லி சட்னி:)

ராஜ நடராஜன் said...

//JOTHIG ஜோதிஜி said...

இணைப்பு கொடுக்கும் போது அதை லிங்க் என்ற பட்டனுடன் சேர்த்து இணைத்து விட்டால் குறிப்பிட்ட பகுதிக்கு அழைத்துச் செல்லும்.

இன்னும் கூட பத்தி பிரித்து போடலாம்.

மற்றபடி இந்த பேரே சற்று கவர்ச்சியாக இருப்பது போல இருக்கிறது.//

ஜோதிஜி!தேவையானவற்றுக்கு லிங்க் கொடுக்கவே செய்கிறேன்.உங்கள் பத்தி பிரிக்கிற ஆலோசனை கேட்டே ஆகவேண்டும்.கூடவே எந்த Font தேர்ந்தெடுத்தாலும் அலைன்மெண்ட் தொந்தரவு வருது.யாராவது ஆலோசனை சொல்லுங்களேன்!

என்னது!கவர்ச்சியா!புதுசா வர்றவங்க யாரும் கொனாசியா ன்னு பேர் வச்சிகிட்டு வந்துடப் போறாங்க:)

ராஜ நடராஜன் said...

//நண்டு @நொரண்டு -ஈரோடு said...

சொற்த்தேடல்.வாழ்த்துக்கள்.//

ராஜசேகரன் சார்!தொடர் ஆதரவுக்கும் ஒரே மன ஓட்ட பயணத்துக்கும் நன்றி.

Kannan said...

பகிர்வுக்கு நன்றி.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

ராஜ நடராஜன் said...

//Kannan said...

பகிர்வுக்கு நன்றி.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com//

கடையிலே சூடா காமெடி புதுசா இருக்குதா இல்ல நேத்து போட்ட பஜ்ஜியா:)