Followers

Monday, December 7, 2015

கமலின் மறு அறிக்கையும் கொஞ்சம் சித்த வைத்தியமும்

இந்த பதிவுக்கு கமல் அவர்கள் சம்பந்தமில்லையென்ற போதிலும் இதுவரைக்கும் அவர் மீதான விமர்சனங்களுக்கு பதிவின் காரணமாக நானும் பின்னூட்ட நண்பர்களும் காரணம் என்பதால் முந்தைய பதிவை படிச்சிட்டு  பின் வைத்தியம் பாருங்கள்.

நந்தவனத்தான்!நம்ம பின்னூட்ட விமர்சனங்கள் இல்லாமலும்,படிக்காமலும் கமல் மறு அறிக்கை விட்டிருக்கிறார்.இப்ப என்ன பண்ணுவீங்க!

காளமேக புலவரின் பேரன் பழமை பேசி என்(னை)ன நினைச்சுகிட்டு புல்லுருவி என்றாரோ அதையும் சேர்த்து படிச்சிருங்க.எனக்கும் பதிவுக்கும் சம்பந்தமில்லைன்னு டிஸ்கி வேற போட்டதால் எனக்கு கொஞ்சம் சந்தேகமாவும் இருக்குது:). 

நம்பள்கி விளையாத தரிசு நிலம்! அதை நான் சொல்லலை என்கிறார். பழமை மருத்துவம் சொல்கிறார். தப்பி தவறி பெண்கள் யாராவது இந்தப் பக்கம் வந்தீங்கன்னா குறிப்பெடுத்துக் கொண்டு அறிந்தவர்கள் யாருக்காவது தேவையிருந்தால் உடுமலை கடையை நாடவும்.

முன்பெல்லாம் உடற்பயிற்சி மட்டும் செய்து வந்தும் எப்பவாவது ஹலோ சொல்ல கொஞ்சம் இருமல் தலைவலி வந்து விடும்.தலைவலிக்கு கொஞ்சம் தூக்கமோ அல்லது ஒரு பெனடால் எனும் தலைவலி மாத்திரை போட்டால் சரியாகி விடும்.இருமலும் அப்படியே. இதுவரையிலும் பெரும் நோயில் படுத்து கிடக்காமல் இயந்திரம் ஓடுகிறது. ஆனால் யோகா உலக தினத்திற்கு சில மாதங்கள் முன்பிருந்தும் பின் தொடர்ந்தும் முடிந்த வரை தியானப் பயிற்சியும்,மூச்சுப்பயிற்சியும் தொடர்வதால் எப்பவாவது ஹலோ சொல்லும் இருமலும்,தலைவலியும் சுமார் ஒரு வருடத்திற்கும் மேலாக விடுப்பில் போய் விட்டது. 
எனது நண்பர் ஒருவர் தொழுகையையும்,யோகா பயிற்சியையும் சேர்த்தே செய்வதாக சொன்னார்.

எனது அனுபவத்திலிருந்து சொல்வது

1.தினமும் கட்டாய உடற்பயிற்சி
2.மூச்சு பயிற்சி
3.மனதை ஒரு நிலைப்படுத்தும் தியானம்

மூன்றாம் நிலை கொஞ்சம் சிக்கலானது என்னைப் பொறுத்தவரை.காரணம் சும்மா இருந்தா அதுபாட்டுக்கு எங்கேயாவது ஓடிகிட்டிருப்பதை கட்டிப்போடப் பார்த்தால்தான் எகிறி குதிக்கிறது.

வாழ்க்கையிலும்,இப்போதைய மழை இழப்பிலும் பெரும் மன அழுத்தங்கள் பலருக்கும் வரும்.ஆண்கள் டாஸ்மாக் தேடிப்போக கூடும்.ஆனாலும் சொன்ன மூன்றையும் கடைபிடிக்க முயலுங்கள். உடல் பருமன் குறைக்க சிறந்த வழி சைவ உணவும்,இந்திய காற்றும்.அசைவ உணவிலிருந்து உடல் விடுபட்டு விட்டால் சைவ உணவையே மனம் விரும்பும். எதுவும் பழக்கம் என்பதை அசைவத்திலிருந்து சைவத்துக்கு மாறி மனைவியின் இரட்டை சமையல் சிரமத்துக்கு பயந்து மீண்டும் அசைவத்திற்கு மாறியதில் இப்பொழுது சைவம் ஒட்டிக்கொள்வதில்லை மீண்டும்.

மழை காரணமாக தொற்று நோய்கள் வர வாய்ப்பிருக்கிறது. தேங்காய் எண்ணையை உடல் முழுவதும் தேய்த்துக் கொள்ளலாம்.
அலோபதிக்கு மருந்தை விட தேன்,மிளகு கலவையை உட்கொள்வது இருமல் மூச்சு இரைச்சலை குறைக்கும். முடிந்தால் கட்டஞ்சாயாவில் மிளகு,இஞ்சு கசாயம் செய்து சர்க்கரைக்கு பதிலாக தேன் கலந்து குடிக்கலாம். பால் கிடைக்காத சூழலில் இந்த தேநீரே உடலுக்கும் நல்லது.தமிழகத்தில் இயற்கையாக வாழ பல வாய்ப்புக்கள் இருக்குது.கொஞ்சம் முயன்றால் பழகி விடும்.

முடியாமல் படுக்கையில் கிடப்பவர்களுக்கும் முக்கியமாக வயதானவர்களை முதுகு எப்பொழுதும் தரையில் படும்படி படுக்க வைக்காதீர்கள். அது கிடைப்புண்ணை உருவாக்கி விடும். சின்ன விசயமென்றாலும் சிலருக்கு தெரிவதில்லையென்ற அனுபவத்தில் சொல்கிறேன்.

18 comments:

ssk tpj said...

மூன்றாவது எப்படி செய்வது? எதாவது வழிமுறை?

தவறு said...

வணக்கம் டாக்டர்..:)) நிச்சயமாக நீங்கள் சொல்வது மாதிரி நடந்தால் நோய் அவ்வளவு சீக்கரம் எட்டிப்பார்க்காது.

வேகநரி said...

அவரின் மறு அறிக்கை பற்றிய உங்க தகவல் "கமலின் வெட்கமும் அரசின் அறிக்கையும்" என்ற உங்க பதிவில் கிடைத்ததுமே அங்கேயே அதற்கு கருத்து தெரிவித்துவிட்டேன்.
இப்படியே உங்க ஆரோக்கிய குறிப்புகளை எடுத்து விடுங்கோ. நான் ஏன் ஓடி வருகிறேன் என்று தெரிகிறதுல்லவா:)
உங்கள் அழகு தமிழுக்காகவும் தான். ஆனா நம்பள்கிக்கு என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை
//எனது நண்பர் ஒருவர் தொழுகையையும் யோகா பயிற்சியையும் சேர்த்தே செய்வதாக சொன்னார்.//
நல்லது அமெரிக்காவில் உள்ள உங்க திராவிட வஹாபி பங்காளிக்கும் இதை எடுத்து சொல்லுங்கள்.

ராஜ நடராஜன் said...

ssk! வணக்கம் நான் முழு பயிற்சியாளன் அல்ல. மேலும் வேதாந்திரி ஆஸ்ரமத்தில் பயிற்சி யாருக்கும் சொல்லிக்கொடுக்க கூடாது என்று வேறு வாக்கு வாங்கியிருக்கிறார்கள்.யூடியுப்பில் தியான பயிற்சிக்கு நிறைய காணொளிகள் உள்ளன. உடற்பயிற்சி எப்படி செய்வது என்பதை வேதாந்திரி யோகா யூடியுப்பை தேடிக் கண்டு பிடிக்கவும். நேரக் குறைவு காரணமாக தேடி ஒட்ட வைக்க முடியவில்லை.மன்னிக்கவும்.முழு பயிற்சிக்கு ஆழியார் வேதாந்திரி திருக்கோயிலை அணுகவும்.வெளி உலகம் தெரியாத ஒரு சுகமான அனுப்வம் அது.

எனது பங்காளி இந்தப் பக்கம் வந்தால் மன்னிக்கவும் கீதையை தொடுவதற்கு.அடிப்படையில் நான் நாத்திகன். பகவத் கீதையின் ஆறாம் பாகத்தில் தியான யோகம் எப்படியென்பதை குறிப்பிடுகிறது. அதுதான் உண்மையென நான் நாசி துவார நுனியில் கவனம் வைத்தேன் பல வருடங்களாக. ஆனால் கற்றுக்கொண்ட யோகம் கண் இரு விழிகளுக்கும் இடையில்தான் மூன்றாம் கண் என்கிறது.

ராஜ நடராஜன் said...

வாங்க தவறு.மீள் வருகைக்கு நன்றி.உலக யோகா தினத்தில் மூச்சுப்பயிற்சி எப்படியென மோடி படத்தைப் போட்டு பிலிம் காட்டினார்கள். என் கவனமெல்லாம் பயிற்சி செய்த பெண்ணின் வளைவுகள் மீதே இருந்தது. ஆனால் சொந்தமாக பயிற்சி செய்யும் போது மூச்சு,நினைவு இரண்டையும் அடக்க நினைக்கும் போது ஓரளவுக்கு வெளி நினைவுகள் எட்டிப்பார்ப்பதில்லை. அப்படியிருந்தும் மனம் எங்காவது ஓடி உட்கார்ந்து கொள்ளும்.மறுபடியும் மூச்சு இழுத்து நினைவை கண்,மூளைக்கு கொண்டு வந்து இறுதியாக சாந்தி யோகத்தில் முடிக்க வேண்டும்.

ராஜ நடராஜன் said...

வேகநரி!அழகு தமிழ் என்று ஒரு உற்சாக மாத்திரை தந்ததற்கு நன்றி. எனக்கே சில சமயம் வந்து விழும் சொற்கள் என்னுடையதுதான என்று தோன்றும். பலவருடங்களாக தமிழை பேசாமல்,எழுதாமல் தமிழ்மணம் வந்த பின் கற்றுக்கொண்ட சிறு பயிற்சி இது. முழு நேரம் எழுத நேரம் கிடைத்தால் இன்னும் கொஞ்சம் எல்லைகளை தொட்டுப்பார்க்கலாம்.

நம்பள்கி கொஞ்சம் கவிச்சை மொழியில் சொல்கிறாரே ஒழிய அவரது கருத்துக்களும் ஒரு பொருளின் மறுபக்கம்தான். நீங்கள் எந்த பதிவைப் பற்றி சொல்கிறீர்கள் என்று எனக்கு இப்ப குழப்பம்:)

நண்பரின் தொழுகையும் யோகாவும் தாண்டி நிறைய சொன்னார்.இன்னும் சொல்கிறார். அவரைப்பற்றி தனிபதிவே போடுமளவுக்கு விசயங்கள் உள்ளது. நல்ல மனிதர்.நாம் வகாபியிசம் பேசும் காலம் வந்தால் அவரைப்பற்றி கதைப்போம்.

Amudhavan said...

பரவாயில்லை. கமலஹாசன் மாதிரியே யாருக்கும் எதுவுமே புரியக்கூடாது என்றே பேசும் மொழி உங்களுக்கும் நல்ல கைவசம் ஆகியிருக்கிறது. பாராட்டுக்கள்.

ராஜ நடராஜன் said...

அமுதவன் சார்!நலமாக இருக்கீங்களா! எனது எழுத்து வாசனை ஜெயகாந்தன்,சுஜாதாவில் துவங்குகிறது.சுஜாதா கணேஷ்,வசந்த் கிண்டலுக்கும்,தெரியாத ஆங்கில வார்த்தைகளை கொஞ்சம் தமிழில் கற்றுக்கொடுத்ததற்கும். ஜெயகாந்தன் முன்னுரை புரிபவர்களுக்கு கமலின் சொல் வித்தை புரியும்.நான் இன்னும் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

கமல் தவழ்ந்து,நடந்து,ஒல்லிக்குச்சி உடலை பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் பொறாமைப்படும் படி வளர்த்து இயக்குநர் பாலசந்தரின் கதைக்களங்கள்,சிவாஜிக்கு பின் நடிப்பையும் கற்றுக்கொண்டு 15 வயதினிலே வந்து சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து கொண்டார்.சினிமா தெரியாத வயதில் இப்படித்தான் சென்னை மழை மாதிரி கோவையில் ஒருநாள் கோவை ரயில்வே ஸ்டேசனிலிருந்து ராயல் தியேட்டர் வரை அரைக்கால் டவுசருடன் நானும் நண்பனும் தொடை வரை மழைத்தண்ணீர்ல் நடந்து போய் படம் பார்த்தோம்.சில தமிழ் படம் பார்த்தால் இசைக்காகவோ,சிரிப்புக்காகவோ,ஒளிப்பதிவுக்காகவோ கண்,காது லயம் பாடும். என்ன சொல்ல வருகிறார் என்ற மூளை நாளங்களை உருட்டும் வித்தை எத்தனை பேருக்கு வசப்படுகிறது. .இருக்கும் போதே மதிக்கப்பட வேண்டிய மனிதன் கமல்.விஸ்வரூபம் தொட்டு அவர் விமர்சனத்துள்ளாவது தமிழர்கள் வருத்தப்பட வேண்டிய ஒன்று.

நந்தவனத்தான் said...

@ராசநட
கமல் சில நாட்களுக்கு முன்பு கலைஞரும் ஒரு விழாவில் பங்கேற்றதும், அப்புறம் இந்த அறிக்கை இதையெல்லாம் கண்டு இந்த ஆளுக்கு என்னடா இது தீடீரென இம்புட்டு தைரியம் என நினைத்தேன். ஒபிஎஸ் அறிக்கை படித்ததும் ஆளுக்கு மப்பு இறங்கிவிட்டது என நினைக்கறேன். விஸ்வரூபம் ரிலீசுக்கு பட்டபாடு நினைவிற்கு வந்திருக்க வேண்டும். டாகுடர் வேறு போன் செய்து தலைவாவை ரிலீசுக்கு பட்ட பாட்டினை விவரித்திருக்கவேண்டும். அடுத்தபடம் ரீலீசு ஆக வேண்டாமா என்ற பயத்தில் அடித்துவிட்டார் பல்டி.

ஒபீஎஸ் அறிக்கைக்கு முன்னால் இந்த அறிக்கை வந்திருந்தால் இதை நம்பியிருப்பேன். இரண்டு நாள் தூங்கிவிட்டு ஒபீஎஸ் அறிக்கைக்குபின் புலம்பி இருப்பதால் இந்த சந்தேகம்.இதே மாதிரி தாத்தா முன்பு அஜித் வீரவசனம் பேசிவிட்டு பின்பு அடுத்தநாள் போய் அவரின் காலில் விழிந்தது (விழவைக்கப்பட்டது) ஞாபகம் வருகிறது. ஆத்தாவும் தாத்தாவும் சாதாரண ஆட்களா என்ன? கமல் ஆத்தாவுக்கு காம்பமரைஸ் செய்கிறார். ஜெயமோகன் கமலுக்கு காம்பரமைஸ் செய்கிறார்... இப்படி தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரம் இருக்கிற லட்சணத்தில் சமரசமற்ற உண்மையான கருத்து சொல்லும் ஆட்கள் யாருமில்லை. இந்த அறிவுஜீவிகளை நம்பிதான் தமிழ்நாட்டு சனம் இருக்கிறது, பாவம்!

ராஜ நடராஜன் said...

நந்தவனம்!உங்ககிட்ட ஒரு எதிர்க்கேள்வி போடுறேன். ஒரு வேளை...ஒரு வேளை... இப்போதைய மழை அரசியலும் 2015ல் திருப்பி போட்டுடுச்சுன்னா? ஒன்று மீண்டும் விவகாரம்,வில்லங்கம் உருவாக்க வேண்டாம் என்று கமல் டிப்ளமெட்டிக்காக செயல்படலாம்.அல்லது அவரது மனம் அறிந்து மறு அறிக்கை உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் இவர் கலைஞர்,வைரமுத்துவிடம் குசலம் விசாரித்ததில் மேடம் கடுப்பானதுக்கு வாய்ப்பு இருக்குது. ஓ.பி.எஸ்க்கெல்லாம் சுயமாக அறிக்கை தயாரிக்கும் புத்திசாலித்தனமும் தெம்பும் இல்லை என்பது நிச்சயம்.

ஆனால் நாம் பேசிகிட்டபடி அவரது நற்பணி மன்றம் களத்தில் இருந்து பேசினால் நன்றாக இருக்குமே என்பதை யாரோ அவருக்கு போட்டுக்கொடுத்தாங்களோ அல்லது அவராகவே களத்தில்தான் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்துவது ஆறுதலான விசயம்.

நாம் என்னமோ தூரத்திலிருந்துகிட்டு கருத்து சுதந்திரம் பற்றியெல்லாம் அங்கலாய்க்கிறோம்.தமிழகத்தின் அரசு இயந்திரங்க்ள் செயல்படுவதை பார்க்கனுமே.ஒவ்வொரு துறையும் சின்ன சின்ன குறுநில மன்னர்கள்.சார்!நான் பஞ்சம் பொழக்கிற பரதேசி என்.ஆர்.ஐ ஒரு இருப்பிட சான்றிதழ் கொடுங்கன்னு கெஞ்சுவதிலிருந்து இந்திய தூதரகத்தில் வாங்கிய POA செல்லாது என்கிற ரிஜிஸ்டரார்,கோவைப்பக்கம் செருப்பை கழட்டி வச்சுட்டு உள்ளே வாங்கன்னு சூ கழட்டாத நம்ம பழக்கத்துக்கு ஆப்பு வைக்கும் வரை சண்டை போடாமல் வாய் திறவாமல் காரியம் சாதிக்க வேண்டியிருக்கிறது.இதில் கழக தலைமைகளை கறபனை கூட செய்ய இயலவில்லை.
தமிழ்நாட்டு சனங்களை குறையெல்லாம் சொல்ல வேண்டாம். பன்னாட்டு குணாதியங்களை காணும் எனக்கு இங்கே தமிழர்கள் வம்பு தும்புக்கு போகாதவர்கள்.இந்தி மிஷ்கின்(பாவம்) என்பான் அரபி:(அறிவுஜீவி தனத்திலா வாழ்க்கை இயந்திரம் ஓடுகிறது வெள்ளைக்காரன் போட்டு வைத்த அரசு இயந்திரத்தில் அல்லவா ரயில்வே நிலையம்,நீதிமன்ற வளாகம்,அரசாளும் ஜார்ஜ் கோட்டை,கிழிந்த பைல்கள்,சட்ட சரத்துக்கள்,கல்விமுறை இன்னோரன்ன.

நந்தவனத்தான் said...

//இருக்கும் போதே மதிக்கப்பட வேண்டிய மனிதன் கமல்.விஸ்வரூபம் தொட்டு அவர் விமர்சனத்துள்ளாவது தமிழர்கள் வருத்தப்பட வேண்டிய ஒன்று.//

இது உமக்கு ஓவராக படலயா? ஆஸ்கார் நாயகனென தனக்குதானே வைச்சிகிட்ட பெயருக்கு ஏற்ப ஆஸ்கார் வாங்கட்டும், மதிக்கறோம். இல்லைனா அமெரிக்க புரடியூரிடம் கத சொல்லி ஒகேவான ஹாலிவுட் படத்தை எடுத்து உண்மையிலேயே உலகநாயகன் ஆகட்டும், மதிக்கிறோம். அட இது எதுவுமே முடியலன்னா தூங்காவனம் வரைக்கும் செஞ்சாமாதிரி உலகபடத்தை சுட்டு எடுப்பதை முற்றிலும் நிறுத்திட்டு சொந்தமா மட்டும் படம் எடுக்கட்டும், நிச்சயமா மதிக்கிறோம்.

பிரபுதேவா பிரபலமாக இருந்தபோது அவரைப் பற்றி கொஞ்சமும் மனசாட்சியில்லது ஒரு பேட்டியில் கமல் சொன்னார் - ஆடுவது பெரிய விசயமே அல்ல. பிரபுதேவா அமெரிக்காவில் இருந்திருந்தால் யாரும் சீந்தமாட்டார்கள், அங்கு தெருவுக்கு தெரு இப்படி பல ஆட்டக்காரர் இருக்கிறார்கள். அவர்கள் அமெரிக்க தெருக்களேயே மிகவும் சாதரணமாக ஆடிக்கொண்டிருப்பதை பார்க்கலாம். இது கமல் தினமும் தினமும் தனக்கு தானே சொல்லிக்க வேண்டிய விடயம்!

பழமைபேசி said...

//என்(னை)ன நினைச்சுகிட்டு புல்லுருவி என்றாரோ//

pls read OPS statement again Sir!!

நந்தவனத்தான் said...

// ஒரு எதிர்க்கேள்வி போடுறேன். ஒரு வேளை...ஒரு வேளை... இப்போதைய மழை அரசியலும் 2015ல் திருப்பி போட்டுடுச்சுன்னா?//

மீன்ஸ் வாட்? வரவர பின்நவீனத்துவ எழுத்தாளர் மாதிரி ஆயிட்டீங்க. எழுதறதல பாதி பிரியமாட்டீங்குது!
---
ஓபீஎஸ் எனும் முதன்மை அடிமைக்கு தன்னிச்சையாக மூச்சுவிடக்கூட அனுமதியில்லாத போது அறிக்கையாவது ஒண்ணாவது. எல்லா அம்மாவின் திருவிளையாடல்தான். கமல் எவ்வளவு கொடுத்தார், ரஜினி எவ்வளவு என கேட்கும் அடிமைகள் தமிழ்நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களான கருணாநிதியும், ஜெயலலிதா-சசிக்கலாவும் எவ்வளவு கொடுத்தார்கள் என கேட்கவே இல்லை.கமலிடம் ரசிகர் மன்றம் என்ற அமைப்பு இல்லை. ஆகவே அவர் காசுதான் கொடுத்திருக்க வேண்டும். அதை கொடுக்க அவருக்கோ பிற சக பிரபல நடிகர்களுக்கே மனமில்லை. ஆனால் ஆரியர்களும் பிற திராவிடர்களும் சிங்களவரும்கூட தருகிறார்கள். தமிழகத்தில் வசைப்பாடபடும் மோடி அரசு செய்த அளவுகூட ஆத்தா அரசு செய்யவில்லை. இதைத்தான் 'யாரும் ஊரே யாவரும் கேளிர்' என அன்றே நம்மாளு சொல்லிவிட்டான்.

கமல் டிப்ளமேட்டிக்காவோ எப்படியோ நடக்கட்டும். அவரது படத்தை ரிலீஸ் செய்வதை ஆத்தா நாளை தடுத்தால் அவர்தான் சமாளிக்கவேண்டும். அதே நேரத்தில் இவர்கள் போடும் தமிழ், தமிழ்நாடு,ரசிகர்கள் என்று சீன் காரணமாகவே இவர்கள் மீது எதிர்பார்ப்பு ஏற்படுகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இவர்கள் நடிகர்கள், அதற்கு நாம் கூலி தருகிறோம், இவனுக ஒண்ணும் தேவதூதருங்க கிடையாது என்ற நினைப்பு ரசிகருக்கும், அதே நினைப்பு தமிழ்நடிகர்களுக்கும் வந்துவிட்டால் இந்த எதிர்பார்ப்புகளும் இருக்காது. இந்த நினைப்பு முதலில் நம்மிடம் இருந்தால் கமல் சொல்வதையெல்லாம் ஒரு பெரியமேட்டர் என நினைத்து நாமும் இப்படி மாத்திமாத்தி நெல்லு குத்திகிட்டிருக்க மாட்டோம்!!!

நந்தவனத்தான் said...

@ராசநட... சிரிக்க இது போனஸ்!

https://scontent-atl3-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/12342440_10207014889564350_6206064384192077508_n.jpg?oh=a859c2bd14f4c90bbc61b04cef364e7c&oe=56F079FB

இது நம்பிள்கிக்காக பெசல்...

https://scontent-atl3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/12311270_1489293384710684_4322489081274786736_n.jpg?oh=395cc1c6d54de16ed6eb5863b4c2f264&oe=56DCBFDD

https://scontent-atl3-1.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/12321534_194408224230525_1976388614957047447_n.jpg?oh=028fba49ea499a3008325c510a9a42c2&oe=56D8C0E4

ராஜ நடராஜன் said...

நந்தவனம்!உங்க ஊரு ஹாலிபர்ட்டன்கிட்ட எண்ணை பேரம் பேசாமல் இங்கே வந்து உட்கார்ந்திருக்கேன். அந்தப்பக்கம் சேட்டு நம்பள்கி தில்லிருந்தா பாரதியைப் பற்றி சொன்னதுக்கு பிராண்டி பாருங்க என்கிறார். இரு தள மத்தளமாகி விட்டாலும் வலது கையே ஓங்கி அடிச்சா ஒரு கிலோ மீட்டருக்கு கேட்கும் தவில் மாதிரி உங்களுக்கு பதில் சொல்லிட்டு சேட்டு கடையில் சாயந்திரமா அலவா கிண்டுறேன்:)

சில உறவுகள் நாம் விரும்பியும் விரும்பாமலும் வாழ்க்கையோடு பயணம் செய்யும்.அந்த வரிசையில் நம் குடும்பம்,நண்பர்கள்,பள்ளி,கல்லூரி,அலுவலகம்,தொழில்,ரிட்டையர்மெண்ட் என்ற சுற்றுக்குள் அரசியல்,சினிமா என்பவையும் கூடவே பயணம் செய்யும்.அந்த வரிசையில் கமல் உட்பட பலரையும் சொல்லலாம்.பட்டியல் நீளும்.வேண்டாம்.

உங்களூக்கு புளிக்கும் கமல் மாங்கா,புளி பலருக்கும் இனிக்கிறதே! அங்கேதான் ருசி ரசனை வித்தியாசப்படுகிறது.காரணம் மாங்காவை பழுக்க வச்சுத்தான் சாப்பிடனும்,புளியை ஊறவச்சுத்தான் சாப்பிடனும்ங்கிற பழக்கத்தை விட்டுட்டு அப்படியே காக்கா கடி கடிச்சா:)

உலக திரைப்படம்,ஹாலிவுட் எத்தனை சாகசங்களை காட்டினாலும் உள் வாங்கி கொள்ள மொழி அவசியம்.மொழியோடு வாழும் மண்ணுக்கு தகுந்தவாறு கதை சொல்ல வேண்டும். மணிரத்னம் கூடத்தான் காட்பாதரை திருடி நாயகன் உருவாக்கினார் என புலம்புகிறார்கள். மார்லன் பிராண்டோவுக்கு பல்லு வலி.ஆனால் நாயகன் நாயக்கருக்கோ கடைவாயில் வெத்திலை.நாயகனை இந்தியில் காட்டுறேன் பார் என வினோத் கன்னா மாதுரி தீட்சை உதடு கவ்வியது தவிர எதுவும் இதுவரை நினைவில்லை.கமலும் உதடு கவ்வினாலும் காரண காரியத்தோடு வெளிப்படும்.அம்மாவிடம் வாங்கிய முதல் முத்தத்தில் முத்தம் துவங்குகிறது என்கிறார்,தம்ழி தெரியாத பள்ளிக்குழந்தைகளுக்கு குற்றம் கடிதல் படம் காட்டி குற்றம் கடிதல் சொல்லையும் உச்சரிக்க வைத்திருக்கிறேன்:)ஆங்கிலமாவது அரை குறையா கேட்டு டைட்டில் பார்த்தாவது புரிந்து கொள்ளலாம்.பிரெஞ்சு படத்தை காப்பின்னா சில்வு பிளே தான் தெரியும்ன்னு படம் பார்த்த த்ருமியே சொல்கிறார்.மொத்த மக்களிடமும் கொண்டு போய் சேர்ப்பது மொழி,கதை சொல்லும் விதம்.கருப்பு,வெள்ளை பட காலம் தொட்டு கிடைக்கும் பட்ஜெட்டில் நம்மவர்கள் நன்றாகவே கதைக்கிறார்கள்.விட்டலாச்சார்யா படத்தையெல்லாம் உங்க ஊர்க்காரன் காப்பி அடிச்சிட்டு ஹாலிபட்டர்,சூபர்மேன்,பேட்மேன் வவ்வால்ன்னு கதை உடறது.இங்கேயே ஒரு வவ்வால் சுத்திகிட்டிருந்து எங்கே போய் ஒளிஞ்சுகிட்டிருக்குதோ?

எம்.ஜி.ஆர்,சிவாஜின்னு போட்ட விதை கமல்,ரஜனின்னு வளர்ந்து இப்ப விக்ரமை பின்னால தள்ளிட்டு அஜித்,விஜய்ன்னு ஆலமரமா வளர்ந்து நிக்குது.கடாவுட்டுக்கு பால் ஊத்தறவங்க கையில் மாட்டினீங்க அவ்ளோதான் சொல்லிப்புட்டேன்:)

திராவிட கழகங்களின் அரசியல் நம்மால் தவிர்க்க முடியாத ஒன்று.என்னதான் புலம்பினாலும் இயங்கும் தளத்திற்குள்தான் மாவாட்டியாக வேண்டும்.ராஜ நடராஜன் said...

தொடுப்பை மாலை தொட்டு விட்டு கருத்து சொல்றேன்.அதுவரைக்கும் இடைவேளை போட்டுக்கலாம்.

ராஜ நடராஜன் said...

பழமை!தூங்கி எழுந்தாச்சா? அது சும்மா நகைச்சுவைக்காக சொன்னது.கண்டுக்க வேண்டாம்:)

ஓ.பி.எஸ் அறிக்கையை இரண்டாவது முறையா படிக்க சொல்றீங்களே!அவ்வ்வ்வ்...

உடுமலை கடை மாதிரி அப்படியே கொஞ்சம் நகர்ந்து ஆழியார் வேதாந்திரி யோகா நிலையம் பக்கத்தில் சுற்றுலா பயணிகள் குரங்கு அருவி போறதுக்கு முன்னாடி ஒரு வன இலாகா புலி காப்பகம் பாதுகாவல் துறை வரும்.அதற்கும் பக்கத்தில் வன இலாகா எல்லா மரச்செடிகளும் வளர்க்கிறது. ரொம்ப சல்லிசா 30 ரூபாயிலிருந்து 60 ரூபாய்க்குள்.அங்கே புல்லுரிவி வளர்க்கிறாங்களான்னு தெரியலை. அதற்கும் பக்கத்தில் ஒரு அக்கா காபி,தேன்,குருமிளகு போன்றவற்றை விற்கிறார்.மிகவும் தரமான பொருட்கள்.வேதாந்திரி இல்லம் போவோர் கட்டாயம் போகவும்.நடைதூரம் மட்டுமே.யாரைக்கேட்டாலும் சொல்வார்கள்.

ராஜ நடராஜன் said...

நந்தவனம்!நான் என்னமோ பிட்டுபடந்தான் காண்பிக்கப் போறீங்கன்னு வீட்டுல போய் உட்கார்ந்து பார்க்கலாம்ன்னு நினைச்சேன்.

படங்கள் செம கலாய்! எப்படியெல்லாம் ஓட்டுறாங்கப்பா:)