Followers

Sunday, December 13, 2015

புதிய வட்டமேசை கலந்துரையாடல்

புதிய தலைமுறை நிகழ்த்திய வட்டமேசை கலந்துரையாடல் ஒரு ஜனநாயக கலந்துரையாடல் எப்படி நிகழவேண்டுமென்று நிருபித்திருக்கிற்து. பெரும்பாலான தொலைக்காட்சி  நிகழ்ச்சிகள் தட்டையாக நான்கு பேரை வைத்துக்கொண்டு ஒருவர் பேசும் போது இன்னொருவர் குறுக்கிட்டு விவாதத்தை கலைப்பது போல் இல்லாமல் கலந்து கொண்ட அத்தனை பேரும் சமூக அக்கறையோடு பேசியது வரவேற்பிற்குரியது.அனைவருக்கும் பாராட்டுக்கள்.

ஒரு சில விமர்சனங்களை முன் வைக்கலாமென்ற போதிலும் பொதுவான சமூக அக்கறை விவாதம் தமிழகம் இடர்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ளதாக தெரிகிறது.வழக்கம் போல் இரு கழகங்களின் சார்புநிலை குற்றம் கடிதல் தவிர்த்து அனைவரின் கருத்தும் மழை பேரிடர் கடந்து வருவது எப்படியென்ற /வெளிப்படுத்தியது.தலை நகர் மாற்றம் என்பதெல்லாம் துக்ளக் காலத்து பரிசோதனை.

மழையின் முன் அனுபவத்தோடு சொன்னால் அரசு இயந்திரத்தையோ முதல்வர் ஜெயலலிதாவையோ குறை சொல்வது அரசியலாக மட்டுமே தெரிகிறது.யாரும் எதிர்பாராத அடைமழை ஒன்றே மற்ற காரணிகளை பின் தள்ள போதுமானது.மேலும் இந்த மழையின் துயருக்கு இயறகை மாறுதல் தவிர்த்து அனைவருமே பங்காளிகள்.

எதிரணிகளும் கட்சி சார்பு கடந்து கலந்துரையாடல் செய்ய முடியும் என்பதை பார்க்கும் போது இரு கழக தலைமைகளின் ஆளுமையே தமிழகத்திற்கு பலனையும் கூட எதிர் விளைவுகளை அதிகமாக உருவாக்குகிறது என தோன்றுகிறது.

எதை ஊக்குவிக்க வேண்டுமோ அவை ஊக்குவிக்கப்படுவதில்லை. எதை பின் தள்ள வேண்டுமோ அவை விவாதப் பொருளாகிப் போகின்றது.அரசியலோடு சமூக இணைய தளங்களும் இதற்கு பொறுப்பு.

தமிழகம் அரசியல் ரீதியாக தன்னை புதுப்பித்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையை பிரதிபலித்த புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நன்றி.

 இரண்டு மணி நேரம் கடலை போட நேரம் இருப்பவர்கள்




4 comments:

வேகநரி said...

எதிரணிகள் கட்சி சார்பு கடந்து கலந்துரையாடல் செய்ய முடியும்.
ஆனால் ஆளும் அணிகளினால் அம்மாவை துதிபாட தான் முடியும்.

http://thavaru.blogspot.com/ said...

கொஞ்சநேரம் பார்த்தேன் விவாதத்தில் முஸ்லீம் பெரியவர் பேசியது பிடித்திருந்தது.

வேகநாி அவர்களின் கருத்தை வழிமொழிகிறேன்.

ராஜ நடராஜன் said...

வேகநரி!வாங்க!இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்ததும் எனக்கு பெரிய ஆச்சரியம்.எப்பொழுதும் காரசாரமாக விவாதிப்பவர்கள் தங்கள் நிலை உணர்ந்து விவாதம் செய்துள்ளார்கள்.முதல் பகுதி கொஞ்சம் அரசியல் வாடை வீசினாலும் இரண்டாம் பகுதி சிறப்பாக இருந்தது.

முதலமைச்சர் என்று சொன்னாலே போதும்.ஏன் வார்த்தைக்கு வார்த்தை மாண்புமிகு அம்மா போடுகிறார்களோ.யாராவது போட்டுக்கொடுத்து விடுவார்களோ என்ற பயத்திலேயே இவர்கள் வார்த்தைக்கு வார்த்தை துதி பாடுகிறார்கள்.தி.மு.க சார்பும் சந்தர்ப்பம் கிடைத்தால் அரசியல் செய்வோம் என எங்களை பக்கத்து நாடாக நினைத்து உதவி செய்யுங்கள் மோடி என்கிறார்.இரு தரப்பு சார்பு கருத்து தவிர மொத்த கருத்தும் வரவேற்க படவேண்டியவை

ராஜ நடராஜன் said...

வாங்க தவறு! நேற்று சுதர்சன மாத்திரைக்கு ஆடா தோடை பற்றி சொல்லியிருந்தேன்.தேடிப்பார்த்தேன்.எனது பின்னூட்டம் மட்டும் தனியா உட்கார்ந்துகிட்டிருக்குது.ஒரே வரிசை மன அலை என்பது இதுதான்.எனக்கும் தொப்பி பெரியவர் பேசியது பிடித்திருந்தது.கூடவே கம்யூனிஸ்ட் கட்சி மகேந்திரனும்.மொத்தமாக எல்லோரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து கருத்து சொல்லியிருக்கிறார்கள்.