Followers

Wednesday, December 16, 2015

சுப்ரமணியன் சாமி! நீயே ஹீரோ!நீயே வில்லன்.

எந்த வட்டத்துக்குள்ளும் உள்ளடக்கி விட முடியாத ஒரு அரசியல்வாதியென்றால் சுப்ரமணியன் சாமியாகத்தான் இருக்கும். அதுக்கு பயந்துகிட்டோ என்னமோ மோடியும்,ஜெட்லியும் கொஞ்சம் தள்ளியே வைத்திருக்கிறார்கள். கறுப்பு பணம் இந்தியாவுக்கு வந்ததா எனும் ஒளறுவாயனை கூட்டு சேர்த்துகிட்டு இருட்டு வீட்டில் டார்ச் அடிக்க பைத்தியமா என்ன? இல்லைங்க மோடி?

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் பனிப்போர் என்றால் சுப்ரமணியசாமியை அனுப்பும் ஜனதா ஆட்சி.

சோனியா காந்தி சொல்லித்தான் டீ பார்ட்டி வைத்து ஜெயலலிதாவின் உதவியால் வாஜ்பாய் அரசை கவிழ்த்தேன் என்ற வாக்குமூலம்,பின் ஜெயலலிதாவுக்கே ஆப்பு வைக்கும் விமர்சனங்கள்.

அப்ப தி.மு.க தானே நண்பனாக இருக்கனும்.அதுதான் இல்லை ராசாவின் மூலமாக ஸ்பெக்ட்ரம் 2G ஆப்பு. அப்புறம் இரண்டு மூணு வருசம் கழிச்சு பார்த்தா சுப்ரமணியன் சாமிக்கு வெத்திலை பாக்கு வைக்கிறது.

திராவிட கட்சியே தமிழகத்தில் இருக்ககூடாது. பிஜேபி எல்லா இடத்திலும் தனியா நிக்க வைச்சு ஜெயிக்கிறேனா இல்லையா பார்ன்னு ரங்கராஜ் பாண்டேவிடம் கிசு கிசு.தமிழ்நாட்டில் கழக அம்மிக்கல்லுகளே கூவத்தில் அடிச்சிகிட்டு போகும் போது நீர் வடிஞ்ச மழையில் மரத்தில் போய் உட்கார்ந்துகிட்ட பிளாஸ்டிக் மாதிரி சாமி கனவுக்கு மட்டும் குறைச்சலில்லை.


நல்ல படிப்பு,புத்திசாலித்தனம்,ஹார்வேர்டு பட்டம் இருந்தும் தமிழர் நலனுக்கு எதிரான பார்வை.சும்மா கிடந்த கச்சத்தீவை இந்தியாவுக்கு சேர்ந்தது என்ற கேஸ் போட்டது,இப்பொழுது மீனவர்கள் பிரச்சினை உருவான பின் படகுகளை பிடித்து வைத்துக்கொள்ள இலங்கை அரசுக்கு சிபாரிசு செய்வது

சுப்ரமணியன் சாமி பற்றி திருச்சி வேலுசாமி முன் வைக்கும் சந்தேகங்கள் கான்ஸ்பைரஸி தியரி மாதிரி மட்டுமே காணப்படுவதால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அர்னால்ட் கோஸ்வாமிக்கு தகுந்த மாதிரி சத்தம் போடும், மற்ற கருத்தாளர்கள் எல்லாம் முட்டாள்கள்,தான் மட்டுமே புத்திசாலிங்கிற அலட்சியம் செய்யும் சிரிப்பு/. நான் பேசும் போது வாயை மூடிகிட்டிருக்கனும்.குறுக்கிடாதே1ஆனால் நீ பேசும் போது நான் அர்னால்ட் கோஸ்வாமிக்கு பக்கத்து வீட்டுக்காரனாக்கும்.

தமிழர்களை,விடுதலைப் புலிகளை ஆகாது இலங்கைதான் புடிக்குதுன்னா அப்ப சோனியா காந்தியை பிடிக்கனுமில்ல.அது என்ன காரணமோ ஆங்கிலத்தில் Personal vengence என்று சொல்லும் தனிப்பட்ட காழ்ப்புணர்வு.இவர்களுக்குள் என்ன விரோதமென்றே கண்டு பிடிக்காத அளவுக்கு ராகுலையெல்லாம் மக்கு,டூப்ளிகேட் சர்டிபிகேட்ன்னு போட்டு வாங்குவது.

நேஷனல் ஹெரால்டுன்னு ஒரு பத்திரிகை வந்தது யாருக்கு தெரியும்.நமக்குதான் வருசத்துக்கு ஒரு முறை கஜனி மெமரி லாஸ் நோய் இருக்குதே.ஆனாலும் மண்டைக்கு எப்படிதான் வேர்க்குதோ 5 லட்சம் முதலீடு செய்த வியாபார நலன் நாடாத நிறுவனத்துக்கு 2000 கோடி எப்படி வந்ததுன்னு துருவி சட்ட புத்தியால் இப்பொழுது சோனியாவுக்கு செக்மேட் வைத்திருக்கிறார்.

ஒரு புறம் பார்த்தா சோனியா குடும்பம் மீதான கோபம் மாதிரி தெரிந்தாலும் மந்திரி பதவி கொடுக்காமலே இழுத்தடிக்கிற கோபத்துல யாரையாவது கிள்ளி வைக்கலாமென சோனியாவை கிள்ளி வைத்தாரோ.திருச்சி வேலுசாமி சொல்லும் போதே சோனியா கேட்டிருக்கனும்.அவருதான் கான்ஸ்பைரஸி தியரின்னா மன்மோகனை வைத்தே கொஞ்சம் ஆட்டம் காட்டியிருக்கலாம்.காங்கிரசே பயந்துகிற மாதிரிதான் குண்டு வீசுகிறார்.இதில் ப.சிதம்ப்ரமெல்லாம் பம்முவது நல்லாவே தெரியுது.

ஒரு புறம் கல்லூரி மாணவர்களின் ஆ என்ற ஆச்சரியம்.இன்னொரு பக்கம் பாதி வழுக்கை மண்டையில் தமிழ்நாட்டில் முட்டை அபிஷேகம்.

சுப்ரமணியன் சாமி! நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா?


7 comments:

ராஜ நடராஜன் said...

இப்பவெல்லாம் சுட சுட முறுகலா தோசை செய்ய முடிவதில்லை.மாவு ஊத்துன உடனே தோசை ரெடின்னு ஓட்டலில் தோசைக் கல்லை ஒரு தட்டு தட்டுற மாதிரிதான் இந்த பதிவு.

சுப்ரமணியன் சாமியை இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ள பழைய காஞ்ச வடை இணைப்பு கீழே.

http://parvaiyil.blogspot.com/2011/09/blog-post.html

இல்லைன்னா இன்னும் ஆறியும் ஆறாமலுமான 2G படத்தை கிளிக்கவும்.

தவறு said...

எங்க ஊரு அரசியல்வாதியெல்லாம் சுப்ரமணியன் சாமி ஒரு ஆளா பேசிப்பாங்க..அ...எல்லாம் தெரியும்..அதான் எல்லா அரசியல்வாதியையும் கண்ணுல விரல் உட்டு ஆட்டுறான் சொல்லுவாங்க ராஜநட..

ராஜ நடராஜன் said...

வாங்க@ நீங்க போட்ட சிவப்பு மஞ்சள் இன்னும் கண்ணுக்குள்ளேயே நிற்குது. பரதேசிகள் முன்னேற்றா கழகம்ன்னு ஒரு கட்சி ஆரம்பிக்கலானுன்னு இருக்கேன்.அதுக்கு உங்க கலரை கட்சிக்கொடியா போடலாம்ன்னு இருக்கேன். நேரம் கிடைத்தால் கட்சி கொள்கைகள் பற்றி பதிவு போட்டுடலாம்.

இப்ப உங்க பின்னூட்டத்துக்கான பதில்.சுப்ரமணியன் சாமிக்கு பலரின் வீக்னெஸ் தெரிகிறது.வீக்னஸ்ன்னா என்ன அளவுக்கு மிஞ்சிய பணம் சம்பாதிப்பது. இந்திய பொருளாதார துறை,இன்கம் டேக்ஸ்,அமெரிக்க சீன உளவுன்னு கொஞ்சம் கையில் சரக்கு இருக்கும் போல.அதனால்தான் கண்ணூல விரல விட்டு ஆட்டுற வேலையெல்லாம் போல.

பார்க்கலாம் சுப்ரமணியன் சாமியின் நாரத வேலைகளான 2G,டெக்கான் ஹெரால்டு போன்ற கண்ணுல விரலை விட்டு ஆட்டுவது பலனளிக்குமா இல்ல காலப்போக்கில் அமுங்கி போகுமான்னு.

தமிழ்நாடே மறந்து போன 2G யை எதுக்கு இப்ப அதுவும் மழைத்தேர்தல் சாதகத்துல இவன் நோண்டுறான்னு உடன்பிறப்புக்கள் யாரோ கூவுற மாதிரி காதுல விழுதே:)

Amudhavan said...

இம்மாதிரி ஒரு ஆள் இந்திய அரசியலுக்குத் தேவை என்பதை நன்றாகத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்ளுவதில் இந்த ஆளுக்கு நிகர் இவர்தான். கொஞ்சம் அதிபுத்திசாலியாக வேறு இருப்பதால் பிசினஸ் நன்றாக ஓடுகிறது. இந்தக் கட்சிக்காரன் என்று இல்லை, எல்லாக் கட்சிக்காரனுக்கும் எதிரி தன்னுடைய கட்சிக்குள்ளும் வெளியிலும் இருக்கிறான். ஆனால் அவனைப் பற்றி நம்மால் பேசமுடியாது. ஆனால் அவனைப் பற்றிப் பேச வேண்டிய தரவுகள் கைவசம் இருக்கிறது. என்ன செய்யலாம்? அந்த ஆளை ஒன்றுமில்லாமல் செய்ய நம்மால் பல காரணங்களால் முடியாது. அதற்கென்றே இருக்கும் குறிப்பிட்ட ஏஜன்சியிடம் பணத்தையும் தரவுகளையும் தந்துவிட்டால் அந்த ஏஜன்சியே சகலத்தையும் பார்த்துக்கொள்ளும் இல்லையா? அதுதான் இந்தியாவில் இப்போது நடந்துகொண்டிருக்கிறது. அதிலும் வெற்றிகரமாக நடந்துகொண்டு இருக்கிறது.

ஜெ இன்னும் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்? சு. சாமி இந்த விவகாரத்தைக் கையிலெடுக்கப்போகிறார் என்பது ஜெவுக்குத் தெரியுமா தெரியாதா? என்பதுபோன்ற பூச்சாண்டிகளை இன்னமும் நம்பித் தொலைக்கும் அப்பாவித் தமிழர்களை நினைத்தால்தான் பரிதாபமாக இருக்கிறது.

ராஜ நடராஜன் said...

அமுதவன் சார்! கடந்த சுப்ரமணியன் சுவாமி பதிவில் ஹிட்ச்காக் படங்களைப் பார்ப்பதுபோன்ற மனநிலையில் இவரது அலட்டல்களைத் தவிர்க்கமுடியாமல் பார்த்துக்கொண்டிருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள்.

இந்த பதிவு போட்டதின் காரணமே நீங்கள் குறிப்பிட்ட ஹிட்சாக் நிலைதான்.

நேரமிருந்தால் இந்த யூடியூப் காணொளி பார்க்கவும்.

https://www.youtube.com/watch?v=-Sfv_3jJHqU

https://www.youtube.com/watch?v=VX6KetaE8wU

உங்கள் கருத்தின் படி ஒரு நூலின் நுனி கிடைத்தால் அது சம்பந்தமான துறையைத்தான் நாடுகிறார். உதாரணமாக நஷ்ட ஈடு கோரும்படியில்லாமல் ஒருவர் மீது யார் வேண்டுமென்றாலும் பொதுநலன் கருதி கேஸ் போடலாம் என்கிற சட்டத்தின் ஒரு நுனியை வைத்துக்கொண்டு கேஸ் போட்டால் இது வருமான வரித்துறை சம்பந்தப்பட்டதுன்னு நீதிமன்றம் சொன்னால் உடனே வருமான வரித் துறை போய் சான்றிதழ் கேட்டு வாங்கி விடுகிறார்.அதன் அடிப்படையில் கேஸை வலுவாக்க முயலும் போது எதிரணி பணிந்து விடுகிறது என்பதோடு விவாதம் பார்க்கும் நாமக்கே எங்கோ புகையுதேங்கிற மாதிரிதான் தோன்றுகிறது. சோனியா சார்பாக வாதாடும் லாலாவின் விவாதம் பார்த்தாலே சம்திங் ராங்க்ன்னு தான் தோன்றுகிறது.

ஆனால் தமிழகம் சார்ந்து மண்டை ஏன் எதிராகவே யோசிக்குதுன்னு தெரியலையே!
ராஜ நடராஜன் said...

இந்த பதிவை எழுதும் போது ப.சி பற்றி குறிப்பிட்டது எதேச்சையாக பழைய நினைவுகள் சார்ந்து சொன்னது.ஆச்சரியமாக இன்றைய செய்தி

கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சோதனை.

இந்த பின்னூட்டம் Just for the record பின்னால் அசை போட்டுப் பார்க்க.

வேகநரி said...

சுப்ரமணியன் சாமியை ராஜ நடராஜன் விமர்சிக்கும் முறை சிறந்த முன்மாதிரியானது.
சிலர் ஒருவரை விமர்சிப்பதே ஜாதி சொல்லி,ஜாதி துவேஷத்தை கொட்டுவதற்காகவே.