Followers

Thursday, December 24, 2015

குரங்கு மர புளியம் பழம்

சில பதிவுகளை காணும் போது தலைப்பு மட்டும் நச்சுன்னு வந்து விழுகிறது.மழை வந்து ஒட்டியும் ஒட்டாத ஸ்டிக்கர்,நமக்கு நாமே திட்டம்,புதுக்கூட்டணி,கிரனைட் கல்லை தேடும் சகாயத்தைக்கூட தேடிகிட்டிருக்காங்க 

நாந்தான் முதல் அமைச்சர்ன்னு ஆறு மாசத்துக்கு முன்னாடி போஸ்டர் ஒட்டியும் கூட தமிழ்ப் பசங்க நம்ம பேரைக்கூட உச்சரிக்க மாட்டேன்கிறார்களே என்று  கூட்டணி கோபத்தையும்,தமிழ் சாணக்கியனே தூதுவிடுவதை தூங்கி எழுந்த ஸ்லிப்பர்கள் புலம்பி கார்ட்டூனில் சோகமாகிப்போனார்கள்.

நமக்கெல்லாம் கார்ட்டூனுக்கு நேரமே செலவழிக்க வேண்டிய அவசியமில்லை.உங்கள் நிலவொளிக் கூட்டங்களை கூகிளான் படம் பிடித்து வைத்திருக்கிறான்.

மரம் வெட்டினால் பசுமை நிறமா
நிலவொளிக்கு அக்னி சூடா
காட்சிகள் பேச்சுக்கு தமிழா
குரங்கு தாண்டுவது மட்டும்
கிடைக்காத புளியம் பழம்
ருசிக்காத பட்சத்தில் புளிப்பும்

பழுத்த பழமே வலு கொண்டு எழுகிறது
உங்கள் முதுகெலும்புகள் ஒடிந்து போயின
ஒதுக்கி வைத்தவர்களையும் மழை
இன்று கட்டித் தழுவுகிறது.
பிரித்தல் அரசியலுக்கு பரிகாரங்கள் தேடுங்கள்
இன்னுமொரு தேர்தல் வராமலா போய் விடும்.

டிஸ்கி: பதிவுலகம் வரும் வரை உங்கள் குழுப் பெயர் கூட தெரியாத அரசியல் விமர்சகன்.
 

6 comments:

தவறு said...

ராஜநட...தலைப்பே தலை சுற்றவைக்குதே..புரிந்தும் புரியாமலும்.

வேகநரி said...

காக்காவிடமிருந்து வடை எடுத்த நரி கதை இருக்கிறது, இது என்ன குரங்கு மர புளியம் பழகதை :)
நாமெல்லாம் பாரிஸ் தமிழச்சி அது யார் என்று குழம்ப, இப்போ தமிழகத்து தமிழச்சி வீரலட்சுமி, தமிழர் முன்னேற்றப் படை, தமிழன் சிம்பு என்று பதிவு பார்த்தீர்களா!
அப்புறம் உங்க வஹாபி நண்பர் பெரியாரின் கொள்கைகளை தான் பின்பற்றும் பகுத்தறிவுவாதி என்பது போல காட்டுவது எல்லாம் வெறும் வேஷம். ஒரு மதவாத மேடம் பெரியார்,பெண்ணியவாதிகளை எல்லாம் தாக்கி பதிவு எழுதியிருக்கார் வஹாபியார். அங்கே நின்று சலாம் போட்டுக்கொண்டிருக்கார்.

ராஜ நடராஜன் said...

புது மொந்தை பழைய கள்ளுதான். உங்களுக்கு போதை வரல,பலரும் இந்த பதிவை கடந்து போய் விட்ட மாதிரி தெரிகிறது.

புதுக்கவிதையில் இருக்குற பிரச்சினையே இதுதான்.ஆளாளுக்கு ஒவ்வொரு விதமா அர்த்தம் செய்துக்க வேண்டியிருக்குது.

ராஜ நடராஜன் said...

வேகநரி! நானே பரவாயில்லை போல இருக்குதே! நீங்க என்னை விட குழப்புறீங்களே! விகடன் படிக்கும் போதே யாரோ ஒரு கண்ணாடி போட்ட அக்கான்னு கேள்வி பதில் கூட படிக்காமல் போய் விட்டேன். பேனை பெருமாள் ஆக்கி விடுவீங்க போல இருக்குதே!

உள்குத்து புரிந்தாலும் கூட எனக்கு தெரிந்த வஹாபிகள் நீங்களும் நானும்தான்:)

ராஜ நடராஜன் said...

வேகநரி!காக்கா வடை சுட்ட கதை எல்லோருக்கும் தெரிந்த மாதிரி குரங்கு மரம் தாவுவதும் அனைவரும் அறிந்ததுதான்.தாவும் மரமெல்லாம் புளியம்பழம் புளிக்குதுன்னு சொன்னதால் இப்ப வளர்த மரங்களே ஒண்ட இடம் கொடுப்பதில்லை இப்ப கனியும் புளிக்குதாம்!

நம்மைப் போன்ற சிறுவர்களுக்கு குரங்கே ஒரு கார்ட்டூன்.இதில் குரங்கே கார்ட்டூன் வரைஞா:)

selvaraju M said...

Hello dears
I am selvaraju from chennai(bvselvaraju@gmail.com).
Mr.Raja Natarajan passed away on 3rd Jan 2016 due to heart attack in Kuwait. His body is going to reach coimbatore on 7th Jan 2016 about 4 AM. Praying to get his soul RIP. For more details please contact my uncle(+ 91 9840175869)