Followers

Wednesday, December 23, 2015

மூப்பனார்,ரஜனி & சகாயம்?

நானறிந்த வரை சூழல்கள் ஒருவருக்கு சிம்மாசனத்தை தூக்கி கொண்டு சுற்றும். தனி மனித சிந்தனை, உள் அரசியல் போன்றவை எதிர்பார்ப்புக்களை நீர்க்க செய்து விடும். அந்த வரிசையில் மூப்பனார்,ரஜனி போன்றவர்களிடம் தலைக் கீரிடம் கோபித்துக்கொண்டு ஓடி விட்டது. 

இப்போதைய தமிழக அரசியல் சூழலில் வை.கோவும்,விஜயகாந்தும் தங்கள் ஈகோக்களை விட்டு ஓரணியில் மூன்றாம் அணிக்கு சந்தர்ப்பம் அமையுமா என்பதை  பலர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 2010ல் எதிர்பார்த்த சீமான் உரத்த குரல் தவிர எப்படி பெரியாரியல் அரசியல் களமாடுவது என்ற அடிப்படை மறந்து பச்சைத் துண்டு,முருகன் வேல் சின்னம் என 2016ல் தான் தான் முதலமைச்சர் கனவு தமிழக வெள்ளத்துக்கும் முன்பே எங்கோ போய் முட்டிக்கொண்டு விட்டது.

இரண்டு கழக ஆட்சிகளும் தமிழகத்திற்கு தங்கள் கடமையை செய்து விட்டார்கள். ஒன்று ஜனநாயகத்திற்கு எதிரான வாரிசு அரசியலை உருவாக்குகிறது. இன்னொன்று ஒற்றை ஆட்சி முறையென்பதால் தமிழ் நாட்டின் எதிர்காலத்துக்கு உத்தரவாதமில்லை. தமிழகத்தில் ஜனநாயக பரவல் தேவையென்றால் வலுவான தலைமையோடு மாற்று அரசியல் தேவைப்படுகிறது. மக்கள் விரும்பினால் 2016லேயே அந்த மாற்று அரசியலை கொண்டு வந்து விட முடியும். ஓடுவதே ஓடட்டுமென்றாலும் தமிழகத்தின் எதிர்காலம் வெறுமையாகவே இருக்கிறது.

வழியில் போகும் ஓணானை பழமொழி மாதிரி விகடன் வழியில் போவோரை வழி மறித்து அடுத்த முதல்வராக யாரை விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை முன் வைத்தது.
ஒரு பையன் 41C
ஒரு பெண்மணி மைக்கிலிருந்து 100 அடி தள்ளி போய் நின்று கொண்டார்
ஒருவர் நல்லாட்சி தரும் யாராக இருந்தாலும் என்ற மதில் மேல் பூனை
காக்கி உடையில் இருந்த ஒரு ஆணும் பெண்ணும் நாங்க கவர்ன்மெண்டு ஆட்கள் கருத்து சொல்லக் கூடாது
நாமம் போட்ட ஒருவர் மழைக்கு யாருமே வரவில்லையென்ற புலம்பல்.
ஒருவர் ஜெயலலிதா
இன்னொருவர் கலைஞர்
புதுசா யாராவது வரனுங்க
ஆளை விடுங்க சாமி என ஒதுங்கியவர்கள் அதிகம்

படித்தும் கட்சி சுவற்றில் ஒட்டிய பல்லிகள் நிறைய இருக்கிறார்கள். இவர்களை தவிர இலவசம் தவிர எங்களுக்கு அரசியல் தெரியாது என்பவர்களும்,என்னதான் சொல்லுங்க என் ஓட்டு இவருக்குத்தான் என்ற அசையா நெஞ்சர்கள் நிறைய இருக்கிறார்கள். 

அரசியல் ஈகோ,உள்குத்து வேலைகளை பின் தள்ளி Administration Oriented Ministers and Chief Minister என்ற நோக்கில் சகாயம் போன்றவர்களை முன் நிறுத்துவது மாற்று அரசியலுக்கான வழியை திறக்கும் என்ற போதிலும் இது போன்ற சிந்தனைகள் கொண்டவர்கள் படித்த வர்க்கத்து மைனாரிட்டியாக இருக்கலாம். மேலும் ஊழல்கள் அரசு துறை ஆவணங்களில் கருத்தரிக்கின்றன என்பதால் ஊழலை வெற்றி கொள்ளும் சந்தர்ப்பங்களும் அமையலாம் அல்லது அதிக கரு முட்டைகளையும் இடலாம்.

இதையெல்லாம் தாண்டி சகாயம் அரசியலுக்கு வருவாரா என்பதே மில்லியனோடு ஒற்றை ரூபாய் சேர்த்த கேள்வி.

வந்தால்? தமிழகத்தின் புது அரசியல் முயற்சி.

பதிவை முடிவு செய்யும் தருணத்தில்  மக்கள் நலக்கூட்டணி விஜய்காந்துக்கு பொன்னாடை போர்த்துகிறார்கள். ஆட்டம் எப்படி போகுது பார்க்கலாம்.

8 comments:

http://rajavani.blogspot.com/ said...

ராஜநட...புதியவர்களுக்கான வாய்ப்பை தமிழகம் இப்பொழுது வழங்காது என்பது என்னுடைய எதிர்பார்ப்பு .

அரசியல் பாடம் கற்றுதேர்ந்த வை.கோ. தமிழகத்தில் நிலையான இடம்பிடிக்க தடுமாற விஜயகாந்தை வைத்து வடம்பிடிக்க நினைப்பது மிகவும் தவறு.

விஜயகாந்தை பின்னால் இயக்குவது வேறுஆள்.

சகாயம் செயல்படலாம் மொத்த தமிழகம் அப்படின்னு சொல்லும்போதே பின்தங்குகிறார் அரசியல்வாதி அல்ல அதிகாரி.

ராஜ நடராஜன் said...

லவோஸி தத்துவங்கள் பார்த்து படிச்சு முடிச்சாச்சா? சகாயம் ஒன்றும் புதியவரல்ல.பலருக்கும் அறிமுகம்தான். பலருக்கும் பழைய வட்டத்தில் இருக்க பழகி விட்டது.ஆனால் மாற்று சிந்தனை புதியவர்களை தமிழகம் வரவேற்பதில்லையென்றும் சொல்ல முடியாது.

வை.கோ அனுபவம் இருந்தும் பலமுறை சறுக்கி இருக்கிறார். அதன் பின்புலம் பணமா என்று தெரியவில்லை.இல்லையென்றால் தொடர்ந்து சறுக்குவதற்கு சந்தர்ப்பமில்லை.ஆனால் இந்த முறை அவரது கூட்டணி முயற்சி வரவேற்க படவேண்டியது. புதிய கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்புக்கள் இல்லாமல் போனாலும் மூன்றாம் அணிக்கான விதையை தமிழகத்தில் விதித்தற்கு கூட்டணி தலைவர்களுக்கு பங்குண்டு.விஜயகாந்தா வைகோ வா என்ற ஈகோவை கடந்து விட்டால் நால்வர் கூட்டணி பஞ்ச பாண்டவர் கூட்டணியாவதற்கு வாய்ப்பு அதிகம்.எனது எதிர்பார்ப்பு ஜனவரி 1 புத்தாண்டு அறிவிப்பாக மாறலாம்.

அது யார் விஜயகாந்தை பின்னாலிருந்து இயக்குவது. நான் பார்த்த விஜயகாந்த யோகா தினம் வரை பின்னாளிலிருந்து இயக்குவது அவரது மனைவிதான்.

பலரும் அவரது பெயரை முதல்வர் பெயருக்கு உச்சரிக்கும் முன்னே தனக்கு அரசியலில் ஈடுபாடில்லை என்றதை கேட்க நேர்ந்தது.அரசியல் அழுத்தங்கள் எப்படியிருக்குமென்பதை அவரைப் போன்றவர்கள் உணர்ந்திருக்க முடியும்?

http://rajavani.blogspot.com/ said...

ராஜ நட... விஜயகாந்தா வைகோவா ஈகோவை நினைத்துதான் தவறென்று சொன்னேன்.மூன்றாம் அணியையும் அதனால்தான் நம்பவில்லை.

விஜயகாந்தினுடைய செயல்பாடுகளில் அவரது மனைவிதான் . நடிக்கவராவிட்டாலும் மன்மோகன் சேனியா கதைதான்.

சகாயம் பலருக்கு அறிமுகம் என்றாலும் இப்போதைக்கு வாய்ப்புண்டா..!!??

Amudhavan said...

போகாத ஊருக்கு நிறையப்பேர் நிறைய வழிகளைக் காட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். வைகோவை, சுப்பிரமணிய சுவாமியை எல்லாம் இன்னமும் நம்புகின்ற மக்கள் இருக்கிறார்கள் என்னும்போதே பயணம் எங்குபோய் முடியும் என்பதைத்தான் சொல்லமுடியவில்லை.

ராஜ நடராஜன் said...

பதிவர் தவறுக்கு பதில் சொல்லாமல் நேராக அமுதவன் சார் கருத்துக்கு வந்து விடுகிறேன்.

சார்! உங்கள் பதிவுலக அறிமுகம் கிடைத்ததிலிருந்து நீங்கள் இந்திரா காந்தி சிக்மகளூர் காலம் தொட்டு அரசியலை ஊன்றி கவனித்து வருகிறீர்கள்.உங்களுக்கென்று வலுவான அரசியல் பார்வை இருக்கும்.

சமீபத்தில் பிரேமம் மலையாளப்படத்தில் ஒரு பாட்டு வரும்.அவள வேண்டா! இவளே வேண்டா! இதுதான் நம்ம நிலைப்பாடு:)

தி.மு.க கலைஞரின் தலைமையில் தமிழகத்திற்கு சிறந்த ஆட்சி முறையை தந்தது. அதே நேரத்தில் தி.மு.க வை விமர்சிக்க வேண்டிய சூழலை தி.மு.கவே 2008ம் வருட காலத்திலிருந்து கொண்டு வந்ததால்தான் எதிர்க்கட்சியென்ற அந்தஸ்து கூட இல்லாமல் மூன்றாம் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.இன்னும் தி.மு.க விற்கு வாக்கு வங்கி இருந்தாலும் கூட தனித்து நிற்கும் தனித்தன்மையை இழந்து விட்டது என்பதை கூட்டணிகள் கூட சீந்துவதில்லை என்பது நிரூபிக்கின்றன. வை.கோ,விஜயகாந்த் போன்றவர்களிடம் குறைகள் இருக்கலாம். ஆனால் ஜனநாயகத்திற்கு எதிரான வாரிசு அரசியலை விட இவர்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்து பார்க்கலாமே! இந்தியா ஜனதா ஆட்சியை கூட பரிசோதனை செய்து பார்த்து விட்டது. வை.கோவும்,விஜய்காந்த்தும் பிரச்சினையென்றால் பிஜேபி வந்து தமிழகத்தில் உட்கார்ந்து கொள்ளட்டும் பரவாயில்லையா?

ராஜ நடராஜன் said...

அமுதவன் சார்! முந்தா நாள் பதிவு சுப்ரமணியை சொல்றீங்களாக்கும்! அந்த மனுசன் வாடகை கொடுத்தாலும் பராவியில்லை.நான் அரசு கொடுத்த வீட்டிலேய் தங்கிக்கிறேன்ன்னு டெல்லியில் டேரா போட்டுகிட்டிருக்கார்.அவரையெல்லாம் தமிழக அரசியல் லிஸ்ட்டில் சேர்த்துக்க இங்கே யாருமே இல்லையென்ற போதிலும் சண்டைக்காரனுக்கு வெத்திலை பாக்கு வைக்கிறதெல்லாம் உங்கெள் நேச அரசியலில் சகஜமான விசய்ம்தானே!விட்டா சோவுக்கு கூட ஜே சொல்லுவேன்ன்னு சொல்லுவீங்க போலிருக்குதே!

தனிமரம் said...

விடிவு தூரத்தில் !!!

ராஜ நடராஜன் said...

//விடிவு தூரத்தில் !!!//

நமக்காக தமிழகம் இன்னும் காத்துகிட்டிருக்குதோ!