Followers

Wednesday, December 9, 2015

தமிழ் நாட்டு யோசனைகள்.

தற்போதைய இடர் நிலையில் கரம் தந்து உதவிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் முதற்கண் நன்றி.

இதே ஆட்சி இனி தொடர்ந்தாலும் மக்கள் மாற்றங்களை இனி விரும்பினாலும் ஆளும் அரசு 2016ல் எப்படி செயல்படலாமென்ற இலவச ஆலோசனை இது.
தற்போதைய நிவாரண உதவியாக ஐந்தாயிரம்,பத்தாயிரம்,கோழிக்கு கூட நூறு ரூபாய் இழப்பீடாக தமிழக அரசு அறிவித்திருந்ததை அறிந்தேன்.

யானைப் பசிக்கு சோளப்பொறி என்பதோடு ஒரு அரசு நிர்வாகமும் பொதுமக்கள் நலன் என்ற நோக்கோடு ஒரு நிறுவனம் செயல்பட வேண்டிய அடிப்படை கட்டமைப்புக்களை கொண்டது.திராவிட கழகங்களின் ஆட்சியில் தமிழகம் நிர்வாக கட்டமைப்புக்களை முடிந்தவரை கட்டமைத்துள்ளது ப்பாராட்டப்பட வேண்டிய ஒன்று.ஆனால் அதனை நிர்வாகிக்கும் திறனில் குளறுபடிகள் வந்து விடுவதாலும் புறக்காரணிகள் சிலவற்றாலும் திரும்ப திரும்ப ஆட்சி மாற்றங்கள் வந்து விடுகின்றன.

.தமிழக் அரசு தரும் குறைந்த பண உதவியும் கமல் கேள்வி கேட்ட வரிப்பணத்திலிருந்துதான் செலவாகிறது.இந்த சிறு உதவி டாஸ்மாக்கில் கூட ஒரு சிறு பகுதி செலவழிக்கும் தற்காலிக வலி நிவாரணியே தவிர நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்தாது.ஒரு புறம் அரசின் பெரும் சுமை என்ற போதிலும் மறு புறம் இயலாத வயதானவர்கள்,விதவை தாய்மார்கள்,ஏழைப் பட்டியலில் இன்னும் தள்ளாடுவோர் என பலருக்கும் தினசரி பசியை நீக்குகிறது.இலவசம் என்பதை விட குறைந்த விலை உணவு பங்கீடு மட்டுமே அரசாங்கத்தின் செலவை ஓரளவு குறைக்கும்.

அரசாங்கத்தால் தரப்படும் பண உதவிகள் கூட முதியோர்,விதவைகள் போன்றோர் நேரடியாக பெறுவதில்லை.இடைத்தரகர் ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்து அவரிடமிருந்து அவரது கமிசன் போக பெற்றுக்கொள்ளும் முறையை கிராமத்து பெண் ஒருவர் சொன்னார்.

பொருளாதாரத்தின் அடிப்படை எதுவுமே இலவசமல்ல. அரசு நிர்வகிக்கும் வரிப்பணத்தின் கணக்கை இடம் மாற்றும் ஜிகினா வேலைப்பாடே இலவசம். பழைய காலத்து கணக்கில் ஆயிரம் ரூபாய் கைவசமிருந்தால் வீட்டு வாடகை,அரிசி மளிகை சாமான்,பால்,காய்கறி,பள்ளி குழந்தைகள் செலவு போக ஓட்டலுக்கு ஒரு நாள்,சினிமாவுக்கு ஒரு நாள் என்ற சுகமே ஒரு அரசின் இலவசங்கள் அறிவிப்பு. எப்படியிருந்த போதிலும் ஆயிரம் ரூபாய்க்குள் வாழ்க்கை வண்டி ஓட வேண்டும். 

உலக பொருளாதார மாற்றங்களில் பைக் வாங்கனும்,கார் வாங்கனும்,வீடு கட்டனும்,கட்டுன வீட்டுல குட்டி சினிமா தியேட்டர் நினைப்பில் சினிமா பார்க்கனும் என்று ஏகப்பட்ட கனவுகளில் பணக்காகிதங்கள் அச்சடிக்கும் கொள்ளளவு அதிகரித்து ஆயிரம் லட்சமாகி இப்ப கோடியாகி விட்டன. நுகர்வு பொருளாதாரம் வளர்ந்து விட்டது. லஞ்சம் கொடுக்கல் வாஙகல் சுருட்டல் போக கனவில் ஓரளவு தன்னிறைவும் தமிழகம் கண்டதை பொறுக்காத மழை, ஒருத்தன் ரெய்ன் ரெயின் கோ அவே என்கிறான்.இன்னொருத்தன் வா வான்னு பூசை போடுறான்.இதுல வேற தஸ் புஸ்ன்னு டாஸ்மாக் காத்து என்னையும் தாக்கிய மப்பில் பெய்து விட்டேன்கிறது.

எய்தவர்களாய் அமெரிக்க,சீனா,இந்தியாவாக இருக்க என்னை வந்து கும்மினால் எப்படி என்ற புலம்பலில் இன்னும் தூறுகிறது.பன்னாட்டு நிறுவனங்கள் கடை விரிக்க அழைத்த மாநாட்டு முதலீட்டாளர்கள் எப்படி செயல்பட போகிறார்கள் என்று தெரியவில்லை.அவர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுவது இப்பொழுதும் இனியுமான அரசின் கடமை.

கோவையில் கலெக்டர் அலுவலகம் சிறப்பாக மக்கள் குறைதீர்ப்பு நாளை ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடத்துவது கண்டு மகிழ்ச்சி அடைந்தேன்.இதற்கு ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ள ஆசைப்படும் இந்த அரசோ அல்லது உட்கார்ந்து கொண்டிருக்கும் அரசோ யாராகிலும் வாழ்த்துக்கள் உரித்தாகுக.வாக்காளர் அட்டைக்கு பள்ளி ஆசிரியர்கள் பெரும் உதவி செய்கிறார்கள்.ஆனால் திட்டமிடுதல் இன்னும் மேம்படுத்தப் படவேண்டும்.

ஏற்றுமதி,இறக்குமதி ஒரு நாட்டின் முக்கிய பொருளாதார தூண். நம்மிடம் ஏற்கனவே சென்னை துறைமுகம்,தூத்துக்குடி துறைமுகம் உள்ளன.கோவை தொழில் நகரமென்பதோடு அருகில் கொச்சின் துறைமுகம் இருப்பது தமிழ்நாட்டுக்கு சாதகமானது.இன்னும் ஒரு துறைமுக முயற்சியில் மத்திய மாநில அரசுகள் இருப்பதாக செய்திகள்.

விவசாய ஏற்றுமதிக்கான வசதிகள் வாய்ப்புக்கள் இருந்தும் சிலருக்கு ஏற்றுமதி செய்யவேண்டுமென்ற ஆவல் இருந்தும் எப்படி செயல்படுவது என்பது தெரிவதில்லை.தெரிந்தவர்கள் சிலர் ரிஸ்க் எதற்கு எடுக்க வேண்டும் என்று நினைப்பதால் இடைததரகர்களிடம் தாரை வார்த்து விடுகிறார்கள். கோவை,ஈரோடு,திருப்பூர் பகுதி விவசாயிகள் சிலர் சந்தைக்கு பொருளை கொண்டு போய் வியாபாரம் செய்வதற்கே சங்கடப்படுவதால் காசு கையில் இருக்கும் சேட்டன்கள் ஊர் கடந்து வந்து அடிமாட்டு விலைக்கு வாங்கி,பொருளை பேக்கிங் செய்வது முதல்,கப்பல் செலவு,வண்டி கூலி,தனது நிகர லாபம் என கணக்கிட்டு வளைகுடா சேட்டன்களுக்கு விற்று விடுகிறார்கள். தமிழகம் ஏற்றுமதி கெடுபிடிகளை குறைத்தால் கொச்சின் போகும் பொருட்களை தமிழகம் சார்ந்த துறைமுகங்களில் தமிழர்களுக்கு வருமானம் கிடைக்கும் படி செய்து விடலாம்.

ஏ.டி.எம் முறையில் வங்கிகள் சிறப்பாக செயலடுகின்றன.ஏ.டி.எம் கார்டுகளை வங்கிகளை தவிர்த்தும் வியாபார தளங்களில் வங்கி கணக்கோடு இணையும் இயந்திரத்தில் வரவு செலவை கணக்கை அளவிடும் உபயோகிக்கும் முறை வந்து பரிசோதனை செய்யப்பட்டு வளைகுடா நாடுகளிலும்,மேற்கத்திய நாடுகளிலும் வெற்றிகரமாக செயல்படுகின்றன.முன்பு கிரடிட் கார்டுன்னாலே களவானி பயம் போய் இப்பொழுது கிரடிட் கார்டு இருந்தால்தான் பண பரிவர்த்தனை முறை இணையத்தில் வந்து விட்டது.

வளைகுடா நாடுகளிலிருந்து எங்கே பணம் செல்கிறதோ அத்தனையும் வங்கி,வங்கி இணைப்புடன் மத்திய வங்கி என நெட்வொர்க்கிங் வெற்றிகரமாகி விட்டன.இது வரை கடத்திய கறுப்பு பணமெல்லாம் இனிமேல் சாத்தியமில்லை என்ற வளர்ச்சியிருந்தும் இந்தியாவில் அவை செயல்படுகிறதா என்று தெரியவில்லை.

இப்பொழுதுள்ள மழையிலே தெரியும்,மழை பேரிடர் வந்தால் எங்கே நீர் நிற்கும் எங்கே ஓடும் எங்கே திரும்ப வந்து வீட்டுக்குள் புகுந்து விடுமென்று. அத்து மீறி கட்டிய வீட்டு நிலங்களை அரசு கையகப் படுத்திக்கொண்டு அங்கே வாழ்ந்த மக்களுக்கு மாற்று வீடுகள் தருவது கட்டாயமானதும் முதல் கட்ட நடவடிக்கையாகும்.

எந்த கடனும் வங்கி மூலமாகவே பெறப்பட வேண்டும். கடனை கட்டவில்லையென்ற பேச்சுக்க்கே தமிழக்த்தில் பேச்சுக்கு இடமில்லை. முதலாவது தங்கம்,இரண்டாவதாக அசையாப் பொருட்கள்,மூன்றாவதாக ஆட்டைய போட மாட்டார் என இருவர் வக்காலத்து. கட்டவில்லையென்றால் குடும்பம் பொறுப்பு ஏற்க வேண்டும் அல்லது வக்காலத்து கியாரண்டி கையெழுத்து போட்டவர் பொறுப்பு. இதையும் மீறி தவிர்க்க முடியாத நிலையில் காந்தி கணக்கு என ரைட் ஆஃப் செய்து விடலாம்.நான் இந்த ஐடியா கொடுக்கும் போதே கையை எங்கே வைக்கலாம் என சில கண்மணி பிறப்புக்கள் கற்பனை செய்யக்கூடும்:)

மீதி இடங்களில் மழையில் வீடுகள் தானே சேதாரமாகி விட்டது. இருக்குமிடத்தில் புதிய கட்டமைப்புக்கள் உருவாக்கப்படல் வேண்டும்.காசுக்கு எங்கே போறதுன்னா அதுக்கு அரசு நீண்டகால கடன் உதவி செய்ய வேண்டும்.காசு கொடுத்தா திரும்ப கட்டமாட்டேங்கிறாங்கப்பா எனும் வங்கிகளுக்கு எல்லோரும் அப்படியென்று சொல்ல முடியாது.ஆட்டைய போட்டு விடலாம் என்ற சில விதிவிலக்குகள் இருக்கும்.அப்படி பட்டவர்களுக்காக வேண்டியே கடனை திருப்ப கட்ட முயலுபவர்களும் சேர்ந்து அனுபவிக்கும் படியான சட்டங்கள் என்னவென்றால் நகை மீது கடன். அஞ்சு வட்டிக்காரன்கிட்ட போய் மாட்டிக்கொள்ளும் நகை வ்ங்கியில்தான் பாதுகாப்பாக இருக்கட்டுமே.
அரசு பணியாளர்கள் ஏற்கனவே அரசு உதவிகளை அனுபவிக்கிறார்கள்.இன்னும் கொஞ்சம் கடன் கொடுத்தால் ரிட்டயர்டு ஆவதற்குள் கடனை கட்டி விடுவார்கள்.இல்லையென்றாலும் காப்புறுதி பணம் அரசின் கைவசமிருக்கிறது பாதுகாப்பாக.கொடுத்த பணத்துக்கு காசு வந்து விடும்.
வியாபாரிகளை நம்பி கடன் கொடுங்கள்.அவர்கள் தின சேமிப்பாளர்கள்.கடனை திருப்பி விடுவார்கள்.பொருளாதாரத்தின் அடிப்படை செலவு செய்தல்.அதற்கென்று விஜய் மல்லய்யா மாதிரி ஆடம்பரம் செய்தால் விமானம் தரை தட்டி விடும்.எந்த அளவுக்கு மக்கள் செலவு செய்கிறார்களோ அந்தளவுக்கு பணப்புழக்கம் இருக்கும்.

தந்தி தொலைக்காட்சி விவாதத்தில் கோட் சூட்காரர் ஒருவர் நகரமயமாக்கலே மழை பேரிடருக்கு காரணமென்றார். அப்படியில்லை. ஒரு நாட்டின் வளர்ச்சியில் நகரமயமாக்கல் இன்றியமையாதது.அதுவும் பக்கத்து மாநிலக்காரர்கள் தண்ணீர் தர மறுக்க இரு கழகங்களும் நகர் மயமாக்கல் முயற்சியில் இறங்கியது பாராட்டப் படவேண்டிய சிந்தனைதான். கடற்புற நாடுகளே வியாபாரத்தை பெருக்குகின்றன.

எதிர்காலத்தில் பெட்ரோல் இல்லாமல் போனாலோ அல்லது அமெரிக்கா மாற்று எரிபொருளை கண்டு பிடித்தால் என்ன செய்வது என்ற நோக்கில் எண்ணை பொருளாதாரம் இல்லாமல் போனாலும் மேற்கத்திய நாடுகளையும்,ஆசியாவையும் இணைக்கும் பாலமாக துபாய் திட்டங்கள் தீட்டி வெற்றிகரமாக செயல்படுகிறது.

தமிழ்நாட்டில் விளையும் மாம்பழம் டெல்லிக்கு ஏற்றுமதியாகி அங்கே ஒரு நிறுவனம் தோலிருக்க சுளை முழுங்கி மாதிரி மாம்பழ சாறை மட்டும் எடுத்து ட்ரம்களில் நிறைத்து வளைகுடாவுக்கு ஏற்றுமதி செய்து விடுகிறது. தமிழகம்,கேரளாவில் விளையும் தேங்காய் சோப்பு கலவையாகவும்,மூஞ்சி பூசிகளாகவும் மறுவடிவமாக ஒய்யாரமாக பிளாஸ்டிக் பாட்டில்களில் உட்கார்ந்து கொள்கிறது.நான் அப்படியே சாப்பிடுவேனாக்கும்ன்னு ஒரு விளம்பரம் வந்த மாதிரி தேங்காய் எண்ணை அப்படியே வடித்து வந்து விடுகிறது.தமிழ் நாட்டில் பருப்பு விலையேறினாலும் மார்க்கெட்டில் விலையேற்றமில்லாமல் பொருட்களின் வைப்பு வைக்கப்படுகிறது. 

முன்னவை நகர்வதும் புதியவை வந்து உட்கார்ந்து கொள்வதும் (First in First out ன்னு தமிழில் ) பொருட் கிடங்கின் வியாபார அடிப்படை. பேரிடர் மேலாண்மையென்ற சொல்லையே இப்பொழுதுதான் நான் கற்றேன்.(நன்றி பொள்ளாச்சி புரபசர்.) பேரிடர் மேலாண்மையின் முதல் அடிப்படையே உணவு சேகரிப்பும் பங்கீடும்தான்.ஒரு நாள் குளிக்காமல் கூட இருந்து விடலாம்.உணவு கட்டாயம்.மாவட்டம் தோறும் சேமிப்பு கிடங்குகளை அதிகரிக்கலாம். ஒன்றுக்கு பழுதென்றாலும் இன்னொன்று கைகொடுக்கும்.

சதாம் உசைனின் ஆக்கிரமிப்பின் பின் கூட குவைத் தனது நாட்டின் தகவல் சார்ந்த செய்திகளை இழக்கவில்லை. தனது நாட்டில் ஒரு காப்பியும்,மாஸ்டர் காபி என லண்டன்,அமெரிக்கா என ஐந்து இடங்களில் வைத்திருந்தது. எனவே நாடு குறித்த அனைத்தையும் மீள் கட்டமைக்க முடிந்தது. முன்பு காகிதம் மட்டுமே உதவியென்ற நிலை போய் இப்பொழுது காகித ஆவணத்தோடு கம்ப்பூட்டர் தகவல்கள் அதுவும் எளிதாக சேகரிக்கும் வசதிகளில் அரசு தகவல்கள் மீட்கொணர்வு பிரச்சினையே இல்லை.காகிதத்தையும் நம்பாதே!கணினியையும் நம்பாதே புதுமொழி இந்த மழைக்கு மிகவும் பொருந்துமென்றாலும் நகல்கள் ஓரளவு தகவல்களை தக்க வைக்கும்.மத்திய மாநில இணைப்புக்கள் அவசியம்.

அரசுப் பணியாளர்கள் ரிலாக்ஸாக பணி புரியுங்கள். அரசுப் பேருந்து வாகன நடத்துனர்களைப் பாருங்கள்.அடுத்த இடம் வருவதற்குள் டிக்க்ட்டும் கொடுத்து கணக்கும் எழுதிக்கொள்கிறார்.இறுக முகம் வைக்காதீர்கள். ஹலோ சொல்லிப் பழகுங்கள்.முகத்தில் சிரிப்பு காட்டுங்கள்.மன அழுத்தம் குறையும். இம்புட்டு வேலையில் யாருக்கய்யா சிரிப்பு வரும்னு எதிர்க் கேள்வி போட்டால் குறைந்த பட்சம் கொஞ்சம் மூச்சை இழுது விட்டு ஆசுவாசப் படுத்திக் கொள்ளுங்கள். வங்கி,நீர் வரி,நில வரிக்காரர்கள் சிறப்பாகவே செயல்படுகிறார்கள்.காசைப் பார்த்துக்கொண்டே இருப்பதால்தானோ! 

சிடு மூஞ்சிகளாய்,வரிசையில் நில்லுன்னு தாசில்தார்,போலிஸ் நிலையம் குறைந்த பட்சம் பெஞ்சு போட்டு வைத்திருப்பது பாராட்டப்பட வேண்டியது. வருமான வரி கணக்கு அட்டைக்காரர்கள் ஒரு விண்ணப்பம்,ஒரு போட்டோ ஒரு வார் காலத்திற்குள் வீடு தேடி கணினி தகவல் அட்டை வந்து விடுகிறது. தற்போதைய நிலையில் ஒரு தேசிய அட்டை,ஒரு வங்கி அட்டை,ஒரு கிரடிட் கார்டு போதுமானது.

எத்தனை ஆவணத் தேவைகள்?
பள்ளி,கல்லூரி சான்றிதழ்
ரேசன் கார்டு
பாஸ்போர்ட் காப்பி
வீட்டு வரி / நீர் வரி / மின் வரி
இருப்பிட சான்றிதழ்
வாக்காளர் அட்டை
புதிதாக வந்திருக்கும் கண்,கை ரேகை
12/14 இலக்க எண்,பெயர்,படம் தவிர வேறு தகவல் இல்லாத தேசிய அட்டை

இத்தனையையும் ஒரே ஒரு டாடா கார்டு பதித்த தகவல் சேமிப்பு தேசிய அட்டை செய்து விடும்.ஒரே எண் அனைத்து துறைகளுக்கும் வங்கி உட்பட.அப்படித்தான்  தேசிய அட்டைகள் அச்சடிக்கப் படுகின்றன.

மழை கடவுள் கொடுத்த நன்கொடையா!
தின வாழ்வை கெடுத்த மின் தடையா!

மழை கூட புதுப்பித்தலே!புதியவர்களாவோம்.

14 comments:

பழமைபேசி said...

//பகிர்தலும் நன்றே!//

பேங்க் அக்கோண்ட் எண் மெயில்ல அனுப்புறனுங்கோ!!

http://rajavani.blogspot.com/ said...

ராஜ நட...உங்க யோசனையெல்லாம் செயல்படுத்த உங்களைப் போன்ற மனிதர்களை அடையாளம் காட்டலாமா..சரியாய் நடக்கும் அரசியல்வாதிகள் தமிழ்நாட்டில் தான் உண்டா..ஆளக்கொரு சாதி சங்கம் இவைகளையெல்லாம் தாண்டிய நிர்வாகம் இனி சாத்தியமா..காமராஜர் ஜீவா போன்றவர்களை எத்தனை வருடங்கள் பேசி கொண்டிருக்கப்போகிறோம்.

நல்ல நிர்வாகத்தை வழங்க நினைக்கும் அரசியல்வாதிகள் ஐஏஎஸ் அதிகாரிகளை சுதந்திரமாக செயல்படவைத்து அவர்களை கண்காணித்து கொண்டிருந்தால் தமிழ்நாட்டை சீரமைத்துவிடலாம். இது நம்ம யோசனைங்க..:)

ராஜ நடராஜன் said...

பழமை! அனுப்ப வேண்டிய முகவரி:

ராஜ நடராஜன்
இணை செயலாளர்
C/O நரேந்திர மோடி
பாராளுமன்றம் அறை 10
----------------------------

சென்னை முகவரி

முதலமைச்சர்

வீட்டு எண் 2020

சென்னை

என்று அனுப்பினாலே எனக்கு வந்து சேர்ந்து விடும். நன்றி.

? said...

//பகிர்தலும் நன்றே!//

பேங்க் அக்கோண்ட் எண் மெயில்ல அனுப்புறனுங்கோ!!//

ராசநட, பாங்க் அக்கோண்ட் எண்ணை வைச்சிகிட்டு என்னத்தை செய்ய? கூடவே ஆன்லைன் லாக்இன் -பாஸ்வேர்டை பகிரச்சொல்லவும்!

ஆமா பழமைபேசி 'sears'-யை 'சியர்சு'ன்னு எழுதி தனித்தமிழல்ல கொலையாக் கொல்லுவாரே... இப்ப தமிழ்ல்ல வங்கு கணக்குன்னு எழுதாம "பேங்க் அக்கோண்ட்" ன்னு தங்லீசுல எழுதறாரு? திருந்திட்டாரா?

ராஜ நடராஜன் said...

தவறு!சரியான ஐடியா ஒன்று சேட்டு நம்பள்கிக்கு பின்னூட்டம் போடும் போது தோன்றியது.அதோடு மேலே பழமை பின்னூட்டம் போட்ட பின் யோசித்துக்கொண்டே நடந்தேன். இனி எதிர்காலமே 010101001111001 இப்படித்தான். ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு எண். குறையும் ஞாபக சக்தியில் ஜாதி கூட்டணி தலைவர்கள் பூமியில் இப்படி பேசிக்கொள்வார்கள். அந்த 11000001110002 இருக்கிறானே அவனை எப்படியாவது ஜாதி நீக்கம் செய்து விடனும்.00001100001100 பொண்ணு கூட சுத்துறானுப்பா.
00001100001100 ஜாதி தலைவர் மூக்கைப் பிடி திருப்பி அடி என்கிறார்.இருவரும் பின் நண்பர்களாகிறார்கள். இதைப்பார்த்த 000000111000001 கட்சி தலைவர் இருவரில் ஒருவரை கூட்டணி சேர்த்துகிட்டு ஆட்சி அமைக்கிறார். கூட்டணி சேர்ந்த கோபத்தில் 000110000111 இன்னும் இரண்டு 0000011000010,00000011111000 ஜாதி கட்சிக்காரர்களை கூட்டணி சேர்த்து ஆட்சி மைக்க முயற்சிக்க எந்த எண்ணில் எந்த ஜாதிக்காரகள் நிற்கிறார்கள் என்றே தெரியாமல் ஜாதியே வேண்டாமென ஜாதி எண்களையெல்லாம் அழித்து விட நினைக்கிறார்கள். நல்ல விசயமாச்சே நானே வந்து அழிக்கிறேன் என மழை பக்கிங்காம் கால்வாயை நிறைத்துக்கொண்டு ஊருக்குள் பூந்து விட்டது.நம்பரெல்லாம் மறந்து போனதில் தமிழ் செல்வன்,மலர்விழி,தமிழ் பிரியன் கோப்பெருந்தேவி என்று புதிய இனம் ஒன்று பிறந்தது.ஜாதி எதிர்த்த ஒரு கிழவனை மட்டும் சொர்க்கததுக்கு அனுப்பி விட்டு,ஏனைய தலைவர்களை எங்கே அனுப்பலாமென சித்ர குப்தன் கணக்கு பார்த்துக்கொண்டிருந்தார்கள்.சித்ரன் குப்தனிடம் சொன்னானாம். இந்த கணக்கை நீயே பார் இம்மாம் பெரிய எண்கள் என் கணக்கு புத்தகத்திலேயே இல்லை என்றானாம்.

அரபிக்காரன் என்னையெல்லாம் எப்படி சமாளிக்கிறான் என்று நினைக்கிறீங்க!அடையாள அட்டையை வாங்குவான்.எண்ணை தட்டுவான். கணினியில் சேமிப்பான் முடிந்தது வேலை.அடையாள அட்டை வாங்குவதும் அப்படித்தான். போனில் எண்ணை பதிவு செய்தால் இரண்டு நாட்கள் கழித்து மறுபடியும் போன் செய்தால் உனது அடையாள அட்டை 21ம் பெட்டியில் உட்கார்ந்து கொண்டுள்ளது.எடுத்துக்கொள்ளவும் என்ற தகவலை தரும்.அங்கே போனால் இந்திய ரூபாய்க்கு ஒரு 500 ரூபாயை இயந்திர வாய்க்குள் போட்டால் ஆவென வாயைப் பிளந்து அடையாள அட்டையை துப்பி விடும்.முக்கியமான விசயம் பெட்ரோல் ஒன்றைத் தவிர வேறு ஒரு பொருளாதாரம் இல்லாத அரபு நாடுகள் முன்னேறும் போது எல்லா வளமும் இருக்கும் நாம் எப்படியெல்லாம் முன்னேற முடியும்.

ராஜ நடராஜன் said...

நந்தவனம்! பழமை இஃகி இஃகின்னு சிரிச்சு ரொம்ப காலமாச்சு.ரோட்டை அடையாளம் கண்டு பிடிச்சிட்டு வரும் போது அந்த ரோட்டுல போனா உடுமலைப் பேட்டை வந்து விடுமென்று மேட்டுப்பாளையம் ரோட்டைக் காண்பித்து விடுவீங்க போல இருக்குதே!

அவர் சொன்ன சியர்சை நீங்க sears ன்னு எடுத்துகிட்டா அவரா பொறுப்பு. நீங்க சொன்ன சியர்செல்லாம் இங்கே போணியே ஆகிறதில்ல அவர் சொல்லும் சியர்சு அரசல் புரசலா நடக்குது.ஷேக்குகள் சரக்குல கலக்க வேண்டியோ என்னமோ Budweiser ஆல்ஹகால் கலக்காம கடையை திறந்து வெச்ச்ருக்காங்க.ஏசு (ACE) காயலாங்கடை,kfc,மாட்டுக்கறி பர்கர்,இத்தாலி பிசாசு எல்லாம் சிறப்பாக செயல்படுகின்றன.

கார்,தொழில் நுட்பம் அனைத்தும் அமெரிக்கா சார்ந்தே.அமெரிக்க பதிவர்கள் கொஞ்சம் அள்ளி விட்டீங்கன்னா நம்மவர்களுக்கும் பயன் படுமில்ல. சீமான் 2016ல நாங்கதான் ஆட்சி அமைக்கப் போறோம்ன்னு 2010ல கதை விட்ட மாதிரி 2020க்கு நானும் மேலே விலாசம் போட்டிருக்கிறேன். கூட்டு சேருவதென்றால் உடனே கடிதம் அனுப்பி வைக்கவும்.பரதேசிகள் கட்சியில் பொருளாளர் பதவி வேண்டுமென்றால் தருகிறேன்.கொள்கை பரப்பு செயலாளர் ஒருவரையும் தேடிக்கொண்டிருக்கிறேன்.யாராவது இருந்தால் சிபாரிசு செய்யவும்.

? said...

முன்னேற முடியும்தான். ஆனால் ஓசியில் எவனாவது தக்காளி சாதம் கொடுத்தால் அதை பாதி தின்று விட்டு தூக்கி எறிந்துவிடுகிறார்களாம், நிற்பது இடுப்பளவு தண்ணியில்.ஏன்னா இன்னொரு குரூப் புளிசாதம் கொண்டு வருகிறதாம்... அடுத்த தெருக்காரன், பட்டினி கிடப்பானே என்றோ, இல்ல இந்த தண்ணீல சிலர் கஸ்டபட்டு வந்து சாப்பாடு தருகிறார்களே என்ற எண்ணமில்லை. இப்படி அந்த நிமிடம் பற்றி சுயநலத்துடன் சிந்தித்தால்தான் பல வருடம் அடிமையாக இருந்தோம்...இப்போது இப்படி நாறி கிடக்கிறோம்.

அமெரிக்காவில் எங்கு பார்த்தாலும் சைனாக்காரன் பூராவும் ஒரு டீமாக இருப்பான், புதிய இடத்திற்கு குடி போனாலும் 1 வாரத்தில் நட்பாகிவிடுவார்கள். நம்மாளு என்ன மொழி, இந்தியா தமிழா ன்னு ஆரம்பிச்சு எந்த சாதி பாப்பானா இல்ல கவுண்டனா எனபார்த்து முடிப்பதற்குள் அடுத்தூருக்கு மாற்றலாக வேண்டியிருக்கும்!!

வேகநரி said...

மழை கடவுள் கொடுத்த நன்கொடையா!
தின வாழ்வை கெடுத்த மின் தடையா!
மழை கூட புதுப்பித்தலே!புதியவர்களாவோம்.

கவிதையா நன்றாக உள்ளது.

//தற்போதைய இடர் நிலையில் கரம் தந்து உதவிய நல் உள்ளங்கள் அனைவருக்கும் முதற்கண் நன்றி.//
பல நல்ல உள்ளங்கள் உதவி செய்யும் போது, சிலருக்கு மட்டும் விளம்பரம் கொடுக்காமல் எல்லோருக்கும் நியாயமாக நன்றி தெரிவித்துள்ளீர்கள்.
//நம்மாளு என்ன மொழி, இந்தியா தமிழா ன்னு ஆரம்பிச்சு எந்த சாதி பாப்பானா இல்ல கவுண்டனா எனபார்த்து முடிப்பதற்குள்..//
சகோ நந்தவனத்தான் சொன்னது முற்றிலும் உண்மை.

ராஜ நடராஜன் said...

நந்தவனம்!இது என்ன புது செய்தி!இருக்கும் நிலையில் பாதி உணவை தூக்கி வீசும் நிலையிலா தமிழகம் இருக்கிறது.எனக்கு உங்கள் செய்தி புதிது என்பதுடன் சந்தேகமாகவும் இருக்கிறது.தகவல் சுட்டி ஏதாவது? மூஞ்சி தெரியலை அதை நான் நம்பமாட்டேன் ஆனால் வீடியோவில் கழுத்துல போட்ட செயின் முதற்கொண்டு தெரிகிறது.அதனால் ஸ்டிக்கர் செய்தி உண்மையாகத்தான் இருக்குமென பல்டி அடிக்கும் பதிவர்கள் போல சரியான தகவல் தெரியாத வரைக்கும் நானும் நம்ப மாட்டேன்:)

நமக்கெல்லாம் தமிழ் குரல் கேட்டால் போதும்.எந்த ஊர்ன்னு கேட்பதோடு பிரண்ட்ஷிப் வந்து ஒட்டிக்கொள்ளும்.நட்பு தொடர்வதற்கு தினமும் சந்தித்தாக வேண்டும். இல்லைன்னா பொட்டிக்கடை நட்பு,பிரியாணிக் கடை நட்புன்னு ரயில் பயண நட்பு மாதிரி முடிந்து விடும்.

பார்ப்பனியமெல்லாம் என்னை இதுவரை தீண்டவில்லை.ஆனால் எந்த ஜாதிக்காரனாக இருப்பானோ என்ற இடைச்சாதி புத்திகள் ஏர்போர்ட்டை விட்டு இறங்கினவுடனே வந்து உட்கார்ந்து கொள்கிறது.நம்ம தமிழ்வேறு வட்டார வழக்கு கலக்காத தமிழ் என்பதால் ஜாதி விடுகதை விடை தேடுபவர் குழம்புவதற்குள் குடிக்கிற காபியோ அல்லது டாக்சியோ வீடு போய் சேர்ந்து விடும்.மறுபடியும் இமிக்ரேசன் செக் இன் பண்ணி விமானம் ரன்வேயில் ஓடும் போதே ஜாதி காற்றோடு பறந்து விடுகிறது.அரபு தேச ஏர்போர்ட் வந்தவுடன் நான் இந்தியன் என்று ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பி விடுகிறான்.


ராஜ நடராஜன் said...

வேகநரி! கமல் மறுபடியும் அன்பே சிவம் மாதிரி படமெடுத்தால் தேவைப்படுமேன்னு ஒட்ட வைத்திருக்கிறேன்:)முன்பே சொன்ன மாதிரி அந்த கணத்தில் பிறக்கும் பட்டாம்பூச்சிகள் இவை.

எல்லோரும் உதவுகின்ற நிலையில் சிலர் மறுபடியும் பழைய பஞ்சாங்கத்தை பதிவுலகில் தூசி தட்டலாமென தொடுப்புக்கள் வருகின்றன.யார் என்ன உதவி செய்கிறார்கள் என்பதை மழை காட்டிக்கொடுத்து விட்டது. கழக ஸ்டிக்கர்களுக்கு இணையா மத ஸ்டிக்கர் ஒட்டுவது நல்லதாகப் படவில்லை.யார் யார் என்பதை மழை சொல்லிற்று.புரியலேன்னா கவிதை.புரிஞ்சா கமலஹாசன் மாதிரியான குழப்பம்:)

ராஜ நடராஜன் said...

பழமை,நந்தவனம்,வேகநரி! மறுபடியும் பின்னூட்டம் பார்க்க வந்தால் உங்களுக்கு ஒரு செய்தி.
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் புதிய தலைமுறை மழையால் பாதிக்கப்பட்ட சிறு தொழில் நிறுவனர்கள்,உழைப்பாளிகளுடன் கலந்துரையாடல் செய்தது. நான் பதிவில் சொன்ன கருத்தையே 75 லட்சம் முதலீடு செய்து CNC பட்டறை நிறுவனம் அமைத்தவர் சொன்னார்.எங்களுக்கு இலவசமெல்லாம் வேண்டாம்.நீண்ட நாள் கடனாக கடன் உதவி தேவை.கொஞ்சம் கொஞ்சமாக கட்டி விடுவோம் என்றார். தொழில் முனைவோரிடம் இடம்,இயந்திரங்கள் உள்ளன. அப்புறம் கடன் தருவதில் என்ன தயக்கம்.மைக்ரோ பொருளாதாரம் வளர்ந்தால்தான் பெரும் பொருளாதாரம் வளரும்.முன்பு ஜப்பான் வளர்ந்தற்கு சிறு தொழில்களாய் துவங்கிய ரேடியோ,வாட்ச் போன்றவை பின் உலகத்தரம் வாய்ந்த பொருட்களாகின.சீனாவும் இப்போது அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது.

மழையில் நிற்கும் காரில் சாவிய விட்டா காப்பீடு கிடையாதாம்.இப்படியெல்லாம் அரத புரதான சட்டங்களோடு பொருள்,பணம் அமுக்கி காப்பீட்டு நிறுவனங்கள் செயல்பட்டால் இன்னுமொரு புது தலைமுறைதான் பாரம் சுமக்க வேண்டும்.

சீரியல் பார்க்குற கூட்டத்தையெல்லாம் நம்ம பதிவுலகம் பக்கம் திருப்பி விட்டாலே பாதி பிரச்சினைகளை தீர்த்து விடலாம்:)

? said...

ராசநட, என்னை என்ன சோசியல் மீடியாவுல வந்து புரளி கெளப்புற பார்ட்டின்னு நினைச்சுகிட்டீரா? உண்மைனா கில்லி மாதிரி நிப்போம் தெரியுமில்லை. ஆதாரமில்லாம சுவாரஸ்யத்திற்க்காக கதை விடுவது எப்போதுமில்லை ஓய்!
இதோ வெள்ள நிவாரண சேவகர் அருண் கிருட்டினமூர்த்தி தந்தி டீவியில் ஆயுத எழுத்தில் பேசியதை கேளும். உமக்கு முழுவதும் பார்க்க நேரமிருக்காது என்பதினால் அந்த டைம்கூட குறித்திருக்கேன். 4.47லிருந்து 10 செகண்ட் பாரும் https://youtu.be/hDGfEr0cALE?t=4m47s

தக்காளி சாதம் புளிசாதம் என்று சாதத்தைகூட என்ன அக்கியூரட்டா எழுதீறுக்கேன் பாரும் :)
சென்னையில் அரிசியும் பருப்பும் மூட்டைகளாக வீணாக சென்னை தெருவில் கிடந்த படங்களை பார்த்தேன்(உடனே ஆதாரம் கேட்காதீர் தேடநேரமில்லை).

==============
இலவசம் வேண்டாம் என்று சொல்லுபவர்கள் தமிழ்நாட்டில் 10 சதவீதம்கூட தேறமாட்டார்கள் என்று நினைக்கிறேன். சில வருடங்களுக்கு குஜராத், கர்நாடாக இந்த இரண்டு மாநில தேர்தலில் போது காங்கிரஸ் இலவச வாக்குறுதி மாடலை அறிமுகம் செய்தது. ஐடியா உபயம் திமுக. டீவி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுகவும் காங்கிரசும் அப்ப கூட்டாளிகள். ஆனால் இரண்டு மாநிலத்திலும் காங் தோற்றது. ஆனால் அடுத்த தேர்தலில் இலவசம் இல்லாம கர்நாடாகவை கவ்வியது காங். ஆகவே தமிழ் இனத்தை போல் ஒரு பிச்சைக்கார இனம் இந்தியாவிலேயே இல்லை என்பதுதான் உண்மை. இதை நான் எழுதினால் உடனே பார்ப்பனாக என்னை சாதி மாத்தி தமிழ்விரோதி என்றெல்லாம் உளருவார்கள். ஆனால் நாஞ்சில் சம்பத் இதையே சொல்லிவிட்டார் - மாணவர்களுக்கு அம்மா போட்ட பிச்சையாம் லேப்டாப்... இதுக்கு அப்புறமும் மானங்கெட்டு இலவசத்தை வாங்குவானுக நம்மாளுக என்பதுதான் வேதனை.

===============

சாவியை விட்டா காப்பீடு இல்லைன்னு உமக்கு எவன் சொன்னான்? நீர் சாவிய சொருகுவதை கண்டிபிடிக்குமளவு நம்மிடம் டெக்குனாலஜி வளர்ந்துடுச்சா என்ன?

ஒரு இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரி கருத்துபடி நீரில் கார் சேதப்பட்டால் இன்சூரன்ஸ் பணம் உண்டு. ஆனால் நீரில் மூழ்கிய காரை ஸ்சுடார்ட் செய்தால் ஊஊஊதான். ஏன்னா முதலாவது விபத்து, இரண்டாவது தனக்கு தானே வைக்கும் ஆப்பு (man-made).

================
உங்காளு அம்மாவுக்கு 15 லட்சம் காணிக்கை செலுத்தி கால்ல விழுந்து மின்சாரம்/தண்ணீ இணைப்பை மீண்டும் பெற்றாராமே? இந்த இளவோட படத்தை பாரும்... ( இப்பவே சொல்லிட்டேன் இது பிட்டு இல்லை)

https://twitter.com/vivaji/status/673885855807836161

வேகநரி said...

சீரியல் பார்க்குற கூட்டத்தையெல்லாம் பதிவுலகம் பக்கம் திருப்பி விட்டாலே பாதி பிரச்சினைகளை தீர்த்து விடும் என்பது சீரியஸான விஷயமே. இப்படி நல்ல கருத்துக்களை தொடர்ந்து எழுங்க.
ஹிந்தியை தாய் மொழியாக கொண்ட ஒரு லூசு பேஸ்புக்கில் வெள்ளத்தில் தமிழர்கள் இறப்பதைதைப் பற்றி தான் கவலைப்படவில்லை என்று எழுதியிருந்திச்சு, அதற்கு பதில் கொடுத்தவங்க பெயரை பார்த்து நம்ம அண்ணியாரோ என்று தவறுதலாக நினைத்துவிட்டேன்.

? said...

கடைய அம்போன்னு தொறந்து விட்டுட்டு அடுத்தவங்க கடையில போய் டீ ஆத்திகிட்டு இருக்காரு. இந்த லட்சணத்தில் அரசியலாம்...ராசநட நீர் அரசியலுக்கு வந்தா தொண்டன் லெவலுக்கு மேல தாண்ட மாட்டீரு!!!