Followers

Saturday, December 26, 2015

கலைஞர் தொலைத்த மதராசி!

கலைஞர் மீது குடும்ப அரசியல், ஈழத்தமிழர்கள் இரு பெரும் அரசியல் தவறுகளின் விமர்சனங்கள் இருந்தாலும் அவரது ஆட்சித்திறனின் நன்மைகள் தமிழர்களுக்கு பரவலாக போய் சேர்ந்திருக்கிறது. என்னடா தேர்தல சமயத்துல யூ டர்ன் போடுறானே....அவ்வ்வ்ன்னு நினைப்பவர்களுக்கு சட்டியில் இருப்பதுவே அகப்பையில் வருகிறது.

இந்தி சிரிப்பு நடிகர் மெஹ்மூத் முத்துக்குளிக்க வாரீகளா என்ற ஆச்சி மனோரமாவின் பாடலை இந்தியில் அப்படியே பிரயோகித்ததோடு மதராசிகள் இந்தி பேசுவதை நையாண்டி செய்வார். தமிழனுக்கு இந்தியே தெரியாது என்ற அடிப்படையே தெரியாமல் நிலம் பெயர்ந்த சேட்டன்களும், ஏமண்டிகாரும், தாராவி தமிழர்களும் பேசிய இந்திக்கு நக்கலுக்கானவர்கள் மதராசிகள். 

இதற்கான காரணம் மெட்ராஸ் மட்டுமே வடக்கத்தியவர்களுக்கு தெரிந்த ஊர்.திருவனந்தபுரம்,கொச்சின்,ஹைதராபாத்,விசாகபட்டினம்,பெங்களூர்,மங்களூர் போன்றவை ஆப்பிரிக்க இருண்ட கண்டத்தின் பெயர்கள்.

முன்பு வைஜயந்திமாலா, ஹேமமாலினி,ரேகா, ஸ்ரீதேவி ( ஸ்ரீ எப்படி தட்டச்சுவதுன்னு சொல்லுங்களேன்,தலையை குழப்புது) இப்பொழுது தொலைகாட்சி விரிவாக்கத்தால், அமிதாப்பச்சன், சாருக்கான், கமலஹாசன் போன்றவர்களால் ஓரளவு தென்னிந்தியா பற்றி வட இந்திய சராசரி மனிதர்கள் தெரிந்து வைத்திருப்பார்கள். 

மெரினா கடற்கரையே தெரியாத தமிழ்நாட்டு மாவட்டக்காரர்கள் போல் முன்பு வட இந்தியர்களுக்கு கர்நாடகா,கேரளா,ஆந்திரா,தமிழகம் எல்லைகள் தெரியாது. தென்னிந்தியாவிலிருந்து யார் வடக்கே சென்றாலும் அவர்கள் மதராசிகள்தான் பின் பாலசந்தரின் ஏக் துஜே கே லியே கமலஹாசன் வசனம்,எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடல்கள்தான் மதராசிகளின் புதிய அளவுகோல். 

உத்தர பிரதேஷ்,மத்திய பிரதேஷ்,டெல்லி இந்தியோடு ஒப்பிடும் போது தென்னிந்தியர்களின் இந்தி உச்சரிப்பு அவர்களை எளிதாக காட்டிக்கொடுத்து விடும். மெஹ்மூத் கிண்டல் இந்தி பேசுபவர்கள் யார் என்ற என் அகழ்வாராய்ச்சியில் சிக்கியவர்கள் ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்டத்தை சார்ந்தவர்கள். ஹைதராபாத்தை விட கடப்பா பம்பாய்க்கு பஞ்சம் பிழைக்க வறுமையான மாவட்டம் என்பதோடு எளிதான ரயில் பயணமும் கூட.

சிவசேனாவுக்கு எப்பொழுதும் ஒரு எதிரி வேண்டும். முன்பு மதராசிகள். இப்பொழுது பீகாரிகள்.

கலைஞர் மெட்ராஸை சென்னை என்று மாற்றிய பெயரோடு மதராசிகள் காணாமல் போய் விட்டார்கள். 
கிரிக்கெட் அரசியலை தாண்டி சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகி விட்டது.
சாருக்கான் லுங்கி டான்ஸ் குத்தாட்டம் போட வைக்கிறது.

உடன் பிறப்பே!
எதிரிகள் அணியிலிருந்து கழக பாசறைக்கு
வந்த நீ முகநூலுக்கு முரசு கொட்டு
ட்விட்டரின் கதவை டொக் என்று தட்டு

என கலைஞரின் கவிதைக்கு காத்திருக்கிறேன்!11 comments:

தி.தமிழ் இளங்கோ said...

எம்ஜிஆர் காலத்திலிருந்தே மக்கள் மத்தியில் ஒரு பார்வை கலைஞர் மீது விழுந்து விட்டது. அது என்னவென்றால், கருணாநிதி எது செய்தாலும் தப்பு; கருணாநிதி செய்தால் ஊழல்; அதே காரியத்தை எம்ஜிஆரோ, ஜெயாவோ செய்தால் தப்பு இல்லை; ஊழல் இல்லை. கருணாநிதி ஆட்சியில் பால் விலையில், பஸ் கட்டணத்தில் கொஞ்சம் ஏற்றினாலும் போதும் எல்லோரும் குதிகுதியென்று ஆகாயத்திற்கும் பூமிக்கும் குதிப்பார்கள். அதே சமயம் அம்மா ஆட்சியில் எவ்வளவு ஏற்றினாலும் தாங்கிக் கொள்வார்கள். அது என்னவோ அவர் ராசி அப்படி; இவர் ராசி இப்படி. – தமிழ்நாட்டில் இப்படி ஒரு சித்தாந்தம் இருக்கிறது.

ராஜ நடராஜன் said...

இளங்கோ சார்! வணக்கம். எம்.ஜி.ஆர் காலங்கள் என்பதையெல்லாம் தாண்டி கலைஞர் வலுவாகவே இருந்தார். அரசியல் ஏற்ற இறக்கங்களை தி.மு.க தாண்டி வந்தது அவரது தனிப்பட்ட சாதனை. இப்போதைய பின்னடைவை முன்பு சந்தித்ததில்லை. காரணங்களை பதிவின் துவக்கத்திலேயே சொல்லியாகி விட்டது.சொன்ன இரண்டு காரணங்களுமே அவரது மொத்த சாதனைகளையும் பின் தள்ளி விட்டன.

ராஜ நடராஜன் said...

பதிவர்கள் இளங்கோ,தவறு,வேகநரி மற்றும் பதிவையும் பின்னூட்டங்களையும் பார்வையிடும் நண்பர்களுக்கு முந்தா நாள் சொன்ன குரங்கு மர புளியம் பழம் பலரையும் குழப்பியிருக்கிறது.

அதில் சொன்ன பழுத்த பழமே வலு கொண்டு எழுகிறது என்ற வரிகள் கலைஞரை குறிக்கும்.

அடுத்த வரி பதிவின் சாரத்தை குறிக்கிறது.

http://parvaiyil.blogspot.com/2015/12/blog-post_24.html

இதற்கும் மேல கோனார் நோட்ஸ் தான் போடனும்.

Amudhavan said...

நீங்களும் திரு இளங்கோ அவர்களும் சொன்னதைத்தான் நான் இன்னமும் கொஞ்சம் விரிவாகச் சொல்லிவருகிறேன். இப்போதுதான் 'கேளாக்காதர்கள்' சிறிதளவாவது கேட்கத் தலைப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் கேட்கவேண்டும் என்பதற்காக செம்பரம்பாக்கம் ஏரியைத் திறக்காமல் வைத்திருந்து திறந்து விடத்தான் வேண்டும் போலிருக்கிறது.

ராஜ நடராஜன் said...

அமுதவன் சார்!வணக்கம். நாம் எந்த வித சுயநலங்களுமில்லாமல் விவாதிக்கிறோம். எனவே வெறுமனே விமர்சனங்கள் என்ற பார்வையை தவிர்த்து ஆக்க பூர்வமான ஆரோக்கியமான கருத்தையும் பகிர்கிறோம். தி.மு.க வின் செயலர் ஒருவர் திரு. சண்முகம் என்பவரது தொலைக்காட்சி பேட்டி ஒன்று காண நேர்ந்தது. அவர் திரு.ஸ்டாலின் சார்பாளர் என்கிற கருத்தை தொலைக்காட்சி காணல் வெளிப்படுத்தினாலும் சண்முகம் கருத்தில் நியாயம் இருப்பதாகவே பட்டது. ஆனால் அவரை கட்சியை விட்டு நீக்கி விட்டது கழகம்.

இரண்டு தவறில் ஒரு தவறை மாற்றுவது இயலாத படி சரித்திரம் அமைந்து விட்டது.ஆனால் இன்னுமொரு தவறை சரி செய்ய வாய்ப்புக்கள் இருந்த போதும் சரி செய்யப்படுவதில்லை. முந்தைய காலம் போல் மேடையில் ஒருவர் பேச அனைவரும் மணலில் உட்கார்ந்து கொண்டு பேசிய காலம் போய் பொது கலந்துரையாடல் என்ற நிலைக்கு அரசியல் வந்து விட்டது.

அதிரடி மாற்றங்கள் கலைஞரின் காலத்திலேயே நிகழ்ந்தால் தி.மு.க நிலைக்கும்..

தவறு said...

ராஜ நட...தி.மு.க நிலைக்கும் நல்லாட்சி கிடைக்குமா..!!?? தி.மு.க. லோக்கல் அரசியல் மிக மிக மோசம்.

வேகநரி said...

கலைஞர் மீது தாக்குதல் நடத்துவது மிக சுலபமாக பலருக்கு உள்ளது. இலங்கை விஷயத்தில் பல்வேறு வெளிநாட்டு தொலைகாட்சி ஆய்வுகளை பார்க்கும் ராஜ நடையே கலைஞரை குற்றம் சொல்லும் போது, மற்றவர்கள் எல்லாம் தங்கள் இஷ்டத்திற்கு பூஜியங்களை எடுத்து விடுவார்கள். இலங்கையில் நடந்தவைகளில் எதையும் கலைஞரால் நிறுத்தியிருக்க முடியாது. ஆனால் எல்டிடிஈ என்ற தீவிரவாத அமைப்புக்கு இங்கிருந்து கொம்பு சீவிவிட்ட வைகோ போன்ற அரசியல்வாதிகளும், தோற்க்கடிக்கபடவே முடியாத தீவிரவாத அமைப்பு என்று யுத்தத்தை ஊக்குவித்தவர்களும் யுத்த பாதிப்புக்களுக்கு எல்டிடிஈயுடன் பொறுப்பை ஏற்று கொள்ள வேண்டியவர்கள். ஆனால் பழி கலைஞர் மீது.

ராஜ நடராஜன் said...

//தி.மு.க நிலைக்கும் நல்லாட்சி கிடைக்குமா..!!??//

சமூக ஊடகங்களில் மட்டுமே விவாதங்களை முன் வைக்க இயலுகிறது. ஒவ்வொரு கட்சி சார்ந்தும் மந்திரிச்சு விட்ட கோழிகள் மாதிரியே நிறைய பேர்கள் இருக்கிறார்கள். இதில் முக்கியமாக இரு கழக ஆட்சிகள் தாண்டி வரும் துணிவு தமிழர்களுக்கு இல்லை.

குடும்ப அரசியல் பெரும் நோயை தவிர்த்தும்,லோக்கல் அரசியல் கடந்தும் கலைஞரின் ஆட்சி பறவை பார்வையில் நல்லாட்சி எனவே கருதுகிறேன். இல்லையென்றால் மக்கள் திரும்ப திரும்ப அரியணையேற விட்டிருக்க மாட்டார்கள்.

மகேச மக்களின் இருக்கும் வரை கலைஞர் தீர்ப்புக்கும் அப்பால் ஜனநாயகத்திற்கு எதிரான வாரிசு அரசியலை தமிழகம் பரிசோதனை செய்யக்கூடாது என்பது எனது தனிப்பட்ட விருப்பம்

ராஜ நடராஜன் said...

வேகநரி!மக்கள், அரச பலமிருந்தால் எதுவும் சாத்தியம் என்பதற்கு தமிழ்நாட்டின் இந்தி எத்ர்ப்பு போராட்டமும் அதனை தொடர்ந்து இதுவரை தமிழகத்தில் இந்தி ஆட்சி மொழியாகவில்லை என்பது சிறந்த உதாரணம்.பதிவுலகம் மட்டுமே இலங்கை போரின் இறுதி கால கட்டங்களை சரியாக பிரதிபலித்தது.கலைஞரின் இலங்கை தகிடுதத்தங்களை எல்லோரும் பிரிஞ்சு மேய்ந்து விட்டார்கள். இந்து பத்திரிகை ராம் மத்திய அரசும்,மாநில அரசும் கைகோர்த்தது என்றார்.போர் பற்றி இப்பொழுது நினைத்தாலும் பெருமூச்சு மட்டுமே வருகிறது. புலிகளின் தட்டைப்பார்வையை விமர்சனம் செய்யுங்கள் ஆட்சேபனையில்லை.ஆனால் மக்களின் படுகொலைகளை பின் தள்ளாதீர்கள்.மக்களின் ரத்தங்களின் மீது பூசப்பட்ட அரசாட்சிக்கு ஒரு நாள் அதன் வலி தெரியும்.

போரற்ற இலங்கையின் ஒரே நன்மை குண்டு வெடிப்புக்களை இல்லாமல் செய்ததுதான்.

வை.கோவுக்கு அரசியல் செய்ய தெரியவில்லையென்று சொல்லுங்கள்.ஏற்றுக்கொள்ளலாம். வை.கோ கொம்பு சீவி விட்டு வலுவாகும் நிலையிலா புலிகள் இருந்தார்கள்.

கருணா,பிள்ளையான்,பத்மநாபன் இலங்கை தேசபக்தர்களாகி விட்டார்கள். புலிகள் தமிழர்களின் மொத்த பிரச்சினைக்கும் காரணமாகி விட்டார்கள் இல்லையா?

selvaraju M said...

Hello dears
I am selvaraju from chennai(bvselvaraju@gmail.com).
Mr.Raja Natarajan passed away on 3rd Jan 2016 due to heart attack in Kuwait. His body is going to reach coimbatore on 7th Jan 2016 about 4 AM. Praying to get his soul RIP. For more details please contact my uncle(+ 91 9840175869)

selvaraju M said...

Hello dears
I am selvaraju from chennai(bvselvaraju@gmail.com).
Mr.Raja Natarajan passed away on 3rd Jan 2016 due to heart attack in Kuwait. His body is going to reach coimbatore on 7th Jan 2016 about 4 AM. Praying to get his soul RIP. For more details please contact my uncle(+ 91 9840175869)