சில பதிவுகளை காணும் போது தலைப்பு மட்டும் நச்சுன்னு வந்து விழுகிறது.மழை வந்து ஒட்டியும் ஒட்டாத ஸ்டிக்கர்,நமக்கு நாமே திட்டம்,புதுக்கூட்டணி,கிரனைட் கல்லை தேடும் சகாயத்தைக்கூட தேடிகிட்டிருக்காங்க
நாந்தான் முதல் அமைச்சர்ன்னு ஆறு மாசத்துக்கு முன்னாடி போஸ்டர் ஒட்டியும் கூட தமிழ்ப் பசங்க நம்ம பேரைக்கூட உச்சரிக்க மாட்டேன்கிறார்களே என்று கூட்டணி கோபத்தையும்,தமிழ் சாணக்கியனே தூதுவிடுவதை தூங்கி எழுந்த ஸ்லிப்பர்கள் புலம்பி கார்ட்டூனில் சோகமாகிப்போனார்கள்.
நமக்கெல்லாம் கார்ட்டூனுக்கு நேரமே செலவழிக்க வேண்டிய அவசியமில்லை.உங்கள் நிலவொளிக் கூட்டங்களை கூகிளான் படம் பிடித்து வைத்திருக்கிறான்.
நிலவொளிக்கு அக்னி சூடா
காட்சிகள் பேச்சுக்கு தமிழா
குரங்கு தாண்டுவது மட்டும்
கிடைக்காத புளியம் பழம்
ருசிக்காத பட்சத்தில் புளிப்பும்
பழுத்த பழமே வலு கொண்டு எழுகிறது
உங்கள் முதுகெலும்புகள் ஒடிந்து போயின
ஒதுக்கி வைத்தவர்களையும் மழை
இன்று கட்டித் தழுவுகிறது.
பிரித்தல் அரசியலுக்கு பரிகாரங்கள் தேடுங்கள்
இன்னுமொரு தேர்தல் வராமலா போய் விடும்.
டிஸ்கி: பதிவுலகம் வரும் வரை உங்கள் குழுப் பெயர் கூட தெரியாத அரசியல் விமர்சகன்.