Followers

Wednesday, March 9, 2011

இந்த ஆள திருத்தவே முடியாது:)

ஒரு மனுசன் எப்படியெல்லாம் நாக்கை திருப்பலாமுன்னு படிக்கும் போது வரும் சிரிப்புக்கு அளவேயில்லை.நகைச்சுவை பதிவு போடும் பதிவர்கள்,பின்னூட்டத்துல பின்னுற ரிதமிக் டைமிங்காரர்களுக்கு கொண்டு வந்து கொட்டுறார் கருணாநிதி.சிரிப்பா சிரிக்கும் பொழப்ப நினச்சு வந்த சிரிப்பை அடக்க முடியாமல் இந்த பதிவு நகைச்சுவை பதிவில் இடம் பெறுகிறது:)

இனியும் கேட்கிறவன் கேனயன்ங்கிற நினப்புல உதிர்த்த முத்துக்கள்....

தி.மு.க கூட்டணியில் கட்சிகள் இணையும் போது நடக்கும் சில சாதாரண நிகழ்வுகளை வேண்டுமென்றே சில பத்திரிகைகள் திசை திருப்பி விட்டன. கூட்டணி அமைப்பதிலே இழுபறி, தயக்கம் என்றெல்லாம் நிலை இருப்பதாக நம்முடைய அன்பிற்குரிய பத்திரிகையாளர்கள் சில பேர் மிகமிக கேவலமாக ஆத்திரத்தோடு, பொறமையோடு, அசூயையோடு இந்த அணி உருவாக கூடாது, உறவு ஏற்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தால் தவறான செய்திகளை திசைதிருப்பல்களை செய்தார்கள். அவர்களுக்கு எல்லாம் நல்ல பதிலாக இன்றைய நாள் (காங்கிரஸ் உடன் கூட்டணி) அமைந்திருக்கிறது.

திராவிட முன்னேற்ற கழகம் இன்று இந்த அணியிலே இருக்கின்ற கட்சிகள் இவைகள் எல்லாம் எந்த அளவுக்கு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையோடு, தோழமையோடு, நேசம் நட்பு இவைகளிலே நீங்காத பற்றுமு கொண்டவை என்பதற்கு எடுத்துக்காட்டாக தி.மு.கழகம் 121 இடங்களை மட்டும் வைத்துக் கொண்டு, மற்ற இடங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட தோழமைக்கட்சிகள் போட்டியிடுகின்ற வாய்ப்பை வழங்கியிருக்கிறது என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

பாட்டாளி  மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் அவர்களை கேட்டுக் கொண்டதற்கிணங்க 31 இடத்திலே ஒரு இடத்தை விட்டு தந்து 30 இடங்களாக பா.ம.க தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. அதைப் போலவே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 இடங்கள் தான் இருந்தன. அவர்கள் ஒரு இடத்தை விட்டுக் கொடுத்து இரண்டு இடங்களை தக்க வைத்துக் கொண்டனர். இவைகளை எல்லாம் கூட்டினால் தான் காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்கள் வந்துள்ளன.
 
வடிவேலு தோற்றார் போங்க:)

15 comments:

Chitra said...

:-)))

Suresh Kumar said...

இவரு தெரிஞ்சி தான் காமெடி அடிக்கிறாரா இல்லை எழுதி குடுக்கிறத வாசிக்கிறாரா ?

வானம்பாடிகள் said...

ஹி ஹி. நாம அன்னைக்கே பஸ்விட்டம்ல

Vasu Balaji - Buzz - Public - Muted
எழவு இந்த ட்ராமா கொடுமை ஒரு பக்கம்னா நாளைக்கு இந்தாளு

உடன் பிறப்பே,

கடந்த இரண்டு தினங்களாக ஒரு குடும்பத்தில் ஏற்படும் சிறு பிரச்சனையை ஊதிப் பெருசாக்கி சின்னாபின்னப் படுத்தி ‘அண்ணா எப்போ சாவார், திமுக எப்போ என்னுதாகும்’ என்று நான் கொண்ட கனவைக் கொச்சைப் படுத்தி, 2 ஜி 3 ஜி என்றெல்லாம் ஊகம் வைத்து தியாகச் சுடர் அன்னை சோனியாஜியை உசுப்பேத்தி, கலைஞர் டிவி ரெய்டு, கனிமொழி நீ வெய்ட்டு என்றெல்லாம் கீழ்த்தரமாக எழுதியும், பேசியும், பஸ் ஓட்டியும், அழிந்தது கழகம் என்றும், அம்மணி ஆட்சி என்றும் மனப்பால் குடித்தவர்களுக்கு நாளைக்குப் பால் என்று நீ கூத்தாடுவது எனக்குத் தெரிகிறது. இதைக் கண்டெல்லாம் துவண்டுவிடாமல் தேர்தலில் செவ்வனே களப்பணியாற்றி என் முன் வா அடலேறே!

இப்புடி இந்த எழவு கடிதத்தை வேற படிக்கணுமே.அவ்வ்வ்வ்..

ராஜ நடராஜன் said...

:-)))

சிரிப்பை அடக்க முடியலையாக்கும்:)

ராஜ நடராஜன் said...

//இவரு தெரிஞ்சி தான் காமெடி அடிக்கிறாரா இல்லை எழுதி குடுக்கிறத வாசிக்கிறாரா ?//

வாங்க அடிச்சு ஆடும் சுரேஷ் குமார்:)

யாரு கண்டா? நேற்று கூட்டணி உடன்படிக்கை உறுதியானதும் அவசர அவசரமா வாசித்த அறிக்கைல அவர் மூஞ்சியப் பார்க்கணும்.சாணி க்யத்தனம் வழிஞ்சது.

ராஜ நடராஜன் said...

//ஹி ஹி. நாம அன்னைக்கே பஸ்விட்டம்ல//

முன்னமே பஸ்விட்டாச்சா:)நானும் வண்டி ஓட்டிகிட்டே சிரிச்சிகிட்டே வந்தேன்.பக்கத்து ட்ராக்குல போறவனெல்லாம் என்ன நினைச்சானோ என்னை:)

ஹேமா said...

இப்பத்தான் தெரியுதாக்கும் !

பட்டாபட்டி.... said...

ஏண்ணே.. போற போக்குல, என்னோட பட்டாபட்டியையும் கழக சொத்துல சேர்துடுவாங்க போல இருக்குண்ணா..

:-)

ராஜ நடராஜன் said...

//இப்பத்தான் தெரியுதாக்கும் !//

அம்மில மசாலா அரைக்க அரைக்க அம்மியும் நகரும்ங்கிறத சமையலறையில் பார்த்திருக்கேன்.இந்தக்கல்லு நகரவே நகராது போல தெரியுதே:)

அநியாயத்துக்கு அழுகுணி ஆட்டம் போடறாரு.

ராஜ நடராஜன் said...

//ஏண்ணே.. போற போக்குல, என்னோட பட்டாபட்டியையும் கழக சொத்துல சேர்துடுவாங்க போல இருக்குண்ணா..

:-)//

பட்டு!வீட்ல லுங்கி கட்டிகிட்டு இருக்கும் போது பயன்படுமில்ல:)

உங்க பட்டாபட்டி,லுங்கி.....கண்ணாடி....ஆஹா!கார்ட்டூன் இப்பவே கண்ணைக்கட்டுதே:)

ஜோதிஜி said...

வானம்பாடிகளுக்கு

பத்து செய்திகளை ஒன்று சேர படித்து நமக்கான ஒரு விசயத்தை உள்வாங்கி ஒரு கட்டுரைக்குவதற்குள் தாவூ தீர்ந்து விடுகின்றது. ஆனால் போற போக்குல நீங்க கொடுக்கும் நக்கலுக்கு நாளுக்கு நாள் அளவே இல்லாமல் பொறாமை பட வைத்து விடுறீங்க.

ராஜநடராஜன்

கலைஞரைப் பற்றி இனி புதிதாக எதுவுமே எவரும் சொல்ல வேண்டியதில்லை. கண்ணதாசன் எப்பவோ வனவாசத்தில் எல்லாவற்றையும் அப்பட்டமாக சொல்லிவிட்டார். காரைக்குடியில் வந்து பாருங்க. கண்ணதாசன் மணிமண்டபம் எந்த லட்சண்த்தில் இருக்கிறது என்று?

நிலவு said...

இலங்கை எழுத்தாளர் மாநாடு பற்றிய ஷோபாவின் விளக்கத்திற்கு சில கேள்விகள்
ஷோபா சக்தியின் தூற்று.காம் - பகுதி 3 க்கு சில கேள்விகள் http://powrnamy.blogspot.com/2011/03/3.html

ராஜ நடராஜன் said...

//வானம்பாடிகளுக்கு

பத்து செய்திகளை ஒன்று சேர படித்து நமக்கான ஒரு விசயத்தை உள்வாங்கி ஒரு கட்டுரைக்குவதற்குள் தாவூ தீர்ந்து விடுகின்றது. ஆனால் போற போக்குல நீங்க கொடுக்கும் நக்கலுக்கு நாளுக்கு நாள் அளவே இல்லாமல் பொறாமை பட வைத்து விடுறீங்க.//

ஜோதிஜி!இந்தப்பூனையும் பால் குடிக்குமாங்கிற மாதிரிதான் பாலாண்ணன்:)ஆனால் டைமிங்க் சென்ஸ்ன்னு தமிழில் சொல்வாங்களே!நிகரில்லா தூக்கல்.

ராஜ நடராஜன் said...

//ராஜநடராஜன்

கலைஞரைப் பற்றி இனி புதிதாக எதுவுமே எவரும் சொல்ல வேண்டியதில்லை. கண்ணதாசன் எப்பவோ வனவாசத்தில் எல்லாவற்றையும் அப்பட்டமாக சொல்லிவிட்டார். காரைக்குடியில் வந்து பாருங்க. கண்ணதாசன் மணிமண்டபம் எந்த லட்சண்த்தில் இருக்கிறது என்று?//

வனவாசம் இப்போதைக்கு வலைப்பக்கங்களுக்கு மட்டுமே வியப்பாய் இருக்கிறது.கண்ணதாசன் சொன்ன காலத்திலே பரபரப்புக்களை உருவாக்கி மக்களின் மறதி குணத்தால் அதனையெல்லாம் தாண்டி வந்ததில் கருணாநிதி கில்லாடிதான்.

கண்ணதாசன் மணிமண்டபம் பற்றி இத்தனை ஓட்டு கிடைக்கும்ன்னு யாராவது பத்த வச்ச பாருங்க.உடனடியாக மேடை போட்டு வந்து உட்கார்ந்து கொள்வார்.

ராஜ நடராஜன் said...

//இலங்கை எழுத்தாளர் மாநாடு பற்றிய ஷோபாவின் விளக்கத்திற்கு சில கேள்விகள்
ஷோபா சக்தியின் தூற்று.காம் - பகுதி 3 க்கு சில கேள்விகள் http://powrnamy.blogspot.com//

நிலவு!உங்கள் இடுகையின் மூலமாகத்தான் தமிழச்சியின் பக்க நியாயங்களை வாசிக்க முடிந்தது.அப்படியும் ஷோபாசக்தி தனக்கு சப்பைக்கட்டு கட்டுவதையும் படித்தேன்.ஷோபாசக்தி பெயரையெல்லாம் முன்னிறுத்தி இன்னும் இடுகைகள் போடுவது அவருக்கான விளம்பரமாகவே முடியும்.புறம் தள்ளுவோம் ஷோபாசக்தியையும் அவரது போலி இலக்கிய எழுத்துக்களையும்.