Followers

Wednesday, March 16, 2011

வை.கோ வின் அரசியல் நிலைப்பாடு?

வை.கோ மீது பல விமர்சனங்களை முன் வைக்கலாம்.ஒரு சிறந்த மேடைப் பேச்சாளர்,அரசியலில் வலம் வந்தவர் எப்படி ஒவ்வொரு முறையும் தவறான முடிவுகளை மட்டும் எடுக்கிறார் என்பதும்,கூட இருந்தவர்களும் இவரை தனித்து விடுமளவுக்கு திரைக்குப்பின்னால் என்ன நிகழ்கிறது என்பதும் புரியாத புதிர்.பொடாவுக்கு அடுத்து ஜெயலலிதாவுடனான கூட்டணி அரசியல் சறுக்கலின் உச்சம் என்பதால் இப்போதைக்கு தனித்து விடப்பட்டது ஒன்றும் பெரிதான விசயமில்லை.கடந்த தினங்களில் விஜயகாந்த் தொட்டு கம்யூனிஸ்ட்டுகள் வரை தொகுதிப் பங்கீடு உடன்பாடு என்பதும் வை.கோ  இறுதி நிலைக்கு தள்ளி காக்க வைத்ததில் ஜெயலலிதாவின் கணக்கீடுகளை ஓரளவுக்கு ஊகிக்க முடிகிறது.

வை.கோ உறுதியாக நிற்கும் ஈழ நிலைப்பாடும் கூட ஜெயலலிதாவின் பார்வையில் காங்கிரஸ் கணக்குப் போடும் எதிர்காலப் பிரச்சினைகளை உருவாக்கும் என்கின்ற கோணத்தில் அவரோ அல்லது அவருக்கு ஆலோசனை சொல்பவர்களோட கூட செய்யக்கூடும்.கூடவே நிகழ்கால அரசியல் ஜெயலலிதாவுக்கு சாதகமாக இருக்கும் காரணத்தால் வை.கோ கூட்டணியை பெரிதுபடுத்தாத மாதிரியே தெரிகிறது.

மௌனம் காக்கும் வை.கோ எந்த நிலைப்பாட்டை எடுக்கப்போகிறார் என்பதும் மீண்டும் ஒரு தவறான முடிவுக்கு திரும்புவாரா என்று அனைவரும் உற்று நோக்கும் நேரத்தில் செங்கோவி கடைக்குப் போனதில் குறிப்பு எழுதுகிறேன் பேர்வழின்னு தெனாவெட்டா நல்லதொரு பின்னூட்டம் போட்டு விட்டு 

   tharuthalai said.....

வை. கோபால்சாமிக்கு மிக அருமையான ஒரு வாய்ப்பை மீண்டும் சூழ்நிலைகள் வழங்கி உள்ளன. காங்கிரஸ் நிற்கும் அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட வேண்டும். சீமான் போன்றவர்களின் பிரச்சாரமும், தி.மு.க. வின் காங்கிரஸ் எதிர்ப்பும் ஒரு திருப்பு முனையை எற்படுத்தும். செய்வாரா வை.கோ? அல்லது வழக்கம் போல மீண்டும் தவறான முடிவை எடுத்து முந்தானையில் ஒளிந்துகொள்வாரா? 

23 comments:

வேடந்தாங்கல் - கருன் said...

பார்க்கலாம் என்ன முடிவெடுக்கிறார் என்று?

ராஜ நடராஜன் said...

//பார்க்கலாம் என்ன முடிவெடுக்கிறார் என்று?//

வாங்க கருன்!19ம் தேதி பொதுக்குழுவை கூட்டுவதிலிருந்தே கூட்டணி விலகல் இருக்குமென நினைக்கிறேன்.பார்க்கலாம்.

Jey said...

தகிடுதத்தம் பண்ணாத நேர்மையான அரசியல்வாதிகளுக்குதான் இந்த நிலைமை....

ஜெயலலிதா மீண்டும் முருங்கைமரத்தில் ஏறியிருக்கிறார்...

ராஜ நடராஜன் said...

//தகிடுதத்தம் பண்ணாத நேர்மையான அரசியல்வாதிகளுக்குதான் இந்த நிலைமை....

ஜெயலலிதா மீண்டும் முருங்கைமரத்தில் ஏறியிருக்கிறார்...//

வாங்க ஜே!

வை.கோ வின் அரசியல் நிலைப்பாட்டிற்குப் பின் புலங்கள் அவருக்கே தெரிந்த விசயம்.எந்த ஒரு ஈகோவும் பார்க்காமல் ஜெயலலிதாவிடம் மண்டியிட்டது மட்டுமே அவரது அரசியலை திருப்பி போட்ட பெரும் சறுக்கல் என நினைக்கிறேன்.

நியாயமாகப் பார்க்கப்போனால் சென்ற பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின் தனது அரசியல் களத்தை மறு பரிசீலனை செய்து சட்டமன்றத் தேர்தலை கணிக்காதது வை.கோ வின் பெரும் தவறு.

Thekkikattan|தெகா said...

ஏன் வைகோ இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். அவரின் நிர்வாக, கணிப்பு திறமை அற்ற நிலையினால அல்லது இரண்டு பெரும் ரெளடிவுகள் உள்ள ஊரில் ஒன்று எனது பக்கமிரு இல்லையென்றால் எனது எதிரி பக்கமிரு என்ற பயந்த நிலையில?

நண்பர் “தறுதலை” முன் வைத்திருக்கும் கருத்து இந்த தேர்தல் சூழலில் அவருக்கு சாதகமாக அமையலாம். உணர்ந்து தைரியமாக முன் வருவாரா, பார்க்கலாம்.

ராஜ நடராஜன் said...

//ஏன் வைகோ இந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். அவரின் நிர்வாக, கணிப்பு திறமை அற்ற நிலையினால அல்லது இரண்டு பெரும் ரெளடிவுகள் உள்ள ஊரில் ஒன்று எனது பக்கமிரு இல்லையென்றால் எனது எதிரி பக்கமிரு என்ற பயந்த நிலையில?

நண்பர் “தறுதலை” முன் வைத்திருக்கும் கருத்து இந்த தேர்தல் சூழலில் அவருக்கு சாதகமாக அமையலாம். உணர்ந்து தைரியமாக முன் வருவாரா, பார்க்கலாம்.//

தெகா!எங்கே போயிட்டீங்க?பதிவுலகத்தில் எங்கேயும் உங்களைக் காண இயலவில்லையே?லிபியாவை அல்ஜசிராவில் பார்க்கும் போது உங்கள் நினைவு வருவதை தவிர்க்க இயலவில்லை:)

இப்பொழுதுதான் தமிழ்மணியன் சொல்லிக்கொண்டிருந்தார்.கடந்த 5 வருட காலத்தில் ஜெயலலிதா மனதளவில் உடைந்து போன நேரத்திலும் கூட மனோரீதியாக கட்சியின் பலத்தை வை.கோவும்,தா.பாண்டியனும் ஜெயலலிதாவிற்கு தந்தார்கள்.அவர்கள் கௌரவத்திற்கு பங்கம் ஏற்படாமலும்,அதே நேரத்தில் அதிக சீட்களை தர இயலாத நிலையையும் அணுகும் முறையை ஜெயலலிதா ஏற்படுத்த வில்லை என்றார்.

இதுவரையிலும் அடித்த அடியில் ஒரு கருநாகம் நாக்கைத் தள்ளிவிட்டது.இனி ஒரு கட்டுவிரியனுக்கு கல் எறிய வேண்டும் போல தெரியுதே.

Thekkikattan|தெகா said...

எங்கே போயிட்டீங்க?பதிவுலகத்தில் எங்கேயும் உங்களைக் காண இயலவில்லையே?//

எங்கே போறேன், இங்கதான் இருக்கேன். நிகழ்வுகளை அவதானித்தே வருகிறேன். ஆனால், எழுதும் மனநிலையில் இல்லையென்பதால் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது.

என்னைச் சுற்றி சில சொந்த நிகழ்வுகளும் வாழ்க்கை அதன் பாடங்களாக விரித்து வித்தை காட்டி வருகிறது :-) .

//லிபியாவை அல்ஜசிராவில் பார்க்கும் போது உங்கள் நினைவு வருவதை தவிர்க்க இயலவில்லை:)//

நானும் தொடர்ந்து கவனித்தே வருகிறேன். அடுத்து கடாபியின் அருமை மகனின் நேர்முகங்கள் சகிக்க முடியாத அளவிற்கு ஜனநாயகம் பேசி நம்மையே காட்டுமிராண்டிகளின் உலகத்தில் இருக்கிறோம் என்று தலைகுனியும் நிலையில் ஆழ்த்துகிறார். இன்னும் சில நாட்களில் பெங்காஸியில் நிற்கும் ஒரு மில்லியன் மக்களை ஒடுக்கி நாட்டை திரும்ப பெற்று விடுவோம் என்று கொக்கரிக்கிறார். இன்னும் என்ன எழவையெல்லாம் இந்த உலக மனமகிழ் மன்றத்தோடு சேர்ந்து நாமும் கண்டுகளிக்கணுமோ, போங்கோ.

---இன்னொன்னுல்ல வாரேன்...

Thekkikattan|தெகா said...

அடுத்து பஹ்ரைன். என்னய்யா நடக்கிது. ஊருக்கு ஒரு நியாயமா? 200 வருஷமா உட்கார்ந்துகிட்டு எல்லாம் சரியாத்தான் போவுது போவுதுன்னு சொல்லி அரிதி பெரும்பான்மை மக்கள் தெருவிற்கு வந்து போராடின நீ கூப்பிட்டு வைச்சு உண்மையென்னான்னு தெரிஞ்சிக்கிட்டு செஞ்சிக் கொடுப்பியா அண்டைய நாட்டில இருந்து ராணுவ டேங்க் தருவிச்சும், கூலிப்படை கொண்டு வந்தும் உன் மக்களையே கொன்னு போட்டுக்குவியா?

என்னய்யா நடக்கிது உலகத்தில, எப்படியோ வாழ்க்க அல்ஜீசீரா தொலைக்காட்சி பல அழுக்கு துணிகளை வெளி உலகத்திற்கு கொண்டு வந்து காமிக்கிறதுக்கு. பொது மக்களாகிய நம் நிலமை இப்போவாவது புரிஞ்சிப்போம்...

bandhu said...

வை கோ வின் மிகப்பெரிய தவறு என்று நான் நினைப்பது தன் தனி தன்மையை காட்டாமல் அ தி மு க கட்சியை ஒட்டியே நடந்தது. அ தி மு க போலவே ம தி மு க வும் செயல்படுமேயானால் ம தி மு க எதற்கு? ஈழம் தவிர அனைத்து விஷயங்களிலும் அ தி மு க வை பின்பற்றுவதனால் , ம தி மு க, அ தி மு க வின் பிரான்ச் போல நடந்தது. அதே போல, If you lay all your cards face up before the game, it can never be advantageous!
இப்போது சில இடங்களில் தனியாக நின்று தனக்கிருக்கும் ஓட்டு விகிதத்தை நிரூபிப்பது ஒன்றே கட்சியை உருப்படியாக வளர்க்கும் செயல்! எப்படியும், கருணாநிதிக்கு பிறகு தி மு க கலகலத்து போகும். அப்போது இவர் அறுவடை பண்ண வேண்டுமேயானால், இப்போது தனியே நின்றுதான் ஆகவேண்டும்!

பட்டாபட்டி.... said...
This comment has been removed by the author.
பட்டாபட்டி.... said...

காலத்தில் ஜெயலலிதா மனதளவில் உடைந்து போன நேரத்திலும் கூட மனோரீதியாக கட்சியின் பலத்தை வை.கோவும்,தா.பாண்டியனும் ஜெயலலிதாவிற்கு தந்தார்கள்.
//

நேர்மைக்கு கிடைத்த பரிசு போல..


உம்..... பேசாம நானே, இந்த தேர்தலில் போட்டியிட்டு இருக்கலாம் போல...!!!!...

பட்டாபட்டி.... said...

இரண்டு திராவிட கட்சிகளையும் ஒதுக்கிவிட்டு,
வைகோவும், பா.ஜா.காவும் சேர்ந்து,
தேர்தலில் நின்றால்....
சான்ஸ் இருக்கான்ணே?...

Jey said...

//பட்டாபட்டி.... said...
இரண்டு திராவிட கட்சிகளையும் ஒதுக்கிவிட்டு,
வைகோவும், பா.ஜா.காவும் சேர்ந்து,
தேர்தலில் நின்றால்....
சான்ஸ் இருக்கான்ணே?...//

இந்த ரெண்டு திராவிட நாதாரிகள பிடிக்காத மக்கள் இவங்களுக்கு ஓட்டு போட்டு % ஓவ்வ்ட்டை கூட்ட்விடுவாங்க(இதுக்குமுன்னாடி தேமுதிகா-வுக்கு போட்டமாதிரி)

குறைஞ்ச ஓட்டு வித்தியாசத்துல ஆட்சியப் பிடிக்காம போய்ட்டோமேனு அம்மா புலம்பும்...

நடக்குறது எதுவும் தமிழ்நாட்டுக்கு நல்லதா தெரியல....

செயலலிதா திருந்திருக்கும்னு நினைச்சதுல... ஒருலாரி மன்னைப்போட்டு பழய திமிர காட்டிருச்சி...

என்னமோ பட்டா நடக்குறத ரெமிமார்ட்டின் கூட வச்சிகிட்டு வேடிக்கை பாக்க வேண்டியதுதான்போல..

கே.ஆர்.பி.செந்தில் said...

தமிழகத்தில் மூன்றாவது அணி அமைஞ்சா அது தி.மு.க கூட்டணிக்குதான் சாதகமா அமையும்...

ராஜ நடராஜன் said...

//எங்கே போறேன், இங்கதான் இருக்கேன். நிகழ்வுகளை அவதானித்தே வருகிறேன். ஆனால், எழுதும் மனநிலையில் இல்லையென்பதால் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்கிறது.

என்னைச் சுற்றி சில சொந்த நிகழ்வுகளும் வாழ்க்கை அதன் பாடங்களாக விரித்து வித்தை காட்டி வருகிறது :-) .//

சில சமயம் வெறும் பார்வையாளனாக இருப்பதும் ஒரு அனுபவம்தான்.


வாழ்க்கை காட்டும் வித்தைகள் யாருக்குத்தான் இல்லை?

ராஜ நடராஜன் said...

//அடுத்து பஹ்ரைன். என்னய்யா நடக்கிது. ஊருக்கு ஒரு நியாயமா? 200 வருஷமா உட்கார்ந்துகிட்டு எல்லாம் சரியாத்தான் போவுது போவுதுன்னு சொல்லி அரிதி பெரும்பான்மை மக்கள் தெருவிற்கு வந்து போராடின நீ கூப்பிட்டு வைச்சு உண்மையென்னான்னு தெரிஞ்சிக்கிட்டு செஞ்சிக் கொடுப்பியா அண்டைய நாட்டில இருந்து ராணுவ டேங்க் தருவிச்சும், கூலிப்படை கொண்டு வந்தும் உன் மக்களையே கொன்னு போட்டுக்குவியா?

என்னய்யா நடக்கிது உலகத்தில, எப்படியோ வாழ்க்க அல்ஜீசீரா தொலைக்காட்சி பல அழுக்கு துணிகளை வெளி உலகத்திற்கு கொண்டு வந்து காமிக்கிறதுக்கு. பொது மக்களாகிய நம் நிலமை இப்போவாவது புரிஞ்சிப்போம்...//

தெகா!ஜனநாயகம்,சுதந்திரம் என்பன போன்றவற்றிற்கும் உலக அரங்கில் விலையும்,தேர்ந்தெடுக்கும் தன்மையும் இருக்கும் போல தெரியுதே.

எகிப்து,துனிசியாவுக்கு இணையாகவும் சொல்லப்போனால் அதற்கு மேலாகவும் வளைகுடாவில் கருத்து சுதந்திரமும்,தனி மனித உரிமைகளும் பேணப்பட வேண்டியவை.எகிப்து,துனிசியா மாதிரியே இயல்பாய் எழுந்த போராட்டம் இப்பொழுது ஷியா,சுன்னி முஸ்லீம்கள் என திசை திருப்பி விடப்பட்டிருக்கிறது.

அடுத்த நாட்டில் தலையீடு என்ற புதிய கொள்கையை GCC குடையின் கீழ் சவுதி தொடுத்திருக்கிறது.இதற்கு அமெரிக்காவும் ஆதரவு என்று கேள்வி.மன்னராட்சி இருக்கும் வரை அமெரிக்காவிற்கு நல்லதுதான் என்ற சுயநலம் A selective democracy யை மட்டுமே அமெரிக்கா விரும்புகிறது.

மனமகிழ் மன்றத்தில் பிரான்ஸ்,பிரிட்டன்,அமெரிக்காவுக்கு சரியின்னு படுவது சீனாவுக்கும்,ரஷ்யாவுக்கும் தவறாகவே படும் நிலையையே எப்பொழுதும் எந்த நாட்டுப்பிரச்சினையிலும் எடுக்கிறார்கள்.

ஏமன் ஒரு புறம் அல்கைதா தளம் என்ற போதிலும் வளைகுடா நாடுகளில் மிகவும் பின் தங்கிய நாடாக உள்ளதால் புரட்சிக்கான காரணங்கள் இருக்கின்றன.

இறைகற்பனைஇலான் said...

யார் எப்படி வென்றாலும் மத்திய அரசின் சிபிஅய்,இன்கம் டாக்ஸ் வைத்து அடைவிட சில்லரை கொடுத்து காங். அரசில் பங்கு கேட்கப் போராடும். எலும்புத்துண்டுக்கு ஏங்கும் அரசியல் வாதிகள் நிரையவே உற்பத்தி செய்துவிட்டார் கருணா.

ராஜ நடராஜன் said...

//வை கோ வின் மிகப்பெரிய தவறு என்று நான் நினைப்பது தன் தனி தன்மையை காட்டாமல் அ தி மு க கட்சியை ஒட்டியே நடந்தது. அ தி மு க போலவே ம தி மு க வும் செயல்படுமேயானால் ம தி மு க எதற்கு? ஈழம் தவிர அனைத்து விஷயங்களிலும் அ தி மு க வை பின்பற்றுவதனால் , ம தி மு க, அ தி மு க வின் பிரான்ச் போல நடந்தது. அதே போல, If you lay all your cards face up before the game, it can never be advantageous!
இப்போது சில இடங்களில் தனியாக நின்று தனக்கிருக்கும் ஓட்டு விகிதத்தை நிரூபிப்பது ஒன்றே கட்சியை உருப்படியாக வளர்க்கும் செயல்! எப்படியும், கருணாநிதிக்கு பிறகு தி மு க கலகலத்து போகும். அப்போது இவர் அறுவடை பண்ண வேண்டுமேயானால், இப்போது தனியே நின்றுதான் ஆகவேண்டும்!//

பந்து!ரம்மி கூட விளையாடத் தெரியாத என்கிட்ட வந்து எல்லா கார்டையும் திருப்பி போடுற உதாரணம் சொல்றீங்களே:)இருந்தாலும் உங்க கருத்து மிக மிகச் சரி.கூட்டணி என்ற கொள்கையே தவறானது மாதிரி தெரிகிறதே.அவரவர் கட்சியின் சார்பாக தனித்து நின்று போட்டியிடுவதும்,கட்சிகள் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கு பதில் தொகுதி மக்கள் வேட்பாளரை தேர்ந்தெடுத்து தேர்தல் முறையை உட்படுத்துவதும் அவசியமாக இருக்குமா?

நீங்கள் சொல்வது மாதிரி திண்ணை காலியாகும் காலத்தில் தமிழக அரசியல் மாற்றங்களை நிறையவே காணலாம் என நம்புகிறேன்.

ராஜ நடராஜன் said...

//நேர்மைக்கு கிடைத்த பரிசு போல..


உம்..... பேசாம நானே, இந்த தேர்தலில் போட்டியிட்டு இருக்கலாம் போல...!!!!...//

பட்டு!அதிரடி அரசியல் பதிவுகள் எழுதுபவர்களில் நீங்களும் ஒருவர்.தேர்தலுக்கு நின்னா உங்களுக்கு ஓட்டுப்போடத் தயார்.ஆனால் உண்மைத்தமிழன் என்கிட்ட சண்டைக்கு வருவாரே:)

ராஜ நடராஜன் said...

//இரண்டு திராவிட கட்சிகளையும் ஒதுக்கிவிட்டு,
வைகோவும், பா.ஜா.காவும் சேர்ந்து,
தேர்தலில் நின்றால்....
சான்ஸ் இருக்கான்ணே?...//

ப.ஜ.க தூங்கிகிட்டு இருக்குது தமிழ் நாட்டில்.கூடவே இஸ்லாமியக் கோபம் வேறு சேர்ந்துகொள்ளும் என்பதால் அது சரியான அணுகுமுறையாக இருக்காது.

வாக்கு வெற்றிக்கான பிரச்சார நேரம் இல்லாமல் இருப்பதால் மீனவர் பிரச்சினை,ஈழம்,ஊழலற்ற தன்மை,மக்கள் பிரச்சினை,சாதிகளுக்கும் அப்பாற்பட்ட அரசியல் போன்றவற்றை முன் நிறுத்தி பாடுபடுவதே இப்போதைக்கு இல்லாமல் இருந்தாலும் சறுக்கல்களில் கற்ற பாடமாக வருங்கால அரசியலுக்கு உதவும்.வை.கோ வின் அரசியல் காலங்களும் கூட இறுதிக்கு வருவதால் சிந்தித்து செயல்படுவது நல்லது.

ராஜ நடராஜன் said...

//இந்த ரெண்டு திராவிட நாதாரிகள பிடிக்காத மக்கள் இவங்களுக்கு ஓட்டு போட்டு % ஓவ்வ்ட்டை கூட்ட்விடுவாங்க(இதுக்குமுன்னாடி தேமுதிகா-வுக்கு போட்டமாதிரி)

குறைஞ்ச ஓட்டு வித்தியாசத்துல ஆட்சியப் பிடிக்காம போய்ட்டோமேனு அம்மா புலம்பும்...

நடக்குறது எதுவும் தமிழ்நாட்டுக்கு நல்லதா தெரியல....

செயலலிதா திருந்திருக்கும்னு நினைச்சதுல... ஒருலாரி மன்னைப்போட்டு பழய திமிர காட்டிருச்சி...

என்னமோ பட்டா நடக்குறத ரெமிமார்ட்டின் கூட வச்சிகிட்டு வேடிக்கை பாக்க வேண்டியதுதான்போல..//

நாதாரி என்னும் சொல்லை ஜோதிஜியிடம் தான் முதன் முதலாக கேட்டேன் ஜே!இந்த சொல் இப்பொழுது தமிழகத்தில் ரொம்ப பிரபலம் போல தெரியுதே:)

நச்சுன்னு சொன்னீங்க //நடக்குறது எதுவும் தமிழ்நாட்டுக்கு நல்லதா தெரியல....கூடவே ஜெயலலிதாவின் பழைய திமிர் //

ஆமா!ரெமி மார்ட்டின்!ரெமிமார்ட்டின்னு பட்டா சொல்லிகிட்டே இருக்காரே யாருங்க அவரு:)

ராஜ நடராஜன் said...

//தமிழகத்தில் மூன்றாவது அணி அமைஞ்சா அது தி.மு.க கூட்டணிக்குதான் சாதகமா அமையும்...//

செந்திலண்ணே!தற்போதைய சூழலில் முதல் தேவையாக தி.மு.க விற்கு மாற்று தேவைதான்.அதே நேரத்தில் ஜெயலலிதா திருந்தாத போது தி.மு.கவின் வெற்றியை இன்னும் கொஞ்ச காலம் சுமப்பதில் தவறில்லையென்றே நினைக்கிறேன்.தமிழக அரசியலை ஓரளவுக்காவது புரட்டிப்போடும் ஒரு சூழலில் தவறுகளை திருத்திக்கொள்ளாத மனநிலைக்கு தெரிந்த திருடனே சரியென்பேன்.

ராஜ நடராஜன் said...

//யார் எப்படி வென்றாலும் மத்திய அரசின் சிபிஅய்,இன்கம் டாக்ஸ் வைத்து அடைவிட சில்லரை கொடுத்து காங். அரசில் பங்கு கேட்கப் போராடும். எலும்புத்துண்டுக்கு ஏங்கும் அரசியல் வாதிகள் நிரையவே உற்பத்தி செய்துவிட்டார் கருணா.//

தமிழ் கொஞ்சுதுங்க இறைகற்பனை இலான்!

கருணாநிதியின் நிர்வாகத்திறமையைப் பாராட்ட வேண்டிய அதே நேரத்தில் தமிழக அரசியலில் தகுடுதத்தங்கள்,தில்லுமுல்லுகள்,ஊழல்கள்,வஞ்சனை,குடும்ப அரசியல்,அரசியல் கொலைக்கான சூழல்கள்,இலவசமாக ஒரு படி அரிசி போட்டு விட்டு அதற்கும் பலமடங்காக டாஸ்மாக்கர்களை உருவாக்கியது போன்ற பல அவலங்களுக்கும்,தமிழ் இன துரோகத்திற்கு உச்ச கட்டமாய் ஈழப்பிரச்சினையை திசை திருப்பியதில் கருணாநிதியின் இறுதிக்காலம் வருத்தங்களையே அதிகம் பேருக்கு உருவாக்குகிறது.