Followers

Thursday, March 24, 2011

வடிவேலண்ணே!வேண்டாம்ண்ணே!

முன்பொரு முறை வடிவேலு அவரது பங்காளி கூட சண்டை போட்ட போது ஒரு நல்ல சிரிப்பு நடிகனின் தனி மனித வாழ்க்கை பாதிப்பு தமிழகத்து ரசிகர்களுக்கும் இழப்பாகும் என பரிதாபப்பட்டு பதிவு போட்டது நினைவு வருகிறது.

வடிவேலு சுழலில் மாட்டிக்கொண்டு இப்பொழுது தேர்தல் நேரத்தில் விஜயகாந்தை இழிவாய் பேசும் மேடைப்பேச்சும் அதுவும் தி.மு.கவின் தலைவர்கள் முன்பு பேசும் இகழ்ச்சியுரையும் கழகங்கள் தங்களை நிலை நிறுத்திக் கொண்டது எப்படி என்பதற்கு தற்போதைய சான்று.தமிழகத்தில் அரசியல் மேடை ஏறுவதற்கு பொது அறிவோ,சமூக உணர்வோ,மக்கள் நலன் குறித்த அக்கறையோ எதுவும் தேவையில்லையென்பதற்கு வடிவேலுவின் அரசியல் பிரச்சாரம் ஒரு உதாரணம்.துவக்க காலம் தொட்டுப் பார்த்தால் தனி மனித சண்டைகளே திராவிட இயக்கங்களை உருவாக்கி வந்திருக்கின்றன. திராவிட கழகத்திலிருந்து அண்ணா வெளியேறியதற்கும், தி.மு.க கழகத்திலிருந்து எம்.ஜி.ஆர் அ.தி.மு.க உருவாக்கியதற்கும், ஜானகி-ஜெயலலிதா நீயா?நானா போட்டிக்கும்,தி.மு.கவிலிருந்து வை.கோ பிரிந்ததற்கும், கழகக் கண்மனிகளும், ரத்தத்தின் ரத்தங்களும் மரம் விட்டு மரம் தாவுவதற்கும் உட்காரணங்களைப் பார்த்தால் சண்டைக்கோழிகளானதாகவே இருக்கும்.

இருக்கும் அரசியல் கலாச்சார சீரழிவுகளோடு  வடிவேலு மாதிரி புதிய காளான்கள் அவ்வப்போது பூப்பதே கழகங்கள் இன்னும் செழித்து வளரும் என்பதற்கான அடையாளங்கள்.

உன் மண்டபம்  இடிச்சா நீ கட்சி ஆர்மபிபியா ? உனக்கு வேட்கம்மா இல்ல ? கூச்ச நாசமா இல்ல ? நான் கருப்பு mgr  னு சொல்ற .. நான் கருப்பு நேரு யா .. நீ நாளைய முதல்வர ணா நான் நாளைய பிரதமர் யா .. நீ கேப்டன் ? என்னய்யா அது ? தன்நில கப்பல் ஓட்டுறவன் பேரு தான்யா கேப்டன் .. நீ எந்நேரமும் தண்ணில இருக்குற ஆள் யா..... 
 
இப்படி நீளுது வசனங்கள்..... சந்தனம்ன்னு நினைச்சு சேற்றுக்குள்ள காலை வச்சுடீட்டீங்க....இனி மேல் எப்படியோ?

வடிவேலண்ணே!நடிச்சது போக நேரம் போகலையா?அப்படியே வலைப்பக்கம் வாங்க....உங்களோட வசனங்கள் கொடிகட்டிப்பறக்கிறத கண்டு மகிழுங்க.இது வரைக்கும் வடிவேலுக்கு எதிராக ஒரு பதிவு கூட இல்லாம இருக்குதேன்னு ஆச்சரியமாஇருக்கும்.

வந்தீஙகன்னா...படிச்சா...புடிச்சா...பிரண்டுவோம்.புடிக்கலன்னாலும் பொரண்டுவோம்...

உங்களை பணயம் வைக்கும்   ஓடிப்புடிச்சு விளையாடற இந்த விளையாட்டு வேண்டாம்ண்ணே!

31 comments:

ராஜேஷ், திருச்சி said...

இந்த கருப்பு பண்ணி விஜயகாந்து , வடிவேலு எந்த அளவுக்கு டார்ச்சர் பண்ணி இருந்தா அவர் இப்படி சீறுவாறு .. பாவம்

ராஜ நடராஜன் said...

//இந்த கருப்பு பண்ணி விஜயகாந்து , வடிவேலு எந்த அளவுக்கு டார்ச்சர் பண்ணி இருந்தா அவர் இப்படி சீறுவாறு .. பாவம்//

ராஜேஷ்!சில மனஸ்தாபங்களை,சண்டைகளை பொதுவுக்கு கொண்டு வராமல் தீர்த்துக்கொள்வது நல்லது.சுய கோப தாபங்களுக்கு அரசியல் மேடையை உபயோகப்படுத்திக்கொள்வது தமிழகத்துக்கு நல்லதல்ல என்பது எனது நிலைப்பாடு.அரசியல் சுழற்சியில் மாற்றங்கள் நிகழும் போது இந்த வன்மங்கள் இன்னும் வேரிடுமல்லவா?

வடிவேலை நல்ல நகைச்சுவை நடிகனாகப் பார்க்கவேண்டும் என்பது என்னுடைய தனி விருப்பமும் பொது விருப்பமுமாக இருக்குமென்று நினைக்கின்றேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இவரைக் கறியுள் கருவேப்பிலைபோல் , இந்தக் கட்சிகள் பயன்படுத்திவிட்டு தூர எறிந்துவிடும்.
இவர் நிதானத்தைக் கடைப்பிடித்து; எங்களுக்கு இன்னும் நல்ல படங்கள் தரலாம். வடிவேலுவுக்கு இன்னும் மாற்று இல்லை.

Thekkikattan|தெகா said...

இது வடிவேலுக்கு அஸ்தமான காலம் போல... அனுபவம் பத்தாது!!

Chitra said...

துவக்க காலம் தொட்டுப் பார்த்தால் தனி மனித சண்டைகளே திராவிட இயக்கங்களை உருவாக்கி வந்திருக்கின்றன. திராவிட கழகத்திலிருந்து அண்ணா வெளியேறியதற்கும், தி.மு.க கழகத்திலிருந்து எம்.ஜி.ஆர் அ.தி.மு.க உருவாக்கியதற்கும், ஜானகி-ஜெயலலிதா நீயா?நானா போட்டிக்கும்,தி.மு.கவிலிருந்து வை.கோ பிரிந்ததற்கும், கழகக் கண்மனிகளும், ரத்தத்தின் ரத்தங்களும் மரம் விட்டு மரம் தாவுவதற்கும் உட்காரணங்களைப் பார்த்தால் சண்டைக்கோழிகளானதாகவே இருக்கும்.


.....rightly said.

ராஜ நடராஜன் said...

//இவரைக் கறியுள் கருவேப்பிலைபோல் , இந்தக் கட்சிகள் பயன்படுத்திவிட்டு தூர எறிந்துவிடும்.
இவர் நிதானத்தைக் கடைப்பிடித்து; எங்களுக்கு இன்னும் நல்ல படங்கள் தரலாம். வடிவேலுவுக்கு இன்னும் மாற்று இல்லை.//

வாங்க யோகன் பாரிஸ்!உங்கள் பெயர் நீண்ட நாட்கள் பதிவுலகில் வலம் வருவதை அறிவேன்.

நிச்சயமாக நீங்க சொல்ற மாதிரி வடிவேலை கறிவேப்பிலை மாதிரிதான் பயன்படுத்துவார்கள்.சண்டை போட்டுகிட்டு இவ்வளவு நாள் சும்மாதானே இருந்தாரு!இப்ப மட்டும் கோபம் எங்கிருந்து பொங்கி வரும்?

சந்தானம் களத்தில் இருந்தாலும் வடிவேலுவுக்கு இன்னும் மாற்று இல்லையென்பது சரியே.

ராஜ நடராஜன் said...

//இது வடிவேலுக்கு அஸ்தமான காலம் போல... அனுபவம் பத்தாது!!//

தெகா!அரசியல் காற்று மாறி அடிச்சிடுச்சுன்னா நீங்க சொல்ற மாதிரி ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

பாவம்!பச்சப்புள்ளய தூண்டி விடுறாரு முதல்வர்.

ராஜ நடராஜன் said...

//துவக்க காலம் தொட்டுப் பார்த்தால் தனி மனித சண்டைகளே திராவிட இயக்கங்களை உருவாக்கி வந்திருக்கின்றன. திராவிட கழகத்திலிருந்து அண்ணா வெளியேறியதற்கும், தி.மு.க கழகத்திலிருந்து எம்.ஜி.ஆர் அ.தி.மு.க உருவாக்கியதற்கும், ஜானகி-ஜெயலலிதா நீயா?நானா போட்டிக்கும்,தி.மு.கவிலிருந்து வை.கோ பிரிந்ததற்கும், கழகக் கண்மனிகளும், ரத்தத்தின் ரத்தங்களும் மரம் விட்டு மரம் தாவுவதற்கும் உட்காரணங்களைப் பார்த்தால் சண்டைக்கோழிகளானதாகவே இருக்கும்.//

தமிழக அரசியல் சீர்குலைவுக்கும் சண்டைக்கோழி கலாச்சாரமே காரணம் என்பேன்.

ஈரோடு கதிர் said...

||நீ நாளைய முதல்வர ணா நான் நாளைய பிரதமர் யா .||

இந்த மொக்க கொடூரத்துக்கு அந்த ஆளுக சிரிச்சதுதான் மாபெரும் கொடூரம்!!!

ராஜ நடராஜன் said...

//||நீ நாளைய முதல்வர ணா நான் நாளைய பிரதமர் யா .||

இந்த மொக்க கொடூரத்துக்கு அந்த ஆளுக சிரிச்சதுதான் மாபெரும் கொடூரம்!!!//

கதிர்!எப்படியிருக்கீங்க?உங்க சோடி பாலாண்ணனை பதிவ்ப்பக்கம் காணோமே!

திரையரங்குல உட்கார்ந்துகிட்டிருக்கிறதா நினைச்சு சிரிச்சிருப்பாங்க போல தெரியுது.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:( அவ்வ் தான் அவருக்கு..

sammil said...

வடிவேலுவை நகைச்சுவை நடிகனா பாத்துட்டு , அவர் நேத்து மேடையில பேசுன கன்னி பேச்சு அனைவரையும் முகம் சுழிக்க வைத்திருக்கும்... பொது மேடைகளில் பேசும் போது கண்ணியத்துடன் பேச கற்று கொள்ள வேண்டும்.. பேச்சை கேக்குறவங்க அனைவரையும் ஆளும் கட்சி காரங்களா இருக்க மாட்டாங்க.. வடிவேலுவின் மதிப்பை கெடுத்து விடும்..

சிந்தனை சிற்பி , சயனைடு குப்பி வட்ட செயலாளர் அண்ணன் வண்டு முருகன் தி மு க விற்க்கு ஆதரவாக ஓட்டு கேக்க செல்கிறார் என்பதை அவர் தற்போது இருக்கும் இ கு க கட்சி சார்பாக தெரிவித்து கொள்கிறோம்

ராஜ நடராஜன் said...

//:( அவ்வ் தான் அவருக்கு..//

வடிவேலு சொன்ன அவ்வ் அவருக்கேவா மேடம்:)

ராஜ நடராஜன் said...

//வடிவேலுவை நகைச்சுவை நடிகனா பாத்துட்டு , அவர் நேத்து மேடையில பேசுன கன்னி பேச்சு அனைவரையும் முகம் சுழிக்க வைத்திருக்கும்... பொது மேடைகளில் பேசும் போது கண்ணியத்துடன் பேச கற்று கொள்ள வேண்டும்.. பேச்சை கேக்குறவங்க அனைவரையும் ஆளும் கட்சி காரங்களா இருக்க மாட்டாங்க.. வடிவேலுவின் மதிப்பை கெடுத்து விடும்..

சிந்தனை சிற்பி , சயனைடு குப்பி வட்ட செயலாளர் அண்ணன் வண்டு முருகன் தி மு க விற்க்கு ஆதரவாக ஓட்டு கேக்க செல்கிறார் என்பதை அவர் தற்போது இருக்கும் இ கு க கட்சி சார்பாக தெரிவித்து கொள்கிறோம்//

முதல் பாதியை அழகாய்ச் சொல்லிவிட்டு இரண்டாம் பகுதி வண்டு முருகன் பற்றி சொல்லி குழப்பி விட்டுட்டீங்களே?யாருங்க இவரு?முதல் முறையாக கேள்விப்படறேன்.காமெடி கீமடி செய்யவில்லையே:)

நமக்கு அவ்வ்வ் காமெடி வடிவேலுதானுங்க வேண்டும்.பிரதமர் வடிவேலு வேண்டாம்.

ஹேமா said...

நடா...எல்லாம் பிளான் பண்ணித்தான் !

நசரேயன் said...

//உங்களை பணயம் வைக்கும் ஓடிப்புடிச்சு விளையாடற இந்த விளையாட்டு வேண்டாம்ண்ணே!//

ம்ம்ம்

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், வடிவேலுவின் நகைச்சுவையினை ரசிக்காதோர், அவரின் வசனங்களில் மகிழ்சியடையாதோர் உலகில் இல்லை என்றே கூறலாம், ஆனாலும் வடிவேலு தற்கால தேர்தல் மேடையில் நகைச்சுவை நடிகர்களோடு, தானும் ஒரு வெளி உலக(திரைக்கு வெளியேயும்) நடிப்பாளி என்பதைக் உணர்த்தப் புறப்படு விட்டார் எனும் போது வருத்தமாகத் தான் இருக்குறது.

நீங்கள் சொல்வது போல வேணாமய்யா, இந்த விளையாட்டு! வடிவேலு சார் கிளம்பி வாங்க.

வருண் said...

முன்னால் தமிழக முதல்வர் அன்னை செயலலிதா கேப்பிட்டனுக்கு "குடிகாரன்" பட்டம் வழங்கினார்.
எவ்வளவு கேவலமான ஒரு அரசியல்வாதி "குடிகாரன்" என்பார்?

அவருக்கு இப்படி எல்லாம் வாய்த்திமிருடன் பேசக்கூடாது/பேசியிருக்கக்கூடாதுனு அறிவுரை சொல்லுங்க!

அதவிட்டுப்புட்டு..அம்மா சொன்னதை வேதவாக்கா எடுத்துக்கிட்ட வடிவேலுக்கு எதுக்கு???

பழமைபேசி said...

அதுக்கு மத்தவங்க சிரிச்சதுதான்... மகாக் கொடுமை... நாட்டுப் பிரச்சினைகளைச் சொல்லி விவாதம் செய்யுற காலமெல்லாம் நமக்கு உண்டா??

கே.ஆர்.பி.செந்தில் said...

வடிவேலுக்கு நேரம் சரியில்லை...

வானம்பாடிகள் said...

கேசு பெண்டிங்ல இருக்கு. போன காச கட்டப்பஞ்சாயத்துல வசூல் பண்ணனும்னா வேற வழியில்லையேண்ணே. அவரு கஷ்டம் அவருக்கு.

ராஜ நடராஜன் said...

//நடா...எல்லாம் பிளான் பண்ணித்தான் !//

எதையும் ப்ளான் பண்ணித்தான் செய்யனும்:).....வடிவேலண்ணே!

ராஜ நடராஜன் said...

////உங்களை பணயம் வைக்கும் ஓடிப்புடிச்சு விளையாடற இந்த விளையாட்டு வேண்டாம்ண்ணே!//

ம்ம்ம்////

ம்ம்ம் கேட்டு எவ்வளவு நாளாச்சு நசர்:)

ராஜ நடராஜன் said...

//வணக்கம் சகோதரம், வடிவேலுவின் நகைச்சுவையினை ரசிக்காதோர், அவரின் வசனங்களில் மகிழ்சியடையாதோர் உலகில் இல்லை என்றே கூறலாம், ஆனாலும் வடிவேலு தற்கால தேர்தல் மேடையில் நகைச்சுவை நடிகர்களோடு, தானும் ஒரு வெளி உலக(திரைக்கு வெளியேயும்) நடிப்பாளி என்பதைக் உணர்த்தப் புறப்படு விட்டார் எனும் போது வருத்தமாகத் தான் இருக்குறது.

நீங்கள் சொல்வது போல வேணாமய்யா, இந்த விளையாட்டு! வடிவேலு சார் கிளம்பி வாங்க.//

உறவே!வணக்கம் நீரூபன்!இப்பவெல்லாம் அடிச்சு ஆடுறீங்க போல தெரியுதே.கவிதையும்,நகைச்சுவையில் ஈழ மொழியும் கொஞ்சுது உங்க நாற்றில்.தொடருங்கள்....அவ்வப்போது வருகிறேன்.

நம்மோட கருத்துக்களை வடிவேலு காதில் யாராவது வத்தி வைப்பாங்கன்னு நம்புவோம்.

ராஜ நடராஜன் said...

//முன்னால் தமிழக முதல்வர் அன்னை செயலலிதா கேப்பிட்டனுக்கு "குடிகாரன்" பட்டம் வழங்கினார்.
எவ்வளவு கேவலமான ஒரு அரசியல்வாதி "குடிகாரன்" என்பார்?

அவருக்கு இப்படி எல்லாம் வாய்த்திமிருடன் பேசக்கூடாது/பேசியிருக்கக்கூடாதுனு அறிவுரை சொல்லுங்க!

அதவிட்டுப்புட்டு..அம்மா சொன்னதை வேதவாக்கா எடுத்துக்கிட்ட வடிவேலுக்கு எதுக்கு???//

வருணா இது? நம்பவே முடியவில்லையே!!

ஜெயலலிதா,விஜயகாந்த் இருவரும் அரசியல் களத்தில் நின்று கொண்டு ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரித் தூவிக்கொள்கிறார்கள்.இது தவறான போக்கு எனினும் தமிழக அரசியலில் இதுவெல்லாம் சகஜமப்பா வசனம் எத்தனை பின்னூட்டங்களாக வருகிறதென்பது பின்னூட்டங்களையும் தொடர்பவர்களுக்கு நன்கு தெரிந்த ஒன்று.

வடிவேலின் நிலை அப்படியல்ல.அவரது சொந்த விசயத்துக்கு ஏற்பட்ட கோபத்தில் அரசியல் மேடையை உபயோகித்துக்கொள்வதும் ஒரு அப்பாவியை தமிழக முதல்வர் அவரது சுயநலத்துக்குப் பயன்படுத்திக்கொள்கிறார் என்பதுவே ஆதங்கம்.

மேலும் துவக்கம் முதல் நான் ஏதோ ஜெயலலிதாவின் அனுதாபி என்கின்ற மாதிரி ஒரு பிம்பத்தை நீங்களே நான் இடும் பின்னூட்டங்கள் மூலமாக உருவாக்கிக்கொண்டீர்கள் என நினைக்கின்றேன்.

நான் திராவிட கழகங்களுக்கும்,காங்கிரஸ்க்கும் மாற்று அரசியலைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.ஜனநாயகம் என்பது ஒவ்வொன்றையும் பரிட்சை செய்து சிறந்ததை தேர்ந்தெடுத்துக்கொள்வதும்,காலப்போக்கிற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்வதுமே.இல்லையென்றால் தற்போதைய தி.மு.க மன்னராட்சியையும்,அ.தி.மு.க வின் மகாராணி ஆட்சியையுமே நாம் வருங்காலத்திற்கு விட்டுச் செல்வோம்

ராஜ நடராஜன் said...

வருண்!எனது அரசியல் நிலைப்பாடு என்ற பதிவை நீங்கள் படிக்கவில்லையென்பது நீங்கள் என் மீது கொண்ட பிம்பத்திற்கு சாட்சியாக எடுத்துக்கொள்ளவா:)

ராஜ நடராஜன் said...

//அதுக்கு மத்தவங்க சிரிச்சதுதான்... மகாக் கொடுமை... நாட்டுப் பிரச்சினைகளைச் சொல்லி விவாதம் செய்யுற காலமெல்லாம் நமக்கு உண்டா??//

அவங்கதான் எவ்வளவு தூரம் பிரியாணி,பிரயாணம் செஞ்சு வந்துருப்பாங்க...களைப்பாக இருக்குமுல்ல...அதுக்குத்தான் சும்மா தமாசுக்கு வடிவேலு.

இவங்கெல்லாம் நாட்டுப்பிரச்சினையப் பத்திப் பேசினா நாம ஏன் இப்படி முணுமுணுக்கப்போகிறோம்?மேடைப்பேச்சின் பொற்காலங்களாய் நினைத்துகொண்டிருந்த மெரினா கடற்கரைக் காற்றின் சுகத்தில் கருணாநிதிக்கு இன்னும் கைதட்டிக்கொண்டிருக்க மாட்டோமா?

ராஜ நடராஜன் said...

//வடிவேலுக்கு நேரம் சரியில்லை...//

அண்ணே!நீங்க எங்கே ஜோசியம் பார்த்தீங்க:)

ராஜ நடராஜன் said...

//கேசு பெண்டிங்ல இருக்கு. போன காச கட்டப்பஞ்சாயத்துல வசூல் பண்ணனும்னா வேற வழியில்லையேண்ணே. அவரு கஷ்டம் அவருக்கு.//

பப்ளிக்ல போட்டு உடைச்சிடீங்களேண்ணா!இதுதான் மேட்டரா?

உண்மைத்தமிழன் said...

அடுத்த தேர்தல்ல தி.மு.க.வோட கேப்டன் திடீர் கூட்டணி வைச்சுக்கிட்டா வடிவேலு அப்போ அம்மா பக்கம் போயிருவாரா..?

இவருக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை..? பின்னாடி ரொம்ப வருத்தப்படப் போறார்..!

ராஜ நடராஜன் said...

//அடுத்த தேர்தல்ல தி.மு.க.வோட கேப்டன் திடீர் கூட்டணி வைச்சுக்கிட்டா வடிவேலு அப்போ அம்மா பக்கம் போயிருவாரா..?

இவருக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை..? பின்னாடி ரொம்ப வருத்தப்படப் போறார்..!//

உண்மைத் தமிழன் அண்ணே!2016 கணிப்புக்கே போயிட்டீங்களா:) நீங்க சொல்வது நடந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கில்லை.

ஆச்சி மனோரமாவைப் பார்த்தும் கூட இவர் கற்றுக்கொள்ளவில்லையே!