Followers

Friday, March 11, 2011

ஜப்பானிய மக்களுக்கு அனுதாபங்கள்

காலையில் போன் ரிங்கியது.நானோ மனைவியின் கட்டிப்பிடியில் இதமான உறக்கம்.உறவினர்களில் யாராவது கடன் தொல்லைப் போனாக இருக்குமென்று பார்த்தால் உறவினரின் மனைவி கணவன் இரவு வீட்டுக்கு வரவில்லையென்று புலம்பல்.இதே அதிர்வில் மனதில் பல புயல்களை கிளப்ப  தெரிந்தவர்களுக்கு போன் செய்து விசாரித்தால்....

வளைகுடா பிரம்மச்சாரிகள் வாழ்க்கை மட்டுமே வளைகுடாவில் இந்தியர்களின் வாழ்க்கையை சரியாகப் பிரதிபலிக்கும்.வாரக்கடைசி என்பதால் உறவு யாருக்கும் தெரியாத கட்டிங் போட்டுவிட்டு போனையும் அமுத்திவிட்டு காலை 10 மணிக்கு ஒய்யாரமாக வீட்டுக்கு வந்து இந்த பொம்பளைகளே இப்படித்தான் சின்ன விசயத்தையும் ஊதி பெரிதாக்கி விடுவார்கள் என்று என்னிடம் தர்க்கம் செய்கிறார்.

தூக்கம் கலைந்து கூடவே அதிர்வும் சேர்ந்து கொள்ள சி.என்.என் தொலைக்காட்சியைத் திறந்தால் பயங்கர செய்தியாக 8.9 ரெக்டாருக்கு சுனாமி.இந்தோனேசியா சுனாமியில் இலங்கை, தமிழகம் வரை வந்த சுனாமியில் ரெக்டாரின் விகிதாச்சாரம் தெரிந்திருந்ததால் சுனாமியின் தாக்கம் புரிந்தது.

அதற்கும் அடுத்த காட்சியை சி.என்.என் ஒலிபரப்பும் போது இயற்கையின் சீற்றம் மனிதன் திட்டமிட்டு நிகழ்த்தும் அழிவுகளை விட கற்பனைக்கும் எட்டாத தூரத்தில் சில நிமிடங்களில் நிகழ்த்தி சென்று விடுவது புரிகிறது.எத்தனையோ இயற்கை சீற்றங்கள் வந்து மனிதனுக்கு எச்சரிக்கைகளை விட்டுச்சென்றாலும் மனிதன் மட்டும் தன்னை திருத்திக்கொள்வதாகவே தெரியவில்லை.

இதோ இந்த பதிவு எழுதிய அடுத்த சில நாட்களில் ஜப்பானின் சுனாமியை உச் கொட்டிவிட்டு வரும்நாட்களில் மனிதன் தனது அழிவின் திட்டங்களில் புகுந்து கொள்வான் பாருங்கள்.கூடவே மக்களின் வாழ்வியலுக்கும், வழிநடத்தும் அரசுகளின் செயல்பாடுகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் என்பதை இலங்கை குறித்த ஜப்பானின் நிலைப்பாடும், மதம் காரணமான பக்கச்சார்பும் பதிவுசெய்திருக்கின்றன.அதோடு கம்யூனிச காலத்து ரஷ்யாவின் நிலைப்பாட்டிற்கும் கம்யூனிசம் கடந்து வந்த ரஷ்யாவின் மனிதர்கள் குறித்த நிலைப்பாடுகளாய் செச்சின்யா, இலங்கை இனப்படுகொலைகளைக்கு இலங்கைக்கு ஆதரவு,சமீப சாதனையாய் கடாபிக்கு ஆதரவு நிலை போன்றவை ரஷ்யா, ஜப்பான் நாடுகள் தம்மை மீள் ஆய்வுக்குள் உட்படுத்திக்கொள்வதாக.

ஹிரோசிமா,நாகசாகி அணுகுண்டுகளையே பின் தள்ளி உலக அரங்கில் தன்னை நிலை நிறுத்திக்கொண்ட ஜப்பானும், அதன் மக்களின் உழைப்பும் இவைகளைக் கடந்து வரும் என்ற நம்பிக்கையில் ஜப்பானிய மக்களுக்கு மனிதநேயத்தோடு எனது வருத்தங்களை பதிவு செய்கிறேன்.

8 comments:

வேடந்தாங்கல் - கருன் said...

தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி...

ராஜ நடராஜன் said...

//தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதற்கு நன்றி...//

வாங்க கருன்!முதல் போணிக்கு நன்றி.
மனிதர்கள் திருந்தும் காலமே பூமியின் மகத்தான காலங்கள்.

ஹேமா said...

மனிதன் கொத்துகிறான்.இயற்கையும் கொதிப்படைகிறது !

வானம்பாடிகள் said...

இத்தனை உயிராபத்திலும் வரிசையில் பாதை கடக்கிறார்களாம். நம்மாட்கள் தள்ளி மிதித்தே மீதி சுனாமியை சேர்த்திருப்பார்கள்.:(

ராஜ நடராஜன் said...

//மனிதன் கொத்துகிறான்.இயற்கையும் கொதிப்படைகிறது !//

ஹேமா!இயற்கையிலிருந்து மனிதன் இன்னும் பாடங்கள் கற்றுக்கொள்ளவேயில்லை.ஒன்றா இரண்டா எச்சரிக்கைகள்?கணினியில் முன் கூட்டியே சுனாமியைக் கண்டு விடலாம் என்கிற விஞ்ஞான வளர்ச்சிகள் கூட பொய்யாகிப் போயின.வருத்தங்களை பகிர்வோம்.

ராஜ நடராஜன் said...

//இத்தனை உயிராபத்திலும் வரிசையில் பாதை கடக்கிறார்களாம். நம்மாட்கள் தள்ளி மிதித்தே மீதி சுனாமியை சேர்த்திருப்பார்கள்.:(//

பாலாண்ணா!அசாத்திய கட்டுப்பாடும் தைரியமும் இவர்களுக்கு.ஒரே ஒரு வீட்டில் மட்டும் தனியாக வெள்ளைக்கொடி காட்டும் பெண்ணின் துணிச்சல்.

இங்கேயும் இருக்குதுகளே பிணம் தின்னிகள்,வெள்ளைக்கொடிக்கும் சமாதி கட்டும் கண்வீங்கிப் பயலாக ராஜபக்சே கும்பல்.

Chitra said...

It is really sad. Our prayers are with them.

ராஜ நடராஜன் said...

//It is really sad. Our prayers are with them.//

Let us hope, along with prayers japanesh people's will power will bring them back to the world forefront of economic power.