Followers

Monday, March 28, 2011

இந்த ஊரு சுனாமியை உலகமே கண்டுக்கிறதில்ல!

சுனாமி எதனால் ஏற்படுகிறதென்றெல்லாம் தெரிஞ்சு வச்சிருப்பீங்க!புழுதி மழையும் காற்றும் எதனால் ஏற்படுகிறதென்று தெரிந்தவர்கள் யாராவது பதிவுகள் போடுங்க.கிராமப்புறத்தில் தாய்க்குலங்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவதற்குத்தான் மண்ணை வாரி தூவுவாங்க.இயற்கைக்கு வந்த கோபத்தில் ஆடிக்காத்துல அம்மியே பறக்குமுன்னு சொல்வாங்களே அந்த மாதிரி ஒரு விசுவரூபம் எடுத்துகிட்டு வந்துடுச்சு புழுதி காற்று.வந்ததோடு பாலைவனத்துல இருந்த புழுதியெல்லாம் வாரிக்கொண்டு வந்து நகரத்தில் மாலை 5.30 மணி முதல் இரவு 8.மணி வரை விடாம வந்து கொட்டிடுச்சு.
குவைத்.... வீட்டுக்குள்ளேயே ஒளிஞ்சுகிட்டேன்....

 அடுத்த நாள் பார்த்தா சூரியன் மட்டும் பல்லைக்காட்டி சிரிக்குது.முதல் நாள் வந்த மண்புழுதியின் சுவடு கொஞ்சம் கூடமில்லாத வானம்.மொத்த ஊரின் தரை மட்டும்தான் மண்புழுதியில்.ஆனாலும் பறக்கிற காரின் வேகத்தில் வாகன சாலைகள் என்னவோ எப்பவும் போலவே காட்சியளித்தது.தெரிந்தவர்,குவைத்தி ஒருவர் படகை எடுத்துக்கொண்டு மீன் பிடிக்கப் போய் இன்னும் என்ன ஆனார் என்று தெரியவில்லை.கூட இருந்த 2 பேரின் உடல் மட்டும் இதுவரை கிடைத்துள்ளது.தெரிந்தவர் கடல் காவலுக்கு SOS அனுப்பி விட்டு  சுழலில் மாட்டிக்கொண்டேன்...வீடு திரும்புவேனா என்பது சந்தேகம் என வீட்டுக்கும் போன் செய்துள்ளார்.
 வாரான்....வாரான் சவுதி அரேபியாவுக்கு வர்ரான்....

பெட்ரோல் ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது..லிபியாக்காரன் சண்டை,இயற்கையின் சீற்றம்,இன்னும் எதிர்பாராத மிதக்கும் பெட்ரோலிய பொருளாதாரம்  உலகின் அனைத்து தர மக்களையும் பாதிக்கும்.
எனக்கென்னமோ இந்தப் பசங்கதான் புழுதியைக் கிளப்பி விடுறாங்களான்னு ரொம்ப நாளா சந்தேகம்.....

ஈராக்கின் தெற்கு பக்கமான பஸ்ராவில் துவங்கி குவைத்,சவுதி அரேபியா போய் விட்டு கடைசியா துபாய்க்கு டிக்கெட் எடுத்துட்டதா கேள்வி. 

படங்கள் உதவி:தனி மெயில்,தி டெலிகிராஃப் மற்றும் அனானி பதிவர்.

19 comments:

ஜோதிஜி said...

படத்தை கொஞ்சம் பெரிசா போட்டிருக்கலாமே?

அதுயாருங்க அனானி பதிவர்?

இப்படியெல்லாம் கூட அனுப்பி வைப்பாங்களா?

ராஜ நடராஜன் said...

//படத்தை கொஞ்சம் பெரிசா போட்டிருக்கலாமே?

அதுயாருங்க அனானி பதிவர்?

இப்படியெல்லாம் கூட அனுப்பி வைப்பாங்களா?//

இப்பவே ந்ம்ம வண்டி பழைய வண்டி.டர்.ட்ர்.டர்ன்னுதான் ஸ்டார்ட் ஆகுதுன்னு சித்ரா மேடம் பின்னூட்டத்துல சொல்லியிருந்தாங்க.இன்னும் ரெசல்யூசன் அதிகப்படுத்தினா அவ்வளவுதான்.

தமிழ் அனானிகள் பற்றித்தான் நமக்கெல்லாம் தெரியுமே.இவர் பீட்டர் அனானி.பேரு அன்அனான்:)

Chitra said...

மின்னஞ்சலில் படங்களும் வீடியோவும் பார்த்தேன். பயங்கரமாகத்தான் இருந்துச்சு. பெட்ரோல் விலையிலும் மண்ணை அள்ளி போட்டுட்டாங்க . :-(

ராஜ நடராஜன் said...

//மின்னஞ்சலில் படங்களும் வீடியோவும் பார்த்தேன். பயங்கரமாகத்தான் இருந்துச்சு. பெட்ரோல் விலையிலும் மண்ணை அள்ளி போட்டுட்டாங்க . :-(//

மத்திய கிழக்கு நாடுகளில் நிகழும் மாற்றங்கள் மக்கள் சார்பில் நல்லதென்றாலும்,நிரந்திரமின்மை பெட்ரோல் விலையை ஒரு பேரலுக்கு 200 டாலருக்கு எதிர்காலத்தில் கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எங்களுக்கு பெட்ரோல் 60 Fils 65 Fils 90 Fils என மூன்று விதமாக கிடைக்குது.ஆனால் மினரல் வாட்டர் 150 fils.

ஹேமா said...

நடா...இதுதான் தன் தலையிலயே வாரிப்போட்டுகிறது.அந்தந்த நாடு,நபருக்கேத்தமாதிரி என்னத்தை வாரிப்போட்டுகிறதுன்னு மட்டும் மாத்திக்கலாம்.சரி பகிடி வேணாம்.பாவம்தான் அவங்களும் !

இனி...நம்ம ஸ்ரீலங்காவிலயும் பெற்றோல் இருக்காமில்ல !

ராஜ நடராஜன் said...

//நடா...இதுதான் தன் தலையிலயே வாரிப்போட்டுகிறது.அந்தந்த நாடு,நபருக்கேத்தமாதிரி என்னத்தை வாரிப்போட்டுகிறதுன்னு மட்டும் மாத்திக்கலாம்.சரி பகிடி வேணாம்.பாவம்தான் அவங்களும் !

இனி...நம்ம ஸ்ரீலங்காவிலயும் பெற்றோல் இருக்காமில்ல !//

ஹேமா!நேரா கடைசி வரிக்கு வந்துடறேன்.இலங்கையில் பெட்ரோல் இல்லாட்டியும் சரி.ஒரு டாங்கர்ல பெட்ரோல் வேணுமுன்னாலும் அனுப்பி வைச்சுடலாம்.பெட்ரோல் வாடையிலாவது மேற்கத்திய நாடுகளின் கண் இலங்கையில் படட்டும்.

நிரூபன் said...

வணக்கம் சகோ, சம கால மத்திய கிழக்கின் இயற்கையின் சீற்றம், மற்றும், போர் நிலவரங்களை சுவாரசியமாகச் சொல்லியுள்ளீர்கள், பாலைவனப் புழுதிப் புயல் பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கியிருக்கலாம்.

ராஜ நடராஜன் said...

//வணக்கம் சகோ, சம கால மத்திய கிழக்கின் இயற்கையின் சீற்றம், மற்றும், போர் நிலவரங்களை சுவாரசியமாகச் சொல்லியுள்ளீர்கள், பாலைவனப் புழுதிப் புயல் பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கியிருக்கலாம்.//

வணக்கம் சகோ நிருபன்!எனக்கும் கூட பதிவு முற்றுப்பெறாத மாதிரியான உணர்வே அதிகம்.நிறைய இடைச்செறுகல் செய்யலாமென்றுதான் நினைத்தேன்.ஆனால் மண்புழிதி பற்றி சொல்வதிலிருந்து தனிஸ்வரமாகிவிடுமோ என்று இடையிலேயே நிறுத்தி விட்டேன்.

மண் புழுதி விசயம் வருடத்தில் சில முறை அவ்வப்போது வரும் ஒன்றே.ஆனால் இந்த முறை ரொம்ப அதிகமாகவே கோபப்பட்டு மண்ணை வாரிப் போட்டுடுச்சு:)

அமைதிச்சாரல் said...

புழுதிப்புயல் பயங்கரமா இருக்கே..

ராஜ நடராஜன் said...

//புழுதிப்புயல் பயங்கரமா இருக்கே..//

எங்களுக்கே கதி கலங்கிடுச்சுன்னா இன்னும் அமைதிச்சாரலுக்கு பயங்கரமாத்தான் இருக்கும்:)

சுடுதண்ணி said...

பத்திரமா இருங்க :)

சுடுதண்ணி said...

பத்திரமா இருங்க :)

நசரேயன் said...

பத்திரமா இருங்க

சி.பி.செந்தில்குமார் said...

அனானி பதிவர் மேட்டர் செம.. எதுக்கும் சுனாமி கிட்டேயும் ஜாக்கிரதை

கே.ஆர்.பி.செந்தில் said...

இயற்க்கை!!!!!

ராஜ நடராஜன் said...

//பத்திரமா இருங்க :)//

நன்றி!நீங்களாவது கம்பளி போர்த்தி சுகமா தூங்குங்க:).

ராஜ நடராஜன் said...

//அனானி பதிவர் மேட்டர் செம.. எதுக்கும் சுனாமி கிட்டேயும் ஜாக்கிரதை//

சிபி! முன்னாடியெல்லாம் கிராமபுறத்துல அதிகமா குழந்தை பெத்துகிட்டா சொல்றது நம்ம கையில என்னங்க இருக்குதுன்னு...

அதையே இங்கே ரிபீட்டிக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//பத்திரமா இருங்க//

நசர்!அக்கறைக்கு நன்றி.

ஊர்தான் பாலைவனம்.ஆனால் கடற்கரை தவிர மணலைத் தேடுவது ரொம்பவே அரிது.

தமிழ் படத்துல குஜராத்துக்கு போய் மணல் அலைகளைப் படம் பிடிக்கிறமாதிரி Sand dune வேண்டுமின்னு சில சாலைகளின் ஓரத்தில் வலைகளை கட்டி வைத்திருந்தாங்க.

புழுதி அடிச்சதுக்கு அதுதான் லாபம்:)

ராஜ நடராஜன் said...

//இயற்க்கை!!!!!//

நானும் உங்க கூட்டம்தான்:)