Followers

Thursday, January 12, 2012

என்னய்யா தனித்தனியா கூத்து கட்டுறீங்க!

ஆட்டம் நல்லாத்தேன் துவங்குச்சு.இடையில ஒருத்தர் பேசி வச்சிகிட்டு செஞ்சாரோ இல்ல கூட்டத்துல கல்லெறிஞ்சுதான் பார்ப்போமேன்னு கூட்டத்தைக் கலைச்சு விட்டுட்டாரு.

துவக்குதுல விவாதம் மாதிரி துவங்க அப்புறம் நீ அப்புடியாக்கும்ன்னு  இவர் சொல்ல இல்ல நீதான் இப்படியாக்கும்ன்னு அவர் சொல்ல,இன்னொருத்தர் நடுவுல பூந்து யோவ் அந்தாளு என் நண்பேண்டான்னு கத்த போய்யா உங்க வண்டவாளமெல்லாம் எனக்குத் தெரியும்ன்னு இவர் திரும்ப கத்த இதப் பார்த்துகிட்டு கம்முன்னு கிடந்த இன்னுமொரு மூணாவது மனுசனும் சேர்ந்து வந்த கத்த இப்ப ஊரே ரெண்டாகிப் போச்சு.

இப்ப இவருக்கு பத்து பேரு!அவருக்கு எட்டுப்பேர்ன்னு தனித்தனியாத்தான் உள்குத்து வேலைகள்.ஆளுக நேருக்கு நேராப் பார்த்துகிட்டாத்தான் கத்தியும்,கம்பும்,அரிவாளும் தூக்குவீங்கன்னுதானே இந்தக் கரையில நீ உட்கார்ந்துக்கோ அந்தக்கரையில நீ உட்கார்ந்துக்கோன்னு இடத்தப் பட்டாப் போட்டுக்கொடுத்தா இக்கரைக்கும்,அக்கரைக்கும் ஏனய்யா இன்னும் சவுண்டு உட்டுப் பார்க்கிறீங்க!

கரையில உட்கார்ந்துகிட்டு அலையப் பாருங்க!அதோ அங்கே ஒரு படகுக்காரன் போறான் அதை ரசிங்க!இதோ அங்கே ஒரு பொண்ணு தெம்மாங்கு ராகத்துல என்னமோ பாடுது அதைக் கேளுங்க.இன்னொருக்கா காமிரா ஓவியம் வரைஞ்சா இப்படித்தான் இருக்கும்ங்குது.ரஜனி சுத்தறாரு,கமலு மெர்சலாராரு!திண்ண காலின்னாலும் விடுவேனாக்கும் உங்களைன்னு தாத்தா வேற தள்ளாத வயசுல ஓடியாராரு.கொடிக்கம்பத்த கட்டிப்பிடிச்சிட்டு பிறவிப் பயனடையுங்க!இல்ல ஜெ போடுங்க!கும்மிக்கா உங்களுக்கு பஞ்சம்?

ஒன்னுமே புடிக்கல சண்டைதான் பிடிக்குதுன்னா எப்பூடி சார்?

16 comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

/ஒன்னுமே புடிக்கல சண்டைதான் பிடிக்குதுன்னா எப்பூடி சார்?
//

அதானே ...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

உங்களுக்காக ...

நண்பன் : திரை விமர்சனம்

சார்வாகன் said...

ஹா ஹா ஹா
இதெல்லாம் ஜனநாயக அரசியலில் சகஜம் நண்பரே!!!!!!!!
All in the Game. Nothing Serious
நன்றி

ராஜ நடராஜன் said...

// "என் ராஜபாட்டை"- ராஜா said...

/ஒன்னுமே புடிக்கல சண்டைதான் பிடிக்குதுன்னா எப்பூடி சார்?
//

அதானே ...//

ராஜா!நீங்க என்ன(னை) ஒட்டுக்கேட்டுகிட்டே இருப்பீங்களாக்கும்:)

ராஜ நடராஜன் said...

//சார்வாகன் said...

ஹா ஹா ஹா
இதெல்லாம் ஜனநாயக அரசியலில் சகஜம் நண்பரே!!!!!!!!
All in the Game. Nothing Serious
நன்றி//

சகோ!அரசியல் ஜனநாயகமாகலாம்!ஆனால் ஜனநாயகம் அரசியலாகக்கூடாது.இது எப்பூடி:)

வவ்வால் said...

ராஜ்,

இது எதாவது பின்னிய நவீனமா, குச் நஹி மாலும்,:-))

//ஒன்னுமே புடிக்கல சண்டைதான் பிடிக்குதுன்னா எப்பூடி சார்?//

எல்லாம் ஜாக்கி சான், புருஸ் லீ, ஜெசன் ஸ்டாதம்,டோனி க்ரேஜா ,வின் டீசல் ரசிகர்களா இருப்பாங்க :-))

சண்டையில எத்தன சட்டை கிழிஞ்சது?

ராஜ நடராஜன் said...

//வவ்வால் said...

ராஜ்,

இது எதாவது பின்னிய நவீனமா, குச் நஹி மாலும்,:-))//

முஜே குச் நகி மாலும்.ஏக் கா மே ரகு தாதா போலா:)

வவ்வால் said...

ராஜ்,

ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாதா லேஹின் தர்வாஜா பந்த் கரோ :))

சிராஜ் said...

அதானே.... ஒரே சண்டையா போட்டா என்னதான் அர்த்தம்.... ஆனா ஒன்னு ராஜ் நம்ம மாப்ஸ் விக்கியோட உள்குத்தக்கூட புரிஞ்சிக்கலாம் போல... உங்க உள்குத்து சரியா புரியல....

ஹேமா said...

நடா...போனபதிவு வரைக்கும் நல்லாத்தானே இருந்தீங்க.உங்க பக்கத்தில இருக்கிறவங்களுக்கு உங்க நிலைமை தெரியுமா.இல்ல இந்தப் பதிவை அவங்க பாப்பாங்களா !

சிவானந்தம் said...

ஒன்னும் புரியல! இதுக்கு குமுதம் கிசுகிசுவே பெட்டர். ஏதோ பதிவுலக பிரச்சினைன்னு நினைக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

// ராஜ்,

ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாதா லேஹின் தர்வாஜா பந்த் கரோ :))

//சிராஜ் said...

அதானே.... ஒரே சண்டையா போட்டா என்னதான் அர்த்தம்.... ஆனா ஒன்னு ராஜ் நம்ம மாப்ஸ் விக்கியோட உள்குத்தக்கூட புரிஞ்சிக்கலாம் போல... உங்க உள்குத்து சரியா புரியல....//

உள்குத்தா!அப்படின்னா!அதுவே எனக்கு சரியா புரியல:)

ஆமா!நீங்க ஏதாவது சூ மந்திரக்காளி வச்சிருக்கீங்களா?அடுத்தடுத்து மகுடத்துல போய் உட்கார்ந்திக்கிறீங்க!

ராஜ நடராஜன் said...

//ஹேமா said...

நடா...போனபதிவு வரைக்கும் நல்லாத்தானே இருந்தீங்க.உங்க பக்கத்தில இருக்கிறவங்களுக்கு உங்க நிலைமை தெரியுமா.இல்ல இந்தப் பதிவை அவங்க பாப்பாங்களா !//

யாரு!ஊட்டுக்காரிய கேட்கிறீங்களாக்கும்?அவுங்களுக்கு சீரியலும்,சமையக்கட்டைப் பார்க்கவே நேரம்.பக்கத்துல உட்கார்ந்திருந்தா ஒரு லுக் விடறதோட சரி.

என்னைச் சார்ந்த அத்தனை பேருக்கும் நான் பிளாக்கன்?ன்னு பீத்திக்கிறதோட சரி.கண்டுக்கிறதுக்குத்தான் ஆள் இல்ல.

ராஜ நடராஜன் said...

//சிவானந்தம் said...

ஒன்னும் புரியல! இதுக்கு குமுதம் கிசுகிசுவே பெட்டர். ஏதோ பதிவுலக பிரச்சினைன்னு நினைக்கிறேன்.//

சிவா!இப்ப நம்ம கடைக்கு நீங்க வந்தீங்க,சிராஜ் வந்தாரு.அப்படி எல்லோரும் எல்லா கடைக்கும் போற மாதிரி வடை ருசியா இருந்தால்தானே நல்லாயிருக்கும்:)

வானம்பாடிகள் said...

ஒலகத்துலதான் ஒன்னுமே புரியலன்னா
இந்த மெய்நிகர் ஒலகம் அதுக்கு மேலல்லா இருக்கு:))

ராஜ நடராஜன் said...

//வானம்பாடிகள் said...

ஒலகத்துலதான் ஒன்னுமே புரியலன்னா
இந்த மெய்நிகர் ஒலகம் அதுக்கு மேலல்லா இருக்கு:))//

பாலாண்ணா!வணக்கம்.பஸ்லயா போயிட்டிருந்தீங்க.

மெய்நிகர் ஒலகம் இருக்குற நிலைமைக்கு ஒரு நச் போட்டா எப்படியிருக்கும்?மிஸ்ஸிங் ரியலி!