Followers

Sunday, January 29, 2012

தானியங்கிப் பின்னூட்டங்கள்.

சர்.ஐசக் நியூட்டன் இயக்கவியலில் புவியீர்ப்பு விசை போன்ற புதிய பரிமாணங்களைக் கொண்டு வந்தது போல் பதிவர் வவ்வால் அவரது பதிவிலும்,பின்னூட்டங்களிலும் புதிய பரிமாணங்களாக புதிய தமிழ் சொற்களைக் கொண்டு வருவதின் ஒரு சோற்றுப் பதமே தலைப்பு.

தலைப்பின் சாரம் என்னவென்று அறிய விரும்புவர்களும் கால நேரம் உள்ளவர்களும் சென்ற பதிவையும்,பின்னூட்டங்களையும் ஒரு பார்வையிடலாம். சென்ற வாரம் மிகவும் உக்கிரமாக சூரிய கதிர்கள் பூமிக்கு தெரிந்தது போல் முந்தைய பதிவான எம்.எஃப் ஹுசைனை அரவணைத்து சல்மான் ருஷ்டியைக் கைவிட்டு விடலாமா என்ற பதிவின் பின்னோட்டங்கள் கூட கொஞ்சம் வேகம் பிடித்து நண்பர் ராபின் மூட்டி விட்ட சிரிப்பில் திசை மாறிப் போய் பின்னூட்டங்கள் எங்கே போகிறதென்றே அறியாமல் ஒன்றைத் தொட்டு இன்னொன்றாக அதுவாக சுழன்று கொண்டிருந்தது.

இரட்டை வரிப் பின்னூட்டங்களே பதிவுலகில் பிரபலம் என்பதாலும் அனைவருக்கும் ஒரே இடத்தில் சம்மணம் போட்டு உட்கார்ந்து கொள்வது இயலாது என்ற போதிலும் நட்பு காரணமாக கூட பலர் ஹலோ!பதிவு நன்றாக இருக்கிறதென்றோ,பல்லை நற நறக்க நல்ல தருணமொன்றோ சில பின்னூட்ட வெளிப்பாடுகள் உருவாகின்றன.ஆனால் கடந்த சில பதிவுகளின் பின்னூட்டங்களில் முக்கியமாக பதிவர்கள் வவ்வால்,சிராஜ்,தருமி,ராபின் என தொடர் பின்னூட்டங்கள் ஒரு புதிய அனுபவமே.மாற்றுக் கருத்துக்களாக இருந்தாலும் பதிவர் சிராஜ் நட்புடன் அவரது கருத்துக்களை முன் வைத்ததற்கு நன்றி.

எந்த எல்லைக்குள்ளும் அடங்காத சிந்தனைகளை முன்வைப்பதால் மட்டுமே ஒரு வட்டத்துக்குள் மட்டும் நின்று கொண்டு விவாதம் செய்வதையும், சமனீடுகள் இல்லாத ஒற்றைப் பார்வையையும் விரும்புவதில்லை என்பதை முந்தைய பதிவும்,பின்னூட்டங்களும் உறுதிப்படுத்தும்..எழுத்தின் பேச்சுவாக்கில் குறைகளும் கூட இருக்கலாம்.இல்லையென்று சாதிப்பதற்கில்லை.இங்கொன்றும் அங்கொன்றுமாக காரண காரியங்கள் தவிர யார் மீதான கோபமோ,வன்மம் கொண்டோ பதிவுகளும் பின்னூட்டங்களும் இடுவ்தில்லை.அப்படியும் சுட்டிக்காட்டும் படி ஏதாவது தென்பட்டால் குற்றம் நிகழ்வுகள் மீது மட்டுமே ஒழிய பதிவு குறித்தோ பின்னூட்டங்களின் உரிமைகள் குறித்தோ விமர்சிப்பதற்கு ஒன்றுமில்லை.ஏனென்றால்   ஒன்றைத் தொட்டு இன்னொன்றாக தலைப்பில் குறிப்பிட்டவாறு தானியங்கியாய் முன் மூளைப்பதிவுகள் எதுவும் செய்யாத காட்டாற்று வெள்ளம் அவை.மொத்த வேகத்தில்  இருப்பதை அள்ளிக்கொண்டு வருவனவே.

வெறுமனே சண்டைகள்,சச்சரவுகள் என்பதை விட பதிவுகளை இன்னுமோர் அடுத்த தளத்திற்கு கொண்டு செல்வது மட்டுமே காலம் கடந்தும் பதிவின் பெயர்கள் நினைவில் நிற்கும்.குறைந்த பட்சம் விமர்சனங்களுக்குள் நுழையாத மன அழுத்தங்கள் இல்லாத எழுதும் தருணங்களே எழுதவும்,சொல்லவும்,வாசிப்பின் அடுத்த கட்டத்துக்கும் நம்மை கொண்டு செல்லும்.ஆனால் நடைமுறைகளோ விநோதமானவையே.இருந்தாலும் இதனை எதிர்த்த எதிர்நீச்சல் தேவையான ஒன்றே.

எனக்கோ,எனது அலைவரிசையில் எண்ணங்களை வெளிப்படுத்தும் நண்பர்களின் மன அதிர்வுகள் இன்னும் சிலருக்குப் பிடிக்காமல் போகலாம்.அது போலவே சிலரது எதிர் வெளிப்பாடுகளும் என்பதால் அவரவர் நிலையில் அளாவளாவக் கற்றுக்கொள்வது நல்லதென நினைக்கிறேன்.அப்படியும் வரப்புக்கள் தாண்டி,வரம்புகள் தாண்டி அளாவளாவும் தருணங்களும் பொதுவெளியில் உருவாகவே செய்யும்.மொக்கைகள்,நகைச்சுவை சில சமயம் இது மாதிரி தருணங்களில் வென்று விடக்கூடும். இவற்றையும் தாண்டி மொத்த பரிமாறல்களுக்கான தருணங்கள் இருக்கவே செய்கின்றன.தேடலும் அகன்ற பார்வை மட்டுமே துணை.

சிலருக்கு  நாவல்,திரைப்படங்கள் பிடிக்காமல் போகலாம்.பித்தக்காய்ச்சல் கொண்டவர்கள் எல்லாம் இதில் சேர்த்தியே இல்லை என்பதால்  நாவல் புத்தக வாசிப்பும் திரைப்படங்களும்  ஜனநாயக வாழ்வின் மையத்தில் ஒரு அங்கமே என்பதாலும்,மனித யோசனைகளை அகலப்படுத்தும் வல்லமை கொன்டவை என்பதாலும் சில நாவல்,திரைப்படங்கள் நாம் சார்ந்த வாழ்க்கையை ஏதாவது ஒரு கோட்டில் பிரதிபலிப்பதன் காரணம் கொண்டு ஒரு நாவல்,திரைப்படம் குறித்தான பார்வையை பகிர்வது நல்லது.

அந்த விதத்தில் ஈழத்தமிழர்கள் பதிவுகள் போடுகிறேன் பேர்வழியென்று எதுவெல்லாமோ சொல்லி உங்களையும் மனசித்திரவதைக்குட்படுத்தி, பார்வையாளர்களையும் உஷ் கொட்ட வைக்காமல் நேரம் ஒதுக்கி Exodus என்ற நாவலைப் படிக்கலாம்.அதே போல் வெறுமனே மார்க்கமென்று அலைபவர்கள் தவிர்த்து பாலஸ்தீனிய விடுதலைக்கு ஆதரவு தருபவர்கள் நாவலையும்,கூடவே பாலஸ்தீனிய அரேபியர்கள் வரலாற்றில் எங்கே கோட்டை விட்டார்கள் என்ற தேடலில் சுய பரிசோதனை செய்யலாம்,இறுகிய விலங்குகளே உடைக்கப்படும் தருணங்கள் இவை.

வாசிப்புக்கான நேரங்களை தொலைத்து விட்டோம்.ஆனாலும் அறிவுக்கான தாகத்தை விஞ்ஞானத்தின் வளர்ச்சி ஏதோ ஒரு விதத்தில் பூர்த்தி செய்கிறது.சில இழப்புக்கள்.சில லாபங்கள்,மாற்றங்கள் என்ற வகையிலேயே நாம் வலம் வந்து கொண்டிருக்கிறோம்.வாசிப்புக்கான கால சூழல்கள் இல்லாத போதும் 600 பக்கங்களுக்கும் மேல் படிக்க வேண்டிய கதையை 3 மணி நேரத்துக்குள் ஒரு சிறந்த திரைப்படம் அதன் சாறெடுத்து கொண்டு வந்து விடுகிறது.அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளில் வசிப்பவர்களுக்கு எக்ஸோடஸ் என்ற திரைப்படம் டி.வி.டி வட்டாக கிடைக்க கூடும்.கிடைக்க வாய்ப்பில்லாதவர்களுக்கு பிட்டு படம் பார்க்கிற தோசமாய் சுமார் 20 பிட்டுகளை யூடியூப் வழங்குகிறது. மாற்று வாய்ப்பு தகவல் ஏதாவது இருந்தால் பகிர்பவர்களுக்கு நன்றி சொல்வேன்.

பதிவுலகின் இந்தப் பட தயாரிப்பாளரையும், விநியோகஸ்தரையும், கதாநாயகனையும்,கதாபாத்திரங்களையும்,ஏனையோர்களையும் அடுத்த பதிவில் கௌரவித்து விடலாம்.நன்றி.

.

89 comments:

சார்வாகன் said...

வணக்கம் சகோ
நல்ல பதிவு.த்மிழ் இணிய உலகில் பதிவுகள் ,பின்னூட்டங்கள் அடுத்த தளத்திற்கு நகர வேண்டும் என்ற ஆசை மிக நியாயமானது.பதிவுலகில் கருத்துகள்,தகவல்கள் எளிதில் யாரும் பகிரலாம் என்பது வர்மா அல்லது சாபமா? என்பதே இபோது அரசு,கூகிள் இடையே நடக்கும் வழக்கு மிக்க கவன ஈர்ப்பு ஆகிறது.

விளம்பர பிரச்சார பதிவுகள் எதிர் வினைகளை சந்திப்பதும் இயல்பே.அவர்களும் வரலாற்று ரீதியான எதார்த்த உண்மைகளை புரிந்து கொண்டால் பெருமித விள்மபர பிரச்சாரத்தின் தொனி குறையும்.ஊதும்சங்கை நன்றாக்வே ஊதுவோம் சகோ!!!!!!!!!!!!!
நன்றி

நிரூபன் said...

வணக்கம் அண்ணே,

உங்களைப் போலத் தான் எனக்கும் பின்னூட்டங்கள் ஆரோக்கியமான கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என ஆசை உண்டு,

அப்புறமா..
//அந்த விதத்தில் ஈழத்தமிழர்கள் பதிவுகள் போடுகிறேன் பேர்வழியென்று எதுவெல்லாமோ சொல்லி உங்களையும் மனசித்திரவதைக்குட்படுத்தி, பார்வையாளர்களையும் உஷ் கொட்ட வைக்காமல் நேரம் ஒதுக்கி Exodus என்ற //

இப்படி வரிகளைப் படிச்சா, இனிமே நாம போர் சம்பந்தமான பதிவுகளை எழுதக் கூடாதா என்று செல்லமா ஓர் கேள்வி கேட்க தோணுதுங்க?

ராஜ நடராஜன் said...

//Blogger சார்வாகன் said...

வணக்கம் சகோ
நல்ல பதிவு.த்மிழ் இணிய உலகில் பதிவுகள் ,பின்னூட்டங்கள் அடுத்த தளத்திற்கு நகர வேண்டும் என்ற ஆசை மிக நியாயமானது.பதிவுலகில் கருத்துகள்,தகவல்கள் எளிதில் யாரும் பகிரலாம் என்பது வர்மா அல்லது சாபமா? என்பதே இபோது அரசு,கூகிள் இடையே நடக்கும் வழக்கு மிக்க கவன ஈர்ப்பு ஆகிறது.

விளம்பர பிரச்சார பதிவுகள் எதிர் வினைகளை சந்திப்பதும் இயல்பே.அவர்களும் வரலாற்று ரீதியான எதார்த்த உண்மைகளை புரிந்து கொண்டால் பெருமித விள்மபர பிரச்சாரத்தின் தொனி குறையும்.ஊதும்சங்கை நன்றாக்வே ஊதுவோம் சகோ!!!!!!!!!!!!!//

வணக்கம் சகோ.தார்வாகன்!இந்தப் பதிவின் முதல் பாதி பதிவர் வவ்வாலுக்கும், மறுபாதியின் சாரம் உங்களுக்கும்,பதிவர் தருமிக்கும் உரித்தான மீண்டும் ஒரு பெயர் அறிமுகமே:)

இடைச்செறுகலாக வருபவை நிகழ்வுகள் குறித்தான கவலையே.மதங்கள் குறித்த விமர்சனங்களும்,எதிர் விமர்சனங்களும் பதிவுலகில் முன்வைத்து ஏற்கனவே துவைத்து காயப்போட்டு விட்ட பின் இனியும் விவாதங்கள் தேவைதானா என்ற கேள்வியே எழுகிறது.கூடவே முன்பு தனி மனித வாதங்களாக இருந்தவை இப்பொழுது மார்க்கம் என்ற போர்வையில் ஒரு குழுவின் பிரச்சாரங்களாக இருப்பதை இப்பொழுதுதான் உணர முடிகிறது.எனவே குழுவற்ற தனிமனித விவாதங்கள் மீதான விமர்சனமின்றி குழுமனப்பான்மையை உருவாக்கும் சூழல் உருவாகுவதால் இது குறித்த விமர்சனங்களும் தொடர வேண்டிய அவசியம் உருவாகிறது.

உங்கள் தளத்தில் மட்டும் நீண்ட விரிவான காணொளிகளை காண்பித்து விட்டு எங்களுக்கு எக்ஸோடஸ் படத்தை பிட்டு பிட்டாக காண்பிக்கிறீர்களே இது முறையா:)

ராஜ நடராஜன் said...

// வணக்கம் சகோ
நல்ல பதிவு.த்மிழ் இணிய உலகில் பதிவுகள் ,பின்னூட்டங்கள் அடுத்த தளத்திற்கு நகர வேண்டும் என்ற ஆசை மிக நியாயமானது.பதிவுலகில் கருத்துகள்,தகவல்கள் எளிதில் யாரும் பகிரலாம் என்பது வர்மா அல்லது சாபமா? என்பதே இபோது அரசு,கூகிள் இடையே நடக்கும் வழக்கு மிக்க கவன ஈர்ப்பு ஆகிறது.

விளம்பர பிரச்சார பதிவுகள் எதிர் வினைகளை சந்திப்பதும் இயல்பே.அவர்களும் வரலாற்று ரீதியான எதார்த்த உண்மைகளை புரிந்து கொண்டால் பெருமித விள்மபர பிரச்சாரத்தின் தொனி குறையும்.ஊதும்சங்கை நன்றாக்வே ஊதுவோம் சகோ!!!!!!!!!!!!!
நன்றி

January 30, 2012 12:13 AM
Delete
Blogger நிரூபன் said...

வணக்கம் அண்ணே,

உங்களைப் போலத் தான் எனக்கும் பின்னூட்டங்கள் ஆரோக்கியமான கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என ஆசை உண்டு,

அப்புறமா..
//அந்த விதத்தில் ஈழத்தமிழர்கள் பதிவுகள் போடுகிறேன் பேர்வழியென்று எதுவெல்லாமோ சொல்லி உங்களையும் மனசித்திரவதைக்குட்படுத்தி, பார்வையாளர்களையும் உஷ் கொட்ட வைக்காமல் நேரம் ஒதுக்கி Exodus என்ற //

இப்படி வரிகளைப் படிச்சா, இனிமே நாம போர் சம்பந்தமான பதிவுகளை எழுதக் கூடாதா என்று செல்லமா ஓர் கேள்வி கேட்க தோணுதுங்க?//

வணக்கம் சகோ.நீருபன்!தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என நினைக்கின்றேன்.போர் குறித்த பதிவுகளை இன்னும் ஆக்கபூர்வமாக உருவாக்க வேண்டும்.நீங்களோ தொட்டுக்கொள்ள ஊறுகாயாக ஒரு கவிதை பாடி விட்டு மூன்று,நான்கு என வேறு திசைக்கு ஓடி விடுகிறீர்கள்.போருக்கான காயங்களும்,வலிகளும் என்னைப்போன்றோரை விட உங்களுக்கு அதிகமாக இருக்கும்.உங்களையெல்லாம் பிரித்தாளும் சூழ்ச்சிக்காரனாக இலங்கை அரசு ஒருபுறம் அரசபதவி,உலக நாடுகளின் திரை மறைவு ஆதரவில் இருக்கையில் 2009ம் வருட மே மாத உணர்வுகளுக்கும் இதோ மூன்றாம் ஆண்டை தொடும் இந்தக் கால கட்டத்துக்குமான வித்தியாசம் தென்படவே செய்கிறது.

எங்கும் ஒருங்கிணைப்பில்லை.பிரபாகரன் தானே அத்தனை பேருக்கும் பிரச்சினையாளன்.பிரபாகரனும்,பிரபாகரன் சார்ந்த இயக்கமும் ஆயுதங்களை அமைதிப்படுத்திய பின் சாத்வீகமாக,அகிம்சை காந்தியாக வெற்றிடத்தை நிரப்பும் தகுதி ஏன் ஒரு தமிழனுக்கும் இல்லை?தானும் சாதிக்க நினைப்பதில்லை.புலம்பெயர் தேசத்தில் சாதிக்க நினைப்பவனையும் காலை வாரி விட்டு விடுவது என இன்னும் சகோதர யுத்தங்கள் நிழலாக தொடர்கிறது.

புலிகளுக்கு எதிராக விமர்சனங்கள் வைத்த சில இலக்கிய மூஞ்சிகளின் விலாசங்களையெல்லாம் இணையத்தில் தேடினாலும் கூட இப்பொழுது கிடைப்பதேயில்லை.

இந்த லட்சணத்தில் ஈழ வரலாற்றின் ஒரு பக்கத்தைக் கூட அறியாதவன் எல்லாம் எதிர்ப்பதிவுகள் போட்டுக்கொண்டிருக்க நீங்கள் சார்ந்த நண்பர்களோ இருட்டுக்குள் வாள் வீசுகிறீர்கள்.படும் காயங்கள் என்னவோ தோள் கொடுப்பவன் மீதே.

இதோ இன்னுமொரு மே 19 வருகிறது.சில கவிதைகள் பாடி,ஒரு முகாரி சொல்லி,இயக்கத்தின் பணம் எங்கே என்று மண்ணில் புரண்டு எழுந்து,நல்லிணக்க விளக்கெண்ணையும் பார்ப்பதற்கு தேன்மாதிரியே தெரிவதை தொட்டு நக்கி,கால ஓட்டத்தில் கூன் விழுந்து,முடி நரைத்து,கண்கள் நிலைகுத்தி நிற்க அதெல்லாம் அந்தக்காலம் என பெருமூச்சு விடுவோமாக.

Vetrimagal said...

சார்! நானும் உங்கள் பதிவை படித்து விட்டு, (கடினமாகத்தான் இருந்த்து), மனதிலே எண்ணங்கள் அலை மோதின.

சரி ஸ்க்ரோல் செய்து, செய்து, படித்து, களைத்து, புரியாமல் விழித்து, 'இத்தனை படித்தவர்களின் கருத்துக்கள் முன்னால்', சிறுத்து போய், சும்மா இருந்து விட்டேன்.
;-))

பின்னால் சாவகாசமாக படிக்கும் ஆவல் உள்ளது.

நன்றி.

வவ்வால் said...

ராஜ்,

தானியங்கி பின்னூட்டம் தலைப்பு செய்தி ஆகிடுச்சா :-))

அடடா இப்படி நான் போக்கில் சொன்னது வரலாற்றில் இடம் பிடிக்க வச்சுட்டிங்களே :-)) நன்றினு சொன்னா தான் நன்றி சொன்னதாக ஆகுமோ ? நன்றி !

அந்தக்கால டெஸ்ட் மேட்ச் போல அவுட் ஆகும் வரைக்கும் ஆடுவோம்னுபோட்ட ரப்பர் பின்னூட்டங்களை வச்சே ஒரு பதிவு தேற்றும் மஹா ஞானஸ்தன் நீர் :-))

எக்சோடஸ் படம் பார்ர்க்கும் அளவுக்கு என் நெட் இல்லை ,அகலம் குறைவானது. :-)) எனவே ஐம்டிபி, விக்கி துணைக்கொண்டு ஒரு காய்ச்சு காச்சுகிறேன் :-))

--------

இப்போ தான் கோவியாரையும் தானியங்கி பின்னூட்ட ஆட்டத்துக்கு வர சொல்லி ஆள்ப்பிடித்து விட்டு வந்தேன் , பார்த்தா இந்தப்பதீவு!

வவ்வால் said...

சார்வாகன்,

//வணக்கம் சகோ
நல்ல பதிவு.த்மிழ் இணிய உலகில் பதிவுகள் ,பின்னூட்டங்கள் அடுத்த தளத்திற்கு நகர வேண்டும் என்ற ஆசை மிக நியாயமானது.பதிவுலகில் கருத்துகள்,தகவல்கள் எளிதில் யாரும் பகிரலாம் என்பது வர்மா அல்லது சாபமா? என்பதே இபோது அரசு,கூகிள் இடையே நடக்கும் வழக்கு மிக்க கவன ஈர்ப்பு ஆகிறது.//

பின்னூட்டங்களினை அடுத்த தளத்திற்கு எடுத்துப்போய் ரொம்ப நாளாச்சு. ஆனால் அது ஒரு மைனாரிட்டி மக்களின் (குறைவான நபர்கள்) தளமாய் இருந்துவிட்டதால் யாருக்கும் கவனத்தில் நிற்கவில்லை.

இப்போ மீண்டும் அறிவார்ந்த* ஆக்கமாக நீங்கள் எல்லாம் அலைகடல் என திரண்டு வரவேண்டும் என்று மைக் செட் வைக்காமலே கூவிக்கொள்கிறோம் :-))
*(அறிவார்ந்த காபிரைட் @ சார்வாகன்)
---------

//வணக்கம் சகோ.நீருபன்!தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என நினைக்கின்றேன்.போர் குறித்த பதிவுகளை இன்னும் ஆக்கபூர்வமாக உருவாக்க வேண்டும்.நீங்களோ தொட்டுக்கொள்ள ஊறுகாயாக//

ஊறுகாயாக இருந்தால் கூடப்பரவாயில்லை. அதை எலிப்பொறி மசால் வடையாக பயன்ப்படுத்துவதும், ஐடெம் சாங்க், காமெடி டிராக் போல வணிகத்தேவைக்கு பயன்ப்படுத்துகிறார்களே தவிற உண்மையான கருத்துப்பரிமாற்றம், மக்களுக்கு நிகழ்வுகளை கொண்டு செல்லும் நோக்கம் இல்லை.இது என்னுடைய அவதனிப்பு ,பிழை எனில் அது காட்சித்தோற்றத்தின் விளைவே.

ராஜ நடராஜன் said...

// // வணக்கம் சகோ
நல்ல பதிவு.த்மிழ் இணிய உலகில் பதிவுகள் ,பின்னூட்டங்கள் அடுத்த தளத்திற்கு நகர வேண்டும் என்ற ஆசை மிக நியாயமானது.பதிவுலகில் கருத்துகள்,தகவல்கள் எளிதில் யாரும் பகிரலாம் என்பது வர்மா அல்லது சாபமா? என்பதே இபோது அரசு,கூகிள் இடையே நடக்கும் வழக்கு மிக்க கவன ஈர்ப்பு ஆகிறது.

விளம்பர பிரச்சார பதிவுகள் எதிர் வினைகளை சந்திப்பதும் இயல்பே.அவர்களும் வரலாற்று ரீதியான எதார்த்த உண்மைகளை புரிந்து கொண்டால் பெருமித விள்மபர பிரச்சாரத்தின் தொனி குறையும்.ஊதும்சங்கை நன்றாக்வே ஊதுவோம் சகோ!!!!!!!!!!!!!
நன்றி

January 30, 2012 12:13 AM
Delete
Blogger நிரூபன் said...

வணக்கம் அண்ணே,

உங்களைப் போலத் தான் எனக்கும் பின்னூட்டங்கள் ஆரோக்கியமான கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என ஆசை உண்டு,

அப்புறமா..
//அந்த விதத்தில் ஈழத்தமிழர்கள் பதிவுகள் போடுகிறேன் பேர்வழியென்று எதுவெல்லாமோ சொல்லி உங்களையும் மனசித்திரவதைக்குட்படுத்தி, பார்வையாளர்களையும் உஷ் கொட்ட வைக்காமல் நேரம் ஒதுக்கி Exodus என்ற //

இப்படி வரிகளைப் படிச்சா, இனிமே நாம போர் சம்பந்தமான பதிவுகளை எழுதக் கூடாதா என்று செல்லமா ஓர் கேள்வி கேட்க தோணுதுங்க?//

வணக்கம் சகோ.நீருபன்!தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என நினைக்கின்றேன்.போர் குறித்த பதிவுகளை இன்னும் ஆக்கபூர்வமாக உருவாக்க வேண்டும்.நீங்களோ தொட்டுக்கொள்ள ஊறுகாயாக ஒரு கவிதை பாடி விட்டு மூன்று,நான்கு என வேறு திசைக்கு ஓடி விடுகிறீர்கள்.போருக்கான காயங்களும்,வலிகளும் என்னைப்போன்றோரை விட உங்களுக்கு அதிகமாக இருக்கும்.உங்களையெல்லாம் பிரித்தாளும் சூழ்ச்சிக்காரனாக இலங்கை அரசு ஒருபுறம் அரசபதவி,உலக நாடுகளின் திரை மறைவு ஆதரவில் இருக்கையில் 2009ம் வருட மே மாத உணர்வுகளுக்கும் இதோ மூன்றாம் ஆண்டை தொடும் இந்தக் கால கட்டத்துக்குமான வித்தியாசம் தென்படவே செய்கிறது.

எங்கும் ஒருங்கிணைப்பில்லை.பிரபாகரன் தானே அத்தனை பேருக்கும் பிரச்சினையாளன்.பிரபாகரனும்,பிரபாகரன் சார்ந்த இயக்கமும் ஆயுதங்களை அமைதிப்படுத்திய பின் சாத்வீகமாக,அகிம்சை காந்தியாக வெற்றிடத்தை நிரப்பும் தகுதி ஏன் ஒரு தமிழனுக்கும் இல்லை?தானும் சாதிக்க நினைப்பதில்லை.புலம்பெயர் தேசத்தில் சாதிக்க நினைப்பவனையும் காலை வாரி விட்டு விடுவது என இன்னும் சகோதர யுத்தங்கள் நிழலாக தொடர்கிறது.

புலிகளுக்கு எதிராக விமர்சனங்கள் வைத்த சில இலக்கிய மூஞ்சிகளின் விலாசங்களையெல்லாம் இணையத்தில் தேடினாலும் கூட இப்பொழுது கிடைப்பதேயில்லை.

இந்த லட்சணத்தில் ஈழ வரலாற்றின் ஒரு பக்கத்தைக் கூட அறியாதவன் எல்லாம் எதிர்ப்பதிவுகள் போட்டுக்கொண்டிருக்க நீங்கள் சார்ந்த நண்பர்களோ இருட்டுக்குள் வாள் வீசுகிறீர்கள்.படும் காயங்கள் என்னவோ தோள் கொடுப்பவன் மீதே.

இதோ இன்னுமொரு மே 19 வருகிறது.சில கவிதைகள் பாடி,ஒரு முகாரி சொல்லி,இயக்கத்தின் பணம் எங்கே என்று மண்ணில் புரண்டு எழுந்து,நல்லிணக்க விளக்கெண்ணையும் பார்ப்பதற்கு தேன்மாதிரியே தெரிவதை தொட்டு நக்கி,கால ஓட்டத்தில் கூன் விழுந்து,முடி நரைத்து,கண்கள் நிலைகுத்தி நிற்க அதெல்லாம் அந்தக்காலம் என பெருமூச்சு விடுவோமாக.

January 30, 2012 9:20 AM
Delete
Blogger Vetrimagal said...

சார்! நானும் உங்கள் பதிவை படித்து விட்டு, (கடினமாகத்தான் இருந்த்து), மனதிலே எண்ணங்கள் அலை மோதின.

சரி ஸ்க்ரோல் செய்து, செய்து, படித்து, களைத்து, புரியாமல் விழித்து, 'இத்தனை படித்தவர்களின் கருத்துக்கள் முன்னால்', சிறுத்து போய், சும்மா இருந்து விட்டேன்.
;-))

பின்னால் சாவகாசமாக படிக்கும் ஆவல் உள்ளது.//

வெற்றிமகள்!பெயர் புதிதாக இருக்கிறதே என்று உங்க புரபைல் பார்த்தா ஒரு பெரிய வாசக வட்டமே கைவசம் வைத்திருக்கீங்க போல இருக்குதே!உங்க புரபைலே உங்கள் ரசனை அடையாளம் காட்டுகின்றன.வாழ்த்துக்கள்.

பதிவு மட்டும்தான் ஒரே கோணத்தில் எழுதியது.பின்னூட்டங்கள் அதன் பாதைக்கு விட்டு விட்டு நான்! லீனியர் என்று சொல்லப்போக பதிவர் வவ்வால் ஆட்டோபிக்‌ஷன் என்று உட்பொருள் வைத்துப் பேச,வவ்வால் கொஞ்ச நாட்கள் வனவாசம் போய் விட்டதால் சாரு பற்றிய கதையெல்லாம் நான் சொல்லி கலாய்க்க,இடையிடையே மதம் சார்ந்து மட்டுமே சிந்திப்பேன் என்று அடம் பிடிப்பவர்களையும் காய்ச்ச,நானெல்லாம் காலர தூக்கிவிடாமலே (விஜய்...விஜய்)காய்ச்சுவேனாக்கும் என்று வவ்வால் சொல்ல,துப்பறியும் ஷெர்லாக் ஹோம்ஸாக நண்பர் ராபினும் வந்து இணைந்து கொள்ள,இதில் மூத்த பதிவர் தருமி அய்யாவும் எங்கிருந்தோ எதையோ தூக்கிகிட்டு வர,மண்ணடி,உளவுத்துறை,ஹாக்கின்ஸ்,சூரியக்கதிர்கள் என்று அதுபாட்டுக்கு பின்னூட்டம் போய் 111 ராமம் போட்டு நின்று கொண்டது:)

இப்ப நீங்க!

உங்கள் கருத்துக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

வெற்றிமகள்!உங்கள் பின்னூட்டத்தின் மறுமொழி ஏனைய இணைப்போடு வந்து ஒட்டிக்கொண்டன.மன்னிக்கவும்.

இறுதிப்பகுதியின் சாரம் உங்களுக்கானது.

ராஜ நடராஜன் said...

வவ்!நேற்று இரவு உங்க கடைக்கு வந்தா அதற்கும் இரண்டு நாட்களுக்கு முன்பான வடையை சுட்டு வச்சிருந்தீங்க.நம்ம கடைக்கு புது வடையென்ன பழைய வடைங்கிறீங்களா:)இங்கேயே டான்ஸ் செய்யாமல் மேடையை அங்கேயும் ஒருவாரத்துக்கு மாற்றிடுவோமேன்னு பார்த்தால் மேடை ஆதாம்,ஏவாள் காலத்து பழசாக இருக்கிறதால என்னால் நடனம் ஆட முடியவில்லை:)

முன்பு சினிமான்னு டாபிக் எடுத்தா ஹெவி வெயிட் சாம்பியன்களா சன்னாசி...இன்னொருத்தர் பெயர் மறந்து போச்சே...விளாசித் தள்ளிகிட்டிருப்பாங்க.அந்த கெத்து உங்க புண்ணியத்துல இப்பத்தான் பதிவுலகத்துக்கு திரும்ப வருது.

இது பின்னூட்டங்களை வச்சே ஒரு பதிவு தேத்தனும்ங்கிற ஆர்வத்தை விட நிறைய பேர் பின்னூட்டங்களைப் பார்த்திருக்க மாட்டாங்களேன்னு இன்னுமொரு ஹம்மிங் விட்டது.அதோட நாமே படம் பார்த்து,நாமே பதிவு போடறதை விட எக்ஸோடஸ் பற்றிய ஒரு சின்ன விளம்பரம்.

எக்ஸோடஸ் கூட நிறையபேருக்கு தெரியாமல் போகக்கூடும்.ஆனால் தருமிய்யா எக்ஸோடஸ் கூட பொன்னியின் செல்வனையும் சிறந்த நாவல்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.

பொன்னியின் செல்வன் நிறைய பேர் படிச்சிருப்பாங்கதானே.அதுவும் லியோன் யூரிஸ் மாதிரி கல்கியோட புனைவாக இருந்தாலும் சரித்திர உண்மைகளையும் உட்கொணர்ந்த புனைவுதானே.

நெட்,அகலம் நீட்டிக்க இந்தியாவுல மாற்று வழி இருக்குதான்னு தெரியல.Hulu,Netflix போன்றவையெல்லாம் அமெரிக்காவின் ஏகபோக சொத்து.இது தவிர Fox movies இன்னும் பல தொலைக்காட்சிகள் வசதிகள் எல்லாம் அவங்களுக்கு.நமக்கு வாய்ச்சதெல்லாம் சன் தொலைக்காட்சி,கலைஞர் தொலைக்காட்சின்னு காசு திருடும் பொட்டிகள்தான்.
Tversity மென்பொருளை சோனி PS3 யோட இணைச்சு மீடியா சர்வர் மாதிரியெல்லாம் படம் பார்க்க வசதியிருக்குது.பொதுவில் சொல்ல இயலாத இன்னும் சில நுட்பங்கள் எல்லாம் இருக்குது.அதையெல்லாம் சொன்னா ஒருநாள் தமிழ்மணத்துக்கு போர்க்கொடி தூக்கின மாதிரி நமக்கு எதிராவே கிளம்புவாங்க என்பதால் இப்போதைக்கு கப்சிப்.நான் சொல்வது எதுவும் உங்களுக்கு உதவாதுன்னு தெரியும.இந்திய கூகிள் வேற பறக்க முடியாத சட்ட சிக்கல்கள் வேற இப்ப.பின்பு ஒரு நாளில் இது பற்றி பேசுவோம்.

கோவியாரே இப்பத்தான் போ மாட்டேன் போன்னு அடம்பிடித்து ஆசுவாசப் பட்டுகிட்டிருக்கிறார்.அவரையும் கூட கோதாவுல இறக்குறீங்களே:)

ராஜ நடராஜன் said...

//பின்னூட்டங்களினை அடுத்த தளத்திற்கு எடுத்துப்போய் ரொம்ப நாளாச்சு. ஆனால் அது ஒரு மைனாரிட்டி மக்களின் (குறைவான நபர்கள்) தளமாய் இருந்துவிட்டதால் யாருக்கும் கவனத்தில் நிற்கவில்லை.//

பதிவுலக குறைவான நபர்களே மெஜாரிட்டிக மாதிரி பிலிம் காட்டிகிட்டிருக்கும் போது நாம் குறைவான நபர்களாக தெரிவது குட்டித் தீவுகளாய் அவரவர் கடையே பிரபல மோட்சம் செல்லும் வழின்னு வடை சுட்டுக்கொண்டிருப்பதால்:)பதிவுலகமும் இதுவரை ஒற்றைக்குரலாகவும்,நண்பர்கள் கும்மியென்ற வட்டத்துக்குள் பல பொருள் பேசுவதாக சுழன்று கொண்டுதான் இருந்தது.

எப்பொழுது ஒரு அமைப்பின் நிழலில் ஒற்றைப் பொருள் மட்டுமே பேசுவதென்ற நிலை உருவானதோ அப்பொழுது கவனத்தில் நின்று விட்டது இவ்வுலகு.

இந்த ஞானோதயம் கூட நம்ம ஷெர்லாக் ஹோம்ஸின் துப்பறியும் திறனால் நேற்று வந்த ஒன்று:)

பேசறது ஏதாவது புரியுது?ன்னு யார் யார் தலையில் கையை வச்சிகிட்டுப் பின்னூட்டம் படிக்கிறாங்களோ!

ராஜ நடராஜன் said...

//ஊறுகாயாக இருந்தால் கூடப்பரவாயில்லை. அதை எலிப்பொறி மசால் வடையாக பயன்ப்படுத்துவதும், ஐடெம் சாங்க், காமெடி டிராக் போல வணிகத்தேவைக்கு பயன்ப்படுத்துகிறார்களே தவிற உண்மையான கருத்துப்பரிமாற்றம், மக்களுக்கு நிகழ்வுகளை கொண்டு செல்லும் நோக்கம் இல்லை.இது என்னுடைய அவதனிப்பு ,பிழை எனில் அது காட்சித்தோற்றத்தின் விளைவே.//

வவ்!இந்தப் பின்னூட்டத்தை சகோ.நீருபன்,ஐடியாமணி&கோ வுக்கு அர்ப்பணித்து விடலாம்.

சகோ.நிரூ!நானாவது தொட்டுக்க ஊறுகாய் என்றுதான் சொன்னேன்.வவ்வால் இன்னும் ஒரு படி கீழே போய் எலிப்பொறி மசால் வடையென்றே சொல்லி விட்டார்.இதில் காட்சிப்பிழையெல்லாம் ஒன்றும் இல்லை.

காட்சிப்பிழைகள் என்பன நீர் குடுவைக்குள் வளைந்தோ,இரண்டு துண்டாகவோ காணப்படுபவையும்,நீண்ட நெடுஞ்சாலையின் தூரத்தில் சூரிய உஷ்ணம் தகதப்பதும் போன்றவை.

வவ்வால் சொல்வதோ சோடாப்புட்டிக் கண்ணாடி கூட கண்ணுக்கு மாட்டிக்கொள்ளாமல் முகத்துக்கு நேரே முன் வைக்கும் விளக்கம்.

போர்க்கால உக்கிரத்தில் இந்திய,இலங்கை அரசியல் அயோக்கியத் தனங்களையெல்லாம் தமது உயிர்,பதவிகளையெல்லாம் பணயம் வைத்து தோல் உரித்த பதிவர்கள் எல்லாம் பதிவுலகில் உண்டு.தமிழ்மணத்தின் ஈழம் பகுதியில் முதலில் வந்த படங்களும்,காணொளிகளும்,எழுத்துக்களுமே பின் சேனல் 4ன் ஒன்றுகூடலாக இலங்கை அரசின் போர்க்குற்றங்களாகிப் போனது.

நீங்களும் உங்கள் பங்களிப்பை செய்தாலும் எங்க ஊரில் சாலமன் பாப்பையா தலைமையிலும்,திண்டுக்கல் லியோனி தலைமையிலும் தமிழ்ப்படங்களில் சிறந்தது பழைய பாடல்களா,புதுப்பாடல்களா என்று இடது பக்கம் இரண்டு பேரு,வலது பக்கம் இரண்டு பேருன்னு பேச வைச்சு சாலமன் பாப்பையா,திண்டுக்கல் லியோனி பழைய பாடல்களே என்று அரைமணி நேரம் சிரிக்க வைத்து விட்டு தீர்ப்பு வழங்குவது மாதிரி இம்மாம்பெரிய (யாரும் இமாம்ன்னு வாசிக்காதீங்கப்பு)பின்னூட்டம் போட்டு விட்டு வழங்கும் தீர்ப்பு என்னவென்றால உங்கள் பதிவுகளில் மிஞ்சுவது போர் குறித்த ஆதங்கங்கள் தவிர்த்து மொக்கையென்ற நிலைகளையும் கடந்த...
A wanadering expressions.

முன்பு உங்களுக்கு கவிதை பாடிய மனநிலையே இப்பொழுதும்.

இன்னும் பயணிப்போம்.

வவ்வால் said...

ராஜ்,

ஒருப்பதிவு தேத்திட்டிங்க சொன்னது ஒரு தமாசு, சிரிப்பான் எல்லாம் போட்டேன்.

நீங்க சொன்னாப்போல எல்லாத்தையும் அலசலாம் ஆனால் யாராவது எழுதினா தானே. சிலப்பேர் ஒலகப்பட விமர்சனம்னு அதில எத்தனை சீன் இருக்குனு மட்டும் எழுதுறாங்க, மிஞ்சிப்போனால் செபியா டோன், டாப் ஆங்கில் ஷாட் னு டெம்பிளேட் வார்த்தைகள். படத்தோட கதை பேசும் கரு,மேலும் அதில் உள்ளடக்கமாக என்ன இருக்குனு புரிவதில்லை. ஐஎம்டிபி பிளாட் சம்மரினு போடுறத அப்படியே எழுதிடுறாங்க.

அவங்க கிட்டே என்னத்த பேச ? இன்னும் சிலர் கதை இங்கிலாந்தில் நடக்கும் அமெரிக்காவில்னு போட்டு எழுதுறாங்க. ஹாலிவுட் படம்னா அமெரிக்கானு நினைச்சுடுறாங்க போல.ரொம்ப கத்துக்குட்டி தனமா இருக்கும் அவங்க பார்வை. இன்னும் சொல்லப்போனால் படம் பார்ப்பதும் கலை. எப்படி படம் பார்க்கனும்னு கத்துக்கனும்.

//க்ஸோடஸ் கூட நிறையபேருக்கு தெரியாமல் போகக்கூடும்.ஆனால் தருமிய்யா எக்ஸோடஸ் கூட பொன்னியின் செல்வனையும் சிறந்த நாவல்கள் எனக் குறிப்பிட்டிருந்தார்.

பொன்னியின் செல்வன் நிறைய பேர் படிச்சிருப்பாங்கதானே.அதுவும் லியோன் யூரிஸ் மாதிரி கல்கியோட புனைவாக இருந்தாலும் சரித்திர உண்மைகளையும் உட்கொணர்ந்த புனைவுதானே.//

நீங்க சொல்ற பில்ட் அப் எல்லாம் கேட்டா ரொம்ப ஒலக படமா இருக்கும்னு தோனுது. 1960 இல் வந்தப்படம் இன்னும் பேச வைக்குதே.

ஆனால் யூத அரசியலின் வீச்சு பன்முக தன்மைக்கொண்டதாக எல்லாக்களத்திலும் முன்னெடுத்து செல்லப்படுவதாக தெரிகிறது. இதை அடுத்த பதிவில் கவனிக்கலாம்னு இருக்கேன்.பென்ஹர் பார்த்த காலத்தில் இருந்தே நினைப்பதுண்டு.

குறுகலான பாதைய்யில் எதுவும் வராது நமக்கு. அகலப்பட்டையில் பட்டை நாமம் அடிக்காங்க. இலவச ஜிபினு தருவது 2-3 நாளீல் காலி ஆகி காசு கூடவாங்கிடுறாங்க. அளவில்லா நெட் வாங்கினால் சிறிது நாள் தான் பின்னர், டயல் அப் வேகம் ஆகிடும்.அதுக்கு பேரு ஃபேர் யூசேஜ் பாலிசியாம் :-))

//கோவியாரே இப்பத்தான் போ மாட்டேன் போன்னு அடம்பிடித்து ஆசுவாசப் பட்டுகிட்டிருக்கிறார்.அவரையும் கூட கோதாவுல இறக்குறீங்களே:)//

அப்படி சொல்லிட்டா விட்ருவாங்களா, புடிச்சு போட வேணாம்.

------

ஹி..ஹி நான் தலையில் கை வைக்கவில்லை, என்ன இன்னும் இது போல எழுத ஆரம்பிக்கவில்லையேனு நினைச்சேன். ஆரம்பிச்சுட்டிங்க :-))

----------

நான் ஒரு ரெண்டுப்பேருக்கு மட்டும் மெச்சேஜ் சொல்ல தபால்காரனா என்ன நான் ஒரு பெருங்கூட்டதுக்கு தான் சொல்வேன் (ஹீரோயிச்சம் ??!!) எனவே ஈழம் வைத்து பம்மாத்து செய்ற எல்லாருக்கும் சொன்னது .,அப்படி சொன்னா தானே ஒரு தாக்கம் இருக்கும் :-))

நிரூபன் said...

மீண்டும் வணக்கம் நடா அண்ணா, சார்வாகன் அண்ணா, மற்றும் நண்பர்களே,

நடா அண்ணா,
தனிப்பட்ட ரீதியில் உங்க கூட பேசும் போது சொல்லியிருந்தேன்
எமது முகம் வெளியே தெரியும் வண்ணம் சொந்தப் பெயருடன் ஈழப் பதிவுகளை எழுத முடியாது தொடர்பாக

உண்மையில் எம் பெயரை மறைத்து தனி வலை ஆரம்பித்து நானோ இல்லை ஐடியாமணியோ அல்லது வேறு சில பதிவர்களோ ஈழம் தொடர்பில் எழுத முடியுமே தவிர,
எமது பெயருடன் எழுதினால் மிரட்டுகின்ற, எச்சரிக்கை விடுகின்ற சூழல் தான் நிலவுகின்றது.

இறுதிப் போரில் என்ன நடந்தது தொடர்பில் நான் பத்து பாகங்கள் எழுதி விட்டு, பம்மிட்டு இருக்கேன்.

மிகுதியை எழுத முடியாத சூழல்.
தடை!

உங்கள் விருப்பம் போலத் தான் எனக்கும் விருப்பம் இருக்கிறது.

போர் தொடர்பாக, எமது அவலங்கள் தொடர்பில் தொடர்ந்தும் எழுதனும் என்று,
ஆனால் தொடர்ச்சியாக ஒரு பதிவினை எழுதினால் சிலர் சலிப்பு ஏற்படுகிறது என்று சொல்கிறார்கள்.

இன்னும் சிலரோ ஈழப் பதிவுகள் கண்ணீரை வர வைக்கிறது,
தொடர்ந்தும் இப்படி எழுத வேணாம்! இடைவெளி விட்டு எழுதச் சொல்கிறார்கள்.

கொஞ்சம் சூடாகவும், கொஞ்சம் போராகவும் கலந்து கொடுக்க வேண்டிய சூழல்
அப்போது தான் இலங்கை புலனாய்வுத் துறை வலையிலிருந்தும் தப்பிக்க முடியும் அல்லவா?

ராஜ நடராஜன் said...

வவ்!உங்க பின்னூட்டத்துக்கான பதில் சொல்வதற்காக கடந்த வருடம் திரைப்படம் பார்ப்பது எப்படி என்பது பள்ளி மாணவர்களுக்கு விளக்கம் பற்றி பதிவர் மதுரை சரவணன் சொன்ன பதிவை தேடிக்கொண்டு வர தாமதமாகி விட்டது.
http://veeluthukal.blogspot.com/2011/09/blog-post_14.html

நீங்க சொல்ற அல்லது பட விமர்சகர்கள் சொல்லும் செபியா டோன் எல்லாம் கொடாக் பிலிம்,செபியா டோன் பில்டர் என்ற பழைய சரக்கு தொழில்நுட்ப ரீதியா படம் எடுக்குறவங்களுக்கு மட்டுமே தெரிஞ்ச ரகசியம்.இப்ப போட்டோ ஷாப்,ஆஃப்டர் எபக்ட்ன்னு கணினிக்குள் சுத்தற அத்தனை பேருக்கும் பாலபாடம்.நம்ம நண்பர்களே தமிழில் புகைப்படக்கலை என்பதை (photography in Tamil)பிட்டுன்னு சொல்லி பிரிஞ்சு மேஞ்சுடுவாங்க:)
இப்பவெல்லாம் படசூட்டிங்க் கூட போகவேண்டாம்.டாப் ஆங்கிள்,டிராலி ஆங்கிள் என்பதை படம் எடுத்துகிட்டிருக்கும் போதே தொலைக்காட்சியில் விளம்பரப்படுத்திடறாங்க.எப்படியோ ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரசனை இருக்கும்தானே.

எனக்கு ஹரர் படங்கள் எல்லாம் பிடிப்பதில்லை.ஆனால் ஹரர் படங்களையும் நம்ம பதிவுலக நண்பர் நசரேயன் என் கனவில் தென்பட்டது என்று அமெரிக்க பேய்களை காமெடி செய்து விட்டார்:)

http://www.nasareyan.com/2010/04/vampire.html

காதலன்,காதலி போனில் எப்படி பேசிக்கொள்வார்கள் என்பதெல்லாம் சென்னை மாமல்லபுர கடலையெல்லாம் தாண்டி இலங்கை வரைக்கும் ரசிக்கப்பட்ட ஒன்று.

நசர்ஜி பதிவுகளில் துண்டு போடறது,ஸ்பெல்லிங்க் எல்லாம் ரொம்ப பிரபலம்:)அவ்வப்பொழுது கூட்டி வாசிக்கவும்.உங்களைப் போலவே பதிவுலகில் நசரின் முகம் பார்த்த புண்ணியவான் ஒருவர் கூட இல்லை:)

ராஜ நடராஜன் said...

இப்ப் யூத அரசியலுக்கும்,பென்ஹர் வரிகளுக்குப் போகலாம்.லியானார்டோ டாவின்சியின் இயேசுவின் கடைசி விருந்து ஓவியம்,பத்துக்கட்டளைகள் எனும் டென் கமாண்ட்மெண்ட்ஸ் திரைப்படம்,அரேபியர்களின் உடை,எகிப்தில் சகார பாலைவனம் பக்கம் இருக்கும் பழங்குடிப் பிரிவினர்கள் உடுத்தும் நீண்ட அங்கியெல்லாம் பார்க்கும் போது வரலாற்றில் எங்கோ தப்பு நடந்து விட்டதோ என்று அடிக்கடி தோன்றும்.ஏன் என்றால் பென்ஹர்,டென் கமாண்ட்மெண்ட்,டேவிட் கோலியாத் போன்ற படங்களின் காஸ்ட்யூமிக்கும் யூதர்களுக்கும் கொஞ்சம் கூட சமபந்தமேயில்லை.எக்ஸோடஸ் படத்தில் கூட யூதர்கள் கோட்,சூட்டு போட்டுகிட்டு ரஷ்யாவிலிருந்து கால்நடையா வந்தேன்,சைப்ரஸ்லேயிருந்து நடிகர் பால் நியூமன் பிரிட்டிஷ் யூனிபார்ம்ல வந்த மாதிரி இருக்கும்.லியானர்டோ டாவின்ஸி ஓவியம் மாதிரி ஒரிஜினல் அரேபிய பாலஸ்தீனியனே கன்னத்தில் முத்தமிட்டால் கலாச்சாரத்துடன் நீண்ட அங்கியில் இருப்பதெல்லாம் வரலாற்றுப் பிழையோ என்று இன்னும் கூட சந்தேகம்.

இதை விட இயேசு பிறந்ததாக கூறப்படும் நசரேத் கிராமம் இன்னும் பாலஸ்தீனியர்கள் வசிக்கும் பகுதியிலேயே உள்ளது.

//யூத அரசியலின் வீச்சு பன்முக தன்மைக்கொண்டதாக எல்லாக்களத்திலும் முன்னெடுத்து செல்லப்படுவதாக தெரிகிறது.//

யூத அரசியலின் வீச்சு ஹாலிவுட்,பத்திரிகை,அரசியல்,மீடியாக்கள்,கல்வி,அமெரிக்க வெளியுறவுக்கொள்கை என்று பன்முக வீச்சு கொண்டது என்பதில் சந்தேகமேயில்லை.ராக்பெல்லருக்கு தேர்தல் வேலை செய்து விட்டு எதிரணியில் வெற்றி பெற்ற நிக்சனின் வெளியுறவுக்கொள்கை வகுத்த கிஸ்ஸிங்கரின் தாக்கங்கள் இன்றைய வரையில் ஆசிய நாடுகளில் முக்கியமாக பாகிஸ்தான்,காஷ்மீர்,இந்தியா,ஆப்கானிஸ்தான்,ரஷ்யா,சீனா என்று நீண்டு விரியும் சக்தி கொண்டவை.ராஜபக்சே குழு எப்படி அரச பதவியின் அங்கீகாரத்தில் போர்க்குற்றங்களிலிருந்து தப்பிக்கிறார்களோ கிஸ்ஸிங்கர் கூட வியட்நாம் போரின் குற்ற்ங்களிலிருந்து அமெரிக்க சட்ட துணையோடு தப்பித்தவர்.எதிர்ப்புக் குரல் பேனர்களுடன் வெள்ளை மாளிகையின் கதவுகளுக்கு முன்போ,ஐ.நாவின் சாலையிலோ ஒரு ஊர்வலம் வந்து மௌனமாகிப் போகும்.

உலகில் என்ன நடக்கின்றதென்று அறியாத வாழ்க்கையே சராசரி அமெரிக்கனின் வாழ்க்கையாக இருந்தது 9/11 வரைக்கும் எனலாம்.

நீங்க எந்த யூசேஸ் பாலிசி உபயோகிக்கிறீங்க?நம்ம ஜாக்கி சேகர் முன்னை உபயோகித்த பாண்டை விட இணைய வேகம் இப்பொழுது பரவாயில்லை என்றாரே!

நீங்க ஏன் தலையில கைய வைக்கப்போறீங்க!அளவலாவ்ல் நமக்கிடையே ஆச்சே:)

ராஜ நடராஜன் said...

சகோ.நிரூ!நீங்கள் நியாயமான சில கேள்விகளை முன் வைத்துள்ளதால் உங்களுக்கு பார்த்தேன் சொன்னேன் என்று உடனடியாக மறுமொழி சொல்ல இயலவில்லை.கொஞ்சம் யோசித்து மீண்டும் பதில் தருகிறேனே.

இதற்கான பதில் எக்ஸோடஸ் கூட ஒளிந்து கொண்டிருக்குமென நினைக்கிறேன்.

மறுபடியும் மறுமொழி செய்கிறேன்.

ஜோதிஜி திருப்பூர் said...

பதிவின் மூலமாக உள்ளே வந்து இருக்கும் பின்னூட்டங்களை படிக்கும் போது எழுத்துரு வேறு விதமாக உள்ளது. அதாவது பின்னூட்ட எழுத்துரு. இப்போது அடிக்கும் போது இந்த பின்னூட்ட எழுத்துரு வேறு விதமாக உள்ளது. பாருங்க.

அப்புறம் பதில் சொல்லும் போது உண்மை தமிழன் போல அதை அப்படியே எடுத்து போடு நீங்களும் உங்க பங்குக்கு கொல்லாதீங்க. படிக்க சுவராசியம் இல்லாமல் போய்விடும்.

பதில் கொடுத்தால் போதுமானது. படிப்பவர்களுக்கு புரிந்து கொள்ள முடியும் தானே?

ஆரோக்கியமான பின்னூட்டமா? இன்னும் கொஞ்சம் பொறுங்க. மதம் பிடித்து அலையும் வாதிகள் நிச்சயம் கொஞ்ச நாளில் ஒதுங்கி விடுவார்கள். காரணம் அத்ந மதமே அவர்களை காக்க வராது என்பதை அறியும் போது.

அப்புறம் ஆரோக்கிய கருத்துக்களத்தைப் பற்றி பேசுவோம்.

ஜோதிஜி திருப்பூர் said...

அப்புறம் நிரூபனுக்கு தலைப்பு வைக்கும் கலையில் ஏதாவது ஒரு விருது இருந்தா தமிழ்மணத்திடம் சொல்லி பரிந்துரை செய்யலாமே? பீதியை கிளப்புறாரு?

வவ்வால் said...

ராஜ்,

போட்டோ ஷாப்க்கு எல்லாம் போக வேண்டாம், ஆவிட், ஃபைனல் கட் ப்ரோ போன்ற நான் லீனியர் எடிட்டிங்க் மென்பொருள்களிலேயே ஃபில்டர்கள் உண்டு(நான் லீனியர் விடாம தொரத்துது). பகலில் எடுத்துவிட்டு இரவுபோல் காட்டலாம். செபியா டோன் எல்லாம் சாத்தியம். முன்பெல்லாம் கலர் கிரேடிங்கில் கஷ்டப்படனும் இப்போ பாசிடிவ் தயாரிப்பது எல்லாம் கணினி மயம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

டெர்மினேட்டர் -2 , ஸ்பீசிஸ் , மாட்ரிக்ஸ் முதலான பல படங்களின் மேக்கிங் டிவிடி எல்லாம் பார்த்திருக்கிறேன்.மோஷன் கேப்சரிங்க் டெக்னாலிஜி எல்லாம் வந்த காலத்திலேயே எப்படினு நேராவே பார்த்து இருக்கேன்.அப்போது கேளம்பாக்கத்தில் பெண்டா மீடியாவில் மட்டும் அந்த வசதி இருந்தது.2000த்துகு அப்புறம் ஊத்தி மூடிவிட்டார்கள். எந்திரன் படத்துக்கு அப்படி செய்தோம் இப்படி செய்தோம்னு ஷங்கர் அன்ட் கோ பேட்டிக்கொடுத்தப்போது எனக்கு சிரிப்பு தான் வந்தது 20 ஆண்டுக்கு முந்தய தொழிட்பங்களை இப்போது தான் பயன்ப்படுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள்.

டெர்மினேட்டர் 2 ல பயன்ப்படுத்திய அனிமேட்ரானிக்ஸ் தான் எந்திரனில் பயன்ப்படுத்தப்பட்டது.கிரவுட் சிமுலேஷன் சாப்ட்வேரில் 5 நிமிடத்தில் செய்யக்கூடியதை எந்திரனில் மாங்கு, மாங்கு என்று, பல ஷாட்களில் , பல லேயர்கள் வைத்து செய்து இருப்பார்கள். கிரவுட் சிமுலேஷன் எல்லாம் பிரேவ் ஹார்டிலேயே வந்துடுச்சு.நார்னியா, லார்ட் ஆப் தி ரிங் எல்லாம் மேலும் உதாரணங்கள். இந்திய சினிமா கிராபிக்ஸ்ல போக வேண்டிய தூரம் இன்னும் அதிகம்.

இப்போ மோஷன் கேப்சரின் போய் பெர்ஃபார்மென்ஸ் கேப்சரிங், எல்லாம் வந்தாச்சு.நீங்க சொன்ன அவ்தார் தான்.

ஹி..ஹி இந்த ஆடை வடிவமைப்பு எல்லாம் ஒரு பொது புத்தியின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவது. இந்தியப்படமானாலும் சரி ஹாலிவுட் ஆனாலும் சரி. ஆட்களை இன்ன தேசத்தவர்னு பார்த்தவுடன் அடையாளம் காட்ட ,மக்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு வடிவத்திலேயே 2000 ஆண்டுக்கு முன் நடக்கும் கதையிலும் வைப்பார்கள்.

2000 ஆண்டுக்கு முன்னர் எல்லாம் மேலாடையே இல்லை. ஆண்கள் ஒரு கோவணம் மட்டுமே. பெண்கள் இடையில் வ்ராப் அரவுண்ட் போல ஒரு துணி சுத்தி இருப்பார்கள்.மேலே திறந்த மேனி தான். அரச குலம் ,அரசவை சார்ந்தவர்கள் மட்டும் போர்வை போல ஒரு துணி மேலே போர்த்திக்கொள்ளலாம். பொது மனிதன் மேலே துணி சுத்தினால் தண்டனைக்கூட உண்டு!

அப்போதைய ஒலிப்பிக்கில் நிர்வாணமாக தான் கலந்துக்கொள்ளவேண்டும்.உடற்பயிற்ச்சி செய்யும் போதும் நிர்வாணம் தான்.ஜிம்னாசியம் என்றாலே நிர்வாணமாக இருக்கும் இடம்னு தான் பேரு.ஜிம்னோ = நேக்கட்.ஜிம்னோஸ்பெர்ம் எல்லாம் நியாபகம் வருமே .அப்புறம் எங்கே இருந்து பென்ஹரில் உடை எல்லாம் வந்ததுச்சு :-))ஹி..ஹி ரியலா எடுத்திருந்தா செம கில்மா :-))

இப்போதும் சிலுவையில் அறையப்பட்டிருக்கும் ஏசுவுக்கு கோவணம் மட்டுமே இருக்கும் அது தான் அப்போதைய அன்றாட உடையே!

பழைய தமிழ் ராஜா, ராணி படங்களில் , இன்னும் வரலாற்றுப்படங்களில் வருவது போல உடை எல்லாம் அப்போது இல்லை.படத்தில் காட்டும் உடை எல்லாம் அம்புலிமாமா ஓவிய உடைகள் :--))

யூதர்களுக்கு ஏசு முக்கியம் இல்லையே அதான் நசரேத் பாலஸ்தீனத்தில்.

ராக்பெல்லர், ஆல்பிரட் நோபல் எல்லாம் முந்தைய பின்னூட்டத்திலேயே சொல்லனும் என நினைத்தேன் நீங்கள் சரியாக ராக்பெல்லர் என தொட்டுவிட்டீர்கள்.இன்னமும் உலகளாவிய அளவில் முக்கியமான பொறுப்பில் இருப்பவர்கள் யூதர்களே. அது இங்கிலாந்து பிரதமராக பெஞ்சமின் டிஸ்ரேலி வந்தப்போதே ஆரம்பித்துவிட்டது. பில்கிளிண்டன் கூட யூத வம்சாவழியே.அமெரிக்க, ஐரோப்பிய அரசியல், பொருளாதாரத்தில் யூத வம்சாவழியினர் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்துவதாலே இஸ்ரேல் பகைவர்கள் நடுவே தெம்பாக இருக்கு.

இஸ்ரேலுக்கு எந்த உலக நாடும் பெட்ரோல் தரவில்லை எனில் அமெரிக்கா 20 ஆண்டுக்கு பெட்ரோல் தரும் என ஒப்பந்தம் இருக்கு. ஏன் தரவேண்டும் என்ற கேள்வியின் பின் யூத லாபி இருக்கு.

----------

லேப்டாப் வாங்கிய போது ஆபரில் ஒரு யுஎஸ்பி நெட் ,போஸ்ட் பெய்ட் ஆக கொடுத்தான் , 2 ஜிபி க்கு 600ரு ஆனால் 2000,3000 எனப்பில் வரவே கடைசிப்பில்லை கட்டாமல் தலை சுத்தி கடாசிட்டேன்(நாங்க எல்லாம் யாரு, நம்ம கிட்டேவே ஆட்டைய போடப்பார்த்தா) .போஸ்ட் பெய்டில் நெட் எடுத்தால் கோவணத்தையும் உருவிடுவாங்க. பிரி பெய்டில் எடுத்தால் டேட்டா லிமிடுக்கு அப்புறம் டயல் அப் ஸ்பீட் ஆகிடும். அதுக்கு என்னோட ஜிபிஆரெஸ் நெட் எவ்வளோவோ பரவாயில்லை. மாதம் 96 ரூ தான் செலவு ஒரு குவார்ட்டர் காசு :-))

Vetrimagal said...

நன்றி சார். இத்தனை வருடங்கள் கழித்து ஆதரவான வரிகளில் என்னை பற்றி தமிழில் படிக்கும் போது, மகிழ்ச்சியாக உள்ளது. அதுவும் உங்கள் , உன்னதமான தலைப்பகளை அநாயாசமாக விவாதிக்கும், பதிவில்!!

வணக்கம்.

ராஜ நடராஜன் said...

சகோ.நிரூ!தாமதமான பின்னூட்டத்துக்கு மன்னிக்கவும்.நேற்று இரவு தலைக்குள் நிறைய விசயங்கள் உங்களுக்காக சேகரித்து வைத்திருந்தேன்.இன்று வேலைப்பளுவில் எந்தப்புள்ளியில் இருந்து ஆரம்பிப்பது என்று சின்ன குழப்பம் இருந்தாலும் இயக்குநர் மணிரத்னம்,நடிகர் கமல்கிட்ட இருந்து ஆரம்பிச்சடலாம்:)

மணிரத்னத்தின் கன்னத்தில் முத்தமிட்டால் படம் பார்த்தீங்கதானே?ஆங்கிலத் தலைப்பா A peck on the cheek ன்னு உலகப்பட வரிசையில் கூட வந்து விட்டது.

இப்ப கமல்.கமலஹாசனும் கூட தெனாலியில் யாழ்ப்பாணத் தமிழையும்,மன்மதன் அம்புல புலம்பெயர் தமிழர்களின் சினிமா கிறுக்கை நையாண்டி செய்கிற மாதிரி காட்சி வைத்திருப்பார்.

இப்ப மணிரத்னம்,கமல் இருவரின் அணுகுமுறையில் நமக்கு யாருடையது பிடிக்கும்?

நீங்க குறுகிய காலத்தில் பல நண்பர் வட்டத்தை உருவாக்கியவர்.உங்களுக்கு மொழி குறித்த ஆழம்,கலப்பட்மான எனது தமிழ் போல் இல்லாமல் சுத்த தமிழ் பதிவு போடும் திறமை போன்றவை பலம்.அதே போல் ஐடியாமணிக்கு sarcasm இயல்பாக வரும் ஒன்று.

உங்களை அடையாளப்படுத்திக்கொண்ட வலிமை இருந்தும் இங்கே நண்பர் ஜோதிஜி குறிப்பிட்டது போல்

//அப்புறம் நிரூபனுக்கு தலைப்பு வைக்கும் கலையில் ஏதாவது ஒரு விருது இருந்தா தமிழ்மணத்திடம் சொல்லி பரிந்துரை செய்யலாமே? பீதியை கிளப்புறாரு?//

என்ற விமர்சனம் மாதிரி உங்கள் நண்பர் குழு யாரும் தனி கருத்துரையாடல் செய்வதில்லையா?

அடுத்த பின்னூட்டத்தில் தொடர்கிறேன் சகோ.

ராஜ நடராஜன் said...

சகோ.நிரூ!விமர்சனத்தை கருத்துரிமை அடிப்படையில் பதிவுலகில் முன்வைப்பதற்கும்,கோபத்தை எழுத்தில் கொண்டு வருவதற்கும் வித்தியாசம் உள்ளது.முக்கியமாக ராஜபக்சே சகோதரர்களின் போர்க்குற்றங்களை விமர்சிப்பதற்கும்,ராஜபக்சேக்களை திட்டுவதற்கும் வித்தியாசங்கள் உள்ளது.போரின் அடிப்படையில் இலங்கை அரசின் மீது தவறுகள் இருப்பது தெளிவாக தெரிந்தாலும் ஒரு நாட்டின் அரசபதவி கவசம் இவர்களுக்கு பாதுகாப்பு.நம்மைப் போல் ஒற்றை மனிதர்களாக இல்லாமல் இவர்கள் ஒரு உலக அரசியல் சார்ந்த ஒரு அமைப்பின் பிரதிநிதிகள் என்ற பாதுகாப்பாக முப்படை காவல்கள் உள்ளவர்கள்.இது தவிர உளவுத்துறை போன்ற வலிமையான அமைப்புக்கள் வேறு இவர்களுக்கு துணை.இப்படியான பாதுகாப்பான அரணில் இருப்பவர்களை எதிர்க்க வேண்டுமென்றால் அங்கீகரிக்கப்பட்ட இயக்கம் சார்ந்த அமைப்பின் மூலமோ ஒன்று திரண்ட மக்கள் கூட்டமாக மட்டுமே இவர்களை எதிர்கொள்ள முடியும்.இரண்டுக்கும் உதாரணமாக நாடு கடந்த தமிழீழ அரசு போன்ற அமைப்பு,லண்டனில் புலம்பெயர் தமிழர்கள் ஒன்று திரண்டு ராஜபக்சேவை இலங்கைக்கு ஓட வைத்தது போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

தனிமனிதர்களின் போர்க்குற்ற் ஆதாரங்களின் தொகுப்பையே சேனல் 4 ஆவணப்படுத்தியது.Authenticated and genuine sources of informations are collected by Channel 4 and released.

உறுதிப்படுத்தப் பட்ட தகவலையே வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் அவதூறு,நீதிமன்ற வழக்குகள் போன்றவற்றை சேனல் 4 சந்தித்தாக வேண்டும்.

With a morphing technique even a genuine source can also be doctered,claimed false etc.

திருடனைப் பிடிக்க நாம் முயற்சி செய்தால் திருடனும் தப்பிக்க வழிகள் என்னவென்று ஆராயத்தானே செய்வான்!அதைத்தான் இலங்கை அரசும் கூட செய்ய முயற்சித்தது.இன்னும் முயற்சிக்கிறது.

இங்கே நான் சொல்லிக்கொண்டு வருவது கருத்துரிமை என்ற பெயரால் சொல்லும் விமர்சனம் மட்டுமே.ஆனால் சிலருக்கு சில ஆதாரங்கள் கிடைக்கும்.அதனை அவர்களது சுய அறிமுகத்தோடு யாரும் செய்ய மாட்டார்கள்.அரசியல் அபாயங்கள்,உளவுத்துறை போன்ற பிரச்சினைகளால் புனைப்பெயரில் வரவேண்டிய நிர்பந்தங்கள் இருக்கின்றன.அப்படி சேனல் 4க்கு போவதற்கு முன்பே முகம் அறியாமல்,பெயர் அறியாமல் உண்மை ஆதாரங்களை வைக்க வேண்டிய சூழல்கள் இருக்கிறது.கூகிளின் அனானி போன்ற வசதிகள் கூட இது போன்ற அபயம் அளிக்கும் பாதுகாப்புக்காகத்தான்.ஆனால் நடைமுறையில் அனானிகளின் உபயோகம் என்ன என்பது யாவரும் அறிந்த ஒன்று.

எனது கருத்துரிமை ஒன்றைத் தவிர எந்த இயக்கத்தின் தொடர்போ அல்லது அங்கீகரிக்கப்பட்ட ஒரு அரசுக்கு எதிராகவோ செயல்படாத பட்சத்தில் பிரச்சினைகள் ஒன்றுமில்லை.

முகம்,பெயர் காட்டி வலம் வரும்போது அரசியல் ஆதரவு,மனித உரிமைக்குழு,எல்லைகளற்ற் நிருபர்கள் அமைப்பு போன்றவற்றின் துணைகளோடு மட்டுமே இயங்க முடியும்.

அரட்டைகள்,பொதுவான பதிவுகள் வேண்டாம் என்று சொல்ல வரவில்லை.ஆனால் பதிவு ஹிட் பெற வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் தலைப்பு வைக்கலாம்,பதிவில் சொல்லலாம் என்பது மட்டுமே இங்கே விமர்சனம்.

இப்ப ஐடியாமணியின் பக்கம் திரும்பலாம்.அவர் ஓட்டை வடை விற்கும் போதே சில சமயம் புத்திசாலி மாதிரி தெரிவார்.சிலசமய்ம் ஓட்டை வடையை எலி கடிக்கும் சத்தம் நன்றாகவே கேட்கும்:)

பவர்ஸ்டாரா?பவுடர் ஸ்டாரா?பெயர் மாற்றிய பின் எனக்கே துவக்கத்தில் கொஞ்சம் குழப்பமாகத்தான் இருந்தது.அப்புறம் எனக்கும் பித்தம் தெளிந்தது:)

இஸ்லாமிய சிந்தனைகளை இணையத்தில் வைக்கவேண்டும் என்று சிலர் அலைந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்த விசயம்தான்.மாற்றுக்கருத்துக்களை அளாவலாவல் செய்து முன்வைக்கலாம்.இல்லையென்றால் ஒருத்தருக்கொருத்தர் சாவகாசமே வேண்டாம் என ஒதுங்கிக் கொள்ளலாம்.

இரண்டையும் செய்யாமல் எதிர்ப்பதிவுகள் போடுகிறேன் பேர்வழியென ஒருவரின் மதநம்பிக்கையை அவமதித்து தாடி,குல்பி மதம் என்று சிலரை புண்படுத்துவது அந்த கணத்திற்கு வேண்டுமானால் ஹிட் பெற்றுத்தரும்.சிரிப்பை கொண்டு வரும்.பின்பு யோசித்துப் பார்த்தால் பகிர்தல்கள் போய் தனி மனித விரோதங்களே மேல் நிற்கும்.

பெர்னாட்ஷா கூட நகைச்சுவை எழுத்தாளரே.எப்படி உபயோகிக்கிறோம் எனபதைப் பொறுத்தது நகைச்சுவை.

இறுதியாக போர் தொடர்பான தகவல்கள் சிலரின் ரசனைக்காகவோ,சலிப்புக்காகவோ அல்ல.பதிவு செய்வது சில உண்மைகள் வெளிவராமலே உறங்கிப் போய் விடக்கூடாதென்பதற்காகவும்,ஆவணமாக வேண்டும் என்பதற்காகவே.அதற்கான துணிவு உங்களிடம் இருக்கிறதென்றே நம்புகிறேன்.துணிவு மட்டுமே போதுமா?சிக்கல்களையும் விடுவித்துக்கொள்ளும் திறனும் தேவைப்படுகிறது.பிரபலமாகி விடுவது இடியாப்ப சிக்கல்களையே கொண்டு வரும்:)

ராஜ நடராஜன் said...

ஜோஜிஜி,வவ்வால்,வெற்றிமகள்!

சகோ.நிரூபனுக்கு யோசிச்சு தலை இப்ப பூஜ்யமாகி விட்டது.நம்ம தளம் என்ன ரஜனி கடை மாதிரி பூஜ்ய அலோகிரதத்திலா ஆரம்பமாகுது:)

பேட்டரி தலையை ரீசார்ஜ் செய்துகிட்டு நாளை வருகிறேனே.

தூக்கம் கண்ணிலே:)

V.Radhakrishnan said...

மிகவும் அருமை. ஒரு விசயத்தை மேலாக எழுதாமல் மிகவும் திறம்பட எழுத வேண்டுமெனவும் அதுபோல் நிறைய கருத்துகள் பரிமாற்றம் செய்ய வேண்டும் என்பதும் நான் எழுதிய வெளிநாடு செல்பவர்கள் வெளிநாட்டிலேயே இருப்பது ஏன் எனும் பதிவில் அறிந்தேன். சில பல நேரங்களில் தமிழில் எழுத நேரம் ஒதுக்க, தமிழில் படிக்க என காலங்கள் போதவில்லைதான். சென்ற பதிவினை விரைவில் படிக்கிறேன். வவ்வால் எப்போதுமே தலைகீழ் விகிதங்கள் தான். அற்புதமான சிந்தனையாளர்.

ராஜ நடராஜன் said...

V.ராதாகிருஷ்ணன் பின்னூட்டத்திலிருந்து மறுபடியும் துவங்குகிறேன்.நீங்க வெளிநாட்டுக்கு போகிறவர்கள் ஊருக்கு ஏன் திரும்புவதில்லையென்ற கேள்வி கேட்டவுடன் உங்களுக்குப் பின்னூட்டம் போட்ட மாதிரி நினைவு.உங்கள் பெயரில் T.V ராதாகிருஷ்ணன் என்று இன்னுமொரு பதிவர் இருப்பது உங்களின் இந்தப் பின்னூட்டம் மூலமே என்னால் அடையாளம் காண முடிந்தது.

நியாயமாக நான் உங்களின் முந்தைய பதிவிற்கு பின்னூட்டம் இட்டிருக்க வேண்டும்.மதம் என்ற சொல்லைக் கண்டால் பின்னூட்டங்கள் அல்லது பதிவை பார்வையிடுகிறவர்கள் எண்ணிக்கை எகிறும் என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்ததாலும்,எனது பின்னூட்டம் உங்களின் பதிவுக்கு எதிர்மறையாக இருக்கும் என்பதால் பின்னூட்டம் சொல்லாமல் இருந்து விட்டேன்.இப்ப நம்ம வலையில் நீங்க மாட்டிகிட்டதால்:)அதுபற்றி பேசிவிட்டு உங்கள் பின்னூட்ட வரிகளுக்குப் போகலாம்.

நீங்கள் தமிழ்மணத்தை தொடர்கிறீர்களோ இல்லையோ என்பதை நீங்கள்தான் கூறவேண்டும்.மதம் குறித்தான விவாதங்கள் பதிவுலகிற்கு ஒன்றும் புதிதல்ல.கிட்டத்தட்ட 2004,2005லேயே காரசாரமாக விவாதித்து விட்டு நிறைய பேர் காணாமல் போய்விட்டார்கள்.முந்தைய மத நேர்,எதிர் பின்னூட்டங்கள் விவாதம் என்ற நிலையில் மட்டுமே.தற்போதைய சூழலில் தொடர்ந்து மதம் குறித்தும்,மதம் குறித்த விமர்சக பதிவர்கள் ஒரு சிலர் தொடர்ந்து கொண்டு வந்தாலும் உராய்வு நிலைகளில் சென்றதில்லை.நிகழ்வுகளை பதிவை விட முந்தைய பதிவுகளின் பின்னூட்டங்கள் உங்களுக்கு சில புரிதல்களை தரும்.நானும் மதம் சார்ந்தவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காத மொக்கையனாகவே தொடர்ந்து வந்திருக்கிறேன்.ஆனால் சமீபத்திய விவாதங்கள் பிரிவினைகளை உருவாக்குவது மாதிரியான கவலையான சூழல்களை உருவாக்குகிறது.

இதற்கான காரணம் தனது மதம் என்ற அன்பால் தனித்தனியாக பதிவிடுபவர்கள் ஒன்றாக சேர்ந்துள்ளார்கள் என்றே நினைத்தேன்.ஆனால் மதம் குறித்த விவாதங்களை முன் வைக்கும் போது ஒரு சிலர் ஒரு அமைப்பின் கீழ் வருபவர்களாக உச்சம் காட்டுகிறார்கள் என்பது மிகவும் தாமதமாகவே புரிகிறது.ஒருவருக்கு மதம் பிடிப்பதும் இன்னொருவர் பாகனாக இருப்பதும் அவரவர் உரிமை:)

இப்பொழுது உங்க பின்னூட்டப் பகுதிக்கு வந்து விடலாம்.உங்கள் பதிவுகளை பார்வையிட்டால் வெளிநாடு போனவர்கள் பதிவுக்குப் பின் நான் உங்கள் தளத்திற்கு வந்த மாதிரியே நினைவில்லை:)

முந்தைய காலகட்டத்திற்கும்,இப்போதைய நுகர்வு கலாச்சார காலகட்டத்திற்கும் கால அவகாசங்கள் இருவிதத்தில் செயல்படுகின்றன.முன்பு ட்ரங்கால் போட்டுப் பேசுவதெல்லாம் எவ்வளவு சிரமமான விசயம்.அதுபோலவே கடிதப் போக்குவரத்தும் கூட.கால தாமதங்கள் என்ற போதிலும் கால அவகாசங்கள் இருந்தது.வாழ்க்கையோட்டத்தில் ஒரு ரிதம் இருந்த மாதிரியான உணர்வு.காசும்,தேவைகளும் குறைவாகவே கிட்டின.

இப்பொழுது எதிலும் வேகம்.பணி,பயணம்,இணையம்,குடும்பம்,கலந்துரையாடல் எல்லாமே அவசர வேகம்.கூடவே காலம் போதாமை என்ற நிலைக்கு வந்து விட்டோம்.இதோ முந்தாநாள் பதிவுக்கு இப்பொழுது பின்னூட்டம் தொடர்கிறேன்:)

இனி நண்பர் வவ்வாலைப் பேசிடுவோம்.ம்னுசன் எந்த சப்ஜெக்ட்டுன்னாலும் காய்ச்சுறார்!தலைகீழாக தொங்கினாலும் விழாமலே தொங்குகிறார் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே:)

நல்ல சிந்தனையாளர் என்ற பாராட்டுக்கு வ்வ்வால் சார்பாக நன்றி.

இணைந்து கொள்வோம் மீண்டும் கால அவகாசம் கிடைக்கும் பட்சத்தில்.

ராஜ நடராஜன் said...

ஜோதிஜி!என்னோட வளவளத்தான் பின்னூட்டம் கண்டு முன்னாடி ஆச்சரியப்பட்டீங்கல்ல!அப்பவே சொல்ல வேண்டியதுதானே உண்மைத்தமிழனே ஏன் காப்பியடிக்கிறீஙகன்னு:)அடைப்பான் போடலைன்னா கிளாஸ்ல அட்டனென்ஸ்க்கு பேர் கூப்பிடற மாதிரி ஒவ்வொருத்தரா பேர் சொல்லியே கூப்பிட வேண்டியிருக்கும் பரவாயில்லையா?

எழுத்துரு லாரல் ஹார்டி மாதிரியிருக்கா இல்ல கவுண்டமணி,செந்தில் மாதிரியிருக்கா:) எனக்கு ஒண்ணுமே புரியலை.

சகோ.நிரூபனுக்கு நீங்க சொன்னதை அடைப்பான்ல போட்டுட்டேன்.படிச்சிட்டு ஏதாவது மாற்றம் வருதா இல்லை நம்மளையே கலாய்க்கிறாங்களான்னு பார்க்கலாம்:)

நிரூபன் said...

நானும் வந்திட்டேன்!

படிச்சிட்டு வாரேன்

Rathi said...

//புலிகளுக்கு எதிராக விமர்சனங்கள் வைத்த சில இலக்கிய மூஞ்சிகளின் விலாசங்களையெல்லாம் இணையத்தில் தேடினாலும் கூட இப்பொழுது கிடைப்பதேயில்லை.

இந்த லட்சணத்தில் ஈழ வரலாற்றின் ஒரு பக்கத்தைக் கூட அறியாதவன் எல்லாம் எதிர்ப்பதிவுகள் போட்டுக்கொண்டிருக்க நீங்கள் சார்ந்த நண்பர்களோ இருட்டுக்குள் வாள் வீசுகிறீர்கள்.படும் காயங்கள் என்னவோ தோள் கொடுப்பவன் மீதே.//

ராஜ நட.... Salute!!

நிரூபன் said...

ஆரோக்கியமான கருத்துக்களைச் சொல்லியிருக்கிறீங்க.

உண்மையில் எம்மைப் போன்றோர் சில வேளைகளில் போடும் சண்டைகளால் தோள் தொடுக்கும் எம் உறவுகளுக்கு வலிகள் ஏற்படுகின்றது என்பது நிஜமே!
இனிமேல் அவ்வாறு நிகழா வண்ணம் பார்த்துக் கொள்கிறோம்.

ஆதாரங்களுடன் கூடிய செய்திகளை வெளியிடுவது தனி மனித வலைப் பதிவுகளைப் பொறுத்தவரை ஆரோக்கியமற்றது என்பது உண்மை தான்.

இனிமேல் அவ்வாறான செய்திகளைத் தவிர்க்கப் பார்க்கிறேன்.
அப்புறம் ஜோதியி அண்ணர் சொல்லிய தலைப்பு வைக்கும் விடயம்?
சும்மா ஒரு கவர்சிக்காகவும், சுவாரஸ்யத்திற்காகவும் அப்படி வைக்கிறேன்,.

திருத்த முயற்சிக்கிறேன்.

நன்றி நண்பர்களே

Thekkikattan|தெகா said...

அருமையாக இருக்கிறது... :)))))))


மனதை பிழிகிறது :(((

Rathi said...

தெக்கி,.... :)))))

ராஜ நடராஜன் said...

Vetrimagal! I had a glimpse of Dream Spaces.Simple narration seems to be your style of writting.

About Bomma statue of Oscar made me to smile:)

Friend Vavval is the right person to comment on Benhur.

உங்க ஆங்கிலப் பதிவின் தாக்கம் தணிந்து தமிழுக்கு தாண்டி விடுகிறேன்.

பெயருக்கு தமிழில் அறிமுகம் செய்து விட்டு பதிவு தமிழை தொடவேயில்லை போல இருக்குதே!

கால அவகாசம் இருக்கும் போது தமிழில் எழுதுங்கள்.தமிழ்மணத்தில் இணையுங்கள்.நிறைய பெண்கள் தமிழ்மணத்தில் வலம் வருகிறார்கள்.எழுத்துக்கு எழுத்து.நட்புக்கு நட்பு.

நன்றி.

ராஜ நடராஜன் said...

வவ்!இப்ப நம்ம ஆட்டத்தை துவக்கிடுவோம்.மதியம் மைட்டோ காண்ட்ரியல் ஈவ் பற்றி பின்னூட்டம் போட்டிருந்தேன்.ம்றுமொழியைத் தேடினேன்.காணோம்.

பெண்டாமீடியா எங்கோ கேள்விப்பட்டிருக்கிற மாதிரி இருக்குதேன்னு தேடினால் பாரதி தமிழ்ப்படம் எடுத்ததே நாங்கதான்னு ஒரு தளம் வந்து நிற்குது.நீங்க சொல்ற பெண்டாமீடியா இதுவா?

கீழே தெகா ஏதோ கலாய்க்கிற மாதிரி இருக்குது.நான் அப்புறமா வாரேன்:)

ராஜ நடராஜன் said...

ரதி!என்னா சிரிப்பு?

தெகா!கலாய்க்கிற மாதிரி தெரியுதே:)
சொல்லிட்டு கலாய்க்கலாமில்ல?

நான் வவ்வாலுக்குப் போடற பின்னூட்ட நிறுத்திட்டு ஓடி வந்தேனாக்கும்:)

Thekkikattan|தெகா said...

those were a few of popular template comments ;-)

இங்கே தனியங்கி முறையில அலைஞ்சிட்டு இருக்கிறது. அதைச் சொல்ல வந்தேன். அதைப் பார்த்தவுடன் மண்டைக்குள்ளர பல்பு எரிஞ்சு இன்னும், இன்னும்னு வேகமா எழுதுறதை சொல்ல வந்தேன்... வழ, வழ கொழ கொழான்னு நீட்டாம. நீட்டினா ஜி ஓடியாருவாஹ குச்சியை எடுத்துக்கிட்டு.

வெற்றி மகள் - நாங்களும் படிச்சிருக்கோம்ல! அப்படியே பட்டுத் துணிமேல விரல்களால் வருடுவது மாதிரி இருக்குமே ஆங்கிலம் :) ... ஆமா, அவங்க தமிழ்லயும் எழுத ஆரம்பிக்கணும்னுங்கிறதை நானும் வழிமொழிகிறேன். சீக்கிரமா எழுதுங்க தமிழ்மகள்...

ராஜ நடராஜன் said...

தெகா!நீங்க அங்கேதான் போவீங்கன்னு ஒரு குத்துமதிப்பா நினைத்தேன்.ரதி வேற சிரிப்பான் போட்டதால இரண்டு பேரும் சேர்ந்துகிட்டு கலாய்க்கிறீங்களோன்னு நினைச்சேன்:)

அறிவியல் சார்ந்த பதிவுகளில் நீங்களும் கூட கில்லாடிதான்.(இந்திப்பட உலகில் அக்சய் குமார்ன்னு ஒரே கில்லாடிதான்)

அத்தி பூத்த மாதிரியே பதிவு போடுறீங்க.முடிந்தால் வவ்வாலுடன் இணைந்து கலக்கலாமே!அனைவரும் இணைந்து ஓரளவுக்கு வாசிப்பு சுவாராசியங்களைக் கூட்டினால் ஒழிய தமிழ்மணக் கும்மிகளைப் பின் தள்ள இயலாது.

வவ்வால் said...

ராஜ்,

//,எனது பின்னூட்டம் உங்களின் பதிவுக்கு எதிர்மறையாக இருக்கும் என்பதால் பின்னூட்டம் சொல்லாமல் இருந்து விட்டேன்.//

பரவாயில்லை அலை வரிசை நல்லா தான் வேலை செய்யுது. நானும் அதான் நினைச்சு பின்னூட்டம் போடலை ரா.கி க்கு, அவர் பதிவுகளை சமிப காலமாக படித்து வருகிறேன், நன்றாக இருக்கும். சில சமயம் நான் சொல்ல எத்வும் இருக்காது , அப்போ டெம்பிளேட் பின்னூட்டம் போட வேண்டம்னு விட்ருவேன், சில சமயம் சொன்னால் விவாதம் ஆகிடும்னு நினைக்கும் போதும் படித்து விட்டு வந்துவிடுவேன்.

----------

ரா.கி,

உங்களின் மேலான எண்ணங்களுக்கு எனது நன்றிகள். நாம சிந்தனையாளர் எல்லாம் இல்லிங்க, இப்போ தான் சிந்திக்க ஆரம்பிக்கும் ஒரு மனிதனா பரிணாம வளர்ச்சி அடைகிறேன் :-)) அதுக்குள்ள சிந்தனை சிற்பி ஆக்கி ஓரம் கட்டப்பார்க்குறிங்களே :-))

------------------

அப்புறம் ராஜ்,

மதம் சார்ந்து அதிகம் முக்கியத்துவம் கொடுக்காத ஒரு மஞ்ச மாக்கானாக நான் இருக்கேன்னு அடிக்கோடிட்டு சொல்லிக்கிறேன் :-))

//தலைகீழாக தொங்கினாலும் விழாமலே தொங்குகிறார் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே:) //

விழாமல் இருக்கும் கலை எல்லாம் தெரியாது, விழுந்தால் எழும் கலை தெரிவதால் விழ ..விழ எழுகிறேன். விழுவதும் , எழுவதும் வாழ்க்கையின் ஒரு அம்சம் என்று எடுத்துக்கொள்வதால், மீண்டும் தொங்க ஆரம்பித்துவிடுவேன் சலைக்காமல் :-))

ஹி..ஹி சைக்கிள் ஓட்டும் காலத்தில் கீழ விழுந்தால் அடுத்தவங்க பார்க்கும் முன் வேகமா எழுந்து ஓட்டிக்கொண்டு ஓடுவோம்ல அப்படித்தான் :-))

//அப்பவே சொல்ல வேண்டியதுதானே உண்மைத்தமிழனே ஏன் காப்பியடிக்கிறீஙகன்னு:)//

அவர் பதிவிலேயே காபி & பேஸ்ட் தான் அதிகம் இருக்கும். அப்புறம் எங்கே அவர் பின்னூட்டம் போடுறார் சொல்லிக்க ? தமிழில் வரும் குப்பை சினிமாவையும் பார்த்துப்புட்டு நீட்டி முழக்கி எழுதுவது எல்லாம் பொதுப்புத்தியில் சிறப்பானதாக தெரியலாம், ஆனால் ஜோஜிஜி போன்றவர்களுக்கும் அப்படித்தெரிவது ஆச்சர்யமா இருக்கு. அவரைப்போல கொல்லாதிங்கனு சொல்லி இருந்தாலும் , அதை போய் அவர் கூடவா ஒப்பீடு செய்யனும் , என்னக்கொடுமை சார் இது :-))

வேலை மெனக்கெட்டு மாஞ்சு மாஞ்சு பின்னூட்டம் போடுறார் ராஜ், இன்னும் சொல்லப்போனால் நான் போகிறப்போக்கில் திரைப்படம்ம் பார்ப்பதும் ஒரு கலைனு சொன்னேன் உடனே ஒரு பதிவின் சுட்டியை தேடி எடுத்துப்போட்டார், ஆச்சர்யமா இருந்தது. முன்னரே சொல்லனும்னு நினைச்சு அது விட்டுபோச்சு. அந்த அளவுக்கு டெடிகேஷனோட பின்னூட்டம் போடுபவரை ஒரு மொக்கையோட ஒப்பிட்டு விட்டிங்களே ஜோதிஜி!

----------

என்ப்பதிவில் கொஞ்சம் தான் கண் வைப்பேன், உங்க பின்னூட்டம் பார்த்தேன், அந்த ரிச்சர்ட் ஆட்டன் பரோ சகோதரர் டாக்குமென்டரி தானே , முன்னர் என்னோட பழைய மீள் உறக்கம் பதிவில் கூட சொன்ன நினைவு, சுட்டி எல்லாம் போட்டிங்க. அதையே லேட்டாக பார்த்தேன்.பதில் சொல்லாமைக்கு மன்னிக்கவும் அப்போ மொபைலில் படிப்பது அதான்.

இதுக்கு பதில் போட்டு விடுகிறேன்.

------------

ஆமாம் அதே தான் பெண்டாமீடியாவின் ஒரு பிரிவான மீடியா டிரிம்ஸ் மூலம் பாரதி , தயாரிக்கப்பட்டது. அவர்கள் முடிஞ்ச வரைக்கும் அள்ளி சுருட்டிவிட்டு கடைய மூடிட்டாங்க. எப்படி அள்ளி சுருட்டனாங்களா , பங்கு சந்தையில் பங்கு வெளியிட்டு தான். அதுக்காகவே படம் தயாரித்தவர்கள். சுருட்டலுக்கு சுஜாதா போன்றவர்களும் உடந்தை தான். சிலக்கதைகள் எல்லாம் வெளியில் வருவதில்லை.

பெண்டா மீடியா போன்றவர்களால் தான் பங்க்கு சந்தையில் பொதுவாகவே திரைப்பட நிறுவனங்களின் ஷேர் வெளியீடுகளுக்கு கெட்டப்பேர் வந்ததுனு கூட சொல்லலாம். இது போல பேரைக்கெடுத்தவர்களின் பட்டியலில் நடிகை ரேவதியின் டெலி போட்டொஸ், ஜி.வெங்கடேஷ்வரனின் ஜி.வி ஃபில்ம்ஸ் க்கும் பங்கு உண்டு.

------------

//அத்தி பூத்த மாதிரியே பதிவு போடுறீங்க.முடிந்தால் வவ்வாலுடன் இணைந்து கலக்கலாமே!அனைவரும் இணைந்து ஓரளவுக்கு வாசிப்பு சுவாராசியங்களைக் கூட்டினால் ஒழிய தமிழ்மணக் கும்மிகளைப் பின் தள்ள இயலாது.//

தெகா, கடையில் தான் முன்னர் டாப் அடிப்பேன் அவர் என்னமோ இப்போ கவுஜ , காமிரானு டிராக் மாறிட்டார் , அவுங்க ஊருல வெயில் காலமோ என்னமோ :-))

கும்மிகளை ஓரம் கட்டணும் என்பதெல்லாம் ஊழல் அற்ற இந்தியா போலனு நினைக்கிறேன் :-))

வேண்டுமானால் அன்னா போல தெகா வை உண்ணாவிரம் இருக்க சொல்லிப்பார்க்கலாம் :-))

வருண் said...

****இரட்டை வரிப் பின்னூட்டங்களே பதிவுலகில் பிரபலம் என்பதாலும் அனைவருக்கும் ஒரே இடத்தில் சம்மணம் போட்டு உட்கார்ந்து கொள்வது இயலாது என்ற போதிலும் நட்பு காரணமாக கூட பலர் ஹலோ!பதிவு நன்றாக இருக்கிறதென்றோ,பல்லை நற நறக்க நல்ல தருணமொன்றோ சில பின்னூட்ட வெளிப்பாடுகள் உருவாகின்றன.ஆனால் கடந்த சில பதிவுகளின் பின்னூட்டங்களில் முக்கியமாக பதிவர்கள் வவ்வால்,சிராஜ்,தருமி,ராபின் என தொடர் பின்னூட்டங்கள் ஒரு புதிய அனுபவமே.மாற்றுக் கருத்துக்களாக இருந்தாலும் பதிவர் சிராஜ் நட்புடன் அவரது கருத்துக்களை முன் வைத்ததற்கு நன்றி.***

எம்.எஃப் ஹுசைனை அரவணைத்து சல்மான் ருஷ்டியை கைவிடலா...

I see you are very pleased with this outcome of this above post. :-)

Here is my observation and comments on your post!

உங்க பதிவுத் தலைப்பில், உங்க நோக்கம், நீங்க என்ன சொல்ல வர்றீங்கனு தெளிவாக சொல்லியாச்சு. இல்லையா??

உப்புபெறாத இரண்டு வரி பின்னூட்டம் பத்தி சொல்றீங்க, இந்த அரைவரி தலைப்புக்கு, ஒரு கட்டுரையோ அல்லது பின்னூட்டமோ எழுதத் தேவையா என்ன??

I am saying you are not debating anything there. Your OPINION has been explicitly shown in your TITLE! It is very clear what you are really upto or NOT??

What is the need for any discussion or debating here at all. I wonder.

இருந்தாலும்

* அதை ஏற்றுக்கொண்டு உங்க சிந்தனைக்கு ஆதரவா பலர் பின்னூட்டமிட்டாங்க (நாகரிகமாக, உலகத்தரத்தில்)

* உங்க "முயற்சியை" க்ரிட்டிசிஸத்தை பிடிக்காமல் எதிர்வாதமும் ஓரளவுக்குச் செய்தார்கள்..

சரி, here is my question,

எந்த வகையில் இந்தப் பதிவும் பின்னூட்டங்களும் உலகத்துக்கு ஒரு நல்ல கருத்தை எடுத்துச் சொல்லி பலரை விழிக்க வச்சிருக்கு??

அப்படி எதுவும் செய்யலையா?

அப்போ இதுவும் ஒரு மொக்கைதானா?

What have you taught us and the world from the discussion?

Or learned from that post?

I am very critical here but please take it positively and try to give some answer! thanks!

வவ்வால் said...

//உங்க பதிவுத் தலைப்பில், உங்க நோக்கம், நீங்க என்ன சொல்ல வர்றீங்கனு தெளிவாக சொல்லியாச்சு. இல்லையா??

உப்புபெறாத இரண்டு வரி பின்னூட்டம் பத்தி சொல்றீங்க, இந்த அரைவரி தலைப்புக்கு, ஒரு கட்டுரையோ அல்லது பின்னூட்டமோ எழுதத் தேவையா என்ன??//

அய்யா வருண் வந்துட்டாங்கோ, வாங்கோ,

நீங்க அறிவு ஜீவி தலைப்பைப்பார்த்ததும் கருத்தை கபால்னு பத்திகிடுவிங்க, என்னைப்போல ஆளுங்க எல்லாம் ஞான சூன்யம் ஆச்சே , ஞான சூன்ய லேகியம் சாப்பிடனும்ல அதான் , தலைப்புல போட்டு இருக்கிறதை பதிவில் கட்டுடைத்து இருக்கார் ராஜ். அரைவரில தலைப்பு வைக்காம 50 வரில வச்சா ஓகேனு சொல்வீங்களா? உங்க ஆசைக்கு 50 வரி தலைப்பு வைக்கலாம்னு பார்த்தா பிலாக்கர் விடாதே:-))

மகா ஜனங்களே நல்லா கேட்டுங்கோங்க இனிமே யாரும் அரைவரில தலைப்பு வச்சு பதிவு போடாதிங்க, அப்படியே யாரேனும் பதிவுபோட்டாலும் பின்னூட்டம் போடாதிங்க, ஏன்னா அண்ணாருக்கு அது பிடிக்காது :-))

நீங்க இனிமே தலைப்பை மட்டும் படிச்சுட்டு போங்க, உள்ளப்போய் படிச்சு நேர விரயம் செய்ய வேண்டாம் :-))

உங்களுக்கு இரத்த உயர் அழுத்தம் இருந்தா உப்பு சேர்க்க கூடாதுனு டொக்டர் சொல்லி இருக்கலாம் , அதனால் எல்லாருமே உப்பு சேர்க்க கூடாது சொல்றிங்களா :-))

பேசியது , பின்னூட்டம் போட்டது பத்தி எல்லாம் கேள்விக்கு உள்ளாக்கியதால் நானும் ஒரு பின்னூட்டவாதி என்பதால் பதில் சொல்கிறேன். ஏன் சொல்கிறேன்ன்னா நீங்க விவரமானவர் , நீ ஏன் பதில் சொல்கிறாய்னும் கேட்கலாம் , கேட்பீங்க அதான் சொல்கிறேன்.

நீங்க இந்த மாதிரி ஒருப்பதிவு தேவையானு கூட கேட்கலாம் உரிமை இருக்குனு ஒத்துக்கலாம், ஆனா பின்னூட்டம் தேவையானு கேட்க ஒரு உரிமையும் இல்லை.

தொற இங்கிலீபீச்செல்லாம் பேசுது , என்ன மாதிரி ஆளுங்க போடுற பின்னூட்டத்தினை எப்படி புரிஞ்சுக்கிறாரோ? துபாஷோ ,சபாஷோ வச்சு இருப்பார் போல :-))

//I am saying you are not debating anything there. Your OPINION has been explicitly shown in your TITLE! It is very clear what you are really upto or NOT??

What is the need for any discussion or debating here at all. I wonder.//

நீங்க என்ன சொல்றது , பதிவ போட்டவரும் சரி, பின்னூட்டம் போட்டவங்களும் சரி விவாதம் செய்வதா சொல்லிக்கவே இல்லையே :-))

எங்க ஊருல மழை பெஞ்சதுனு ஒருத்தர் சொன்னா இன்னொருத்தர் எங்க ஊருல வெயில் அடிச்சதனு சொல்லக்கூடாதா என்ன?

அப்படி சொல்லாம எங்க ஊருல வெயில் அடிக்கும் போது உங்க ஊருல எப்படி மழை பெய்யலாம்னு விவாதிக்கனுமோ? அதுக்கு தான் பதிவா ரைட்டு விவாதிச்சுடலாம் :-))

இதே மழை/ வெயில் சமாச்சாரத்துக்கும் விவாதிக்கலாம்/வாதிப்போம் , எப்போவென்றால், எங்க ஊருல மழை பெஞ்சது ஏன்னா நாங்க எல்லாம் புண்ணியம் செய்தவங்க, கடவுளின் கடாக்‌ஷம் நேரா எங்க மேல பாயும், கழுதைக்கு கல்யாணம் செய்து வைத்தோம் மழை பெஞ்சது சொல்லிக்கும் போது!

நீங்க இதுக்கே ஒண்டர் ஆகிட்டா எப்படி, இன்னும் தண்டர் ஆகுறாப்போல எல்லாம் பதிவும், பின்னூட்டமும் வருமே :-))

//எந்த வகையில் இந்தப் பதிவும் பின்னூட்டங்களும் உலகத்துக்கு ஒரு நல்ல கருத்தை எடுத்துச் சொல்லி பலரை விழிக்க வச்சிருக்கு??

அப்படி எதுவும் செய்யலையா?

அப்போ இதுவும் ஒரு மொக்கைதானா?

What have you taught us and the world from the discussion?

Or learned from that post?

I am very critical here but please take it positively and try to give some answer! thanks!//

கருத்து என்பது என்னா அலாரம் இருக்க டைம் பீசா , தூங்குறவங்கள எழுப்பி விட :-))

இல்லை லோகத்தில எல்லாம் நித்திரைல இருக்காங்களா எழுப்பிவிட, இல்லை எழுப்பி விடும் அற்புத வேலை செய்கிறோம்னு இங்கே போர்ட் மாட்டி இருக்கா :-))

அப்படி எதுவும் செய்யவில்லை!

இதுவும் மொக்கையா ? என்றால் ஆமாம் மொக்கையே அதை நானே ரொம்ப மொக்கைப்போட்டொனோ என்று கேட்பதில் இருந்து தெரிந்து இருக்கலாம். பதிவரும் அப்படியே சொல்லிக்கொள்வார். பின்னூட்டங்களைப்படித்து இருந்தால் தெரிந்து இருக்கும்.

இந்தப்பதிவில் உரையாடல் மூலம் உலகத்துக்கு கருத்தோ , பாடமோ நடத்தவில்லை, எங்களுக்கு தான் பாடம், கருத்து எல்லாம் , அதாவது சுய கற்பித்தல் :-))

நாங்க என்ன லோகத்துக்கு மெசேஜ் சொல்ல மாஸ் ஹீரோவா :-))

வவ்வால் said...
This comment has been removed by the author.
வருண் said...

***இதுவும் மொக்கையா ? என்றால் ஆமாம் மொக்கையே..***

நன்றி வவ்வாலு!

"ஊருப்பய மொக்கையெல்லாம் தரமில்லாத மொக்கை! நம்ம மொக்கை மாதிரி வருமா என்ன? நம்ம மொக்கை மட்டும் உலகத்தரம் வாயந்தது" னு நெனச்சுக்குவாங்களாம் ஒரு சில "தன்னலமில்லா" பிறநலவாதிகள்!

இவங்க, இவ்ர்கள் கண்களுக்கோ, இவர்கள் நண்பர்கள் கண்களுக்கோ தெரிவதில்லை! அதுதான் பரிதாபம்!

ராஜ நடராஜன் said...

வருண்!நல்லா தூக்கம் போட்டு விட்டு காலையில் எழுந்து அடுப்படியில் என் மனைவிக்கு வெங்காயம்,தக்காளியெல்லாம் வெட்டிக்கொடுத்துட்டு,கொதிக்கிற சாம்பாரை வேற கொஞ்சம் கிண்டி விட்டு:)நான் கம்ப்யூட்டருக்குப் போறேன்னு சொல்லிட்டு வந்தா வவ்வாலும்,நீங்களும்.

நீங்க முந்தைய பதிவுகளையும்,பின்னூட்டங்களையும் படிச்சிருக்கீங்கன்னு இந்தப் பின்னூட்டம் மூலம் புரியுது.நாம உருண்டையா சுத்துற பூமியில் எந்த சிவப்பு புள்ளிகள் மின்னுகின்றன என்ற ஆர்வம் இல்லாத ஆளு வேற).

இங்கேயான தலைப்பும்,பின்னூட்டங்களும் எதிலும் சேர்த்தியே இல்லை.முந்தைய பதிவுகளின் பின்னூட்டங்களை நிறைய பேர் பார்த்திருக்க மாட்டார்கள் என்பதாலோ நானும்,வவ்வாலும் பேசிக்கொண்ட பின்னூட்டத்தில் சாருவைப் பற்றி ஆட்டோபிக்சன் என்று கூறியதை நான் உள்வாங்கிக்கொள்ளாமல் நான் எதையோ சொல்லப்போக ஆட்டோபிக்சன் மாதிரி இது ஆட்டோபின்னூட்டம்ங்கிற பொருளில் அழகாக தானியங்கிப் பின்னூட்டம் என்று குறிப்பிட்டார்.வார்த்தைகள் புழங்க புழங்க பழக்கமானாலும் ஏதோ ஒரு புள்ளியில் பிறப்பது.உதாரணமாக மச்சி,மாம்ஸ் என்ற சொற்கள் இளைஞர்கள் மத்தியிலும்,பேரிளைஞர்கள்???மத்தியிலும் பிரபலமாக இருந்தாலும் யாரோ ஒருவர் தன் நண்பனை விளிக்கும் கொல வெறில!பற்றிகிட்ட நெருப்பாக இருந்திருக்கும்.

இப்போதைய பேரிளைஞர்,அப்போதைய இளைஞர் கலைஞர் கருணாநிதி காலத்துல தமிழுக்கு முக்கியத்துவம் தரவேண்டுமென்று தமிழ்க்குடிமகனா அல்லது வேறு யாரான்னு தெரியல டீஸ்டாலை குளம்பியகம் ன்னு தமிழ்ப்படுத்தினாங்க.இதில் குளம்பியோ என்னவோ அந்த சொல் புட்டுகிட்டுப் போயிடுச்சு.இப்பொழுது கடைகளின் பெயர்ப்பலகைகள் எப்படியிருக்குதுன்னு உங்களுக்கு தெரியனுமின்னா சென்னையைப் ப்டம் பிடிக்கிற ஜாக்கிசேகர்க்கு விண்ணப்பம் போட்டு அவரை ஒரு பதிவு போட வச்சிடலாம்:)சில நாட்களுக்கு முன்னாடி நான் கூட டீக்கடை பெஞ்சு ன்னு சொல்லி ஏன் யாரும் பெயர் வைக்க மாட்டீங்கறாங்கன்னு நினைத்தேன்.கூடவே இங்கே வாசிப்பு,அரசியல்,கலந்துரையாடல் ஊக்குவிக்கப்படும்ன்னு ஏன் டிபன் ரெடிங்கற மாதிரி போர்டு வைக்கமாட்டீங்கறாங்கன்னு கூட நினைச்சேன்:)

குவைத்தில் டீக்கடைக்கு கூட்டம் கூட்டுவதற்கு WWF wresling,சீசா எனும் கண்ணாடிக்குவளையில நீர்க்குமிழிகள் விட்டு சிகரெட் குடிக்கிற புகையிலை பிடிக்கும் கடைகளுக்கெல்லாம் அமெரிக்க ஹெவி வெயிட் சாம்பியன்கள்,கால் பந்தாட்ட வீரர்களே கல்லாக்கட்ட துணைபுரிபவர்கள்.

இப்ப உங்களுக்கு மறுமொழி சொல்கிறேன் பேர்வழின்னு நான் சொன்ன மேற்சொன்ன வரிகள் மொக்கைகள் மாதிரி இருந்தாலும் நான் பதிவுல சொன்ன சம்மணமிட்டு உட்கார்ந்து யோசிச்சுப் பார்த்தா ஒவ்வொன்றுக்கும் ரிலேட்டிவிட்டி தியரி மாதிரி ஏதோ ஒரு சம்பந்தமிருக்குது.ஆனாலும் இவை மொக்கைகளே என்ற உங்கள் பார்வை சரியானதுதான் என்ற போதிலும் கூட நான் இதுவரை உங்களுக்கு சொன்னதில் முன்னேற்பாடாக யோசிச்சு வைக்காமல் உங்கள் பின்னோட்டத்தை ஒட்டி மறுமொழி எங்கெங்கேயோ பயணம் செய்கிறது என்ற பொருளில் வவ்வால் தானியங்கிப் பின்னூட்டம் என்றார்.

இன்னும் உங்களுக்கான பதில் முடியவில்லை.அடுத்த பின்னோட்டத்தில் பேசிக்கலாம்:)

ராஜ நடராஜன் said...

வருண்!உங்களுக்கான தொடர்ச்சி...
மதமென்ற முக்காடு பின்னூட்டங்களை கட்டுக்குள் கொண்டு வராமல் போயிருந்தால் அதன் திசை வேறு விதத்தில் போயிருக்கும்.எதிர்வாதங்களின் வாதிகள் கருவை தொட்டு விவாதித்தால் பரவாயில்லை.ஆனால் மதம் என்ற சொல் மதம் சார்ந்து நிற்பவர்களை விட மதம் சார்ந்த ஒரு குழுவை அதிக உணர்ச்சி வசப்பட் வைக்கிறதென்ற உண்மையே இப்பொழுதுதான் எனக்குப் புரிகிறது.எனவே தனிமனித தாக்குதல்களாக ஏனைய பதிவர்களின் பதிவுகள் போல் ஆகிவிடாமல் இருக்க வேண்டிய அவசியத்தில் எதிர் விமர்சனங்களை நிராகரிக்க வேண்டிய தேவையிருக்கிறது.விவாதிப்பதன் காரணத்தை உள்வாங்கிக்கொள்ளும் திறமையிருந்தால் ஒழிய பின்னூட்டங்கள் விரோதங்களாக மாறிவிடும் சூழலையே உருவாக்கும்.

கல்லூரிக்கால ராகிங் நினைவுகள் வருகின்றது.சீனியர்கள் ஜூனியர்களுக்கு செய்யும் குறும்புகளை ஜூனியர்கள் ஒரு மாத ராகிங் முடியட்டும்...உன்னை வச்சிக்கிறண்டா மவனேன்னு ராகிங்கை பொறுத்துகிட்டிருப்பான்.ஒரு மாதம் முடிந்து பார்த்தால் எவன் அதிகம் ராகிங் செய்தானோ அவன் கூட ஜூனியர் சுத்திகிட்டிருப்பான்:)இந்த உதாரணம் மதம் சார்ந்தோ எதிர்நிலையிலோ புரிதல் இருப்பவர்களுக்கும் கூட பொருந்தும்.ஆனால் சகிப்புத்தன்மையற்ற மனிதர்களுக்கோ,பின்னூட்டங்களுக்கு பொருந்தாது.எழுத்தில் குறைகள் இல்லாமல் இல்லை.இல்லையென்று சாதிப்பதற்குமில்லையென்று சொல்லியிருக்கிறேன்.ஒருவருக்குப் பிடிப்பது இன்னொருவருக்கு பிடிக்காமலும் போகலாம்.

எந்தக்கட்டுக்குள்ளும் அடங்காத நான்லீனியர் என்றே பின்னூட்டங்கள் தொடர்கின்றன.

அப்புறம் வவ்வால் சொல்லும் இங்கிலிபீசு பற்றிக் கண்டுக்காதீங்க.ஏன்னா சில சமயம் வெளிப்படுத்தல் சரியா வரலைன்னா நான் கூட மேஜர் சுந்தரராஜனாகி விடுவதுண்டு:)

வவ்வால் said...

வருண்,

நீங்க தான் உலக தரச்சான்று நிறுவனத்தின் பிரதிநிதி என நினைக்கிறேன் , எங்க தரத்துக்கு ஒரு ஐஎஸோ 2000 சான்று கொடுத்துடுங்கோ :-))

நீங்க நல்லா இருப்பீங்க :-))


கழிவறை கழுவினாலும் சிறப்பாக கழுவனும்னு அப்படி செய்றவன் தான் நல்ல வேலைக்காரன், அதே போல மொக்கைப்போட்டாலும் சிறப்பாக போடனும்னு சங்கல்பம் செய்துக்கொண்டு மொக்கை சேவை செய்கிறோம் :-))

//இவங்க, இவ்ர்கள் கண்களுக்கோ, இவர்கள் நண்பர்கள் கண்களுக்கோ தெரிவதில்லை! அதுதான் பரிதாபம்!//

புறக்கண் தவிர்த்து அகக்கண் நாடி அந்தக்காரத்தின் நெடு நீள் வெளியில் தார தம்மியங்களின் ஊடாக தீராநதியென பெருக்கெடுத்து பாயும் எண்ண அலைகளின் மீதேறி காற்றின் விசைக்கொண்டு கடும் புனல் கடந்து காலச்சுவடுகள் மறந்து களைப்பறியா மூலையின் பில்லியன் நியுரான்களின் தன்னிச்சையான தூண்டலில் பிறக்கும் கனநேர சிந்த்னை சிதறல்களை அந்தராத்மாவின் அகப்பையால் வழிதெடுத்து பின்னூட்டமென பிரதியிடுகையில் கண்களுக்கு வேலைக்கொடுக்க மறந்து விடுகிறோம் :-))

இதற்கு யாரேனும் பின்நவீனத்துவ தானியங்கி பின்னூட்டம் எனப்பெயர் சூட்டினால் அது என் பிழையல்ல :-))

ராஜ நடராஜன் said...

வவ்!தார தம்மியம் தவிர மற்ற வரிகள் அனைத்தும் குணா கமல் கடிதம் எழுதற மாதிரி அச்சர சுத்தமா புரியுது:)எனவே தம்மியம் தவிர ஏனையவை பின்நவீனத்துவத்தில் சேர்த்தியில்லை.திருவிளையாடல் தருமி மாதிரி இதுக்கு மட்டும் கொஞ்சம் பொற்காசுகள் குறைத்து விட்டு வேண்டுமானால் பின்நவீனத்துவ தானியங்கிப் பின்னூட்ட பாடலுக்கு பரிசளிக்கலாம்:)

இல்லை பின்நவீனத்துவ தானியங்கிப் பின்னூட்டத்தில் குற்றம் இருக்கிறது.குற்றம் குற்றமேயென்று வருண் நாரதர் சூளுரைப்பாரா என்று பார்க்கலாம்:)

ராஜ நடராஜன் said...

வருண்!நக்கீரனை நாரதர் என்று சொன்னதும் கூட பொருள் குற்றம் என்று பின்னூட்டமிட்டு விடாதீங்க.நக்கீரனெல்லாம் காபிரைட் வாங்கி கார்பரேட்களாகி திரிபுகள் சொல்லி,ஜோஸ்யங்கள் ஹாஸ்யங்களாகிப் போன பின் மாட்டுக்கறியாவது விற்போமே என்று தடம் மாறிய பெயர்.நாரதர்க்குத்தான் இதுவரைக்கும் யாருமே காபிரைட் வாங்கல:)

பிகு:நூல் விட்டுறுக்கேன்.நீங்க கோட்டோ,சூட்டோ உங்க வசதிக்கு தைக்கலாம்:)

வருண் said...

வவ்வால் said...
***வருண்,

நீங்க தான் உலக தரச்சான்று நிறுவனத்தின் பிரதிநிதி என நினைக்கிறேன் , எங்க தரத்துக்கு ஒரு ஐஎஸோ 2000 சான்று கொடுத்துடுங்கோ :-))

நீங்க நல்லா இருப்பீங்க :-))***

இல்லையே நான் சான்றிதழ் கொடுக்கும் முன்னால் தங்களிடம் "அப்ரூவல்" பெற்றேனே!!!

***இதுவும் மொக்கையா ? என்றால் ஆமாம் மொக்கையே..***

ஐயா!! உங்க அனுமதியில்லாமல் எதுவும் நடக்கவில்லை என்பதை நீங்க எப்படி மறுக்கலாம்??? இதெல்லாம் நல்லாவாயிருக்கு?? :)

வருண் said...

வவ்வாலு சொல்லுது..
***தொற இங்கிலீபீச்செல்லாம் பேசுது ,***

சரி வவ்வாலு என்ன எழவை எழுதியிருக்குனு பார்ப்போம்!

கீழே உள்ள இங்கிலிபீஸ் எல்லாம் யாரு எழுதியது??? அதுவும் வவ்வாலுதான்!

***மெச்சேஜ்// (ஹீரோயிச்சம் ??!!)//ஐடெம் சாங்க்// காமெடி டிராக்//போட்டோ ஷாப்// ஆவிட்// ஃபைனல் கட் ப்ரோ// லீனியர் எடிட்டிங்க் மென்பொருள்// ஃபில்டர்கள் ///கலர் கிரேடிங்கில் //பாசிடிவ்///****


வவ்வாலு ஊருக்குத்தான் வாய்கிழிய அறிவுரை எல்லாம் சொல்லும், கேலி பண்ணும். அதே பதிவில் உள்ள அதனுடைய பின்னூட்டங்களில், சமஸ்கிரதம், புரானங்கள், மேலே சொல்லப்பட்ட ஆங்கில வார்த்தைகள் எல்லாம் அம்மனமா ஆடும்! ஆனால் அதெல்லாம் அதுக்கு தெரியாது! ஏன் அப்படி? ஊருப்பயலுக்கெல்லாம் ஒரு நியாயம் வவ்வாலுக்கு இன்னொரு நியாயம்!

இதையெல்லாம் கோடிட்டுக் காட்டி, என்னப்பா வவ்வாலு இப்படி அர்த்தமில்லாமல் பேசுதுனு சொன்னால், "வவ்வாலுக்கு ஐந்தறிவதானே?" னு விதண்டாவாதமும் பண்ணும்!

வருண் said...

***அப்புறம் வவ்வால் சொல்லும் இங்கிலிபீசு பற்றிக் கண்டுக்காதீங்க.***

என்ன இப்படி சொல்லீட்டீங்க? நான் எழுதிய ஆங்கிலத்தைவிட வவ்வாலு இப்பதிவில் எழுதியிருக்கிற பின்னூட்டங்களில் பிச்சைக்காரன் வாந்தி எடுத்தாப்பிலே தமிழ்ல் ஆங்கிலம் கலந்து எழுதியிருக்க ஆங்கில வார்த்தைகள் அதிகம்னு முகத்தில் அறையிறாப்பிலே சொல்லனும்! அப்போத்தான் "தன் முதுகு தனக்குத் தெரியாது" தான் ஊருப்பயலுக முதுகை எல்லாம் பார்த்துக்கிட்டு குறை சொல்லிக்கிட்டு திரிகிறோம்"னு வவ்வாலுக்கு விளங்கும்!

வவ்வால் said...

வருண் அவர்களே,

certification process consits of inspection ,verification, Testing and Cerification .so i think you are just doing inspection only here.

மேலும் நீங்க மொக்கையானு கேட்டதுக்கு ஆமாம்னு சொன்னப்பிறகும்,

//"ஊருப்பய மொக்கையெல்லாம் தரமில்லாத மொக்கை! நம்ம மொக்கை மாதிரி வருமா என்ன? நம்ம மொக்கை மட்டும் உலகத்தரம் வாயந்தது" னு நெனச்சுக்குவாங்களாம் ஒரு சில "தன்னலமில்லா" பிறநலவாதிகள்!//

இப்படித்தான் சொல்லி இருக்கிங்க, நீங்களே நினைச்சுகிறிங்களானு கேள்வி தான் கேட்டிங்க. உறுதிப்பட சான்றாவணம் ஆக கூறவில்லை. எனவே கீழ்கண்டவாறு ஒரு சான்றினை அளித்தால் எங்கப்பதிவின் முகப்பில் பெருமையாக மாட்டிப்போம்! :-))

CERTIFICATE
-----------

certification body of
TUV VARUN SUD AMERICA INC.,
MANAGEMENT SERVICE DIVISION.

hereby cerifies that,

m/s vavvaal and co
mokkai blogging and mokkai comenting inc.,
no.111, blogspot square,
googilandavar puram.01010101.

has implementing quality mokkai blogging and Mokkai comenting service

in association with

ISO 9001:2000

the scope of quality management system includes,

Mokkai writing , Mokkai blogging and Mokkai comenting with Advanced Auto comenting system for use in blogging.

this cerificate is valid until april 1,2020

Certificate Registration No:987654321

Original issue date February 3, 2012.

signed by

Varun TUV SUD America inc.,

------------

ஹி..ஹி நான் எழுதினது இங்கிலிப்பீச்சா அய்யகோ என்னக்கொடுமை அதெல்லாம் தமிங்கிலம் , மக்களுக்கு புரிய எளிய நடைக்கு. ஒரு சுவாரசியத்துக்கு அது. உங்களுக்கு என்ன மாதிரி தமிழ் புரியும்னு சொன்னா அதுக்கு ஏற்றார்ப்போலும் எழுதவும் முடியும். ஆனால் நீங்களும் அதே அளவுக்கு உரையாடனும் .முடியுமா?

நீங்க எழுதியதை இங்லீபீச்சு தெரிந்தா மட்டும் தான் படிக்க முடியும். என்னோடதை தமிழ் படிக்க தெரிந்தாலே படிக்கலாமே :-))

ஆவிட், ஃபைனல் கட் புரோவை எல்லாம் ஏன் அப்படி எழுதினிங்கனு கேட்கிறிங்களே ,அப்போ மாருதி காரை தமிழில் சொல்வதாக நினைத்து குரங்கு மகிழுந்துனு சொல்வீங்களோ :-))

உங்களைப்போல ஆட்களைத்தான் மருத்துவர் தமிழ்குடிதாங்கி தேடுறார் ஓடுங்கோ :-))

வவ்வால் said...

ராஜ்,

தானிப்பின்னூட்டம் நல்லாவே வேலை செய்யுது நக்கீரார் , நாரதர் எல்லாம் வலைவிரிக்காமலே சிக்குறாங்க :-))

உங்களுக்கு புரியாம போகுமா, புரியாதவங்க அப்படி சொல்லிடுவாங்களோனு தான் முன்னறிவிப்பு விட்டேன்.

தார தம்மியம் என்றால் தண்ணியில தாமரை , தாரலு தம்மியமு னு தியாகராஜர் பாடியது இருக்காம். அப்புறம் இதுவும் கமலஹாசர் ஒரு தபா கவிதயா சொன்னப்போ பயன்படுத்தியதே :-))

(தாமரை இலை தண்ணீர்னு பொருள் கொள்ளனுமா தெரியலை)

--------

சிலந்தி வலையிலே சில்க் ஜிப்பா தைப்பேன் , நீங்க நூலே கொடுத்தா விடுவேனா, ஆனாலும் நேர நிர்வாகத்தின் அடிப்படையில் ஒரு லங்கோடு செய்யலாம் நிர்வாணம் மறைக்க உதவும் சிலருக்கு. ஏன் எனில் இங்கே ஒருத்தர் புதுசா மொக்கையை கண்டுப்பிடித்து யுரேகானு கூவிக்கிட்டு இருக்கார் நிர்வாணமா :-))

வருண் said...

**ஹி..ஹி நான் எழுதினது இங்கிலிப்பீச்சா அய்யகோ ***

Actually what you wrote is GARBAGE! At least if writes in English, one can look up in the dictionary (English to English or English to Tamil) and find out the meaning if one really dont understand.

***உங்களைப்போல ஆட்களைத்தான் மருத்துவர் தமிழ்குடிதாங்கி தேடுறார் ஓடுங்கோ :-))***

Your garbage (whatever you want to call) is worthless because we cant even look it up!

So shut the f'ck up!

Don't go on give lectures to others without knowing what the hell you have been doing!

வவ்வால் said...

வருண் அவர்களே,

//Actually what you wrote is GARBAGE! At least if writes in English, one can look up in the dictionary (English to English or English to Tamil) and find out the meaning if one really dont understand.//

உங்களுக்கு இன்னொரு பேரு இருக்குனு சொல்லவே இல்லை ... சைலண்சர்னு அழகா பேரு வச்சுக்கிட்டு ஏன் சொல்லாம மறைச்சீங்க :-))

ரொம்ப வலிக்குதோ அதான் சத்தம் பலமா இருக்கு :-)) அடுத்த தடவை கொஞ்சம் பார்த்து செய்றேன் :-))

என்னமோ தெரியலை உங்களைப்பார்த்தால் எனக்கு சிரிப்பு மட்டுமே வருது :-))))
--------------

//பிச்சைக்காரன் வாந்தி எடுத்தாப்பிலே //

ஒரு சந்தேகம் , நீங்க நல்லாத்தானே இருக்கீங்க ? ஏன் கேட்டேனா பிச்சக்காரன் எடுக்கிற வாந்தியை எல்லாம் துழாவிப்பார்க்கிறிங்களே எதாவது பிரச்சினையோனு கேட்டேன் :-))

ராஜ நடராஜன் said...

வருண்!கொஞ்சம் படம் பார்த்துட்டு வர்றதுக்குள்ளே இங்கே பின்னூட்டங்களை திசை திருப்புறீங்களே!

Varun! It's nothing wrong in counter arguments but the way we display it counts a lot in public domain.

ரொம்ப நாளாகவே உங்களிடம் சொல்ல நினைத்த்து.இப்ப சொல்லி விடுகிறேன்.என்னை உங்க பதிவுக்கு கூட்டி வந்ததே கயல்விழியின் எழுத்துக்கள்தான்.பின்னர் அவங்க பதிவுகளில் காணாமல் போயிட்டாங்க.
சரி அத விடுங்க.

ஏனைய பதிவர்களின் பக்கங்களிலும் சரி,அல்லது உங்கள் தளத்திலும் கூட விவாதம் துவங்கிய சில நிமிடங்களில் ஏன் திசை மாறிப்போறீங்கன்னு தெரியல.திட்டுவதும்,திட்டுக்கள் வாங்குவதையும் ரொம்ப காலமாகவே பதிவின் நீண்ட கால திட்டமாக வைச்சிருக்கீங்க போல தெரியுதே:)

வவ்வால்தான் உங்களுக்கு பதில் சொல்லிகிட்டிருக்கார்.நீங்க முதல் பின்னூட்டத்தில் வைத்த கேள்வி என்ன என்பதிலேயே எனக்கு இன்னும் குழப்பம்.

Does it have a valued point?

விவாதத்திற்குரிய பதிவுகளையெல்லாம் விட்டு விட்டு இங்கே வந்து முறுக்கிறீங்களே:)

வருண் said...

***Varun! It's nothing wrong in counter arguments but the way we display it counts a lot in public domain.***

OK, who is picking on in English now? Is that the right direction you want your discussion to go?

I asked you questions and you answered. As soon as I posted my response, I know it is him who will start his BS! I already told him that we will never understand each other. Just go in your way, let me go in mine! He never stops!

***this cerificate is valid until april 1,2020

Certificate Registration No:987654321

Original issue date February 3, 2012.

signed by

Varun TUV SUD America inc.,***

What is all these NONSENSE?? You care less about whatever nonsense he comes up with, right??

ராஜ நடராஜன் said...

வவ்!
//உங்களுக்கு என்ன மாதிரி தமிழ் புரியும்னு சொன்னா அதுக்கு ஏற்றார்ப்போலும் எழுதவும் முடியும். ஆனால் நீங்களும் அதே அளவுக்கு உரையாடனும் முடியுமா?//

வருணுக்கு தமிழ்தானே வேண்டும்!இந்தப்பாடலை சமர்ப்பணம் செய்து விடலாம்.

காடுவாழ் மந்திக்கும் எனது மரபணுவிற்கும்
கதிரளவாம் வித்தியாசம் மூன்று விழுக்காடுதானாம்

மரமேறும் குரங்கின்று வேறுபட்டுருமாறி
மறம்பேணும் குரங்கன்றி வேறென்னவாயிற்று?

மயிரோடுகூடவே நுண் உணர்வை உதிர்த்துவிட்டு
தலைசீவத் தொ�கின்ற குரங்கானோம் வேறென்ன?

மரத்திலே தூங்கையில் வீழ்கின்ற பயம் இன்னும்
பழங்கனவாய் வருகிறது மரபணுவில் பதிவுற்று

மார்தட்டும் மந்திகளின் இயல்பான செய்கையைத்தான்
நான் என்ற சொல்லாலே இயம்புகிறோம் பணிவாக

பேசக்கற்றதினால் நுட்பம் செய்வித்தோம்
பேசக்கற்றதினால் பின்தங்கி நிற்கின்றோம்.

மொழியெனும் அருங்கலம் உணர்வெனும் வழிதவறி
தரைதட்டி நிற்கிறது சிந்தனைக் கடற்கரையில்
கரையோரக் காடுகளில் மொழியற்ற மந்திகளின்
ஞான கோஷங்கள் மெலிதாகக் கேட்கிறது.

காடுவாழ் மந்திக்கும் எனது மரபணுவிற்கும்
கதிரளவாம் வித்தியாசம் மூன்று விழுக்காடுதானாம்.

.................................

இதுக்குத்தான் தொடர்ச்சியா பதிவுலகத்துல இருக்கணுமிங்கிறது.வகுப்புக்கு மட்டையப் போட்டுட்டு தேர்வு நேரத்துல வந்தா இப்படித்தான் தேர்வு தாள் குழப்பங்கள் வரும்:)

ஆமா!நீங்க சொன்ன தார தம்மியப் பாடல் நீங்களே பாடியதா?இல்லை கமல்கிட்டேயிருந்து காசு கொடுத்து வாங்கியதா?ஏன்னா நீங்க கமல்ன்னு நூல் விட்டதும்,தார தம்மியம் எங்கேயே கமல் இடைச்செறுகல் செய்த நினைவு வருகிறது.போதாக்குறைக்கு தார தம்மிய (தாமரை இலை நீர் போல) பின்நவீனத்துவ தானியங்கிப் பின்னூட்டம் போல கமலும் அவ்வப்போது ஏதாவது கவிதை வேற பாடுவாரே.

வருண் said...

***ரொம்ப நாளாகவே உங்களிடம் சொல்ல நினைத்த்து.இப்ப சொல்லி விடுகிறேன்.என்னை உங்க பதிவுக்கு கூட்டி வந்ததே கயல்விழியின் எழுத்துக்கள்தான்.பின்னர் அவங்க பதிவுகளில் காணாமல் போயிட்டாங்க.**

உங்களுக்கு பிடிச்சதை நீங்க வாசிங்க. அது உங்க இஷ்டம். நான் ஒருபோதும் உங்க கிட்ட வந்து ஏன் என் தளம் பக்கம் வருவதில்லைனு கேட்டதில்லையே?? நீங்க ஒரு அடி ஒதுங்கினால் நான் நாலு அடி ஒதுங்கிப் போயிக்கிட்டே இருப்பேன். என் எழுத்தை நீங்க ரசிக்கனும்னு சொல்ற முட்டாள் எல்லாம் இல்லைங்க நான். Again, you could care less about my writings. That does not mean I should not come here and respond in your blog when I find something which is "fishy"

ராஜ நடராஜன் said...

Varun!It sounds like you got an attitude problem.I do not know if you had a counter argument with him earlier and bringing the issue over here.

I do not find any nonsense on his comments except your frequent scolding attitude everywhere you comment particularly your own blog itself.

Let's smile man!There is a way to smile and same time to pour your counter argument.Thanks.

வருண் said...

***நீங்க முதல் பின்னூட்டத்தில் வைத்த கேள்வி என்ன என்பதிலேயே எனக்கு இன்னும் குழப்பம்.

Does it have a valued point?***

கேள்வி புரியலை, கேள்வியே ஊளறல்னா, அதுக்கு பதி சொல்லாமல் நீங்க விட்டுட்டு போயிக்கிட்டே இருக்கலாம்.

புரியாத கேள்விக்கு, 2 பக்கத்துக்கு பதில் சொல்லியிருக்கீங்க, பாவம்!

"புரியலை என்னை மன்னிச்சிருங்க"னு ஒரு ஒரு வரி பின்னூட்டத்தோட முடிச்சு இருக்கலாமே? ஏன் இப்படி?

வருண் said...

***I do not find any nonsense on his comments except your frequent scolding attitude everywhere you comment particularly your own blog itself.***

என்னுடைய முதல் பின்னூட்டத்தில் நான் யாரையும் ஸ்கோல் பண்ணவில்லை.

"தொரை நாட்டு இங்கிலீஸ்" அது இதுனு சம்மந்தமே இல்லாமல் பேசுவதுதான் எரிச்சலை கிளப்புகிறது.

The way you defend vavvaal's attitude of provoking people clearly shows your judging ability. It is OK, take care! Let us go in our own way. Bye!

ராஜ நடராஜன் said...

வருண்!மறுபடியும் தமிழுக்குத் தாண்டி விடுகிறேன்.இங்கே என்ன மீன்பிடிப்பதில் குழப்பம்:) என்பதே எனக்கு இன்னும் புரியவில்லை.

நாந்தான் சொன்னேனே பின்னூட்டங்கள் அதுபாட்டுக்கு ஒரு எல்லையில்லாமல் போய்கிட்டிருக்குன்னு.அப்புறமும் இதில் நீங்க அறிவு தேடல் இல்லையேன்னா நான் என்ன செய்ய முடியும் வருண்?

நான் உங்களைப் போல் நாலடியெல்லாம் விலகவே மாட்டேன்.பதிவு பிடிச்சிருந்தா அல்லது ஏதாவது சொல்லனுமின்னு தன்னிச்சையா மூளை துரத்துச்சுன்னா பின்னூட்டம் போடுவேன்.அவ்வளவுதான்.

ஆமா!நீங்க திரைப்படங்களுக்கு என்ன....பார்த்தீங்களா இடையில் தமிழ் தடைபட்டுப்போகும்.அது போன்ற நேரங்களில் மட்டும் உங்க மாதிரி ஆளுககிட்ட ஆங்கிலம் சிலசமயம் வந்து தொலைக்கும்:)

Ah!what I want to ask you is that what sources you are using for movies.I mean TV,DVDs or exclusive American sources like Hulu.

வருண் said...

Natarajan!

Please go ahead with like-minded people, who are funny, and enjoyable and friendly to you. There is absolutely nothing wrong with that. Dont try hard to get along with people with attitude problem (I mean like me). Life is short, you dont have to bend yourself to get along with people those who are different. Trust me, it wont work. Seriously I am not offended as I am in the discussion world for years!

Take care and good luck! :)))) (big smile for you! )

ராஜ நடராஜன் said...

//"ஊருப்பய மொக்கையெல்லாம் தரமில்லாத மொக்கை! நம்ம மொக்கை மாதிரி வருமா என்ன? நம்ம மொக்கை மட்டும் உலகத்தரம் வாயந்தது" னு நெனச்சுக்குவாங்களாம் ஒரு சில "தன்னலமில்லா" பிறநலவாதிகள்!

இவங்க, இவ்ர்கள் கண்களுக்கோ, இவர்கள் நண்பர்கள் கண்களுக்கோ தெரிவதில்லை! அதுதான் பரிதாபம்!//

வருண்!நீங்க சொன்ன இரண்டாவது பின்னூட்டத்தை நான் தப்பா முதல் பின்னூட்டம்ன்னு சொல்லிட்டேன்.நீங்க கேட்டதுக்கு நான் பதில் சொல்லிட்டேன்.நான் குழம்பியது மேலே அடைப்பானில் உள்ள இரண்டாவது பின்னூட்டத்திற்கே.

நான் சொன்னது மேலே உள்ளவற்றிற்கு ஏதாவது பொருள் இருக்குதா எனப்தற்குத்தான்.அதுக்குத்தான் கேட்டேன் வேற எங்கேயாவது போர்பரணி பாடி இங்கே கலிங்கத்துப்பா பாடுறீஙகளான்னு கேட்டேன்:)

வருண் said...

//"ஊருப்பய மொக்கையெல்லாம் தரமில்லாத மொக்கை! நம்ம ***மொக்கை மாதிரி வருமா என்ன? நம்ம மொக்கை மட்டும் உலகத்தரம் வாயந்தது" னு நெனச்சுக்குவாங்களாம் ஒரு சில "தன்னலமில்லா" பிறநலவாதிகள்!

இவங்க, இவ்ர்கள் கண்களுக்கோ, இவர்கள் நண்பர்கள் கண்களுக்கோ தெரிவதில்லை! அதுதான் பரிதாபம்!//

I am not sure this response is "shot" at you. it is a general observation of "double standard" which exist among us- any average human beings!

-----------------
First of all let me make it clear, I quoted your post and I was talking about your earlier post. Rushti vs Hussain.

I said, although there is a question in your title, it means nothing. Your aim is criticizing the "ignorance" of a group who try protect "one" but "not doing so" in other case! You are saying there is "double standard" with people. Everything is clear in the title itself, I said. Of course it is a harsh criticism.

Then vavvaal came in and started as usual. Well, you are blaming me for that as you formed a opinion on me ( I am not saying your opinion is wrong). Vavvaal could have left you to answer the criticism. That would have ended nicely.

Anyway, that is fine. I learned my lesson. That always helps getting rid of some "ignorance"! :)

ராஜ நடராஜன் said...

Varun! I am in a mix if to start with English or Tamil.

See,your quote in Tamail and explaination in English itself says everything of the difference in expression.it is not that everybody should be on our side of the argument always.your point on Rushdi,Hussain is so sober but that should get into an argument which was not so.

I would have much more happier if you could have earlier brought out some points on Rushdi which is important at this moment of fanatical domination.This article is simply not worth for an argument or not even a fight:)

Anyway thanks for your time.Take care:)

வவ்வால் said...

ராஜ்,

முதலில் என்னை மன்னிக்கவும் ,உங்கள் பதிவில் வைத்து ஒருவரை காயப்படுத்தியதற்கு.

அது என் பிழையும் அல்ல , ஒரு பந்து வீசப்பட்டால் அது சிக்சருக்கே என நினைக்கும் மனோபாவம் எனக்கு ,எனவே விளாசிவிட்டேன். ஆனால் இது என்னுடைய மைதானம் அல்ல என்பதை மறந்துவிட்டேன் :-))

வருணின் முதல் பின்னூட்டம் இதோ,

//உங்க பதிவுத் தலைப்பில், உங்க நோக்கம், நீங்க என்ன சொல்ல வர்றீங்கனு தெளிவாக சொல்லியாச்சு. இல்லையா??

உப்புபெறாத இரண்டு வரி பின்னூட்டம் பத்தி சொல்றீங்க, இந்த அரைவரி தலைப்புக்கு, ஒரு கட்டுரையோ அல்லது பின்னூட்டமோ எழுதத் தேவையா என்ன??

I am saying you are not debating anything there. Your OPINION has been explicitly shown in your TITLE! It is very clear what you are really upto or NOT??

What is the need for any discussion or debating here at all. I wonder.

இருந்தாலும்

* அதை ஏற்றுக்கொண்டு உங்க சிந்தனைக்கு ஆதரவா பலர் பின்னூட்டமிட்டாங்க (நாகரிகமாக, உலகத்தரத்தில்)

* உங்க "முயற்சியை" க்ரிட்டிசிஸத்தை பிடிக்காமல் எதிர்வாதமும் ஓரளவுக்குச் செய்தார்கள்..

சரி, here is my question,

எந்த வகையில் இந்தப் பதிவும் பின்னூட்டங்களும் உலகத்துக்கு ஒரு நல்ல கருத்தை எடுத்துச் சொல்லி பலரை விழிக்க வச்சிருக்கு??//

# அரை வரி தலைப்புல உங்க கருத்து சொல்லியாச்சு , ஏன் பதிவு என்கிறார்?

# பின்னர் பின்னூட்டம் அதுக்கு தேவையா என்கிறார்?

#பதிவு மூலமா உலகத்திற்கு என்ன கருத்து சொன்னீங்க என்று கேட்கிறார்?

#அப்புறம் உலக தரத்திலா பின்னூட்டம் போட்டாங்க, அதனால் என்னப்பயன் என்றும் கேட்கிறார்

#அப்புறம் பதிவும் பின்னூட்டமும் மொக்கை தானே என்கிறார்,,

சரி எல்லாம் சொல்லிட்டு இப்போ கடைசியா என்ன சொன்னாருனும் பாருங்க,

//என்னுடைய முதல் பின்னூட்டத்தில் நான் யாரையும் ஸ்கோல் பண்ணவில்லை.

"தொரை நாட்டு இங்கிலீஸ்" அது இதுனு சம்மந்தமே இல்லாமல் பேசுவதுதான் எரிச்சலை கிளப்புகிறது.//

இந்தப்பதிவுக்கு பின்னூட்டம் தேவையா, அது என்ன உலகத்தரமா, பதிவும் பின்னூட்டமும் உலகத்துக்கு என்ன பாடம் சொல்லிச்சுனும் கேட்டதும் அவரே!

அதனால் தான் பதிவு தேவையானு கேட்டிங்க சரி பின்னூட்டம் தேவையானு ,அது உலக தரமா எல்லாம் கேட்காதிங்க என்று சொல்லி பின்னர் என்னாதுக்கு பீட்டர்னு லேசா கலாய்ச்சேன்.(எனது பதிலைப்பார்க்கவும்)

இப்படி போல ஒருப்பதிவுக்கு பின்னூட்டம் தேவையானு கேட்டா , யார்ப்பத்இல் சொல்லனும் நீங்களா இல்லை பின்னூட்டம் போடும் ஒருவரா?

நானும் பின்னூட்டம் போட்டு இருக்கேன் நான் என்று இல்லை பின்னூட்டம் எல்லாருமே வருணைக் கேள்விக்கேட்க முடியும். எனவே நான் திருப்பிக்கேட்டேன் ,அது எனக்கு தவறாகப்படவில்லை.

இப்போ அய்யோ வலிக்குதே என்பது போல் ,

/// Vavvaal could have left you to answer the criticism. That would have ended nicely.//

இப்படி சொல்கிறார் நான் தான் எல்லாவற்றிற்கும் நேராக பதில் சொல்லிவிட்டு போய் இருக்கேன். அப்புறம் இவர் பின்னூட்டம் போடும் போதெல்லாம் நான் பார்த்துக்கொண்டே இருந்தா பதில் சொல்ல முடியும்.

நீங்கள் பதில் சொல்லியதும் மேல் கண்டவாறு புலம்பி இருக்கார். :-))

நான் லேசா காட்டியதற்கே இப்படினா , இவர் என்ப்பதிவு பக்கம் வந்து இப்படி கேட்டிருந்தா , உங்க அபிமான கலா மாஸ்டர் பாஷைல கிழி ..கிழி தான் :-))

பின்னூட்டம் போட்டவங்களையும் குறை சொன்னதால் ,நானும் ஒரு பின்னூட்டவாதினு சொல்லி தான் அவருக்கு பதில் சொன்னேன் , சொல்லிக்கிட்டும் இருந்தேன் , நடுவால எதுக்கு மீண்டும் உங்களை இழுத்து பார்த்திங்களா இந்த அநியாத்தைனு அவர் ஏன் ஒப்பாரி வைக்கனும். சின்னப்புள்ளத்தனமா இல்ல இருக்கு :-))

-----------------------

//இதுக்குத்தான் தொடர்ச்சியா பதிவுலகத்துல இருக்கணுமிங்கிறது.வகுப்புக்கு மட்டையப் போட்டுட்டு தேர்வு நேரத்துல வந்தா இப்படித்தான் தேர்வு தாள் குழப்பங்கள் வரும்:)//

ஹெ...ஹெ நாங்கல்லாம் ஒரு செமெஸ்டர் பாடத்தையும் ஓர் இரவில் படிச்ச ஆளுங்க :-))
---------------------------------------------
//ஆமா!நீங்க சொன்ன தார தம்மியப் பாடல் நீங்களே பாடியதா?இல்லை கமல்கிட்டேயிருந்து காசு கொடுத்து வாங்கியதா?ஏன்னா நீங்க கமல்ன்னு நூல் விட்டதும்,தார தம்மியம் எங்கேயே கமல் இடைச்செறுகல் செய்த நினைவு வருகிறது.//

உங்களுக்கு நினைவு வந்தாப்போல தான் எனக்கும் லேசா வந்துச்சு ,அப்படியே தானியா இழுத்துவிட்டேன், உண்மைலவே அப்படி யாராவது(கமல ஹாசரோ) எழுதி இருந்தால் யாம் அறியோம் அய்யனே :-))

-------------

//Varun!It sounds like you got an attitude problem.I//

இதை அப்போவே உங்களுக்கு எதாவது பிரச்சினையானு கேட்டுப்பூட்டேன் :-))

வருண் said...

***ராஜ நடராஜன் said...

//நான் ஹுசைன் மற்றும் சல்மான் ருஷ்டி இருவரையும் எதிர்க்கிறேன். நம்புவீர்களா???? //

சகோ.சிராஜ்!மதங்களையும் கடந்து சிந்திக்க வேண்டும் என நான் வலியுறுத்துவதன் காரண்ம்...நீங்கள் ருஷ்டியை இஸ்லாமிய கோட்பாடுகளின் அடிப்படையில் அணுகுகிறீர்கள்.அதே வேளையில் ஹுசைனை இந்திய தத்துவார்த்தங்களின் அடிப்படையில் ஆராய தவறி விடுகிறீர்கள்.****

உங்க கேள்விக்கு பதிலளித்து உள்ளார். எதிர்க்கிறேன் என்பது, "அவர்களை கொல்லனும்"னு சொல்வதாக எடுக்கவேண்டியதில்லை.

கடவுள் நம்பிக்கையே இல்லை என்கிறபோது ரெண்டுபேரும் சட்டப்படி தவறு செய்யவில்லை. அவர்கள் "பேச்சுரிமை". அதனால் ரெண்டு பேரையும் எதிர்க்கவோ, அரவ்ணைக்கவோ தேவை எதுவும் இல்லை. அவர்களை மிரட்டுவதுகாட்டுமிராண்டித்தனம்.

இதுபோல் பலருக்கு பலவிதம். என்னை எதிர்க்கனும்னு சொல்லி அறிவுரை சொல்வதோ, இல்லை சிராஜை. எதிர்க்கக்கூடாது னு அறிவுரை சொல்வதோ என்னைப் பொறுத்தவரையில் தேவையில்லை. ஒருவர் செய்றது பிடிக்கும், பிடிக்காது எனது எப்போவுமே உண்டு. அதனால் வெறுப்பது, விரும்புவது என்பதில் தவறில்லை. அவர்களை "தண்டிக்கவேண்டும்" என்பதுதான் பிரச்சினை.

அதனால, நீங்க எதுக்கு சிராஜுக்கோ, எனக்கோ எப்படி எடுத்துக்கனும்னு சொல்லனும்னு தெரியலை. இருந்தாலும் அது உங்க இஷ்டம் அறிவுரை செய்றீங்க, அவ்ளோதான்! நான் செய்ய மாட்டேன். :)

வருண் said...

***your point on Rushdi,Hussain is so sober but that should get into an argument which was not so.***

எப்படி சோள்றீங்க?? நீங்க சிராஜ், "இருவரையும் எதிர்க்கிறேன்"னு சொன்னதை தவறுனு சொல்லி அவருக்கு அறிவுரை வழங்குறீங்க?? அதுக்கு என்ன அர்த்தம்னா? உங்க தலைப்பில் உங்க நிலையை நீங்க தெளிவாக சொல்லிவிட்டீங்க. அதைத்தான் சிராஜுக்கு விளக்கமா சொல்றீங்க! என்னுடைய வாதமும் அதுதான். நீங்க ஆங்கிலத்தில் என்ன சொல்ல வர்ரீங்கனு சொல்லுங்க! What do you mean by "sober"? To me it is obvious, what is your stand here and from your arguments with siraj it is clear.

BTW,you are fingering at me that I am digressing and causing trouble. That is fine, let me take as you say.

ரஸ்டியையும், ஹுசேனையும் விட்டுப்புட்டு எத்தைனை பதிவர்கள் தலையை உருட்டி இருக்கீங்க தெரியுமா உங்க பின்னூட்டத்தில்??

எனக்குப் பிடிக்கலைனா நான் ஒரு பதிவாப்போட்டு சொல்லிடுவேன், "தமிழ்மணமும் மதமும்" அல்லது, "18+ சை தவிர்க்கும் யோக்கியர்கள்" உங்களை மாரி பின்னூட்டதில் பேசி என் திறமையைக் காட்டமாட்டேன்.

Anyway, it is clear from some of your responses that you dont like my way or my approach. Of course you can hate me. நானும் என் பங்குக்கு சொல்லிக்கிறேன், ரஸ்டி, ஹுசேன் மேட்டரில் நீங்க "நிரூபன்" தலையை உருட்டுறது எந்த விதத்தில் நியாய்ம்???

வவ்வால் said...

வருண் அவர்களே,

//Then vavvaal came in and started as usual. Well, you are blaming me for that as you formed a opinion on me ( I am not saying your opinion is wrong). Vavvaal could have left you to answer the criticism. That would have ended nicely.//

யாரு நானா உள்ள வந்து ஆரம்பிச்சது நல்ல காமெடி(நகைச்சுவை)!

முதல் பிரச்சினையே ருஷ்டி பத்தி பதிவுக்கு இங்கே வந்து ஆரம்பிச்சதது உங்க தப்பு,

அடுத்து அரைவரி தலைப்புக்கு பதிவு ஏன்னு கேட்டதோட அல்லாமல் ஏன் பின்னூட்டம் போடுறாங்க , போட்ட பின்னூட்டம் எல்லாம் உலகத்தரமா, எல்லாம் மொக்கை தானேனு சொன்னது.

நானும் பதிவை குறை சொன்னீங்க ஓகே, பின்னூட்டம் போட்டவங்களையும் சேர்த்து குறை சொல்வதால் நானும் ஒரு பின்னூட்டவாதி என்பதால் பதில் சொல்கிறேன்னு விளக்கம் சொல்லிட்டு தான் ஆரம்பிச்சேன்.

எனவே ஆரம்பிச்சு வைத்தது நீங்களே, நான் திருப்பி உங்க மருந்தை உங்களுக்கே கொடுத்ததும் தாங்க முடியாம நான் என்ன பண்ணினேன் ஏன் இப்படினு புலம்ப ஆரம்பிச்சுட்டிங்க :-))

நான் தான் நீண்ட நெடிய விளக்கம் எல்லாம் போட்டுக்கிட்டு இருக்கேனே, அப்புறம் என்னமோ நான் ராஜ் ஐ பதில் சொல்லவிட்டு ஒதுங்கிட்டேன் போல சொல்றிங்க. உங்க பின்னூட்டம் வெளி வந்தததும் நான் பதில் சொல்லனுமோ? என்னால் 24 மணியும் இணையத்தில் இருக்க முடியாது.உங்க கேள்விக்கு நான் எப்போ இணையம் வரனோ அப்போ தான் சொல்ல முடியும். ஆனால் கண்டிப்பாக பதில் கொடுப்பேன். ஏன் அவசரம்?

உங்களுக்கு பயமாக இருக்கும் போல அதான் யாராவது வரனும்னு எதிர்ப்பார்க்கிறிங்க, என் கூட பேசும் போது. Don't worry i won't hurt you!

ஹி..ஹி நான் ரொம்ப தன்மையா பேசினதுக்கே இப்படி மெர்சல் ஆவுறிங்களே , உண்மையான என்னோட ஆட்டத்தை ஆடினா என்னாவிங்க :-))

வருண் said...

இதைத்தான் சொன்னேன், தான் செய்றது தனக்கு தப்பா தோனாது. நான் செய்றதப்பையும் ஆட்டிட்டுடும் பிடிக்கலைனு சொன்னீங்க. சரி.

இதை கேட்டுக்கோங்க, ரஸ்டி ஹுசேயின் மேட்டர்ல உள்ள பின்னூட்டத்தில் நீங்க நிரூபன் மற்றும் பல பதிவர்கள் தலையை உருட்டுவது, அதை தப்பு இல்லைனு சப்பைகட்டுவதெல்லாம் எனக்கு "நல்லா" தோனலை. No wonder we dont get along, Raj. We are completely different personalities. We cant respect each other. Can we??

கோவி.கண்ணன் said...

//கிடைக்க வாய்ப்பில்லாதவர்களுக்கு பிட்டு படம் பார்க்கிற தோசமாய் சுமார் 20 பிட்டுகளை யூடியூப் வழங்குகிறது. //

;) பிட்டுக்கு சிவபெருமானே மண் சுமந்திருக்கிறாராம்.

வவ்வால் said...

//ஆங்கிலத்தில் என்ன சொல்ல வர்ரீங்கனு சொல்லுங்க! What do you mean by "sober"? //

ஹி...ஹி... இங்க வருண்....வருண் னு ஒரு இங்கிலீபீசு புலவர் இருந்தார் யாராவது பார்த்திங்களா? :-))

அவரு தான் சொன்னார் இங்கிலிபீசுல எழுதுனா டிக்சனரில பார்த்து தெரிஞ்சுப்பேன் சொன்னார், எதுக்கும் நீங்க அவர்கிட்டே கேளுங்க ! What do you mean by "sober"? க்கு வெளக்குவார் :-))

சைலண்சர் சார்னு சொல்லிக்கூப்பிடுங்க அப்போ தான் டிக்சனரில பார்த்து பதில் சொல்லுவார் வருண் :-))

---------

கோவி,

அந்த நடராஜர் மண் சுமந்தார் இந்த நடராஜர் பின்னூட்டம் சுமப்பார் :-)) ஆனாலும் நாராயணன் சொன்னா நன்மைக்கே :-))

ராஜ நடராஜன் said...

இந்த ஆட்டம் இன்னுமா தொடருது:)அவங்கவங்க காலையில ஒரு பதிவு போட்டு மதியம் வந்து சூடான பகுதியில் உட்கார்ந்து விட்டு மாலை மறுபடியும் இன்னொரு பதிவு தயாரிச்சுட்டு பரபரப்பா இருக்கும் போது மூலையில அப்பாவியா உட்கார்ந்திருக்கும் தானியங்கிப் பின்னூட்டங்களுக்கு இந்த பாடா!

வருண்!தர்க்க ரீதியாகவோ அல்லது அடிப்படைக் கொள்கை ரீதியாகவோ நாம் இரண்டு பேரும் ஒரே பக்கம்ன்னுதான் நினைக்கிறேன்.ஆனால் அதனை வெளிப்படுத்தும் விதத்தில் மாறுபடுகிறோம்.அதனால்தான் நாம் ஒரே வழில பயணிக்க மாட்டோம்ன்னு சொல்றீங்க.முன்னாடி மற்றவர்கள் உங்களுக்குப் பின்னூட்டம் போடுவதற்கு தயங்கிய பதிவுக்கெல்லாம் கூட பின்னூட்டம் போட்டிருக்கிறேன்.தொடர்ந்து மற்றவர்களிடம் திட்டு வாங்குறதையோ,மற்றவர்களை திட்டறதையோ நீங்க தொடர்ந்துகிட்டு வந்ததால் தலைப்போட நின்னுகிட்டேன்.அவ்வளவுதான்.

பதிவர்கள் நிரூபன்,ஐடியாமணி பிரச்சினையை நீங்க இன்னும் ஆழமாக உள்வாங்கிக்கொள்ளவில்லையென நினைக்கின்றேன்.அவர்கள் பெயர்கள் குறிப்பிட்டே அவர்களை விமர்சித்திருக்கிறேன்.ஒருவேளை எனது பின்னூட்டத்தில் அவர்களுக்கு ஒப்புதல் இல்லையென்றால் எனது பதிவுலோ அல்லது அவர்கள் பதிவுகளிலோ அவர்கள் கருத்தை முன்வைக்கலாம்.தனிமனித விமர்சனத்துக்கும் அப்பாற்பட்டது அவர்கள் குறித்தான எனது கருத்துக்கள்.

//நானும் என் பங்குக்கு சொல்லிக்கிறேன், ரஸ்டி, ஹுசேன் மேட்டரில் நீங்க "நிரூபன்" தலையை உருட்டுறது எந்த விதத்தில் நியாய்ம்???//

இந்த வரிகளை மறுபடியும் படிக்கும் போது எனக்கு சிரிப்புத்தான் வருது:)

நிரூபன் வந்தால் நான் பதில் சொல்லிக்கிறேன்.

மறுபடியும் பதிவர் சிராஜ் விசயத்தில் குளம்புறீங்கன்னு நினைக்கிறேன்.மாற்றுக்கருத்தை முன்வைத்தாலும் அவர் நட்பாகவே கருத்து வைத்தார்ன்னு சொல்லி நன்றியும் சொல்லியிருக்கிறேன்.ஹுசைன் எப்படியோ ஆனால் ருஷ்டி பற்றிய கருத்து அவராக இல்லாமல் வேறு ஒருவராக இருந்திருந்தால் மிகவும் சென்சிடிவான விசயம்.

கவிஞர்களுக்கும்,எழுத்தாளர்களுக்கும்,ஓவியர்களுக்கும் இன்னும் கலை சார்ந்த அத்தனை பேருக்கும் எல்லைகள் இல்லாத பட்சத்திலே மட்டுமே சிறந்த படைப்புக்களை உருவாக்க முடியும்.ஆனால் ஒவ்வொருவர் பார்வையைப் பொறுத்து கலை ரசனை வேறுபடும்.ஓவியன் ரசனையோடு தீட்டும் படைப்பு சாதாரண மனிதனுக்கு ஆபாசமாகத் தோன்றும்.கோயில் சிலைகள் ஆபாசமானது என்றால் இந்திய கோயில்கள் பாதி காணாமல் போயிருக்கும்.எனவே சிராஜின் ஹுசைன் குறித்த பார்வை தவறானதாகவே கருதுகிறேன்.

ருஷ்டி பற்றிய பத்வா,தடை போன்றவை புத்தகம் படித்தவன் சொல்லும் விமர்சனமல்ல.மாறாக மதம் என்ற அடிப்படையில் உருவாகிய அடக்குமுறை.ருஷ்டியின் இந்திய வருகை எதிர்ப்பு குறித்தான கலந்துரையாடல்கள் இந்திய எலைட் அளவில் இப்போது விவாதமாகிக்கொண்டிருக்கும் ஒன்று.தெகல்கா,NDTV போன்றவற்றைப் பாருங்கள்.

இங்கே கவனிக்க வேண்டிய ஒன்று பல விசயங்கள் அரசியல்,மதம் குறித்தவர்களின் சுய கருத்துக்களால் ஊதி பெரிதாகி விடுகிறது என்பது கவனிக்கத்தக்கது.ருஷ்டிக்கான எதிர்ப்பு இந்திய ஜனநாயகத்திற்கு எதிரானது.

ராஜ நடராஜன் said...

//***your point on Rushdi,Hussain is so sober but that should get into an argument which was not so.***//

//What do you mean by "sober"//

Varun!I wonder still you need an explaination!I am in a place where I have to be sober always:)

நீங்க அமெரிக்காவில் இருந்தாலும் நிச்சயமா அந்த அர்த்தத்தில் நான் சொல்லவேயில்லை:)

ராஜ நடராஜன் said...

வவ்!நான் தான் சொல்லிகிட்டே வாரேனே!அதுக்குள்ள நீங்க...

எதுக்கும் நீங்க அவர்கிட்டே கேளுங்க ! What do you mean by "sober"? க்கு வெளக்குவார் :-))

சீரியஸா பேசவேண்டியதையெல்லாம் விட்டுப்புட்டு தானியங்கிப் பின்னூட்டங்கள் இந்த வாங்கு வாங்குதேன்னு எனக்கு சிரிப்புத்தான் வருது:)

ராஜ நடராஜன் said...

கோவி!பின்னூட்டத்தையெல்லாம் உண்மைத்தமிழன் மாதிரி அடைப்பானுக்குள்ளே ஏன் கொண்டு வர்ரீங்கன்னு ஜோதிஜி எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துட்டதால சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்ததை கொண்டு வரவில்லை.ஓலைச்சுவடியில் புட்டுக்கு மண் சுமந்தார் என்பது காலப்போக்கில் அழிந்திருக்கலாம்:)

நிறைய பதிவு எழுதியும் இதுவரைக்கும் சிவபெருமான் நம்ம கடைக்கு வடை சாப்பிடவே வரவில்லை.உங்ககிட்ட கேட்டிருப்பார் போல இருக்குது புட்டு எங்கே கிடைக்கும்ன்னு.நீங்களும் சரியா காதுல விழாமல் நடராஜன் தான் பிட்டு பத்தி ஏதோ சொல்லிகிட்டிருந்தாருன்னு இங்கே கூட்டிட்டு வந்திட்டீங்க போல இருக்குதே:)

திருவிளையாடல் படம் வேற அரதப்பழசாயிடுச்சு.அதனால் பக்தியாளர்களுக்கும்,பகுத்தறிவாளர்களுக்குமாக இந்தக் கதையை சொல்லிடலாம்.

திருவாதவூரடிகளின் பெருமையைப் பாண்டியனுக்கு உணர்த்த எண்ணிய சிவபெருமான், வைகையில் வெள்ளம் கரை புரண்டோடச் செய்தார். அந்நிலையில், வீட்டுக்கு ஒருவர் கரையைப் பலப்படுத்த வருமாறு பாண்டிய மன்னன் உத்தரவிட்டான். இந்த நிலையில் பிட்டு விற்றுப் பிழைக்கும் சிவபக்தையான வந்தியக்கிழவிக்கு ஆள் இல்லாத நிலையில், சிவபெருமானே கூலி ஆளாக வந்து பிட்டுக்காக மண் சுமந்துள்ளார். அப்போது அவர் கரையை அடைக்கும் பணியைச் செய்யாமல் படுத்துக்கிடந்தாதால், மன்னன் கூலியாளாக வந்த சிவபெருமானை பிரம்பால் அடித்ததாகவும், அந்த அடியின் வலியை உலகில் உள்ள அனைவரும் உணர்ந்ததாகவும், இதையடுத்து சிவபெருமானை மன்னன் வணங்கி நின்றதாகவும் திருவிளையாடல் புராணம் கூறுகிறது.

தகவல் உதவி:தினமணி.

ராஜ நடராஜன் said...

இன்னும் இங்கே சண்டை போட்டுகிட்டுத்தான் இருக்காங்களான்னு யாராவது பார்க்க வந்தால் நான் பதிவர் சார்வாகன் தளத்தில் அறிவியலுக்கு எதிரான போர் காணொளி கண்டு கொண்டிருக்கிறேன்.

இங்கே மொக்கையில் என்ன
எந்த வகையில் இந்தப் பதிவும் பின்னூட்டங்களும் உலகத்துக்கு ஒரு நல்ல கருத்தை எடுத்துச் சொல்லி பலரை விழிக்க வச்சிருக்கு?? என்ற் வருணின் கேள்விக்கு உண்மையான பதில் அங்கேதான் இருக்குது.ஆனால் அறிவார்ந்த பதிவுகளுக்கு கூட்டம் சேர்வதில்லையென்பது ஒரு சோகமான விசயம்.

கூடவே பரிணாமம் vs மதம் என்ற எதிர்நிலைகள் இன்றி பரிணாமமும் மதமும் இணைந்தே பயணிக்கலாம் என்ற நிலை ஒரு புதிய க்ருத்தாக்கத்தை தோற்றுவிக்கிறது.இனி வரும் தலைமுறையாவது பரிணாமம் குறித்த பாடங்களை பள்ளிகளில் கற்று மதங்கள் சொல்லும் நல்வழிகளையும் பின்பற்றி புதிய உலகம் பிறக்கட்டும்.

ராஜ நடராஜன் said...

அப்பாடா!கோபத்தோட ஒருத்தரும் ஓடி வரலை.அப்படியே வந்தாலும் இந்த மருந்தை ஒரு மொடக்கு குடிச்சிட்டுப் போயிடுங்க:)

http://walkingdoctorcom.blogspot.com/2012/02/2-1.html?showComment=1328297901554#c56015041464901615

ராஜ நடராஜன் said...

இப்ப தானியங்கிப் பின்னூட்டம் தனக்குத்தானே பின்னூட்டமாகிப் போச்சே:)

V.Radhakrishnan said...

அடேயப்பா, ஒரு அரைமணி நேரம் தமிழ் சினிமா பார்த்தது மாதிரி இருந்துச்சு. வவ்வால் எழுத, வருண் எழுத, நீங்க எழுத அட அட! இப்படி வார்த்தைக்கு வார்த்தை எழுதுறது ரொம்பவே சுவாரஸ்யம் தான். படிச்சிட்டே வந்ததுல கோவியார் பின்னூட்டம் பார்த்து ஹா ஹா ரொம்பவே சிரிச்சிட்டேன். சாமி, அடங்கமாட்டார் போல. :)

ஆமா, ரெண்டு ராதாகிருஷ்ணன் பிரச்சினைதான். ஆனாலும் அவர் தமிழு, நான் இங்கிலீசு. அவரு டி.வி. நான் வி. முதன் முதல நான் தமிழு, அவரு இங்கிலீசு. வவ்வால் வலைப்பக்கம் போய் மறுபடியும் பார்க்கணும். என்னென்னமோ சொல்றாரே. :)

ராஜ நடராஜன் said...

உங்களுக்கு V.R ன்னு சுருக்கிடறேனே!

என்னது!தமிழ் சினிமா பார்த்தது மாதிரி இருந்துச்சா:)எனக்கு இப்பவும் ஒரே வருத்தம் என்னன்னா இந்த சண்டையை ருஷ்டிக்கு போட்டிருந்தாலாவது எல்லாம் இந்த் ஆளால வந்ததுன்னு நம்ம பங்குக்கு ருஷ்டி மேல ஒரு பாய்ச்சல் பாய்ந்திருக்கலாம்:)

வவ்வால் said...

ரா.கி,

//வவ்வால் வலைப்பக்கம் போய் மறுபடியும் பார்க்கணும். என்னென்னமோ சொல்றாரே. :)//

மறுபடியும் பார்க்க போறிங்களா அவசரப்பட்டு போகாதீங்க, புது பதிவு எல்லாம் எதுவும் இல்லை. சில நேரங்களில் ஒரு வருடத்துக்கு ஒரு பதிவுனு மொக்கையா போடுவேன் (மொத்தமாவே ஒரே ஒரு பதிவு மட்டுமே).

பின்னூட்டம்னா பிரியாணி வித் லெக் பீஸ்(இங்கீலீபீசுகள் மன்னிக்க) சாப்புடுறாப்போல வளைச்சு கட்டுவேன். அதப்பார்த்துட்டு போய் ஏமாந்துடாதிங்க b'cos i'm an idiot

----------

ராஜ்,

//இப்ப தானியங்கிப் பின்னூட்டம் தனக்குத்தானே பின்னூட்டமாகிப் போச்சே:)//

தனக்கு தானே ,தன்னாலே நடப்பது தான் தானியங்கி, அப்போ நீங்க சரி தான் :-))

#//எல்லாம் இந்த ஆளால வந்ததுன்னு நம்ம பங்குக்கு ருஷ்டி மேல ஒரு பாய்ச்சல் பாய்ந்திருக்கலாம்:)//

எல்லாம் இந்த ஆளால என என் மீது பாயலாம் பாயும் புலியாக , நான் பதுங்கும் டிராகன் :-))

வருண் said...

//***your point on Rushdi,Hussain is so sober but that should get into an argument which was not so.***//

***//What do you mean by "sober"//

Varun!I wonder still you need an explaination!I am in a place where I have to be sober always:)

நீங்க அமெரிக்காவில் இருந்தாலும் நிச்சயமா அந்த அர்த்தத்தில் நான் சொல்லவேயில்லை:)
February 3, 2012 1:51 PM ***

நான் கேட்டது, எனக்குப் புரியாததால். நீங்க "இந்த அர்த்தத்தில் நான் சொல்லவில்லை"னு, நான் ஏதோ குதர்க்க அர்த்தம் கண்டு பிடித்ததா, நீங்களே நெனச்சுக்கிட்டீங்க. எனக்கு உங்க வாக்கியம் புரியாததாலே கேட்டேன். சரி விடுங்க.

இப்போதைக்கு, நீங்க "sober" னு சொன்னதை "weak" னு "mean" பண்ணியதாக எடுத்துக்கிறேன். நீங்க தயக்கமில்லாமல் சொல்லலாம். ஏன் இதுக்கெல்லாம் தயங்குறீங்கனு தெரியலை எனக்கு.

You could have said, I meant your argument is WEAK, Varun!


நம்ம ரெண்டு பேருக்கும் இடையிலே எவ்வளவு புரிதல் இல்லாமல் இருக்குனு தெரிய இது ஒரு அழகான உதாரணம்.

இங்கே பிரச்சினை என்னனா I care about "bottom line" of the content. ஒரு கேள்விக்கு எளிதா பதில் சொல்லலாம். ரெண்டு பக்கம் பதில் சொல்லி பதில் எங்கே இருக்குனு தேடி கண்டுபிடிக்கும் அளவுக்கும் சொல்லலாம். எனக்கு ரெண்டு பக்க பதிலைவிட ரெண்டு வரி பதில்தான் பிடிக்கும். ஏன்னா தேடி பதிலை எடுக்க அறிவோ திறமையோ, நேரமோ எனக்குக் கெடையாது. நெஜம்மாவே அந்த மாதிரி பதில்கள் "bore" அடிக்கும். உங்கள மாதிரி ஒரு சிலருக்கு அந்த மாதிரி பதில் சொல்வது தப்புனு தோனும்போல. :-)

வருண் said...

------------

***அதனால்தான் நாம் ஒரே வழில பயணிக்க மாட்டோம்ன்னு சொல்றீங்க.முன்னாடி மற்றவர்கள் உங்களுக்குப் பின்னூட்டம் போடுவதற்கு தயங்கிய பதிவுக்கெல்லாம் கூட பின்னூட்டம் போட்டிருக்கிறேன்.***

It was not necessary. Trust me, I can certainly "survive" in the blog world without your responses or anybody's responses.

***தொடர்ந்து மற்றவர்களிடம் திட்டு வாங்குறதையோ,மற்றவர்களை திட்டறதையோ நீங்க தொடர்ந்துகிட்டு வந்ததால் தலைப்போட நின்னுகிட்டேன்.அவ்வளவுதான்.***

Please continue to do so. :-)

You need to maintain your standards and you dont need to see somethig which bothers you. I understand that.

Please, let me be myself. I promise you I am not going to change myself to please you or because of your concern. That is me! The best thing is, you should keep off from my scribblings and the harse argument part, and of course the attitude, like you have been doing these days. Like people say, this is a very big world, all kind of people can survive in their own way. Trust me I will also live in the blog world in my own way! So will you with like-minded people! There are lots of people do that, I mean they just keep off from some people as they find them "odd" for their taste! I am certainly "odd" for your "personality", I understand that. So, take it easy and move on! :-)

Rathi said...

ராஜ நட, நான் தெகா சொன்ன தொனியை நினைச்சு சிரிச்சேன் :)

ராஜ நடராஜன் said...

வருண்,வவ்வால் மற்றும் ரதியின் பின்னூட்டங்களுக்கு பின்னூட்டம் போட முடியாத படி ஆணி புடுங்க விட்டுட்டாங்க.

பதிவர் வருண்க்கு இரண்டு வரிலதான் பின்னூட்டம் புடிக்கும்ங்கிறதால மேலே உள்ள வரிகளை விட்டு ஒரே குரங்குத் தாவலா தாவி கீழே வந்துடுங்க.

ஒரே ஆணி!போதுமா:)

இனி கீழே இருக்குறதைப் படிச்சாலும் சரி.படிக்காட்டியும் சரி:)

விடலாமுன்னு பார்த்தா பின்னூட்ட பிரியாணி வித் லெக் பீஸ் (courtesy Vavval:))விடுதா மனுசன!

வருண்!மதம் சார்ந்தோ அல்லது மதம் சார்ந்த அறிவியலோடு ஒரே ஒரு பதிவரைக் கண்டேன்.பெயர் கார்பன் கூட்டாளி.ஒருத்தராவது கொஞ்சம் மதம் சார்ந்த அறிவியலோடு யோசிக்கிறாரே என்று அவரைப் பாராட்டி ஒரு பதிவு போடலாமுன்னு பார்த்தேன்.முடியல...அதான் ஒரே ஆணி!

யோவ்! கார்பன் கூட்டாளிக்கும் எனக்கும் என்னய்யா சம்பந்தம்ன்னு கேட்கிறீங்களா?அவரோட Central dogma பதிவு படிச்சேன்.மனுசன் எல்லாருக்கும் பொறுமையா பதில் சொல்லிகிட்டிருந்தார்.அங்கே உங்க பின்னூட்டங்களும் படித்தேன்.கொஞ்சம் புத்திசாலித்தனமாத்தான் நீங்களும் பின்னூட்டம் போடுறீங்க...ஆனால் அங்கேயும் சண்டை போடுறீங்க:)

வவ்வால் said...

ராஜ்,

என்ன முட்படுக்கையில் வாசம் செய்யவிட்டாங்களா :-))

//விடலாமுன்னு பார்த்தா பின்னூட்ட பிரியாணி வித் லெக் பீஸ் (courtesy Vavval:))விடுதா மனுசன!//

பிரியாணி வித் லெக் பீஸுக்கு இப்போ ஒரே தட்டுப்பாடா ஆச்சு, எல்லாம் சோளப்பொறி தான் விக்குறான்ங்க :-))

சண்டைப்புடிக்க கூட ஆள் வராமல் புது படம் ஜிலோனு கிடக்கே அங்கே எதாவது பத்த வச்சு பார்க்கலாமா :-))

ராஜ நடராஜன் said...

வவ்!நீங்க இலக்கியத்தரமா முட்படுக்கையில் படுக்க விட்டுட்டாங்களான்னு கேட்பதற்கு பதிலாக ஒட்டகம் மேய்க்க விட்டுட்டாங்களான்னு நேரடியாகவே கேட்டிருக்கலாம்:)பாஸ்க்கு நமக்கு ஒரு நல்ல அடிமை சிக்கிட்டான்ங்கிற மகிழ்ச்சியிலே உயிரை வாங்கினதுல இப்ப கொஞ்சம் பரவாயில்லை.

சோளப்பொறியெல்லாம் ப்ளூடைமண்ட் தியேட்டர் காலத்து சமாச்சாரமாச்சே!இப்ப டாஸ்மாக் பரிணாம வளர்ச்சியாயிடுச்சா!காம்பினேசன் சரியா இல்லையே!

இந்த மெகா சண்டைகளைப் பார்த்த பின்னுமா அடுத்த ரவுண்டுக்கு ஆள் தேறுமின்னு நினைக்கிறீங்க:)