Followers

Sunday, January 22, 2012

கலிலியோ (Galileo) - திரைப்படம்

இப்பொழுதைய காலகட்டத்தில் பொருளாதாரம்,அரசியல் தவிர்த்து அறிவியல்,மதம்,மதச்சார்பின்மை என்ற மூன்று நிலைகளில் உலகம் சுழன்று கொண்டிருந்தாலும் அரிஸ்டாடில் காலம் துவங்கி (கி.மு 300) கோபர்நிகன் சிஸ்டம் என்ற சூரியனை ஏனைய கோள்கள் சுற்றுகின்றன என்ற புதிய தியரியை உருவாக்கிய போலந்து நாட்டைச் சேர்ந்த நிகோலஸ் கோபர்நிகஸ் காலமான 14ம் நூற்றாண்டுக்கு முன்பும் அவரைத் தொடர்ந்து கலிலியோ கலிலே வாழ்ந்த 16ம் நூற்றாண்டு வரைக்கும் வாடிகன் நகரத்து போப் சொல்லே இறுதியான தீர்ப்பும் மதம் என்ற ஒற்றை கோட்பாடு மட்டுமே உலவி வந்தது.

இங்கே முக்கியமான ஒன்று அரிஸ்டாடில் காலம் தொட்டு சுமார் 20 நூற்றாண்டுகள்  நம்பப்பட்டு வாடிகன் மத ஆராய்ச்சியாளர்களால் உறுதி செய்யப்பட்டு போப் அனுமதியோடு அங்கீகரிக்கப்பட்ட பூமியே அசையா மையம்,சூரியனும்,சந்திரனும்,நட்சத்திரங்களும் பூமியைச் சுற்றி வருகின்றன என்ற முகவுரையோடு கலிலியோ திரைப்படத்தின் கதைக்குள் செல்வோம்.

இங்கே கதை சொல்லும் போது நிகழ்வுகள் துண்டு துண்டாக இருப்பதை ஒட்ட வைக்க மூன்று பையன்கள் ஒவ்வொரு காட்சிக்கும் இடையில் வந்து கலிலியோ கலிலே என்ற வார்த்தை மட்டும் புரிந்து ஏனைய வார்த்தைகள் புரியாத ஒரு பாட்டை தொடர்ச்சிக்காக பாடி விட்டுப் போகிறார்கள்:)
சிறுவன் ஒருவன் பந்து ஒன்று நடுவிலும் சுற்றிலும் வளையங்களுடன் கூடிய விக்டோரியா ராணி காலத்து  கிரிடம் மாதிரி ஒன்றை கையில் எடுத்துக்கொண்டு ஓடி வருவதில் கதை ஆரம்பிக்கிறது.கலிலியோ நடுவில் இருக்கும் பந்து வடிவம்தான் பூமியென்றும்,சுற்றியுள்ள வளையங்கள் ஏனைய கோளங்களான சந்திரன்,சூரியன்,நட்சத்திரங்கள் என மக்கள் நம்பிக் கொண்டிருப்பதாக சிறுவனிடம் சொல்லிக்கொண்டிருக்கிறார். இதனையடுத்து மாணவர் ஒருவரும் வந்து தான் வானியல் படிப்பதாக அறிமுகப்படுத்திக் கொண்டு பேச கலிலியோ தனது வீடு சந்தைக்கடை மாதிரியாகி விட்டதென்கிறார்.

இதனைத் தொடர்ந்து கலிலியோவின் 17 வருட உழைப்பில் நெதர்லாந்திலிருந்து கொண்டு வந்து தயாரித்த டெலஸ்கோப்பை வாடிகன் கருவூல பொறுப்பாளர்,கார்டினல்,வானியல் துறை, சார்ந்த பலரின் முன்னிலையில் பரிசோதனை செய்ய வாடிகன் கருவூல பொறுப்பாளர் டெலஸ்கோப்பை விற்று காசு பார்த்துவிடலாம் என்ற நப்பாசையில் கலிலியோவுக்கு 200 ஸ்கூட்டி சம்பளம் அதிகரிக்கிறார்.இந்த டெலஸ்கோப்பை விற்பதன் மூலம் இத்தாலி மாலுமிகள் எதிர் வரும் கப்பல்களை இரண்டு மணி நேரத்துக்கு முன்பே தெரிந்து கொள்ள முடியும் என்பதோடு கருவூல பொறுப்பாளர் டெலஸ்கோப் தொழில்நுட்பத்தை விற்று காசு பார்த்து விடலாம் என்கிறார்.

கலிலியோவோ வானியலில் ரோம் மூன்று தலைமுறை பின் தங்கியிருப்பதாக்வும் டெலஸ்கோப்பை வானிலை ஆராய்ச்சிக்குப் பயன் படுத்த விரும்புகிறார்.தன் நண்பரிடம் ஜூபிடர் என்ற புதிய கோளத்தை கண்ட முதல் மனிதன் தான் எனவும் சூரியனை பூமி உட்பட்ட கோளங்கள் சுற்றுவதாகவும்,சந்திரன் மிருதுவான கோளம் என்ற பழைய முடிவுகளுக்கு எதிராக பூமியைப் போலவே சந்திரனும் மலைகள்,பள்ளத்தாக்குகள் உடையனவென்றும்,பால்வெளி மண்டலத்தில் (Milkyway)பல நகர்வுகள் உருவாகுவதாகவும் படிகம்(Crystal) மாதிரியான சிறியதும் பெரியதுமான நட்சத்திரங்களின் நகர்வுகளின் பிரதிபலிப்பே ஒளியை உருவாக்குவதாகவும் தன் நண்பரிடம் சொல்கிறார்.

கலிலியோவின் நண்பரோ கலிலியோவின் கண்டுபிடிப்புக்கள் பயம் தருவதாக கூறுகிறார்.மேலும் பூமிக்கும் அப்பால் சொர்க்கம் என்ற ஒன்று இருப்பதாகவும், சொர்க்கத்தில் கடவுள் இருப்பதாகவும்,அவரது கட்டளையின் படியே போப் இயங்குவதாகவும் சொல்லும் பொது கோட்பாடு என்ன ஆவது?கடவுள் எங்கே என்ற கேள்வியை கலிலியோவின் நண்பர் முன்வைக்கிறார்.கலிலியோ தான் கணிதம்,பெளதிகம் போதிக்கும் ஆசிரியரென்றும் தான் ஒரு வானிலை ஆராய்ச்சியாளரென்றும் மதம் குறித்த ஆராய்ச்சியாளர் (Theologist) அல்ல என்கிறார்.(சென்னை அடையார் ஆலமரத்து Theological society இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று)

மேலும் "God is within ourselves or no god" என்கிறார்.பின் தனக்கு நிறைய மதவாத நண்பர்கள் இருக்கும் எண்ணத்தில்  தனது புதிய கண்டுபிடிப்புக்களை சுமார் பத்து வயதே நிரம்பிய அரச இளவரசன் முன்பு விளக்க,இளவரசனுக்கோ தனது நட்சத்திரங்கள் காணாமல் போய் விடுமோ என்ற வருத்தம் உருவாகிறது.இளவரசனும்,இளவரசனை சுற்றியுள்ளவர்கள் அறிவைக்கண்ட கோபத்தில் கலிலியோவுடன் படத்தின் துவக்கத்தில் உரையாடும் சிறுவன் வெளியேறி விடுகிறான்.

மத போதகர்கள் கலிலியோவின்  புதிய கண்டுபிடிப்பைக்களைக் கண்டு எள்ளி நகையாடுகிறார்கள். கலிலியோ பதவி உயர்வுக்காக டெலஸ்கோப் ஆராய்ச்சியை வானிலை அறிவியல் துறைக்கு அனுப்ப கலிலியோவின் கண்டுபிடிப்புக்கள் உண்மையே என்கிறது ஆராய்ச்சி குழு..இதைக்கண்டு கலிலியோ மீது மத போதகர்கள் கோபம் கொள்கிறார்கள்.இதற்கும் ஒரு படி மேலே போப் " போன முறை இப்படி ஒரு ஆளு கண்டு பிடிச்சதுக்கு நெருப்பில் போட்டுக் கொளுத்தினோமே அந்தாளு பேரென்ன என்று கேட்டு ரத்தக்கொதிப்பு வேறு வந்து விடுகிறது.

மத போதகர்கள் கலிலியோ கண்டுபிடிப்பை ரவுண்டு கட்டி கும்மியடிச்சு சிரிக்கும் காட்சியிலும், போப் உயர்ந்த குரலில் கலிலியோவிடம் கத்திவிட்டு உயர் ரத்த அழுத்ததில் உட்கார்ந்து விட்ட காட்சியிலும் எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை:) போப் வயசான காலத்துல கஷ்டப்படறது சிரிப்பா இருக்குதான்னு கேட்கிறவங்களுக்கு 16ம் நூற்றாண்டின்  தவறுக்கு 1979ம் வருடம் போப் ஜான் பால் II மூலமாக ஐன்ஸ்டீனின் நூற்றாண்டு விழாவில் வாடிகன் மன்னிப்பு கேட்டு விட்டது.

நாம் ஏப்ரல் மாதத்தில் கொண்டாடும்  April fool விழாவாக கலிலியோவுக்கு எதிராக மேடை நாடகமாக பாடடு வடிவத்தில் அரங்கேறுகிறது. இதற்கிடையில் மத போதகர்கள் குழுமியிருக்கும் கூட்டத்தில் சிறிய கோலிக்குண்டை உட்கார்ந்த வண்ணம் தூக்கிப் போட மத போதகர்களில் ஒருவர் என்னமோ கீழே விழுந்து விட்டதாகக் கூறுகிறார்.அது ஏன் மேலே செல்லவில்லையென்று மறுகேள்வி கேட்டு மத போதகர்களின் கோபத்துக்கு உள்ளாகிறார்.(இதனை பின்பு ஐசக் நியுட்டன் புவியீர்ப்பு விசை தியரி உருவாக்கியதை இயக்குநர் சிம்பாளிக்காக காட்டியிருக்கலாம்).மாணவர்களுடன்  ஒரு குவளையில் பனிக்கட்டியை கரங்களால் முக்கி பின் கையை எடுத்தவுடன் மிதப்பதற்கு காரணம் என்ன என்று கேட்கிறார்.மாணவர்களில் ஒருவர் நீரை விட  எடை அழுத்தமான பொருள்  மூழ்குமென்றும் எடை குறைவான பொருள் மிதக்குமென்றும் சொல்ல ஒரு நீண்ட உலோக ஊசி நீரை விட அதிக எடை கொண்டது ஆனால் எப்படி மிதக்குமென்று ஒரு பேப்பரைக் கொண்டு நீரில் மிதக்க வைக்கிறார்.

இதற்கிடையில் மாணவன் ஒருவர் தனது வானியல் படிப்பை விட்டு விடுவதாக கூறி தனது பெற்றோர்கள் கிராமத்து விவசாயிகள் என்றும் கோள்கள் பற்றிய எவ்வித அறிவும் இல்லாமல் அவர்களது வாழ்க்கை கட்டுப்பாட்டுடன்,ஒரே சீராகவே செல்கிறது.இவர்களுக்கு வானியல் போன்ற அறிவு எதற்கு தேவை என்கிறார்.ஒரு சமூக அமைப்பில் தனது வாழ்க்கை சார்ந்த சிந்தனை மட்டுமே இயல்பு என்றும் அறிவுபூர்வமாக சிந்திக்கும் வானிலையாளான் அப்படியிருக்க இயலாதென்றும் கூறுகிறார்..கலிலியோவின் புதிய கண்டுபிடிப்புக்களின் காரணமாக  கலிலியோவுக்கு நீதி மன்ற தண்டனை கிடைக்கிறது..மகளின்  திருமணம் தடைபட்டு சந்நியாசினியாகி விடுகிறார்.கலிலியோ வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு கண் பார்வை மங்கும் நிலையில் கதை முடிகிறது.

தேடிப்பார்த்ததில் இந்த முறை விக்கிபீடியா கதை உதவிக்கு வரவில்லை.ஆனால் தேடலில் கதை பள்ளிக்கூட கதை என்பதாலோ என்னவோ ஒருவர் கூட ஒழுங்கான ரிவுயு போடவில்லை. ஐஎம்டிபி தேடியதில் சிகாகோ சன் டைம்ஸ்க்கு ரிவியு போட்ட ரோஜர் ஈபெர்ட் என்பவரும் கலிலியோ வேடத்தில் நடித்த டோபல் என்பவர் இஸ்ரேலிய நடிகர்..நாடகத்துறையிலிருந்து வந்ததால் நடிப்பு எடுபடவில்லை,இடையில் வந்து போகும் பிரிட்டிஷ் நடிகர்களே உசத்திங்கிற மாதிரி சொல்கிறார்.விக்கிபீடியாவும் அதனைக் காப்பி செய்து தனது பக்கத்தை நிரப்பிக்கொண்டது.

ஒருத்தர் படம் 1974ல வந்ததுன்னு தலைப்பு போடுகிறார்.ஆனால் படம் வந்தது 1975 என்ற விக்கிபீடியாவின் சொல் உண்மையாக இருக்க கூடும்.கேன்ஸ்பெஸ்டிவலுக்குப் போய் ப்லிம் காட்டுனதோட சரி.மேற்கொண்டு இறுதி சுற்றுக்கு செல்லவில்லை என மேலும் தகவல்.இந்திய பெரும் நகரங்களில் இந்தப் படம் வெளிவந்ததா?டாவின்சி கோடுக்கெல்லாம் அவ்ளோ விளம்பரம் கொடுத்ததே இந்தியா!

கதையில் வசனங்களே முக்கியத்துவம் பெறுகின்றன.அறிவியல்,மத சார்பாளர்கள் பார்க்க வேண்டிய படம்.

பௌதிக அறிவியல் துறை சார்ந்த கற்றும் மறந்த பாடங்கள் என்ற போதிலும் வவ்வால்!இந்தப் படம் உங்க ஏரியா:)

கலிலியோ கலிலே என்ற பௌதீகம்,கணிதவியல்,வானியல் அறிஞனை மதிக்கத் தவறியது ரோம் மட்டுமல்ல!தமிழகமும்,இந்தியாவும் கூட பெரியாரின் நண்பர்களில் ஒருவரான ஜி.டி.நாயுடு என்ற கோவை விஞ்ஞானியை கௌரவிக்க தவறிவிட்டது.

கலிலியோ திரைப்படத்தைப் பற்றி வேறு யாராவது சொல்லியிருக்கிறார்களா என்ற தேடலில் பதிவர் சார்வாகன் ஏற்கனவே ஆவணப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். பதிவர் சார்வாகனின் முந்தைய தளத்தில் குறிப்பிட்ட Extraordinary Claims Require Extraordinary Evidence என்ற வாசகம் கலிலியோவின் ஆராய்ச்சிகளுக்கு மிகப் பொருந்தும்.

பட உதவிகள்:கூகிள் மற்றும் டைம்ஸ் ஆஃப் இண்டியா.

34 comments:

ஜோதிஜி திருப்பூர் said...

பகிர்ந்த விசயங்களும் நன்றே!

ராஜ நடராஜன் said...

//ஜோதிஜி திருப்பூர் said...

பகிர்ந்த விசயங்களும் நன்றே!//

முகப்படமெல்லாம் மாத்தீட்டிங்க போல இருக்குதே!வாழ்த்துக்கள்.

என்ன! பதிவுக்கு எதிர் பதிவுங்கிற மாதிரி பின்னூட்டப் பெட்டிக்கும் எதிர்ப் போட்டியா:)

வவ்வால் said...

ராஜ்,

உண்மையில் ரொம்ப பொறுமை வேண்டும் இது போல படம் எல்லாம் பார்க்க. டிஸ்கவரி,நேட் ஜீயோ வில் வரும் டாக்குமென்டரி பார்ப்பதற்கே நொரை தள்ளும். விவரணமா காட்டினா கூட பரவாயில்லை நடுவில அப்பா டாக்கர்/ ஜிப்பா டாக்கர் பேசும் போது சேனல் மாத்த தோன்றும். இப்போ தமிழ் பேசுறங்க :-))

கொடுமைய பாத்திங்களா கூட்டமே காணோம், என்னமோ இன்னிக்கு யாரும் வரக்கூடாதுனு ஊரடங்கு உத்தரவு போட்டா போல காலியா கிடக்கு :-))

சூப்பர் ஹிட் படம் கொடுத்துட்டு அடுத்த படம் ஒரு நாள் ஒரு காட்சி ஓடினாப்போல இருக்கு :-))

இதுவே தலைப்புல கலிலியோ மத எதிர்ப்பாளரானு போட்டு இருந்திங்க , ஹவுஸ்புல் காட்சி தான் :-))
(உணமைல மதம் சொன்னதுக்கு எதிராதானே சொன்னார்)

நீங்க படம் பார்த்துட்டு என்னைப்புடிச்சு கலாய்க்கிறிங்களே ?

1975 இல் எல்லாம் நம்ம ஊரில் எப்படி இந்த படத்துக்கு வரவேற்பு இருக்கும், அப்போலாம் ஷோலே தான் நம்ம ஊருக்கு இங்கிலீஷ் படம் :-)) இப்போ இப்படி படம் எடுத்தாக்கூட ஓடாது.

ஆனால் அவர் இலுமினாட்டி மெம்பர் ... ஏசுவின் வாரிசு ரகசியம் தெரியும்னு டாவின்சிக்கோட்டில் படிச்சேன், அத போல கொஞ்சம் மர்மம் கலந்து எடுத்தா ஓடும் போல.

இந்த பட்த்துல 3 பசங்க வராங்க பேசுறாங்கனு சொன்னீங்களே, அது கலிலியோ புத்தகத்தின் அடிப்படையில் இருக்கும். போப், சர்ச் ஆகியவற்றிற்கு பயந்துக்கிட்டு 3 பசங்க பேசிக்கிறாப்போல தான் அவர் கண்டுப்பிடிப்புகளை எழுதி வெளியிட்டார். சர்ச்சுக்கும், சயின்ஸுக்கும் இடையே இருக்கிற வேறுப்பாட்டை சிறுவர்க்கதைப்போல எழுதி " Dialogue on the Two Great Systems of the World.என்ற பெயரில் வெளியிட்டார். அப்படி இருந்தும் மாட்டிக்கிட்டார்.

உயிரோட எரிக்கப்பட்ட விஞ்ஞானிப்பெயர் படத்தில சொன்னாங்களா, கியோடார்ட் புருனோ னு பெயர் , கோபர் நிக்கஸ் தியரி சரினு சொன்னதும் இல்லாம சூரிய தாண்டியும் கிரகம் இருக்கு, அங்கும் மனிதர்கள் இருக்காங்க சொல்லிட்டார் அதுவும் 1600 களில் சும்மா விடுவாங்களா கொளுத்திட்டாங்க ஆளை.

கலிலியோ ஆரம்பத்தில சர்ச்ல பாதர் ஆக படிச்சு இருக்கார் ,அப்புறம் புடிக்காம வந்துட்டார். அவங்க அப்பா கொஞ்சம் செல்வாக்கானவர் என்பதால் சர்ச் இவரை எரிக்காமல் வீட்டு சிறை செய்து இருக்கு.

ஜூப்பிடர், சனி கிரகம் எல்லாம் இவர் கண்டுப்பிடிப்பு தான் ஆனால் நம்ம ஆளுங்க புராணக்காலதிலேயே சனிக்கிரகம் கண்டுப்பிடிச்சு இருக்காங்க. :-))

படம் பார்த்த உங்களுகே கதைய திருப்பி சொல்றேனோ :-)) சுறுக்கமா எழுத வரலை அதான் ரிப்பீட் ஆனாலும் பரவாயில்லைனு சொல்லிட்டேன்.

ஹி ..ஹி கொஞ்சம் தான் நினைவில் இருந்துச்சு , இப்போ உங்க புண்ணியத்தால தேடிப்படிச்சேன்.

சிரிக்க மட்டும் இல்லை சிந்திக்கவும் இடம் இருக்கு, ஆர்யப்பட்டர் கோபர் நிக்கஸுக்கு முன்னரே சூரிய சித்தாந்தம் எழுதி சூரியன் நிலையானது சொல்லி இருக்கார். இன்னும் பாஸ்கர, பிரம்மகுப்தா எல்லாம் சொல்லி இருக்காங்க. பாஸ்கரா பூமி சுற்றி வர ஆகும் காலத்தையும் சொல்லி இருக்கார். இப்போவும் சரியா இருக்காம். ஆனா நமக்கு ஏன் பெயர் கிடைக்கலை. காரணம் நம்ம ஆளுங்க நாளு பேருக்கு சொல்லிக்கொடுக்காம குடும்ப ரகசியமா வச்சுட்டாங்க போல.

உங்க மட்டஞ்சேரி பதிவில 1556 இல் கிருத்தவர்/ யூதர்கள் /நசரேனியன் வந்ததாப்பேசினோமே அவங்க வந்து இந்தியாவில இருந்த அறிவியல் , கலை நூல்களை படிச்சு , மொழிப்பெயர்த்து ஐரோப்பாவிற்கு கொண்டுபோனதாகவும் அதன் அடிப்படையில் தான் ஆய்வு செய்து கோபர் நிக்கஸ், கலிலியோ, நியுட்டன் போன்றவர்கள் பெயர் வாங்கினதாகவும் ஒரு பேச்சு இருக்கு, சிலர் புத்தகமும் எழுதி இருக்காங்க.

கிரிஸ்டல் ஸ்கல், மின் ஜாடி , நாஸ்ச்கா லைன் (இன்டியான ஜோன்ஸ் படத்தில இத எல்லாம் சொல்வாங்க) எல்லாம் கேள்விப்பட்டு இருக்கிங்களா, ஒரு 10 கண்டுப்பிடிப்பு 2000 ஆண்டுக்கு முன்னரே ஆசியாவில் இருந்துச்சு , அது காபி அடிச்சு தான் மேல் நாட்டில செய்தாங்கனு ஒரு பிடிஎப் வடிவில் ஒரு மின்னூல் படிச்சேன், இப்போ எங்கே இருக்குனு தேடனும்.(இதெல்லாம் ஒரு காலத்தில் சாட்டில் பேசிக்கொன்டிருந்தது, அபோலாம் ஒரு டெர்ரர் குருப்பு இருந்துச்சு கதைக்க)

ஹேமா said...

நடா...உங்கள் விமர்சனம் பார்க்கத்தூண்டுகிறது.தேடிப்பார்க்கிறேன்.
இப்படியான படங்கள் பார்ப்பதில் ஆர்வம் எனக்கு.நன்றி !

சார்வாகன் said...

நல்ல பதிவு.அருமையான விமர்சனம் சகோ.

படம் பார்க்க வேண்டும்.இதே போன்ற ஒரு காலகட்டமே இப்போது நம்முன் இருக்கிறது.பரிணாம் கொள்கை மற்றும் டார்வின் மீது வைக்கப் படும் விமர்சனங்களும் கலிலியோவின் தண்டனைகளுக்கு ஒப்பானதே.
கல்வியை பாழ்படுத்தும் இம்மாதிரி முயற்சிகளை முளையிலேயே கிள்ளி எறிவது முன்னேறும் சமுதாயத்திற்கு நல்லது.
வாழ்த்துக்கள்

சார்வாகன் said...

தமிழகமும்,இந்தியாவும் கூட பெரியாரின் நண்பர்களில் ஒருவரான ஜி.டி.நாயுடு என்ற கோவை விஞ்ஞானியை கௌரவிக்க தவறிவிட்டது./

கோவையில் உள்ள அவ‌ருடைய‌ அருங்காட்சிய‌ம் அனைவ‌ரும் பார்க்க‌ வேண்டிய‌ ஒன்று.

அவ‌ருக்கு உரிய‌ ம‌ரியாதையும், இட‌மும் அளிக்காத‌து மிக கலிலியோ தண்டனை போல் பெரிய‌ வ‌ர‌லாற்றுப் பிழை.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

தெளிவான நிரோட்டம் போல சொல்லிரின்கிங்க ...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்றைய ஸ்பெஷல்

நண்பன் படமும் அஜித் ரசிகர்களும்

நிரூபன் said...

வணக்கம் அண்ணா,
நல்லதோர் வரலாறு & அறிவியல் கலந்த பட விமர்சனத்தினைத் தந்திருக்கிறீங்க.

நேரம் இருக்கும் போது கண்டிப்பாக பார்க்க ட்ரை பண்றேன்.

வவ்வால் said...

ராஜ்,

//நிரூபன் said...

வணக்கம் அண்ணா,
நல்லதோர் வரலாறு & அறிவியல் கலந்த பட விமர்சனத்தினைத் தந்திருக்கிறீங்க.

நேரம் இருக்கும் போது கண்டிப்பாக பார்க்க ட்ரை பண்றேன்.//

ஹி..ஹி அண்ணாத்தையும் சினிமா விமர்ச்சனம் எலுதி இருக்காரம் , அதான் இப்படி ஒரு பின்னூட்டம் ஓடி வருது... போய் பதில் மொய் செய்துட்டு வாங்க :-))

இணையத்தில் நீங்களும் சம்பாரிக்கலாம் said...

முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

இணையத்தில் நீங்களும் சம்பாரிக்கலாம் said...

முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

இணையத்தில் நீங்களும் சம்பாரிக்கலாம் said...

முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

ராஜ நடராஜன் said...

வவ்!டிஸ்கவரி,ஜியாகிரபி சேனல்களை கொஞ்சம் பொறுமையா பார்க்கனும்ங்கிறது உண்மைதான்.ஆனால் இந்தப் படத்தின் கதை நமக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்று என்பதால் படத்தில் எனக்குப் பிடித்தது வசனம் மட்டுமே.நீங்க சொல்லித்தான் மூன்று பசங்க ரகசியம் கூட அறிந்தேன்.அனகொன்டா மாதிரி படங்களில் ஜெனிபர் (லு) லொபேஸ் தமிழ் பேசற மாதிரி டப்பிங்க்தான் வந்துருக்கு.டிஸ்கவரிக்கும் தமிழ் டப்பிங்கா!

ஊரடங்கு சட்டத்தையும் கலைக்கிற மாதிரி டாபிக் கைவசம் இருக்கு.எம்.எஃப் ஹுசைனுக்கு மட்டும் பதிவில் குரல் கொடுத்துட்டு ருஷ்டியை கைவிட்டு விடுவது நல்லதல்ல.சல்மான் ருஷ்டிய இந்தியா வரவேண்டாமென தீய பந்து (பந்து ன்னா பெங்களாதேஷ் மொழியில் சகோதரர்களாம்) மிரட்டல் விட்டு ருஷ்டியே வரவில்லையாம்.இப்போதைய கலிலியோவுக்கான தகுதி ஒரு நாள் சல்மான் ருஷ்டிக்கும் இலக்கிய வாசிப்புக்காக வருமென நம்புவோம்.

சல்மான் ருஷ்டியின் சாத்தானின் வேதம் பற்றி ஏற்கனவே எங்கோ கருத்து சொல்லியாகி விட்டது.இந்தப் பின்னூட்ட கால கட்டத்தை ஒட்டி மீண்டும் ஒரு முறை பதிவு செய்து விடுகிறேன்.

ருஷ்டியின் எழுத்து வாசிப்பு கடினமான ஒன்று.முழு ஆங்கில இலக்கியவாதிகளுக்கு மட்டுமே புரிந்த ஒன்று.பெயர்ச் சொல் காரணமாகவும் ஒரு வேளை ருஷ்டி ப்த்தகத்தின் பெயர்களுக்குள் உள்குத்து வைத்திருந்த காரணம் கொண்டு மட்டுமே மத ஆய்வாளர்களின் கண்ணில் பட்டு சலசலப்பு உண்டாகியிருக்கலாம்.பத்வா கொடுத்து பெருச்சாளியை பெருமாள் ஆக்கிய பெருமை ஈரானின் கோமினிக்கே சேரும்.

இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் தெரிந்த கதைங்கிறதால நீங்க படம் பார்த்து க(லாய்)ளைக்க வேண்டாம்.

தொடர்கிறேன்....

ராஜ நடராஜன் said...

@வவ்வால்!
ஷோலேயின் கப்பர்சிங் சென்னை போன்ற இடங்களுக்கு ஆங்கிலப்படமாக இருக்கலாம்.75 கால கட்டத்துல புருஷ்லீ தான் ஹீரோ.பாரதிராஜாதான் இயக்குநர் சிகரம்.

இலுமினாட்டி மெம்பர்!பின்னூட்டம் படிக்கிறவங்க யாருக்காவது புரியுது:)டாவின்சி கோடை சூர்யா பட கூன் டிவில திருட்டு டிவிடில பார்த்ததுல படமும்,வசனங்களும் புரியல.இன்னுமொரு முறை பார்க்கனும்.

மூணு பசங்க ஒருவேளை நீங்க சொல்கிற மாதிரி இருக்கலாம்.ஆனால் படத்துல கலிலியோ நல்ல உணவும்,வைன்,அமைதியான சூழல் விரும்பியா இயக்குநர் காண்பிக்கிறார்.அப்புறம் கலிலியோ தனது கண்டுபிடிப்புக்களுக்கு பேடன்ட் ரைட் வாங்குற மாதிரி அரசு வானிலை ஆய்வுக்குழுவுக்கு தனது பரிசோதனையை அனுப்புவது மாதிரி காண்பிக்கிறார்கள்.

சிறுவயதில் கலிலியோவை கொழுத்தி விட்டார்கள் என்றே நம்பியிருந்தேன்.ஆனால் நீங்கள் சொல்லித்தான் கியோடார்ட் புருனோ என்பது தெரிகிறது.சுவர் ஓரம் நின்றிருக்கும் கலிலியோவே யாரென்று தெரியாமல் போப் கல்லு விட்டுகிட்டிருக்கும் போது கியோடார்ட் புருனோ பெயரையா நினைவு வைத்திருக்கப் போகிறார்:)சும்மா குத்து மதிப்பா முன்னாடி ஒருத்தரை கொளுத்தினோமே யாரது என்றே கேட்கிறார்.

படக்கதையின் படி கலிலியோவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு பின் வெனிஸ் டியூக்கின் சிபாரிசால் வீட்டு சிறையாக மாற்றப்பட்டு யாரோ பரிசளிப்பாக அனுப்பிய வாத்து ஈரலை நல்லா ஆலிவ் ஆயில்,வெங்காயம் போட்டு வறுத்துக்கொண்டு வாங்கிற மாதிரிதான் காண்பிச்சாங்க.

ஜூபிடர்,சனி கலிலியோ கண்டுபிடிக்கிறதுக்கு முன்னாடியே நாம் கண்டுபிடித்தது உண்மைதான்.ஆனால் சனீஸ்வரன்னு சொல்லி கல்லாக மட்டுமே செய்து வைத்து விட்டோமே!

கல்வெட்டுக்கள்,ஓலைச்சுவடி போன்றவை படையெடுப்பு,காலவெள்ளத்தில் காணாமல் போய் விட்டன.மேலும் எழுதியவைகள் பாடல்கள்,தத்துவங்கள் மாதிரி அமைந்தவையாகவும் அரசன், கடவுள் வழிபாடுகள் மாதிரி ஆகிவிட்டன.

கீழைய நாடுகளின் கோட்பாடுகளுக்கும்,மேற்கத்திய நாடுகளின் கோட்பாடுகளுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருக்கின்றது.தியரிகள் எனும் கோட்பாடுகள் மதப்புத்தகங்கள் போல் நம்பிக்கையின் அடிப்படையில் இல்லாது,ஆழ்ந்து ஆராயப்பட்டு அறிவியல் ஜர்னல்களின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும்.பின் பரிசோதனைக்குட்பட்டு வெற்றி பெறவேண்டும்.உதாரணமாக கோபர்நிகஸ் சொன்னது தியரின்னா கலிலியோ உபகரணங்களோடு கண்டு பிடிச்சது பிராக்டிகல்.நாம் சாப்பிடும் இட்லி,தோசைகள் அரிசி,உழுந்து மாதிரி பொருட்களாக இருப்பதும் அதில் இட்லி,தோசை செய்யலாம்ங்கிறது தியரி:)இட்லி நீராவில உஷ்ங்கிறதும்,தோசை சொய்ன்னு சவுண்டு விடறதும் கண்டுபிடிப்பு:)

சிரிக்கிற மாதிரி தோனினா கப்பல்,விமானம்,சாட்டிலைட் என கட்டுமானங்கள் அனைத்தும் தியரி.முதல் வெள்ளோட்டம் விடறது மட்டுமே கண்டுபிடிப்பு.

எனக்கேவா ங்கிறீங்க:)

இன்னும் தொடருது:)

ராஜ நடராஜன் said...

@வவ்வால்!ஆர்ய பட்டர் கேள்விப்பட்டிருக்கேன்.பிரம்ம குப்தா கூட காதுல விழுந்த மாதிரி இருக்குது.ஆனால் பாஸ்கர...கலா அக்கா பாசையில சான்ஸே இல்ல:)

நாம் அப்பவே கண்டுபிடிச்சோம்ன்னு சொல்றேமே தவிர அதனை ஆவணப்படுத்தவும்,இந்த கால கட்டத்திலும் கூட ஆராய்ச்சிக்குட்படுத்தவும் தவறி விடுகிறோமே.எனவே இவை இந்திய கலாச்சாரத்தின் ஒரு பங்காக மட்டுமே சேர்த்தியன்று விஞ்ஞான கோட்பாட்டுக்கள் வர இயலாது.

கிரிஸ்டல் ஸ்கல், மின் ஜாடியெல்லாம் உங்களுக்கு சொல்லிக்கொடுக்கவா வேணும்.மணைலையே கயிறு திரிக்கிறவராச்சே!நான் உங்க அரதப் பழசான கோலிக்குண்டு சோடாபாட்டில் செய்வது எப்படி பற்றிக் குறிப்பிட்டேன்:)

நல்லவேளை சோடாபுட்டி பதிவுகள் எல்லாம் அப்ப வருல.இல்லாட்டி உடன் பிறப்புக்களும்,ரத்தத்தின் ரத்தங்களும் முண்டாசு கட்டிகிட்டு சோடாபுட்டி பறக்க விடும் கலையை இன்னும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ரேஞ்சுக்கு கொண்டு வந்திருப்பாங்க:)

கிறுஸ்தவர்கள்,யூதர்கள் சரி!இது யாரு புதுசா நசரேனியன்?நாசரேத்தில் பிறந்த இயேசுவை வழிபடுபவர்களுக்கு பழைய பெயரா?எனக்கு பதிவர் நசரேயனை மட்டும்தான் தெரியும்.நீங்க எல்லாம் இல்லாத தைரியத்துல ட(த)ப்பு டப்பா எங்களையெல்லாம் சிரிக்க வைத்த பதிவுலக என்.எஸ்.கே:)

அது ஏன் பழைய டெரர் குருப் போனவன் போனான்டின்னு திரும்ப வர்றதேயில்ல!நீங்கதான் வழி தப்பின ஆடோ:)

முடிச்சிட்டேன் மொக்கையை.நன்றி.

ராஜ நடராஜன் said...

//"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்றைய ஸ்பெஷல்

நண்பன் படமும் அஜித் ரசிகர்களும்//

ராஜா!எனக்கு இன்னும் டிவிடியே கிடைக்கல:)

நீங்க விஜய் பக்கமா!அஜித் பக்கமா!

எப்படியோ ரஜனிக்கும்,கமலுக்கும் வயசாகிட்டே போகுதுன்னு இன்னுமொரு குருப் தேத்துறீங்க:)

ராஜ நடராஜன் said...

//ஹேமா said...

நடா...உங்கள் விமர்சனம் பார்க்கத்தூண்டுகிறது.தேடிப்பார்க்கிறேன்.
இப்படியான படங்கள் பார்ப்பதில் ஆர்வம் எனக்கு.நன்றி !//

ஹேமா!ஒரு 40" அல்லது 50" தொலைக்காட்சிப் பெட்டி,சினிமா தியேட்டர்ல மாதிரி Bose,polk,Kenwood,Pioneer,Jbl மாதிரி ஸ்பீக்கர்,Onkyo,Denon,Yamaha,Maranzமாதிரி AV Receiver,Stero Headphone,AV computer(நான் உபயோகிப்பது Toshiba-Qosmio model)மைக்ரோசாப்ட் மீடியா சென்டர்,இணையம்ன்னு ஒரு பெரிய பட்ஜெட் போட்டால் மட்டுமே திரையரங்கு போகாமல் நாம் விரும்பும் நல்ல படங்கள் பார்க்க இயலும்.

சீனாக்காரன் மார்க்கெட்டில் நிற்பதின் நன்மை மின்னணு (எலக்ட்ரானிக்) உபகரணங்கள் ஓரளவுக்கு வாங்கும் விலையிலேயே உள்ளது.

இன்னும் சில அரதப்பழசான படங்களை சொல்கிறேன்.புதுப்பட விமர்சக நண்பர்கள்தான் நிறையவே இருக்கிறார்களே!

ராஜ நடராஜன் said...

//நிரூபன் said...

வணக்கம் அண்ணா,
நல்லதோர் வரலாறு & அறிவியல் கலந்த பட விமர்சனத்தினைத் தந்திருக்கிறீங்க.

நேரம் இருக்கும் போது கண்டிப்பாக பார்க்க ட்ரை பண்றேன்.//

பழைய படங்கள் 10 வருட காலாவதியாச்சுன்னு இணையத்துல கூட இலவசமாகப் பார்க்கலாம்.

முன்பே பதிவு போட்ட ஷிவாகோ,இனி நேரம் கிடைத்தால் வரும் போரும்,சமாதனமும் என்ற படங்கள் கட்டாயம் பார்க்க வேண்டியவை.

போரும்,சமாதானமும் பற்றி யாராவது சொல்லியிருக்கிறார்களா என்ற தேடலில் அன்ரன் பாலசிங்கத்தின் புத்தகம் பற்றி நிறைய இணையத்தில் காணக்கிடைக்கிறது.

ராஜ நடராஜன் said...

//ஹி..ஹி அண்ணாத்தையும் சினிமா விமர்ச்சனம் எலுதி இருக்காரம் , அதான் இப்படி ஒரு பின்னூட்டம் ஓடி வருது... போய் பதில் மொய் செய்துட்டு வாங்க :-))//

வவ்வால்!நீங்க தப்பா புரிஞ்சிகிட்டீங்க:)பதிவர் நிரூபனை நானும் ஒரேயடியாகத் தொடர்வதில்லை.அவரும் அப்படியே.
அவரது பின்னூட்டம் புரிந்துணர்வின் அடிப்படையில் மட்டுமே.

ராஜ நடராஜன் said...

//இணையத்தில் நீங்களும் சம்பாரிக்கலாம்//

எனக்கு பதிவு போடவும்,வளவளத்தான்(பேடன்ட் ரைட்ஸ் பதிவர் நசரேயன்)பின்னூட்டம் போடவே நேரம் கிட்ட மாட்டேங்குது.என்னத்த இணையத்துல சம்பாரிச்சு.தகவலுக்கு நன்றி மட்டும் போட்டுக்கிறேன்.

வவ்வால் said...

ராஜ்,

//அனகொன்டா மாதிரி படங்களில் ஜெனிபர் (லு) லொபேஸ் தமிழ் பேசற மாதிரி டப்பிங்க்தான் வந்துருக்கு.டிஸ்கவரிக்கும் தமிழ் டப்பிங்கா!//

ஹி..ஹி ஆமாம் இப்போ ஹாலிவுட் காரங்க எல்லாம் அட்சர சுத்தமா தமிழ் பேசுறாங்க, நம்ம ஹீரோ/ஹீரோயின் இங்லிபீச்சு பேசுறாங்க்க :-))

டிஸ்கவரி இப்போ தமிழ், தெலுகு, ஹிந்தினு எல்லாம் டப்பிங்கில் பேசுது, ஆனால் டப்பிங் சேனலில் ரீல் அந்து போகும் அளவுக்கு ரிபீட் செய்றாங்க.

//ஊரடங்கு சட்டத்தையும் கலைக்கிற மாதிரி டாபிக் கைவசம் இருக்கு.எம்.எஃப் ஹுசைனுக்கு மட்டும் பதிவில் குரல் கொடுத்துட்டு ருஷ்டியை கைவிட்டு விடுவது நல்லதல்ல.சல்மான் ருஷ்டிய இந்தியா வரவேண்டாமென தீய பந்து (பந்து ன்னா பெங்களாதேஷ் மொழியில் சகோதரர்களாம்) மிரட்டல் விட்டு ருஷ்டியே வரவில்லையாம்.//

ஊரடங்கை கலைக்க ருஷ்டி வரவைங்க .... கலைக்கட்டும் :-)) சாத்தானின் வேதங்கள் படிச்சேன்னு சொன்னாலே உள்ளப்போடூவாங்கலாம், நான் 4 சேப்டர் வரைக்கும் படிச்சேன் அதை சொல்லிக்கலாமா கூடாதா? அதுக்கும் மேல முடியலை. கஷ்டமான நடை கூட இல்லை சின்ன சின்ன பத்திகளா சுஜாதா போல தான் எழுத்து நடை நீங்க எதை வைத்து கடினம் சொன்னிங்க புரியலை. ஆனால் சலிப்பா இருக்கும் படிக்க.

தீய பந்து ....பந்து னா சொந்தம் ,நண்பன் னு இந்தியாவிலும் வட சொல் இருக்கு. தீன பந்துனு ஆண்டிருஸ் னு ஒரு வெள்ளைக்கார அப்பாவுக்கு காந்தி பேரு கூட வச்சார். விஜய் நண்பன் படத்துக்கு கூட ஹிந்தி டப்பு செய்தால் பந்துனு ஹிந்தில பேரு வைக்கலாம், தெலுகு, கன்னடத்தில பந்துலு வச்சிடலாம் :-))

//ஷோலேயின் கப்பர்சிங் சென்னை போன்ற இடங்களுக்கு ஆங்கிலப்படமாக இருக்கலாம்.75 கால கட்டத்துல புருஷ்லீ தான் ஹீரோ.பாரதிராஜாதான் இயக்குநர் சிகரம்.//

புருஸ் லீ படம் சொல்லலாம்னு நினைச்சேன் ஆனால் அது ஆங்கிலப்படம் சொல்லிடுவிங்கனு சொல்லவில்லை :-)) அப்போ பாலச்சந்தர் தான் சிகரம், பாரதிராஜா இமையம் இல்லையா? பி.ஆர்.பந்துலு தான் செசில் பி.டிமில் அப்போ :-))

//,ஆழ்ந்து ஆராயப்பட்டு அறிவியல் ஜர்னல்களின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும்.பின் பரிசோதனைக்குட்பட்டு வெற்றி பெறவேண்டும்.உதாரணமாக கோபர்நிகஸ் சொன்னது தியரின்னா கலிலியோ உபகரணங்களோடு கண்டு பிடிச்சது பிராக்டிகல்.//
அதே தான் எல்லாம் தேவபாஷைல எழுதி வச்சுட்டு,அவங்களுக்கு மட்டும் அறிவுனு ஆக்கிக்கொண்டார்கள். பாபர் காலத்தில் இருந்தே பெர்சியான்/அரபிக்கு மொழி மாற்றம் செய்யும் வேலையும் துவங்கியது.இந்திய அறிவு குலம், கோத்திரம்னு முட்டு சந்தில் மாட்டிக்கொண்டதால் மேற்கொண்டு நகரவில்லை.
//கிறுஸ்தவர்கள்,யூதர்கள் சரி!இது யாரு புதுசா நசரேனியன்?நாசரேத்தில் பிறந்த இயேசுவை வழிபடுபவர்களுக்கு பழைய பெயரா?//

அதே ... நசரேத்தில இருந்து வந்த கிருத்துவர்கள், ஆனால் யூதர்கள்... கிருத்துவ மதத்துக்கு மாறின நசரெத் யூதர்கள், ரோமானியர்கள் இவங்களை ஏத்துக்காம தொல்லைக்கொடுத்துக்கிட்டே இருந்த தால் இடம் பெயர்ந்து கேரளாவுக்கு வந்தாங்க ஆரம்பத்தில. 1556 இல் ஒட்டமான் மன்னர்களுக்கு பயந்தா இல்லை வஹாபி , அப்புறம் சவுதியை ஸ்தாபித்த இபின் சவுத் க்கு பயந்தா என்று சரியா தெரியவில்லை. நசரேனியன்கள் புனித தாமஸ் பின்ப்பற்றுபவர்கள், தனி பைபில் எல்லாம் உண்டு.

அந்த ஒரு காரணத்தினாலேயே புனித தாமஸுக்கு உலகளாவிய பெருமைக்கிடைக்கவில்லை. சென்னை சாந்தோம்ல இருக்கும் சர்ச் வாட்டிகனில் இருக்கும் புனித பீட்டர் தேவாலயத்துக்கு இணையானது. உலகில் இப்படி இருக்கும் இரண்டு தேவாலயங்கள் இவை மட்டுமே.வாட்டிகன் நிலை எங்கே சென்னை சாந்தோம் சர்ச் நிலை எங்கே ?

மம்முக்கா படம் பார்க்கும் பிரியர் என்பதால் ஒரு சினிமா தகவல், நசரேனியன் னு மம்ம்முட்டி நடிச்ச மலையாள படம் இருக்கு. சினி கிளு கிளு ... நயந்தாரா(மரியம் குட்டினு பேரு) அசின் எல்லாம் நசரேனியன் / மலபார் சிரியன் கிருத்துவர்களே.

ஹி ஹி அதுக்குள்ள மொக்கை முடிச்சுட்டேன் சொல்றிங்க , இன்னும் நான் முடிக்கலயே :-))

//அது ஏன் பழைய டெரர் குருப் போனவன் போனான்டின்னு திரும்ப வர்றதேயில்ல!நீங்கதான் வழி தப்பின ஆடோ:)//

ஆமாம் சங்கம் கலைஞ்சு போச்சு , நான் மட்டும் பரிணாமத்த்தின் எச்சமா இன்னும் மாற்றம் அடையாமல் திரிகிறேன்...

வவ்வால் said...

ராஜ்,

//வவ்வால்!நீங்க தப்பா புரிஞ்சிகிட்டீங்க:)பதிவர் நிரூபனை நானும் ஒரேயடியாகத் தொடர்வதில்லை.அவரும் அப்படியே.
அவரது பின்னூட்டம் புரிந்துணர்வின் அடிப்படையில் மட்டுமே.//

பின் தொடர்தல் பற்றி இல்லை. அவரே பதிவுப்போட்டு சொன்ன சமாச்சாரம் இது. ஒரு பதிவு போடும் முன்னர் அடுத்தவங்க பதிவுக்கு போய் கமெண்ட் போட்டு விளம்பரம் செய்யனும், அப்போ தான் பதில் மொய் வரும்னு சொல்லி அவங்களை எல்லாம் கிண்டல் செய்திருப்பார். அதான் நானும் ஒரு பிட் போட்டு வைத்தேன் :-))

ஹி..ஹி நான் அவர்ப்பதிவுகளை அவ்வபோது பார்ப்பேன் , கருத்து சொல்வதில்லை ஒரே கும்மி கூட்டமாக இருக்கும் அங்கே என்னத்த சொல்வது. சும்மா பரபரப்புக்காக எழுதுவது ஒரு இப்போ ஒரு டிரெண்ட் ஆகிடுச்சு.

ராஜ நடராஜன் said...

வவ்!கலிலியோ படக்காலத்துக்கு முந்தியே பாலசந்தர் நிரூபணமான இயக்குநர்.பாரதிராஜா,இளையராஜா,வைரமுத்து கூட்டணி புதுசா களத்தில் புகுந்த காலமென்பதால் பதினாறு வயதினிலே தமிழ்ப்பட மாற்றங்களின் இன்னுமொரு காலகட்டம்.எனவே ஷோலே ஆங்கிலப்படமெல்லாம் உள்ளே நுழைய வாய்ப்பே இல்ல:)

நசரேயன் கிறுஸ்தவர்கள் செயின்ட் தாம்ஸ் வழிவந்தவங்கன்னு சொல்றத விட நயன் தாரா,அசின் சிரியன் கிறுஸ்தவர்கள் என்பது பிசின் மாதிரி ஒட்டிக்கிச்சு:) சிரியன் கிறுஸ்தவர்கள் 40 தினம் உண்ணாவிரத்மிருந்து ஜனவரி 7ம் தேதி கிறுஸ்துமஸ் கொண்டாடுபவர்கள் என நினைக்கிறேன்.என் அலுவலக பண கொடுக்கல் வாங்கலை கவனிக்கும் பெண்மணி எகிப்தை சார்ந்த கிறுஸ்தவ பெண்மணி.அவர் நான் சொன்ன மாதிரியே கிறுஸ்மஸ் கொண்டாடுகிறார்.செயின்ட் தாமஸ் நீங்க சொன்னமாதிரி பிரபலம் இல்லாமல்தான் இருக்குது.நான்,என் மனைவி கல்யாண புதுசுல பெயரெல்லாம் கல்வெட்டு செய்துட்டு வந்தோம்.இருக்கான்னு தெரியலை:)
தாமஸ் சர்ச் மாதிரியே கோவாவில் ஒரு சர்ச் இருக்குது.அங்கே இயேசுவின் சீடர்களில் ஒருவரான பீட்டர்ன்னு நினைக்கிறேன்,அவரோட உடலை பதப்படுத்தி காய்ந்த நிலையில் எலும்புக்கூடுகள் தெரிய இன்னும் பாதுகாத்து வருகிறார்கள்.
Incredible India ங்கிற இந்திய சுற்றுலா வாசகம் இந்தியாவின் பல மாநிலங்களுக்குப் பொருந்தும்.பின்னூட்டங்களிலாவது இதனை பதிவு செய்வோம்.

ராஜ நடராஜன் said...

அப்புறம் மம்முக்கா படங்களை விட லால் ஏட்டனின் யதார்த்த நடிப்பு எனக்குப் பிடிக்கும்.தமிழகத்தில் ரஜனிக்குன்னு ஒரு கூட்டம் இருக்குது.இப்ப இந்தியா வரையிலும் அவர் பெயர் வைரல்.ரஜனி பெயரில் allaboutrajni.com தளத்தைக் கிளிக்கினீங்களா?இணைய தொடர்பே இல்லாமல் இயங்கும் இணையதளம்.ரஜனிக்கென்று பிரத்தியேகமாக் உருவாக்கப்பட்டது.கணினியின் அலோகிருதம் பூஜ்யத்தை தொடும்போது செயல்படுகிற வடிவமைப்பில் உருவாக்கியிருக்காங்க.

இவ்வளவெல்லாம் இருந்தும் எனக்கு கமலி,சிவாஜி மாதிரியான முகபாவ நடிப்பு பிடிக்கும்ங்கிறதால லால் ஏட்டன் மை பேவரிட்:)

சகோ.நிரூபன் பதிவுக்கு எதிர்ப்பதிவு மாதிரி பின்னூட்டம் போட்டிட்டீங்களே:)
எப்படி பதிவு போட்டாலும் நாம யோசிப்போமில்லங்கிறீங்க:)

ராஜ நடராஜன் said...

//அங்கே இயேசுவின் சீடர்களில் ஒருவரான பீட்டர்ன்னு நினைக்கிறேன்,அவரோட உடலை பதப்படுத்தி காய்ந்த நிலையில் எலும்புக்கூடுகள் தெரிய இன்னும் பாதுகாத்து வருகிறார்கள்.//

வவ்!உடன் பணிபுரியும் கோவா பெண்ணிடம் செயின்ட் பேசிலிக்கா சர்ச் பற்றிக் கேட்டேன்.செயின்ட் பிரான்சிஸ் உடல் அது.

வவ்வால் said...

ராஜ்,

//வவ்!உடன் பணிபுரியும் கோவா பெண்ணிடம் செயின்ட் பேசிலிக்கா சர்ச் பற்றிக் கேட்டேன்.செயின்ட் பிரான்சிஸ் உடல் அத//

எனக்கு கோவா சர்ச் பேருல குழப்பம் இருந்துச்சு, நீங்க சொல்றவர் தான், ஆனால் இவர் 16 ஆம் நூற்றாண்டு, புனித தாமஸ் போல இல்லை. புனித தாமஸ் ஏசுவின் நேரடி சீடர் 12 சீடர்களில் ஒருவர் டவுட்டிங் தாமஸ் னு பேரு வாங்கியவர். ஏசு நேரடியாக வெளியுலகம் போய் பரப்ப சொல்லி இந்தியா வந்து மயிலாப்பூரில் தங்கி இருக்கார் ,வழி வழக்கம் போல கேரளா தான்.வாட்டிகனுக்கு இணையான சர்ச் சாந்தோம் ஆனால் அவர் காலத்தில் போப் என்பவரே இல்லை, எனவே அவரோட வழி வந்தவர்களும் போப் என்பவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்னும் நிறைய இருக்கு ஒருக்கா படிச்சுட்டு ரவுண்டு கட்டலாம் :-))

கிருத்துவ பிரிவுகள், என்ன, யார் ,யாரின் தலைமைனு சரியா புரிஞ்சுக்கிரது இடியாப்ப சிக்கல் விட மோசம்னு சொல்லலாம். எனக்கு தாமஸ் நல்லா பதிய காரணம் போப் எல்லாம் ஏத்துக்காதவங்க, போப் என்பவர் அகில உலக கிருத்துவ தலைவர் இல்லைனு நிருபிப்பதால்.மார்டின் லூதர் கிங்கின் லுத்ரன் சர்ச், சர்ச் ஆப் இங்லாந்து, லயோலாவின் பிராட்டஸ்டண்ட் எல்லாம் பின்னர் வந்தது. தாமஸ் பிரிவு தான் முன்னோடி என்பதும் ஒரு காரணம்.

தருமி said...

//பத்வா கொடுத்து பெருச்சாளியை பெருமாள் ஆக்கிய பெருமை ஈரானின் கோமினிக்கே சேரும்./

ரொம்ப சரி

//கோவா பெண்ணிடம் செயின்ட் பேசிலிக்கா சர்ச் பற்றிக் கேட்டேன்.செயின்ட் பிரான்சிஸ் உடல் அது.//

பிரான்சிஸ் சேவியர்

வவ்வால் said...

////கோவா பெண்ணிடம் செயின்ட் பேசிலிக்கா சர்ச் பற்றிக் கேட்டேன்.செயின்ட் பிரான்சிஸ் உடல் அது.//

பிரான்சிஸ் சேவியர்//

தருமிய்யா,

பிரான்சிஸ் சேவியர் அப்படினு சொல்லிருந்தா" Francisco de Jasso y Azpilicueta " தான் அவர் பேருனு சொல்லி இருப்பிங்களோ ? :-))

சொல்வதர்கு எத்தனையோ இரூக்கு அதையெல்லாம் சொல்லாம :-))

ராஜ நடராஜன் said...

//மார்டின் லூதர் கிங்கின் லுத்ரன் சர்ச், சர்ச் ஆப் இங்லாந்து, லயோலாவின் பிராட்டஸ்டண்ட் எல்லாம் பின்னர் வந்தது. தாமஸ் பிரிவு தான் முன்னோடி என்பதும் ஒரு காரணம்.//

வவ்!மார்டின் லூதருக்கும்,மார்டின் லூதர் கிங்குக்கும் எனக்கும் குழப்பம் வந்தது.கிங் அமெரிக்க இனப்பிரச்சினைக்கு குரல் கொடுத்தவர்.மார்டின் லூதர் கத்தோலிக்க மதத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி புராட்டஸ்டன்ட் மதம் உருவாக காரணமாக இருந்தவர்.பழைய ஏற்பாட்டின் காலத்தில் உருவ வழிபாடுகள் வழித்தோன்றலாக கத்தோலிக்க மதமும்,உருவ வழிபாடுகளை எதிர்த்து புராட்டஸ்டன்ட்.

ராஜ நடராஜன் said...

//தருமி said...

//பத்வா கொடுத்து பெருச்சாளியை பெருமாள் ஆக்கிய பெருமை ஈரானின் கோமினிக்கே சேரும்./

ரொம்ப சரி

//கோவா பெண்ணிடம் செயின்ட் பேசிலிக்கா சர்ச் பற்றிக் கேட்டேன்.செயின்ட் பிரான்சிஸ் உடல் அது.//

பிரான்சிஸ் சேவியர்//

பத்வா கோமினியை பற்றி அடுத்த பதிவில் கலந்துரையாடுவோம்.கடந்த இரு தினங்களாகவே சல்மான் ருஷ்டி பற்றி சொல்லி விட வேண்டுமென்று நினைத்து இன்று உங்கள் சல்மா/சல்மான் ருஷ்டி பதிவோடு தொடுப்பு கொடுத்து எனது பதிவையும் இணைத்து விட்டேன்.

இப்ப பிரான்சிஸ் சேவியர்கிட்ட போவோம்:)
நான் பழைய கோவா (Old Goa)பிரான்சிஸ் ஆலயத்துக்கு சென்றிருக்கிறேன்.Basílica do Bom Jesus என்றுதான் போர்ச்சுகீசிய மொழியில் எழுதி வைத்துள்ளதை நினவுபடுத்தலுக்காக விக்கியை தேடியதும் தெரிந்தது.

வவ்வால் சொல்வது மாதிரி சென்னை மவுண்ட் தாமஸின் செயின்ட் தாமஸ் மட்டுமே இயேசுவின் நேரடி சீடர் என்பது சரியே.

ராஜ நடராஜன் said...

//சொல்வதர்கு எத்தனையோ இரூக்கு அதையெல்லாம் சொல்லாம :-))//

அதானே!மதிய உணவு பொட்டலம் கட்டிக்கொடுத்தேனே சாப்பிட்டாயா ன்னு மனைவி போன்ல விசாரிக்க இல்ல இன்றைக்கு செக்ரட்டரி பிரியாணியும்,பட்டர் சிக்கனும் ஆர்டர் செஞ்சதை பகிர்ந்துகிட்டோம்ன்னு ஒரு நாள் சொல்லப் போக இன்னொரு நாள் சாப்பாடு கொண்டு போகாமல் மதியம் போன் வந்ததும் ஒண்ணுமே சாப்பிடலைன்னு அப்பாவியாக நான் சொல்ல,ஏன் கொடுக்குறதுக்குத்தான் ஆபிசுல ஆளு இருக்குமே என்ற எதிர் கேள்வி போட சொந்தக்கதை,சோக கதையெல்லாம் சொல்வதற்கு எத்தனையோ இருக்குது:)

வவ்வால் said...

ராஜ்,

//
அதானே!மதிய உணவு பொட்டலம் கட்டிக்கொடுத்தேனே சாப்பிட்டாயா ன்னு மனைவி போன்ல விசாரிக்க இல்ல இன்றைக்கு செக்ரட்டரி பிரியாணியும்,பட்டர் சிக்கனும் ஆர்டர் செஞ்சதை பகிர்ந்துகிட்டோம்ன்னு ஒரு நாள் சொல்லப் போக இன்னொரு நாள் சாப்பாடு கொண்டு போகாமல் மதியம் போன் வந்ததும் ஒண்ணுமே சாப்பிடலைன்னு அப்பாவியாக நான் சொல்ல,ஏன் கொடுக்குறதுக்குத்தான் ஆபிசுல ஆளு இருக்குமே என்ற எதிர் கேள்வி போட சொந்தக்கதை,சோக கதையெல்லாம் சொல்வதற்கு எத்தனையோ இருக்குது:)//

வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டிய ஒரு நொந்தக்கதையா இருக்கே :-))

------------

தருமிய்யா,

தமாசு செய்ததை தமாசாக பார்த்ததுக்கு நன்றி, என்ன இருந்தாலும் சீனியர் சீனியர்ர் தான் :-))

கோவா எல்லாம் போனிங்களா. சூப்பரா இருக்கும்னு கேள்வி.ஒரு தடவைப்போகணும், முந்திரிலா வடித்த ஃபென்னி என்ற வைன் நல்லா இருக்குமாம், அதுக்காகவே போக வேண்டும் :-))

வவ்வால் said...

ராஜ்,
விட்டுப்போனது.
//வவ்!மார்டின் லூதருக்கும்,மார்டின் லூதர் கிங்குக்கும் எனக்கும் குழப்பம் வந்தது.கிங் அமெரிக்க இனப்பிரச்சினைக்கு குரல் கொடுத்தவர்.மார்டின் லூதர் கத்தோலிக்க மதத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டி புராட்டஸ்டன்ட் மதம் உருவாக காரணமாக இருந்தவர்.பழைய ஏற்பாட்டின் காலத்தில் உருவ வழிபாடுகள் வழித்தோன்றலாக கத்தோலிக்க மதமும்,உருவ வழிபாடுகளை எதிர்த்து புராட்டஸ்டன்ட்.//

ஹி..ஹி இப்படித்தான் நினைவில் இருந்து எழுதி மாட்டிக்கிறது. நான் சொல்ல வந்தது லுத்ரன் சர்ச் உருவாக்கிய மார்டின் லுதர் தான் , இவர் பெயரிலும் கிங் இருக்கும்னு ஒரு நினைவு, ஏன் எனில் இவரப்பார்த்து தான் மாட்டின் லுதர் கிங் என்ற அமெரிக்க நிறவெறி எதிர்ப்பாளர் பேர் வச்சுக்கிட்டார்னு எப்போவோ படிச்ச நியாபகம். அதான் கிங் னு போட்டேன். இப்போ பார்த்தேன் மார்டின் லூதர் மட்டும் என்பது நீங்க சொல்வது போல சரியானதே.

எங்க ஏரியவில் ஆர்காட் லுத்ரன் சர்ச் ஒன்னு இருக்கு , அப்போவே ஏன் பேரு இப்படி இருக்குனு அப்போ விளக்கம் தேடியது, அதான் நியாபகம் இருக்கு.