Followers

Sunday, April 10, 2011

ராகுல்!எங்க ஊருக்கும் வந்துட்டுப் போங்க:)

நான் இப்பவெல்லாம் சினிமாவே பார்ப்பதில்லை!வடிவேலு முதல் ராகுல் வரை நீ முந்தி நான் முந்தின்னு சும்மா பொளந்து கட்டுறாங்க:)இப்பத்தானே எங்களுக்கெல்லாம் புரியுது!ராகுல்! நீங்க தமிழகம் வந்தாலும் ஏன் தமிழக முதல்வரை சந்திப்பதில்லையென்று.ஸ்பெக்ட்ரம் கூட உங்களோட உள்வேலைகள்ன்னு வேற பேசிக்கிறாங்க!உண்மையா?

87 வயதாகிவிட்ட அச்சுதானந்தன் மீண்டும் கேரள முதல்வராக வேண்டுமா? என்று மக்கள் யோசிக்க வேண்டும். இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு தந்துள்ள காங்கிரசை ஆதரிக்க வேண்டுமென ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

’சட்டப் பேரவைத் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி வென்றால், அடுத்த தேர்தலின் போது 93 வயதாகும் முதியவர் (வி.எஸ். அச்சுதானந்தன்) உங்கள் முதல்வராக இருப்பார். இந்த நிலைமை உங்களுக்கு வேண்டுமா?

இன்னுமொரு நாள் தேர்தல்ப் பிரச்சாரத்துக்கு நேரமிருக்கிறது.உங்களுக்குப் பிடிச்சிருந்தா கேரளாவிலிருந்து ஒரு டாக்சி புடிச்சிகிட்டு நீங்க கோவை எக்ஸ்பிரஸ்,சேரன் ரயிலில் கூட சென்னை வரலாம்.இல்லாட்டி விமானமென்றாலும் சரி! கலாநிதி மாறன் புதுசா ஸ்பைஸ்ஜெட் திறந்திருக்காரு.டெல்லி போறதுக்கு முன்னாடி ஒரு எட்டு தமிழகமும் வந்து சொல்லிட்டுப் போங்க:)

29 comments:

ஊரான் said...

"உங்களுக்கு நாங்க புள்ளதான் தரல மத்த எல்லாம் கொடுத்துட்டோம்" -பாண்டிச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் நடுவண் அமைச்சர் நாராயணசாமி பேச்சு.

இச்செய்தி என்னை எட்டுவதற்கு முன் எனது இடுகை ஒன்றில் அரசியல்வாதிகள் இவ்வாறு வாக்குறுதி கொடுப்பதாக எழுதி அது பெண்களைக் கேவலப்படுத்துவதாக இருக்கும் என்பதால் நீக்கி விட்டேன்.

இலவசங்களை நோக்கி மக்கள் ஓடும் போது அது அங்கேதான் போய் நிற்கும் என நான் நினைத்தது உண்மையாகிவிட்டது.

மேலும் படிக்க...
ஒரு தரம்... ரெண்டு தரம்...!
http://hooraan.blogspot.com/2011/04/blog-post_9929.html

Thekkikattan|தெகா said...

கேரள நாட்டிற்கு சென்றிருக்கிறார், அண்டைய நாடான தமிழ் நாட்டிற்கு வரவில்லையே!

இது என்ன அமெரிக்கா அதிபர் இந்தியாவிற்கு மட்டும் போனார், பாகிக்கு போவலையேங்கிற மாதிரி ஆகிப்போச்சு. ஆமா, ராவூலு ஏன் தமிழகத்தை புறக்கணிக்கிது. வந்தா ரொம்ப சிக்கலான கேள்வியா கேக்குறாய்ங்களோ ;-) ...

ராஜ நடராஜன் said...

//"உங்களுக்கு நாங்க புள்ளதான் தரல மத்த எல்லாம் கொடுத்துட்டோம்" -பாண்டிச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் நடுவண் அமைச்சர் நாராயணசாமி பேச்சு.//

வாங்க!ஊரான்!நேற்று தொலைக்காட்சியில் சில பெண்கள் நரி நாராயணசாமிக்கு(அப்படித்தான் பாண்டிச்சேரியில் இவரைக் கூப்பிடுவதாகக் கேள்விப்பட்டேன்)எதிராக கோஷம் போட்டார்கள்.

இந்தாளுக்கு என்ன கொழுப்பு இருந்தா இந்த மாதிரி சொல்வார்?

வருதுடீ ஆப்பு!

ராஜ நடராஜன் said...

//கேரள நாட்டிற்கு சென்றிருக்கிறார், அண்டைய நாடான தமிழ் நாட்டிற்கு வரவில்லையே!

இது என்ன அமெரிக்கா அதிபர் இந்தியாவிற்கு மட்டும் போனார், பாகிக்கு போவலையேங்கிற மாதிரி ஆகிப்போச்சு. ஆமா, ராவூலு ஏன் தமிழகத்தை புறக்கணிக்கிது. வந்தா ரொம்ப சிக்கலான கேள்வியா கேக்குறாய்ங்களோ ;-) ...//

தெகா!சோனியா,மன்மோகன்,ராகுல் மூன்று பேரும் தமிழகம் விசிட் அடிக்கிறாங்க.சேர,சோழ,பாண்டியர்கள் மாதிரி இவர்கள்.ஒருத்தர் எல்லையை இன்னொருத்தர் தாண்டுவதில்லை.

சோனியாவுக்கு சென்னை,மன்மோகனுக்கு கோவை,ராகுலுக்கு கரூர்...இப்படி பட்டா போட்டுகிட்டாங்க.

போன தடவை, ரஜனிக் குற்றமற்றவரா இருந்தா காங்கிரஸில் சேரலாம் அறிக்கை விட்ட புத்திசாலி ராகுல்:)

இவருக்கும்,தாத்தாவுக்கும் ஏகப்பொருத்தம்ங்கிறதை அச்சுதானந்தானை வச்சு சொல்லியிருக்காரு:)

வானம்பாடிகள் said...

அய்யாங் மம்மி. இந்தண்ணன் என்ன வம்புல இழுத்துவிட பாக்குறாரு. நான் அந்ததாத்தாவ சொன்னா நம்ம தாத்தாவையும் சொல்ல சொல்றாரு. இப்படி ஒரு அடிமை நமக்கு சிக்குமான்னு யோசிக்க வேணாம்.:((

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

கேளுங்க.. நல்லா கேளுங்க..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

இவனுங்க என்ன கேட்டாலும் திருந்தப்போவதில்லை....

நிரூபன் said...

நான் இப்பவெல்லாம் சினிமாவே பார்ப்பதில்லை!வடிவேலு முதல் ராகுல் வரை நீ முந்தி நான் முந்தின்னு சும்மா பொளந்து கட்டுறாங்க:)//

சகோ,.....யதார்த்ததை அப்படியே சொல்லிட்டீங்களே

ராஜ நடராஜன் said...

//அய்யாங் மம்மி. இந்தண்ணன் என்ன வம்புல இழுத்துவிட பாக்குறாரு. நான் அந்ததாத்தாவ சொன்னா நம்ம தாத்தாவையும் சொல்ல சொல்றாரு. இப்படி ஒரு அடிமை நமக்கு சிக்குமான்னு யோசிக்க வேணாம்.:((//

அதுவும் சரிதான்!இப்படி ஒரு அடிமை இந்தியா முழுதும் சுத்தினாலும் கிடைக்காதுங்கிறதால் தானே 60-63 இழுபறியிலும் கூட்டணி:)

நிரூபன் said...

சட்டப் பேரவைத் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி வென்றால், அடுத்த தேர்தலின் போது 93 வயதாகும் முதியவர் (வி.எஸ். அச்சுதானந்தன்) உங்கள் முதல்வராக இருப்பார். இந்த நிலைமை உங்களுக்கு வேண்டுமா?/

தமிழகத்திலும் 83வயதுகளைக் கடந்த ஒருவரை முதல்வராக்கினால் தமிழக எதிர்காலம் நிலைக்குமா?
இந்த நிலைமை வேண்டாம் என்றால் வாக்களிக்காது, எதிர்க் கட்சியை வெல்லச் செய்ய வேண்டும், இதனை மக்கள் உணர்ந்து முடிவெடுப்பார்களா என்பதனைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ராஜ நடராஜன் said...

//இவனுங்க என்ன கேட்டாலும் திருந்தப்போவதில்லை....//

கருன்!இவ்வளவு சொல்லியும் திருந்த மாட்டாங்களா?அப்ப இனி மேல் கும்மியடிக்க வேண்டியதுதான்:)

ராஜ நடராஜன் said...

//நான் இப்பவெல்லாம் சினிமாவே பார்ப்பதில்லை!வடிவேலு முதல் ராகுல் வரை நீ முந்தி நான் முந்தின்னு சும்மா பொளந்து கட்டுறாங்க:)//

சகோ,.....யதார்த்ததை அப்படியே சொல்லிட்டீங்களே//

யதார்த்தமான காமெடியன்கள்:)

Raja=Theking said...

Congress will loose all 63 seats. . .ezha tamilan paavam summa vidaathu.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:)

ஜோதிஜி said...

இப்படி ஒரு தங்களுக்கு தாங்களே ஆப்பு சொருகிக் கொண்ட அடிமை கூட்டம் நமக்கு சிக்குமான்னு யோசிக்க வேணாமா?

கேரளாவில் ராகுல் பேசியது.

அச்சுவுக்கு ஓட்டு போட்டால் 87 + 5 = 93 கிழமாம்.

ஆனா இங்கே?

ஹாஹா

அப்பா போல இவரு வெள்ளந்தி இல்லங்கோ?

நதிநீர் இணைப்பு ஒரு பேரழிவு. இவர் கண்டு பிடித்த ஆச்சரியம்.

ராஜ நடராஜன் said...

//தமிழகத்திலும் 83வயதுகளைக் கடந்த ஒருவரை முதல்வராக்கினால் தமிழக எதிர்காலம் நிலைக்குமா?
இந்த நிலைமை வேண்டாம் என்றால் வாக்களிக்காது, எதிர்க் கட்சியை வெல்லச் செய்ய வேண்டும், இதனை மக்கள் உணர்ந்து முடிவெடுப்பார்களா என்பதனைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.//

சகோ நிரூபன்!மக்கள் உணர்ந்து முடிவெடுப்பார்களா என்று தெரியவில்லை.ஆனால் வடிவேலு சிரிப்பை மட்டும் ரசிக்கிறார்கள் என்பதும் சினிமாக்காரனே பிடிக்காது என்று சொன்ன ராமதாஸ் கூட வடிவேல வச்சுத்தான் ஓட்டு சேர்க்கும் நிலையில் இருக்கிறார்:)

63 மாதிரி 31ம் ஆனா தமிழ்நாடு அரசியல் வருங்காலத்தில் உருப்படும்.
தொங்கு பார்லிமெண்ட் வரும்ன்னு சமீபத்து கணிப்பு உண்மையானால் பணம் விளையாடுவதற்கும் சந்தர்ப்பங்கள் இருக்கிறது.

ராஜ நடராஜன் said...

//Congress will loose all 63 seats. . .ezha tamilan paavam summa vidaathu.//

Raja! I expect this should happen, the ultimate election trophy for Tamilnadu.

ராஜ நடராஜன் said...

முத்துலட்சுமி மேடம்! சிரிக்கிறதே சிரிக்கிறீங்க வாய் விட்டுச் சிரிங்க.
சிரிப்பான் மட்டும் போடறது களுக்ன்னு எழுதுவாங்களே அந்த மாதிரி இருக்குது:)

வருகைக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

//இப்படி ஒரு தங்களுக்கு தாங்களே ஆப்பு சொருகிக் கொண்ட அடிமை கூட்டம் நமக்கு சிக்குமான்னு யோசிக்க வேணாமா?

கேரளாவில் ராகுல் பேசியது.

அச்சுவுக்கு ஓட்டு போட்டால் 87 + 5 = 93 கிழமாம்.

ஆனா இங்கே?

ஹாஹா

அப்பா போல இவரு வெள்ளந்தி இல்லங்கோ?

நதிநீர் இணைப்பு ஒரு பேரழிவு. இவர் கண்டு பிடித்த ஆச்சரியம்.//

தனக்குத் தானே ஆப்பு வச்சிகிட்ட அடிமை கூட்டமா:)

ராகுல் வெள்ளந்தியா?வில்லங்கம் புடிச்ச ஆளா?

நதிநீர் இணைப்பு ஐரோப்பாவில் செய்திருக்கிறார்கள்.ஒரே நதி பல நாடுகளினூடே பாய்ந்து செல்கிறது.தமிழகம் டெல்டா பகுதிகளையும் விவசாயத்தையும் நம்பிய பூமி.நதிநீர் இணைப்பு மற்ற மாநிலங்களுக்குத் தேவையோ இல்லையோ தமிழகத்திற்கு கட்டாயம் தேவை.

பாரத்... பாரதி... said...

//.ஸ்பெக்ட்ரம் கூட உங்களோட உள்வேலைகள்ன்னு வேற பேசிக்கிறாங்க!உண்மையா?//

ஆஹா... இது வேறயா?

பாரத்... பாரதி... said...

//கேரள நாட்டிற்கு சென்றிருக்கிறார், அண்டைய நாடான தமிழ் நாட்டிற்கு வரவில்லையே!
//


கரூர் வந்து கத்திவிட்டு போனதாக கேள்விப்பட்டேனே?//

பாரத்... பாரதி... said...

//வடிவேலு முதல் ராகுல் வரை //

Good... ரெண்டு பேரையும் ஒரே லிஸ்டில் தான் வைத்திருக்கிறீர்களா?
ஜூப்பருங்கோ...

ராஜ நடராஜன் said...

////.ஸ்பெக்ட்ரம் கூட உங்களோட உள்வேலைகள்ன்னு வேற பேசிக்கிறாங்க!உண்மையா?//

ஆஹா... இது வேறயா?//

பாரதி!கருணாநிதியுடன் ராகுல் ஒரு மார்க்கமாத்தான் இருக்கிறார் என்பதில் சந்தேகமேயில்லை.இது வேறயா கேள்விக்குறியல்ல ஆச்சரியக்குறி:)

கே.ஆர்.பி.செந்தில் said...

ராகுல் போன்ற கத்துகுட்டிகளை என்ன சொல்வது..

அவர் மண்ணுவையும் சேத்துதான் சொல்லிருப்பார்..

ராஜ நடராஜன் said...

//கரூர் வந்து கத்திவிட்டு போனதாக கேள்விப்பட்டேனே?//

கரூர் வந்தார்.பேசின சத்தமே வரலை.அப்புறம் எங்க கத்துறது:)

ராஜ நடராஜன் said...

////வடிவேலு முதல் ராகுல் வரை //

Good... ரெண்டு பேரையும் ஒரே லிஸ்டில் தான் வைத்திருக்கிறீர்களா?
ஜூப்பருங்கோ...////

பாரதி!ஒரு தலைப்பு எடுத்துக் கொடுத்திருக்கீங்க.இந்த தேர்தல் கூட வடிவேலில் துவங்கி ராகுலில் முடிகிறது:)

ராஜ நடராஜன் said...

//ராகுல் போன்ற கத்துகுட்டிகளை என்ன சொல்வது..

அவர் மண்ணுவையும் சேத்துதான் சொல்லிருப்பார்..//

அண்ணே!அவர் கத்தாதகுட்டி:)
மண்ணுவையும் சேத்துதான் சொல்லியிருப்பாரோ!இதை நான் யோசிக்கவேயில்லையே!ராகுல் இப்ப பிரதமர் பதவிக்கு ட்ரெய்னிங் பீரியடில்தான் இருக்கார்ன்னு காங்கிரஸ்காரங்க எல்லோருக்கும்தான் தெரியுமே.

தவறு said...

இப்பதான் நாங்க இந்தியாவ வெச்சு அரசியல் கத்துக்கிறோம் அதுக்குள்ள நீங்க வேற...ராஜந்ட...

ராஜ நடராஜன் said...

//இப்பதான் நாங்க இந்தியாவ வெச்சு அரசியல் கத்துக்கிறோம் அதுக்குள்ள நீங்க வேற...ராஜந்ட...//

ராகுல் அரசியல் கற்றுக்கொள்ள வேண்டிய இடம் தமிழகம்தான்.இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடைக்காத அடிமைகளும்,தொண்டர்களும்:)