Followers

Tuesday, April 5, 2011

இது யார் வீட்டுக் காசு?

போன பதிவு போட்டதுல பதிவர் ”மங்கம்மா ஆனந்தி” நான் மதுரைக்காரப் பொண்ணுன்னு சீறிட்டாங்க:)அடுத்து எந்த ஊர்ல என்ன நடக்குதுன்னு பார்த்தா இந்த தடவை திருச்சிக்காரங்க மாட்டிகிட்டாங்க:)

செவ்வாய்க்கிழமை...அட இன்றைக்குத்தானா?ஒரு தனியார் வாகனத்தில் 5.11கோடி பணத்தை மூட்டை கட்டிகிட்டு ஒரு தனியார் பஸ் திருச்சி மேற்கு தொகுதி பொன்நகர்ல நின்னுகிட்டுருந்துச்சாம்.வாகனங்களை,ஆட்களையும் தானே புடிக்கிறாங்கன்னு புத்திசாலி யாரோ ஐடியா கொடுக்க பஸ்ஸுக்கு மேலே சூட்கேஸ்ல கட்டி வச்சிட்டாங்களாம்.நல்ல புத்தி வந்த மகராசன்/மகராசி யாரோ தகவல் கொடுத்தாங்களோ வயிறு எரிஞ்சு தகவல் கொடுத்தாங்களோ தேர்தல் அதிகாரிகளை திருடனைப் புடிக்கும் காலம் போய் இப்ப பணத்தை கப்ன்னு புடிச்சிட்டாங்க.


இதுவரைக்கும் புடிச்ச மீன்ல இதுதான் பெருசாம்.இதுக்கும்கூட வியாபாரம்,கல்யாணம்,காதுகுத்துன்னு செலவுக்கு வச்சிருந்த பொதுமக்கள் பணத்தை புடிச்சு தேர்தல் கமிசன் எவ்வளவு கஷ்டப்படுத்துறாங்க பாருங்கன்னு அறிக்கை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

காலை 2.00 மணிக்கு இந்தப் பணத்தை கையும் களவுமாக பிடித்தவங்க இன்னுமொரு வீராங்கனை வருமானத்துறை அதிகாரி எஸ்.சங்கீதா மற்றும் அவரது அலுவல் சார்ந்த குழுவினர்.உமாசங்கர்,சகாயம்,சங்கீதா என நாட்டின் நலன் காக்கும் அதிகாரிகளை உற்சாகப்படுத்துவதும்,மக்கள் முன்னிலையில் பிரபலப்படுத்துவதுமே ஏனைய அரசு அதிகாரிகளும் நேர்மையான வழியில் செல்வதற்கு வழிவகுக்கும்.

ஒரு கோடியே எழுபத்து ஆறு லட்சத்துக்கு எத்தனை சைபர்ன்னு நாம நிறைய பேர் முழுச்சிகிட்டுருக்கிறதால சின்னதா உங்களுக்கு ஒரு கணக்கு.

5.11கோடியை 500ரூபாய்,1000 ரூபாய் தாளாக 5 சூட்கேஸ்ல வச்சா ஒரு சூட்கேஸ்ல எத்தனை ரூபாய் இருந்திருக்கும்:)

பணம் வருமான வரித்துறைக்கு சேர்க்கப்பட்டு விட்டது.ஆனால் காசுக்கு சொந்தக்காரன் யாருன்னு கண்டுபிடிக்க முடியவில்லையாம். கண்டுபிடிக்கவில்லையாம்ஆனால் பஸ்ஸோட சொந்தக்காரர் பெரம்பலூரைச் சார்ந்தவராம்.எங்கப்பன் குதிருக்குள் இல்லைன்னோ, கடமை தவறாத மந்திரியென்றோ திருச்சி மேற்கில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளரும்,கே.என்.நேருவும் கைப்பற்றப் பட்ட பணம் தங்கள் சொந்தக்காரர்களுடையது அல்ல என்று அறிக்கை உடனே விட்டுட்டாங்க.

சரி திருடன் திருட முயற்சிப்பதுதான் அவனது தொழில்.திருடங்கிட்டேயிருந்து நாம் எப்படி தப்பிப்பது என இப்ப பார்க்கலாம்.அதனால லியோனி மொக்கை கொஞ்சம் சொல்லிட்டு தொடரலாம்.திண்டுக்கல் லியோனி பட்டிமன்றங்கள் பிரபலமான துவக்க காலத்தில் நிறைய இடங்களில் பேசுவதால் எங்கே எந்த ஜோக் சொன்னோமென்று தெரியாமலே  மதுரையில் சொல்றதை திருச்சியிலும்,திருச்சில சொன்னதை வெளிநாடு போனாலும் சொல்லுவதுண்டு.இப்ப தி.மு.க கூட்டத்துக்கும் போகிறார்ன்னு கேள்வி.அதே பார்முலா அரசியல் பேச்சுல வந்தாலும் வரலாம்.அது அவரோட பாடு.

திண்டுக்கல் லியோனி மாதிரித்தான் எனக்கும் சிலசமயம் பின்னூட்ட குழப்பங்கள் வருவதுண்டு.அதனால் இதனை எங்கேயாவது சொன்னேனா நினைவில்லாமலே மறுபடியும் சொல்கிறேன்.

அன்றாட செலவுகளுக்கும்,அவசர தேவைக்கும் கையில் ஓரளவு தொகையை வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமான ஒன்று.அதற்கும் அதிகமாக கையில் பணம் வங்கி கணக்கில்லாமல் புழங்கினால் அது வரி ஏய்ப்பு,கறுப்பு பணம்,தவறான வழியில் சம்பாதித்த பணமாக இருக்கவே வாய்ப்புண்டு.எந்த பணமாற்றமும் வங்கி மூலமாகவே என்ற நிலை வரவேண்டும்.மத்திய ரிசர்வ் வங்கியுடன்,ஏனைய வங்கிகளை இணைப்பதும்,வங்கிகளுக்கும் அப்பால் எந்த வியாபாரம் சார்ந்த கொடுக்கல்,வாங்கல் பணபரிவர்த்தனைகள் ATM கார்டின் உதவியுடன Swap செய்யும் இயந்திரங்கள் மூலமாகவே நிகழும் நடைமுறைகள் கள்ளப்பணத்தை தவிர்க்க உதவும்.

கணினி முறை திருடர்கள்,கிரெடிட் கார்டு பிக்பாக்கெட் பக்கவிளைவுகள் நிகழ்ந்தாலும் சைபர் க்ரைமில் அவர்களுக்கு சங்கு ஊதி சரி செய்துவிட இயலும்.வங்கி கணக்கில் பணம் வரவு,செலவு ஆன அந்த ஒரு நொடியிலேயே உங்கள் கைபேசிக்கு தகவல் வந்து விடுவது மாதிரியான வசதிகள் கூட இப்பொழுது நடைமுறைக்கு வந்து விட்டது.

2020ல் இந்தியா வல்லரசாகி விடுமாம்!அப்துல் கலாமின் கனவு.அவரோட கனவுல நான் சொன்ன பணமாற்றமும் வந்துச்சான்னு தெரியலை.  

களவாணிப் படம் உதவி மற்றும் தகவல்: The Hindu: ராஜபக்சேவுக்கு அல்லக்கை வேலை பார்க்காம நாட்டு நலன் பற்றி சொன்னால் நாங்களும் படிக்க வருவோம் Mr.Ram!

மற்ற படங்கள்: கூகிள் அக்காவா?அண்ணனா:)

26 comments:

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், சுடச் சுட அதிரடித் தகவல்களுடன் வந்திருக்கிறீர்கள்.

நிரூபன் said...

செவ்வாய்க்கிழமை...அட இன்றைக்குத்தானா?ஒரு தனியார் வாகனத்தில் 5.11கோடி பணத்தை மூட்டை கட்டிகிட்டு ஒரு தனியார் பஸ் திருச்சி மேற்கு தொகுதி பொன்நகர்ல நின்னுகிட்டுருந்துச்சாம்//

இம்புட்டுக் கோடி எமவுண்டையும் கடத்துறவனின்ரை சமயோசிதத்தை, மூளையை, கிரிமினல் மைண்டை பாராட்டனும் சகோ. ஏன்னா மத்த வாகனங்களிலை கடத்தினால் சந்தேகம் வரும் என்று தனியார் பஸ்ஸில் அல்லவா மறைத்து வைத்திருக்கிறான்.

நிரூபன் said...

5.11கோடியை 500ரூபாய்,1000 ரூபாய் தாளாக 5 சூட்கேஸ்ல வச்சா ஒரு சூட்கேஸ்ல எத்தனை ரூபாய் இருந்திருக்கும்:)//

ஆஹா... நம்மளுக்கேவா, ஒரு சூட்கேஸிலை ஒரு கோடியே இரண்டு இலட்சத்து இருபதாயிரம் ரூபா இருக்கும், சரியா பாஸ்....

நிரூபன் said...

5.11கோடியை 500ரூபாய்,1000 ரூபாய் தாளாக 5 சூட்கேஸ்ல வச்சா ஒரு சூட்கேஸ்ல எத்தனை ரூபாய் இருந்திருக்கும்:)//

ஆஹா... நம்மளுக்கேவா, ஒரு சூட்கேஸிலை ஒரு கோடியே இரண்டு இலட்சத்து இருபதாயிரம் ரூபா இருக்கும், சரியா பாஸ்....

ராஜ நடராஜன் said...

//வணக்கம் சகோதரம், சுடச் சுட அதிரடித் தகவல்களுடன் வந்திருக்கிறீர்கள்.//

வணக்கம் சகோதரம்!நம்ம கடைல கூட சூடா சாப்பிட வருவது மகிழ்ச்சிதான் போங்க:)

நிரூபன் said...

கணினி முறை திருடர்கள்,கிரெடிட் கார்டு பிக்பாக்கெட் பக்கவிளைவுகள் நிகழ்ந்தாலும் சைபர் க்ரைமில் அவர்களுக்கு சங்கு ஊதி சரி செய்துவிட இயலும்.வங்கி கணக்கில் பணம் வரவு,செலவு ஆன அந்த ஒரு நொடியிலேயே உங்கள் கைபேசிக்கு தகவல் வந்து விடுவது மாதிரியான வசதிகள் கூட இப்பொழுது நடைமுறைக்கு வந்து விட்டது//

அது சரி சகோ, இம்புட்டுத் தொகையும் யாரோடை என்று கண்டுபிடிச்சாங்களா?

ராஜ நடராஜன் said...

//இம்புட்டுக் கோடி எமவுண்டையும் கடத்துறவனின்ரை சமயோசிதத்தை, மூளையை, கிரிமினல் மைண்டை பாராட்டனும் சகோ. ஏன்னா மத்த வாகனங்களிலை கடத்தினால் சந்தேகம் வரும் என்று தனியார் பஸ்ஸில் அல்லவா மறைத்து வைத்திருக்கிறான்.//

கிரிமினல் மூளைன்னா,எத்தனை வருட சர்வீஸ்...ஆம்புலன்ஸ்,ஜீப்ல கடத்துற களவாணிகளுக்கு பஸ் எந்த மூலை?

ராஜ நடராஜன் said...

//5.11கோடியை 500ரூபாய்,1000 ரூபாய் தாளாக 5 சூட்கேஸ்ல வச்சா ஒரு சூட்கேஸ்ல எத்தனை ரூபாய் இருந்திருக்கும்:)//

ஆஹா... நம்மளுக்கேவா, ஒரு சூட்கேஸிலை ஒரு கோடியே இரண்டு இலட்சத்து இருபதாயிரம் ரூபா இருக்கும், சரியா பாஸ்....//

கணக்குல சமத்துக்குட்டி போல தெரியுதே:)

ராஜ நடராஜன் said...

//அது சரி சகோ, இம்புட்டுத் தொகையும் யாரோடை என்று கண்டுபிடிச்சாங்களா?//

பஸ் சொந்தக்காரர் பெரம்பலூர்.ஆ.ராசாவுக்கு கொடுக்கல் வாங்கல் பெரம்பலூர்.

இது தவிர இனிமேல்தான் புலன் விசாரணை கண்டுபுடிக்கணும்.

ராஜ நடராஜன் said...

கடைப்பக்கம் இனி யாராவது வந்தா வேணும்ங்கிறத சொல்லிட்டுப் போங்க.

நான் வயிற்றுக்கு கொட்டிகிட்டு வாரேன்!

வானம்பாடிகள் said...

செய்வானுவோ. ஒரு பக்கம் இம்புட்டு காச தகவல் குடுத்து புடிக்க வச்சி எண்ணி முடிக்கறதுக்குள்ள மத்த பக்கமா இதுமாதிரி எத்தனை கோடி போச்சோ?

Chitra said...

அந்த பணம் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைத்ததா? சிவாஜி படத்தில் ரஜினி பேசுகிற மாதிரி வந்த ஒரு வசனம் தான் நினைவுக்கு வருகிறது. "இந்தியாவை போய் ஏழை நாடு என்று சொல்றாங்களே.... இல்லை. ஏழை ஆக்கப்பட்ட நாடு." :-(

ராஜ நடராஜன் said...

//செய்வானுவோ. ஒரு பக்கம் இம்புட்டு காச தகவல் குடுத்து புடிக்க வச்சி எண்ணி முடிக்கறதுக்குள்ள மத்த பக்கமா இதுமாதிரி எத்தனை கோடி போச்சோ?//

:) நீங்களே ஐடியா சொல்லிக்கொடுத்திருவீங்க போல இருக்குதே!

ராஜ நடராஜன் said...

//அந்த பணம் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைத்ததா? சிவாஜி படத்தில் ரஜினி பேசுகிற மாதிரி வந்த ஒரு வசனம் தான் நினைவுக்கு வருகிறது. "இந்தியாவை போய் ஏழை நாடு என்று சொல்றாங்களே.... இல்லை. ஏழை ஆக்கப்பட்ட நாடு." :-(//

பஸ் மட்டும்தான் கிடைச்சிருக்கு.திருடனுங்க ஓடாம இருந்திருந்தா பஸ்ஸும் ஓடியிருந்திருக்கும்:)

களவாணிப்பணம் படத்தை க்ளிக் செய்து பாருங்க!இந்தப் பணத்தை பார்க்கும் போதே ரஜனிகாந்த் வசனம் நினைவுக்கு வருதே.

மொத்த ஸ்பெக்டரம் பணம்,ஸ்விஸ் வங்கிப் பணத்தையெல்லாம் கொண்டு வந்து ஒரு மைதானத்துல கொட்டினா யாராவது இந்தியா ஏழை நாடுன்னா நம்புவாங்களா?

இந்த மாதிரி பணக்கட்டுக்களை தென் அமெரிக்கா நாடுகளில் அபின் உற்பத்தி செய்து பணம் சம்பாதிச்சதா ஒரு மாபியா கிட்டத்தான் முன்னாடி ஒரு முறை பார்த்தேன்.

நம்ம ஆளுகளும் மாபியா மாதிரிதானே ஆட்சி முறை செய்றாங்க:(

நீங்க என்ன செய்றீங்கன்னா அடுத்த முறை அந்தப் பாம்பு பண்ணை விழாவுக்கு போனீங்கன்னா மொத்த விலைக்கு அத்தனை பாம்புகளும் தருவாங்களான்னு கேட்டுச் சொல்லுங்க...இந்தப் பயலுக சரிப்பட்டு வரமாட்டானுக:)

Suresh Kumar said...

இந்த பண வேட்டைகள் தேர்தல் முடிந்த பின்னரும் தொடர வேண்டும் . அப்போது தான் கறுப்பு பண புளக்கங்கள் குறையும் .

ராஜ நடராஜன் said...

//இந்த பண வேட்டைகள் தேர்தல் முடிந்த பின்னரும் தொடர வேண்டும் . அப்போது தான் கறுப்பு பண புளக்கங்கள் குறையும் .//

ஆசை,தோசை,அப்பளம்,வடை:)
அதுக்கு மாற்றுச் சிந்தனையுள்ள மாற்றுக்கட்சிகள் வேறு ஏதாவது தமிழகத்தை ஆள வேண்டும்.

இரு திராவிட கழகங்களின் ஆட்சியில் அது சாத்தியமில்லை.

சி.பி.செந்தில்குமார் said...

>>சரி திருடன் திருட முயற்சிப்பதுதான் அவனது தொழில்.திருடங்கிட்டேயிருந்து நாம் எப்படி தப்பிப்பது என இப்ப பார்க்கலாம்

ஹா ஹா செம பஞ்ச்

கே.ஆர்.பி.செந்தில் said...

அட போங்க மக்கா!!!!

ராஜ நடராஜன் said...

//>>சரி திருடன் திருட முயற்சிப்பதுதான் அவனது தொழில்.திருடங்கிட்டேயிருந்து நாம் எப்படி தப்பிப்பது என இப்ப பார்க்கலாம்

ஹா ஹா செம பஞ்ச்//

வாங்க சிபி!உங்களுக்கு அடுத்த கடைல வடை தின்னக் கூட நேரமிருக்குதா:)

ராஜ நடராஜன் said...

//அட போங்க மக்கா!!!!//

எவ்வளவு அடிச்சும் திருந்த மாட்டீங்கறாங்களேன்னு வெறுத்திட்டீங்களாண்ணே?

எங்க ஊர்ப்பக்கம் பூசணமுன்னு சொல்லுவாங்க...அந்த மாதிரி பூசணம் புடிச்சதுகளை கொஞ்சம் கழுவி எடுக்க நாட்கள் ஆகத்தான் செய்யும்.

நீங்க சொல்றது எல்லாருக்கும் நல்லாவே கேட்குது.சும்மா தூங்குற மாதிரி நடிச்சிகிட்டிருக்காங்க.

அதனால போங்க மக்கா சொல்லாம வாங்க மக்கா சொல்லுங்க:)

ஜோதிஜி said...

என்ன நடாஜி மங்கம்மா என்றே பெயரே வைத்து விட்டீர்களா? நல்ல வேளை அவங்க கோவித்துக் கொள்ளவில்லை. மனதில் பட்டதை எழுத சில தளங்கள் இங்கு இருப்பதால் அப்போது தோன்றிய அந்த வார்த்தையை தவிர ஆனந்திக்கு சிறப்பு வேறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை. கடைசி வரைக்கும் களத்தில் சலிக்காம நின்று விளையாடிய அவருக்கு என் வந்தனம்.

அப்புறம் இந்த சாதாரண ஐந்து கோடி மேட்டருக்ப்பின்னாலும் அந்த இளவயது ஆர்டிஓ பெண்மணியைத்தான் பாராட்ட வேண்டும். இளம் கன்று பயமாறியது என்பது போல.

இப்போது தான் வேலைக்கு வந்திருப்பார் போல. அந்த நடுஇரவில் வந்த செய்தியை அலட்சியப்படுத்தாமல் களம் இறங்கிய அவரின் சேவை நாட்டுக்குத் தேவை.

திருச்சி மாவட்டத்தின் மாமன்னர்கள் கேஎன் நேரு, அவர் தம்பி ராமஜெயத்தின் அத்தனை திருவிளையாடல்களை ஒரு வேளை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் நமக்கு நிறைய செய்திகள் காத்திருக்கு. அவரும் சாகப்போற இநத் கடைசி காலத்தில் எம்ஜிஆர் போல கொஞ்சம் நல்லவிதமாக ஆளவேண்டும் என்று கொஞ்சூண்டு மனதில் இருக்கும்பட்சத்தில் நிறைய அதிரடிகள் இந்த மன்னர்களுக்கு காத்திருக்கிறது.

பார்க்கலாம்.

ஜோதிஜி said...

அப்புறம் உங்க தகவலுக்காக திருச்சி பகுதியின் தேர்தல் பொறுப்பில் இருக்கும் இந்த இளவயது ஆர்டிஓ பெயர் சங்கீதா. நிச்சயம் கலைஞர் ஆட்சி திரும்ப வரும்பட்சத்தில் மதுரை சாகாயத்திற்கு எப்படி சாவு மணி உண்டோ அதே போல் இவருக்கும் உண்டு.

கலெக்டர் இஞ்சினியர்,டாக்டர் ஆக வேண்டும் என்று நம் பயபுள்ளைகளுக்கு சோத்தோடு ஊட்டி வளர்க்கும் பெற்றோர்கள் யூபிஎஸ்சி தேர்தல்பற்றி ஒரு பெற்றோர்களும் புரியவைப்பதில்லை. சங்கீதா போன்ற இளம் ரத்தம் நம் தமிழ்நாட்டுக்குத் தேவை.

ராஜ நடராஜன் said...

//என்ன நடாஜி மங்கம்மா என்றே பெயரே வைத்து விட்டீர்களா? நல்ல வேளை அவங்க கோவித்துக் கொள்ளவில்லை. மனதில் பட்டதை எழுத சில தளங்கள் இங்கு இருப்பதால் அப்போது தோன்றிய அந்த வார்த்தையை தவிர ஆனந்திக்கு சிறப்பு வேறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை. கடைசி வரைக்கும் களத்தில் சலிக்காம நின்று விளையாடிய அவருக்கு என் வந்தனம்.//

ஆனந்தியின் துணிவுக்கு மங்கம்மா பெயர் சரியானதே.அவருக்கு பட்டம் கௌரவமே.அதனால் ஹ..ஹ..ஹ மட்டும் சொல்லி விட்டார்:)

ராஜ நடராஜன் said...

//அப்புறம் இந்த சாதாரண ஐந்து கோடி மேட்டருக்ப்பின்னாலும் அந்த இளவயது ஆர்டிஓ பெண்மணியைத்தான் பாராட்ட வேண்டும். இளம் கன்று பயமாறியது என்பது போல.

இப்போது தான் வேலைக்கு வந்திருப்பார் போல. அந்த நடுஇரவில் வந்த செய்தியை அலட்சியப்படுத்தாமல் களம் இறங்கிய அவரின் சேவை நாட்டுக்குத் தேவை.//

ஜோதிஜி!வேலைக்கு வந்து 5 வருடம் வரை பெரும்பாலோர் நீதி,நேர்மையெல்லாம் நினைத்து பணிசெய்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.அப்புறம் கூட பணி செய்யும் உடன் பிறப்புக்கள் எப்படி களவாடுவது,ஊழல் செய்வது,லஞ்சம் வாங்குவது எனக் கற்றுக் கொடுத்து விடுவார்கள் போல் தெரிகிறது.நல்லவர்களை கெடுத்தால்தான் கெட்டவர்களின் லஞ்சம் வாங்கும் பழக்கம் தொடரும் என்ற நல்ல எண்ணத்தில்:)

ராஜ நடராஜன் said...

//திருச்சி மாவட்டத்தின் மாமன்னர்கள் கேஎன் நேரு, அவர் தம்பி ராமஜெயத்தின் அத்தனை திருவிளையாடல்களை ஒரு வேளை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் நமக்கு நிறைய செய்திகள் காத்திருக்கு. அவரும் சாகப்போற இநத் கடைசி காலத்தில் எம்ஜிஆர் போல கொஞ்சம் நல்லவிதமாக ஆளவேண்டும் என்று கொஞ்சூண்டு மனதில் இருக்கும்பட்சத்தில் நிறைய அதிரடிகள் இந்த மன்னர்களுக்கு காத்திருக்கிறது.

பார்க்கலாம்.//

இந்த தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் அதிரடியால் எந்த விதமான முடிவுகள் வரும் என்றே மக்கள் மனதை அறிய விரும்புகிறேன்.பார்க்கலாம்!

ராஜ நடராஜன் said...

//அப்புறம் உங்க தகவலுக்காக திருச்சி பகுதியின் தேர்தல் பொறுப்பில் இருக்கும் இந்த இளவயது ஆர்டிஓ பெயர் சங்கீதா. நிச்சயம் கலைஞர் ஆட்சி திரும்ப வரும்பட்சத்தில் மதுரை சாகாயத்திற்கு எப்படி சாவு மணி உண்டோ அதே போல் இவருக்கும் உண்டு.

கலெக்டர் இஞ்சினியர்,டாக்டர் ஆக வேண்டும் என்று நம் பயபுள்ளைகளுக்கு சோத்தோடு ஊட்டி வளர்க்கும் பெற்றோர்கள் யூபிஎஸ்சி தேர்தல்பற்றி ஒரு பெற்றோர்களும் புரியவைப்பதில்லை. சங்கீதா போன்ற இளம் ரத்தம் நம் தமிழ்நாட்டுக்குத் தேவை.//

யூபிஎஸ்சி மட்டுமல்ல மத்திய அரசின் நிறைய தேர்வுகள் நம்முடைய மக்களின் பொதுபார்வைக்கு வருவதேயில்லை என நினைக்கிறேன்.

எனவே கேரள மேனன்,நாயர்கள் தமிழ்நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கிறார்கள்.

ஆர்டிஓ சங்கீதாவின் படம் மறைந்து இருக்கிறது.நீங்க சொன்ன ரெசல்யூசன் குறைக்காம படம் போடச் சொன்னதின் விளைவு:)