Followers

Wednesday, April 7, 2010

பதிவர்கள் அரபி கத்துகிட்டாங்க:)

இப்ப அரபிக் வகுப்பில சில பேர் சேர்ந்து புத்தகமெல்லாம் வாங்கிட்டாங்க.இந்த புத்தகம் கொடுக்க காரணம் முன்னாடி ஹிந்து கத்துக்கொடுக்கிறேன்னு பதிவர் ஆடுமாடு இடுகையா போட்டார்.நன்றாகவே வகுப்புகள் போய்க் கொண்டிருந்தது.நானும் மலையாளம் கற்றுக்கொடுங்கள் என்று கலாய்த்து மலையாளமும், ஹிந்தியும் கரையேறவில்லை.சரி இப்ப புத்தகம் வாங்கின மாணவர்களில் நம்ம பதிவர்கள் அரபிக் பேசினா எப்படியிருக்கும்ன்னு ஒரு சின்ன கற்பனை:)

நசரேயன்:சலாம் மாலிக்கும்!ஸ்லோனக் பழம?

பழம: சலாம் மாலிக்கூம் ரகமத்துல்லா பரகாத்.ஸ்லோனக் என்த?
பக்கத்திலிருந்த வானம்பாடிகள் பாலா மனசுக்குள்ளே(இரண்டு பேரும் ஸ்லோனைப்பற்றி பேசிக்கிறாங்க போல இருக்குது)

நசரேயன்: சுனோ சவி இலீன்?
பழம: அன இக்துப் வாகித் அரபிக் கவிதா?
நசரேயன்:கலம் வாகித்!அன சுஃப்!

பழம:வாகித் யூம் பிலில் காளமேகப் புலவர் ஈஜி அன கனவு
உவா குல்,வலித் பழம எந்த அரஃப் செம்மொழி
அன கலம் அன ரோ இத்னீன் சார் பாதன் செம்மொழி கோவை
அன சுஃப் சுனோ குல் குல்லு நபர் இனி செம்மொழி
அன சுஃப் சுனோ கலைஞர் கலம் செம்மொழி
பாதன் காளமேகப்புலவர் குல் மினோ குல் பதிலி குல்லு தமிழ்?
அன குல் பாபா!அன மா அரஃப் அத குல்லு கருணாநிதி சரிக்கா பதிலி
ஹுவா(காளமேகப் புலவர்) வாஜித் ஜலான் பாதென் அன நூம் கராப்.

நசரேயன்:வொல்லா!எந்த வாஜித் அரஃப் அரபி.அன கனவு குல்லு குர்மா ஈஜி சைத்தான்

அது சரி:எந்த மும்கின் வாகித் பெக் தாகில் அனி வாகித் கொய்ஸ் குர்மா ஈஜி.

நசரேயன்: லா சதிக்!அன பி பெர்க்கின்சன் பீர்.அத காபி.

வானம்பாடிகள் பாலா:(இதென்னய்யா புதுசா பீரோட காபி!அமெரிக்கா இல்ல,கலந்து குடிச்சாலும் குடிப்பாங்க.எப்படியாவது இந்த பாசைய கத்துக்கனும்)

நசரேயன்:ஓகே குல்லு சதிக்.அன பி வாகித் பதிவு.அன சுஃப் புக்ரா.

அதுசரி: மா சலாம்.

பழம:அதுசரி!வெயின் ரோ எந்தா?மும்கின் வாகித் லிப்ட் லண்டன் ஏர்போர்ட்?
அது சரி: மூ முஸ்கில்!வானம்பாடி தால் என்த,நஃப்ஸ் தரிக் மத்தார் மதராஸ்

வானம்பாடி மறுபடியும் மனதுக்குள்,இருங்கய்யா!எனக்கு அரபி தெரியாதுன்னுதானே இந்த தாளிப்பு தாளிக்கிறீங்க?நீங்க பேசுனதெல்லாம் உங்களுக்கு தெரியாம டேப் செஞ்சிருக்கேன்.நடராஜன் குவைத்துலதான் ஊரச்சுத்திகிட்டு இருக்காரு.கொடுத்து விளக்கம் கேட்டுட மாட்டேன்.

ஒலிப்பதிவு நடராஜனிடம் வந்தவுடன் நடராஜன் வானம்பாடிக்கு சொன்னது

நடராஜன்:அது ஒண்ணுமில்லீங்ண்ணா,நானூம் அரைகுறைதான்,தெரிஞ்சத சொல்றேன்,அச்சுப்பிசகாம உங்களுக்கு தெரியணுமுன்னா துபாய்ல குசும்பன்கிட்ட கேட்டீங்க்கன்னா பேசுனதை இலக்கண சுத்தமா பிரிண்ட் அடிச்சே கொடுத்துருவாரு:)

பேசுனது இதுதானுங்ண்ணா:

நசரேயன்:சலாம் மாலிக்கும்!ஸ்லோனக் பழம?(வணக்கம்!எப்படியிருக்கீங்க பழம?)

பழம: சலாம் மாலிக்கூம் ரகமத்துல்லா பரகாத்.ஸ்லோனக் என்த? (வணக்கம்!நீங்க எப்படியிருக்கீங்க?)
பக்கத்திலிருந்த வானம்பாடிகள் பாலா மனசுக்குள்ளே(இரண்டு பேரும் ஸ்லோனைப்பற்றி பேசிக்கிறாங்க போல இருக்குது)

நசரேயன்: சுனோ சவி இலீன்? (இப்ப நீங்க என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க?)
பழம: அன இக்துப் வாகித் அரபிக் கவிதா? (நான் இப்ப அரபி கவிதை எழுதிகிட்டு இருக்கிறேன்)

நசரேயன்:கலம் வாகித்!அன சுஃப்! (ஒண்ணூ சொல்லுங்க பார்க்கலாம்!நான் பார்க்கிறேன்)

பழம:வாகித் யூம் பிலில் காளமேகப் புலவர் ஈஜி அன கனவு ( ஒரு நாள் காளமேகப் புலவர் என் கனவில் வந்தார்)
உவா குல்,வலித் பழம எந்த அரஃப் செம்மொழி (அவர் சொன்னார்,பழம பையா உனக்கு செம்மொழி தெரியுமா?)
அன கலம் அன ரோ இத்னீன் சார் பாதன் செம்மொழி கோவை (நான் சொன்னேன் இரண்டு மாதம் கழித்து செம்மொழிக்கு கோவை போகிறேன்)
அன சுஃப் சுனோ குல் குல்லு நபர் இனி செம்மொழி ( எல்லோரும் என்ன சொல்கிறார்கள் இங்கே என்று கேட்கப் போகிறேன்)
அன சுஃப் சுனோ கலைஞர் கலம் செம்மொழி (கலைஞர் செம்மொழி பற்றி என்ன சொல்கிறார் என பார்க்கிறேன்)
பாதன் காளமேகப்புலவர் குல் மினோ குல் பதிலி குல்லு தமிழ்? (அப்புறம் காளமேகப் புலவர் கேட்டார் யார் தமிழை எல்லாம் மாற்றச் சொன்னது?)
அன குல் பாபா!அன மா அரஃப் அத குல்லு கருணாநிதி சரிக்கா பதிலி (ஐயா!எனக்கு ஒன்றும் தெரியாது,எல்லாம் கருணாநிதி நிறுவனத்தோட வேலை)
ஹுவா(காளமேகப் புலவர்) வாஜித் ஜலான் பாதென் அன நூம் கராப். (அவருக்கு ரொம்ப கோபம் வந்து விட்டது அப்புறம் எனது தூக்கம் கலைந்து விட்டது)

நசரேயன்:வொல்லா!எந்த வாஜித் அரஃப் அரபி.அன கனவு குல்லு குர்மா ஈஜி சைத்தான் (அப்படியா?உங்க கனவுல நிறைய அரபி கவிதை வருகிறதே,எனக்கு பேய்க பொண்ணுகளா வர்றாங்க)

அது சரி:எந்த மும்கின் வாகித் பெக் தாகில் அனி வாகித் கொய்ஸ் குர்மா ஈஜி.(நீங்க ஒரு பெக் அடிச்சீங்கன்னா இன்னும் அழகான பொண்ணுகளா வருவாங்க)

நசரேயன்: லா சதிக்!அன பி பெர்க்கின்சன் பீர்.அத காபி.(இல்ல தல!என்கிட்ட பெர்க்கின்ங்கிற பீர் இருக்குது.அது போதும்)

வானம்பாடிகள் பாலா:(இதென்னய்யா புதுசா பீரோட காபி!அமெரிக்கா இல்ல,கலந்து குடிச்சாலும் குடிப்பாங்க.எப்படியாவது இந்த பாசைய கத்துக்கனும்)

நசரேயன்:ஓகே குல்லு சதிக்.அன பி வாகித் பதிவு.அன சுஃப் புக்ரா.(சரி நண்பர்களே!எனக்கு ஒரு பதிவு இருக்குது,நாளை பார்க்கிறேன்)

அதுசரி: மா சலாம். (வணக்கம்.போயிட்டு வாங்க)

பழம:அதுசரி!வெயின் ரோ எந்தா?மும்கின் வாகித் லிப்ட் லண்டன் ஏர்போர்ட்?(அதுசரி!நீங்க எங்க போறீங்க? லண்டன் ஏர்போர்ட்டுக்கு ஒரு லிப்ட் கொடுக்க முடியுமா)
அது சரி: மூ முஸ்கில்!வானம்பாடி தால் என்த,நஃப்ஸ் தரிக் மத்தார் மதராஸ் (ஒண்ணும் பிரச்சினையில்ல!வானம்பாடி நீங்களும் வாங்க அதே வழிதான் சென்னை விமான நிலையத்துக்கும்)

22 comments:

கபீஷ் said...

மா ஸலாம்!

கபீஷ் said...

மா ஸலாம்

வானம்பாடிகள் said...

எல்லாஞ்செரி ஆனா அதுசரி போய் அராபிக்? துபாய்ல ஆட்டோ இருக்காண்ணா:)). நசரேயன் கூட கோவமா இருந்தாரு. என்னா அரபி கத்துகிட்டு என்ன புண்ணியம் நடராஜன் துண்டு பத்தி சொல்லியே கொடுக்கலைன்னு. துண்டு போட்டா கையிருக்காதுன்னுதான் சொல்லலைன்னு சமாதானம் பண்ணி வச்சிருக்கேன்:))

வானம்பாடிகள் said...

/துபாய்ல குசும்பன்கிட்ட கேட்டீங்க்கன்னா பேசுனதை இலக்கண சுத்தமா பிரிண்ட் அடிச்சே கொடுத்துருவாரு:)/

யாரு? குசும்பன்! அத நம்பி பேசிட்டு அப்புறம் எந்த மொழி பேசவும் நாக்கிருக்காம அலையவா?:))

பழமைபேசி said...

இருங்க நான் நெசமாலுமே அரபி கத்துட்டு வந்து வெச்சிக்கிறேன் உங்களை!

அப்பிச்சி, அந்த அரபி மொழியப் பத்திக் கொஞ்சம் வந்து சொல்லிக் குடுங்க சித்த...

சென்ஷி said...

:)

ராஜ நடராஜன் said...

//மா ஸலாம்!//

கபிஷ்!முதலில் சலாம் மாலிக்கும்...
அப்புறம் மாலிக்கும் சலாம்

பை பை சொல்றதுக்குத்தான் மா ஸலாம்:)

ராஜ நடராஜன் said...

//எல்லாஞ்செரி ஆனா அதுசரி போய் அராபிக்? துபாய்ல ஆட்டோ இருக்காண்ணா:)). நசரேயன் கூட கோவமா இருந்தாரு. என்னா அரபி கத்துகிட்டு என்ன புண்ணியம் நடராஜன் துண்டு பத்தி சொல்லியே கொடுக்கலைன்னு. துண்டு போட்டா கையிருக்காதுன்னுதான் சொல்லலைன்னு சமாதானம் பண்ணி வச்சிருக்கேன்:))//

துபாய் குறுக்கு சந்துல இருக்குதோ என்னவோ ஆனா சுமோ மாதிரி நிறைய சுத்துது.அவருக்கு துண்டு போட்டுக்கவா பதிவே போட்டிருக்குது.துண்டு விசயத்துல நாங்க ரெண்டு பேரும் சகலபாடிகள்:)

ராஜ நடராஜன் said...

///துபாய்ல குசும்பன்கிட்ட கேட்டீங்க்கன்னா பேசுனதை இலக்கண சுத்தமா பிரிண்ட் அடிச்சே கொடுத்துருவாரு:)/

யாரு? குசும்பன்! அத நம்பி பேசிட்டு அப்புறம் எந்த மொழி பேசவும் நாக்கிருக்காம அலையவா?:))//


அவரு விமானம் சல்லிசா கிடைக்குதுன்னு ரெம்ப பிசி!

ராஜ நடராஜன் said...

//இருங்க நான் நெசமாலுமே அரபி கத்துட்டு வந்து வெச்சிக்கிறேன் உங்களை!

அப்பிச்சி, அந்த அரபி மொழியப் பத்திக் கொஞ்சம் வந்து சொல்லிக் குடுங்க சித்த..//

நீங்க பன்மொழிப் புலவர் அல்லவா?நினைச்சா கத்துக்குவீங்க.வாழ்த்துக்கள்.

ராஜ நடராஜன் said...

:) சென்ஷி!அடக்கி வாசிக்கிறீங்களாக்கும்:)பதிவர்கள் பதிவுகள்ள கும்முறத பார்த்துகிட்டுத்தான் இருக்கோம்.

பட்டாபட்டி.. said...

ஏன்ணே.. திடீர்னு இப்படி..
ஊகும்.. நான், தமிழ படிச்சுட்டு, அப்பால, சண்டைக்கு வாரேன்..

ராஜ நடராஜன் said...

//ஏன்ணே.. திடீர்னு இப்படி..
ஊகும்.. நான், தமிழ படிச்சுட்டு, அப்பால, சண்டைக்கு வாரேன்..//

பட்டு!சிங்கப்பூர்ல தமிழ் படிச்சாலே பொழச்சிக்கலாம்.ஆனா அமெரிக்காவுல அரபி படிச்சவங்களுக்குத்தான் மதிப்பு:)

இன்னும் ஒரு 4 வருசம்ன்னு ஜார்ஜ் புஷ் பதவில இருந்தார்ன்னு வச்சுக்கங்க அவரு படிக்கச் சொல்ற விருப்ப பாடங்கள்ல அரேபிக்,சைனீஸ்,ஹிந்தி,தமிழ்,தெலுங்கு கட்டாயமா இருக்கும்.

கண்ணா.. said...

சுக்ரன் :)

ராஜ நடராஜன் said...

//சுக்ரன் :)//

அலன்!அலன்!அலன் வா சலன்:)

thalaivan said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

http://www.thalaivan.com

Hello

you can register in our website http://www.thalaivan.com and post your articles

install our voting button and get more visitors

Visit our website for more information http://www.thalaivan.com

க.பாலாசி said...

அடடா... சரியான கலாய்ப்புங்க... ஒருநாள் பாருங்க உண்மையிலேயே அய்யா பழமைபேசி அரபிய கத்துகிட்டு வரப்போறார்....

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

அடேயப்பா ! பயங்கரமான ஆளுதான் !

ராஜ நடராஜன் said...

//அடடா... சரியான கலாய்ப்புங்க... ஒருநாள் பாருங்க உண்மையிலேயே அய்யா பழமைபேசி அரபிய கத்துகிட்டு வரப்போறார்....//

ஜி!பழமையின் புலமைக்கு அரபியெல்லாம் ஜுஜிபி.

ராஜ நடராஜன் said...

//அடேயப்பா ! பயங்கரமான ஆளுதான் !//

வாங்க பனித்துளி சங்கர்.வந்து ஜோதியில கலந்துகிட்டீங்களா:)

ரேஷன் ஆபீசர் said...

ஆஹா !
அருமையான பதிவு !!

ராஜ நடராஜன் said...

//ஆஹா !
அருமையான பதிவு !!//

ரேசன் ஆபிசர் கூட பிளாக்குறாங்க!பரவாயில்லையே:)