Followers

Sunday, April 25, 2010

ராவண் IIFA

பல மனித வளங்களின் உழைப்பு,பொருளாதார முதலீடு,சமூகம் சார்ந்த பார்வை,திரைப்பட நுணுக்கங்கள்,இசையின் மகுடி,திரைப்படம் வெளியிடூ,மக்களின் வருகை,விமர்சனம்,முதலீட்டின் லாபம் என்ற இத்தனை விசயங்களையும் தாண்டி ஒரு திரைப்படம் வெளி வராததற்கு முன்பே அதனைப்பற்றிய சுயமதிப்பீடுகள் செய்வது என்பது சரியல்லதான்.ஆனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இலங்கை அரசால் இனப்படுகொலை செய்யப்பட்டு அதற்கான நீதி கிடைக்கும் முன்பே கலாச்சார பரிமாற்றங்கள் என்ற பெயரில் சுயநலங்களை விளம்பரப் படுத்தும் போது விமர்சனங்களை முன் வைப்பது அவசியமாகிறது.

இதனையெல்லாம் தாண்டி இந்திய அளவில் அனைவராலும் மதிக்கப்படும் அமிதாப்பச்சன் அவர்கள் இந்திய திரைப்படங்களின் துதுவர் என்ற மகுடத்தை ஏந்தும் காரணம் கொண்டும் பதிவுலகில் மெல்லியதாய் எழும் குரல்கள் பல காரணங்களால் அமுங்கிப்போகவும் கூடும். அப்படியான மெல்லிய குரலாக இருந்தும் எனது கண்டனத்தை பதிவு செய்வது அவசியமாகிறது

It would be prompt to declare International Indian Film Academy as International Indi Film Academy (IIFA)

தமிழக எதிர்ப்புக்களையும் தாண்டி International Indi Film Academy (IIFA) இலங்கையில் நடக்கும் எனபதை உறுதி செய்வதற்கான காரணிகள் சில:

இரு தேசங்களின் புரோட்டக்கல் எனும் முன்வரைவுகள் தீர்மானிக்கப்பட்டு விட்டது

அதனை உறுதி செய்யும் அமிதாப்பச்சனும்,ராஜபக்சேவும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம்

தமிழகத்திலிருந்து இந்தி திரைப்படங்களுக்கான சந்தை குறுகியது.

அபிஷேக்,ஐஸ்வர்யாவின் இணைந்து நடித்த திரைப்படம் என்பதால் இங்கேயும் ஒரு குடும்ப நலன்.

இந்திய அளவில் ஈழ இனப்படுகொலை குறித்த ஊடகங்களின் கவலையின்மையை இப்போதைய ஐ.பி.எல் சர்ச்சைகளை இன்னும் ஒரு மாதத்தில் IIFA ஊடகங்களை நிறைத்துக்கொள்ளூம்.இப்படி தொடர் சர்ச்சைகள் நடப்பதே மக்களை திசைதிருப்பி ஆட்சியை வெற்றிகரமாகவும் நடத்த எளிதாக அமையும்.

இரு நாடுகளின் கலாச்சாரம் மேம்படுத்தல் எனும் போர்வைக்குள் ஒளிந்து கிடக்கும் வியாபார நலன்கள்.

காமிரா தொழில்நுட்பங்கள்,வெளிநாட்டில் பாடல்காட்சிகள்,பெண்களின் அரைகுறை ஆடைகள்(இதெல்லாம் சமூக காவலர்களுக்கு பொருட்டேயல்ல)முத்தக்காட்சிகள்,இன்னும் இந்திப்படத்துக்கே உரித்தான மசாலாக்களுடன் இந்தி திரைப்படம் இந்திய திரைப்படமாக வலம் வருகிறது.தமிழ் திரையுலகம் எப்படி தமிழ் இலக்கியங்களையெல்லாம் விட்டு விட்டு வேறு பாதைகளை தேர்ந்தெடுத்துக் கொண்டதோ அதே மாதிரி இந்தி திரைப்படங்களும் துவக்கம் முதல் உண்மையான இந்திய கலாச்சாரங்களை விட்டு மிக தூரமாகவே பயணிக்கிறது.இந்திய திரைப்படங்களை மாநில அளவில் ஒப்பீடு செய்யும் போது இந்தி படம் மசலாக்கள் என்பதுடன் இந்தி திரைப்படங்களின் பலமே அதன் இசையில்தான்.ஏனைய மாநில அளவிலான ரசிகர்கள் குறைவாக இருந்தாலும் வங்காள,மலையாள,தமிழ் படங்களுடன் ஒப்பீடு செய்கையில் இந்தி திரைப்படம் பாப்கார்ன் மட்டுமே.

மாநிலங்கள் என்ற பெடரல் அமைப்பே இந்தியா எனும் முகம் என்பதை மறந்து விட்டு இந்திப்படத்தை மட்டும் முன்னிறுத்துவதற்கு IIFA என்பதனை குறிப்பிட்டு சொல்லும்படியாக கேரள,வங்க,தமிழ்,ஏனைய திரைப்படத்துறையினர் குரல் எழுப்பாதது ஏன் என்பதை அறிந்தவர்கள் தயவு செய்து பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள்.

இதில் நான் பெரிதும் மதிக்கும் இயக்குநர் மணிரத்னம் அவருடைய கட்டுக்கும் மீறி மீண்டும் ஒரு சர்ச்சையில் நுழைவது தனிப்பட்ட முறையில் வருத்தத்தை தருகிறது. ராஜபக்சேவுக்கு பஞ்ச் டயலாக் ஏதாவது வைத்திருக்கீறீர்களா மணிரத்னம் சார்? குறைந்த பட்சம் ரத்தம் படிந்த அந்த சிவப்பு துண்டு?

தமிழனின் குரல்கள் அவ்வப்போதான மழைக்காலத்து தனித்தனிக் குளத்தில் தவளைகளாய் கீச்சிட மட்டுமே செய்கிறது.ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை என்று பாடிக்கொண்டேயும் சில குரல்கள் வாழ்க்கை ஓட்டத்தில் பயணம் செய்கின்றன.

ஒற்றுமையின்மை,பொது நலனிலும் கூட சுயநலம் முன்நிற்பதும்,நமக்கென்ன என்று ஒதுங்கிப் போகும் மக்களின் மனோபாவம்,சுய வாழ்க்கையின் ஓட்டத்துக்கே ஒரு நாள் ஓடிப்போவது,இவை அனைத்துக்கும் மேலாக ஒரு கூட்டம் திட்டமிட்டு தமிழர்களின் நலன்களுக்கு எதிராக செயல்படுகிறது என்பதை சமீபத்து நிகழ்வுகள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் தமிழனுக்கு உணர்த்துகின்றன.அந்த வகையில் இலங்கையின் IIFA வும் ஒன்றாக இணைத்துக் கொள்ளலாம்.

IIFA வுக்கான மேலும் சில எதிர்ப்புக் குரல்களாய் சிரவணன் அவர்களின் இடுகை தொடுப்பாக இங்கே மேலும் சில தகவல்களை காணலாம்.

பல தமிழ் திரைப்பட நடிகர்கள் திரைப்பட விழாவுக்கான அழைப்பிதழை பெற்றுக்கொள்ளவில்லை என்ற செய்திக்காகஅனைவருக்கும் நன்றி.முப்பது ஆண்டுகளை தமிழ் திரைப்படம் இலங்கை அரசின் உதவியில்லாமல் பயணித்திருக்கிறது.இன்னும் கொஞ்ச தூரம் இதே பாதையில் தமிழ் திரைப்பட உலகம் பயணிப்பதில் தவறில்லை.

5 comments:

ராஜ நடராஜன் said...

இமயவரம்பன்!என்ன சொன்னீங்கன்னே புரியல.

ராஜ நடராஜன் said...

இமயவரம்பன் நீங்கள் அளித்த சுட்டியான கார்த்திக்கின் http://eluthuvathukarthick.wordpress.com/2010/04/25/iifa வின் சாரம் உங்கள் பின்னூட்டம் என நினைக்கிறேன்.எழுதுவது கார்த்திக்கின் IIFA இது ஒரு வர்த்தக அமைப்பின் சாரம் கீழே:

முரண்பாடான இருவர் உடன்பாடாக வாழ்வதே திருமணம் என்று என் நண்பன் சொல்வான். தமிழன் எப்போதுமே முரண்பட்டே வாழ நிர்பந்திக்கபடுகிறான்.

IIFA என்கிற அனைத்துலக இந்திய திரைப்பட அமைப்பு என்பது இந்தி திரைப்பட அமைப்பே என்று மலையாள நடிகர் மமுட்டி அவர்கள் – அவர்கள் தந்த மேடையிலேயே முழங்கினார் என்று எங்கோ படித்த ஞாபகம். பாலிவுட் இந்திய திரைப்படத்தின் பிரதிநித்துவம் இல்லை என்று CNN ( CNN IBN அல்ல )
தொலைகாட்சிக்கு அளித்த நேர்காணலில் இசை புயல் மென்மையாய் தன் நிலையை பதிவு செய்தமையை நான் பார்த்து உள்ளேன்.எனவே இந்த அமைப்பு சொல்கிற சர்வதேச இந்திய திரைப்பட அமைப்பு என்பதில் தென் இந்தியர்கள் பலர் உடன்படவில்லை. ஆனாலும் இந்த அமைப்பு இப்படி ஒரு தவறான பெயரை வைத்து வர்த்தகம் செய்கிறது. இந்தியாவில் போற்றப்படும் வங்க மொழி படங்களோ மலையாள படங்களோ இவர்களின் வர்த்தகத்திற்கு பயன் தராது. இந்தியாவின் பெயரை கெடுப்பதே இந்த மாதிரியான அமைப்புகளின் நோக்கம்.

யாரேனும் வழக்குரைஞர் இந்திய நீதி மன்றத்தில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து இந்த அமைப்பின் பெயரை மாற்ற வேண்டும்.

எதற்கெல்லாமோ போராட்டம் செய்தனர் தமிழ் திரை உலகினர். அவர்கள் இதற்கு ஒரு மேடை போட்டு எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்.அரசியல் பிரச்னையில் ஒன்றும் செய்ய முடியாத நிலையிலும் தங்களின் வெள்ளை மனதை வெளிக்காட்டினர். இது அவர்களால் முடியும் என்கிற விஷயம். அதுவும் அவர்களின் உறுப்பினர்கள் செய்யும் விஷயம் – மணிரத்னம் அவர்களின் இயக்கத்தில் விக்ரம் என்கிற தமிழ் நடிகர் நடித்துள்ள படத்தின் இந்தி(ய) பதிப்பை இந்த அனைத்துலக அமைப்பு வெளியிட உள்ள இந்த நேரத்தில் மமுட்டியின் குரலை நினைவுபடுத்தி வங்காள, மலையாள மற்றும் இந்தியாவின் நல்ல மாநில படங்களை அடையாளம் காட்டாமல் வர்த்தகம் செய்யும் ஒரு அமைப்பின் பெயர் மாற்ற எவரேனும் சட்ட ரீதியில் முடிந்தால் முயற்சியுங்கள்.

அப்புறம் இன்னொரு நண்பன் சொன்னது – அது என்னடா உலக சினிமா என்றால் ஈரானிய சினிமா என்கிறார்கள் – உலக தரம் என்றால் ஹாலிவுட் படங்கள் என்கிறார்கள் – ஹாலிவுட் பெருசா ? இரான் பெருசா ? – எனக்கு தெரியவில்லை தெரிந்தால் சொல்லுங்கள்.

வானம்பாடிகள் said...

எவ்வளவோ போச்சு. இதுல போக என்ன இருக்கு. யாராவது போனாலும் போவாய்ங்க:(

ராஜ நடராஜன் said...

//எவ்வளவோ போச்சு. இதுல போக என்ன இருக்கு. யாராவது போனாலும் போவாய்ங்க:(//

எவ்வளவோ போச்சு:(
ஆழமான வரிகள்!
நிகழ்வதையெல்லாம் தடுக்கும் சக்தி தற்போது தமிழருக்கு கிடையாது.இங்கே எழுதி வைப்பதெல்லாம் வரலாற்றை மீண்டும் ஒரு முறை திரும்பி பார்ப்பதற்கே.

ஜோதிஜி said...

எத்தனை தீர்க்கமான சிந்தனை படைத்த ராஜ நடராஜன் எனக்கு நண்பராக கிடைத்தது நான் செய்த புண்ணியம்.