Followers

Wednesday, April 14, 2010

காணவில்லை

பதிவர்களே!உங்களுக்கு தெரியுமா?அட உங்களுக்கு தெரியுமா?
பதிவுலக வவ்வாலே!தலகீழா தொங்கினியே

மாறுபட்ட பார்வை வேறுபட்ட கோணமென்றாயே
இப்ப பார்வையோ மாறுகண்ணு,கோணமோ கோணல்

வெளிச்சம்தான் கண்ணுக்கு கேடுன்னா
இருட்டுலதான் ஒரு தடவை கீச்சிட்டுப் போகலாமே

போகனுமின்னு சிலர் வேண்டுவதெல்லாம்
பசை போட்டு உட்கார்ந்திருக்கு

மணல் போட்டு பதிவு குடுவை செஞ்ச விஞ்ஞான ரோசாவே!
இப்ப அந்த ரகசியமெல்லாம் காணாமல் போச்சே

கலவையெல்லாம் சரியாகத்தானே இருந்தது.
பாண்டிச்சேரி ரோடு கூட தெளிவாத்தான் தெரிஞ்சதுன்னீரே!

நல்லாத்தானே சிக்ஸர் அடிச்சு ஆடிட்டு இருந்தீக
அதென்ன மர்மம் வருசத்துக்கு ஒரு பதிவு
அப்புறமென்ன காணாமல் போன மர்மம்?

தமிழ்ப்பதிவுக்கு போட வேண்டிய பின்னூட்டத்தை
ஒரு தமிழ்ப்படத்துக்கு போட்டதுல
பழைய நினைப்புதான்
வவ்வால் பழைய நினைப்புதான்
என்ன கொடுமை சார் இது.

13 comments:

வானம்பாடிகள் said...

ஒன்னும் பிர்லியேண்ணா:-?

முகிலன் said...

என்ன சொல்ல வர்றீங்க்ண்ணா?

ராஜ நடராஜன் said...

//ஒன்னும் பிர்லியேண்ணா:-?//

அப்ப நீங்க எனக்கு ஜூனியர்:)

ராஜ நடராஜன் said...

//என்ன சொல்ல வர்றீங்க்ண்ணா?//

யாரைக்கேட்டால் விடை தெரியும்?ஒரு வேளை காசி ஆறுமுகம்,துளசி கோபால் போன்ற பெரியவங்ககிட்டயா?

க.பாலாசி said...

//நல்லாத்தானே சிக்ஸர் அடிச்சு ஆடிட்டு இருந்தீக
அதென்ன மர்மம் வருசத்துக்கு ஒரு பதிவு
அப்புறமென்ன காணாமல் போன மர்மம்?//

அந்த மாதிரி நிறையபேரு உண்டுங்க... நம்மள மாதிரி ‘காலங்காலமா’ எழுதுற ஆளுங்கதான் கம்மி....

ராஜ நடராஜன் said...

////நல்லாத்தானே சிக்ஸர் அடிச்சு ஆடிட்டு இருந்தீக
அதென்ன மர்மம் வருசத்துக்கு ஒரு பதிவு
அப்புறமென்ன காணாமல் போன மர்மம்?//

அந்த மாதிரி நிறையபேரு உண்டுங்க... நம்மள மாதிரி ‘காலங்காலமா’ எழுதுற ஆளுங்கதான் கம்மி....//

ஜி!காலங்கார்த்தால பதிவு அனுப்பறவங்களும் கூட இருக்கிறாங்க தெரியுமா?அப்பத்தான் பின்னூட்டம் நிறைய கிட்டுமாம்:)சரி அத விடுங்க.

நான் சொல்ல வந்தது என்னவென்றால்
சலிக்காம பதிவு போடுறவங்க இருக்கிறாங்க.அப்பப்ப பதிவு போடுறவங்க இருக்கிறாங்க.அமைதியா சத்தம் போடாம பதிவு படிக்கிறவங்க இருக்கிறாங்க.அழிக்க வேண்டிய பதிவுகளை ஆவணமா பாதுகாக்கும் பதிவர்கள் இருக்கிறாங்க.ஆனால் நல்ல பதிவுகளையெல்லாம் அழிச்சிவிட்டு பேருக்குன்னு 3 பதிவு வச்சுகிட்டு சொல்லாம கொள்ளாம பதிவுக்லகம் விட்டுப் போறேன்ன்னு ஒரு வார்த்தை சொல்லாமலும்,புரபைலையும் மறைச்சுகிட்டு புனைப்பெயரில் ஒருவர் இருந்தா அவரை கண்டுபிடிக்கிறது எப்படிங்க?

ஐ.பிய வச்சு ஹலோ சொல்ல முடியாதே,ஏன்னா அவரோட தளத்தை அவரே பார்க்கறதில்லை போல இருக்குது.

பட்டாபட்டி.. said...

அண்ணே.. என்னன்னே.. திடீர்னு, T.R மாறி பேச ஆரம்பிச்சுட்டீங்க?

padma said...

இல்ல எனக்கு தெரியாது .தெரிஞ்சா சொல்லுங்க

padma said...

நானும் அப்பப்ப தளத்தில் போய் பார்ப்பதுண்டு .தானே வந்தால் தான் தெரியும்

ராஜ நடராஜன் said...

//அண்ணே.. என்னன்னே.. திடீர்னு, T.R மாறி பேச ஆரம்பிச்சுட்டீங்க?//

பட்டு!இது பழைய கதை.

ராஜ நடராஜன் said...

//நானும் அப்பப்ப தளத்தில் போய் பார்ப்பதுண்டு .தானே வந்தால் தான் தெரியும்//

பதிவுலகில் எத்தனையோ பேர் வந்து விட்டு நின்று விடுகிறார்கள்.இவருடைய எழுத்தின் ஆளுமை கொண்டே இவரைப் பற்றி விசாரிக்கத் தூண்டியது மேடம்!

padma said...

நிஜமாய் யாராவது புதிய எழுத்தை பார்த்தால் அவராய் இருக்குமோ என்று தோன்றும். ஏன் உங்கள் தளம் கூட பார்வை .அது வௌவால் பார்வை .முதலில் நீங்களே அவரோன்னு கூட நெனச்சேன் .

ராஜ நடராஜன் said...

//நிஜமாய் யாராவது புதிய எழுத்தை பார்த்தால் அவராய் இருக்குமோ என்று தோன்றும். ஏன் உங்கள் தளம் கூட பார்வை .அது வௌவால் பார்வை .முதலில் நீங்களே அவரோன்னு கூட நெனச்சேன் .//

மீள் வருகைக்கு நன்றி மேடம்!
வவ்வால் இன்னும் விசய ஞானம் உள்ளவர்.கடலூர்ல இருந்து பின்னூட்டம் போடுவது மாதிரி ஒன்று கண்டேன்.பார்க்கலாம் எப்பவாவது கண்ணில் படுகிறாரா என்று.