Followers

Sunday, April 25, 2010

வெளிநாட்டு இந்தியர்களின் ஓட்டுரிமை

பிரதமர் மன்மோகன் சிங் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களும் 2014 பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க இயலும் என்று முன்பு கூறியிருந்தார்.நேற்று சனிக்கிழமை இந்திய தேர்தல் கமிசனர் நவின் சவ்லா வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஓட்டளிப்பதிலுள்ள நடைமுறை சிக்கல்களை மத்திய அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.April 24: Chief Election Commissioner Navin Chawla on Saturday said the Election Commission has pointed out to the Centre that there would be ‘logistical difficulties’ in implementing the proposal to grant voting rights to Non-Resident Indians (NRIs).

Prime Minister Manmohan Singh had a few months ago said the Centre would formulate a plan to allow for the Indian diaspora across the world to participate in elections in India, and hoped that this would be possible by the next Lok Sabha elections in 2014.

“There will be operational difficulties in allowing NRIs to vote as they are not confined to one particular place,” Mr Chawla told reporters here at the airport en route to Tiruchy. The CEC said setting up polling stations in cities abroad would involve major logistic problem. “The commission will have to move electronic voting machines to various cities abroad betw-een the last day of nominations and the polling day and then bring them back. This would be a mind-boggling exercise,” he said.

NRIs can currently be registered as voters only if they spend six months in the country ahead of the elections, so many of them would not qualify, the CEC pointed out. He said that the commission had written to the Centre on the issue since some statutory changes had to be made in the relevant Act to allow NRIs to vote.

To a query on candidates in the Pennagaram by-poll failing to declare their election expenditure, he said candidates of many political parties had failed to submit their expenses for recent elections across the country. “Notices had been issued to 16 political parties asking them to furnish the relevant details by April 29. Candidates in the Pennagaram by-poll still have time to file their expenses,” he said.

(Courtesy deccanchronicle.com)

நடைமுறை சிக்கல்களாக அவர் கூறுவது எலெக்ராடினிக் மயமாக்கப்பட்ட ஓட்டு இயந்திரங்களை பல இடங்களுக்கும் கொண்டு போய் மீண்டும் குறிப்பிட்ட நேரத்தில் திரும்ப இந்தியாவுக்கு கொண்டு வருவது சிரமம் என்கிறார்.என்ன ஒரு தொலை நோக்குப்பார்வை தேர்தல் கமிசனர்:).மேலும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் ஒரே இடத்தில் நிற்காமல் நகர்ந்து கொண்டே இருக்கிறார்களாம்.

முதலாவதாக எலெக்ட்ரானிக் பெட்டிகளுக்கு மாற்று வழிகள் இல்லையா?அமெரிக்கர்கள் எலக்ட்ரானிக் முறைக்கும் முன்பும் கூட தபால் முறையிலான ஓட்டு முறையை நடைமுறைப்படுத்தினார்களே.இத்தனைக்கும் இந்தியர்களை விட அதிகம் ஊர் சுற்றுபவர்கள் அமெரிக்கர்கள்.ரயில்வே துறையில் முன்பதிவு முறைகளையெல்லாம் நடைமுறைப்படுத்தி விட்டு மாற்று வழிகளான கணினி முறையில் வாக்களிக்க இயலுமா என்பதையெல்லாம் ஆராயமல் நடைமுறை சிக்கல்களை மத்திய அரசுக்கு அறிவிப்பது நிர்வாக திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது.

மேற்கத்திய நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு கணினி மயமாக்கப்பட்ட வாக்குரிமை முறையை சொல்லிக் கொடுக்க பயிற்சி நிலையங்கள் தேவையில்லை.வளைகுடா,சிங்கப்பூர்,மலேசியா போன்ற இடங்களில் வசிக்கும் ஒப்பந்த முறையில் பணி புரியும் கணினியின் சுவடுகள் அறியாத பணியாளர்களை இங்கே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.இந்தியர்கள் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் தூதரகங்கள் உள்ளன.தூதரகங்கள் மத்திய அரசுக்கும்,தேர்தல் கமிசனுக்குமான இந்திய பாலம்.

ஒவ்வொரு நாட்டிலும் இந்திய தூதரகங்களால் அனுமதிக்கப்பட்ட அதிகார பூர்வமான ஒவ்வொரு மாநில அளவிலான கலாச்சார அமைப்புகள் தற்போது செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.கூடவே பள்ளிக்கூடங்களும்.கலாச்சார,பள்ளி நிறுவனங்கள் தூதரகத்தோடு இணையும் பாலங்கள்.கூடவே தன்னார்வ தொண்டர்களும்,ஊதியத்திற்கு உழைக்கும் மனித வளமும் அந்தந்த நாட்டில் நிறையவே உள்ளன.இந்தியர்கள் அனுப்பும் டெலக்ஸ் ட்ரான்ஸ்பர் மற்றும் ஸ்விப்ட் பரிமாற்றங்கள் மட்டும் எப்படி இதுவரை துரிதமாக செயல்படுகின்றன என்பதை வங்கியாளர்கள் நவின் சாவ்லாவுக்கு தெரியப்படுத்துவது அவசியம்.

மற்ற நாடுகளில் சிவில் ஐடி எனப்படும் விசிட்டிங் கார்டு அளவிலானஅடையாள அட்டை,வாகனம்,சுகாதாரம்,குடியுரிமை,காவல்துறை,குற்றவியல்,காதுக்குள் ரகசியமாய் மொபைல்,நீர் மற்றும் மின்சாரம் என்று ஒரே இணையத்துக்குள் தகவல்கள் பரிமாறபடுகின்றன.கணினி தொழில் நுட்பத்தில் முன்னணி நாடு என்று மார்தட்டிக்கொள்ளும் இந்தியா இன்னும் குழப்பங்களினுடாகவே வருடங்களை நகர்த்துகிறது.

Grow up India.

4 comments:

வானம்பாடிகள் said...

பிரச்சின டெக்னாலஜியில இல்லை சார். மொட்டை மலை முக்கில 2 வோட்டு இருந்தாலும் நடந்தாவது போய் வாங்கி நேரத்துக்கு சேர்க்க முடியுது. இப்பதான் டெக்னாலஜி சந்தேகம் வருது

ராஜ நடராஜன் said...

//பிரச்சின டெக்னாலஜியில இல்லை சார். மொட்டை மலை முக்கில 2 வோட்டு இருந்தாலும் நடந்தாவது போய் வாங்கி நேரத்துக்கு சேர்க்க முடியுது. இப்பதான் டெக்னாலஜி சந்தேகம் வருது//

மொட்டை மலை முக்கா:)அவங்க நடக்க கூட வேண்டாங்க.எங்க மேல சந்தேகம்,டெக்னாலஜி பயம் இருந்தா தபால்ல அல்லது தூதரகத்துல ஓட்டு கடிதாசிய போடச்சொன்னாக்கூட போதும்.இங்கேயே ஓட்டு போட்டு கணக்கு கூட்டி சொல்லிடறோம்.

padma said...

நேற்று நம் நண்பர் என் வலைதளத்திற்கு வந்திருக்கிறார் .பார்க்கவும்

ராஜ நடராஜன் said...

//நேற்று நம் நண்பர் என் வலைதளத்திற்கு வந்திருக்கிறார் .பார்க்கவும்//

Wow!நன்றி மேடம்.