சில தினங்களுக்கு முன்புதான் கழுகு தளம் இந்திய கல்வி முறையைப் பற்றி பதிவிட்டிருந்தது.அதென்னவென்று தெரியவில்லை இந்தியாவுக்குள் ஆராய்சிக்கு ஸ்காலர்ஷிப் கூட கிடைக்காமல் அமெரிக்கா போய் தாவரஙகளும் சுவாசிக்கின்றன என்ற தியரிக்கு நோபல் பரிசு வாங்கிய ஜெகதீஷ் சந்திர போஸ்,கடல் ஏன் நீலமாக இருக்கிறதென்பது சொன்ன சர்.சி.வி ராமன் என்று பலரில் துவங்கி ஹாட் மெயில் கண்டுபிடித்த சபீர் பாட்டியா,வேதியியலில் சமீபத்தில் நோபல் வாங்கிய வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்,நாசா வரையிலும் கூட தனது முத்திரை பறித்த இன்னும் பலரும் இந்திய கல்வியோடு வெளியே போனால் ஜொலிக்கிறார்கள்.கூடவே அமெரிக்கா போயும் கூட திட்டுவதில் டாக்டரேட் வாங்குவது இந்திய கல்வி முறையிலா அல்லது சமூகம் சார்ந்த அழுத்தங்களா என்பதை அவரவர் பார்வைக்கு விட்டு விடுகிறேன்.
எப்படியோ இந்திய திறனை வெளிப்படுத்தும் வரிசையில் சூர்யா ரே எனும் 16 வயது மாணவர் ஜெர்மனியின் ட்ரெஸ்டன் என்ற பகுதியில் 350 வருடமாக இருந்த நியுட்டன் கணக்கின் குழப்பத்துக்கு விடை கண்டு பிடித்து விட்டாராம்.இதன் மூலம் நியுட்டன் ஏன் ஆப்பிள் கீழே விழுகிறதென்று கண்டுபிடித்த மாதிரி சுவற்றில் வீசப்படும் பந்தின் பாதையையும் பந்து சுவற்றில் பட்டு திரும்பி வரும் வழியையும் தீர்மானிக்க முடியுமாம்.
நான் கணக்குல ரொம்ப....வீக்.கூடவே எத்தனை கூட்டாளிகள் இங்கே இருப்பாங்கன்னும் தெரியல எனவே நியுட்டனின் முடிச்சான 350 வருட தியரி பற்றியெல்லாம் விளக்காமல் பேட்டையில் ஜெயபரதன்,வவ்வால் போன்றவர்கள் யாராவது விளக்கம் தரும்படி சொல்லி விட்டு சூர்யாவின் படப் போஸ்டரை மட்டும் ஒட்டிவிட்டு அமர்கிறேன்.
19 comments:
நடா அண்ணா நலமா..?
கணக்கு பாடத்துல x,y என்றாலே எனக்கு கடுப்பாகிடும்.. இந்த தியரியெல்லாம் புரியாத புதிர்தான்,,,,
இந்த மாசம் லீவு அதிகம் போல 14 பதிவு!!!
ராஜ்,
இப்படி மொட்டையா சொன்னா என்னனு புரிஞ்சுக்க, செய்திக்கான சுட்டியும் போட்டா தெரிஞ்சுக்கலாம்.
கணக்கு எனக்கு பினக்கு ஆமணக்குனு சொல்வேன் :-))
projectile path calculation எல்லாம் ரொம்ப நாளா இருக்கே, பராபோலிக் கர்வ் என்றெல்லாம் படிச்ச நியாபகம், அதே மோதி திரும்பும் பாதையும் கண்டுப்பிடிக்க முன்னரே சூத்திரம் இருக்கு. இது இன்னும் தெளிவா சொல்லும் கணக்கோ என்னமோ?
//இந்தியாவுக்குள் ஆராய்சிக்கு ஸ்காலர்ஷிப் கூட கிடைக்காமல் அமெரிக்கா போய் தாவரஙகளும் சுவாசிக்கின்றன என்ற தியரிக்கு நோபல் பரிசு வாங்கிய ஜெகதீஷ் சந்திர போஸ்,//
ஜெ.சி.போஸ் நோபெல் பரிசு எல்லாம் வாங்கவே இல்லையே. அவர் கண்டுப்பிடிச்ச ரேடியோ, தாவரங்களுக்கும் உயிர் இருக்கு என்பதற்கெல்லாம் சர்வதேச அங்கீகாரம் இல்லாமலே மறைந்து விட்டார்.
சந்திர சேகர் என்பவர் தான் வான் இயற்பியலில் ரெட் ஷிப்ட் தியரிக்கு நோபெல் வாங்கி இருக்கார்.அது தான் பிரபஞ்சம் விரிவடையுது என நிருபித்த ஆய்வு. பிரபஞ்சம் விரிவடையும் எல்லைக்கு சந்திராஸ் லிமிட் என்றே பெயர், அவ்வெல்லை வரையே பிரபஞ்சம் விரிந்து பின் சுருங்கும் என அவர் சொல்லி இருக்கார்.ஹப்பில் போல ஒரு பெரிய தொலைநோக்கிக்கு சந்திரானு நாசா பேரு வச்சு மரியாதை செய்து இருக்கு.
சந்திரசேகரை ,ஜெகதீஷ் சந்திர போஸ் கூட குழப்பிக்கிட்டிங்களோ?
சகோ.சார்வாகன் வந்தா ,நியூட்டன் புதிருக்கு வழி எதாவது சொல்லுவார் ,பார்ப்போம்.
சூர்யா ஜூனியர் நியூட்டனுக்கு மேலும் சிகரங்களை எட்ட வாழ்த்துக்கள்.
ரியா சென் கல்யாணமாகி காணாமல் போனது போல் உங்களையும் நீண்ட நாட்களாக காணவில்லை ரியாஸ்.நலமாக இருக்கிறீர்களா?
முன்பு உறவுகளுக்கு கடிதம் போட்டு நலம் நலமறிய ஆவல் இப்ப பின்னூட்டத்திலாவது புழக்கத்தில் பயன்படுவது மகிழ்ச்சிக்குரியதுதானே!
ஒரு தடவை பதிவு போட்டா எத்தனை போட்டேன்னு எனக்கே தெரியாது:)நீங்களாவது சொன்னிங்களே.மிக்க மகிழ்ச்சி.
வ.வா!இது எப்படியிருக்குது:)
நாந்தான் கணக்குல வீக்குன்னு சொன்னேனே.மனக்கணக்குலருந்து ஏதோ அடிச்சு விட்டேன்.தப்புக்கு மாத்திரம் மார்க் குறைச்சுட்டு பார்த்துப் போட்டுக் கொடுங்க!
சுட்டியை இணைக்க மறந்து விட்டேன்
அதுதான் இது
http://www.scribd.com/jaykjz9124/d/94941411-School-Boy-Genius-Shouryya-Ray-Solves-Puzzles-Posed-by-Sir-Isaac-Newton-That-Have-Baffled-Mathematicians-for-350-Years-Mail-Online
ஆமாமில்ல!நான் பரிணாமம் சகோ.சார்வாகனை மறந்து விட்டேனே!இதுதான் நெய்யைக் கையில வச்சுகிட்டு வான்கோழி வறுவலுக்கு எண்ணையத் தேடுறமாதிரி:)
சகோ.சு.பி கடைல அண்ணன் அனானி ஒருவர் சால்மன் மீனைப் புடிக்க நீங்க 4000 மைல் போறீங்கன்னு சொல்றார்.திரட்டியில்லாமலே இந்த ஆட்டம்ன்னா அப்ப இருந்தா?
சகோ!சுவனப்பிரியன் உங்களுக்கும் சேர்த்து முன்னாடி பின்னூட்டத்துல போஸ்டர் அடிச்சிட்டேன்.
என்ன நாளை புது வடைக்கு மசாலா தயாரா:)
நானும்தான் டாபிக்கு தேடித்தேடி ஊர் ஊரா சுத்துறேன்.தேறமாட்டேங்குதே!
நானும் சார்வாகன் வருகைக்கு காத்திருக்கின்றேன்.
ராஜ்,
கண்டிப்பாக அந்த மாணவனுக்கு புத்திசாலித்தனம் இருக்கு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் விடுவிக்க இயலாத புதிர்னு சொல்ல முடியாது.
ஏன் எனில் கணினி மூலம் தீர்வு செய்யக்கூடியது என்று சொல்லும் போதே அதற்கு அல்காரிதம் எழுதப்பட்டு இருப்பது தெரிகிறது. எனவே அல்காரிதம் எழுதியவர்கள் புதிரை எப்படி விடுவிப்பது என தெரியாமல் எழுத முடியாது தானே.
கிரிக்கெட்டில் ஹாக் ஐ னு பந்து பிட்ச் ஆனதும் எப்படி போகும்னு கிராபிக் ஆக காட்டுறாங்களே அதுவும் இப்படியான புரொஜெச்டைல் பாத் ட்ரேசிங் கணக்கீடு தான். பேப்பர்ல கணக்கு போட்டு செய்யாம ஒரு புரோகிராம் எழுதி செய்றாங்க. அது போல புரோகிராம் ஐ ரிவெர்ஸ் எஞ்சினியரிங் செய்தாலும் ஒரு எம்பிரிக்கல் பார்முலாவாக கொண்டு வரலாம்.
கால்குலேட்டர் இருக்கும் போது வாய்ப்பாடு வேண்டாம் போல கணினி வந்த பிறகு பலரும் சூத்திரம்ம் வேண்டானு எளிமையாக வேலையை செய்வதால் வரும் சோம்பேறித்தனமே இது போல புதிர்களை கண்டுப்பிடிக்க ஆர்வம் இல்லாமல் செய்து விட்டது எனலாம்.
சுட்டியைப்படித்து விட்டேன்.ஆனால் அந்த புதிரைக்காணோம்,பின்னர் தேடிப்பார்க்கிறேன்.
சார்வாகன் என்ன சொல்கிறார்ப்பார்ப்போம்.
Mr.Roy has done something amazing!. He is an extra ordinary super brilliant person. But, you must remember that he did not study in India, He went to Germany at the age of four. So, please donot connect his capabilities with the Indian system of education.
ஜோதிஜி!பேட்டைக்கு திரும்பிட்டாங்களாக்கும்?அப்பப்ப வாங்க.
போனை எடுத்தாலே சும்மா அலறுதில்ல!
இதோ உண்மைத்தமிழனையெல்லாம் பின்னூட்டத்துல விட்டு ரொம்ப நாளாச்சு.அவர் வேற் ஒரு சினிமா விடாம விமர்சனம் போடுறார் போல இருக்குது.பல்லு இருக்குது பீடா சாப்பிடறாரு.நான் சினிமா பக்கமே போறதில்லை.
வவ்வால்!நீங்க சொல்றது சரியே!ஆனால் விடையை கண்டுபிடிக்க சூப்பர் கணினியின் உதவி தேவையாம்.இவர் கணினியோடு புதிதாக பார்முலா கண்டுபிடித்திருக்கிறதா கேள்வி.நானே கணக்கு வராதுன்னு சொல்றேன்.அப்படியும் நான் கணக்குல பெயிலுன்னு நொய் நொய்ன்னா எப்படி:)
அழகன்! i thought Shouryya-Ray left 4 years back! error regretted once again.
However Indian origin DNA molecule that counts here :)
அய்யா வவ்வால்!இதுக்குத்தான் ஆதாரமிருக்குதான்னு கேட்கிற சகோ.சார்வாகன் மாதிரியானவங்க கூட சேரக்கூடாதுங்கிறது.நானே மண்டபத்துல எழுதிக்கொடுத்ததைதான் வாசிக்கிறேன்.
இதுதான் அந்தப் பாடலோட நகல்
http://www.physicsforums.com/showthread.php?t=609259
பாடலுக்கு கோனார் நோட்ஸ் இதுதான்.
The problem is to calculate the trajectory of a body thrown at an angle in the Earth's gravitational field and in a Newtonian fluid. His paper claims to be the first analytical solution to the problem.
இல்ல முழுப்பாடலும் படிச்சுட்டுத்தான் காசு கொடுப்பீங்கன்னா
extractmethods classical celestial.pdf
இதுக்கு சாவி போட்டாத்தான் பாடலின் வரிகளே தெரியுமாம்.நீங்களாச்சு பி.டி.எ!ப் ஆச்சு.பாடுன வரைக்கும் தப்புக்குக்கு கழிச்சிட்டு காசை வெட்டற வழியைப்பாருங்க:)
வணக்கம் சகோ
நம் இந்திய மாணவர் ராய் 350 வருட புதிருக்கு தீர்வு கண்ட விடயம் மகிழ்வானது எனினும் அவர் என்ன செய்தார் என்பதை எளிய முறையில் பதிவாக்கி விடலாம் என தேடி சரியாக அறிய முடியவில்லை.நீங்கள் கொடுத்த மண்டப சுட்டியில் அங்கும் பல் பேர் தேடுவது மட்டுமே அறிய முடிகிறது.
இரு புதிர்களை அப்போட்டியில் ராய் தீர்வு கண்டு இருக்கிரார்.
1.ஒரு எறியப் படும் பொருள் ஈர்ப்பு,காற்று(நியூட்டன் இயக்க எதிர்ப்பு) இவற்றின் ஊடாக கடக்கும் சம்ன்பாடு.
2. சுவற்றில் எறியப்படும் பந்தின் இயக்கவியல் பற்றியது.
இதில் முதல் புதிர் பற்றி விவாதிக்கிறோம் என நினைக்கிறோம்.
காற்றுத் தடை இன்றி எறியப்படும் பொருளின் இயக்கம் அடிப்படை மெகானிக்ஸ்[mechanics] பாடத்தில் உள்ளது.காற்றுத் தடை என்பதற்கு பல மாதிரிகள்[model] உண்டு.
ஒருவழியாக நாம் புரிவது.இப்புதிரின் வடிவம் ஒரு வகைக் கெழு சம்ன்பாடு[differential equation],அதற்கு சூத்திரமாக தீர்வு கண்டுள்லர் ராய்.
இதுவரை நுயுமெரிகல்(numerical) முறைகள் மட்டுமே பயன்படுத்தப் பட்டு வந்ததாக் கூறுகின்றனர்.
எனினும் அப்புதிரின் மிகச் சரியான வரையறுப்பு,ராயின் தீர்வு கிடைத்து அதன் மீது ஒரு பதிவு இடும் வரை தேடுவோம்.
நன்றி
இரயில் கண்டுபிடிக்கும் முன்பே நீராவியின் பயன் துய்த்தவர்கள் நாம்
:)
என்னென்னமோ பேசிக்கிட்டு பெரிய மக்கள் இருக்கீங்க ... நல்லா இருங்க(டே!)
வவ்வால்!இதோ திருவிளையாடல் சிவாஜி சகோ.சார்வாகன் வந்து விட்டார்.இனி நீங்களாச்சு!அவராச்சு.எனக்கு பொற்காசுகள் கிடைத்தால் போதும்:)
கோவி!நாம் இட்லிப்பிரியர்கள் என்பதை சத்தமா சொல்றதுதானே!இதுக்குப் போய் வெட்கப்பட்டுகிட்டு:)
அய்யா.தருமி!இருக்குறீங்களாக்கும்!நான் என்னமோ உங்க பெயரில் டாம் & ஜெர்ரி விளையாடிகிட்டிருக்கிறேன்.கண்டுக்காதீங்க:)
Post a Comment