அய்யா வவ்வாலாரே!சென்னையில் இருந்து ஊட்டிக்கு வழக்கமாக , சேலம் ,கோவை, ஊட்டினு தான் போவாங்க. இந்த பேருந்து வித்தியாசமாக சென்னை,திண்டிவனம், பாண்டி,கடலூர், சிதம்பரம், கும்பகோணம், திருச்சினு போய் ஊட்டிக்கு போகுதாம்ன்னு விலாவாரியா எழுதினதும் மட்டுமில்லாமல் ஆதாரமாக பஸ்ஸோட படம் வேற புடிச்சுப் போடறது மாதிரி ஒரு கல் ஒரு கண்ணாடின்னு அழகா தமிழில் எழுதி தொலைக்க வேண்டியதுதானே!
நான்தான் நேரம் கிடைக்கும் போது மட்டும் எப்பவாவது மேலிருந்து கீழ் தலைகீழா உங்க பதிவுகளை மேயுறேனே!மு.கருணாநிதியை மு.க ன்னு எழுதறதுல தப்பில்ல! ஆனால் ஒரு கல் ஒரு கண்ணாடியை நீங்க ஓகே!ஓகேன்னு படத்தை குறுக்கி எழுதலாமா? சினிமா பதிவர்கள் புண்ணியத்துல சினிமா போஸ்டர்களையே அபூர்வமா மேயும் அப்பாவியான நான் ஓகே!ஓகே ஏதோ ஒரு புதுப்படமாக்கும்ன்னு நினைச்சு உங்களுக்குப் பின்னூட்டம் போட்டு இப்ப அசடு வழியறேனே!
என்ன கொடுமை சார் இது:)!
பின் குறிப்பு: உங்க அஞ்சா கொடுமையோட இதையும் ஆறா சேர்த்துக்கோங்க!
3 comments:
ராஜ்,
இது என்ன கொடுமை :-))
o.k.okஎன போடாமல் ஓ.கே.ஓ.கே னு எழுதினேன் பாருங்க என்னை சொல்லணும், படம் ஆரம்பிச்சதுல இருந்து இப்போ வரைக்கும் அப்படத்தை ஓ.கே.ஓகே னு தான் விளம்பரம் செய்றாங்க வரி விலக்கு வாங்கவே சுவரொட்டில ஒரு கல் ஒரு கண்ணாடினு போட்டுக்கிறாங்க, பதிவுலகில் விமர்சனம் எதுவும் படிக்கவே இல்லையா
ஆமாம் இது புது படம் தானே நான் என்னமோ 1960 இல் வந்த படத்த பத்தி எழுதிட்டாப்போல ஒரு குமுறல்,நான் பார்த்த புத்தம் புது படம் இதான் சாமி :-))
உன்னைப்போல் ஒருவன் படத்துக்கு ஒரு விமர்சனம் போடலாம்னு பார்த்தேன் அதைப்போட்டா என்னை அடிக்கவே வருவிங்க போல இருக்கே :-))
----
நீங்க சலிச்சுக்கிட்டாலும் இப்படி ஒரு பதிவு போட்டதுக்கு நன்றி, எனக்கு ஓசில விளாம்பழம் கிடைச்சுடுச்சே :-))
வவ்!இது நமக்கு நாமே திட்டம்.என்னது!படம் விளம்பரமே அப்படித்தானா?நான் என்னமோ கை வலிக்குதுன்னு நீங்கதான் குறுக்கிட்டீங்களோன்னு நினைச்சேன்.இங்கே Top Movies ன்னு ஒரு தொலைக்காட்சியை திறந்து விட்டுருக்காங்க.தேடினாலும் கிடைக்காத அரத பழைய படங்களும் குறிப்பாக Cow boys படங்கள்...(உதாரணமாக Mecnosh Gold,The Good,bad,ugly,Predator,Jackel)ன்னு ஓசுல கிடைக்குறதால தமிழ்ப்படங்களின் வரலாறே தெரியாமல் நினைச்ச தவறு ஓகே.ஓகே.
உன்னைப்போல் ஒருவன் கமலா?ஜெயகாந்தனா? என்று சொல்லாமல் மொட்டையா விமர்சனம் போடலாம்ன்னு பார்த்தேன் என்றால் எப்படி?இருந்தாலும் இரண்டுமே விமர்சனத்துக்கு தகுதியான படங்களே.
சலிப்பா!எத்தனை கொடுமைகள் சொல்லியிருக்கீங்க.ஆனால் யார்கிட்டயும் போகலையேன்னு கொடுத்த தொடுப்பு அது:)
ராஜ்,
நமக்கு உதவும் திட்டம்னு தெரிஞ்சு தான் அப்போவே ஒரு நன்றி போட்டுக்கிட்டேன்,நிறையப்பேரு படிக்கிறாங்க அப்புறமா ஒரு வாரம் கழிச்சு அவங்க பாணியில பதிவும் போட்டுக்கிறாங்க என் பழைய பதிவுகள் சில மறு அவதாரம் எடுத்து ஓடுது நான் கூட புது படமா இருக்குன்னு போய் பார்த்த என்னது எங்கோ படிச்சா போல இருக்கேனு தோன்றும் ,சரி இதெல்லாம் சகஜமப்பானு போக வேண்டியது தான்.
கொடுத்து வச்சுவர் தான் நல்ல படம் போடுற சேனல் எல்லாம் ஓ.சில கிடைக்குது.இங்கே 2 1/2 மணி நேரப்படத்துக்கு 31/2 மணி நேரம் விளம்பரம் ,படமும் படு மொக்கைனு கொலைய்யா கொல்லுராங்க சாரே.
கமலஹாசர் படம் தான் , அவரோட ரசிகர் எனில் அப்பதிவைப்படிக்காம எஸ்கேப் ஆகிடுங்க :-))
Post a Comment