வளைகுடா நாடுகளில் அரேபியர்களின் வீடுகளில் பணிபுரியும் பணிப்பெண்கள்,மற்றும் வாகன ஓட்டுநர்கள்,ஏனைய பணியாளர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் அரேபிய நாடுகளுக்கான மனித உரிமை பற்றிய விமர்சனங்களும் அரேபிய நாடுகளின் விமர்சனங்களில் ஒன்றாக எழுகிறதென நினைக்கிறேன்.
இந்த பதிவுக்கான கரு இங்கே
http://news.kuwaittimes.net/2012/05/08/govt-repatriates-240-sri-lankan-domestic-workers-domestic-labor-law-key-to-resolving-issues-in-kuwait/
இதில் அதிகம் பாதிக்கப்படுபவர்களாக பணிப்பெண்களும் அதிலும் குறிப்பாக இலங்கை,பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண்கள் எனலாம்.அனைத்தும் உடல் ரீதியான அத்துமீறல்களா என்றால் இல்லையெனலாம்.பிரச்சினைகளுக்கான முக்கிய காரணமாக விளங்குவது மொழி எனலாம்.கடந்த மாதம் உடன் பணி புரியும் செக்ரட்டரி புதிதாக தனது வீட்டுப்பணிக்கு சேர்த்த பெண்னுக்கு மொழி தெரியவில்லையென்றும் சொல்வதையும் விளங்கிக் கொள்வதில்லை யென்றும் சொல்லி திலானா என்ற பெண்ணிடம் பேச சொல்ல,திலானா தான் சிங்களப்பெண் என்றும் தமிழ் கதைக்கத் தெரியுமென்றும் தமிழில் சொல்லியது அந்தப் பெண்.தான் இலங்கையிலிருந்து வந்தே சில தினங்கள் என்றும் சிங்களம்,தமிழ் தவிர எந்த மொழியும் தெரியாது என்றும் செக்ரட்டரி வீட்டில் சொல்வதை புரிந்து கொள்ள முடியவில்லை என செக்ரட்டரி அன்றாடம் செய்ய வேண்டிய வேலைகள் என்ன என்பதை திலானாவிடம் சொல்ல சொல்ல நான் மொழி பெயர்த்து சொன்னேன்.
இரண்டு நாள் கழித்து செக்ரட்டரி அந்தப் பெண்ணுக்கு சொல்வதும் புரிவதில்லை,வேலையும் திரும்ப திரும்ப சொல்ல வேண்டியிருக்கிறது வாங்கின இடத்துலேயே கொண்டு போய் விட்டு விடுகிறேன் என்று சொல்ல மொழி பிரச்சினையென்றால் ஏன் பிலிப்பைன்ஸ் பெண்ணை வேலைக்கு வைத்துக்கொள்ளக் கூடாது என்று நான் கேட்க பிலிப்பினோவுக்கு காசு சம்பளம் அதிகமாக தரனுமில்ல என்று செக்ரட்டரி சொல்ல மேற்கொண்டு நான் ஒன்றும் சொல்ல வில்லை.அதன் பின் என்னிடம் மொழி பெயர்க்க உதவிக்கு வராத காரணத்தால் திலானா இன்னுமொரு வீட்டிற்கு பணிப்பெண்ணாக விற்கப்பட்டிருக்க கூடும். என நினைக்கிறேன்.
எனவே சிங்கள மொழி மட்டும் பிரச்சினையல்ல.பிலிப்பைன்ஸ் பெண்ணுக்கு ஆங்கிலம் தெரிந்தாலும் அரபிக்கு ஆங்கிலம் தெரியாவிட்டாலும் பிரச்சினைதான்.சில வீடுகளில் தமது கலாச்சாரத்தோடு மேற்கத்திய நடை,உடை,பாவனைகளை கடைப்பிடிப்பவர்கள் ஆங்கில அறிவு கொண்டவர்களாக இருப்பதால் பிலிப்பைன்ஸ் பெண்களின் பணி புரியும் முறை பிடித்துப்போவதாலும் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்ளாத பெண்களும் பணிபுரிகிறார்கள்.இன்னும் சிலருக்கு மொழி பிரச்சினையில்லையென்றாலும் கூட வாகன ஓட்டுநர்,பணிப்பெண்களுக்கு நீண்ட நேர பணிநேரம் என்ற குறைகளும் உண்டு.
எனவே உடல் ரீதியான அத்துமீறல்கள்,மொழிப் பிரச்சினை,நீண்ட வேலை நேரம்,குறித்த தேதியில் சம்பளம் கிட்டாமை மற்றும் குறைந்த சம்பளம்,ஓரிரு வருடங்கள் பணிபுரிந்தாலும் சம்பள உயர்வு இன்மை என்ற பல காரணங்களால் பணிப்பெண்கள் தனது பாஸ்போர்ட்டைக் கூட அரபிகளிடமிருந்து வாங்க முடியாமல் வீட்டை விட்டு ஓடிவிடுவதோ அல்லது தமது தூதரகத்தில் தஞ்சம் புகுவதோ அல்லது சரியான டாகுமென்டேசன் இல்லாமல் போலிசிடம் சிக்கிக்கொள்வதோ தொடர்ந்து நிகழும் ஒரு சம்பவமாக உள்ளது.இதில் இந்திய தூதரகமும் விதி விலக்கு அல்ல.
வீடுகளில் வேலை செய்பவர்கள் தவிர நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் கூட விசாவை புதுப்பிக்காமல் தங்குவதும்,நிறுவனத்தில் பணிபுரியாமல் சுயமாக சில அரபிகளுக்கு பணம் தந்து விசா வைத்துக்கொண்டு சட்டத்துக்கு விரோதமாக டாக்சி ஓட்டுவதும் போன்றவை நிகழ்கின்றன.மேலும் வளைகுடா நாடுகளுக்கு பணிக்குப் போனால் அந்த நாட்டு சட்ட திட்டங்களை கடைப்பிடிக்காமல் சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சுவது,தாய்லாந்து லாட்டரி,அங்கீகாரமில்லாமல் துணிமணிகள்,வாட்ச்,பெர்ஃப்யூம்,திருட்டு டிவிடி விறபனை செய்து போலிஸில் மாட்டிக்கொள்பவர்களும் உண்டு.
ஒரு புறம் ஆசிய நாடுகளிலிருந்து வளைகுடாவில் பணிபுரிபவர்களின் குறைபாடுகள்,இன்னுமொரு பக்கம் பெண்களுக்கான மனித உரிமை மீறல்கள் என ஒரு நாணயத்தின் இருபக்கங்களாகவே வ்ளைகுடாவின் உழைப்பாளர் வர்க்கத்தின் பிரச்சினைகள் உள்ளது.முன்பே ஆசிய நாடுகளின் தூதரகங்கள் செய்ய தவறும் கடமைகள் பற்றியெல்லாம் பதிவாகவோ பின்னூட்டமாகவோ கருத்து வெளியிடூ செய்தாகி விட்டது.அம்னெஸ்டி போன்ற மனித உரிமை கழகங்கள் ஐ.நாவுக்கான ஆண்டு அறிக்கை தந்தாலும் கூட வளைகுடா மாற்றங்கள் ஆமை வேகத்திலோ அல்லது உறக்க நிலையிலேயே காணப்படுகின்றது.
சரி பிரச்சினைகள் இருந்தும் ஏன் தமது நாட்டுக்குப் போக மறுக்கிறார்கள் என்றால் முதலாவதாக பொருளாதார ரீதியாக அனைத்து ஆசிய நாடுகளும் கவிழ்ந்து விடுகின்றன.மேலும் நம்மூரில் செய்யத் தயங்கும் துப்புரவு வேலைகளை இங்கே செய்து விட முடிகிறது.ஆடு,ஒட்டகத்தை மேய்த்தாலும் உழைப்புக்கான ஊதியம் ஆசிய நாடுகளின் விகிதாச்சாரத்தை விட அதிகம்.ஒப்பீட்டளவில் சிறந்த திறந்த சந்தைப் பொருளாதாரம், நிர்வாகம், கட்டமைப்புக்கள் போன்றவைகள் முக்கிய காரணங்கள்.
மேலும் புரிதலுக்கு...
மேலும் புரிதலுக்கு...
இந்த பதிவுக்கான கரு இங்கே
http://news.kuwaittimes.net/2012/05/08/govt-repatriates-240-sri-lankan-domestic-workers-domestic-labor-law-key-to-resolving-issues-in-kuwait/