Followers

Friday, February 11, 2011

ஹோஸ்னி முபாரக்! எத்தல பர்ரா(வெளியேறு)

தெகா! ஹோஸ்னி முபாரக் பற்றி சற்று முன் நீங்கள் பதிவு போட்டவுடன் நான் அடக்கி வாசிக்கிறதால என்ன சொன்னேன்? சி.என்.என்.பி.பி.சின்னு உர்ருன்னு நோக்கிட்டு இருக்கிறேன்.நீங்கள் எகிப்தின் மாற்றம் குறித்து மகிழ்ச்சியில் திளைத்தீர்கள்.சி.ஐ.ஏ சொன்ன இன்றைக்கு முபாரக் பதவி விலகிடுவார்ன்னு சொன்னதைக் கேட்டு ஒபாமாவும் நாம் ஒன்று பட்ட நாடுகளில் வாழ்கிறோம்.உலகின் எந்த ஒரு பகுதியில் எது நடந்தாலும் அது நம்மையும் பாதிக்கிறது என்பதோடு அமெரிக்காவுக்கு புதிய சந்தைகள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கிறதென்று  திருவாய் மொழி அருள்ந்தார்.எகிப்திய ராணுவ அதிகாரிகள் கூட முபாரக் இல்லாமலே கூட்டம் போட்டு மக்களின் ஆசைகள் நிறைவேற்றப்படுமென்று அறிக்கை விட்டார்கள்.இரவு ,குளிர் என்றும் பாராமல் மாற்றத்துக்கு காத்திருக்கிறார்கள்.


முப்பது வருசமா எகிப்தில் சர்வாதிகாரம் செய்தும், யதார்த்தம் என்ன என்று தெரியாமல் பதவி,பணம் காக்கும் பூதமாக வேண்டி ஒரு நீண்ட அறிக்கை விட்டு தெகா, சி.ஐ.ஏ. ஒபாமா, மனித உரிமை நல விரும்பிகள், இவர்களையெல்லாம் தாண்டி எகிப்திய மக்களின் போராட்டத்தின் மையப்புள்ளி என்ன என்று அறியாமல் நடுஇரவில் ஒரே ஒரு அறிக்கை விட்டு எல்லோருக்கும் பெப்பே காட்டி என்னதான் சொல்ல வருகிறாரென்று யாருக்கும் தெரியாமல் அனைவரையும் குழப்பி நீண்ட பிரச்சாரம் செய்து விட்டு  இந்த மண்ணில்தான் சாவேன்,வெளிநாடுகளின் சூழ்ச்சிகளுக்கு அடிபணிய மாட்டேன் என்று தொண்டர்களுக்கு உள்குத்து வேலையும் செய்து விட்டு தான் பதவி விலகப்போவதில்லை என்பதை நாசுக்காக சொல்லாமல் சொல்லி மைக்கையும்,தொலைக்காட்சி கேமராவையும் நிறுத்தி விட்டார் முபாரக்.ஒபாமா அவசரமா அறிக்கை விட்டு விட்டு வாஷிங்டன் நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார்.இயற்கையாய் உதித்த மக்கள் எழுச்சியை ஏனைய மொத்த தூர,அண்டை நாடுகளும் தமது சுயந்ல தேவைக்கேற்ப வரவேற்றும், எதிர்த்தும் பயன்படுத்திக்கொள்வது அப்பட்டமாகத் தெரிகிறது.ஊடகங்கள் செய்தியென்ற கடமையை செய்கின்றன

வளைகுடாப்போரில் சதாமின் சார்பாகவும்,குவைத் நாட்டிற்கு சார்பாகவும் கலந்து கொண்ட ஆட்சியாளர்களுக்கு நாட்டமை மாதிரியான நிலையில்  சவுதி அரேபியாவில் நிகழ்ந்த பேச்சுவார்த்தையில் ஹோஸ்னி முபாரக் நாட்டாமை பார்த்து It's a summer cloud என்று சொல்லி இரு நாடுகளுக்கும் சண்டை மூட்டி விட்டதில் ஒரு பங்கு ஹோஸ்னி முபாரக்குக்கும் உண்டு என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.

பார்வையாளர்கள் எகிப்து குறித்து தற்போது ஊர்ந்தும்,கூர்ந்தும் கவனித்தாலும் கூட பணி புரியும் எகிப்தியக்காரனை ஐந்து வருடமாக ஹோஸ்னி முபாரக்கை விட்டால் உங்களை ஆட்சி செய்வதற்கு வேறு ஆட்கள் இல்லையா என்று கிண்டல் செய்துகிட்டு இருந்தேன்.இவ்வளவு மக்கள் ஜனநாயக ரீதியாகப் போராடியும்,ஜனவரி 25ம் தேதியிலிருந்து இன்று வரையிலான போராட்டக்குரல்கள் எழுப்பியும் தில்லாலங்கடி வேலை செய்யும் ஹோஸ்னி முபாரக்கை பதவி விலக வைப்பது எவ்வளவு கடினம் என்பது புரிகிறது.

எனினும்,எகிப்தின் மக்கள் எழுச்சி இன்னும் முற்றுப்பெறாத ஒன்று.அமைதியான முறையில் மாற்றங்களை கொண்டு வரும் அத்தனை வழிகளையும் முபாரக் அடைப்பதால் வரும் நாட்கள் எந்த மாதிரி நகரும் என்பதை யாரும் கணிக்க இயலாத நிலை.நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை என்பதால் மக்களின் கோபம் அலை பாயும் என எதிர்பார்க்கலாம்.

ஹோஸ்னி முபாரக் பதவி விலக வேண்டும் என்பது எகிப்தியர்களுக்கு இப்போதைய எழுச்சி.எனக்கோ எத்தல பர்ரா என்று குவைத் மொழியில் வெளியே போ என்ற குரல் எனக்குள்ளே நீண்ட நாட்கள் ஒலிக்கும் குரல்.


14 comments:

பழமைபேசி said...

க்கும்... இங்க நாங்க இருக்கம்...

ஜோதிஜி said...

பதவி ஆசை என்பது உலகத்தில் அத்தனையும் விட மேலானது.

நசரேயன் said...

//இங்க நாங்க இருக்கம்//

எதுக்கு ?

Thekkikattan|தெகா said...

இயற்கையாய் உதித்த மக்கள் எழுச்சியை ஏனைய மொத்த தூர,அண்டை நாடுகளும் தமது சுயந்ல தேவைக்கேற்ப வரவேற்றும், எதிர்த்தும் பயன்படுத்திக்கொள்வது அப்பட்டமாகத் தெரிகிறது.ஊடகங்கள் செய்தியென்ற கடமையை செய்கின்றன//

வித்தியாசமா பார்த்திருக்கீங்க. ஆனா, அந்த சதுக்கத்தில நிற்கிற மக்களின் மனசில மட்டும்தான் நீர்த்துப் போகமா இருக்கிது போல அப்போ. நாளுக்கு நாளு நெருப்பின் கனல் தகிக்கிது. பார்க்கலாம் இன்றைக்கு 20 மில்லியன் மக்கள் தெருக்களில் பார்க்கப்போறார். அப்பவாவது பார்த்து மிரண்டு கிளம்புறாரா, இல்லை மக்களை உழுது தள்ளி இரத்தம் குடிக்கத்தான் இந்த முப்பது வருட ஆட்சியான்னு.

இராணுவம் மக்களின் பக்கம் நிக்குமின்னு நம்புறேன். நேற்று இரவு அந்தாளு வழ வழன்னு பேசி கொன்னுபுட்டாரப்பா! ஏமாத்தியும்புட்டாரு. அப்படியே நம்மூரு அரசியல்வாதி புத்தி...

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ஏண்ணே.. அவருக்கு வயசுக்கு வந்த மகன் இல்லையா?..

:-)

ராஜ நடராஜன் said...

//க்கும்... இங்க நாங்க இருக்கம்..//


இந்தா நசரு எதுக்குன்னு எதிர்க்கேள்வி போட்டிருக்காரு!

அய்யே!உங்களுக்கும் பெப்பே!முபாரக் ஒபாமாவுக்கும் பெப்பே...

ராஜ நடராஜன் said...

//பதவி ஆசை என்பது உலகத்தில் அத்தனையும் விட மேலானது.//

நவீன புத்தரே வருக:)

ராஜ நடராஜன் said...

////இங்க நாங்க இருக்கம்//

எதுக்கு ?//

அதானே நசரு;)

ராஜ நடராஜன் said...

//இயற்கையாய் உதித்த மக்கள் எழுச்சியை ஏனைய மொத்த தூர,அண்டை நாடுகளும் தமது சுயந்ல தேவைக்கேற்ப வரவேற்றும், எதிர்த்தும் பயன்படுத்திக்கொள்வது அப்பட்டமாகத் தெரிகிறது.ஊடகங்கள் செய்தியென்ற கடமையை செய்கின்றன//

////வித்தியாசமா பார்த்திருக்கீங்க. ஆனா, அந்த சதுக்கத்தில நிற்கிற மக்களின் மனசில மட்டும்தான் நீர்த்துப் போகமா இருக்கிது போல அப்போ. நாளுக்கு நாளு நெருப்பின் கனல் தகிக்கிது. பார்க்கலாம்////



முந்தைய இஸ்ரேல் பிரதமர்,இப்போதைய பாதுகாப்பு அமைச்சர் யெகுத் பராக் மெதுவாகத்தான் முபாரக் பதவி விலகவேண்டும்ன்னு நேற்று பேட்டி கொடுக்கிறார்.ஏன்னா இத்தனை வருட ஆட்சியில் அமெரிக்காவிடம் காசு வாங்கிட்டு இஸ்ரேலின் பாதுகாப்பாளனாக முபாரக் இருந்திருக்கிறார்.இஸ்ரேல் இந்த எழுச்சியின் வளர்ச்சியிலும்,வீழ்ச்சியிலும் எகிப்தின் எல்லைக்காரனாக ஒரு முக்கிய பங்காளியாக உன்னிப்பாக கவனித்து வருகிறது.

வளைகுடா மன்னராட்சி முறைக்கு எந்த வில்லங்கமும் வராமல் எகிப்திய எழுச்சி இருக்க வேண்டும் என்ற வேண்டுதல்கள் வெள்ளை மாளிகைக்கு பின்புற வழியாக (Back channel)போகிறது.

ஈரானில் எகிப்திய,துனிசியா எழுச்சிக்கு ஆதரவு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் வீட்டில் சிறை வைப்பு.

இதுல உங்க பெரியண்ணன் பாடுதான் பெரும்பாடு.மக்களாட்சியையும் ஆதரிக்க வேண்டும்.இஸ்ரேலுக்கும் எழுச்சியில் ஏதாவது எதிர்விளைவுகள் ஆகிவிடக்கூடாது என்ற திட்டமிடலில் குழம்பிய செனட்டர்களின் அறிக்கைகள்.

நாம் மக்கள் குரலுக்கு ஆதரவு தெரிவிப்போம்.

ராஜ நடராஜன் said...

//இராணுவம் மக்களின் பக்கம் நிக்குமின்னு நம்புறேன். நேற்று இரவு அந்தாளு வழ வழன்னு பேசி கொன்னுபுட்டாரப்பா! ஏமாத்தியும்புட்டாரு. அப்படியே நம்மூரு அரசியல்வாதி புத்தி...//

நம்மூரு அரசியல்வாதி புத்தின்னு நேரா சொல்லவேண்டியதுதானே:)

சரியா சொன்னீங்க வழ வழன்னு பேசி எல்லோருக்கும் நாடித்துடிப்பை ஏத்தி விட்டுட்டு ஏமாத்தியும்புட்டாரு.

எகிப்து பசங்க விட்டுட மாட்டானுங்கன்னு நம்புறேன்.

Thekkikattan|தெகா said...

இப்பொழுது இடுகை மகுடம் சூடட்டும் தெகா!//

ஆஆஆமாம் ராஜ நட! :)) சாதித்து காட்டி விட்டார்கள். அவர்களின் அஞ்சா துணிவே துணையாக நின்றது. Great People, we have a lot to learn from this!!

//கடைசி நேரத்தில் பயந்து கொண்டிருந்த ரத்தம் சிந்தாமை எகிபதிய மக்கள் புரட்சி வரலாற்றில் தனித்துவம் பெறுகிறது.மக்கள் புரட்சியை வாழ்த்துகிறேன்.//

ரத்தம் சிந்தாம இது முடிஞ்சிரணுங்கிறதுதான் என்னோட அத்தனை கவனக் குவிப்பும். எல்லாம் முடிந்தது. இனிமேதான் அரசியல் சூடு பிடிக்கும். பார்க்கலாம் எப்படியாக நகர்கிறதென்று. கூடவே இருந்ததிற்கு நன்றி :)) !

இதை எழுதிட்டு இருக்கும் போது யூ. என்_ல இருந்து பான் கீ மூன் வந்து என்னமோ நாங்களும் உங்களுக்கு துணையா இருப்போங்கிறாரு -என்னமோ இப்பொ பெரிசா கிழிச்சிட்ட மாதிரி... அந்த சபை, மனமகிழ் மன்றமா ஆயிட்டே வருது ;-)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

Blogger பட்டாபட்டி.... said...

@ராஜ நடராஜன் said...

//விரோதிகள்... விரைவில் போர் என்றெல்லாம் புகைந்துகொண்டு இருந்த நிலையில், திடீர் அதிர்ச்சி... சீன மொழியை இந்தியப் பாடத் திட்டத்தில் சேர்க்க முடிவு செய்திருக்கிறது மத்திய அரசு. இந்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.சி பாடத் திட்டத்தில் சீன மொழியும் சேர்க்கப்படுமாம். 'சிரிச்சு சிரிச்சு வந்தா சீனா தானா டோய்’ பாட்டை சீனாவில் மொழி பெயருங்கப்பா!
//

அண்ணே..நாம பேசிக்கிட்டு இருக்கும்போதே , இப்படி பண்ணீட்டாங்க.. இது ஆனந்தவிகடன்ல வந்திருக்கும் நீயூஸ்..

:-(

ராஜ நடராஜன் said...

//ஆஆஆமாம் ராஜ நட! :)) சாதித்து காட்டி விட்டார்கள். அவர்களின் அஞ்சா துணிவே துணையாக நின்றது. Great People, we have a lot to learn from this!!//

தெகா!என்னமோ நாமே சாதித்த மாதிரி மகிழ்ச்சிதான் போங்க:)

இவர்களிடம் கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய என்பதில் இதே மாதிரி ஒரு போராட்டம் இந்தியாவில்,முக்கியமாக தமிழகத்தில் உருவாகியிருந்தால் எத்தனை தகிடுதத்து வேலைகள்,குண்டர்களின் அட்டூழியங்கள் இதர பிற சமூக சீர்கேடுகளை கட்டவிழ்த்து விட்டிருப்பார்கள் என்று நினைத்தேன்.

தெகா!மத்திய கிழக்கில் மனித உரிமை மீறல் என்பதற்கும் அப்பால் இன்னொரு பக்கம் இருக்கிறது என்பதும் அவற்றில் எகிப்திய புரட்சி நிகழ்ந்த முறையும் ஒன்று.

அடுத்து அல்ஜீரியாவாமே:)

ராஜ நடராஜன் said...

////விரோதிகள்... விரைவில் போர் என்றெல்லாம் புகைந்துகொண்டு இருந்த நிலையில், திடீர் அதிர்ச்சி... சீன மொழியை இந்தியப் பாடத் திட்டத்தில் சேர்க்க முடிவு செய்திருக்கிறது மத்திய அரசு. இந்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.சி பாடத் திட்டத்தில் சீன மொழியும் சேர்க்கப்படுமாம். 'சிரிச்சு சிரிச்சு வந்தா சீனா தானா டோய்’ பாட்டை சீனாவில் மொழி பெயருங்கப்பா!
//

அண்ணே..நாம பேசிக்கிட்டு இருக்கும்போதே , இப்படி பண்ணீட்டாங்க.. இது ஆனந்தவிகடன்ல வந்திருக்கும் நீயூஸ்..

:-(//

பட்டு போரை விட பெரிய குண்டைத்தூக்கி போடுறீங்க நீங்க!
வளரும் பொருளாதாரத்தில் இது இன்னொரு பக்கமென்றோ,அல்லது சீன மொழி கற்றுக்கொள்வதின் மூலம் சீன உள்வேலைகளைக் கற்றுக்கொள்ள இயலும் என்று மத்திய அரசு நினைக்கிறதோ என்னவோ?

நமக்கு இந்தியே வரல.இதுல போய் சீனமொழி கத்துகிறது எங்க?

எப்படியோ மத்திய அரசு ஒரு மார்க்கமாத்தான் இருக்குது.மொழி கத்துகிட்டு சீனாக்காரனை கவனிக்கிறதுக்கு முன்னால மோட்டார் படகிலருந்து இலங்கையிலிருந்து சீனாக்காரன் இந்திய கடல் எல்லைப்பகுதிக்குள்ள நுழையறனான்னு முதலில் பார்க்க சொல்லுங்க.