Followers

Wednesday, July 7, 2010

புதியவைகளை வரவேற்போம்

வந்துட்டோமில்ல:) வந்தா நாலு வருசம்,அஞ்சு வருசம் இடத்தைக்காலியே செய்யறதில்லை.சரி ஒரு முறை ஜெயிச்சமா இன்னொருத்தனுக்கு சந்தர்ப்பம் கொடுக்கலாமேங்கிற எண்ணமே இல்லை.ஆள் மாத்தி ஆள் பட்டா போட்டு உட்கார்ந்துக்கிறாங்கப்பா.நான் கால்பந்தாட்டத்தைச் சொன்னேன். அதுக்கு ஒரு முடிவுரை 2010ன் ஜெர்மனி V ஸ்பெயின் 0-1 என்ற கோல் கணக்கு!இப்படி எல்லாவற்றிலும் புதுமை நிகழ்ந்தால் நல்லாயிருக்குமில்ல:)

இரண்டே விதமான ஆட்டம்தான் கால்பந்தாட்டத்தில்.ஒன்று தென் அமெரிக்க அணிகளின் மெல்ல பந்தை நகர்த்தும் நளினம்.இன்னொன்று ஐரோப்பியர்களுக்கே உரித்தான நீண்ட தூரம் ஓடுவது மட்டும் பாதி மைதானத்துக்குப் பக்கத்திலிருந்தே கோல் போட நினைப்பது.தென் அமெரிக்க நளினம்,ஐரோப்பிய ஓட்டம் இரண்டையும் கலந்து கட்டி விளையாடியது ஸ்பெயின்.

துவக்கம் முதலே பந்தை தனது கால்களில் தக்க வைத்துக் கொண்டு ஆடியது.என்னாச்சு ஜெர்மனிக்கு?வேகமா ஓடறீங்கப்பான்னு சொன்னது காதுல விழுந்து விட்டதா அல்லது ஐ.பி.எல் ரகசியங்கள் ஏதாவது!முதல் பகுதியில் ஓட விட்டு அப்புறம் ஜெயிக்கலாமென்று நினைத்தார்களோ அல்லது அணிக்குள் பதிவுலகம் மாதிரி உள்குத்துக்கள் இரண்டு நாட்களில் நிகழ்ந்ததோ தெரியவில்லை.சுரம் இல்லாமலே துவக்கம் முதல் 75 நிமிடங்கள் வரை ஆடியது.

நம்ம ஊர் மக்கள்ன்னா மட்டும் மூடநம்பிக்கைகளை வாட்டி வதக்கி எடுக்க ஆட்கள் இருக்கிறார்கள்.நீலக்கலர் பனியன் போட்டா ஜெயிச்சுடுவோம்ன்னு ஜெர்மனி கோச் ஜோகிம் லுவிக்கு ஒரு நம்பிக்கை.மனுசனுக்கு நீலக்கலர் பனியனை போட்டா அணி ஜெயிச்சுடும்ன்னு ஒரு மட நம்பிக்கை.அணியின் கூட்டு முயற்சியிக்கு வலு கொடுக்காமல் நீலக்கலர் பனியனில் நம்பிக்கை வைத்ததற்காகவே ஜெர்மனி தோற்றதை வரவேற்கலாம்.

இன்னும் 2 கோல்கள் போடுவதற்கான அழகான சந்தர்ப்பங்களை ஸ்பெயின் அம்போன்னு விட்டது.இருந்தாலும் பந்து நகர்த்தும் திறனைப் பாராட்டவே வேண்டும்.வாழ்த்துக்கள் ஸ்பெயின்.

இறுதி சுற்றுக்கு யாரை ஆதரிக்கலாம்?யோசிச்சு சொல்கிறேன்:)

11 comments:

ராஜ நடராஜன் said...

பேட்டையில ஒருத்தரையும் காணோம்!துண்டு போட்டு உட்கார்ந்துக்க வேண்டியதுதான்:)

ஹேமா said...

நான் வரல இந்த ஆட்டத்துக்கு !

- இரவீ - said...

உங்களுக்கும் ஸ்பெயினுக்கும் எனது பாராட்டுகள்.

வவ்வால் said...

Raj,

ulkuthu illai "octopus" kuthu! Athu sonna jothidam paarthu germans payanthutanga pola!

"Puyal" adicha nikka mudiyuma! Germany vazhiya puyal karai kadanthathu!

Germany white dress thaane pottu aadiyathu. Oru velai coach blue jerssya?

I think Orangees will win the cup.

வானம்பாடிகள் said...

அந்த ஆக்டபஸ் மட்டும் ஜெர்மன் கோலியா இருந்திருந்தா:))

ராஜ நடராஜன் said...

//நான் வரல இந்த ஆட்டத்துக்கு !//

அய்யே!இன்னும் ஒரு ஆட்டம்தான் மிச்சமிருக்குது.அதுவும் இறுதிச் சுற்று.இப்படி பயந்தா:)

சரி!உங்களுக்குப் பிடித்த கலர் ஆரஞ்சா?சிவப்பு நீலமா?இப்பவெல்லாம் அணித்தலைவரே கலர் பார்த்துத்தான் மைதானத்துக்குப் போகிறார்:)

ராஜ நடராஜன் said...

//உங்களுக்கும் ஸ்பெயினுக்கும் எனது பாராட்டுகள்.//

இது யாரு இவுக இரவி!இங்கே ரவின்னுதான் ஒருத்தர் ரொம்ப நாளா அழுகுணி ஆட்டம் ஆடிகிட்டு இருக்கிறார்.அப்ப நீங்க?

ஓ!கவிதைப் பட்டாளமா:)வாங்க!பாராட்டுக்கு நன்றி.
இந்தப் பாராட்டு அர்ஜெண்டினாவுக்கு கிடைச்சிருந்தா நல்லாயிருந்திருக்குமில்ல:)

ராஜ நடராஜன் said...

//ulkuthu illai "octopus" kuthu! Athu sonna jothidam paarthu germans payanthutanga pola!//

வவ்வால்!நீங்க தனி மடலுக்கு வர இயலுமா?

எனது இமெயில் rajanatcbe@gmail.com

சரி பின்னூட்டத்துக்கு வருவோம்.நேற்று மறுபடியும் ஆக்டோபஸ் ஜெயிச்சுடுச்சாமில்ல.அதனால்தான் ஜெர்மனிக்கு சுருதி குறைஞ்சு போச்சா?

//Germany white dress thaane pottu aadiyathu. Oru velai coach blue jerssya?//

ஜெர்மனிக்குப் புடிச்ச நிறம் வெள்ளைதான்.ஆனால் கோச் ஜோகிம் லுவிக்குப் புடிச்சது நீலக்கலர் டீ சர்ட்.மனுசன் ஜாக்கெட்டில்லாமல் நீலக்கலர் டீ சர்ட்டில் ஸ்லிம்மாத்தான் இருக்கிறார்.மரடோனா எப்படி ஒரு மண்ணுக்கலர்ல சூட் மாட்டிக்கிட்டாரோ அதே மாதிரி ஜோகிம் அனைத்து ஜெர்மனி ஆட்டத்திலும் அணிந்தது நீலக்கலர்.கேட்டா நீலக்கலர் அணிந்தா ஜெர்மனி ஜெயிச்சுடுதாம்:)

//I think Orangees will win the cup.//

நெதர்லாந்து நன்றாகவே ஆடுகிறது.ஸ்பெயின் பந்து மாற்றுவதில் குறைந்த தவறே செய்கிறார்கள்.ஆனால் பார்வேர்ட்ல கோல் அடிக்கும் இடத்தில் சொதப்பி விடுகிறார்கள்.ஜெயிக்கும் அணியைத் தீர்மானிப்பது கொஞ்சம் சிரமம்.வரலாற்றில் முதல் முறையாக ஸ்பெயின் இறுதிச் சுற்றுக்குத் தகுதியாகியுள்ளது.எனவே ஸ்பெயினை ஆதரிக்கலாமென இருக்கிறேன்:)

ராஜ நடராஜன் said...

//அந்த ஆக்டபஸ் மட்டும் ஜெர்மன் கோலியா இருந்திருந்தா:))//

இது நல்லாயிருக்கே:)ஆனா ஆக்டோபஸ் ஜெர்மனிக்கு சங்குன்னு சொல்லிடுச்சாமே!எப்படியோ இறுதிச்சுற்றில் தோற்கும் அணி ஆக்டோபஸ் மேல வழக்கு போடாம இருந்தா சரி.

ராம்ஜி_யாஹூ said...

ஸ்பெயின் வீரர்களின் திறமைக்கும், பொறுமைக்கும் எனது பாராட்டுக்கள். வந்தனங்கள்

ராஜ நடராஜன் said...

//ஸ்பெயின் வீரர்களின் திறமைக்கும், பொறுமைக்கும் எனது பாராட்டுக்கள். வந்தனங்கள்//

ராம்ஜி!ஸ்பெயின் ஆடிய விளையாட்டிற்கு இந்த வெற்றி அவர்களுக்குரியதே.முக்கியமாக நீங்கள் சொல்லிய மாதிரி பொறுமையான ஆட்டம்.வாழ்த்துவோம்.

இறுதி ஆட்டத்தில் யார் வெல்வார்கள் என்று ஆக்டோபஸிடம் கேட்டுச் சொல்லுங்களேன்:)