Followers

Saturday, July 3, 2010

ஓடி ரசிக்கும் ஒரே ஆள்

எல்லோரும் மைதானம் முழுவதும் மகிழ்ச்சி,சோக அலைகளை எழுப்புகிறார்கள் விளையாட்டு வீரர்கள்,அவர்கள் குழுவினர் உட்பட.ஆனால் ஆட்டத்தை ஓடி ஓடி பக்கத்திலிருந்து ரசித்தும் ரசிக்க இயலா மனநிலையில் இருக்கும் ஒரே ஆள் பாவப்பட்ட ஒரே ஜீவன் ரெஃப்ரிதானுங்க.திட்டும் வாங்கனும்,நாட்டாமை தீர்ப்பு சரியாகவும் இருக்க வேண்டும்.நடுநிலைமை என்ற நாட்டாமை நிலை இவருக்கு சாத்தியம்தானா என்று திடீரென்று ஒரு சந்தேகம்.

கையப்புடிச்சு இழுத்தா தண்டனை இருக்குதுன்னு தெரிந்தும் கையப்புடிச்சு இழுக்குற சில பேர்வழிகள் மாதிரி உதைபந்தாட்டத்திலும் விட்டேனா பார் உன்னை என்று கையப்புடிச்சு இழுத்த ஸ்பெயின் வீரரால் உருகுவேக்கு ஒரு கோல் போட்டு ஆட்டத்தின் வேகத்தை அதிகரிக்கும் சந்தர்ப்பம் இருந்தும் கோல்கீப்பர் பிடிக்கிறமாதிரி பந்தை தள்ளி வெற்றியை சந்திக்க இயலாமல் போனது.அடுத்த சில நிமிடங்களிலேயே ஸ்பெயினுக்கு இன்னொரு பெனால்ட்டி சந்தர்ப்பம் கிடைத்தது.முதல் பந்தில் கோலான பந்தை ரெஃப்ரி என்ன காரணத்தால் போங்காட்டமென்று சொன்னாரோ தெரியவில்லை இன்னுமொரு முறை பந்தை உதைக்க வேண்டுமென்று சொன்னார்.ஒருவரே சில நிமிட வித்தியாசத்தில் பந்தை உதைக்கும் போது கோல் கீப்பர் பந்தை தவறவிடுவதும்,பிடிப்பதுமென்பதில் இருக்கிறது மனநிலைகள் மற்றும் பந்தை சுழற்றும் சூட்சுமங்கள்.இதைத்தான் சிலர் அதிர்ஷ்டமென்று பெயர் வைத்துக் கொள்கிறார்களோ.

டென்னிசில் இரண்டு முறை கேம்பால் போடற மாதிரி இனிமேல் உதைபந்தாட்டத்திலும் இரண்டு முறை பந்தை அடித்து கோல் போட்டால்தான் வெற்றி விசில் ஊதலாம் என்ற புதிய சட்டம் கொண்டு வந்தால் நல்லது மாதிரி தெரிகிறது.

கஷ்டப்படுறது நாங்க,பொருளுதவி,சந்தைப்படுத்துதலும் நாங்க ....நோகாமல் நொங்கு தின்கிறது மட்டும் தென் அமெரிக்க அணிகளா என்று ஐரோப்பிய அணிகள் மனசுக்குள் இதுவரை புலம்பிகிட்டுருந்தாங்க.

The ball is in your court.அடிச்சு ஜமாய்ங்க மக்களா!

தோற்றாலும் ஜோசியம் சொல்ற பழக்கம் விடமாட்டேங்குதே எனக்கு!ஜெர்மனிV நெதர்லாந்து இறுதிப் போட்டிக்கு விளையாடப்போறாங்க:)

16 comments:

ராஜ நடராஜன் said...

ஐ.பி.எல் ரகசியங்களையெல்லாம் ஏன்யா பந்தாட்டக்காரர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறீங்கன்னு அர்ஜெண்டினா V ஜெர்மன் போட்டியைப் பார்த்து விட்டு வவ்வால் சத்தம் போடுறார்.

எனக்கும் சந்தேகமாத்தான் இருக்குது.

Karthick Chidambaram said...

ஜெர்மன் வெல்லும் என்று நினைக்கிறேன் நான். பார்க்கலாம்.

தருமி said...

//ஆட்டத்தை ஓடி ஓடி பக்கத்திலிருந்து ரசித்தும் ரசிக்க இயலா மனநிலையில் இருக்கும் ஒரே ஆள் பாவப்பட்ட ஒரே ஜீவன் ரெஃப்ரிதானுங்க//

அவரை விடவும் இன்னொருத்தர் நிலை மோசம்னு நினைக்கிறேன்.அடிக்கிற ஆளும் சிலுவை போட்டுக்குறார்; பிடிக்கிற ஆளும் சிலுவை போட்டுக்குறார். அந்த சாமி .. பாவம் .. என்ன பண்ண முடியும்?! யாருக்கு உதவுறதுன்னு முழிச்சிக்கிட்டு இருக்கணும். இல்ல ..

ராஜ நடராஜன் said...

//ஜெர்மன் வெல்லும் என்று நினைக்கிறேன் நான். பார்க்கலாம்.//

கார்த்திக்!இப்ப இருக்குற அணிகளில் வேகமாக ஓடி பந்து சுழற்றும் அணி ஜெர்மனியென்பதால் உங்கள் ஊகம் சரியாகவே இருக்கும் என நினைக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//அவரை விடவும் இன்னொருத்தர் நிலை மோசம்னு நினைக்கிறேன்.அடிக்கிற ஆளும் சிலுவை போட்டுக்குறார்; பிடிக்கிற ஆளும் சிலுவை போட்டுக்குறார். அந்த சாமி .. பாவம் .. என்ன பண்ண முடியும்?! யாருக்கு உதவுறதுன்னு முழிச்சிக்கிட்டு இருக்கணும். இல்ல ..//

என்னா ஒரு வில்லத்தனம்:)
தர்க்க ரீதியா நீங்க சொல்வது மிகவும் சரியே.சாமிகள் பாடு பெரும் பாடுன்னு கேள்விப்பட்டேன் தமிழகத்தில்.

தருமி said...

//சாமிகள் பாடு பெரும் பாடுன்னு கேள்விப்பட்டேன் தமிழகத்தில்.//

அதென்ன தமிழகத்தோடு நிப்பாட்டீங்க!?

ஹேமா said...

//டென்னிசில் இரண்டு முறை கேம்பால் போடற மாதிரி இனிமேல் உதைபந்தாட்டத்திலும் இரண்டு முறை பந்தை அடித்து கோல் போட்டால்தான் வெற்றி விசில் ஊதலாம் என்ற புதிய சட்டம் கொண்டு வந்தால் நல்லது மாதிரி தெரிகிறது.//

தோத்ததுக்காக புதுசு புதுசால்லாம் சட்டம் கொண்டு வரப்படாது.

வவ்வால் said...

Raj,

enakku mattuma, football paakira ellarukkume so called star players mela erichal thaan.

Reffries paadu kashtam thaan. But duty sariya seyya venama?(munnar chennaiyai serntha sankar enpavar world cupla reffri aga(lines reffri) irunthullar, this year namma aal yaarum illai pola)

Fifa chief vera technology use panna maatten adam pidikirar.

Game mothame 90 mins than sila mins spent seythu refer seythaal ondrum kettu vidaathu.

Foot ball alaiyil wimbledon tennis kaanaamal poivittathu.

Nadal and serena win panni irukkaanga! Vaazhthuvom!

வவ்வால் said...

Paes and cara black also won mixed doubles. Vaazhthuvom.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

ஜெர்மன் வெல்லும்.

எப்பூடி.. said...

@ Karthick Chidambaram

//ஜெர்மன் வெல்லும் என்று நினைக்கிறேன் நான். பார்க்கலாம்.//

எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு

ராஜ நடராஜன் said...

//அதென்ன தமிழகத்தோடு நிப்பாட்டீங்க!?//

பின்ன கவிதையெல்லாம் வேற எங்கே பாடுறாங்க:)

ஓ!நீங்க அந்த சாமிகளை சொல்றீங்களா?அதுக பாட்டுக்கு வாய் திறக்காமல்தான் இருக்குது.ஆசாமிகள் பண்ற தில்லாலங்கடிகள்தான் சகிக்கலை.

இப்ப மருவத்தூர்ல சி.பி.ஐ ரெய்டுன்னு கேள்விப்பட்டேன்.

ராஜ நடராஜன் said...

//தோத்ததுக்காக புதுசு புதுசால்லாம் சட்டம் கொண்டு வரப்படாது.//

தென் அமெரிக்க அணிகள் தோத்தாலும் முக்கியமா அர்ஜெண்டினா,பிரேசில் ஆட்டத்துல நடனம் மாதிரி ஒரு நளினம் இருக்குது தெரியுமா?

குடுகுடுன்னு மராத்தான் மாதிரி ஓடிப்போய் கோல் போடற ஜெர்மனி விளையாட்டெல்லாம் ஒரு விளையாட்டா:)

ராஜ நடராஜன் said...

//Reffries paadu kashtam thaan. But duty sariya seyya venama?(munnar chennaiyai serntha sankar enpavar world cupla reffri aga(lines reffri) irunthullar, this year namma aal yaarum illai pola)//

பார்த்தீங்களா!இந்த மாதிரி நுணுக்கமான தகவல்கள் யாருக்குத் தெரியும்.

பேபியோ மெலோவுக்கு இப்ப கொடுத்த சிவப்பு கார்டை பேபியோனா பதிவுல சொல்ற என்னை மாதிரி:)

//Fifa chief vera technology use panna maatten adam pidikirar.//

நேற்று ஜெர்மனி V இங்கிலாந்து ரிலே செய்தாங்க. இங்கிலாந்து அடித்த பந்து டெக்னிக்கலா கோல்தான்.ரெஃப்ரி கோல் இல்லையென்று விட்டார்.நீங்க சொல்றபடி டெக்னாலஜி உபயோகித்திருந்தா இந்த மாதிரி தவறுகளை சரி செய்திருக்கலாம்.இந்த மாதிரி நிறைய தவறுகள்.

//Foot ball alaiyil wimbledon tennis kaanaamal poivittathu.

Nadal and serena win panni irukkaanga! Vaazhthuvom!//

அந்தக் கொடுமையை ஏன் கேட்கிறீங்க? கால் பந்து விளையாடும் அதே நேரத்தில் விம்பிள்டன் வேற.பிஃபா விம்பிள்டனை ஸ்வாகா செய்து விட்டது உண்மையே.

ராஜ நடராஜன் said...

//Paes and cara black also won mixed doubles. Vaazhthuvom.//

Good News.Thanks.

ராஜ நடராஜன் said...

////ஜெர்மன் வெல்லும் என்று நினைக்கிறேன் நான். பார்க்கலாம்.//

எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு//

நெதர்லாந்துக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்ப்போமே எப்பூடி!