எந்த ஊரில் என்ன பொருள் விற்கனும்ன்னு தெரியாமல் சில தாய்வான் நிறுவனங்கள் ஷெராட்டன் ஓட்டலில் டேரா போட்டு பல பொருட்களை விற்றதில் ஒரு பொருள் இந்தியாவை நினைவு படுத்தியது.முதலாவது வளைகுடா சூட்டுக்கு மனிதனே மதிய வெயிலுக்கு தாங்க முடியாது.அப்புறம் கொசு எங்கே தாங்க போகுது. இங்கே வந்து ஒரு நிறுவனம் கொசுவத்தி வேணுமான்னு விற்குது. இந்தியா டார்ட்டாய்ஸ் மாதிரியெல்லாம் புகை விடாது. டார்ட்டாய்ஸ் விலை என்ன என்பதை கொசு விரட்டியர்கள் யாராவது சொன்னா இந்தியாவில் விற்க முடியுமான்னு யோசிக்கலாம்.
கொசுவத்தியின் விசேசம் என்னன்னா கையில் வாட்ச் மாதிரி கட்டிக்கிறது ஒன்று இன்னொன்று சுவற்றிலோ டேபிளிலோ உட்கார வைக்கிற மாதிரி...
நிறுவனம் 10000 + 10000 மொத்தம் 20000 வாங்கினாத்தான் ஆகும் என்கிறது. விலை விபரமெல்லாம் துண்டு போட்டுத்தான் சொல்வேன்:)
வாங்கி விற்க யாராவது இருக்கிறீர்களா? இல்லைன்னா கூகிளிட்டு நீங்களே தேடிக்கண்டு பிடிக்க வச்சுடுவேன்:)
தொலைக்காட்சியில் பார்க்கிற மாதிரியே இன்னும் நிறைய பொருட்களை அறிமுகப்படுத்தலாம்.
இந்தியாவிலிருந்து யாராவது ஏற்றுமதி பொருட்கள் அனுப்ப விரும்பினால் அணுகவும்.
என்ன இது! மறுபடியும் அனுமார் வால் மாதிரி மறுபடியும் பதிவுகள் நீளும் போல தெரியுதே!ஒரு வேளை இதே ட்ரெண்டை புடிக்கனுமோ:)
10 comments:
ராச நட,
பிசினெஸ் மேக்னெட் சூடா கிளம்பியாச்சு போல. இன்னும் நல்லா நெட்ல புரோமோட் செய்து உங்க தளத்துக்கு டிராபிக் அதிகரிச்சா தான் வியாபாரம் பிக்- அப் ஆகும்.
இது லெமன் கிராஸ் ஆயில் கொண்ட ப்ரேஸ் லெட் ,ஸ்டிக்கெர் னு போட்டிருக்கு.
http://www.alibaba.com/countrysearch/TW/mosquito-repellent.html
ஹி...ஹி ஆன் முன்னரே இயற்கை கொசு விரட்டிப்பதிவில இதை சொல்லி இருப்பேன்,ஆனால் அப்போ பிரேஸ்லெட் ,ஸ்டிக்கெர் ஆ வரலை, இந்த ஆயிலை, குட் ஐட் போல மெசின்ல ஊத்தி பயன்ப்படுத்தலாம், நம்ம ஊருல விக்குது.
ஆனால் விலை கூட சொல்லுறாங்க, ஒரு வேளை இம்பொர்டெட் ஆஹ் இருக்கலாம்.
அலிபா தளத்துல போட்டிருக்கிற விலைப்படி பார்த்தால் ஒரு பிரேஸ்லெட் 10 ரூ வரும் போல.
டார்டாய்ஸ் கொசுவர்த்தி 3 ரூபா தான் நினைக்கிறேன். ஆனால் அதுல அல்லித்திரின் இருக்கும்.அது கெடுதல்.
எலெக்ட்ரானிக் கொசுவிரட்டி கூட கிடைக்குது ஆனால் கொசு ஓடின போல தெரியலை, நான் கூட முயற்சித்து பார்த்துட்டு விட்டுடேன், ரிச்சி ஸ்ட்ரீட்ல கிடைச்சு முன்ன.
வவ்வால்!உங்களை கன்சல்டன்சிக்கு ”வச்சுக்க”னும் போல தெரியுதே:)
தாய்லாந்துக்காரன் ஷெராட்டன் ஓட்டல் செமினார் விலையையும் சேர்த்து நம்ம தலையில் கட்டப் பார்க்கிற மாதிரி தெரியுதே!
அந்த பச்சைக் கலர்,மஞ்சக்கலர் ஜிங்குச்சா கொசுவத்தியே ரூ 30 தேறும் போல தெரியுதே.இது ஆவறதில்ல.
அப்புறம் நான் இந்தியாவுக்கு வந்த போது எது எடுத்தாலும் 50 ரூவா 100 ரூவான்னு சொல்லும் போது நீங்க இன்னும் 3ரூபாய்ல நிற்கிறீங்களே!அது எப்படி?
நீங்க சொல்ற மாதிரி அலிபாபா அல்ல! நான் சொன்னது என்னிடம் நேரடியாக வியாபாரி சொன்னது.இந்த ஊரில் 1 டினார்....இப்ப மன்மோகன் பொருளாதாரத்தால் ரூ 220 தான் அடிப்படையே.ஒரு அரபிக்கு 2 வில்லையை கொடுத்துட்டு 1 வில்லை இலவசம்ன்னு 1 தினாரை கறந்து விட்டார் தாய்வான் பேர்வழி.
ராச நட,
//ல்!உங்களை கன்சல்டன்சிக்கு ”வச்சுக்க”னும் போல தெரியுதே:)//
ஹி...ஹி ஃபீஸ் உன்டு தெரியுமில்ல, நீளப்பட்டி, சிவப்பு பட்டி ,புட்டி :-))
#//தாய்லாந்துக்காரன் ஷெராட்டன் ஓட்டல் செமினார் விலையையும் சேர்த்து நம்ம தலையில் கட்டப் பார்க்கிற மாதிரி தெரியுதே!
//
பின்ன கொண்டு வந்து விக்கிறவன் அந்த ஊரு விலைக்கு தான் விப்பான்,நீங்க அங்க வாங்கி இந்தியாவில விக்க பார்த்தா எப்பூடி?
உற்பத்தி ஆகிற இடத்தில வாங்கினாத்தான் விலை கம்மியா இருக்கும்.
# எக்ஸ்போர்ட் குவாலிட்டி முந்திரிபருப்பு ஒரு கிலோ 720 ரூ , நம்ம ஊரு கடையில விக்கிறது 300 ரூ.கொஞ்சம் உடைச்சல், சின்னதா, கலர் கம்மியா இருக்கும்.
முழுசா ,பெருசா ,உடையாம, வெள்ளையா இருந்தா எக்ஸ்போர்ட் குவாலிடி.
இப்படி பிரிச்சி விக்க தான் விலை வித்தியாசம்.
ஆனால் இதுல என்னா கடுப்புனா எக்ஸ்போர்ட் குவாலிட்டினு இங்கே தான் 720 ரூ,ஆனால் வெளிநாட்டுக்கு அதையே 300-400 ரூ விலையில் தான் விக்குறாங்க.
உற்பத்தியாளர் தான் கம்மியான விலையில் விக்க முடியும், சரி உங்க ஊருல முந்திரி ஒரு கிலோ என்ன விலை?
முந்திரி கிலோ ரூ 450 தேறும் என நினைக்கிறேன்.இது ரீடெய்ல் விலை.ஈரானிகள்தான் இந்த வியாபாரம் செய்கிறார்கள்.முந்திரிக்கு இங்கே டிமாண்ட்தான்.
நீங்க ட்ராபிக் சேர்த்துக்க சொல்லி சிபாரிசு செய்றீங்க.நான் சுளையா சேக் யாராவது கிடைப்பாங்களான்னு தேடுறேன்.கூடவே சிறிய வியாபாரங்களை ஊக்கப்படுத்த முடியுமா எனவும் பார்க்கிறேன்.தமிழகத்தில் விற்கும் பொருட்களை சேட்டன்கள் வாங்கி பேக் செய்து இங்கே காசு பார்த்து விடுகிறார்கள்.என்னை மாதிரி ஒரு சிலர் அவர்கள் நெட்வொர்க்கையும்,லெபனானிகள் நெட்வொர்க்கையும் முறியடிக்க முடியவில்லை.
நான் முன்னாடி கிராபிக் டிசைன் பற்றியெல்லாம் சொன்னது அவுட்டோர் எல்இடி ஸ்கீரினில் ஒமேகா வாட்ச்,பென்ஸ் கார் போன்ற கார் டீலர்களுக்கு பிலிம் காட்ட.எல் இ டி ஸ்கீரின் வாடகைக்கு விற்கும் நிறுவனத்தையும்,அரபி தொலைக்காட்சி நிறுவனத்தையும்,மோஷன்கிராபிக்ஸ் தொழில் நுட்ப வல்லுனர்களையும் இணைக்க முடியுமா என முயற்சி செய்கிறேன்.
ஆஹா அண்ணாச்சி எங்கேயோ போய்விட்டார்:))) வியாபாரம் செழிக்கட்டும் வாழ்த்துக்கள் .
வாங்க தனிமரம்.முயற்சி செய்து பார்க்கிறேன்.ஜெயித்தால் வெற்றி.இல்லாட்டி அனுபவம்:)
கொசுவிரட்டவேண்டும்.
வாங்க!விரட்டி:)
கடேசில கொசுவிரட்டுற வியாபாரம் ஆரம்பிச்சிட்டீங்களா :)))
எப்பிடி இருக்கீங்க நட் (Nat) :))
Post a Comment