Followers

Friday, November 1, 2013

படம் காட்டி விளக்கு

முந்தைய பதிவில் சில படங்களை ஒட்ட வைத்திருக்கலாம்.சொன்ன கருத்துக்கு ஏதுவாக இருந்திருக்கும்.பதிவு போட்டதற்கு குறைந்த பட்சம் மேலதிக தகவல் தர முடியுமா என்று வெளங்காதவன் கேட்டதற்காக வேண்டி இந்த படம் காட்டி விளக்கு.

Model: Foton FL468-II
Year of Manufacture-2011
Made in China

வெளங்காதவன்!இங்கேயான விற்பனை விலையை மட்டுமே குறிப்பிட்டிருந்தேன்.இதனை இந்தியா அல்லது வேறு இடத்திற்கு கொண்டு செல்லும் கப்பல் போக்குவரத்து செலவுகள் கோணத்தில் சிந்திக்க வில்லை.எனவே அசல் நிறுவனமான Foton ல் இந்த உபகரணங்கள் விலை,உதிரி பாகங்கள்,தொழில் நுட்ப உதவிகள்,இறக்குமதி செலவு போன்றவைகளை விசாரிக்கவும்.குவைத்தின் விற்பனை விலை,ஏற்றுமதி செலவு,(கஸ்டம்ஸ் வரி) போன்றவற்றையும் ஒப்பிடவும்.இரண்டில் குவைத்திலிருந்து கொண்டு வருவது லாபகரமாக இருந்தால் வாங்கும் முயற்சியை தொடரவும்.
Model: Foton FL958G-II
Year of Manufacture-2011
Made in China

வாங்கும் இறுதி முடிவு இருந்தால் இங்குள்ள எஞ்சினியரிங் நிறுவனத்துடன் நீங்களே நேரடி தொடர்பு கொண்டு வங்கி தொடர்பு ,கப்பல் ஏற்றுமதி முதற்கொண்டு வியாபாரத்தை மேற்கொள்ள உதவி செய்கிறேன்.A transparent and genuine deal.


9 comments:

நம்பள்கி said...

ரசித்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்; மறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?

வவ்வால் said...

ராச நட,

பிசினெஸ்மேக்னெட் ஆனப்பொறம் செம ஸ்பீடா தான் இருக்கீர் :-))

ஆனா எனக்கு ஒன்னு புரியல , இதுக்கு ஏன் 11 கோடி விலை சொல்லுறீங்க?

புத்தம் புது மெசினே 30-35 லட்சம் தான் வரும். இது ஹெவி டுயுட்டி. மினி ஜேசிபி லாம் 10-12 லட்சம் தாண்டாது.

உங்க ஊரு விலைக்கு இங்கே 10-15 மெசின் வாங்கிடலாம் அவ்வ்.

நீங்க சர்வதேச சந்தை ,விலை நிலவரம் எதுவும் புரியாமலே களத்தில் குதிச்சுட்டிங்களோனு இப்போ டவுட்டா இருக்கு!

வவ்வால் said...

//According to the company, the 3DX Backhoe Loader will save up to Rs 2.25 lakh per year based on the current diesel prices. The price of the new model is Rs 22.25 lakh, ex-Ballabgarh.//

http://www.zigwheels.com/news-features/news/jcb-introduces-new-3dx-backhoe-loader/13332/2

இப்போ வர புதிய மாடல் 22.25 லட்சமாம்.

வவ்வால் said...

//உங்க ஊரு விலைக்கு இங்கே 10-15 மெசின் வாங்கிடலாம் அவ்வ்.
//

50 மெசினே வாங்கிடலாம் போல இருக்கு அவ்வ்!

Raja Nat said...

நம்பள்கி!நான் இப்பவெல்லாம் பந்திக்கே வருவ்தில்லை.மொய் எழுத சொன்னா எப்படி:)

Raja Nat said...

வவ்வால்! நானா விற்கிறேன்.விற்பவரின் விலை விபரத்தை மட்டும் நான் விளம்பர படுத்துகிறேன்.அதுவும் விலைப் பட்டியலை இங்கே மட்டும்தான் சொன்னேன்.

சரி!அது போகட்டும்.ஒரு தாய்வான் நிறுவனம் கொசுவத்தி கடிகாரம்,சுவற்றில் ஒட்ட வைக்கும் கொசுக்கடி வில்லை வேணுமான்னா கேட்கிறது.வேணுமா:)

வவ்வால் said...

ராச அட,

//நானா விற்கிறேன்.விற்பவரின் விலை விபரத்தை மட்டும் நான் விளம்பர படுத்துகிறேன்.அதுவும் விலைப் பட்டியலை இங்கே மட்டும்தான் சொன்னேன்.//

என்னாது இன்னும் பிலாக்கர் மாரி பேசிட்டு, இப்போ பிசினெஸ் மேக்னெட் நீங்க எது சொன்னாலும் நம்பகமா சொல்லனும் இல்லைனா 'நாட்டு நடப்பே" தெரியாதவர் விக்குறது நல்லா இருக்குமானு சந்தேகம் ஆகிடும்.

நல்ல வேளை இத போல மெசின பத்தி உங்க தளத்துல போடலை.

அமெரிக்க கேட்டர் பில்லர் விலை கூட 35 ஆயிரம் டாலர் தான்.

தோராயமா 22 லட்சம் தான் வருது.

பிசினெஸ் மேக்னெட் ஆனப்பொறவு எல்லா விலை விவரம் , தேவை என்னனு விரல் நுனில விவரம் வச்சிக்க வேண்டாமா?

ஒரு வேளை உங்க கிட்டே இத சொன்னவர் உங்க "வியாபார அறிவு' எப்படினு டெஸ்ட் செய்ய 2 மெசின் 11 கோடினு சொல்லி கலாய்ச்சிட்டாரா?

Nat said...

வவ்வால்!திருத்தம் செய்வதற்கு நன்றி.நம்ம வேலை என்னன்னா பிலிம் காட்டுறது மட்டுமே.விலை,பேரம் எல்லாம் வாங்குபவர்,விற்பவரைப் பொறுத்தது.இந்த மெசின்களை ஒரு நிறுவனத்திற்காக விற்க முயற்சிப்பவர் ஒரு சேட்டன்.நமக்கு வாங்குவதிலும்,விற்பதிலும் தொடர்பு இல்லையென்பதால் விலையை நீங்கள் சொன்ன பின்புதான் கூகிள் செய்து பார்த்தேன். வொல்வோ,கேட்டர்பில்லர் போன்ற நிறுவன தயாரிப்புக்களே குறைந்த விலைதான்.சேட்டன் டாலருக்கு பதில் தினாரில் விலையை ஏற்றி விட்டார் என நினைக்கிறேன்.விசாரித்து சொல்கிறேன்.

வெளங்காதவன்!விலை குறிப்பு தவறுக்கு மன்னிக்கவும்.பேரம் பேச இன்னும் கால அவகாசம் இருக்கிறது:)

Meriam Riahy said...

we can supply genuine and replacement parts JCB 3cx & 4cx , HMK ,MST ,VOLVO ,TEREX ,PERKINS, PARKER ,HEMA ,VALEO ,DONALDSON . From Turkey with a good quality and competitive price, ,please feel free to contact me if you need further assistance for your inquiry.
Email : ayyedekparca.tr@gmail.com

AY YEDEK PARÇA CO.LT
ESENLER MAH.RIFAT ILGAZ CAD BAHRIYELI SOK.NO:8/5C
Pendik -Istanbul /TURKEY

Tel: 0090 216 396 24 33 - 0090 216 396 53 69
Mobiel : 00905336849493 whatsapp & viber
Fax: 0090 216 396 62 31
www.ayyedekparca.com
https://vk.com/id274264516