வாழ்க்கையின் இனிமையான தருணங்கள் என்றால் குழந்தை பருவம்.பள்ளி பருவம்,கல்லூரி,காதல்,கல்யாணம்,குடும்பம் என்பதோடு நிச்சயம் தமிழ்மண நேரங்களையும் சேர்த்துக்கொள்ளலாம்.அதனை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ள முடியுமா என்ற நிலையில் யார் என்ன சொல்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை.நக்கீர பரம்பரை வவ்வால்!தொலைக்காட்சி பார்த்தே நடராஜன் பரிட்சை எழுதுகிறான் என்ற கவலையெல்லாம் இனி வேண்டாம்.நேற்று நரேந்திர மோடிதான் அதிகார பூர்வ பிஜேபி தேர்தல் இயக்குநர் என்பது தவிர இந்தியாவில் என்ன நிகழ்கிறது என்பது கூட தெரியாது.இனி காங்கிரஸ் சார்பாக ராகுல் மல்லுக்கட்ட தயாரா என்பதை மட்டும் தொலைக்காட்சியில் எதிர்பார்க்கிறேன்:)
இரண்டு விவாத சேம்பியன்கள் விட்டேனா பார் என்ற போட்டியில் கலந்து கொள்ள முடியாதபடி தற்போது மேய்க்கும் ஒட்டக நிறுவனம் லே ஆஃப் என பலரை வேலை நீக்கம் செய்து விட்டதில் நானும் ஒரு பிரதிநிதி என்பதால் வவ்வால்,வியாசன் விவாத களத்தில் கலந்து கொள்ள முடியவில்லை.மன்னிக்கவும்.
ஒரு லீவு எடுத்துட்டு இந்தியா போய்ட்டு திரும்பி வந்தால் அண்ணன் எப்ப போவான் நாற்காலி எப்ப காலியாகும் என காத்திருந்த நிறுவனம் வந்தவுடன் லே ஆஃப் கொடுத்து விட்டார்கள்.இருந்தாலும் இன்னும் இங்கே ஒட்டகம் மேய்க்கும் அனுமதி இருப்பதால் சரி என கையெழுத்து போட்டுக்கொடுத்து விட்டேன் நமது திறமை நம்மிடம்தானே இருக்கிறது என்ற நம்பிக்கையில். இனி மேல் எந்த நிறுவனத்திலும் பணி செய்வதில்லையென்ற தீர்மானத்தோடு தனக்குத் தானே சுய முயற்சியில் உள்ளேன்.பெரும்பாலும் விளம்பர நிறுவனம், மார்க்கெட்டிங, ஏற்றுமதி-இறக்குமதி போன்றவற்றில் கவனம் செலுத்தலாம் என உள்ளேன். கிராபிக் டிசைனர் மற்றும் இ-மார்க்கெட்டிங் துறையில் யாராவது இருந்தால் சுதந்திரமாக பணி செய்யும் கால அவகாசம் உள்ளவர்கள் rajanatcbe@gmail.com இமெயில் ஐடியில் தொடர்பு கொள்ளவும்.
ஒட்டகம் மேய்க்கிற வேலை ஒருபுறமிருக்க கடந்த சில மாதங்களாக சவுதியின் சட்ட மாற்றங்களைத் தொடர்ந்து இப்பொழுது குவைத் நாட்டிலும் சட்டங்களை இறுக்கும் முயற்சிகள் தொடர்கிறது.வாகனம் ஓட்டுவதில் சாலை விதிமுறைகள் மீறல்,வாகனம் ஓட்டும் உரிமை இல்லாதவர்கள், அங்கீகாரமின்றி விசா காலாவதியாகியவர்கள் என்று உள்துறை தனது கடமையை செய்கிறது என்று சொன்னாலும் கூட கல்யாணமாகியும் பிரம்மச்சாரிகளாக கூட்டாக தங்கும் ராஜஸ்தான் மாநிலத்தவர்கள் பலரையும் இரவு நேரத்தில் தங்குமிடங்களில் புகுந்து விசாரணை செய்து அப்படியே அனுப்பி வைத்து விட்டார்கள் என்ற தகவல்கள் கசிகின்றன.பொதுவாக இந்த நாட்டில் உள்ளவர்கள் சட்டங்களை மதிக்காமல் விசாக்களுக்கு காசு வாங்கி விட்டு எப்படியோ சம்பாதித்துக்கொள் என்று விட்டு விடுகிறார்கள்.விசா நிறுவனங்களும் அப்படியே.இந்திய தூதரக செயல்பாடுகள் பற்றி பதிவாகவும்,பலரின் பின்னூட்டங்களுக்கும் கருத்து சொல்லியாகிவிட்டது. ரஷ்யா காலத்து சிவப்பு நாடாக்கள் இன்னும் இறுகியே நிற்கின்றன. இந்திய தூதரகம் முதலில் தூங்கிக்கொண்டிருந்ததால் பலருடைய பாஸ்போர்ட் கூட இல்லாமல் பலரையும் டெல்லிக்கு அனுப்பி விட்டார்கள் என்றும் இதில் சேட்டன்கள் கிட்டத்தட்ட 50 பேர்கள் இந்தியா சென்று கேரள அரசு மத்திய அரசிடம் முறையிட பின் இந்திய தூதரக அதிகாரி டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியாவில் அனுமதிக்க முடியாது என அழுத்தங்கள் கொடுப்பதாகவும் செய்திகள் வருகின்றன.குவைத் உள்துறை இதற்கெல்லாம் அலட்டிக்காமல் இன்னும் சிறையில் தள்ளிக்கொண்டுதான் உள்ளது.ஜனத்தொகை ரீதியாக இந்தியர்கள் அதிகம் இருப்பதால் சட்டவரைமுறை மாற்றங்களில் பாதிக்கப்படுபவர்கள் அதிகம் இந்தியர்களாகவே உள்ளார்கள்.இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் வெளிநாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் பணிபுரிபவர்களுக்கு வயலார் ரவி என்ற அமைச்சரை மத்திய அரசு வைத்திருந்தும் வயலார் ரவி " இப்படியொரு நிகழ்ச்சி குவைத்தில் நடப்பதே எனக்கு தெரியாது" என்று தொலைக்காட்சிக்கு பேட்டி தருகிறாராம்.
பிரச்சினைகளுக்கு அரசு ரீதியில் தீர்வுகள் வந்தால் நல்லது.இல்லையென்றால் இந்திய வேலையில்லா திண்டாட்டத்தில் பலரும் இந்தியா திரும்பும் பட்சத்தில் இந்தியாவே பாரங்களை சுமக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்.
முன்பு மாதிரி வளவளத்தான் பின்னூட்டங்கள் போடும் கால அவகாசம் இல்லாததால் பின்னூட்ட கருத்துக்களுக்கு பதில் சொல்ல இயலாத சூழலுக்கு மன்னிக்கவும்.

இப்பொழுது பதிவை ஒட்டவைக்கும் போதுதான் பார்த்தேன்.பின்னூட்டங்கள் 94
தொடுகிறது.ஆட்டத்தில் கலந்து கொண்டிருந்தால் இரட்டை சதம்
அடித்திருக்கலாம். வவ்வால்,வியாசன் மற்றும் அனைத்து பின்னுட்ட நண்பர்களுக்கும் நன்றிகள் உரித்தாகுக.
23 comments:
பதிவு பின்னூட்டம் எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் சொந்தமாக புதிய தொழில் ஆரம்பித்து கம்பீரமாகப் பவனி வாருங்கள். அப்புறம் பின்னூட்டங்கள் போட்டுப் பின்னி எடுக்கலாம். புதிய தொழிலுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

நடராஜன்,
Good luck with your search...
Are you looking for openings in Saudi or Kuwait...?
புதிய தொழிலுக்கு வாழ்த்துக்கள்.
புதிய தொழிலுக்கு வாழ்த்துக்கள்.
புதிய தொழிலுக்கு வாழ்த்துக்கள்.
ராச நட,
என்ன ஓய் இப்படி ஒரு குண்டு போடுறீர், சரி மனம் தளராதீர், புதிய முயற்சியில் வெற்றியடைவீர், வாழ்த்துக்கள்!
இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து சென்னைக்கு பக்கமா ஒரு 100 கிமீ தூரத்தில் கொஞ்சம் இடம் வாங்கி விவசாயத்தொழிலில் குதிக்கலாம்னு இருக்கேன், அப்போது உமது தொழிலுக்கு சென்னை பிராஞ்சைஸ் நான் எடுத்துக்கொள்கிறேன், இப்போவே புக் செய்துவிட்டேன் :-))
நிகழ்காலத்தில் சுயதொழில் பற்றி சிந்திக்க முடியாத சூழல்.
------------
ரெவரி ஏதோ ஆலோசனை தருகிறார் போல அதையும் கவனியுங்கள்!
-----------
கடைய அப்படியே விட்டுவிட்டு போயிட்டீரா, அதுக்கு ஏத்தாப்போல வியாசர்வாள் வேற வந்து சிக்கினார் அதான் ஒரு இன்னிங்க்ஸ் ஆடிட்டேன் :-))
அது என்னமோ தெரியல நான் ஆடுற இன்னிங்க்ஸ் எல்லாம் நைன்டி வந்தா தள்ளாடுது,ஹி...ஹி நாம எத்தனை நைன்டி உள்ள இறக்கி இருப்போம்,ஆனால் இந்த பின்னூட்ட நைன்டி தான் படா பேஜாராக்கீது :-))
Change is always good. I am sure you will find something better than that of what you have been doing, soon. Good luck! :)
@ராசா, இக்கட்டிலும் உங்க காமெடி சென்ஸோட இருக்கறது சந்தோசம். இழந்ததை விட அதிகம் பெற வாழ்த்துக்கள். பல சமயங்களில் மாற்றம்தான் நம்மை ஏதாவது சாதிக்க வைக்கும். ஆனாலும் 2 வருசம் கழிச்சி எம்ஜியார் மாதிரி டிராக்டர் ஓட்டிகிட்டு 'கடவுள் எனும் முதலாளி'ன்னு வவ்வாலு பாட போவதை நினைச்சா பயம்மாதான் இருக்கு :)
-------------------
வவ்வால் வியாசர் அக்கப்போரை இப்பதான் பார்த்தேன். சீமான் மற்றும் தமிழுக்காக போராடுபவர்களால் இதுவரைக்கு ஒரு பைசாவுக்கு பிரயோசனம் இருப்பதாக தெரியல. ஆனால் இவர்களால் படாதபாட்டுக்கு உள்ளான வவ்வாலின் இஷ்ட தெய்வம், சேரநாடு தந்த அன்பு தெய்வம் அசின் அம்மையார் செய்த சாதனையை பாருங்கள். அம்மா தனது தனி திறமையால் இந்திக்காரனுவளையெல்லாம் தமிழனாக கன்வர்ட் பண்ணிகிட்டு இருக்குது. அதை இன்னும் சிலநாள் இலங்கையில் சேவை செய்ய விட்டிருந்தால் ராசபட்சே உட்பட எல்லா சிங்களவரையும் தமிழனாக கன்வர்ட் பண்ணி அமைதியை நிலைநாட்டியிருக்கும். அதை கெடுத்தானு. தமிழனுக்கு எதிரி தமிழன்தான்-ங்கறது சரியாத்தான் இருக்கு!
தொடர்புடைய செய்தி
புதிய தொழில் அதிபருக்கு வாழ்த்துக்கள்.
------------
நந்தவனத்தான் said... அசின் அவர்களை
//இன்னும் சிலநாள் இலங்கையில் சேவை செய்ய விட்டிருந்தால் ராசபட்சே உட்பட எல்லா சிங்களவரையும் தமிழனாக கன்வர்ட் பண்ணி அமைதியை நிலைநாட்டியிருக்கும். அதை கெடுத்தானு. தமிழனுக்கு எதிரி தமிழன்தான்-ங்கறது சரியாத்தான் இருக்கு!//
:) சரியா சொன்னிங்க சகோ. இலங்கை தமிழங்களை இவங்க நிம்மதியா வாழ விட மாட்டாங்களே.
நியூஸில் யாருக்கோ நடப்பதை எளிதில் கடந்து விடுகிறோம். தெரிந்தவர்க்கு எனும்போது பகீரென்கிறது.
சுயதொழிலில் இறங்குவது என்பது நல்ல முடிவு. வெற்றி பெற வாழ்த்துகள்.
நந்தவனம்,
ராச நட ,அய்யன் வள்ளுவர் வழி நின்று "இடுக்கன் வருங்கால் நகுக" என இன்னலிலும் இன்முறுவல் காட்டும் நகைச்சுவை உணர்வாளர் என்பதை இது நாள் வரையில் அறியாமலா இருந்தீர் ,அய்யகோ என்னே கொடுமை!
//ஆனாலும் 2 வருசம் கழிச்சி எம்ஜியார் மாதிரி டிராக்டர் ஓட்டிகிட்டு 'கடவுள் எனும் முதலாளி'ன்னு வவ்வாலு பாட போவதை நினைச்சா பயம்மாதான் இருக்கு :)//
எம்.எஸ்/சுவாமிநாதன் செய்தது எல்லாம் டுபாக்கூர் பசுமை புரட்சி ,இனிமே நான் செய்யப்போறது தான் உண்மையான பசுமை புரட்சி, என்னோட ஆப்பரேஷன் கிரீன் ஸ்டார் ஆரம்பிக்கட்டும்,அப்பாலிக்கா அமெரிக்காவுக்கே முருங்ககாய் பார்சல் அனுப்புவேன், உமக்கும் வேண்டும்னா சொல்லும் , ஃபெடெக்ஸ்,புளுடார்ட்னு போட்டுவிடுறேன் , ஒரு முருங்ககாய் 50 ரூவா, கையாளுதல் மற்றும் போக்குவரத்து செலவீனங்கள் தனி!
விவசாயி விவசாயம் மட்டும் செய்தா தேறவே முடியாது அவனே வியாபாரியாகவும் ஆகனும், அக்ரி பிசினெஸ் மேனேஜ்மெண்ட் தெரிஞ்சிருக்கனும்,நம்மக்கிட்டே கொள்ள ஐடியா கொட்டிக்கிடக்கு ,எல்லாம் நடைமுறையில் செஞ்சு ஒரு தொழிலதிபர் ஆகி மும்பைக்கு ஃப்ளைட் புடிச்சிட மாட்டேன் :-))
#//வவ்வாலின் இஷ்ட தெய்வம், சேரநாடு தந்த அன்பு தெய்வம் அசின் அம்மையார் செய்த சாதனையை பாருங்கள். அம்மா தனது தனி திறமையால் இந்திக்காரனுவளையெல்லாம் தமிழனாக கன்வர்ட் பண்ணிகிட்டு இருக்குது. //
ராச நடையே நொந்து நூல்ஸ் ஆகி வெந்து சுண்ணாம்பாகி கிடக்கார், இதுல நீர் வெந்த புண்ணில் விரல விட்டு ஆட்டுறாப்போல இங்கே வந்து "பத்த வைக்கிறீர்"
ஹி...ஹி இங்கே ஒருத்தன் மலையாளம்,இந்திலாம் கத்துக்க முயற்சிக்கிறான் அதை எல்லாம் ஒரு டைம்சும் நியுசா போட மாட்டேங்கிறாங்களே ,என்ன கொடுமை சார் இது!
அமுதவன் சார்!உடனடி நிவாரண மாத்திரை தந்ததற்கு நன்றி.நான் தான் உடனடியாக முழுங்கவில்லை:)
ரெவரி!பின்னூட்டத்திற்கு வருவதற்கு முன்னால் உங்களை கொஞ்சம் கவனிச்சிடலாமே:)
பின்னூட்டம் போடுவதென்பது அந்த கணத்திற்கான உணர்வுகள் என்னைப் பொறுத்தவரையில்.உங்களுக்கு சில பின்னூட்டங்கள் போட நினைத்து முடியவில்லை.கருத்து சொல்லனுமின்னா எத்தனை அடிச்சாலும் தாங்கனும்.இல்லாட்டி எதிர்வினை கருத்துக்களை தவிர்க்கலாம் என்பது எனது கருத்து.வவ்வால் கூட பொட்டியை திறந்து வைக்க சொன்னதாக நினைவு:)
Now let's get into my business.I know every nook and corner of Kuwait city only.At present I am focusing Kuwait market along with India with e-support of USA.
Any suggestion,link will be appreciated and you can contact me on my email for personal discussion.Thanks.
பூபதி பெருமாள்!You too என முன்பு கேட்ட உங்களை எனக்கு நினைவிருக்கிறது:)
நன்றி.
வவ்வால்!இரண்டு பின்னூட்டத்திற்கும் மொத்தமாகவே பதில் சொல்லி விடுகிறேனே!
ஆடுன காலும்,பாடுன வாயும் சும்மா இருக்காதுங்கிற மாதிரி பின்னூட்டத்தை தனி மடலில் பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் இங்கே பின்னூட்டத்துக்கு ஓடிவந்து விட்டேன்:)
நொந்தும் போகவில்லை.நூடிலுமில்லை.முன்பெல்லாம் குவைத்தில் வேலையை விட்டு தூக்கினால் 15 நாட்கள்தான் அவகாசம் தருவார்கள்.இப்பொழுது 3 மாதம் எனப்தோடு லேபர் லா பல சட்டதிருத்தங்களை கொண்டு வந்துள்ளது.சட்டங்கள் சிறப்பானவைதான்.ஆனால் ஓட்டைகள் இருப்பதைக் கண்டுபிடித்து சட்டங்களை பின் தள்ளிவிடுகிறார்கள்.
மலையாளம் தெரியாமலா இதுவரை இத்தனை போஸ்டர்கள் ஒட்ட வச்சீங்க:)
இந்தி கொஞ்சம் தெரியும்ன்னு ரகுதாத்தா சொன்னாரே:)
Varun!Life become routine now, a change and challenge is really thrilling.In a way blog world given a confidence to expect a downside too.
Thanks for your supportive lines.
நந்தவனத்தான்!ஆறுதல் மற்றும் வாழ்த்து பின்னூட்டத்திற்கு நன்றி.
It's a great feeling too!
வியாசன்,வவ்வால் கருத்து சண்டையில் கலந்து கொள்ள முடியாத நேரத் தடங்கலில் எனக்கு வருத்தமே.
பெரும்பாலும் நடிகைகள் மார்க்கெட் போனவுடன் ரசிகர்கள் மறந்து விடுவார்கள்.வவ்வாலின் புண்ணியத்தில் அசின் மட்டுமே விதிவிலக்கு:)
வேகநரி!நடிகை தொழில் அதிபரை ம்ணம் செய்தார்ன்னு தினத்தந்தி செய்தி போடற மாதிரி தொழில் அதிபர்ங்கிறீங்களே:)
கேட்க என்னமோ நல்லாத்தான் இருக்குது!நன்றி.
செங்கோவி!சுமார் மூன்று வருடத்திற்கு முன்பே திட்டமிட்ட ஒன்று.பிளாக்கில் குஷியா இருந்துட்டு தள்ளிப்போய் விட்டது.இப்பொழுது சட்டரீதியாக குவைத்தில் செய்து பார்த்து விடுவோமே என்று ஆர்.எம்.வீரப்பன் சொல்ற மாதிரி இப்ப காலத்தின் கட்டாயம்:)
ஆதரவுக்கு நன்றி.
@வேகநரி, ராச நன்றி
@வவ்வால்
//நம்மக்கிட்டே கொள்ள ஐடியா கொட்டிக்கிடக்கு ,எல்லாம் நடைமுறையில் செஞ்சு ஒரு தொழிலதிபர் ஆகி மும்பைக்கு ஃப்ளைட் புடிச்சிட மாட்டேன்//
நீர் வெவசாயத்துல ஜெயிப்பீரா என்னவோ காலம்தான் பதில் சொல்லும். ஆனா உமக்கிருக்கற வாயையும் புத்தியையும் பார்த்தால் நீர் கன்சல்டன்ஸி வைத்தால் நல்லா காசு அள்ளலாம். உமக்கு நல்ல அனல்டிகல் திறமையும் இருக்குது. அதுலயும் வியாபாரத்தை பத்தி புக்கு எழுதி வித்தவரு கோட்டை விட்ட பாயிண்டை பிடிச்சு லோகம் படம் பாக்க பணம் கட்டுவனுக்கெல்லாம் உலைதான் வைக்க போகுதுன்னு சொன்னீர். உம்மை பற்றியும் நல்லா பில்டப் கொடுக்குறீர். இதை விட என்ன திறமை வேணும் ஓய்?
சில நாளைக்கு முன்னாடி கண்சல்டன்ஸி வைக்குறத பத்தி ஒரு ஃபாரத்தில் சில அமெரிக்க புரபெசனல்கள் கதைச்ச போது ஒருவன் கொடுத்த லிங்க் இது... http://www.youtube.com/watch?v=kXGhPmby0rY என்சாய்!
இப்பத்தான் இதைப் படித்தேன்.
ராச நட,
//மலையாளம் தெரியாமலா இதுவரை இத்தனை போஸ்டர்கள் ஒட்ட வச்சீங்க:)
இந்தி கொஞ்சம் தெரியும்ன்னு ரகுதாத்தா சொன்னாரே:)//
மலையாளம் அறியில்லா, இந்தி நை மாலும், லேஹின் தோடா தோடா மாலும், இதர் ஆவோ, பானி லாவொ, டீகே அச்சா, இதை வச்சுக்கிட்டே மும்பை,டில்லினு சுத்தி வந்தாச்சு :-))
படிக்கிற காலத்துல சயிண்டிபிக் கால்சி கடங்கொடுத்து உதவும் ஒரு மலையாளப்பெண்குட்டி, ஹி...ஹி நான் லேப் வாசலில் மடக்கி புடுங்கிட்டு போயிடுவேன்,ஆனாலும் கடன்னு டீசண்டா சொல்லிக்கிறேன் :-))
அப்போலாம் காலேஜில நாம பெரிய சண்டியருல்ல, ஆனால் எந்த பெண்குட்டியும் பயப்படாது,மலையாளப்பெண்குட்டி மாத்திரம் பயந்துட்டு கொடுத்திரும் :-))
-----------
நந்தவனம்,
கன்சல்டன்சி ஆரம்பிச்சு சொளையா அள்ளலாம் தான் நமக்கு தெரிஞ்சவரு கூட எஜுகேஷனல் கன்சல்டன்சி வச்சி அள்ளிக்கிட்டு இருக்கார், அப்போவே எனக்கும் சொன்னார், நான் தான் மனசாட்சி,மண்ணாங்கட்டினு கேட்கலை, இந்த அட்மிஷன் சீசனில் கோடில அள்ளுவார் மனுஷன், இனிமே நாமளும் கொள்கை கொத்தவரங்காய தூறப்போட்டுட்டு காசள்ள போலாமானு பார்க்கிறேன் :-))
Post a Comment