Followers

Thursday, June 20, 2013

வெற்றியின் முதல் படியில்

சென்ற பதிவில் பின்னூட்டமிட்டு ஊக்கமளித்த அமுதவன் சார்,ரெவரி,பூபதி பெருமாள்,வருண்,நந்தவனத்தான்,வேகநரி,செங்கோவி மற்றும் எதிர்கால விவசாய மேதை கடி வவ்வால்:) அனைவருக்கும் எனது இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொண்டு கச்சேரியை துவங்கலாம்.

வவ்வால்!சென்ற பதிவில் நந்தவனத்தான்"நீர் வெவசாயத்துல ஜெயிப்பீரா என்னவோ காலம்தான் பதில் சொல்லும். ஆனா உமக்கிருக்கற வாயையும் புத்தியையும் பார்த்தால் நீர் கன்சல்டன்ஸி வைத்தால் நல்லா காசு அள்ளலாம்.." என்று ஆலோசனையோடு யூடியுப் பிலிம் வேற காட்டியிருந்தார்.நமக்கு வேற அலை வரிசை ஒண்ணா வெலை செய்யுதா!யோசனை செய்யவும்:)

ஆடுன காலும்,பாடுன வாயும் வரிசையில் எழுதுற கையும் சேர்த்துக்கிடலாம். கடந்த ஒரு மாத காலத்தில் எப்படி தொழில் துறையில் நுழையலாம் என்ற திட்டமிடலின் முதல் சுற்றில் சட்டபூர்வமாக இணைவதற்கான வெற்றியின் முதல் படியில் நுழைந்து விட்டேன்.என்னோடு இணைந்து கொள் என்ற பெரும்பாலோனோரின் விருப்பம்,நம்மை ஆட்டைய போட்டுடுவானோ என்று நான் இணைய நினைப்பவர்களின் தயக்கம்,காசு கொடு என்ன வேணுமோ பண்ணிக்கோ என்ற பல அனுபவங்களோடு என் மீதான நம்பிக்கையையும்,மதிப்பையும் சரியான பல் நோக்கு நிறுவனத்தோடு கொண்டு சேர்த்தது நிவின் என்ற ஒரு தமிழ்க் கரம்.பெரும்பாலான வியாபார பேச்சுக்கள் அலுவலகத்தின் நாறகாலிகளில் பேசி முடியும் போது நேராக வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போய் அரபி காபியும்,இனிப்பும் கூடிய உபசரிப்புடன் வியாபார ஒப்பந்தங்களை பேசி வந்துள்ளேன்.என்னைப் பற்றி அனைத்தையும் நிவினிடம் சொல்லி மெய்யாலுமே பிளாக்கன் என்பதை குறிப்பிட மறந்து விட்டேன்:)காலம் வரும் போது சொல்லிக்கொள்ளலாம்.

வியாபார புதிய சிந்தனைகள்,சுதந்திர எண்ணங்கள்,விளம்பர யுக்திகள்,ருசி செய்து பாரு பிடிச்சா காசு கொடு இல்லாட்டி வேணாம் என்ற பலவற்றிலும் என்னை கவர்வது அமெரிக்காவே.நாமும் அவர்களை பார்த்து நிறைய பொருட்களை பொருள் மாற்றம் செய்து அழகு படுத்தி சந்தை படுத்தி விடுகிறோம். உதாரணமாக சொன்னா மசாலா,இட்லி தோசை மாவு மாற்றங்கள்.நம்ம அம்மா,சகோதரிகள்,கட்டை பிரம்மச்சாரிகள் அனைவரும் ரசம் வைக்கனும்ன்னா புளிக்கரைசலை ஊற வைத்து இறுத்து ஊற்றி ரசம் வைப்பதுதான் பாரம்பரிய ரசம் சமையல் முறை.நம்ம ஊர் புளி பம்பாய்க்கு ரயில் பயணம் செய்து அங்கே ஒரு நிறுவனம் கழிவுகள் நீக்கி multi purpose Tamarind என்றும் சமோசாவுக்கு தொட்டுக்க Tamarind sauce என்றும் பம்பாயில் வித்தது போக கொஞ்சம் பெட்ரோல் டாடரையும் பார்க்கலாம் என்று 1000 x 24 பாட்டில்களை இங்கே கொண்டு வந்து சேர்த்தால் இங்கே மார்க்கெட்டிங் செய்ய முடியவில்லை.இதுல என்ன ஒரு புது செய்தின்னா நம்ம ஊர்ல மோர் குடிக்கிற மாதிரி புளி ஜூஸ்தான் அரேபிய சீசா புகையிழுக்கும் கடைகளின் மெனு என்பது நான் புகைபிடிக்காத ஒரே காரணத்தால் எனக்கு இதுவரை தெரியாது.

மேலும் இப்படி ஒரு பொருள் சந்தையில் இருப்பதே பலருக்கும் தெரியாது.இதனை எப்படி சந்தை படுத்துவதென்பது என்பதில் துவங்கி முன்பு ஒரு முறை தமிழில் புகைப்படக்கலை பதிவுகளின் நிபுணர்களில் ஒருவரான நாதாஸ் ஒரு பிரிட்ஜுக்குள் ஒரு கை மட்டும் போய் ஒற்றை கொக்கோகோலாவை எடுப்பது மாதிரி ஒரு படம் போட்டிருந்தார்.கொஞ்சம் வித்தியாசமான பார்வை இன்னும் நினைவில் நிற்கின்றது.தமிழில் புகைப்படக்கலை பக்கம் போய் மிக அதிக காலங்கள் ஆகிவிட்டன.இனி வந்து பார்க்கிறேன்.

இது போல் விளம்பர யுக்திகள்,பொருட்களின் மார்க்கெட்டிங் துவங்கி இங்கே என் புருசனும் கச்சேரிக்கு போறான்ங்கிற மாதிரி நிறைய இணைய தளங்கள் நொண்டிகிட்டி இருக்கின்றன.இவற்றை கண்டு பிடித்து ஒடைஞ்ச கை,கால்களை ஒட்ட வைக்கவோ அல்லது புதுசா முக பிளாஸ்டிக் சர்ஜரி செய்வது என பல் நோக்கு வியாபார திட்டங்களோடு அதிகம் போட்டிகள் இல்லாத பொருட்களை தமிழகம்,அமெரிக்காவிலிருந்தே ஆன்லைனில் விற்பது என்ற புது முயற்சிகள்.யாராவது ஏற்றுமதி பொருட்கள்,புது யுக்திகள் சந்தைபடுத்தல் ஆர்வம்,பொழுது போக்குக்கு புகைப்படம் எடுப்பவர்கள், இணைய தளம் உருவாக்குபவர்கள்,கிராபிக் டிசைனர்கள் கொஞ்சம் காசும் பார்க்கலாமே என்று நினைப்பவர்கள் பின்னூட்டத்திலோ அல்லது rajanatcbe@gmail.com முகவரிக்கு தனி மடல் அனுப்பவும்.

அமெரிக்க டாலர்ல வித்தா 55-60 ரூபாய்தான் கிடைக்கும். அதையே குவைத் தினாரில் விற்றால் 180-200 ரூபாய் கிடைக்கும்.அமெரிக்காவின் பெயர் அறிமுகத்தால் செந்தில் மாதிரி 60ரூபாய் அமெரிக்கா டாலர்தான் பெருசுன்னா நீங்கள் போக வேண்டிய முகவரி கூகிள் தேடல்.

மறுபடியும் ஒட்டவைக்கும் போதுதான் கவனிச்சேன்.மெல்ல நகர்ந்து,ஊர்ந்து இதுவரையிலான பார்வையாளர் வரிசை 299. இனி யார் 300 என்பதை ஒட்ட வச்சிட்டு பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.இதுவே இதுவரையிலான ஏனைய பதிவர்களுக்கான எனது பின்னூட்டங்கள் என்றால் எண்ணிக்கை வரிசை எகிறும் என நினைக்கிறேன்.காரணம் பதிவுகள் சொல்வதை விட அப்போதைக்கான உடனடி நிவாரண எண்ண வடிகால் பின்னூட்டம் என்பதால் மேயுறதுதான் இதுவரை எனது முதல் விருப்பமாக இருந்தது.இனி கூகிள்காரனிடம் சொல்லி பின்னூட்டத்துக்கும் அலாஸ்கா வரிசை ஏத்த சொல்லனும்:)

இப்போதைக்கு அனைவருக்கும் மீண்டும் நன்றி வணக்கம் சொல்லிட்டு உட்கார்ந்துக்கிறேன்.


10 comments:

reverienreality said...

Sorry I did not see your response on your previous post till now even though I kept coming back to see your response...

Anyway I will ping you offline with some contacts in Kuwait...

Good luck in whatever you decide to do...

Amudhavan said...

சரி நீங்க பெருசா ஆரம்பியுங்க. எதுக்காச்சும் வந்து நாமளும் கலந்துக்க முடியுமான்னு பார்க்கலாம்.

ஜோதிஜி said...

எனக்கு இதை படித்தவுடன் ஒரு நினைப்பு வருவதை தவிர்க்க முடியல. போன பதிவையும் சேர்ந்து படித்த காரணத்தால்.

இக்கட்டான சூழ்நிலைகள் தான் நம் திறமைகளை வெளியே கொண்டு வருகின்றது.

வெளியே வந்து தோற்று ஜெயித்து தோற்று ஜெயித்து என்று மாறி மாறி பல மங்காத்தா ஆட்டங்களை பார்த்து அக்கடான்னு இருக்கின்ற நான் உங்களை இந்த ஆட்டத்திற்கு வரவேற்பதில் பெருமிதம் அடைவதோடு நிச்சயம் உங்கள் புத்தி உங்களிடம் இதுவரையிலும் அறியாத பல சிறப்பு சக்திகளையும் கொண்டு வந்தே தீரும் என்று உறுதியாக நம்பி வாழ்த்துகளை இங்கே எழுதி வைக்கின்றேன்.

வவ்வால் said...

ராச நட,

அலைவரிசை வேற ஒத்துப்போவுதா அப்போ கஷ்டம் தான்,யாருக்கா,யாருக்கோ :-))

அமுதவன் சார் சொன்னாப்போல நீங்க ஆரம்பிங்க, எப்படி சந்தர்ப்பம்னு பார்த்து இணைய பார்க்கிறேன்.

விளம்பர நிறுவனம்னு சொன்னீங்க ,இப்போ புளிபேஸ்ட்னு எல்லாம் சொல்றிங்க,சந்தைப்படுத்துதலும் செய்ய திட்டமா.

நீங்க சொன்னாப்போல போட்டி அதிகமில்லாதவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது தான் ஆனால் எதில போட்டி அதிகமில்லைனு கண்டுப்பிடிக்கிறது தான் கஷ்டமே :-))

நம்ம ஊரிலவும் புளிப்பேஸ்ட், டொமட்டோ பியூரி, இஞ்சிப்பூண்டு பேஸ்ட் என எல்லாம் ரெடிமேடா வந்து ரொம்ப நாளாச்சு.

வளைகுடா நாடுகளில் இரான் ,இராக் புளிகள் பெருசா,இனிப்பா இருக்கும்னு ஜீஸ் போட்டுக்குடிப்பாங்கனு ஒருக்கா ஒருத்தர் சொல்லி இருக்காரு,ஆனால் "புகைப்பானுக்கு" ஜோடினு இப்போ தான் தெரியுது.

வெற்றியின் முதப்படில ஏறி அப்படியே வெற்றிக்கொடி நட்டு, நாலஞ்சு எண்ணைக்கிணருகள் வாங்கிப்போடுங்க, வாழ்த்துக்கள்!

தருமி said...

எல்லா படிகளும் வெற்றிப் படிகளாக அமைய வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

வெற்றியின் முதப்படில ஏறி அப்படியே வெற்றிக்கொடி நட்டு, நாலஞ்சு எண்ணைக்கிணருகள் வாங்கிப்போடுங்க, வாழ்த்துக்கள்!

எண்ணம் போல எண்ணெய் கிணறு அமைந்தால் அதில் காசாளர் பதவியை தர வவ்வால் அவர்கள் நடா அவர்களிடம் சிபாரிச செய்யும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

Anonymous said...

பெரிதாய் எண்ணினால் தான் சிறிதாவது லாபம் கிட்டும், பூமியோடு நிறுத்தாமல் ஏற்றுமதியை பால்வெளி மண்டலம் முழுதும் பரப்புங்கோ, அள்ளலாம் ! :)

வவ்வால் said...

றச நட,

முத படி எரியத சொன்னது தான் சத்தமே இல,எல்லா படியும் யேரிட்டு தான் வருவாரோ?

Anonymous said...

ரொம்ப நாளா ஆளைக் காணோமே. எழதுவதில்லையா.. சீக்கிரம் வாருங்கள் சகா.

Anonymous said...

ரொம்ப நாளாக எழுதுவதில்லையோ. என்னக் காரணம்?