Followers

Saturday, January 26, 2013

மோடி vs ராகுல் தேர்தல் களம்.

நம்மைப் போன்ற கருத்து விமர்சகர்களுக்கு வரும் பாராளுமன்றத் தேர்தலில் இந்திய அளவில் பிஜெபிக்கான ஆதரவும் இல்லாமல் காங்கிரஸ்க்கான ஆதரவு இல்லாத யோக நிலையே என்ற போதிலும் பொதுவான அரசியல் களம் என்ன என்பதை மட்டும் ஆராய்வோம்.

காங்கிரசில் மன்மோகன் சிங்கின் செயல்படா ஊமைத்தனத்தால் தான் ஓய்வு எடுக்க நினைத்தாலும் பதவியை ராகுலுக்கு மாற்றிவிடும் ராஜதந்திரமற்ற நொண்டி வாத்தாகவே வெளியேறுகிறார்.பிஜேபி எந்தவித அரசியல் ஸ்டண்ட் செய்யாமலே பிஜெபியின் வாயிலே வாழைப்பழத்தை ஊட்டி விடப்போகிறது.

இந்திய ஜனநாயகம் வேரூன்றியிருந்தாலும் களநிலையை மாற்ற முயற்சிக்கும் சித்து விளையாட்டுக்களும் கூட நிகழும் வாய்ப்பு உண்டு என்ற போதிலும் பொதுவான இந்திய அரசியல் சூழலை மாற்றி விட முடியாது.மோடியை பிரதமராக முன்னிறுத்தி பிஜெபி ஆட்சிக்கு வருவதால் குஜராத் இஸ்லாமியர்கள் மகிழ்ந்தாலும் இப்பொழுதே வயிற்றில் புளி கரையும் நிலையில் இருப்பவர்கள் தாங்கள்தான் தமிழக இஸ்லாமியர்களைக் காக்க வந்திருப்பதாக நினைக்கும் சில அடாவடி இஸ்லாமிய இயக்கங்களே.
இங்கிருந்து நகர்ந்து தி.மு.க,அ.தி.மு.க என்ற கப்பல்களின் கேப்டன்களை நோக்கினால் .அ.தி.மு.க + பி.ஜெ.பி என்ற நிலையில் வண்டியில் உட்கார்ந்து கொண்டே காங்கிரஸ்க்கு ஒரு கராத்தே கிக் விடும் பலமிருந்த சூழலில் கலைஞர் பம்மி பதுங்கியதிலிருந்தே கூட்டணி கலாச்சாரத்துக்கு மதிப்புக் கொடுக்கிறேன் என்ற பெயரில் காங்கிரசோடு ஒட்டிக்கொண்டு முக்காடு போட்டுக்கொள்ளும் சூழலே தென்படுகிறது.இதனைக் கடந்து கூட்டணி சந்தர்ப்ப வாதம் எப்படி அமைகிறதென இனி வரும் காலத்தில் கணிக்கலாம்.

இந்தக் காலகட்டத்தில் இந்தியா டுடே பத்திரிகை எடுத்த கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கூட்டணி 152 - 162 தொகுதிகளையும் பிஜேபி 198- 208 தொகுதிகளைக் கைப்பற்றும் என்கிறது.இதில் மூன்றாம் அணிக்கான கனவுகளிலும் சிலர் இருக்க கூடும்.ஆனால் சாத்தியங்கள் குறைவு.

பத்திரிகைகளின் கருத்துக்கணிப்புக்கும் பெப்பே காட்டிவிட்டி தேர்தல் முடிவுகள் வருவதுமுண்டு.உதாரணம் கடந்த பாராளுமன்றத் தேர்தல்.

13 comments:

வருண் said...

***அ.தி.மு.க + பி.ஜெ.பி என்ற நிலையில் வண்டியில் உட்கார்ந்து கொண்டே காங்கிரஸ்க்கு ஒரு கராத்தே கிக் விடும் பலமிருந்த சூழலில் கலைஞர் பம்மி பதுங்கியதிலிருந்தே கூட்டணி கலாச்சாரத்துக்கு மதிப்புக் கொடுக்கிறேன் என்ற பெயரில் காங்கிரசோடு ஒட்டிக்கொண்டு முக்காடு போட்டுக்கொள்ளும் சூழலே தென்படுகிறது.***

கலைஞர் போயிட்ட பொறவு உம்ம பொழைப்பு ரொம்ப கஷ்டம்தான். உங்க பொழைப்பை ஓட்டவாவது அவர் இன்னும் ஒரு 10 வருடம் வாழ்ந்தா நல்லது.

ஆத்தா பி ஜே பி யுடன் கூட்டுச் சேரப்போனால் அப்புறம் என்ன எழவுக்கு விஸ்வரூபத்தை வெளியிடக்கூடாதுனு தடை விதிக்கணும்?

கமல் பாடு இஸ்லாமியர் பாடுனு விட்டுட்டுப் போக வேண்டியதுதானே?

இதே விஸ்வரூப பிரச்சினை பொழுது சப்போஸ் தி மு க ஆட்சி நடந்து கொண்டிருந்தால் உங்க வாயெல்லாம் பேசிப் பேசி இன்னேரம் கிழிஞ்சிருக்கும். இப்போ என்னவோ எதுவுமே நடக்காத மாரி மோடியையும், கலைஞரையும் நோண்டிக்கிட்டு , பம்மிக்கிட்டு இருக்கீங்க?

அரசியல் வாதிகளை விட மட்டமா இருக்கீங்க ஓய்!

வவ்வால் said...

ராச நட,

அரசியம் ம்ம்?

//.அ.தி.மு.க + பி.ஜெ.பி என்ற நிலையில் வண்டியில் உட்கார்ந்து கொண்டே காங்கிரஸ்க்கு ஒரு கராத்தே கிக் விடும் பலமிருந்த சூழலில் கலைஞர் பம்மி பதுங்கியதிலிருந்தே கூட்டணி கலாச்சாரத்துக்கு மதிப்புக் கொடுக்கிறேன் என்ற பெயரில் காங்கிரசோடு ஒட்டிக்கொண்டு முக்காடு போட்டுக்கொள்ளும் சூழலே தென்படுகிறது.//

கலிஞர பத்தி சரியா புரிஞ்சுக்கலை, தேர்தலுக்கு வெகு நெருக்கத்தில் சூப்பர் மேன் போல பறக்கப்போரார் , அதிமுக தனித்தே போட்டினு பிகு செய்துக்கொன்டிருக்கும் வேளையில்,பிஜெபியுடன் முதல் ஆளாக கைக்கோர்த்து , கூட்டணி உருவாக்கிவிடுவார் என்பது என் கணிப்பு.

காங்கிரஸ் +தேமுதிக + வைகோ என ஒரு கலவைக்கு சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது.

அம்மையார் தனிச்சவாரினு சொல்வதால் கூட்டணி அமைவதில் சிக்கலே நிலவும். அம்மையாரின் கணிப்பு என்னவெனில் முடிந்த வரை எம்பிக்களை கைப்பற்றிவிட்டு ,தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி பேச்சுவார்த்தையில் அழுத்தம் கொடுத்து சாதிக்கலாம்னு எதிர்ப்பார்ப்பு இருக்கு.

இப்போ முட்டு சந்தில நிக்க போறது , மரம்வெட்டி மருத்துவர், சிவப்பு சட்டை தோலர்கள், மற்றும் திருமா போன்றோர் தான் :-))

சார்வாகன் said...

வணக்கம் சகோ இராச நட,
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அதுக்குள்ளே தேர்தல் அல்சல் ஆரம்பித்தாயிற்றா!!.சரி நம் கணிப்புகளையும் எடுத்து விடுவோம்!!

1. இராகுலா மோடியா?
இராகுல் பிரதம வேட்பாளர் ஆவதை விட மோடி பிரத்ம வேட்பாளர் ஆவது கடினம். இராகுல் ராசா வீட்டுக் கன்னுக்குட்டி எதிர்ப்பு இல்லை என்றாலும் தாயின் கனவை நனவாக்க சூழல் அமையுமா என்பதே கேள்வி.மோடிக்கு குஜராத் தாண்டி அதிக செல்வாக்கு இல்லை என்பதும், சுஷ்மா அம்மா அத்வானியின் விருப்ப தேர்வாகவும் தெரிகிறார். ஆகவே இராகுல் ... மோடி என்பதன் வாய்ப்பு குறைவு.இரு அணிகளிலும் தேர்தல் முடிவு பின்பே பிரதமர் தேர்வு. காங்கிரஸ் அதிக கூட்டணிக் கட்டிகளோடு ஆட்சி எனில் சிங்கம் இன்னும் ஒரு வாய்ப்பு பெறும். காங்கிரஸ் 190+ என்றால் மட்டுமே இள்வல் அரசன் ஆவார்!!

2. எந்த தனிபட்ட கட்சிக்கும் 200 இடங்கள் கிடைக்காது. காங்கிரஸ்,பாஜக இரண்டுமே உட்கட்சி,ஊழல் சிக்கல்களில் திணறுகின்றன. பாஜக பல் மாநிலங்களில் கூட்டணி இன்றி கால் ஊன்றாத மாநிலம் உண்டு. நிதிஷ்குமார் முறைக்கலாம்.உ.பி யில் முலாயம்,மாயா போட்டியில் பாஜக,காங்கிரஸ் இரண்டுமே ஒப்புக்கு சப்பாணி!! , தமிழ்நாடு ,ஆந்திரா
பாஜக பெறும் இடம் 5_10 ஐ விட குறைவே.

3. கூட்டணி ஆட்சி அமையும். இப்போதைய அரசை விட பல்வீனம் ஆனது!
காங்கிரஸ் 150 க்கு குறைவாக பெற்றால் ஆட்சி அமைக்க்லாம்,அல்லது வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கலாம். பாஜக வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தாலும் அது நிலைக்காது எ.கா வி.பி சிங்

4. தமிழக நிலை: அம்மா பாஜக கூட்டு கிடையாது!!!.
அதிமுக+இஸ்லாமிய கட்சி ஒன்று+கம்யுனிஸ்டு(கள்) போல் மொத்தம் 40ல் 30ல் ஆவது போட்டி போட்டு 10 இடஙகள் மட்டுமே கூட்டணி !!

அய்யா நிலை கணிப்பது மிக கடினம். ஒரு இஸ்லாமியக் கட்சி வழக்கம் போல் எப்போதும் கூட்டணியில்!!
வை கோ,தேமுதிக,பாமக என பல் காம்பினேஷன் வந்தாலும் நடக்கும் போது மட்டுமே நிஜம்!

வெற்றி 30:10 என் இருக்கும் என்பதும் அம்மாவுக்கே அதிக வாய்ப்பு
என்கிறேன்!!.

நன்றி!!

செங்கோவி said...

//..வரும் பாராளுமன்றத் தேர்தலில் இந்திய அளவில் பிஜெபிக்கான ஆதரவும் இல்லாமல் காங்கிரஸ்க்கான ஆதரவு இல்லாத யோக நிலையே......//

உண்மை தான்..நானும் எந்த நிலைப்பாடு தான் எடுப்பது என்று குழம்பிப் போயிருக்கிறேன்..ஆனாலும்,ராகுலுக்கு 'பிரதமர்' என்ற பிம்பம் கொஞ்சமும் பொருந்த மறுக்கிறதே..!

ராஜ நடராஜன் said...

வருண்!வாங்க போணிக்கு நன்றி.

உங்க மாதிரி ஜிங்குச்சா ஆளுக பேச்சைக்கேட்டுத்தான் கலைஞரின் நிலைமை இப்படி ஆயிப்போச்சு.தமிழக அரசியலைப் பொறுத்தவரையில் நான் கலைஞரின் ஆளுமையை ரசித்தவன்.அதனால் அவரது கோணல்களையும் சேர்த்தே விமர்சித்தவன்.

என் பொழப்பை நம்பித்தான் கலைஞரும் அவர் பொழப்ப நம்பித்தான் நானும் காலம் ஓட்டறோமா?சிரிப்பான் போட்டுக்கிறேன்:)

ஒண்ணு அரசியலாவது பல கோணங்களிலிருந்து ஆராய கத்துக்கனும்.இல்லைன்னா அரசியல் பேசுறவன் என்ன சொல்ல வாரான் என்பதையா உன்னிப்பா கவனிக்கனும்.குறைந்த பட்சம் கஸாலிகிட்டயாவது கொஞ்சம் பயிற்சி எடுங்க:)

ஏற்கனவே அடாவடி இஸ்லாமிய இயக்கங்களின் ஓட்டு கூட்டணி என்ற பெயரில் ஜெயலலிதாவிடமிருக்குது.கமலைக் காப்பதுவதை விட 40/40 முக்கியமென நினைத்து மார்க்க ஓட்டு சிந்தாம சிதறாம கிடைக்கனும்ன்னு விஸ்வரூபத்திற்கு எதிரான முதல் அம்பை எய்திருக்க வேண்டும்.பெரும்பாலோரின் பின்னூட்டங்கள் அதைத்தான் வெளிப்படுத்துகிறது.

இந்தப் பதிவு பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் இந்தியா டுடேயின் கருத்து கணிப்பு சரியாகிறதா என்ற ஒப்பிடுதலுக்காக மட்டுமே.

ராஜ நடராஜன் said...

கலைஞரின் சூப்பர்மேன் பலமெல்லாம் போயிடுச்சுங்க வவ்வால்.அதே நேரத்தில் அ.தி.மு.கவின் 40 கனவெல்லாம் வாய்க்காது என்பது எனது கணிப்பு.

காங்கிரஸுடன் வை.கோ கூட்டணியா:)சிரிப்பாத்தான் இருக்குது.ஏற்கனவே வை.கோ நிறைய அரசியல் தவறுகளை தேர்தல் நேரத்தில் செய்திருக்கிறார்.மீண்டும் அதே தவறை செய்ய மாட்டார் என நம்புகிறேன்.வை.கோவின் மறுமலர்ச்சி திராவிட கழகத்திற்கு சில எம்.பி சீட்கள் கிடைத்தால் தமிழகத்தின் குரல் பாராளுமன்றத்தில் ஒலிக்க கூடும்.காங்கிரஸுடன் தேமுதிக சாத்தியப்படலாம்.

திருமாவுக்கான சீட் முந்தைய தி.மு.கவின் பலத்தால் கிடைத்தது.இப்ப தி.மு.க வலுவாக இல்லாத காரணத்தால் பின்புற வாயிலாக கூட ஒரு சீட்டை ராமதாஸ் பெறுவது கடினம்.தமிழ்நாட்டுக்குள்ளேயே நடமாட முடியாத பரிதாபம் ராமதாஸ்க்கு:)

தோழர்களின் நிலைதான் கவலையளிக்கிறது.மக்கள் சார்ந்த போராட்டங்களை நடத்துவது கம்யூனிஸ்ட்டுகள்.அல்வா தின்பது திராவிட கட்சிகள் என்பது தமிழகத்தின் சோக அரசியலே.

ராஜ நடராஜன் said...

சகோ.சார்வாகன்!இந்தைய பதிவும்,முந்தைய பதிவும் இக்பால் செல்வன்,உங்க தளத்தின் கலந்துரையாடலில் உருவான ஒன்று.

ராகுல் காந்தியின் அரசியல் மெச்சூரிட்டியின்மை,வாரிசு அரசியல் இந்திய ஜனநாயகத்திற்கு கேடு என்ற இரு காரணங்களால் ராகுல் காந்தி பிரதமராக முன்னிலைப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை.முந்தைய இந்திரா,ராஜிவின் காலகட்டங்கள் வேறு இப்பொழுது இணைய காலம் வேறு என்று நினைக்கின்றேன்.ஆனால் பிஜேபியின் இந்துத்வா,உள் குத்து வேலைகளினால் மன்னராட்சி முறை இன்னும் நீடிக்கும் அபாயத்தில்தான் இந்தியா இருக்கிறது.கூடவே இந்திய மாநிலங்கள் அளவிலும் அப்பன் சேர்த்த பொது சொத்தை மகன்,உறவினர்கள் காப்பாற்ற வேண்டிய சூழலில்தான் இந்திய ஜனநாயகம் இருக்கிறது.இது பரவலாக அனைத்து மாநிலங்களிலும் உருவாகும் ஒரு ஜனநாயக தீமையாக கருதுகிறேன்.

இந்திய அரசியல் தலைவர்களையும் தாண்டி பெரியண்ணன் அமெரிக்காவுக்கு சாதகமாக இருக்கும் பிரதமராக இருக்க வேண்டுமென்றால் மோடி டக் அவுட் ஆகி ராகுல்தான் செல்லப்பிள்ளையாகி விடுவார்:)

வடமாநிலங்களைப் பொறுத்த வரையில் மக்கள் காங்கிரஸின் நிர்வாகத்தின் மீது கோபமாக இருக்கிறார்கள் என நினைக்கிறேன்.எனவே வடமாநிலங்களில் பிஜேபி ஒரு ஸ்வீப் செய்யும் சாத்தியமிருக்கிறது.

நீங்கள் குறிப்பிட்ட எண் 3 நிகழுமா என்பது தெரியவில்லை.

எண் 4ல் குறிப்பிட்ட படி நிகழலாம்.ஆனால் இந்த அடாவடி இஸ்லாமிய இயக்கங்கள் சேரும் கட்சியின் நிலை ஆமையோ அமினாவோ புகுந்த வீட்டுப் பழமொழிதான்:)

நாம் மனுஷ்யபுத்திரன் பற்றி பின்னூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த வினவு தளத்தில் மனுஷ்யபுத்திரன் பற்றி தரக்குறைவாக உலகம் காக்க வந்த உத்தமபுத்திரர்கள் சொன்னதை மனுஷ்யபுத்திரனே விஸ்வரூப தடை சரியா என்ற கலைஞர் செய்தி நேரலையில் சொல்லி விட்டார்.தன் மீது ஒருமை நிலையில் அடாவடி பந்துக்கள் பேசியதையும் கூட பொறுமையாக வெளிப்படுத்தினார்.

தி.மு.கவுடன் ஏனைய கட்சிகள் சரி.பாட்டாளி மக்கள் கட்சி மறுபடியும் குரங்கு தாவல் சாத்தியப்படுமா?தர்மபுரி சாதிக்கலவரங்களைத் தொடர்ந்து திருமாவை தூண்டி விடுவதே கலைஞர்தான் என்கிறார் ராமதாஸ்.ஒரு புறம் கூட்டணிக்கட்சி ஓட்டுக்களின் எண்ணிக்கையே அரசியல் மந்திரம் என்ற போதிலும் ராமதாஸுடன் கூட்டணி என்பது சொந்த செலவு சூனியம்தான்.

தமிழக கட்சிகளின் கூட்டணி உடன்பாட்டுக்குப் பின் எவ்வளவு எண்ணிக்கை என்பதை மீண்டும் ஆராய்வோம்.

ராஜ நடராஜன் said...

செங்கோவி!நலமா?எங்கே பதிவுகள் போடுவதேயில்லை.இங்குமங்கும் அத்தி பூத்தாற் போல சில பின்னூட்டங்களை மட்டும் காண்கிறேன்.

ராகுல் காந்தியின் வாரிசு அரசியல் இந்திய ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்ற காரணத்தோடு அவர் முன்னின்று நடத்திய தேர்தல்கள் பெரும்பாலானவை தோல்வியையே சந்தித்திருக்கின்றன.இதற்கான காரணம் பிரதமர் மன்மோகன் சிங்கின் செயல்படாத நிர்வாகத்திறமையும் கூட காரணம் என்பேன்.பிரதமரும் ஆளை விட்டாப்போதும்ன்னு ராகுலை உட்கார வைச்சுட்டு ஓய்வெடுக்க நினைத்தாலும் ராகுலுக்கும் நாற்காலியில் உட்கார பயம்:)காங்கிரஸின் கிழட்டு அமைப்பை நிர்வகிக்கும் வலு ராகுலுக்கு இல்லையென்றே கூறலாம்.ஏதோ அம்மா மடிப்பிள்ளையாக கொஞ்சம் நிர்வாக பயிற்சி எடுக்கலாம்.

ராகுலின் முதிர்ச்சியற்றதன்மைக்கு ரஜனி மீது எந்த போலீஸ் கேசுமில்லை.அதனால் ரஜனி காங்கிரஸில் சேரலாமென்பதை சொல்லி முடிக்கிறேன்:)

வருண் said...

அரசியல் மேதாவி நடராஜனுக்கு இன்னொரு சம்மந்தமில்லாத பின்னூட்டம்.

***ப.சிதம்பரம் புத்தக வெளியீட்டு விழாவில் அவர்
பிரதமராக வேண்டும் என்று எழுப்பப்பட்ட
கோஷ்டி கானத்தில் கமலஹாசனின் குரலும்
இணைந்திருந்ததால் கடுப்பான ஜெயலலிதா
தக்க சமயம் பார்த்து பழி வாங்கி விட்டார் என்பதே
அந்த செய்தி.***

கமலு, ப சி பிரதமாராகனும் சொன்னதை அரசியல் மேதாவின்னு நெனச்சுண்டு இருக்க ராசநடராசன் போல கமலுக்கு கைதடியாக இருக்கும் ஆட்கள் கண்டுக்காம நடிக்கலாம். ஆனால், ஜெ ஜெ யும் சீமானும் ஆப்பு வைப்பது அதனாலதான்.

வவ்வால் said...

ராச நட,

பங்கு போல உம்ம மூக்குல குத்தாம விட்டது தப்பா போச்சே :-))

ஊருல எல்லார்கிட்டேவும் குத்து வாங்குற பங்குகிட்டே குத்து வாங்கவும் ஒருத்தர் இருக்காரேனு ஆச்சரியமா இருக்கு :-))

சூப்பர்மேன் என சொன்னதை பவருக்காக இல்லை ,கூட்டணிவிட்டு ஜிவ்வுனு பறந்து போய் புதுக்கூட்டணி வைக்கப்போறதை சொன்னேன், இரண்டு முறை ஆட்சியில் தொடர்ந்து இருந்ததால் காங்கிரஸ் கட்சி மீது இயல்பாகவே மக்களுக்கு அதிருப்தி ,மேலும் செயல்பாடும் சுத்த மோசம், காங்கிரசுக்கே அடுத்து ஆட்சியமைப்போம்னு நம்பிக்கை போயிடுச்சு எனலாம்,சமிபத்திய எரிவாயு அறிவிப்புகள், தொடர்ந்து மக்கள் விரோத அறிவிப்புகள் என செய்வதைப்பார்த்தால் வீட்டுக்கு போறதுக்கு முடிக்க வேண்டியதை முடிப்போம்னு நினைக்கும் போக்கே தெரிகிறது.

வரும் தேர்தலில் தமிழகத்தின் இரண்டு பெரிய திராவிட கட்சிகளும் காங்கிரஸுடன் கூட்டணி வைக்காது,வைத்தால் மிகப்பெரிய மக்கள் எதிர்ப்பையும், தோல்வியையும் சந்திக்க நேரிடும்.

பிஜேபிக்கு பெரிய ஆப்ஷனே தமிழகத்தில் இல்லை, ஏதேனும் பெரிய திராவிட கட்சி ஒன்று வந்தால் போதும்னு கதவை தொறந்து வச்சி காத்திருக்கிறார்கள், அம்மையார் தனித்து என பிகு செய்யும் நேரத்தில் தாத்தா வண்டி முன்ன போய் பிஜேபியுடன் சேர்ந்துக்கும் என்பதே கணிப்பு ,அதை சொன்னால் , சூப்பர் மேன் பவரை நினைச்சுக்கிறீர்:-))

அம்மையாருக்கு 40 கிடைக்கும்னு எங்கே ஓய் சொன்னேன், முடிந்த வரையில் அதிக எம்பிக்கள்னு தானே சொல்லியிருக்கேன், 20 கிடைச்சாலும் போதும் ஆடி வைக்கலாமே.

இந்திய நிலவரம் எப்படியோ இருக்கட்டும் ஆனால் தமிழகத்தில் காங்கிரசுக்கு எதிரான கட்சி/கூட்டணிக்கே அதிக எம்பிக்கள் கிடைப்பார்கள். இதனை உங்க இத்து மூன நினைவகத்துல ஏத்தி வச்சுக்குங்க, வவ்வால் ஒரு தீர்க்க தரிசினு தேர்தலுக்கு பிறகு நீரே சொல்வீர் :-))

வைகோ மற்றும் விஜயகாந்த இருவரும் அரசியல் நிதி நிலவரம் கருதி கூட்டணி வைக்கும் கட்சிகள், தேர்தல் செலவுக்கு யார் கைக்கொடுப்பார்கள் என பேரம் பேசி கூட்டணி வைப்பார்கள், எனவே காங்கிரஸ் பக்கம் இருந்து நல்ல "ஆஃபர்" வந்தால் போய்விடுவார்கள், அடுத்த" ஆஃப்ர் " பிஜேபியுடன் வரும் என நினைக்கிறேன்.

வைகோ எல்லாம் கைப்புள்ள போல எவ்வளவு அடி வாங்கினாலும் வலிக்கலையே ரகம், கலைஞரால் கொலைகாரசதி பட்டம் கிடைச்சும் கலைஞர் கரத்தை வலுவாக்குவோம்னு நின்னவர் தானே, எனவே ராகுல் இளையவர், புதுசா கொள்கை வைப்பார்னு போய் நின்னாலும் நிப்பாரு :-))

பத்திரிக்கைகள் சொல்லும் ஒரு கணிப்பு திமுக+ வி.காந்த் + காங் அல்லது வைகோ என கூட்டணி உருவாகும் எனப்பேச்சு.

காங் பொறுத்தவரையில் தமிழகத்தின் தேசிய பாமக ஆகிவிட்டது(உமக்கு புரியாது என்பதால் செல்வாக்கு போய்விட்டது என தெளிவாக சொல்லிவிடுகிறேன்), இந்த பாராளுமன்றத்தேர்தலில் யாருக்கும் தேவையில்லாத கட்சியாகிவிட்டது,எனவே அவர்களே "பசை" வைத்து யாருடனாவது ஒட்டிக்கொண்டால் தான் உண்டு :-))

பிஜேபியுடன் அம்மையார் கைக்கோர்க்க 50:50 வாய்ப்பு தான்,இந்நிலையில் பிஜேபி சரியாக பேச்சு வார்த்தை நடத்தினால் ,வி.காந்த்,வைகோ மற்றும் சில உதிரிக்கட்சிகளை இழுத்து ஒரு கூட்டணி வைக்கலாம், ஏன் திமுகவும் உள்ளே வந்துவிடும், இழுபறி சீட் பங்கிடுவதில் வந்து நிற்கும்.

இந்த தேர்தலில் தமிழகத்தின் உதிரிக்கட்சிகள்(தேமுதிக,மதிமுக போன்றவை) பலமாக உருமாற ஒரு வாய்ப்பு.

தமிழகத்தில் கூட்டணி சாவி இப்பொழுது அம்மையார் மற்றும் விகாந்த் வசம் :-))

இரண்டு தேசியக்கட்சிகளும் இவர்களுடன் கூட்டணி வைக்க தயாராக உள்ள சூழல்.

அடுத்த பின்னூட்டத்தில் அம்மையாரின் அரசியல் நோக்கினை தனியாக சொல்கிறேன்.

ராஜ நடராஜன் said...

வருண்!நேற்று கமல் இன்னுமொரு வார்த்தை உங்க ஊரிலிருந்தே விட்டிருக்கிறார்.பெரொனியாக்காரங்களுக்கு அல்லக்கையா இருக்கறதை விட கமலுக்கு அல்லக்கையா இருக்கிறது பெருமைதான்.காரணம் உணர்வு,எழுத்து,கவிதை இவைகளுக்கும் மேலாக பகுத்தறிவாளனாக இருப்பதால்.

ராஜ நடராஜன் said...

வவ்வால்!எவ்வளவு கொடுக்கிறோம்!இணைய பாக்சிங்ல சில நேரம் குருட்டு குத்து வாங்கவும் செய்யனும்:)

உங்க பின்னூட்டத்தை மீண்டும் ஒரு முறை நீங்க சொல்றது சரியா வருதான்னு பார்க்கலாம்.

"இந்த தேர்தலில் தமிழகத்தின் உதிரிக்கட்சிகள்(தேமுதிக,மதிமுக போன்றவை) பலமாக உருமாற ஒரு வாய்ப்பு" என்பதற்கு எனது ஆதரவை மட்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்னும் நாட்கள் இருக்குதானே!கணிப்போம்.

ஜோதிஜி said...

விமர்சனங்களுக்கு அப்பால் மோடி வருகையை எதிர்பார்க்கின்றேன்