தெற்காசியாவின் மூலையில் மிதந்து கிடந்த இலங்கை தீவை பிரபாகரன் உலகின் வரைபடத்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டார். போரின் இறுதி நாட்களின் அவலங்களையும்,மர்ம முடிச்சுகளின் உண்மைகளையும் தமது காரண காரியங்களுக்காக மறைத்தோ பொய்களினால் நிரப்பி விடும் அபாயம் தொடர்கிறது.இன்னும் உலக ஊடகங்கள் அனுமதிக்காத நிலையிலும் அங்கொன்றும் இங்கொன்றும் உண்மை தன்னை முகம் காட்டிக் கொண்டுள்ளது.இதில் சோகம் என்னவென்றால் சில மைல் தூரங்களில் நின்று கொண்டு தமிழகம் உதவ இயலாமல் மௌனம் காப்பது.


எல்லாம் முடிந்து விட்டது என்று பறை சாற்றிக் கொள்ளும் இலங்கை அரசு புதிய அரசியல் தீர்வுகளுக்கான நம்பிக்கையைத் தராமல் மக்களை முட் வேலிகளுக்குள் அமர்த்தி மனித உரிமை ஓட்டெடுப்பிலும் வெற்றி முகம் காட்டுகிறது.இதுவரை காலனிக்காரனாய் இருந்தவர்கள் ஓரளவுக்காவது மனிதநேயம் பற்றிய அனுதாபம் காட்டுவது தெரிகிறது.சுதந்திரம் பேசிய மார்க்சீய நாடுகள் தங்கள் சுய முகங்களை காட்டியிருக்கின்றன.
மேற்கத்திய நாடுகளாய் ஐரோப்பா மற்றும் அமெரிக்க பத்திரிகைகள் மெல்ல உண்மைகளைப் பேச ஆரம்பித்திருக்கிறது.இவை இலங்கை அரசின் சுயமுகத்தை உரித்துக் காட்டும் என நம்புவோம்.இதிலும் Bruce Fein கொண்டு வரும் நீதிமன்ற வழக்கிலும் கூட இலங்கை அரசு ஜெயித்து விடும் சாத்தியம் இருக்கலாம்.ஆனால் பூகோளமாய் தனக்குத் தானே தனது இறையாண்மையை பாகிஸ்தான்,சீனா,இந்தியா என்ற மூன்று துருப்புச் சீட்டுகளிலும் போரில் அடகு வைத்து விட்டது.இதிலும் கூட மூன்று சீட்டுக்காரனாய் கால நிலைக்குத் தக்கபடி கண்ணாமூச்சி ஆடலாம்.ஆனால் பக்கத்து கரையாய் தமிழகம் காத்திருக்கிறது இன்று அரசியல் காரணங்களுக்காக தோல்விகளால் துவண்டு போன போதிலும்.இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விசயம் காங்கிரஸ் தவிர தமிழக அரசியல் கட்சிகளுக்கு ஈழம் குறித்த மாற்றுக் கருத்து இருப்பதாகத் தெரியவில்லை தேர்தல் அரசியல் நிலைப்பாடுகளால் பிரிந்து நிற்கும் சோகம் நினைவுக்கு வருவதைத் தவிர. மாநிலப் பிரச்சினைகளில் கருத்து வேறுபாடும் வெளியுறவு கொள்கையில் ஒருமித்த கருத்தும் என இரு வேறு நிலைபாடுகள் நமக்கு அவசியம்.நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் உலகச் சூழல்,தமிழக அரசியல் சூழல் மாறும் காலம் வந்து கொண்டிருப்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியவை.
உண்மையான தூரப்பார்வை அரசியல் இருக்குமானால் இலங்கை அரசு தனக்குத் தானே சூழல்களை பாதகமாக மாற்றிக் கொள்வதை விட மக்களை தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தட்டும்.நிலத்தில் உழைத்தும்,மீன் பிடித்தும் தனது வீட்டை இருக்கும் மரம்,பனைகளை வைத்து மீள் கட்டிக் கொள்வார்கள்.அதற்குப் பின் அவர்களை சக மனிதர்களாக நடத்துவதும் இரண்டாம் தரக் குடிமகனாய் மீண்டும் மாற்றுவதும் பற்றி யோசிக்கட்டும்.இவைகள் எல்லாம் நிகழாத பட்சத்தில் மக்களின் எதிர்காலம் குறித்த பார்வையில் ஒருமித்த கருத்துக் கொண்ட புதிய அரசியல் அமைப்பு தோன்றுவது அவசியமாகிறது.அது தாய் மண்ணுக்குள்ளா அல்லது புலம் பெயர்ந்தா என தீர்மானிக்க வேண்டியவர்கள் மண்ணின் மைந்தர்களே.
படங்கள் கொண்டு வந்த இடங்கள்
1)http://history1900s.about.com/library/holocaust/blpictures.htm
2) சயந்தனின் துயரப் பதிவு : http://sajeek.com/?p=263
16 comments:
தெற்காசியாவின் மூலையில் மிதந்து கிடந்த இலங்கை தீவை பிரபாகரன் உலகின் வரைபடத்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டார்.//
வணக்கம் சகோ,
இலங்கைத் தீவில் உள்ள ஒரு இனத்தை உலகறியச் செய்த பெருமை அவரையே சாரும்.!
அவர்க்கு நிகர், எவரும் இல்லை. அவர்க்கு நிகர் அவரே!
உண்மையான தூரப்பார்வை அரசியல் இருக்குமானால் இலங்கை அரசு தனக்குத் தானே சூழல்களை பாதகமாக மாற்றிக் கொள்வதை விட மக்களை தங்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தட்டும்.//
இன்றும் இருபத்தியொரு வருடங்களாக யாழ்ப்பாணத்தில் உள்ள வலிகாமம் வடக்குப் பகுதி மக்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப் படாமல் அகதிகளாக, ஏதிலிகளாக பிறர் காணிகளில் வாடகை செலுத்தி வாழ்கிறார்கள்.
அரசு படையினரின் உதவியோடு, அவர்களின் சொந்த நிலங்களில் பயிர்ச்செய்கையினை மேற் கொண்டு காய் கறிகளை ஏற்றுமதி செய்து இலாபமீட்டுகிறது.
தமிழிஷ் இல் இணைக்கலையா சகோ.
வணக்கம் சகோ!நீரூபன்!
இது மீள்பதிவு மட்டுமே.வட,கிழக்கு மாகாணங்களில் பிரபாகரன் குறித்த பல தரப்பட்ட கருத்துக்கள் இருக்கலாம்.ஆனால் தமிழகத்தைப் பொறுத்த வரையில் பிரபாகரன் தமிழர்களின் அடையாளம்.
பிரபாகரன் குறித்த எதிர்க்கருத்துக்களும் மோதுகின்றன.ஆனால் எதிர்கருத்தாளர்களும்,டக்ளஸ்,ஆனந்தசங்கரி,பிள்ளையான்,கருணா போன்ற மறுதலிப்பாளர்களும் ஈழமக்களுக்கு பயனுள்ளதாக எதையும் சாதிக்கவும் இல்லை.இனப்படுகொலைப் போர்க்குற்றவாளிகளுடன் கரம் கோர்த்தது தவிர.
படுகொலை நடந்த போது போரை நிறுத்தாத மேலை நாடுகள் இப்போது இந்த அறிக்கை மூலம் ஏதாவது செய்யுமா? நல்லது நடக்க வேண்டுமென்றே எதிர்பார்க்கிறோம்.
//இன்றும் இருபத்தியொரு வருடங்களாக யாழ்ப்பாணத்தில் உள்ள வலிகாமம் வடக்குப் பகுதி மக்கள் சொந்த இடங்களில் மீளக் குடியமர்த்தப் படாமல் அகதிகளாக, ஏதிலிகளாக பிறர் காணிகளில் வாடகை செலுத்தி வாழ்கிறார்கள்.
அரசு படையினரின் உதவியோடு, அவர்களின் சொந்த நிலங்களில் பயிர்ச்செய்கையினை மேற் கொண்டு காய் கறிகளை ஏற்றுமதி செய்து இலாபமீட்டுகிறது.//
ஈழமண்ணிலிருந்து உண்மையான களநிலைகள்,கருத்துரிமை எந்த வித அடக்குமுறையுமின்றி வெளி வரவேண்டும் அது ராஜபக்சே குழுவிற்கு சாதகமானதானாலும் கூட.அதற்கான சூழல்கள் ஏற்படாத வரை இலங்கை இருண்ட தீவே.
பொதுமக்கள் வாழும் நிலங்களில் ராணுவத்தின் ஊடுருவல் என்பதே மக்களாட்சிக்கான அறிகுறியாக இல்லை.குவைத்,ஈராக் போர்க்கால சூழலில் கூட அமெரிக்க ராணுவம் நகர்ப்புறங்களில் இல்லாமல் எல்லையோரத்தில் மட்டுமே தார்ப்பாய்கள் அமைத்தும்,கேம்ப் நகரும் வீடுகள் அமைத்தும் தனிமைப்பட்டிருந்தார்கள்.
உங்கள் கூற்றில் நிலப்பிரபுத்துவத்தின் மறுசாயலே ராணுவம் மக்கள் உழைப்பை சுரண்டுவது.
//படுகொலை நடந்த போது போரை நிறுத்தாத மேலை நாடுகள் இப்போது இந்த அறிக்கை மூலம் ஏதாவது செய்யுமா? நல்லது நடக்க வேண்டுமென்றே எதிர்பார்க்கிறோம்.//
வாருங்கள் சார்வாகன்!மாறிய உலக அரசியல் களநிலையில் அலைமோதும் தமிழர்கள் பிடித்துக்கொள்ள வேண்டிய ஒரே கட்டுமரம் ஐ.நா அறிக்கையின் போர்க்குற்றங்கள் அறிக்கையே.
போர்க்குற்றங்களையும் மனித இனப்படுகொலைகளையும் உலகரங்கில் எப்படி வித்தியாசப்படுத்துகிறார்கள் என்று ரதி அவர்கள்
http://lulurathi.blogspot.com/2011/05/genocide-self-determination.html
இனப்படுகொலையும் சுயநிர்ணய உரிமையும் - Genocide & Self- Determination என பதிவிட்டிருக்கிறார்கள்.ஆழ்ந்த வாசிப்பில் இதன் புரிதல் தெரியும்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு சொன்ன வார்த்தைகளின் நினைவிலிருந்து மொத்த தமிழ் மக்கள் குரலுடன் (இங்கும் அங்கும் சில ஆடுகள் பிரிந்து போவதும் நிஜமென்ற போதிலும்) ஈழத்தை உயிர்ப்பித்தலில் மட்டுமே நமது வெற்றி அடங்கும்.
உங்கள் கூற்றில் நிலப்பிரபுத்துவத்தின் மறுசாயலே ராணுவம் மக்கள் உழைப்பை சுரண்டுவது.//
சகோ, என் கருத்தினை நான் அரை குறையாக எழுதி விட்டேன் என நினைக்கிறேன்.
சொந்த இடங்களில் இருந்து மக்களை இடம் பெயர்த்தி, அம் மக்களின் சொந்தப் பூமியில் அரசாங்கமானது இராணுவத்தின் உதவியோடு பயிர்ச் செய்கையினை மேற் கொண்டு ஏற்றுமதி செய்து இலாபமீட்டுகிறது, ஆனால் மக்கள் மட்டும் இன்றும் சொந்த இடங்களிற்குப் போக முடியாமல் 21 வருடங்களிற்கும் மேலாக ஏதிலிகளாக வாழ்கிறார்கள்.
உலகம் நிச்சயம் செவிசாய்த்தே ஆகவேண்டும்.காலம் தாமதாகலாம்.
இனி எல்லாமே அகதித் தமிழரான புலம்பெயர் தமிழர்களிடமும் உலகத் தமிழரிடம் மட்டுமே.ஒன்றாகச் செயல்படுவோம்.தலைமுறையாவது சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் !
நம்ம சகோ சொன்ன மாதிரி இலங்கைத் தீவில் உள்ள ஒரு இனத்தை உலகறியச் செய்த பெருமை அவரையே சாரும்.!
அவர்க்கு நிகர், எவரும் இல்லை. அவர்க்கு நிகர் அவரே!ஆம்.
//உலகம் நிச்சயம் செவிசாய்த்தே ஆகவேண்டும்.காலம் தாமதாகலாம்.
இனி எல்லாமே அகதித் தமிழரான புலம்பெயர் தமிழர்களிடமும் உலகத் தமிழரிடம் மட்டுமே.ஒன்றாகச் செயல்படுவோம்.தலைமுறையாவது சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் !//
ஹேமா!ஐ.நா போர்க்குற்ற அறிக்கையை மட்டுமே இறுகப் பற்றிக்கொண்டு இனி பயணிப்பது பலன் தரும்.கூடவே ஒற்றுமை என்பது மட்டுமே இதனை வலுவாக்கும்.
புதிய தலைமுறை சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறது என்று தெரிந்து கொண்டு மூச்சு விடுவது இன்னும் சுகம் தரும்:)
//சகோ, என் கருத்தினை நான் அரை குறையாக எழுதி விட்டேன் என நினைக்கிறேன்.
சொந்த இடங்களில் இருந்து மக்களை இடம் பெயர்த்தி, அம் மக்களின் சொந்தப் பூமியில் அரசாங்கமானது இராணுவத்தின் உதவியோடு பயிர்ச் செய்கையினை மேற் கொண்டு ஏற்றுமதி செய்து இலாபமீட்டுகிறது, ஆனால் மக்கள் மட்டும் இன்றும் சொந்த இடங்களிற்குப் போக முடியாமல் 21 வருடங்களிற்கும் மேலாக ஏதிலிகளாக வாழ்கிறார்கள்.//
இது மாதிரியான உண்மைகள் வெளியுலகுக்கு வருவதன் மூலமே இலங்கை அரசின் செயல்பாடுகளை விமர்சனம் செய்வதொடு ஆதாரபூர்வமாக குற்றமும் சுமத்த இயலும்.
பிரபாகரனே பிரச்சினைக்கு காரணம் என்பவர்கள் இந்த இரு வருடத்தில் மக்கள் வாழ்க்கை நிலைகளையும்,நிகழ்வுகளையும்,கடல் கடந்தும் உயிர் பிழைப்போம் என்பதையும்,இயலாதவர்கள் முடிந்த வரை வாழ்வோம் என்ற பரிதாப நிலையையும் சிந்திப்பார்களாக.
மீண்டுமொரு பதிவுடன் வருகிறேன்.
//நம்ம சகோ சொன்ன மாதிரி இலங்கைத் தீவில் உள்ள ஒரு இனத்தை உலகறியச் செய்த பெருமை அவரையே சாரும்.!
அவர்க்கு நிகர், எவரும் இல்லை. அவர்க்கு நிகர் அவரே!ஆம்.//
கருன்!நிழலின் அருமை வெயிலில் தெரியும்ங்கிற மாதிரி விடுதலைப் புலிகள் இல்லாத ஈழம் அடக்குமுறைகளையும்,ஆமாம் சாமி என இலங்கை ராணுவத்திற்கு சலாம் போட வைக்கிறது.
போர் இல்லாமல் எப்படியும் வாழ்வதல்ல சுகம்!
போருமில்லாமல் சுதந்திரமான கருத்துரிமையோடு வாழ்வதே சுகம்.
ஈழப்பிரச்சனையை முன்னெடுக்க ஒன்றுபடுத்த சரியான ஆட்கள் இல்லாதவரை...நாமும் நடக்கும் அவலங்களை கண்கொட்ட பார்க்கவேண்டியது தான் போலிருக்கு ராஜநட...
ஈழம் பற்றிய உங்களுடைய சிந்திப்புகளை பதிவாக்காமல் விட்டுவிடாதீர்கள் ராஜநட யாரோ ஒருவரிடம் உங்களுடைய கருத்துகள் கிடைத்தால் கூட சந்தோசமே...
//ஈழப்பிரச்சனையை முன்னெடுக்க ஒன்றுபடுத்த சரியான ஆட்கள் இல்லாதவரை...நாமும் நடக்கும் அவலங்களை கண்கொட்ட பார்க்கவேண்டியது தான் போலிருக்கு ராஜநட...
ஈழம் பற்றிய உங்களுடைய சிந்திப்புகளை பதிவாக்காமல் விட்டுவிடாதீர்கள் ராஜநட யாரோ ஒருவரிடம் உங்களுடைய கருத்துகள் கிடைத்தால் கூட சந்தோசமே...//
இப்பொழுதுதான் ரதியிடம் சொல்லிவிட்டு வந்தேன்...நெஞ்சின் தனல் வேகத்தில் வார்த்தைகள் கோர்வையார் வரவில்லை.இருந்தும் இன்றைக்கு ஒரு பகுதியாவது இணைத்து விடுகிறேன்.
Post a Comment