Followers

Thursday, May 26, 2011

ஈழ மக்களுக்கும் மண்ணுக்கும் தமிழர்களின் பங்கு-பகுதி 1

பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகமிருந்தாலும் பதிவுலகம் தேர்தலுக்கு அப்பாலான தமிழக அரசியல் களத்தையே இன்னும் முன்னிலைப்படுத்துகின்றன.உலகளாவிய செய்திகள்,நிகழ்வுகள் என்று எந்த விமர்சிப்பும் குறைவாகவே காணப்படுகின்றன.இதனை விடுத்து சென்ற பதிவின் தொடர்ச்சிக்கு முன் சில சம கால நிகழ்வுகளாக இஸ்ரேல்,பாலஸ்தீனிய தனி நாடுகள் உருவாகுவதற்கான மாற்றங்களை அமெரிக்காவின் ஒபாமாவும், இஸ்ரேலின் நெத்தன்யாகுவும் முன்வைத்துள்ளதை தொடர்ந்து விட்டு ஈழமும் தனி நாடாக உருவாகும் சாத்தியங்களை ஆராயலாம்.
 துவக்க கால இல்ங்கை அரசு, போராளிகள் என்ற இரட்டை நிலை சதுரங்கம்

சமீபத்தில் இஸ்ரேலிய,பாலஸ்தீனர்களுக்கு நிகழ்ந்த இன்னும் நிகழும் மாற்றங்களையெல்லாம் நாம் உன்னிப்பாக மட்டுமல்ல மேலோட்டமாகக் கூட கவனிக்கத் தவறி விடுகிறோம்.விலைவாசி உயர்வுகளுக்கான காரணங்களாக மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்கிறோம்.இந்திய அரசு நேர்மையின்மை,ஊழல்கள் காரணம் என்ற போதிலும் இதன் துவக்கப்புள்ளி ஆட்சி முறைக்கும் அப்பாற் பட்டது.அதே போல் உலகரங்கு அரசியல் மாறுதல்களும் நம்மோடு ஒப்பீட்டு அளவிலோ,நேரடி,மறைமுகமாகவோ தொடர்புடையவை.உதாரணத்திற்கு சொல்லப்போனால் முன்பு ஜார்ஜ் புஷ்,இப்பொழுது ஒபாமா இடும் ஒரு கையெழுத்து தமிழகத்தில் வாழும் சராசரி மனிதனையும் தாக்கும் வலைப்பின்னல் கொண்டது.

இந்தியா மூக்கை நுழைத்த பின் உலகரங்காகிப் போன மூன்று கள நிலை ஈழப்போராட்டம்.
உலக அரசியல் மாற்றங்களும் கூட தமது சுய தேவைகள் கருதி அவ்வப்போது தன்னை புதுப்பித்துக் கொள்ளும் திசுக்களைக் கொண்டது.நீண்ட வரலாறு,இனம்,மொழி,சாத்வீக போராட்டம், ஆயுதப் போராட்டம்,தீவிரவாதம், மக்கள் வாழ்க்கை பின்னடைவு,கை ஓங்கிய நிலையில் இன்னொரு மொழி,இன மக்களை அடக்கும்,ஒடுக்கும் நிலையென இஸ்ரேலும்,பாலஸ்தீனியமும் ஈழப்போராட்டத்தோடு சில சமயம் இஸ்ரேலின் நிலைப்பாட்டிலும் சில சமயங்களில் பாலஸ்தீனிய நிலைப்பாட்டிலும் கலந்து பயணிக்கின்றது.தீரா சண்டைக்காரர்களாய் யுகங்களாய் இருந்தவர்கள் இருவரும்.இஸ்ரேலின் கரம் ஓங்கியிருந்தும் இஸ்ரேலை அங்கீகரிக்க மாட்டோம் என்றும் உலக வரைபடத்திலேயே இஸ்ரேலை இல்லாமல் செய்வோம் என்ற ஈரானின் பக்கவாத்திய துணையாலும் கூட பாலஸ்தீனியர்கள் கெஞ்சிய நிலை போய் இதோ வலிமை மிக்க இஸ்ரேல் ஒரே மண்ணில் இரண்டு நாடுகள் திட்டத்திற்கு எனது இஸ்ரேல் நாட்டை அங்கீகரி பின் இரு நாடு திட்டங்களை செயல்படுத்துவோம்  என சொல்லுமளவுக்கு இறங்கி வந்திருக்கிறது.
மஞ்சள் நிறத்தில் பாலஸ்தீனம் பிரிந்தும் நீல நிறத்தில் இஸ்ரேலின் நிலமும்

இலங்கையின் வட,கிழக்கு மக்களாய் உணர்வு பூர்வமாகவோ அல்லது மொழி சார்ந்த உணர்வு பூர்வமாகவோ அல்லது யதார்த்தமாகவாவது ஈழப்போராட்டத்தையும்,இலங்கை அரசின் செயல்கள்,நிலைப்பாட்டை கவனிக்கவும்,கருத்து சொல்லவும் கற்றுக்கொள்ள வேண்டும்.அது விடுத்து விடுதலைப்புலிகள் வஞ்சினமோ,இலங்கை குட்டி நாடு அதனை எப்படி பிரிக்க முடியுமென்ற வாதமோ அகன்ற உலக பார்வையில்லாத காரணம் கொண்டே எனலாம்.விடுதலைப்புலிகளுக்கு தீவிர வாத முத்திரை குத்தப்பட்டால் பாலஸ்தீனியர்களும் தீவிரவாத முத்திரை குத்தப்பட்டவர்களே.
 
இஸ்ரேலியர்களுக்கு பைபிள் காலம் தொட்ட நீண்ட வரலாறு மாதிரி தமிழனும் நீண்ட வரலாறு கொண்டவனே.தன் மண்,மொழி,இனம்,பண்பாடு,கலாச்சாரம் என்ற சுய கௌரவமும்,புரிதலும் தமிழர்களுக்கு வேண்டும்.பாலஸ்தீனியத்தை தாங்கிப் பிடிப்பது அரேபிய மொழி பேசுபவர்களின் பின்புலம் மற்றும் ஈரானின் இஸ்ரேலின் எதிர்ப்பு நிலை.இதே களநிலையை மொத்த உலக தமிழர்களும் கொண்டுள்ளோம்.அமெரிக்காவின் இஸ்ரேல் சார்பு நிலை மாதிரி இந்தியாவும் இலங்கை சார்பு நிலை கொண்டது.இதோ அமெரிக்கா ஜார்ஜ் புஷ் காலத்திலேயே ஒருங்கிணைந்த இரு நாடுகள் திட்டத்திற்கு தனது குரலை மெள்ள வெளிப்படுத்தியது.இன்று ஒபாமா அதனை உறுதிப்படுத்துகிறார்.அதே போல் இந்தியாவும் ஈழமக்களுக்கு சார்பாக குரல் கொடுக்கும் சூழலை தமிழர்கள் உருவாக்க வேண்டும்.இத்தனைக்கும் ஜெருசலம் தங்கள் தலைநகர் என்று இரு தரப்பும் சண்டை போட்டுக்கொண்டன.குரங்கு அப்பம் பிய்த்த கதையாய் பாலஸ்தீனம் துண்டு துண்டாய் நிலப்பகுதிகள் பிரிந்து நிற்கின்றன
 இலங்கையை இரண்டாகப் பிரிப்பதில் இப்படி எந்த விதச் சிக்கலுமில்லை.தெற்குப் பகுதி சிங்களவர்களுக்கும் வட,கிழக்கு பூர்வீகமாக தமிழர்களுக்குமென இருந்தே வந்திருக்கின்றது.பாலஸ்தீனியர்கள் ஹமாஸ் , ஃபத்தா என்று பிரிந்து கிடப்பது போலவே தமிழர்களின் நிலையும் கூட.ஹிட்லர் காலத்து யூதர்களின் அவல நிலை மாதிரியே ராஜபக்சே காலத்து இனப் படுகொலைகளும்,முள்வேலிக் கம்பி சிறை வாழ்க்கையும்.யூதர்களின் ஹோலகாஸ்ட்டிற்கும் அதிக ஒப்பீடாக ஈழப்படுகொலைகளும் ஐ.நாவின் போர்க்குற்ற அறிக்கைகளும்.எனவே தனி ஈழம் அமைப்பதற்கான அத்தனை தேவைகளும் காரணங்களும் அப்படியே உறங்கி கிடக்கின்றன.போர்க்குற்ற அறிக்கைக்கு இன்னும் பதில் அளிக்காமல் ராஜபக்சே இன்னும் காலம் கடத்துவதால் இனிமேற் கொண்டு என்ன செய்வது என ஐ.நா தீர்மானிக்குமென பான் கி மூன் தெரிவித்துள்ளார்.இவற்றையெல்லாம் உற்றுக்கவனிப்பதும் ஈழ மக்களுக்கு  சாதகமான நிலைகள் தென்படுகிறதா என்பதை கவனிப்பதையும் இல்லாவிடில் போராட்ட முகமாக தமிழர்கள் குரல் கொடுப்பதும்,மனித உரிமை குழுக்களின் உதவிகள் போன்றவை இன்னும் அவசியம்.

இன்னும் தொடர்ந்து அடுத்த பகுதியில்.

18 comments:

சிவானந்தம் said...

முழுவதையும் படித்துவிட்டு எனது அபிப்ராயத்தை சொல்கிறேன்.

Anonymous said...

மிகவும் நல்லதொரு பதிவு இது ! ஆனால் பழைய சரக்கே !!! ஏற்கனவே நிராஜ் டேவிட் பக்கம் பக்கமாக எழுதியதையும் படித்தேன் ...

என்னைக் கேட்டால் ஈழத்துக்கும் இஸ்ரேலுக்கும் முடிச்சுப் போடுவது சரியாகப் படவில்லை. தமிழ் ஈழப் போராட்டத்துக்கு சரியான சரி நிகர் தென் சூடானே ....

ஏனெனில் பாலஸ்தீனம் என்றொரு நாடு 1948-க்கு முன் இருந்தது, பின்னர் அதில் யூதர்கள் தமது ஆட்சியை அமைத்து அரேபியர்களை ஓரங்கட்டினார்கள்.

இலங்கையின் பிரச்சனை அப்படியானதல்ல ...

சூடானில் வடக்கே அரபிகளும், தெற்கே ஆப்பிரிக்கர்களும் வாழ்ந்ததைப் போல .. வடகிழக்கில் தமிழர்களும் - மற்றப் பகுதியில் சிங்களவர்களும் வாழ்ந்தார்கள்.

தென்சூடான் சுதந்திர வரலாற்றினை ஈழத்தோடு பொருத்தலாம் .. ஆனால் ஒவ்வொரு இனப் போராட்டமும் அதனதன் வழியில் தனித்துவமான ஒன்று என்பதே உண்மை..

ஒப்புமைப் படுத்தும் போது தனித்துவங்கள் மேவி விடுவதால், அடிப்படைகள் பிறழ்ந்துவிடுவதும் உண்டு ...

இலங்கையின் தற்போதைய தேவை சோர்வுற்று இருக்கும் தமிழர்களுக்கு ஊட்டச் சத்து அளிப்பதுவே ... இலங்கை அரசு தமிழர்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றது, இது தொடர்ந்தால் மீண்டும் மக்கள் போராடுவார்கள் .. அது ஜனநாயக ரீதியாகவே இருக்கும் ,,, அது மல்லிகைப் புரட்சியாகக் கூட இருக்கலாம் ...

ஆனால் சோர்வுற்ற மக்களை சோர்வாகவே இருக்க இலங்கை அரசு விரும்புகின்றது, காரணம் சோர்வு தெளிந்துவிடின் மீண்டும் குரல் எழுப்புவார்கள் என்பதால் .... புலம் பெயர் தமிழர்களும் இலங்கை செய்வது போலவே அதனையே செய்கின்றார்கள் என்பதில் தான் எனக்கு மிகுந்த வருத்தமே !!!

செங்கோவி said...

//இரு நாடுகள் திட்டத்திற்கு தனது குரலை மெள்ள வெளிப்படுத்தியது.இன்று ஒபாமா அதனை உறுதிப்படுத்துகிறார்.அதே போல் இந்தியாவும் ஈழமக்களுக்கு சார்பாக குரல் கொடுக்கும் சூழலை தமிழர்கள் உருவாக்க வேண்டும்.// நீங்கள் சொல்வது சரி தான்..ஆனால் அதற்கான சாத்தியம் இருதரப்பிலும் தென்படவில்லையே..

ராஜ நடராஜன் said...

//முழுவதையும் படித்துவிட்டு எனது அபிப்ராயத்தை சொல்கிறேன்.//

சிவா!மீண்டும் வாருங்கள் அடுத்த பதிவில்.

தீர்வுகளுக்கான மொத்தத்தையும் முன் வைக்க இயலாவிடிலும் ஒரு சிறு கோடு போட இயலுமென நினைக்கிறேன்.

ராஜ நடராஜன் said...

சகோ இக்பால் செல்வன்!இஸ்ரேல் போன்ற ஒப்பீடு பழைய சரக்காக இருக்கலாம்.ட்ரெய்லருக்கே விமர்சனமா:)

தென் சூடானையும் சொல்லி வைக்கலாமென்றிருந்தேன்.கடந்த சில தினங்களாக அபியே சண்டையில் 2,00,000 மக்கள் இடம் பெயர்ந்த காரணத்தால் இதன் பின்புலம் இன்னும் சரியாக தெரியாமல் சூடானை தொடாமல் விட்டு விட்டேன்.சூடான் மட்டுமல்ல,கிழக்கு தைமூர் கொண்டு ஈழப்பிரச்சினையை ஏதாவது ஒரு விதத்தில் ஒப்பீடு செய்ய இயலும்.

எனது முக்கியப்புள்ளி உங்கள் பதிவில் நாம் விவாதித்த மக்களை முன்னிறுத்துவதே.அதனை அடுத்த பதிவில் தொட்டு விட பார்க்கிறேன்.

உங்கள் நீண்ட பதிவுகளும்,பின்னூட்டங்களும் உங்கள் கருத்தாழத்தை உணர வைக்கின்றன.வெறுமனே பதிவுகள் என்று மட்டுமில்லாது பின்னூட்ட விவாதங்களை வரவேற்கிறேன்.

ராஜ நடராஜன் said...

////இரு நாடுகள் திட்டத்திற்கு தனது குரலை மெள்ள வெளிப்படுத்தியது.இன்று ஒபாமா அதனை உறுதிப்படுத்துகிறார்.அதே போல் இந்தியாவும் ஈழமக்களுக்கு சார்பாக குரல் கொடுக்கும் சூழலை தமிழர்கள் உருவாக்க வேண்டும்.// நீங்கள் சொல்வது சரி தான்..ஆனால் அதற்கான சாத்தியம் இருதரப்பிலும் தென்படவில்லையே..///

செங்கோவி!தற்போதைய சூழலில் தமிழர்களின் குரலும்,ஐ.நா அறிக்கையின் இலங்கை போர்க்குற்றங்களை மட்டுமே முன்னிறுத்த இயலும்.நமது குரல் ஒலிப்பது அல்லது ஒலிக்காமக் போவதைப் பொறுத்தே மேற்கத்திய நாடுகளும்,இந்தியாவும் சாத்தியங்கள் பற்றி யோசிக்கும்.இந்தியா ஒன்றும் இரும்பால் செய்யப்பட்ட அரசு இயந்திரமல்ல.தேர்தலும்,போராட்டக் குரலுமே தமிழர் பற்றி சிந்திக்க வைக்கும்.

இதனை யடுத்து புலம்பெயர் தமிழர்கள் தம்மால் இயன்றவற்றை மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டு செல்லவும் இணைந்து பணியாற்றுவதும் முக்கியம்.

நியாயமாகப் பார்க்கப் போனால் வட,கிழக்கிலிருந்தே சுதந்திரத்திற்கான குரல் இன்னும் அதிகமாக உரக்க எழவேண்டும்.அந்த சாத்தியமில்லாமல் மக்கள் துயரத்தில் இருப்பது தமிழர்களுக்குப் பின்னடைவே.

தவறு said...

இலங்கையை இரண்டாகப்பிரிப்பதில் சிக்கல் இல்லை தான் ராஜநட ஆனால் சிக்கலாய் சிங்களவர்கள் இருக்க சிக்கலின் கயிறு நுனியை ஒருபுறம் இந்தியாவும் மறுபுறம் சீனாவும் கையில் வைத்துள்ளதே....

ராஜ நடராஜன் said...

//இலங்கையை இரண்டாகப்பிரிப்பதில் சிக்கல் இல்லை தான் ராஜநட ஆனால் சிக்கலாய் சிங்களவர்கள் இருக்க சிக்கலின் கயிறு நுனியை ஒருபுறம் இந்தியாவும் மறுபுறம் சீனாவும் கையில் வைத்துள்ளதே....//

தவறு!எளிதான வழியென்றால் இந்தியா,இலங்கை,சீனா வளையத்தில் வாய் மூடி மௌனியாகப் போய் விடுவது.கடினமான வழியென்றால் இந்த முக்கோணத்தை எப்படி உடைப்பதென்பதும் தமிழர் தரப்பிற்கு சாதகமாக திருப்புவது என்பதும்.இதில் எளிய வழியாக இலங்கை அரசும்,தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பேசி ஒரு முடிவுக்கு வருவது.அடுத்தது இந்தியாவை தமிழர்களுக்கும் சாதகமான நிலைக்கு கொண்டு வருவது.இவைகள் இயலாத நிலையில் இருப்பதால் மேற்கத்திய நாடுகள் மூக்கை நுழைப்பதும் சதுரங்கத்தை மாற்றி ஆட உதவும்.

Rathi said...

ராஜ நட, ஈழத்தின் உரிமைப்போராட்டத்தை எதியோப்பியா- எரித்திரியா, இந்தோனேசியா-கிழக்கு திமோர், சூடான் - தெற்கு சூடான், இஸ்ரேல்-பாலஸ்தீனம் எல்லாவற்றுடனும் ஒப்பிடலாம். நாங்களும் ஒப்பிட்டு, ஒப்பிட்டு உலகத்திடம் சொன்னதில் ஏதோ சில சமிக்ஞைகளை காட்டுகிறார்கள். ஆனால், பிறகு எல்லாமே சாண் ஏறினால் முழம் சறுக்குது. எத்தனை தரம் சறுக்கினாலும் தொடர்ந்து முயற்சி செய்வோம்.

ஆ.ஞானசேகரன் said...

//இஸ்ரேல்,பாலஸ்தீனிய தனி நாடுகள் உருவாகுவதற்கான மாற்றங்களை அமெரிக்காவின் ஒபாமாவும், இஸ்ரேலின் நெத்தன்யாகுவும் முன்வைத்துள்ளதை தொடர்ந்து விட்டு ஈழமும் தனி நாடாக உருவாகும் சாத்தியங்களை ஆராயலாம்.///


ம்ம்ம்ம்ம் நல்ல அலசல்...
பாராட்டுகள்

ராஜ நடராஜன் said...

//ராஜ நட, ஈழத்தின் உரிமைப்போராட்டத்தை எதியோப்பியா- எரித்திரியா, இந்தோனேசியா-கிழக்கு திமோர், சூடான் - தெற்கு சூடான், இஸ்ரேல்-பாலஸ்தீனம் எல்லாவற்றுடனும் ஒப்பிடலாம். நாங்களும் ஒப்பிட்டு, ஒப்பிட்டு உலகத்திடம் சொன்னதில் ஏதோ சில சமிக்ஞைகளை காட்டுகிறார்கள். ஆனால், பிறகு எல்லாமே சாண் ஏறினால் முழம் சறுக்குது. எத்தனை தரம் சறுக்கினாலும் தொடர்ந்து முயற்சி செய்வோம்.//

ரதி!நமது குரல்கள் ஒலிப்பதன் வேகத்தைப் பொறுத்தே சுதந்திரத்தின் தூரமும்.தற்போதைய நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும்,நாடுகடந்த தமிழீழ அரசும் ஏனைய புலம் பெயர்ந்த அமைப்புக்களும்,சீமானும்,வை.கோவும் ஏனைய ஈழ உணர்வாளர்களும் இணைந்து செயல்படுவது மிக முக்கியம்.

தேர்தல் வரை ஒலித்த ஜெயலலிதாவின் குரல் இப்பொழுது வேறு சரணத்தில் பாடுகிற மாதிரி தெரிகிறது.உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை.உபத்திரவமாக காவல்துறை கட்டவிழ்ப்புக்களை அனாவசியமாக அவிழ்த்து விடாமல் தமிழகத்தில் குரல் கொடுப்போரை அடக்கி ஒடுக்காமல் இருந்தாலே போதுமானது.

சீமான் கேட்கும் சட்டசபை தீர்மானத்தை நிறைவேற்றினால் நல்லது.பார்க்கலாம்.

நீங்கள் சொன்னமாதிரி எதியோப்பியா- எரித்திரியா, இந்தோனேசியா-கிழக்கு திமோர், சூடான் - தெற்கு சூடான், இஸ்ரேல்-பாலஸ்தீனம் இன்னும் போஸ்னியா என்று கூட ஒப்பீடு செய்ய இயலும்.

ராஜ நடராஜன் said...

//
ம்ம்ம்ம்ம் நல்ல அலசல்...
பாராட்டுகள்//

ஞானசேகரன்!உங்கள் பாராட்டுக்கும்,தொடர் வருகைக்கும் நன்றி.

தம்பி கூர்மதியன் said...

உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.

http://blogintamil.blogspot.com/2011/05/blog-post_8051.html

நிரூபன் said...

பாஸ், உங்கள் புரோபைல் ஏன் பின்னூட்ட லிங்கில் தெரிய மாட்டேங்குது?
கடந்த சில பதிவுகளைத் தவற விட்டு விட்டேன், என் கணினியின் இணைய உலவியை அப்டேற் செய்த போது உங்கள் ப்ளாக் முகவரியும் காணமற் போய் விட்டது. மன்னிக்கவும் சகோ.

நிரூபன் said...
This comment has been removed by the author.
Rathi said...

Raaja Nada, take your own time but don't forget that we are waiting for the main film :))

Amudhavan said...

நட்சத்திரப்பதிவராகியிருப்பதற்கு வாழ்த்துக்கள். ஈழ விவகாரத்தில் எல்லாருமே வெறும் உணர்வுபூர்வமான வாதங்களை மட்டுமே முன்னிறுத்திக்கொண்டிருக்கும்போது நீங்களும் இக்பால் செல்வனும் வரைபடத்துடன் கூடிய ஏனைய நாடுகளின் சான்றுகளுடன் பகிர்வுகளை முன்வைக்கும்போது ஈழத்தைப்பற்றிய சிந்தனையையே வேறொரு தளத்துக்குக் கொண்டுசெல்லும் செயலை உங்கள் எழுத்துக்கள் செய்கின்றன. இனி தலைவர்கள் மட்டுமல்ல உணர்வாளர்களும் சரியான புரிதல்களுடன் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்கலாம். நல்லதே நடக்கட்டும்.

ராஜ நடராஜன் said...

//நட்சத்திரப்பதிவராகியிருப்பதற்கு வாழ்த்துக்கள். ஈழ விவகாரத்தில் எல்லாருமே வெறும் உணர்வுபூர்வமான வாதங்களை மட்டுமே முன்னிறுத்திக்கொண்டிருக்கும்போது நீங்களும் இக்பால் செல்வனும் வரைபடத்துடன் கூடிய ஏனைய நாடுகளின் சான்றுகளுடன் பகிர்வுகளை முன்வைக்கும்போது ஈழத்தைப்பற்றிய சிந்தனையையே வேறொரு தளத்துக்குக் கொண்டுசெல்லும் செயலை உங்கள் எழுத்துக்கள் செய்கின்றன. இனி தலைவர்கள் மட்டுமல்ல உணர்வாளர்களும் சரியான புரிதல்களுடன் தங்கள் போராட்டத்தை முன்னெடுக்கலாம். நல்லதே நடக்கட்டும்.//

அமுதவன் சார்!உங்கள் நீண்ட பின்னூட்டத்துக்கு நன்றி.இக்பால் செல்வன் நீண்ட விவாதத்துடன் கேள்விகளுக்கான தளமாக தனது கருத்தை முன் வைக்கிறார்.நான் ஏதாவது ஒரு விதத்தில் தீர்வுகளுக்கு வழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.கடினமான பாதைதான்.ஆனால் பயணித்தே ஆகவேண்டிய நிலையில் தமிழர்கள்.பார்க்கலாம் வரலாறு நம்மை எந்த திசையில் கொண்டு செல்கிறதென்று.
உங்கள் கருத்துக்கு மீண்டும் நன்றி.