Followers

Sunday, June 12, 2011

தமிழ் மணம் நட்சத்திர வாரம் - அறிமுகம்

அப்பா பெயரின் துவக்கமும் எனது பெயரும் இணைந்தே ராஜ நடராஜன் என தமிழ் மணத்தில் தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களாக எழுதி வருகிறேன்.பதிவின் எண்ணிக்கைகளையும்,ஹிட்,பின்னூட்டங்கள்   என்றில்லாமல் நட்புடன் கருத்துரையாடல் என்ற நிலையிலே பதிவுகளை இட்டு வருகிறேன்.நான் தற்போது குவைத்தில் பணி நிமித்தமாக தொசிபா மடிக்கணினி விற்பனை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன்.பதிவுகளை விட வாசிப்பிலும்,பின்னூட்டங்களில் அதிக நாட்டம் கொண்டுள்ளதால் பதிவுகள் எண்ணிக்கை பற்றியெல்லாம் அலட்டிக்கொள்வதேயில்லை.யாதும் பதிவே!யாவரும் கருத்துரிமையாளர்களே என்பதில் நம்பிக்கை கொண்டவன் என்ற போதிலும் மத அடிப்படைவாதங்களையும்,தனி மனித விமர்சனங்களையும் கடந்து விடுவது வழக்கம். எனது பதிவின் பார்வையாக கொஞ்சம் சொல்லி நிறைய தேடி...மொழி சொல்லியும் சொல்லாத மவுனமும் என சுருக்கமாக முகப்பில் சொல்லியிருக்கிறேன்.
(சில வாரங்களுக்கு முன்னாடி க்ளிக்கியதில் காமிராவுடன் நான்:))

இடமிருந்து வலமாக படிக்கும் புத்தக வாசிப்புக்கு மாறாக,தமிழ் மணத்தில் அந்த கணத்தில் முதலில் நிற்கும் இடுகை தொட்டு தொடர்ந்து கீழே தலைப்புக்களையும்,இடமிருந்து சூடான இடுகைகள்,வாசகர் பரிந்துரையின் தலைப்புக்களையும்,பின் வலது புறம் மறுமொழிகள் வரிசைகளையும் ஒரு கண்ணோட்டம் விட்டு விட்டு கண்ணை ஈர்க்கும் பதிவுகளில் நுழைந்து விடுவதும்,பின்னூட்டங்கள் இடுவதும் வழக்கமாகிப் போய் விட்டதால் தமிழ் மண நட்சத்திரப் பக்கம் இறுதியான ஒன்றாகப் போய் விடுவதால் நிறைய தமிழ் மண நட்சத்திரங்களுக்கு வாழ்த்துக்கள் சொல்ல இயலாமல் போய் இருக்கிறது.
இணையத்தில் பதிவுலகமும்,தமிழ் மணம் ஒன்று கூடல் ஒரு அரிய கருத்து பரிமாற்ற கருவி.இதனை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதில் தமிழ் மொழியின் வெற்றி அமைந்திருக்கிறது.

பலரின் மனநிலைகள்,வாழும் கால சூழல்கள்,விருப்பங்கள் என்பவை வேறுபட்டிருந்தாலும் பரந்து கிடக்கும் உலகில் மொழியாக தமிழனை இணைப்பது எழுத்தும்,சொல்லும்.போன தலைமுறையின் மொழித் திணிப்பாக இந்திப் போராட்டம் நிகழ்ந்தது.இந்திப் போராட்டம் தமிழனின் வாழ்வில் பல பரிணாமங்களை உருவாக்கியிருந்தாலும் மொழி உணர்வாக தமிழகத்தின் வரலாற்று நிகழ்வு அது.அதே போல் இந்த தலைமுறைக்கும்,அடுத்த தலைமுறைக்கும் மொழி உணர்வாக ஈழப்போராட்டமும் தமிழர் வாழ்வில் ஒரு முக்கியத்துவ வரலாறாகும்.சேரன்,சோழன்.பாண்டியன்,பல்லவன் என்ற அரசாட்சியில் நமது தாத்தனும்.பாட்டியும் வாழ்ந்த காலங்கள் மறைந்து விட்டாலும் வரலாற்று சான்றாக அரசாட்சியின் காலங்கள் மட்டுமே இன்றும் நிலைத்து நிற்கின்றன.நம்முடைய காலமும் அது போன்ற ஒரு வரலாற்று முக்கியத்துவ காலம் என்பதை உணர வேண்டும். கண்களை அகன்று விரித்து நோக்கினால் நமக்குள்ளும் நிறைய வரலாற்று மனிதர்கள் மொழி உணர்வோடு அடையாளம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அதிகார வட்டங்களையும்  தாண்டிய பார்வையும்,சிந்தனையும் நமக்கு தேவை.நாமும் வாழ்ந்தோம் என்பதை வரும்காலத்தில் பதிவு செய்யப்போவது ஈழ யுத்தமும் இனி வரும் காலத்தின் நிகழ்வின் நெளிவு சுளிவுகளுமே என்பதை நம்புகிறேன்.

முந்தைய பதிவான ஈழ மக்களுக்கும் மண்ணுக்கும் தமிழர்களின் பங்கு-பகுதி 1 என்று துவங்கி அடுத்த பகுதியை துவங்கலாம் என்று நினைத்த நேரத்தில் தமிழ்மண நட்சத்திர அழைப்பு வந்து விட்டதால் ஈழ மக்கள்,மண் பற்றியே நட்சத்திர வாரத்தில் தொடர்வது சிறப்பாக இருக்குமென்று நினைத்து அடுத்த பகுதியை இணைக்க வில்லை.இங்கே பல பரிமாணம் கொண்ட ஈழம் பற்றி நட்சத்திர வாரத்தில்  எனது கருத்தை பதிவர்களின் பார்வைக்கு வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
 
தமிழ்மணத்திற்கும்,பதிவுலக நட்பு உள்ளங்களுக்கும் நன்றி.

83 comments:

கும்மி said...

சில மாதங்களுக்கு பிறகு உங்கள் பதிவிற்கு வந்ததும், வாழ்த்துகள் சொல்வதும் மகிழ்வாக இருக்கின்றது.

சதுக்க பூதம் said...

வாழ்த்துக்கள்

Karikal@ன் - கரிகாலன் said...

தமிழ் மண நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே!

விந்தைமனிதன் said...

மின்னி மறைந்துவிடாமல் என்றும் பிரகாசிக்கும் சூரியநட்சத்திரமாய் இனம் சார்ந்த, மொழி சார்ந்த, பண்பாடு சார்ந்த எழுத்துக்களை நீங்கள் மென்மேலும் படைக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்! நிரம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முடிந்தவரை உங்கள் நட்சத்திரவாரப் பதிவுகளுக்கு கருத்துரை அளிக்கவேண்டும் என மனமார விரும்புகிறேன்.

ஹேமா said...

நட்சத்திர நாயகனுக்கு வாழ்த்துகள்.நிறைவான பதிவுகள் தமிழ்மண வானில் நீந்தப்போகிறது !

Rathi said...

ஆஹா, ஜமாய்ங்க நடா!! வாழ்த்துக்கள்.

நிரூபன் said...

வாழ்த்துக்கள் சகோ, அரசியல் அதிரடிப் பதிவுகளால் இந்த வாரம் அசத்தி எங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்க வாழ்த்துக்கள்!

நிரூபன் said...

சகோ, நீங்கள் Toshiba நிறுவனத்திலா?
அப்போ இனிமே உங்களிடமிருந்து புது லப்டாப் பற்றிய தகவல்களை அறியலாமே..
ஹி....ஹி...

நிரூபன் said...

(சில வாரங்களுக்கு முன்னாடி க்ளிக்கியதில் காமிராவுடன் நான்:))//

அவ்...என்ன ஒரு டெரர் தனம்,...
என்ன ஒரு லுக்கு...
கலக்கல் படம் பாஸ்...

Rathnavel said...

நல்ல பதிவு.

சார்வாகன் said...

வாழ்த்துக்கள்!

கிரி said...

ராஜநடராஜன் தமிழ்மணம் நட்சத்திர பதிவர் ஆனதிற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சரி அதெல்லாம் இருக்கட்டும் படத்துல உங்களுக்குப் பின்னாடி ஒரு பொண்ணு தலையை பிடிச்சுட்டு இருக்கே.. என்ன விஷயம்? ஹி ஹி இதற்கும் உங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குதா...

அப்புறம் உங்க டெம்ப்ளேட் வேற மாற்றுங்க அல்லது தேவை இல்லாத நிரலி (script) இருந்தா நீக்குங்க...ரொம்ப ரொம்ப மெதுவா திறக்கிறது.. பின்னூட்ட பெட்டி திறக்கவே ஒரு நிமிடம் ஆகிறது.

JOTHIG ஜோதிஜி said...

மூச்சே விடவில்லை???

வலைகூறும் நல் உலகத்திற்கு உங்கள் முக தரிசனத்தையும் தந்து விட்டீங்க.

வாழ்த்துகள் குவியும் என்றே நினைக்கின்றேன்.

செங்கோவி said...

ஸ்டாருக்கு வாழ்த்துகள்..தொடர்கிறோம்.

தவறு said...

வணக்கம் ராஜநட...வாழ்த்துகள் மிகுந்த சந்தோசம்...

Anonymous said...

@ ராஜநடராஜன் - எதிர்ப்பார்த்த ஒன்று தான் .. உங்களின் எழுத்துத் தரத்துக்கு நீங்கள் எப்பவோ தமிழ்மண நட்சத்திரமாக பலமுறை வந்திருக்க வேண்டிய நபர் என்பதே எனதுக் கருத்து ..

உங்களைப் பற்றிய அறிமுகப் பதிவும் அருமை சகோ. இது ஒரு நல்ல வாய்ப்பு தினமும் நிச்சயம் தங்களின் பதிவைப் படித்தபின் தான் அடுத்த வேலை ...

நிறைய எதிர்ப்பார்க்கின்றேன் .. அதற்காக உங்களின் மன அழுத்தத்தை நாங்கள் அதிகரிப்பதாக எண்ண வேண்டாம் ... உங்களின் அதே பாணியில் இன்னும் ஆழமாக எழுதுங்கள் .. வாழ்த்துக்கள் சகோ ..

:)

Anonymous said...

சொல்ல மறந்திட்டேன் .. போட்டோ அருமை ... !!! :)

ஆயில்யன் said...

நட்சத்திர வாழ்த்துகள் சார் :)

சிவானந்தம் said...

வாழ்த்துக்கள் நண்பரே. உங்களின் அடுத்த பதிவை நானும் ஆவலுடன் எதிர்பார்த்தேன். தாமதத்திற்கு இதுதான் காரணமா? உங்களின் அடுத்த பதிவு ஈழம் தொடர்பான ஆக்கபூர்வமான விமர்சனத்திற்கு வழிவகுக்கட்டும்.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

வாழ்த்துகள் ஐயா

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று எனது வலையில்

சிறந்த பொழுதுபோக்கு தளம் - விருது

ஆர்.கே.சதீஷ்குமார் said...

வாழ்த்துக்கள் நண்பரே

யாதவன் said...

முழுமையாய் வெற்றிபெற வாழ்த்துக்கள்

க.பாலாசி said...

வாழ்த்துக்கள் தலைவரே... கலக்குங்க..

ராஜ நடராஜன் said...

//சில மாதங்களுக்கு பிறகு உங்கள் பதிவிற்கு வந்ததும், வாழ்த்துகள் சொல்வதும் மகிழ்வாக இருக்கின்றது.//

அதை விட உங்களை மீண்டும் நலத்துடன் காண்பதிலும்,ஆக்கபூர்வமாக இயங்குவதிலும் நான் மகிழ்வடைகிறேன்.

ராஜ நடராஜன் said...

//சதுக்க பூதம் said...

வாழ்த்துக்கள்//

நீண்ட உரையாடலுக்கும்,கருத்துக்கும் சொந்தக்காரரில் நீங்களும் ஒருவர்.உங்கள் தொடர் வருகையையும்,இனி வைக்கும் எனது கருத்துக்களுக்கு கருத்தும் சொல்வதற்கு அழைக்கின்றேன்.நன்றி.

ராஜ நடராஜன் said...

//தமிழ் மண நட்சத்திர வாழ்த்துக்கள் நண்பரே!//

கரிகால சோழரே!வாழ்த்துக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

//மின்னி மறைந்துவிடாமல் என்றும் பிரகாசிக்கும் சூரியநட்சத்திரமாய் இனம் சார்ந்த, மொழி சார்ந்த, பண்பாடு சார்ந்த எழுத்துக்களை நீங்கள் மென்மேலும் படைக்க என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்! நிரம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முடிந்தவரை உங்கள் நட்சத்திரவாரப் பதிவுகளுக்கு கருத்துரை அளிக்கவேண்டும் என மனமார விரும்புகிறேன்.//

விந்தை மனிதன் எப்படியிருக்கீங்க?தேர்தல் களத்தில் விளையாடியிருப்பீர்கள் என்பதை தேர்தல் முடிவுகள் அறிவிக்கின்றன.

கருத்துரையாடலுக்கே எனது கவனம் அதிகம் என்பதால் நிச்சயம் மறுமொழிகள் சொல்வேன்.நன்றி.

ராஜ நடராஜன் said...

//நட்சத்திர நாயகனுக்கு வாழ்த்துகள்.நிறைவான பதிவுகள் தமிழ்மண வானில் நீந்தப்போகிறது !//

ஹேமா!முடிந்தளவுக்கு பதிவுகளை நிறைவுடனும்,ஆக்கபூர்வமாகவும் சமர்ப்பிக்க முயற்சி செய்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//ஆஹா, ஜமாய்ங்க நடா!! வாழ்த்துக்கள்.//

ரதி!முந்தைய பதிவின் பின்னுட்டத்திற்கும் சேர்த்து நன்றி.மனித நேயத்தோடு மட்டுமே தொடரும் எனது கருத்துக்களை ஈழ மண்ணின் வாசனை கொண்ட நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்ற உங்கள் பின்னூட்டத்தை அடுத்த பதிவிலிருந்து எதிர்பார்க்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//வாழ்த்துக்கள் சகோ, அரசியல் அதிரடிப் பதிவுகளால் இந்த வாரம் அசத்தி எங்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்க வாழ்த்துக்கள்!//

சகோ நிருபன்!தமிழக அரசியலைத் அதிகம் தொட வேண்டிய காலகட்டத்தை நாம் தாண்டி விட்டதால் ஈழம் குறித்தே எனது கருத்துக்களை முன் வைக்க விரும்புகிறேன்.மண்ணின் மைந்தனாக நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் என்பதை அடுத்த பதிவிலிருந்து பின்னூட்டம் தொடர விரும்புகிறேன்.

ராஜ நடராஜன் said...

//சகோ, நீங்கள் Toshiba நிறுவனத்திலா?
அப்போ இனிமே உங்களிடமிருந்து புது லப்டாப் பற்றிய தகவல்களை அறியலாமே..
ஹி....ஹி...//

அதையேன் கேட்கிறீங்க!வாரத்துக்கு 5 மாடல் i3,i5,i7 என வருகிறது.Turbo ப்ராஸசர் வேகம்,500 முதல் 600 என இரு ஹார்ட் டிஸ்க்,மெமரி 8GB,15.6 ஸ்கீரின் என்ற பொத்தாம் பொதுவான ஒன்றைத் தவிர ஏனைய வித்தியாசங்கள் ஒன்றுமேயில்லை.மடிக்கணினியில் உலக சந்தையில் முதலிடம் என்பது மட்டுமே தொசிபாவுக்கு சிறப்பு.

ராஜ நடராஜன் said...

//(சில வாரங்களுக்கு முன்னாடி க்ளிக்கியதில் காமிராவுடன் நான்:))//

அவ்...என்ன ஒரு டெரர் தனம்,...
என்ன ஒரு லுக்கு...
கலக்கல் படம் பாஸ்...//

வெளியே சென்றாலும் எங்க ஊட்ல பார்ட்டி செய்தாலும் ஏனையவர்களையே படம் பிடிக்கும் பழக்கமாயிடுச்சு.அதென்னமே நமக்கு நாமே படம் பிடிக்கும் திட்டமே வருவதில்லை.இதுவும் இன்னொரு உறவு கெனான் G10ல க்ளிக்கியதில் தேறியது:)

ராஜ நடராஜன் said...

//நல்ல பதிவு.//

அய்யா!இன்னும் படமே ஆரம்பிக்கவில்லை.அதற்குள்ள படம் நல்லாயிருக்குதுன்னு விளம்பரப் படுத்துறீங்களே:)

ராஜ நடராஜன் said...

கிரி!எப்படியிருக்கீங்க?தனிக்குடித்தனம் போனதும் முந்தைய அமர்க்களம் குறைஞ்ச மாதிரி தோணுதே!

பதிவுகள் மெல்லத் திறப்பதாக பதிவர் சித்ரா முன்பு குறிப்பிட்டிருந்தார்கள்.சில விட்ஜெட்டுக்களை நீக்கினேன்.பழைய Script நிறையாவே உள்ளே கிடக்கிறது.இந்த நேரத்துல கடைக்கு பெயிண்ட் அடிக்கனுமான்னு யோசிக்கிறேன்!பார்க்கலாம்.ஆலோசனைக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

//சார்வாகன் said...

வாழ்த்துக்கள்!//

வாங்க சார்வகன்!ஆக்கபூர்வமான பின்னூட்டங்களில் உங்களை அடிக்கடி காண்கிறேன்.இணைந்து கொள்ளுங்கள்.நன்றி.

ராஜ நடராஜன் said...

//மூச்சே விடவில்லை???

வலைகூறும் நல் உலகத்திற்கு உங்கள் முக தரிசனத்தையும் தந்து விட்டீங்க.

வாழ்த்துகள் குவியும் என்றே நினைக்கின்றேன்.//

ஜோதிஜி!அதென்ன மூன்று கேள்விக்குறிகள்?

நான் எப்ப மூஞ்சிய மறைச்சிகிட்டிருந்தேன்?அதுதான் புரபைல் போட்டாவா பதிவுலகம் சுத்திகிட்டிருக்குதே:)

ராஜ நடராஜன் said...

//ரி அதெல்லாம் இருக்கட்டும் படத்துல உங்களுக்குப் பின்னாடி ஒரு பொண்ணு தலையை பிடிச்சுட்டு இருக்கே.. என்ன விஷயம்? ஹி ஹி இதற்கும் உங்களுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குதா...//

கிரி!முக்கியமான பின்னூட்டப் பகுதியை கவனிக்காமல் விட்டு விட்டேனே:)
ரங்க ராட்டினம் சுத்தும் Entertainment cityக்கு குடும்பத்தோடு போனோமா!அங்கே யாரோ பிலிப்பினி போட்டோ எடுக்குறாங்கன்னு கண்ணை மறைக்குது போல.அம்மணி கூடவே சிவசக்தி மாதிரி அலையுறதனாலே நீங்க நினைக்கற்துக்கெல்லாம் சான்சே இல்ல:)

ராஜ நடராஜன் said...

இக்பால் செல்வன்!அடுத்த பதிவிலிருந்து உங்களது கருத்துக்களையும்,நிருபன் என்ன சொல்கிறார் எனபதையும் ஈழம் குறித்த மண்ணின் மைந்தர்களாக என்ன நினைக்கிறீர்கள் என்பதை சொல்லுங்கள்.விவாதங்களும்,மாற்றுக்கருத்துக்களையும் வரவேற்கிறேன்.

துளசி கோபால் said...

நட்சத்திரமே! இனிய வாழ்த்து(க்)கள்.

ராஜ நடராஜன் said...

//ஸ்டாருக்கு வாழ்த்துகள்..தொடர்கிறோம்.//

செங்கோவி!தொடர்வதுடன் கருத்துப் பகிர்வுகளையும் தர வேண்டுகிறேன்.நன்றி.

ராஜ நடராஜன் said...

//தவறு said...

வணக்கம் ராஜநட...வாழ்த்துகள் மிகுந்த சந்தோசம்...//

தவறாத தவறே!உங்கள் தொடர் வருகைக்கு நானும் சந்தோசம்.

ராஜ நடராஜன் said...

//நட்சத்திர வாழ்த்துகள் சார் :)//

ஆயில்யன் சார்!எங்கே போயிட்டீங்க?பதிவுகளையே காணோமே!

உங்கள் நினைவாய் இப்பொழுதும் எனது மனதில் இருப்பது குப்புஸ் பாக்கெட் மற்றும் யோகர்ட் தயிரும்தான்:)அந்தப் படங்கள் இவ்வளவு நாட்கள் கழித்தும் மனதில் உங்கள் பெயரோடு கூடவே பசக்கென்று ஒட்டிக்கொண்டு விட்டது.

Thekkikattan|தெகா said...

வணக்கம் ராஜ நட! நட்சத்திர வாரத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி.

அடிச்சு விளையாடுங்க... வாசிப்போம்!

ராஜ நடராஜன் said...

//வாழ்த்துக்கள் நண்பரே. உங்களின் அடுத்த பதிவை நானும் ஆவலுடன் எதிர்பார்த்தேன். தாமதத்திற்கு இதுதான் காரணமா? உங்களின் அடுத்த பதிவு ஈழம் தொடர்பான ஆக்கபூர்வமான விமர்சனத்திற்கு வழிவகுக்கட்டும்.//

சிவா!உங்கள் முந்தைய பின்னூட்டம் போட்டவுடன் மறு பகுதியும் இணைக்கலாமே என்றுதான் இருந்தேன்.கூடவே தமிழ் மண அழைப்பும் வந்து விட்டதால் நட்சத்திர வாரத்தில் இணைப்பதே ஈழம் குறித்த பார்வைக்கு தகுதியாக இருக்குமென்று இனி தொடர்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//வாழ்த்துகள் ஐயா//

நான் தான் உங்களை ஐயா என்று கூப்பிட வேண்டும் உங்கள் ஆசிரியர் பணியின் தனித்துவம் காரணமாக!

நீங்கள் என் பெயர் சொல்லியே விளிக்கலாம் ராஜா.

ராஜ நடராஜன் said...

//இன்று எனது வலையில்

சிறந்த பொழுதுபோக்கு தளம் - விருது //

அட்ரா சக்க சி.பி விருதுக்கு தகுதி வாய்ந்தவரே!

ராஜ நடராஜன் said...

//Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

வாழ்த்துக்கள் நண்பரே//

சதீஷ்!வாழ்த்துக்கு நன்றி.
ஜெயலலிதா கலக்குறாங்க போல தெரியுதே!வெறும் முகப்பூச்சாய் இல்லாமல் அழுத்தங்களுக்கு இடம் கொடுக்காமல் சட்டசபை தீர்மானங்களுக்கு வலு சேர்த்தாரென்றால் வரலாற்றில் இடம் பிடிப்பார்.பார்க்கலாம்.

ராஜ நடராஜன் said...

//Blogger யாதவன் said...

முழுமையாய் வெற்றிபெற வாழ்த்துக்கள்//

பதிவுகளின் வெற்றி கருத்துக்கள் பலருக்கும் நேர்முகமாக போய்ச் சேர்வதில்தான் என நினைக்கிறேன்.ஈழம் பல பரிமாணங்களைக் கொண்டதாய் இருந்தாலும் அடைய வேண்டிய இலக்கு தமிழீழமாக இருக்க வேண்டும்.

ராஜ நடராஜன் said...

//வாழ்த்துக்கள் தலைவரே... கலக்குங்க..//

பதிவுலக சமூக காவலர் பாலாசி அவர்களே வருக!

ராமலக்ஷ்மி said...

மகிழ்ச்சி. இனிய நட்சத்திர வாழ்த்துக்கள்!

ராஜ நடராஜன் said...

//நட்சத்திரமே! இனிய வாழ்த்து(க்)கள்.//

பதிவுலக வசிஷ்ட்டி:) துளசி டீச்சரிடம் வாழ்த்துக்கள் பெறுவதில் பெருமையே!

shanmugavel said...

வாழ்த்துக்கள்.

புதுகை.அப்துல்லா said...

ரொம்ப சந்தோஷமண்ணே. பதிவுலகில் நம்மல்லாம் சமகால ஆளுங்க இல்லையா!

// மத அடிப்படைவாதங்களையும்,தனி மனித விமர்சனங்களையும் கடந்து விடுவது வழக்கம். //

நம்ம பாலிசி :)

தருமி said...

வாழ்த்துகள் .......

ஓலை said...

நட்சத்திர வாழ்த்துகள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்

boopathy perumal said...

வாழ்த்துக்கள்!

Anonymous said...

வாழ்த்துக்கள் தோழரே. ! :)

ராஜ நடராஜன் said...

//வணக்கம் ராஜ நட! நட்சத்திர வாரத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி.

அடிச்சு விளையாடுங்க... வாசிப்போம்!//

தெகா!மௌனமாக கவனித்துக்கொண்டுள்ளீர்கள் போல இருக்குதே:)

ராஜ நடராஜன் said...

//ராமலக்ஷ்மி said...

மகிழ்ச்சி. இனிய நட்சத்திர வாழ்த்துக்கள்!//

உங்களை மாதிரித்தான் காமிராவை எடுத்துக்கொண்டு தமிழில் புகைப்படக் கலைக்கு வந்தேன்.நாட்டு நடப்புக்களில்,தமிழ் உணர்வோடு இப்பொழுது காமிரா கழுத்தில் போஸ் கொடுக்க மட்டுமே பயன்படுகிறது.

திசை மாறிய காமிராக்காரன்:)

உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

//shanmugavel said...

வாழ்த்துக்கள்.//

உங்கள் வருகைக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

//ரொம்ப சந்தோஷமண்ணே. பதிவுலகில் நம்மல்லாம் சமகால ஆளுங்க இல்லையா!

// மத அடிப்படைவாதங்களையும்,தனி மனித விமர்சனங்களையும் கடந்து விடுவது வழக்கம். //

நம்ம பாலிசி :)//

வாங்க புதுகை அப்துல்லா!பதிவுலகில் சம காலத்து ஆட்கள் என்பது குறித்து மகிழ்ச்சி.

மத அடிப்படை வாதம்ன்னு சொன்னதும் பிறப்பில் இந்துவாக,கிறுஸ்தவ பள்ளி மாணவனாக,இஸ்லாமிய தேசத்தில் வாழ்பவனாக மதங்களின் பரிமாணம் கடந்த இயல்பான மனிதனாக மனித நேயம் போற்றும் மானிடனாக இருக்கவே விரும்புகிறேன்.

நம்ம பாலிசியென்று இணைந்து கொண்டதில் இன்னும் மகிழ்ச்சி.

ராஜ நடராஜன் said...

//வாழ்த்துகள் ......//

தருமி ஐயா!வணக்கம்.மதுரைவாசிகள் எல்லோரும் சேர்ந்து ஒரு கலக்கு கலக்கிட்டீங்க போல இருக்குதே:)

ராஜ நடராஜன் said...

//ஓலை said...

நட்சத்திர வாழ்த்துகள்.//

ஓலை!முன்பு உங்கள் பதிவின் ஓலைப்பட நினைவிலிருந்து நீங்கள் சிங்கப்பூர்வாசியென நினைக்கிறேன்.சரியா?

ராஜ நடராஜன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...

தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள்//

ஸ்டார்ஜன்!நீங்கள் நம்ம பக்கத்து வீடு சவுதிவாசியென நினைக்கிறேன்:)

வாழ்த்துக்கு நன்றி.

ராஜ நடராஜன் said...

//T.V.ராதாகிருஷ்ணன் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்//

ராதாகிருஷ்ணன் சார்!உங்கள் பெயரில் இணைந்து கொள்ள ஏதோ மெயில் வந்தது.இணைய முயலும் போது இமெயில் பாஸ்வேர்ட் கேட்டதால் இணைய வில்லை.உங்கள் இணைப்பாக இருந்தால் மீண்டும் இணைந்து கொள்கிறேன்.

ராஜ நடராஜன் said...

//boopathy perumal said...

வாழ்த்துக்கள்!//

வாங்க என்னுடன் இணைந்து ஒட்டகம் மேய்க்கும் தோழரே:)

ராஜ நடராஜன் said...

//வாழ்த்துக்கள் தோழரே. ! :)//

இது யார் பேட்டைக்கு புதுசா ஆரோணன் என்ற பெயரில் என்ற வியப்போடு கடைப்பக்கம் எட்டிப்பார்த்தா

மடுலுகிரிய விஜேரத்னே பற்றி கூறியிருந்தீர்கள்.சிங்கள விரோதங்களையும் கடந்து சக தோழனாய் பயணிக்கும் மனிதர்களை நேசிக்கிறேன்.அறிய தந்தமைக்கு நன்றி.

நசரேயன் said...

வாழ்த்துக்கள் .. வாழ்த்துக்கள் .. வாழ்த்துக்கள் ..

சுடுதண்ணி said...

நட்சத்திர வாரத்திற்கு உளமார்ந்த வாழ்த்துக்கள் !!!!!

அறி'முகம்' கிடைத்ததில் மகிழ்ச்சி :). அசத்துங்கள்.

வானம்பாடிகள் said...

வாழ்த்துகள்.

திகழ் said...

வாழ்த்துகள் நண்பரே

வினவு said...

வாழ்த்துக்கள், ராஜ நடராஜன்!

ஓலை said...

"ஓலை!முன்பு உங்கள் பதிவின் ஓலைப்பட நினைவிலிருந்து நீங்கள் சிங்கப்பூர்வாசியென நினைக்கிறேன்.சரியா?"

இல்லைங்க. நான் வேற. வெறும் பின்னூட்டம் மட்டும் இடுபவன். எனக்குன்னு தனி பதிவு ஆரம்பிக்கவில்லைங்க. நன்றி.

ராஜ நடராஜன் said...

//வாழ்த்துக்கள் .. வாழ்த்துக்கள் .. வாழ்த்துக்கள் ..//

நசர்ஜி!எப்படியிருக்கீங்க?

ராஜ நடராஜன் said...

//வாழ்த்துகள்.//

பாலாண்ணா!ஆளையே காணோமே!பஸ்ஸுல கும்மியடிக்கிறீங்களா:)

ராஜ நடராஜன் said...

//நட்சத்திர வாரத்திற்கு உளமார்ந்த வாழ்த்துக்கள் !!!!!

அறி'முகம்' கிடைத்ததில் மகிழ்ச்சி :). அசத்துங்கள்.//

நேர்முகமே காண வேண்டியது.தவறிடுச்சு இல்ல:)

ராஜ நடராஜன் said...

//வாழ்த்துக்கள், ராஜ நடராஜன்!//

வினவு தளத்தின் தனி வாழ்த்துக்கு நன்றிகள் பல!

ராஜ நடராஜன் said...

//"ஓலை!முன்பு உங்கள் பதிவின் ஓலைப்பட நினைவிலிருந்து நீங்கள் சிங்கப்பூர்வாசியென நினைக்கிறேன்.சரியா?"

இல்லைங்க. நான் வேற. வெறும் பின்னூட்டம் மட்டும் இடுபவன். எனக்குன்னு தனி பதிவு ஆரம்பிக்கவில்லைங்க. நன்றி.//

என்னது கடையே திறக்கலையா:)
முன்பு ஓலைச்சுவடிகளின் அழகான படங்களுடன் சிங்கப்பூரிலிருந்து கடை திறந்திருந்தார்.அவரென நினைத்து விட்டேன்.ஆனாலும் உங்கள் பின்னூட்டங்களை நிறைய காண்கிறேன்.

கூகிள்கிட்ட சீக்கிரம் பட்டா போட்டுக்கொள்ளுங்க.

உண்மைத்தமிழன் said...

ஸார்.. தாமதத்திற்கு மன்னிக்கவும். இப்போதுதான் பார்த்தேன்..!

தமிழ்மணம் நட்சத்திரமானதற்கு எனது வாழ்த்துகள்..!

வாழ்க வளர்க..!

ராஜ நடராஜன் said...

//ஸார்.. தாமதத்திற்கு மன்னிக்கவும். இப்போதுதான் பார்த்தேன்..!

தமிழ்மணம் நட்சத்திரமானதற்கு எனது வாழ்த்துகள்..!

வாழ்க வளர்க..!//

உண்மை தமிழன் அண்ணே!என்ன சார் என்றெல்லாம் தூரப்படுத்திகிட்டு:)

பதிவுலக ஞாநியின் வாழ்த்துக்கு நன்றி!