Followers

Monday, June 13, 2011

ஈழ மக்களுக்கும்,மண்ணுக்கும் தமிழர்களின் பங்கு-பகுதி 2

விடுதலைக்கான குரலாக எஸ்.ஜே.வி.செல்வநாயகம் காலம்
 

ஈழத்தமிழர் பிரச்சினையை தந்தை செல்வா காலத்திற்கும் முந்தைய சிலோன் வாழ்க்கை நிலை,பிரபாகரன் சகாப்த விடுதலைப் போராளிகள் காலம்,விடுதலைப்புலிகளுக்கும்,ஏனைய போராளிகளுக்கும் அப்பால் தற்போதும் இனியும் தொடர்ந்து பயணிக்கும் மூன்று நிலைகளில் மட்டுமே மதிப்பீடு செய்ய முடியும்.மன்னர் காலத்து வாழ்க்கையை அடுத்து மக்களாட்சி கோட்பாட்டுடன் உலகம் பயணிக்கும் கால கட்டத்திலிருந்து இனி ஈழப்பிரச்சினையை அணுகலாம்.

எனவே தமிழீழ சுய நிர்ணய உரிமை என சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் அவர்களால் தமிழ் ஐக்கிய முன்ணணி என்ற பெயரால் 1974 வருட அறிக்கையின் சில அம்சங்களிலிருந்து துவங்குவது தமிழீழ உணர்வின் விதைகள் தூவப்பட்ட காலமாகும் என்பதால் பொறுத்தமாகவும் ஈழ வரலாற்றின் துவக்கமாகவும் இருக்கும்.

தற்போதைய நிலைக்கும் ,விடுதலைப் புலிகளின் சகாப்தங்களுக்கும் முன்பும் தமிழீழ குரலுக்கான துவக்கமான காலமாய் எஸ்.ஜே.வி செல்வநாயகம் காலத்து சிலோன் நிலையையும்,போராட்ட காலத்துக்கான வித்துக்கள் விதைக்கப்பட்ட வரலாற்று உண்மைகளையும் ஆவண பூர்வமாக இங்கே பார்த்து விடலாம்.

துவக்கப்புள்ளியாக சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் காலம் தொட்டு ஈழ விடுதலைக்கான தேவையை நோக்குவோம்.இலங்கை என்று பெயர் மாற்றம் பெருவதற்கு முன் போர்த்துகீசியர்,டச்சுக்காரர்கள் பின் ஆங்கிலேயர்கள் காலமும் அதனைத் தொடர்ந்த சுதந்திரம் பெற்ற சிலோன் என்று அழைக்கப்பட்ட காலங்களே விடுதலைக்கான தேவைக்கான வித்தை விதைக்கிறது.அதற்கான சான்றாய் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் உரை இங்கே ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி மாற்றமாக...

ஈழத்தமிழர்களின் சுய நிர்ணய உரிமை.

Memorandum from Tamil United Front
to 20th Conference of Commonwealth Parliamentarians
Sri Lanka – 1 September 1974


சிலோன் தமிழர்கள் சார்பாக நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.எங்களது அன்பான வணக்கத்தை தெரிவிக்கிறோம்.

இந்த அறிக்கையை இங்கே சமர்ப்பிப்பதன் மூலம் உலகின் மனசாட்சியை தட்டி எழுப்புவதோடு, தமிழர்களின் மனித உரிமைகள் திட்டமிட்டு மறுக்கப்படுவதையும், பல விதமான இனப்பாகுபாடுகளையும் ஏனைய முயற்சிகள் தமிழர்களின் இனப்படுகொலைக்கு மட்டுமே கொண்டு செல்லும்.

சிலோன் தமிழர்கள் பண்பாட்டால்,மதத்தால்,மொழியால்,நிலப்பரப்பில் சிங்கள தேசத்திலிருந்து பிரிந்து நிற்கும் தனி நாடாகும்.

ஐரோப்பியர்களின் படையெடுப்பிற்கு முன் வடக்கில் தமிழ் மன்னனின் ஆட்சியும் தெற்கில் இரு சிங்கள மன்னர்கள் என மூன்று அரசுகள் ஆட்சி புரிந்தன.1619ல் போர்த்துகீசியர் படையெடுப்பின் துவக்கம் முதற்கொண்டு 1659ல் டச்சுக்காரர்கள் கைப்பற்றிய பின் 1796ல் பிரிட்டிஷ்காரர்கள் வருகைக்குப் பின் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் துவக்கம் கொண்டு 1815ம் ஆண்டு மூன்று அரசுகளுமே ஒரே ஆட்சியின் கீழ் வருகிறது.தனித் தனியாக ஆட்சி செய்யப்பட்ட தமிழ்,சிங்கள அரசுகள் பின் ஒரே நிர்வாகத்தின் கீழ் வருகிறது.இந்த கால கட்டத்தில் யாருடைய கருத்தையும் கேளாமல் சுய அதிகார அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டதே பின்பு அனைத்து சிக்கல்களுக்கும் காரணமாகி விடுகிறது.இதனை முதலில் கண்டி சிங்களவர்கள்  எதிர்த்தார்கள்.1945ல் பிரிட்டிஷ்காரர்கள் அதிகார மாற்றம் செய்ய நினைக்கையில் அமைச்சர் குழுக்களின் ஆலோசனைகளை கேட்டார்கள்.பெரும்பான்மை இனத்தவர்களை சார்ந்திருக்கும் இதனை பெருமான்மையான தமிழர்கள் எதிர்த்தார்கள்.இதனை விசாரிக்க லார்ட் சௌல்பரியின் தலைமையில் ராயல் கமிசன் என்ற பெயரில் குழு அனுப்பியதில் சிறுபான்மையினரின் தேவைகளை பாதுகாக்க வேண்டியது குறித்த தேவையை உணர்ந்தார்கள்.

இது குறித்த எந்த சட்ட நடவடிக்கையும் சிறுபான்மையினர் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என வெள்ளை அறிக்கையும் தயாரிக்கப்பட்டாலும் கூட இவை நடைமுறை சாத்தியமில்லாத தனது ஏமாற்றத்தை சிலோன்,பிரிக்கப்பட்ட தேசம் என்ற பி.ஹெச்.பார்மர் (B.H.Farmer) புத்தகத்தின் முகவுரையில் சொல்லும் போது:

“இரு இனத்திற்குமிடையேயான முரண்பாடுகள் குறித்த குறைந்த அறிவே விசாரனைக் கமிசனுக்கு இருந்தது.நிகழ்வுகள் எனக்கும் விசாரணைக் குழுவுக்கும் ஏமாற்றத்தையே ஏற்படுத்துகிறது.”

இருந்த போதிலும் பிரிட்டிஷ் நிர்வாக ஒற்றுமைக்காக உருவாக்கப்பட்டதன் நம்பிக்கையின் அடிப்படையில் தமிழர்கள் மூன்று முக்கிய கருத்துக்களை முன் வைத்தார்கள்.
a) சம பங்கீடு
காலனித்துவ நாடுகளின் செயலாராக இருந்த டேவன்சயர் டியூக் சொன்னதின் அடிப்படையில் சட்டத்தில் சம பங்கீடு.இதன்படி ஒரு இனத்தில் மட்டுமே அதிகாரக் குவிப்பு இல்லாமல் அனைத்து வகுப்பினருக்கும் பங்கீடு என்பதோடு மொத்த மக்களின் நலன் சார்ந்த ஒன்றாக கருதியதை சவுல்பரி கமிசனர்கள் அனுமதிக்கவில்லை.
b) பெடரல் சட்ட அமைப்புக்கான தேவை
சுதந்திரம் பெற்ற ஒரு வருடத்திற்குள்ளாகவே தமிழர்களின் உரிமைகள் மோசமாகும் நிலையில் பெடரல் (Indian model of Central and state governance) அரசு முறை முன்வைக்கப்பட்டது.இதன் மூலமாக இரண்டு வேறுபட்ட தேசங்களை ஒரே நாடாக இணைக்கமுடியும் என்று உணர்ந்த காரணத்தினால் இதனை முன்வைக்கப்பட்டது.Mr. S. W. R. D. பண்டாரநாயக்கா மே 1926க்கும் முன்பே பெடரல் அமைப்பை முன்மொழிந்தது இங்கே நினைவுகூறத் தக்கதாகும்.இருந்தாலும் பண்டாரநாயக்கா ஆட்சிக்கு வந்தவுடன் இதனை புறக்கணித்தார்.ஜுலை 17ம்தேதி சிலோன் மார்னிங்க் லீடர் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்ட அவரின் பேச்சின் குறிப்பில் ஒன்றாக

“பழைய வரலாற்றைப் பார்த்தால் தமிழர்கள்,கீழ் நாட்டு சிங்களவர்கள்,கண்டியன் சிங்களவர்கள் என்ற மூன்று பிரிவினர் 1000 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்தார்கள் என்றும் அவர்கள் எந்தக்காலத்திலும் இணைந்து வாழ விரும்பியதேயில்லை.இருந்தாலும் ஒருமித்த ஒன்றுபட்ட நாடாக கருதுகிறது” என்பதன் கருத்துக்கு எதிர்ப்புக்கள் கிளம்பிய போது பெடரல் அமைப்பிலான அரசே இதற்கு தீர்வு என்று ஏற்றுக்கொண்டார்.
c) மூன்றாவதாக இந்த ஆலோசனைகள் நிராகரிக்கப்பட்டு  யாருடைய ஆலொசனையும் கேட்காமல் 1972ல் ஒருமித்த கருத்தாக புதிய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது.இந்த புதிய சட்டம் சவுல்பரி அரசியமைப்பின் குறைந்த பட்ச பாதுகாப்பையும் முற்றிலுமாக துடைத்ததோடு மட்டுமல்லாமல் சிங்களவர்கள் அல்லாத புத்தமதத்தை சார்ந்தவர்கள் அல்லாதவர்களுக்கு மேலும் பின்னடைவைத் தந்தது.இதன் காரணமாக தமிழர்கள் ஐக்கிய முன்ணணி என்ற அமைப்பில் அரசியல் கட்சிகளையும்,தொழிற் சங்கங்களையும்,கட்சிகள் சாராத அனைத்து தமிழர்களையும் ஒன்றிணைத்தது.இன்று தமிழ் ஐக்கிய முன்ணணி (Tamil United Front (TUF).) தமிழர்களின் குரலாய் ஒலிக்கிறது.தமிழ் ஐக்கிய முன்ணணி புதிய சட்டத்தை நிராகரித்ததோடு மட்டுமல்லாமல் புதிய ஆறு அம்சத் திட்டத்தை முன் வைத்தது.

1972 ன் புதிய சட்டத்தின் ஆறு அம்ச திட்டங்கள்

a) சிங்கள மொழிக்கு இணையாக தமிழ் மொழியும் நிலை நாட்டபடவேண்டும்.
b) சட்டப்படி அனைத்து தமிழ் பேசும் மக்களுக்கும் குடியுரிமை உத்தரவாதம் தேவை.
     தனித்தனிப் பிரிவாக குடியுரிமை வழங்கவோ குடியுரிமையை நிராகரிக்கும் அதிகாரமோ இருக்க கூடாது.
c) மதச் சார்பற்ற நாடாக அனைத்து மதங்களையும் பாதுகாக்க வேண்டும்
d) அரசியல் அனைத்து கலாச்சார மக்களுக்கும் சட்ட அமைப்பு அடிப்படை உரிமைகளை பாதுகாக்க உத்தரவாதம் தரவேண்டும்.
e) அரசியல் சட்டம் தீண்டாமை, ஜாதி,மத பேதமின்றி அனைவரையும் சமமாக பாதுகாக்க வேண்டும்.
f)  சமூக மக்களாட்சியில் அதிகாரம் ஒருமுகப்படுத்தப் படாமல் அதிகார பரவலாக்குவதன் மூலமே ஆட்சி அதிகாரத்தை விட மக்கள் அதிகாரம் விளங்கும்.

புதிய காலனியாட்சி முறையில்:

1. தமிழர்களுக்கான மனித உரிமைகள் மறுப்பு
2. இன வேறுபாடு சட்டம்
3. சிலோன் தமிழர்கள் தாம் வாழும் மண்,மொழி,மதம்,கலாச்சாரத்தால் சிங்களவர்களிடமிருந்து வேறுபடுகிறார்கள்
4. சம பங்கீடு
5. பெடரல் அரசியல் சட்ட அமைப்பு

இரு தேசிய,இரு மொழி,பல மத சிலோன் நாட்டை ஒரு சிங்கள மொழி,புத்த மத முன்னிலைப்படுத்தலில் 1974 ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி ஆகஸ்ட் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.தமிழ் மக்களுக்கான அடக்கு முறைக்கு சான்றாக 6 சான்றுகள் இங்கே குறிப்பிடப்படுகிறது.

1.குடியுரிமையும் தனிமைப்படுத்தலும்

சுதந்திரம் பெற்ற சில மாதங்களிலேயே சிங்களத் தலைமைகளுக்கு தமிழர்களுக்கு கொடுத்த உறுதிமொழிகளை மறப்பதில் சிரமம் இருக்கவில்லை.சுதந்திரத்திற்கு முன் ஒரே தகுதியிலான குடியுரிமை பெற்றவர்கள்,1948ம் ஆண்டு குடியுரிமைச் சட்டம் எண் 19ன் படி ஒரு மில்லியன் தமிழர்கள் குடியுரிமை இழந்தவர்களாக்கப்பட்டார்கள்.இந்த சட்டத்தினால் தமிழர்களும்,முஸ்லீம்களும் கூட பாதிக்கப்பட்டார்கள்.தமிழ்,முஸ்லீம் பெயர்கள் கொண்டவர்கள் அரசு சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு தங்கள் குடியுரிமை சான்றிதழ்களை வழங்க வேண்டுமென வற்புறுத்தப்பட்டார்கள்.கீழ் கண்டவைகள் அவைகளில் சில:
a)    அரசுத்துறைகளில் வேலைவாய்ப்பு
b)    கடவுச்சீட்டு(Passport) மற்றும் பயண சான்றுகள்
c)    குடியுரிமை பத்திரம்
d)    அரிசி வழங்குவதற்கான ரேசன் கார்டுகள்
e)    தேர்தல் அட்டவணையில் பெயர்கள் சேர்த்தல்
f)    சொத்துரிமைப் பத்திரங்கள் மாற்றம்
g)    சிலோன் வியாபாரத்தில் பதிவு செய்தல்
h)    சிலோன்காரர்களுக்கு பகுதியாகவோ முழுமையாகவோ ஒதுக்கப்பட்ட பகுதிகள்

இதற்கும் அடுத்த ஆண்டு 1949ம் வருட பாராளுமன்ற தேர்தல் மாற்ற சட்டம் எண்.48ன் படி தமிழர்களுக்கான ஓட்டுரிமைகள் மறுக்கப்படும் படி சட்டம் இயக்கப்பட்டது.பாதியாக இருந்த தமிழ் மக்கள் தொகைக்கு மாறாக வாக்குரிமைகள் சிங்களவர்களுக்கு 58 இடங்களும்,சிலோன் தமிழர்களுக்கு 15 இடங்களும்,இந்திய தமிழர்களுக்கு 14 இடங்களுமென மாற்றம் செய்யப்பட்டது.
கீழ்கண்ட அட்டவணை இந்த சமமின்மையை உறுதிப்படுத்தும்.

COMMUNITY     1947     1952     1956     1960     1960
    % of seats     % of seats     % of seats     % of seats     % of seats
Sinhalese     63     73     73     78     77
Ceylon Tamils     13     12     12     11     11
Indian Tamils     7     Nil     Nil     Nil     Nil
Muslims     6     8     7     6     7

மேற்கண்ட அட்டவணை சிறுபான்மையினருக்கும் வாக்குரிமை போன்று தென்பட்டாலும் உண்மையில் பெரும்பான்மையானவர்களுக்கு அதிக இடங்களைத் தருவதற்காக வகுக்கப்பட்ட சட்டமாகும்.

2. தமிழர் பகுதியில் தலையீடுகள்.
பெரும்பானமை தமிழர்கள் வசித்த கிழக்கு மாகாண பகுதியிலும் சிங்கள மக்களை குடியேற்றம் செய்து சிங்கள வாக்குரிமைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சி செய்ததோடு மட்டுமல்லாமல் நிலம் வாங்குவதற்கு தனி உரிமங்கள் வழங்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் தமிழர்கள் தண்டனைகளுக்குட்பட்டு வெளியேற்றபட்டார்கள்.இவையெல்லாம் மக்கள் இயக்கத்தால் இயல்பாய் நிகழ்ந்த ஒன்றாக இல்லாமல் அரசால் திட்டமிடப்பட்ட செயல்கள்.

3. மொழி
மற்ற மொழிக்காரர்களுடன் சம உரிமை என்ற முந்தைய நிலை மாறி தமிழர்கள் அவமதிக்கப்பட்டு ஏமாற்றம் அடைந்தார்கள்.1955ம் வருடம் வரை சிங்களர்களும்,தமிழர்களும் ஒரே உரிமையைக் கொண்டிருந்தார்கள் எனபதில் சந்தேகமேயில்லை.உண்மையில் சிங்களமும்,தமிழும் அரசு மொழிகள் என அரசு கவுன்சில் தீர்மானம் கொண்டு வந்ததை பெரும்பான்மையானவர்கள் வரவேற்றார்கள்.

இது பற்றி திரு.S. W. R. D. பண்டாரநாயகே சொல்லும் போது:

ஒரு தேசத்தின் முக்கிய அங்கம் மொழியென்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.மொழி என்ற வாகனத்தின் மூலமாகவே மக்களின் ஆசைகள்,கனவுகள்,வெற்றிகள் என்பவை பல்லாண்டு காலமாக போற்றவும் பாதுக்காக்கப்பட்டும் வந்துள்ளது.எனவே ஒரு தேசம் எனபது மனவியல்,உணர்வுபூர்வமாக கலாச்சார அடிப்படையில் மொழியின் மூலமாகவே தேசத்தின் மதிப்பு வெளிப்படுத்தப் படுகிறது.இதனால் தான் ஒரு தேசத்தின் முக்கிய அங்கமாக மொழி கருதப்படுகிறது.சிங்கள மொழி மட்டும் அரசு மொழி குறிக்கோளாக இருந்தால் என்ன?ஒரு மொழிக்கும் மேலான திட்டத்திற்கு மறுப்பு இருந்தால் ஏனைய நாடுகள் இரு மொழிக்கும் மேலான அரசு மொழிகள் கொண்டிருந்தும் ஓரளவுக்கு திருப்தி கொள்ளும் நிலையே காணப்படுகிறது.

தமிழை தேசிய மொழியாகவும் அரசு மொழியாக கருதுவதில் எந்த தீங்குமில்லையென்றே நினைக்கின்றேன்.பல தரப்பட்ட வகுப்புகளிடமிருந்தும் இந்த நம்பிக்கையை கொண்டு வருவதற்கு நாம் முயற்சிகள் செய்கிறோம்.எனவே தனிப்பட்ட முறையில் இரு மொழிக்கொள்கையை கடைப்பிடிப்பதில் எனக்கு எந்த மறுப்பும் கிடையாது.மேலும் இதனால் எந்த தீமையோ,ஆபத்தோ,பிரச்சினையோ கிடையாது என நினைக்கிறேன்(அரசு ஆவண பூர்வமான அரசு கவுன்சில் தகவல்,25th May 1944:Vol.1 c809)

ஆனால் 1956ம் வருடம் மொழி திருத்த சட்ட எண் 33ன் படி சிங்கள மொழியே சிலோனின் அரசு மொழியாக விளங்கும் என அறிவிக்கப்பட்டது.இதனால் தமிழர்கள் தமிழ் மொழிக்கான சம உரிமைக்காக தங்களது எதிர்ப்புக்களை தெரிவித்தார்கள்.தமிழ் பேசும் பகுதிகளான பட்டிகாலா,திருகோணமலை,வவுனியா,மன்னார்,ஜஃப்னா தமிழர் பகுதிகளில் அரசாங்க அலுவலகங்கள் முன்பு 1961ம் ஆண்டு 57 நாட்களுக்கு சத்யாகிரக போராட்டத்தை செய்தார்கள்.இதனால் அரசு நிர்வாகம் முடங்கிப் போயின.அரசாங்கம் அவசர கால சட்டத்தைப் பிறப்பித்து ராணுவ அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டது.தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களான கந்தையா வைத்தியநாதன் போன்றோர் கைது செய்யப்பட்டார்கள்.வட, கிழக்குப் பகுதியில் தமிழை சட்டப்படி உபயோகிக்க முயன்ற போதிலும் சிங்கள மொழி மட்டுமே பொதுவான அரசு சம்பந்தப்பட்ட மொழியாக இருந்தது தமிழர்களுக்கு அவமதிப்பையும்,சிரமத்தையும் உருவாக்கியது.

4. கல்வி
கல்வியிலும் கீழ்மைப் படுத்தலுக்கான சிலவற்றை இங்கே குறிப்பிடுகிறோம்.
a)    1960ம் வருட கல்வி சீர்திருத்த சட்டம் எண் 5ன் படியும் 1961ம் வருட சட்டம் எண் 8ன் படி தமிழர்களாலும்,கிறுஸ்தவர்களாலும் நடத்தப்பட்ட பள்ளிகள் தடை செய்யப்பட்டன.ஆனால் புத்த பிரிவீனா பள்ளிகள் தன்னிச்சை பள்ளிகளாக அரசு உதவியுடன் நடத்தப் பட்டன.
b)    எஸ்டேட்கள் என்று அழைக்கப்படும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் பள்ளிகள் அரசால் நிர்வகிக்கப் படாமல் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே எப்பொழுதும் போல் இருந்தது.
c)    தமிழ் மொழியில் கற்பிக்கப்படும் பள்ளிகள் சிங்கள மொழியில் கற்பிக்கப்படும் பள்ளிகளாக மாற்றப்பட்டு சிங்கள மொழியை கற்க வற்புறுத்தப்பட்டார்கள்.
d)    தென் சிலோனில் அரசால் எடுத்துக்கொள்ளப் பட்ட தமிழ்ப் பள்ளிகளில் அதிகம் தமிழ்க் குழந்தைகளே படித்த போதும் இவர்களுக்கு மாற்று வசதிகள் ஏற்படுத்தாமல் சிங்கள பள்ளிகளாக மாற்றப்பட்டது.
e)    வடக்கில் தமிழ் மொழி வழிக்கல்வியாக இருந்த நான்கு பள்ளிகள் சிங்கள மொழி பள்ளிகளாக மாற்றப்பட்டது.
f)    மேற்கல்வி கற்பதற்கான வழிகள்-தற்போதைய அரசு நிர்வாகம் ஆட்சிக்கு வந்த பின் இன பாகுபாடு பின்பற்றப்பட்டது.1970ல் தமிழ் மாணவர்கள் அனுமதி பெறுவதற்கு மேல் நிலை தேவைப்பட்டது.தகுதிகள் மறுக்கப்பட்டு கிராமப் புறங்களுக்கு முன்னுரிமை தருவதன் போர்வையில் இனப்பிரிவினையை உருவாக்கியது.1970ம் வருடம் தமிழ்,சிங்கள மாணவர்கள் பெறப்பட வேண்டிய மதிப்பெண்கள் தேவையைக் குறிப்பிடுகிறோம்.

கல்லூரிகளில் உள்நுழைவுக்கு தேவையான மொத்தம் மதிப்பெண்கள் 

                                                              Tamils     Sinhalese
Peradeniya- Engineering                            250     225
Katubedde- Engineering                            232     212
Medicine and Dentistry                              250     229
Agriculture, Veterinary & Bio-Science        184     174
Physical Science                                        204     183
Architecture                                              194     180

இந்த பிரிவினை ஒரு அரசாங்கத் தவறு என்று அரசு ஏற்றுக்கொண்ட போதிலும் இந்த திட்டம் ரகசியமாக தொகுதி வாரியான அடிப்படையில் தொடர்ந்தது.இதன் அடிப்படையில் தமிழ் மாணவர்கள் தகுதியின் அடிப்படையிலேயே மேற்படிப்புக்கு தகுதி பெற்றவர்களாகிறார்கள்.

5. தமிழர்களுக்கெதிரான வன்முறைகள்.
  1956ம் வருடம் முதல் 1961ம் வருடம் வரையும் 1974ல் தமிழர்கள் வன்முறைக்கு ஆட்பட்டார்கள்.1958ம் வருடம் சில சிங்கள குழுக்களால் உருவாக்கப்பட்ட அமைப்புக்கள் மூலம் தமிழர்கள் நிலப்பகுதிகள் அல்லாத பகுதிகளில் வசித்த தமிழர்கள் கொலை,துன்புறுத்தல்,கற்பழிப்பு மற்றும் திருட்டு கட்டவிழ்த்து விடப்பட்டது.1961ம் வருடம் சத்யாகிரகிகளை அப்புறப்படுத்த இந்த குழுக்கள் உபயோகிக்கப்பட்டது.1971ம் வருடம் அரசியல் சாராத கலாச்சார நிகழ்வில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.காவல்துறையும்,ராணுவமும் வன்முறையை குறிப்பிட முடியாத அளவுக்கு கட்டவிழ்த்து விட்டது.

6. பட்டினியும்,சாவும்.

தேயிலை,ரப்பர்,தேங்காய் தோட்டங்கள் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்தன.சுதந்திரத்திற்கு பின் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு ரத்த ஓட்டமாக விளங்கும் தமிழ் தொழிலாளர்கள் மீது சொல்ல இயலாத அளவுக்கு அரசியல்,சமூக,பொருளாதார ரீதியாக தேசிய சட்டங்கள் மூலமாக ஒடுக்கப்பட்டார்கள்.மில்லியனுக்கும் மேற்பட்ட தமிழ் தோட்ட தொழிலாளர்கள் மீது வேலை வாய்ப்பின்மை,குறைந்த ஊதியம்,உணவு பங்கீட்டு அளவு குறைப்பு போன்றவைகளால் இனப்படுகொலைக்கு நிகரான பட்டினிச் சாவு நிலை உருவாக்கப்பட்டது.இதன் மொத்த பாதிப்பாக அதிக இறப்பு விகிதமும், தோட்ட தொழிலாளர்களும் அவர்களது குடும்பமும் உணவு, வேலைக்காக நகரங்களை நோக்கி நகர வேண்டிய சூழல் உருவானது.

தமிழர்களின் துயரங்களுக்கு காரணங்களை குறிப்பிட வேண்டுமானால்
1.அரசு துறைகளில் வேலை வாய்ப்புக்களில் சமமான சந்தர்ப்பங்கள் மறுக்கப்படுவது.
2. அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி புத்தக பாடங்களில் தமிழர்களுக்கு எதிரான பிரச்சாரம்.
3. காவல்துறை,ராணுவத்தின் தொடர்ந்த செயல்கள்
4. அமைதியாக ஒன்று கூடுவதற்கு அனுமதி மறுப்பு
5. தமிழர்களும்,தமிழ் தலைவர்களும் நாட்டை விட்டு வெளியேறும் உரிமை மறுப்பு
6. சிறுபான்மையோரை பாதுகாக்கும் அடிப்படை உரிமையின்மை
7. சரியான காரணங்களின்றி கைது மற்றும் சிறையடைப்பு
8. கைதின் போதும்,சிறையிலும் மனிதாபிமானமற்ற குரூரமான தண்டனைகள்
9. புத்த மதத்திற்கு முக்கியத்துவமும் சட்ட அமைப்பில் அந்த மதத்தை பாதுகாப்பதும் முன்னிலைப்படுத்துவதும்
10. காங்கேசன்துறை மக்களில் 50,000க்கும் மேற்பட்டவர்களுக்கு தேர்தல் வாக்குரிமை மறுப்பும் கடந்த இரு ஆண்டுகளாக இடைத்தேர்தல் மறுப்பும்.

காமன்வெல்த் மற்றும் தமிழர்கள்.

இன்று சிரிலங்கா இரு தேசம் என்ற கோட்பாட்டில் தமிழர்கள் தங்கள் சுய நிர்ணய உரிமையை நோக்குகிறார்கள்.தமிழர்களின் பிரச்சினை உள்நாட்டு விசயமல்ல.இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் திரு.ராஜகோபாலாச்சாரி குறிப்பிட்ட படி:

“அதிகமான தவறுகள் குடும்பத்தின் சுவர்களிலும்,அதிகமான பொது தவறுகள் நாட்டின் எல்லைகளுக்குள்ளேயே நிகழ்கின்றன.ஒரு நாட்டின் உள் மாகாணங்களின் மதிப்பை மாற்றி அமைப்பதை உலகம் கருதுமானால் அப்புறம் மொத்த உலகின் முன்னேற்றத்திற்கு சந்தர்ப்பமே கிடையாது;சர்வாதிகாரம் உலகின் அதிகாரமாகி விடும்”.

தமிழர் பிரச்சினை சிரி லங்காவின் உள்நாட்டுப் பிரச்சினையென்ற முயற்சிகள் மேற்கொண்டால் அரசியல்,சமூக நிதர்சனங்களை அனுமதிக்காமல் தப்பிக்கவே வழிவகுக்கும்.அதிக ஆபத்துக்கள் கொண்ட இந்த சூழ்நிலை கை நழுவிப்போய் விடுமென்பதில் சந்தேகமேயில்லை.எல்லா வகையிலும் சிலோன் தமிழர்கள் தங்கள் உரிமைகளை பேச்சு வார்த்தைகள் மூலமாகவும்,சமாதான வழிகளிலும் அடைய விரும்புகிறார்கள்; மன கொதிப்பும்,ஏமாற்றங்களும் உருவாகும் சுற்றி வரும் பிரச்சினைகள் இப்பொழுதோ அல்லது சிறிது காலத்திலோ திரும்ப இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டு விடும்.

இன்றைய சிலோனில் மோசமான சூழ்நிலைகள் இன்னும் அதிக மோசமாகும் முன் உடனடி நடவடிக்கையும்,உதவியும் தேவை.கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் இது குறித்த விவாதக் குறிப்பு இல்லாதுபோயினும்,சிறுபான்மை நாடுகள் பற்றி காமன்வெல்த் நாடுகளில் விவாதிக்கும் நிலை உருவாகும்.இதே போன்ற நிலைகள் நிகழ்ச்சி நிரலில் இல்லாமல் இருந்தும் காஷ்மீர் மற்றும் ஆப்பிரிக்க இனவேற்றுமை போன்றவற்றில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.இங்கே மிகவும் மோசமாகும் சூழல்கள் மனிதாபிமான அடிப்படையில் சிலோன் தமிழர் பிரச்சினை குறித்து 20வது கான்பரன்ஸ் கூட்டத்தில் விவாதிக்கப்படவேண்டும். அடிப்படை உரிமைகளுக்காக பலரும் வாழ்வை இழந்த பின்னரே உலக நாடுகள் சிறிய நாடுகள் சிரமத்திலிருக்கும் போது உதவுவதை தற்போதைய வரலாறுகள் காட்டுகின்றன.

CPA என்ற காமன்வெல்த் அமைப்பு 

 பாராளுமன்றத்தால்,இனம்,மதம்,கலாச்சாரங்களுக்கும் அப்பால் சட்டம்,உரிமைகள் என தனி மனித சுதந்திரத்தை பாராளுமன்ற ஜனநாய குறிக்கோள்களோடு  இணைந்து மதிக்கும் அமைப்பு.எனவே சிலோன் தமிழர்களின் பிரச்சினைகள் இந்த கூட்டத்தின் அங்கத்தினவர்களின் அனுதாப கண்ணோட்டத்தோடு நோக்கும் எனபது எங்களின் நம்பிக்கை.இந்த அமைப்பு தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டுகிறோம்.

S. J. V. Chelvanayakam, Q.C.,
President, Tamil United Front,
16, Alfred House Gardens
Colombo 3,
Sri Lanka.

அறிவிப்பு: பதிவின் நீளத்திலும்,மொழி பெயர்ப்பிலும் சில பகுதிகள் விட்டுப்போயிருக்க கூடும்.எனவே முழு வாசிப்பின் தேவை வேண்டி பத்திரம் என்று அழகாக பெயர் சூட்டப்பட்ட பதிவின் ஆவணத்திலிருந்து இணைத்த ஆங்கில மூலத்தையும் இணைத்துள்ளேன்.

ஆதரவுக் குரல் நட்புக்களுடன்,ஆக்கபூர்வமான,நேர்மையான மாற்றுக் கருத்துக்களையும் வரவேற்கிறேன்.

இனியும் ஈழம் தொடரும்....

25 comments:

Anonymous said...

நல்ல பதிவு சகோ. நிறைய அறியக் கூடியதாக இருந்தது. :)

நிகழ்வுகள் said...

ஆரோக்கியமான பதிவு.

ஹேமா said...

இலங்கையில் தமிழரின் துயரங்களை அடுக்கியிருக்கிறீர்கள்.ஒரு இனம்,ஒரு மக்கள் என்கிறார்கள்.
தமிழ் மொழியில் உத்தியோக பூர்வமான அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை.

என் அப்பா ஒரு அரசாங்கப் பாடசாலையில் அதிபராக இருந்தவர்.கடிதங்கள் எல்லாமே சிங்களத்தில்தான் வரும் எனக்குத் தெரிய எத்தனையோ தரம் தனக்குச் சிங்களம் தெரியாதென்று முறையிட்டிருக்கிறார்.சரி அப்படியென்றாலும் நாடு முழுதும் இரண்டு மொழிகளையும் பாடத்திட்டம் போட்டுப் படிக்கும் வசதிகளையும் கொண்டு வரவில்லை.முக்கியமான அகுவலகங்கள் போனால் அவர்கள்தான் இருப்பார்கள்.
அவர்களுக்குத் தமிழும்,எங்களுக்குச் சிங்களமும் தெரியாது.
பிறகென்ன சமவுரிமை.

என்னோடு ஒரு சிங்களவர் வேலை செய்கிறார்.அதே நிலைமைதான் இங்கும்.கதைத்துக்கொள்வதில்லை.பொதுவாக ஒரு வணக்கம்.
அவ்வளவுதான்.ஏனென்று இந்த நாட்டுக்காரன் கேட்டுவிட்டுச் சிரிக்கிறான்.இதானால்தான் உன் நாட்டில் குழப்பமென்று பொதுவாகவே சொல்லிவிடுகிறார்கள்.

நாம் வேற்று நாடுகளில் வாழ்கிறோம்.எத்தனை மொழிகள் இங்கு.இங்கு முதலாவது மொழி ஜேர்மன்,இரண்டாவது பிரென்ஞ்,அடுத்து ஆங்கிலம். கட்டாயமான மொழிகள் இவைகள்.அதனாலேயே பரந்த ஒற்றுமை தெரிகிறது !

Rathi said...

ராஜ நட,

மன்னர் ஆட்சி முறை முடிவுக்கு கொண்டுவரப்பட்டது காலனியாதிக்கத்தில். உங்கள் கட்டுரையை முழுதுமாக நான் இன்னும் ஆற, அமர படிக்கவில்லை. இருந்தாலும் ஈழத்தின் வரலாற்றை மன்னர் ஆட்சிக்காலத்தில் இருந்தே நீங்கள் தொடங்கியிருக்கலாம். அப்போது தான் ஈழத்தமிழர்கள் வந்தேறுகுடிகள் அல்ல. அவர்களுக்கென்று ஓர் ராட்சியம், பண்பாடு, மொழி, பொருளாதாரமுறை சார்ந்த வாழ்க்கை என்பவற்றை கொண்ட ஓர் தனி இனம் என்பது எல்லோருக்கும் புரியும். சிங்களர்களின் மண்ணில், படிப்பில், பொருளாதாரத்தில் தமிழர்கள் பங்கு கேட்கிறார்கள் என்கிற உலக மகா புருட புராணங்களை வாசிப்பவர்கள் போய் என்று அறிந்து கொள்ளமுடியும். ஏன்!!! இதே கருத்தை இந்திய தேசிய மைய ஊடகங்களே 2009, May மாதத்தின் பின் முன்வைத்தன. போன இடத்தில் சும்மா இருக்கவேண்டியது தானே இவர்கள் என்று.மிகுதி விமர்சனம் ஆற, அமர படித்துவிட்டு எழுதுகிறேன்.

ராஜ நடராஜன் said...

//Mr. S. W. R. D. பண்டாரநாயக்கா மே 1926க்கும் முன்பே பெடரல் அமைப்பை முன்மொழிந்தது இங்கே நினைவுகூறத் தக்கதாகும்.இருந்தாலும் பண்டாரநாயக்கா ஆட்சிக்கு வந்தவுடன் இதனை புறக்கணித்தார்.ஜுலை 17ம்தேதி சிலோன் மார்னிங்க் லீடர் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்ட அவரின் பேச்சின் குறிப்பில் ஒன்றாக

“பழைய வரலாற்றைப் பார்த்தால் தமிழர்கள்,கீழ் நாட்டு சிங்களவர்கள்,கண்டியன் சிங்களவர்கள் என்ற மூன்று பிரிவினர் 1000 வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்தார்கள் என்றும் அவர்கள் எந்தக்காலத்திலும் இணைந்து வாழ விரும்பியதேயில்லை.இருந்தாலும் ஒருமித்த ஒன்றுபட்ட நாடாக கருதுகிறது” என்பதன் கருத்துக்கு எதிர்ப்புக்கள் கிளம்பிய போது பெடரல் அமைப்பிலான அரசே இதற்கு தீர்வு என்று ஏற்றுக்கொண்டார்.//

ரதி!மொத்தமாக அனைத்து பின்னூட்டங்களுக்கும் வரிசையாக பதில் சொல்லலாமென்று நினைத்தேன்.எனவே பண்டாரநாயக்காவின் கூற்றை அடைப்பானில் செல்வநாயகம் சொன்னதை குறிப்பிட்டிருக்கிறேன்.

இந்த பதிவின் மொத்த சாரமும் மொழி பெயர்ப்பு தவிர்த்து அனைத்தும் காமன்வெல்த் பிரதிநிதிகள் முன்பு திரு.செல்வநாயகம் வைத்த கூற்றாகும்.எனவே தமிழர்கள் மூத்த குடியென்பதற்கு நாம் டமாரம் அடிக்க தேவையில்லாமல் பண்டார நாயக்காவின் கருத்தே ஆவணமாகிறது.

மேலும் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.நன்றி.

ராஜ நடராஜன் said...

ஹேமா!ஆவணச் சான்றுகளை சொல்லி விட்டு நிகழ்காலத்துக்கு வரலாமென்றிருந்தேன்.தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இலங்கை,கச்சத்தீவு குறித்த தீர்மானங்களையே புறக்கணிக்கும் வண்ணம் இலங்கை அமைச்சரவை பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல்ல தங்களது பேச்சு வார்த்தை இந்தியாவின் மத்திய அரசு அளவிலேயே தொடருமென்றும் மாநில அரசின் கருத்துக்கெல்லாம் செவி சாய்க்க வேண்டியதில்லையென்று நிருபர்கள் கூட்டத்தில் கூறுகிறார்.

பொறுமையும்,ராஜதந்திர ரீதியான முன்னெடுப்புக்களும்,மொத்த தமிழர்களின் பெரும்பங்கு ஆதரவுமே இலங்கையின் நிலைப்பாட்டை நிலைகுலையச்செய்யும்.கடந்த இரண்டு வருடங்களில் பின்னடைவுகளுடன் இலங்கை அரசுக்கு எதிர்ப்பு சக்தியாக தமிழர்கள் உருவாகியுள்ளோம்.இன்னும் வலுப்படுவதன் மூலமே நம்மால் தீர்வுகளுக்கு வழிகள் காண முடியும்.

மொழிச்சிக்கல் என்பதும் புறக்கணிப்புமே மொத்த பிரச்சினைகளுக்கான காரணமாக இருந்துள்ளதென்பதை செல்வநாயகம் அவர்களின் உரை சொல்லும் பாடம்.

ராஜ நடராஜன் said...

//நிகழ்வுகள் said...

ஆரோக்கியமான பதிவு.//

உங்கள் முதல் அறிமுகம் காரணமாக உங்கள் தளம் வந்து இலங்கை மீதான பொருளாதார தடையென்ற பதிவு காண நேர்ந்தது.தமிழக அரசின் இந்த தீர்மானம் பொருளாதார தடை உருவாவதற்கும் முன்பாக இந்தியாவின் நிலைப்பாட்டையும்,இலங்கை அரசுக்கு செக் வைக்கும் முயற்சியாகவுமே இதனை நோக்க வேண்டும்.மேலும் இந்த தீர்மானங்கள் ஜனநாயக ரீதியாக இந்தியாவில் தமிழர்கள் எப்படி உணர்கின்றார்கள் என்ற உணர்வின் வெளிப்பாடே.

இதோ உங்கள் கவலைக்கு இடமே தராமல தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இலங்கை,கச்சத்தீவு குறித்த தீர்மானங்களையே புறக்கணிக்கும் வண்ணம் இலங்கை அமைச்சரவை பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல்ல தங்களது பேச்சு வார்த்தை இந்தியாவின் மத்திய அரசு அளவிலேயே தொடருமென்றும் மாநில அரசின் கருத்துக்கெல்லாம் செவி சாய்க்க வேண்டியதில்லையென்று நிருபர்கள் கூட்டத்தில் கூறுகிறார்.

ஜெயலலிதாவின் ஒற்றைக்காய் நகர்த்தலில் உங்களது பார்வையும்,கெகலிய ரம்புக்வெல்ல கருத்தும் எப்படி நிகழ்கின்றன என்பதை அறிய முடிகிறது.

மனிதாபிமானத்துடன் நீங்கள் உணரும் கவலையை நான் மதிக்கிறேன்.சரி!பொருளாதார தடை வேண்டாம்.சண்டிக்குதிரையான இலங்கை அரசை வழிக்கு எப்படி கொண்டு வரலாம் என்ற உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்.

ராஜ நடராஜன் said...

//நல்ல பதிவு சகோ. நிறைய அறியக் கூடியதாக இருந்தது. :)//

ஆரோணன்!முதல் வருகையாக உங்களுக்கே கருத்து சொல்லியிருக்க வேண்டும்.ரதி அவர்களுக்கு கருத்து சொல்ல ஆரம்பித்து உங்களை கடைசி பெஞ்சுக்கு தள்ளி விட்டேன்.

இதுவே ஒரு ஜனநாயக பின்னூட்ட ஊழல்தான்!இல்ல:)

Anonymous said...

@ ராஜநடராஜன் - நீங்கள் எழுதியுள்ள அனைத்தும் உண்மையே !!! பலவற்றை சுருக்கி அழகாகக் கொடுத்துள்ளீர்கள் .... தொடருங்கள் .... சகோ

சிவானந்தம் said...

மேம்போக்காக படித்தாலும் இதற்கு கருத்து சொல்லும் முன் ஆழமாக உள் வாங்க வேண்டும். ஆனால் ஒன்றை மட்டும் சொல்வேன். சர்வதேச அளவில் நீதி அமைப்பு இல்லை. எனவே அதை எதிர்பார்க்க வேண்டாம். தற்போதைய அரசியல் சதுரங்கத்தில் அதற்கான வாய்ப்பே இல்லை. எனவே தமிழர்கள் குடியேறியவர்கள் அல்ல என்பதை நிருபிப்பதை காட்டிலும், அங்கே தமிழர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை சர்வதேச சமூகத்திற்கு புரிய வைத்தால், மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கலாம். அல்லது அது கிடைக்காத பட்சத்தில் தனி ஈழத்துக்கான ஆதரவு பெருகலாம் (உடனடியாக அல்ல). எனவே ஈழத் தமிழர்களை பொறுத்தவரையில் அதுவரை சர்வதேச அளவில் முறையான பிரச்சாரமும், காத்திருத்தலும்தான் தற்போதைய ஒரே வழி.

தவறு said...

ராஜ நட தங்களுடைய பதிவின் மூலம் மிகவிரிவாக வரலாறு அறிந்தேன்.

ஒன்றுபட்ட தமிழர்களின் உத்வேகம் சரியான நகருதல் இல்லாமல் தீர்வு என்பது கானல் நீர்தான் போலும்...

Rathi said...

ராஜ நட,

"பட்டிகாலா" என்பதை மட்டக்களப்பு என்றும், ஜாப்னா என்பதை "யாழ்ப்பாணம் என்றே இடுகையில் குறிப்பிட்டிருக்கலாம்.

இலங்கை பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்து விடுபட்ட காலத்தில் இருந்து அதன் அரசியலமைப்பில் திட்டமிடப்பட்டு தமிழர்களை தனிமைப்படுத்தல்/பிரித்தாளுதல் (Segregation), மக்கள் தொகை கட்டமைப்பு, மொழி, கல்வியில் தரப்படுத்தல், வாழ்க்கை சூழலை காவற்துறை/ராணுவ அடக்குமுறையின் மூலம் கொடியதாக்குதல், இவைதான் நடத்தப்படுகின்றன. அதை தந்தை செல்வாவின் கூற்றுக்கள் மூலம் பதிந்திருக்கிறீர்கள். உங்கள் கடின உழைப்பு தெரிகிறது. இன்று இன்னும் மிக மோசமாக தமிழர்களை இனவழிப்பு செய்துகொண்டிருக்கிறார்கள் இந்தியாவின் நேரடியான, அமெரிக்காவின் மறைமுகமான ஆதரவுடன்.

அரதப்பழசான அதே பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை இந்தியாவும் கொஞ்சம் கூட கூசாமல் இன்னும் கொழும்பில் சென்று தீர்வாக முன்வைக்கிறது. அதனால் சுட்டிக்காட்டினேன் நாங்கள் கேட்பது தமிழர்கள் ஆண்ட வரலாற்று பூமியைத்தான். காணி, மற்றும் காவல்துறை அதிகாரங்கள் மறுக்கப்பட்ட பதின்மூன்றாவது திருத்தச்சட்டமல்ல.

குறும்பன் said...

63ம் ஆண்டு கணக்கை எடுத்துக்கொள்வோம். சிங்களவர்கள் 63% (தென் இலங்கை) இலங்கை தமிழர்கள் 13% அவர்கள் வடக்கு & கிழக்கு மாவட்டங்களில்/ மாகாணங்களில் பெருவாரியாக உள்ளனர். இந்திய தமிழர்கள் 7% நடு (மலை) மாகாணத்தில் மட்டும் உள்ளனர். முசுலிம்கள் 6% கிழக்கு மாவட்டங்களில்/மாகாணங்களில் பெருவாரியாக உள்ளனர். இலங்கை தமிழர்கள் கிழக்கு மாவட்டத்தில்/மாகாணத்தில் எவ்வளவு % என்று தெரியவில்லை. முசுலிம்கள் தமிழ் பேசினாலும் அவர்கள் தமிழர்கள் என்ற கணக்கிற்குள் வரமாட்டார்கள் இல்லையா? அப்படியிருக்கும் போது எப்படி தமிழர்களுக்கான ஈழத்தை வடக்கு & கிழக்கு மாவட்டங்களில்/ மாகாணங்களில் அமைக்க முடியும்?

JOTHIG ஜோதிஜி said...

ரதி சொன்னது போல் இரண்டு முறை படித்தால் தான் இதன் உண்மையான வீச்சு புரியும். ரொம்பவே மெனக்கெட்டு இருக்கீங்க. இது போன்ற ஆவணங்கள் வலைபதிவில் அவசியம் தேவை.

மிக அற்புதமான விமர்சித்த ஹேமாவின் உண்மையான வார்த்தைகள் என்னை உருக்குலைத்தது.

அப்புறம் எல்லோரும் ஜெயலலிதா கொண்டுவந்துள்ள கச்சதீவு தீர்மானத்தை எள்ளி நகையாடுகிறார்கள். இது போன்ற தீர்மானங்கள் ஜெயிக்கும் தோற்கும் அல்லது அரசியல் நாடகம் என்று எப்படி எடுத்துக் கொண்டாலும் வெற்றிகரமாக கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் ஈழம் சார்ந்த விசயங்களை நீர்த்து போகச் செய்தும், வைகோ நெடுமாறன் போன்றவர்களை டம்மியாக்கி வைத்திருந்த விதமும் என்று ஏராளமாய் கலைஞர் இந்த தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு செய்துள்ளார். இவர்களுக்கு எதிராக வளர்த்த சீமான் மூலம் உருவான குறிப்பிட்ட சதவிகித தாக்கத்துடன் இப்போது ஜெ உருவாக்கிக் கொண்டிருக்கும் ஈழ ஆதரவு வளர்ச்சியும் நிச்சயம் அடுத்த ஐந்தாண்டுகளில் ராஜபக்ஷே உரிமையை தமிழர்களுக்கு கொடுப்பாரோ இல்லையோ பதவியை விட்டுப் போனால் போதும் என்று அவரே நொந்து போகும் அளவிற்கு நிறைய நடக்கப் போகின்றது. அவருக்கு தெரியாது? அவரை விட கில்லாடி ஜெ என்று?

என்னவொன்று அரசியல் ஜெ வை மாற்றி விடக்கூடாது என்கிற கவலை மட்டும் எப்போதும் உண்டு?

ராஜ நடராஜன் said...

//@ ராஜநடராஜன் - நீங்கள் எழுதியுள்ள அனைத்தும் உண்மையே !!! பலவற்றை சுருக்கி அழகாகக் கொடுத்துள்ளீர்கள் .... தொடருங்கள் .... சகோ//

இக்பால் செல்வன்!சமீபத்து தமிழக அரசியலை ஆழ்ந்து நோக்கும் ஒருவராக பதிவர் அமுதன் அவர்கள் உங்களுக்கான எழுத்து பற்றி பின்னூட்ட கருத்து கூறியிருந்தார்.

இந்த பதிவில் ஆவண மொழிபெயர்ப்பு தவிர எனது கருத்தாக ஒன்றுமில்லை.மண்ணின் மைந்தர்களைப் பற்றி தொட்டு விட முயல்கிறேன்.அடுத்த பதிவும் விடுதலைப்போராட்ட காலங்களின் அலசலையும்,தொடர்ச்சியையுமே தொடுகிறது.இன்னுமொரு கே.பத்மநாதனின் விவாத கருத்தை முன் வைத்து விட்டு மக்கள் குறித்தும்,தீர்வுகளின் பக்கம் கவனம் செலுத்துகிறேன்.நன்றி.

ராஜ நடராஜன் said...

சிவா!உங்கள் கருத்து புரிகிறது.இந்த பின்னூட்ட கருத்து சொல்லிக்கொண்டிருக்கும் நேரத்தில் சேனல் 4 இலங்கை அரசின் போர்க்குற்ற ஆவணங்களை பத்திரிகையாளர் கேலம் மேக்ரே தயாரித்ததை வெளியிடுகிறது.

தலைப்பு ”Srilanka killing field”
மேலும் ஐ.நா. போர்க்குற்ற அறிக்கையும் ராஜபக்சே குழுவினரின் போர்க்குற்றங்களை அதிகார பூர்வமாக வெளிப்படுத்தியிருக்கிறது.

இவையிரண்டும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.

பகுதி 3ம் படித்து விட்டு கருத்து கூறவும்.நன்றி.

ராஜ நடராஜன் said...

//ராஜ நட தங்களுடைய பதிவின் மூலம் மிகவிரிவாக வரலாறு அறிந்தேன்.

ஒன்றுபட்ட தமிழர்களின் உத்வேகம் சரியான நகருதல் இல்லாமல் தீர்வு என்பது கானல் நீர்தான் போலும்...//

தவறு!பதிவர் சிவானந்தம் பின்னூட்டத்திற்கு மறுமொழி சொல்லியுள்ளேன்.உடனடி தீர்வுகளுக்கு தடைகள் இருந்தாலும் மெல்ல தீர்வுகளுக்கான பாதையை நோக்கி நகரும் என நம்புவோம்.

ராஜ நடராஜன் said...

ரதி!மீண்டும் மறுகருத்துக்கு நன்றி.சிலோன் காலத்து பெயர்களை தற்போதைக்கான பெயர்களாக மாற்றவில்லை.செல்வா அவர்களின் உரையை மட்டுமே தமிழுக்கு மாற்றியிருக்கிறேன்.இந்த உரை குறித்து வேறு யாராவது தமிழ் படுத்தியிருக்கிறார்களா என்பது தெரியவில்லை.முழு வடிவமாக யாராவது இதனை ஆவணப்படுத்துதல் அவசியம்.இது போன்ற ஆவணங்களே ஜனநாயக ரீதியாக மேலும் போராட வலு சேர்க்கும்.

13வது சட்ட திருத்தம் குறித்தே இந்தியாவை இலங்கை அரசு அலட்சியம் படுத்தும் நிலையும்,ஜெயலலிதாவிடம் ஒன்றும்,இலங்கை அரசுக்கு ஏற்புடைய தீர்வை வைத்தால் போதுமென்ற மேனனின் அரசாஙக பதவி கூன் விழுதல் போன்றவைகளே கவலையளிக்கும் போது காணி நிலம்,காவல்துறை அதிகாரம் தாண்டியும் வற்புறுத்தும் நிலையில் நாம் இருக்கிறோமா?

இன்றைய சேனல் 4 ஆவணப்பதிவு தொலைக்காட்சியில் கண்டீர்களா?

ராஜ நடராஜன் said...

குறும்பன் நில விகிதாச்சாரம் பற்றி இக்பால் செல்வன் வரைபடங்களுடன் என்ன சாத்தியங்கள் இருக்கிறதென பதிவிட்டுள்ளார்.காணவும்.

இலங்கை முஸ்லீம்களை ஏன் தமிழர்களின் எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளக்கூடாது என்கிறீர்கள்?மொழியின் அடிப்படையில் அவர்களையும் இணைத்துக்கொள்வது குரலுக்கு வலு கொடுக்கும்.அவர்களை தனித்து விட்டு விட முடியாது என நினைக்கிறேன்.இது குறித்த குரல்கள் அவர்கள் தரப்பில் பொதுவில் இல்லாமல் போவதால் இது பற்றிய இறுதி முடிவுக்கும் தற்போது வர இயலாத நிலையில் இருக்கிறோம்.

ராஜ நடராஜன் said...

ஜோதிஜி!ஹேமாவின் பின்னூட்டத்தை மீண்டுமொரு முறை படித்தேன்.

அவர் கூறிய படி”அவர்களுக்குத் தமிழும்,எங்களுக்குச் சிங்களமும் தெரியாது.
பிறகென்ன சமவுரிமை.”

என்ற நிலைக்கும் அப்பால் முழு சிங்கள மாற்றங்கள் உருவாக்கும் சூழலை ராஜபக்சே அரசும்,தொடர் அரசுகளும் உருவாக்க திட்டமிடல் செய்ய முயற்சித்தால் தமிழ் பற்றிய கவலை கூட இல்லாத சிங்களத்தனம் கூட வருவதற்கும் எதிர்கால சந்ததிக்கு நிலைகள் உருவாகும் சூழல் கூட இருக்கிறது.

ஒரு முறை மொரிஷியஸ்காரர் ஒருவர் பற்றி தொலைக்காட்சியில் காண நேர்ந்தது.பெயர் ராமசாமியுடன் மொரிஷியஸ் பெயர் இணைப்பும்.மூதாதையர்கள் தமிழர்களென்றும் தமிழ் பேசத்தெரியாவிட்டாலும் பெயரில் மட்டுமே தமிழன் அடையாளம் இருப்பதாக சொன்னார்.

இது குறித்தே நாம் போருக்கு பின்னான தற்போதைய காலக்ட்டத்தில் தொலைநோக்குடன் சிந்திக்க வேண்டியுள்ளது.

ராஜ நடராஜன் said...

ஜோதிஜி!தமிழக அரசியலைக் குறித்து இன்னுமொரு மறுமொழி சொல்லி விடுகிறேன்.கலைஞர் என்ற தனிமனிதனை விட கலைஞர் அமர்ந்திருந்த நாற்காலி அதிகாரத்தின் மீதே எனது முந்தைய விமர்சனங்கள் இருந்தது.அவரது தோல்விகள்,இந்திய அளவில் நிர்வாணப்பட்ட நிலை போன்றவையே அவரது சுயநலங்களுக்கு சிறந்த தண்டனை.இனி அவரை விட்டு விடுவோம்.அவர் சொன்னபடியே ஓய்வெடுக்கட்டும்.

ஜெயலலிதா குறித்த அவசர பாராட்டுக்களோ,ஆதரவுக்கான காலமாகவும் இல்லாமல்,அதே சமயத்தில் அவரை விமர்சிக்க வேண்டும் என்ற கட்டாயத்தையும் உருவாக்காமல் அவரது செயல்பாடுகளின் அடிப்படையில் கருத்து தெரிவிப்போம்.அதுவே நேர்கொண்ட பார்வை,நிமிர்ந்த நடையாக இருக்கும்.

Rathi said...

http://www.abc.net.au/7.30/content/2011/s3243813.htm

ராஜ நட, சனல் நான்கின் இலங்கை கொலைக்கள காணொளி நான் பார்க்கவில்லை. அது ஏற்கனவே துண்டு, துண்டாய் வெளியான வீடியோவின் தொகுப்பு. என்கிறார்கள். தவிர, என்னால் அதை எல்லாம் இப்போ அடிக்கடி பார்க்கமுடிவதில்லை. அதனால் தவிர்க்கவே விரும்புகிறேன்.

இது ஆஸ்திரேலியாவின் தொலைக்காட்சியில் வெளிவந்திருக்கிறது இது. முன்பு மனித உரிமைகள் காப்பகம் வெளியிட்ட ஒருவரின் படம் இப்போ வீடியோவாய். அதில் பேசும் இலங்கை அதிகாரி தான் முன்பு தடுப்பு முகாம்களில் ஏன் ராணுவம் நேரம் கெட்டநேரத்தில் கூடாரங்களுக்கு செல்கிறார்கள். பின்னர் நீண்ட நேரம் கழித்தே திரும்புகிறார்கள் என்பதற்கு அவர்கள் கிரேக்க தத்துவத்தை கூட நீண்ட நேரமாக பேசியிருக்கலாம் என்று சொன்னவர். இப்போ மட்டும் உண்மை சொல்வாரா.

r.elan said...

well written articles.very very good compilation of facts.

ராஜ நடராஜன் said...

Rathi!let me look into the content of link you have given.

Thanks.

ராஜ நடராஜன் said...

//r.elan said...

well written articles.very very good compilation of facts.//

Hi,Seems to be your first comment.Thanks for your appriciation.