Followers

Friday, December 14, 2007

மலர்கள் டிசம்பர் மாத போட்டிக்கு

வேலைப் பளுவின் காரணமாக இந்த முறை கடைசி பெஞ்சில் வந்து ஒட்டிக் கொள்ள வேண்டிய சூழல்.இடையில் குறுகிய இடைவெளியில் இதுவரை வந்த போட்டி படங்களுக்கு பின்னூட்டம் போட மட்டும் கால அவகாசம்.
இந்த சூழலில் நாட்டாமைகள் தரும் பட நுட்பங்கள் மற்றும் உதவிகள் இந்தக் கலையில் மேலும் ஈடுபாடு கொள்ளச் செய்கிறது.காஷியன் பிளர் என்னன்னு பார்க்கும் முன் மேக்ரோவின் பதிவு.அட நமக்கு கொஞ்சம் தெரிந்த பாடம்தானேன்னு எலிக்குட்டிய அந்தப் பாடத்துக்கு ஓட்டும் போதே ஹெச்.டி.ஆர் ன்னு நமக்கு தெரியாத பாடங்கள்.பாடங்கள் சுவாராசிய்மாகத்தான் இருக்கிறது.ஆனால் இந்தப் பாடங்களை படித்து வாருங்கள் சொல்லி வீட்டுவேலை தரும் போது அதனைப் பரிட்சித்து பார்க்க அவகாசம் கிடைப்பதில்லை.இருந்தாலும் இனிமேலும் நாட்டாமைகளுக்கு நல்ல பிள்ளையாக எல்லா வகுப்புக்கும் விடாமல் வருகிறேன்.இப்போதைக்கு இந்தப் பரிட்சை முடிந்ததும் ஹெச்.டி.ஆர் பாடம்தான்.

இனி மெல்லிய முகச்சாயங்களுடன் படங்கள் பார்வைக்கு.படம் ஒன்று மஞ்சள் கலர் பூ மற்றும் படம் இரண்டு வெள்ளைக் கலர் பூ - போட்டிக்கு.மற்றவை பார்வைக்கு மட்டும்.

பட வரிசை தலைகீழாக 5லிருந்து துவக்கம்.இது தரவிறக்கம் செய்யும் போது எண் வரிசை தலைகீழாகப் போனது.எனவே நாட்டாமைகள் அதுக்கு மட்டும் கொஞ்சம் மார்க் குறைச்சுகிட்டு பாஸ் மார்க் போட்டு புதுவருச புது வகுப்புக்கு அனுப்பவும்.

அனைவருக்கும் எனது வணக்கங்கள்.




5



படம் ஐந்து பார்வைக்கு






4


படம் நான்கு பார்வைக்கு

3

படம் மூன்று- பார்வைக்கு.






2





1



படம் ஒன்று மஞ்சள் கலர் பூ மற்றும் படம் இரண்டு வெள்ளைக் கலர் பூ - போட்டிக்கு.



ஆசிரியர் குழு,பின்னூட்ட வீரர்கள் மற்றும் சுவையாக பதிவுகளிடும் அனைவருக்கும் எனது நன்றி. கூடவே இந்தப் பதிவினை தமிழ்மணத்துக்கு அனுப்பும் போது அங்கே ஒட்டிக் கொள்ளாமல் வம்பு செய்கிறது.யாராவது உதவி செய்தால் நலமாக இருக்கும்.

5 comments:

Marutham said...

Vanakkam :)

Came here thro PIT

Arumayana pookal...Very delightful!


Cheers,
Maruthu

parameswary namebley said...

I like the white folwer too

Sathiya said...

ரெண்டுமே நல்லா இருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்! அந்த தண்ணீர் துளிகள் படத்தை பெரிது படுத்தி பார்க்கும் போது செயற்கையாக தெரிகிறதே?

ஜாலிஜம்பர் said...

நட்டு,தமிழ்மணம் கருவிப்பட்டையை சேர்த்த மாதிரி தெரியவில்லை.இந்த தளத்தில் சென்று பார்க்கவும்.

http://www.kuzhali.co.nr/

Sathiya said...

வணக்கம். முதல்ல புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! உங்களுக்கு ஒரு கொக்கி போட்டிருக்கேன். நீங்க வந்து தொடரணும்...
http://vadakkupatturamasamy.blogspot.com/2008/01/2007.html