சில தகவல்கள் கொல்லைப்புறமாக இலங்கை போய் இந்தியாவிற்கு வருகிறது.திரு.நாராயணமூர்த்தி இலங்கை தகவல் துறை ஆலோசகராக தயக்கம் காட்டுகிறார்.எனவே பதவியை ஏற்காமல் மறுப்பதாக சற்றுமுன் செய்தி.வரவேற்போம் புதிய செய்தியை. இந்தியப் பொருளாதாரக் கண்ணோட்ட பார்வையாளர்களுக்கும் இதனால் கோபமடைபவர்களுக்கும் சொல்லிக் கொள்வது சம்பாதிக்கும் காசு மனம் நிறைந்ததாக இருக்கவேண்டும். மனித ரத்த வாடையுடன் அல்ல.
14 comments:
//எனவே பதவியை ஏற்காமல் மறுப்பதாக சற்றுமுன் செய்தி.வரவேற்போம் புதிய செய்தியை//
yes............
முதல் போணிக்கு நன்றி ச்சின்னப்பையன் அண்ணா:)
உங்களோடு சேர்ந்து நானும் வரவேற்கிறேன்!
//ராஜ நடராஜன் said...
முதல் போணிக்கு நன்றி ச்சின்னப்பையன் அண்ணா:)
//
ரெண்டாவதா வந்த எனக்குக் கெடையாதா அப்ப? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
இருங்க போயி எங்க மாமனக் கூட்டியாரேன்...
//சம்பாதிக்கும் காசு மனம் நிறைந்ததாக இருக்கவேண்டும். மனித ரத்த வாடையுடன் அல்ல//
உண்மை.
இதை இவர் எப்படி ஒப்புக்கொண்டார் என்றே தெரியவில்லை :-(
//உங்களோடு சேர்ந்து நானும் வரவேற்கிறேன்!//
வாங்க!வாங்க!உங்க பழமையைக் கேட்டதும் நாராயணமூர்த்தி பற்றிய பழைய கதை படிச்சது நினைவுக்கு வருது.தேடிட்டு இருக்கிறேன்.பதிவாகப் போட்டு விடுவது கால சூழலுக்கு சரியெனப் பட்டது.
இன்றைய தினத்தில் மாத்திரம் 42 குழந்தைகள் உட்பட 200 தமிழர்கள் படுக்கையில் கொல்லப்பட்டுவிட்டார்கள்.
திரு நாராயணமூர்த்தியின் முடிவை அனைவரும் பாராட்டுவோம்.
அவருடை முகவரி தெரிந்தவர்கள் அவருக்கு இந்தப் பதிவுகளை அனுப்பிவிடுங்கள்.
ஒரு ஈழத்துப் பாவி
////சம்பாதிக்கும் காசு மனம் நிறைந்ததாக இருக்கவேண்டும். மனித ரத்த வாடையுடன் அல்ல//
உண்மை.
இதை இவர் எப்படி ஒப்புக்கொண்டார் என்றே தெரியவில்லை :-( //
வாங்க கிரி!பொருளாதார மந்த நிலையில் தமது நிறுவனத்தை மேம்படுத்துவதற்கான காரணம் கொண்டும் எதிர்கால சந்தர்ப்பங்கள் என்ற கனவோடும் ஒப்புக்கொண்டிருக்கலாம்.
முழுசா முங்குவதற்குள் தப்பித்தாரே!வரவேற்போம்.
//இன்றைய தினத்தில் மாத்திரம் 42 குழந்தைகள் உட்பட 200 தமிழர்கள் படுக்கையில் கொல்லப்பட்டுவிட்டார்கள்.
திரு நாராயணமூர்த்தியின் முடிவை அனைவரும் பாராட்டுவோம்.
அவருடை முகவரி தெரிந்தவர்கள் அவருக்கு இந்தப் பதிவுகளை அனுப்பிவிடுங்கள்.
ஒரு ஈழத்துப் பாவி//
அனானியாரே!அடைப்பானுக்குள்ள துக்கங்களை தீர்மானங்களிட்டும்,கோசங்கள் எழுப்பியும்,தீக்குளித்தும்,கோபங்களை எழுத்தாக்கியும் கூட துயரம் போக்க இயலாதது வருத்தத்தை தருகிறது.இன்னும் எத்தனை உயிர்கள் காவுகளோ என நினைக்கும் போது துக்கம் சொல்லி மாளவில்லை.
நேரடியான சம்பந்தமில்லாவிட்டாலும், எழுந்த இயல்பான எதிர்ப்பை உணர்ந்து பொறுப்புடன் சிங்கள அரசுக்கு தமது மறுப்பை தெரிவித்திருக்கும் திரு.நாரயணமூர்த்திக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும். (இதை சிங்கள மண்ணிலேயே "தற்போதைய சூழலில் இப்பொறுப்பை ஏற்பது நியாயமாக இருக்காது. எனவே ஏற்க இயலவில்லை" என்று கூறியிருந்தால் அவரது புகழ் மென்மேலும் வளர்ந்திருக்கும்; இருந்தாலும்)
நம்முடன் விரோதம் பாவிக்கும் நமது அண்டை மாநிலத்தில் இருக்கும் திரு.நாராயணமூர்த்திக்கு இருக்கும் நாகரிகமும் பண்பாடும்கூட தமிழ் மண்ணிலேயே இருக்கும் "சிங்கள ரத்னா"க்களுக்கு இல்லையே என்பது வேதனை.
அன்புடன்
முத்து
//சம்பாதிக்கும் காசு மனம் நிறைந்ததாக இருக்கவேண்டும். மனித ரத்த வாடையுடன் அல்ல. //
சரியான வார்த்தைகள்
//நேரடியான சம்பந்தமில்லாவிட்டாலும், எழுந்த இயல்பான எதிர்ப்பை உணர்ந்து பொறுப்புடன் சிங்கள அரசுக்கு தமது மறுப்பை தெரிவித்திருக்கும் திரு.நாரயணமூர்த்திக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும். (இதை சிங்கள மண்ணிலேயே "தற்போதைய சூழலில் இப்பொறுப்பை ஏற்பது நியாயமாக இருக்காது. எனவே ஏற்க இயலவில்லை" என்று கூறியிருந்தால் அவரது புகழ் மென்மேலும் வளர்ந்திருக்கும்; இருந்தாலும்)//
எப்படியோ தமிழர்களின் தார்மீக உணர்வுகளைப் புரிந்து கொண்டதற்கு நாராயணமூர்த்தி அவர்களுக்கு நன்றி சொல்வோம்.
////சம்பாதிக்கும் காசு மனம் நிறைந்ததாக இருக்கவேண்டும். மனித ரத்த வாடையுடன் அல்ல. //
சரியான வார்த்தைகள்//
வாங்க பிரேம்ஜி!வருகைக்கு நன்றி.
(கூடவே உங்களுக்கு ஒரு பதிவு போடவேண்டும்.காலம் கனியட்டும்.)
//ரெண்டாவதா வந்த எனக்குக் கெடையாதா அப்ப? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...
இருங்க போயி எங்க மாமனக் கூட்டியாரேன்...//
பழமை!நீங்க மாமனக் கூப்பிடப் போனீங்களா!பின்னூட்டம் மாடரேசன் சந்துல போய் உட்கார்ந்துகிச்சு.கவனிக்கவில்லை.
Post a Comment