சமீபத்தில் தண்ணி குடித்த அமெரிக்கன் ஏர்வேஸ் விமானம் ஒரு கம்பிவட பயில்வானின் துணையால் மீண்டும் தரைக்கு தலைமுடியப் பிடிச்சு இழுத்து வந்து வயித்திலிருந்த தண்ணியெல்லாம் வெளியே கக்குன்னு சொல்லி உப்புத் தண்ணியெல்லாம் வெளியேற்றி பார்ஜ் எனும் எடை தூக்கில உட்கார வச்சு முதல் உதவியெல்லாம் முடிஞ்சு மருத்துவ மனைக்கு அனுப்பப் பட்டது. 5.22 மாலை துவங்கிய நீச்சலும் முங்கலும் நோயாளியை மருத்துவ மனைக்கு அனுப்பும் போது காலை 1.33.
Operation Success but patient dead ங்கிறது இதுதான் போலும்.

பதிவு போட்டுகிட்டிருக்கும் போது பி.ஜே.பி ராமர் கோயில் கட்டுவோம் பழைய ஆயுதத்தைக் கையில் எடுத்துடுச்சாம்.அவன் தெரியாம விழுந்ததை இழுத்துகிட்டு வர முயற்சி செய்கிறான்.இவன் இருப்பதையும் இடித்துவிட்டு இன்னொன்னு குட்டுவேன் என்கிறான்.ராம் சேனா வேண்டும் ராமர் பாலம் வேண்டாம்.நாடு விளங்கிடும்.
தாடி வெச்சிருந்தா மட்டும் தலிபான் இல்ல!காவி கட்டினாலும் தலிபானே.
நிறுத்திக் கொள்கிறேன் என்னமோ சொல்ல வந்துட்டு எங்கேயோ போகிறேன்.
3 comments:
நல்ல சிந்தனை!
//விமானத்தை இழுப்பதற்காக பாடை போகிற மாலை 5.22//
பாடைய எதுக்குண்ணே இப்ப ஞாவகப் படுத்துறீங்க?இஃகிஃகி! சரி பண்ணிடுங்க!!
பார்ஜ்ங்கிறத உல்டாவாப் படிச்சா நானாப் பொறுப்பு.(அந்தர் பல்டி அடிக்க இயலுமான்னு பார்க்கிறேன்)
மன்னிக்க வேண்டுகிறேன் பழமை.முதல் முறையாக எழுத்துக்கு கத்திரி போட வெச்சிட்டீங்க.முடிந்த அளவுக்கு தரமான எழுத்துக்களையே எழுத முயன்று வருகிறேன்.
விகல்பம் இல்லாம மனசு சொல்ல கை தட்டிவிட்டது.
Post a Comment