Followers

Tuesday, June 21, 2011

இரண்டாவது காந்தி மண்டேலாவா?ராஜபக்சேவா? - திரைப்பட விமர்சனம்.

நட்சத்திர வாரம்தான் முடிஞ்சிருச்சே அப்புறமென்ன அதே எஃபக்ட்டுன்னு யாரும் தப்பா நினைக்க வேண்டாம்.இது அவன் - இவன் திரை விமர்சனம்.சி.பி இந்த படத்திற்கான வசனங்களை அவரது பதிவில் விலா வாரியாக சொல்லியிருந்தார்.ஆனால் தலைப்பில் சொல்லிய வசனத்தை கோட்டை விட்டுட்டார்.எனவே பின்னூட்டமாகப் போட வேண்டிய முக்கியமான படத்தின் வசனத்தை பதிவின் தலைப்பாகப் போட்டு விட்டேன்.

பாலா படம்ன்னா எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கும்.கதைக்களம் எந்த மாவட்டத்துக்கு சேர்ந்ததுன்னு தெரியாத ஒரு புனைவு.கதையின் கருவாக தெரிவது தெருக்கூத்தாடிகளின் கதையை சொல்ல முயன்ற மாதிரி தெரிகிறது.ஆனால் மாட்டுத்தொழுவத்திலிருந்து சட்ட விரோதமாக அடிமாடுகளாக கேரளாவுக்கு மாடுகள் கடத்தப் படுவதே கதை.பொருளாதார வளர்ச்சியில் மாடுகளின் எண்ணிக்கையும்,லாரி மூலமாகவே கடத்தப்படுவதும் இப்பொழுது அதிகரித்து விட்டதா எனத் தெரியவில்லை.ஆனால் கேரளாவிற்கும்,வால்பாறை போன்ற மலைப் பிரதேசங்களுக்கும் காங்கேயம்,பொள்ளாச்சி சந்தைகளில் நடையாகவே மாடுகளைக் கொண்டு சென்ற காலங்கள் உண்டு.எனவே பசுக்கள் கடத்தல் அதுவும் அடிமாட்டுக்கு கடத்தல் சட்ட விரோதம் என்ற அடிப்படையில் தமிழுக்குப் புதிய கதைக் களம்.

திரைப்படம் பார்ப்பதற்கு முன்பே தொலைக்காட்சி விளம்பரம் காணும்போது பிதாமகன் பார்க்கும் உணர்வு வந்தது.படம் பார்த்ததும் அது உறுதியாகி விட்டது.விஷாலுக்கு நடிப்பதற்கான நிறைய சந்தர்ப்பங்கள்.உடல் மொழி கமல்,விக்ரம் வரிசையில் விஷால்.அரங்கிலிருந்து திரும்பிப் போன சூர்யாவை மட்டுமல்ல படம் பார்க்கும் அனைவரையும் வியக்க வைக்கும் நடிப்பு,முகபாவம்.நாட்டிய நடனம்,கதகளி போன்ற கலைகளுக்குத் தேவையான அழுத்தமான முகபாவங்கள்.இனி மேல் அவன் - இவன் மாதிரி படங்களில் நடிக்க மாட்டேன் என்று விஷால் சொன்னதாகப் படித்தேன்.விஷால் மறுபரிசீலனை செய்யலாம்ஆர்யாவும் கேலியும் கிண்டலுமான நடிப்பில் சோடை போகவில்லை.

விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றி சொல்லனுமின்னா யதார்த்தமான குணநலன்கள் கொண்ட மக்கள் நிறைய இருக்கிறார்கள்.யாரையாவது தேர்ந்தெடுத்திருக்கலாம்.ஆனால் அதிலும் எதிர்ப்புக் குரல்கள் வருமென்று இயக்குநர் சமரசங்கள் செய்து கொண்டிருக்கலாம்.அம்பிகா!கதாநாயகி சான்ஸ் முடிஞ்சு போச்சுன்னா உடம்பை இப்படி உப்ப வைக்க வேண்டுமா?துறு துறுன்னு ஆர்யா கூட சுத்தும் பையனும்,பதவி உயர்வு ஏட்டய்யாவும்,ஊருக்குப் புதுசு இரண்டு பேரில் விஷாலின் போலிசு காதல்(லைலா கால்ஷீட் கிடைக்கலியா)பரவாயில்லை.யுவன் சங்கர் ராஜா பாடலை இன்னொரு முறை கேட்டாத்தான் கருத்து சொல்ல முடியும்.

மக்களும்,காவல்துறையும் படத்தில் இருக்கிற மாதிரி நட்பு நிலையில் இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்!யதார்த்தம் என்ற பெயரில் வசனங்களில் கொஞ்சம் கவிச்சி வீசுகிறது.அய்னஸ் (Highness) மாதிரி ராஜ பரம்பரை கதாபாத்திரங்கள் இன்னும் தமிழகத்தில் எங்காவது உலவுகிறார்களா எனத் தெரியவில்லை.ஆனால் அந்த கதாபாத்திரத்தின் சாயலில் நிறைய சராசரி மனிதர்கள் இருக்கக்கூடும்.கதையின் படி நிர்வாணமாக நடிக்க வேண்டுமென்ற பாலாவின் எண்ணத்திற்கு துணிந்து நடித்ததும் இது மாதிரியான முழு ஆண் நிர்வாணம் தமிழ்ப் படத்திற்கு புதியது. மெல்லிய நகைச்சுவையோடு  போய்க்கொண்டிருந்த படத்தின் கதையை, வன்முறைக்காட்சியாக நிர்வாணமாய் திசை மாற்றுகிறது.

இறப்பின் வலியை குடியாகவும்,கும்மாளமாகவும் நகர்ப்புறங்களே முன்னிலைப் படுத்துவதைக் கண்டிருக்கிறேன்.தமிழ்க் கலாச்சாரத்தின் வேர்கள் எங்கோ ஒளிந்து கிடக்க தாரை,தப்பட்டை,பூ வண்டி போன்றவை பண்பாட்டின் இப்போதைய மாற்றங்கள் எனலாம்.பெண்களின் ஒப்பாரியே தமிழ் சாவின் பரம்பரை.

படைப்பவன் மனிதம் சார்ந்த தனது உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்துவதற்கு தடைகள் உள்ள நிலையில் தலைப்பின் வசன இடைச்செறுகல்கள் மூலமே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக்கூடும்.இதே வசனத்தை சீமான் தனது படத்துக்கு சொல்லியிருந்தால் படம் முக்கி முனகி வெளி வந்திருக்கும்.அல்லது வசனம் வெட்டுப்பட்டிருக்கும்.அந்த விதத்தில் இயக்குநர் பாலாவுக்கும்,கதை வசனகர்த்தாவுக்கும் இந்த வசனத்திற்காக ஒரு பாராட்டு.

9 comments:

செங்கோவி said...

ஒரே கேள்வியில் பாலா நச்சென்று தன் உணர்வை வெளிப்ப்டுத்தி விட்டார்.

ராஜ நடராஜன் said...

//ஒரே கேள்வியில் பாலா நச்சென்று தன் உணர்வை வெளிப்ப்டுத்தி விட்டார்.//

செங்கோவி!நீங்க சொன்னமாதிரி நச்சென்று பாலா தன் உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நான் நேற்றுத்தான் படம் பார்த்தேன்.திரை விமர்சனம் எழுதும் பதிவர்களின் பார்வையிலிருந்து இந்த வசனம் எப்படி தப்பித்தது என்று தெரியவில்லை.இது வரை வேடந்தாங்கல் கருன் மட்டுமே இது பற்றி சொல்லியிருக்கிறார்.

A.R.ராஜகோபாலன் said...

நல்ல கருத்தாயிந்த விமர்சனம்
அருமை

rajamelaiyur said...

Good analysis

ராஜ நடராஜன் said...

//நல்ல கருத்தாயிந்த விமர்சனம்
அருமை//

A.R.R!எம்.ஜி.ஆர் மாதிரி கூப்பிட எளிமையா இருக்குது.இப்படியே தொடர்கிறேன்:)

ராஜ நடராஜன் said...

//Good analysis//

Thank you once again teacher!

Anonymous said...

இன்னும் இந்தப் படம் பார்க்கல பாஸ் !! தமிழில் எதார்த்தப் படங்கள் பல வந்தபின் பாலாவின் யதார்த்தம் கூட சினிமாத் தனம் தான் என்பதை உணர்கின்றேன் ...

Anonymous said...

தளத்தின் வடிவமும், மாற்றமும் அருமை சகோ. எதாவது தொழில்நுட்ப உதவி வேண்டின் தயங்காது எனது மின்னஞ்சலில் அணுகலாம் ...

நிரூபன் said...

வித்தியாசமான ஒரு கோணத்தில் அவன் இவன் படத்தினை அலசியிருக்கிறீங்க.